![]() |
|
பிதாமகன் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8) +--- Forum: சினிமா (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=39) +--- Thread: பிதாமகன் (/showthread.php?tid=7903) Pages:
1
2
|
பிதாமகன் - aathipan - 10-29-2003 பிதாமகன் ஒரு அற்புதமான படைப்பு.... ஓரு குறுநாவல் பாடித்த உணர்வு... சினிமாத்தனம் எதுவும்; இல்லை... வெட்டியான் பாத்திரத்தில் விக்கிரம்... போக்கிரியாக சூர்pயா.... இவர்கள் நடுவில் மலரும் நட்பு.... இதற்கு மேல் இப்போது வேண்டாம் நீங்கள் படம் பார்;த்;துவிட்டு வாருங்;கள் பேசுவோம் - சாமி - 10-29-2003 பிதாமகன்: திரை விமர்சனம் மயானத்தில் பிறந்து, அங்கேயே வெட்டியானிடம் வளர்ந்து, சுடலையில் சடலங்களை எந்த உணர்வுகளுமின்றி எரியூட்டி, மிச்சம் மீதி இருக்கிற கபாலத்தைப் பார்த்து ஈயென்று இளித்தபடி, அந்த நெருப்பிலேயே பீடி பற்ற வைக்கிற ஒருவன் தன் வாழ்நாளில் முதன் முதலாக அழுகிறான்ஒரு மரணத்தின்போது! அப்படியொரு விநோத மனிதப்பிறவியின் கண்ணீர்த் துளிதான் பிதாமகன்! செம்பட்டை தலை, மொச்சைக்கொட்டை பற்கள், அழுக்கு அப்பிய உடம்பு, கந்தல் துணியோடு நடமாடி.. அடுத்தவர் கை பட்டாலே உறுமுகிற மிருகவெறி சித்தனாக விக்கரம். வயிற்றுப் பிழைப்புக்காக, எந்த வித தில்லுமுல்லு தில்லாங்கடி செய்யவும் தயாராகத் திரிகிற போக்கிரிப் பயல் சக்தியாக சூர்யா. முரண்பட்ட இந்த இரண்டு ஜீவன்களையும் இணைகோடுகளாக்கி அதன்மீது பயணிக்கிறது கதை. மயான பூமி, கிராமத்துச் சந்தை, மலையின் மடிப்புகளிடையே மறைந்து கிடக்கும் கஞ்சாக்காடு என்று கதையின் தளம், களம் ரெண்டுமே புதுசு. தன்னை வளர்ந்தெடுத்த வெட்டியான் செத்துப் போனதும் ஊருக்குள் நுழைகிறார் விக்ரம். தெருவோரப் புரோட்டாக்கடைக்குள் பசியுடன் நுழைகிற அவரை அருவருப்பபோடு துரத்தியடிக்கிறார்கள். அசுர பலத்துடன் அவர்களைத் துõக்கியெறிகிற விக்ரமுக்கு சோறு போட்டு ஆதரவு தருகிறார் சில்லறை கஞ்சா வியாபாரி சங்கீதா (பழைய ரசிகா). கஞ்சாத் தோட்ட எடுபிடி வேலையிலும் சேர்த்து விடுகிறார். அங்கே போலீஸிடம் சிக்கி சிறையில் அடைபடுகிறார் விக்ரம் சிறையிலும் மிருகமாகவே முரட்டுத் தனம் காட்டி... ஜெயில் அதிகாரிகளிடம் ரத்தவிளாறாக அடிபடுகிற விக்ரமுக்கு அதே சிறை அறையில் அடைபட்டிருக்கும் சூர்யா பரிவு காட்டுகிறார். அந்த அன்புதான் அவர்கள் இருவரையும் பிணைக்கிறது. அதன்பிறகு விசுவாசமான நாயக சூர்யாவையே சுற்றி வருகிறார் விக்ரம். செய்யாத கொலைக்குற்றத்துக்காக மறுபடி விக்ரமை போலீஸ் தேடிவர... அவரைக் காப்பாற்றுவதற்காக நிஜ கொலையாளியான கஞ்சாத் தோட்ட முதலாளியை காட்டிக் கொடுக்கிறார் சூர்யா. முதலாளி வெறிகொண்டு சூர்யாவை காவு வாங்க... பழி தீர்க்கப் புறப்படும் விக்ரமின் ருத்தரதாண்டவம்தான் கிளைமாக்ஸ் பயங்கரம்! பஞ்ச் டயலாக் வைத்தே பரபரப்பு புண்ணும் ஹீரோயிஸ உலகத்தில் முகபாவங்களையும் உடல் அசைவுகளையுமே மொழியாக்கியிருக்கிற விக்ரமின் நடிப்பு... பிரமிப்பு! மரக்கட்டøயாக இறுகிப் போன உடம்பு, ஓடும்போதுகூட மடங்காத விரைத்த கைகள், வெறியேறும்போதெல்லாம் துடிக்கிற உதடுகள்... விடைக்கிற நாசி... ஒரு ஆதிமனிதனின் வேட்டை வெளி துல்லியமாக வெளிப்படுகிறது. உற்சாக மின்சாரமாக சூர்யா! இந்த மனிதருக்குள் இப்படியொரு நவரச நடிகரா என வியப்பு மேலிடுகிறது. திருட்டு முழியும் அடுக்கு மொழிப் பேச்சும், நக்கல் சிரிப்பும் நையாண்டி நடனமுமாக காமெடியன்களையே கலவரப்படுத்துகிற வகையில் கலலகப்லை ஜோராக கல்லா கட்டியிருக்கிறார் (நாட்டு வைத்தியராக வாயுத் தொல்லை பற்றி அவர் ஃபிராடு லெக்சர் அடிப்பது வயிறு கிழியும் சிரிப்பு?. நெஞ்சுக்கூட்டுக்குள் இன்னும் குழந்தையாகவே இருக்கிற பாலிடெக்னிக் குமரியாக லைலா, பத்மினி ஒன்ருப்பீ என்றபடி சூர்யா போடுகிற லங்கர் எனும் சூதாட்ட பலகையில் காசு வைத்து ஏமாறுகிற அப்பாவித் தனம்... பணம் .. வாச். சங்கிலி என்று அத்தனையும் தோற்றவிட்டு கைகால்களை உதைத்தபடி மண்ணில் விழுந்து புரண்டு அழுது அழிச்சாட்டியம் பண்ணுகிற அழகு... லைலாவின் கன்னத்துக் குழியில் ஒரு திருஷ்டி பொட்டு வைக்கலாம். இந்த மூவரையுமே பிதாமகன் அடுத்த தளத்துக்கு அபாரமாக உயர்த்தியிருக்கிறது. இடைச் செருகல்தான் என்றாலும் அந்தக் காலப் பாடல்களை கதம்பமாக்கி செம கூத்தடிக்கிற சிம்ரன் சூர்யாவின் ஆட்டம் ஜாலியான ஜனரஞ்சக காம்ப்ரமைஸ். அதற்காக கலை நிகழ்ச்சி ரேஞ்சுக்கு இத்தனை நீளமா?! படமே பேசட்டும் என்று ஆங்காங்கே அமைதி காத்திருக்கிற இசைஞானி இளையராஜா, தேவைப்படுகிற இடங்களில் மட்டும் தனது பின்னணி இசையால் நமது உணர்வுகளின் உச்சத்தை மீட்டிப் பார்க்கிறார். அடர்ந்த மரங்களுக்கிடையே முரட்டுப் பாதையில் கஞ்சா கும்பல் மலையேறுகிற காட்சிகளில் மெலிதான மர்மத்தையும் அந்த மலைப்பாதை பயணத்தின் பின்னே பொதிந்திருக்கிற அபாயத்தையும் இசையாலேய உணர வைத்திருக்கிறார். மயான பூமியில் கழுகாக, கஞ்சா காட்டில் குதிரையாக, கிராமத்துத் தெருக்களில் நாய்க்குட்டியாக படம் முழுக்க சக பயணியாக வருகிற பாலசுப்பிரமணியம் காமிரா வகையாகத் தோள் கொடுக்கிற பங்களிப்பு. வெறியாட்டத்தை ரகளையான வேகத்தில் புரட்டியெடுத்திருக்கிற ஸ்டண்ட் மாஸ்டர் ஸ்டன் சிவாவுக்கு தனி சபாஷ்! காட்சிக்கு காட்சி இரும்பாகவே விரக்ரமை காட்டியவர்கள், அவரை உருக்குவதற்கேற்ற கணகணப்பை சூர்யா காட்டுகிற பரிவில் இன்னும் அழுத்தமாகவே சொல்லியிருக்கலாம். அப்படிச் சொல்லாததாலேயே, சூர்யாவின் முடிவைக்கண்டு விக்ரம் அடைகிற அதிர்ச்சிக்கும் அழுத்தம் கிடைக்காமலே போகிறது. கட்டுப்பாடான குடும்பத்திலிருந்து வந்தும், தட்டிக் கேட்கவே ஆளில்லாமல் பிற்பாதி முழுக்க சூர்யா அண்டு கோவுடன் லைலா அலைவது எப்படி? மனிதாபிமானம் கொண்ட ஒரு வெட்டியானிடம் வளர்ந்த விக்ரம் இப்படியொரு மிருகமாக மாறிப் போனதற்கான நியாயங்களும் புரியவில்லை. இவர்கள் வாழ்க்கையில் இப்படியெல்லாம் நடந்தது என்று சில மனிதர்களின் வாழ்க்கைக் கதையைப் பதிவு செய்யும் பாணியில் படம் இருப்பதால் சராசரி ரசிகர்கள் எதிர்பார்க்கக்கூடிய த்ரில் திருப்பங்கள் இதில் இல்லை. கூடியவரையில், ஜிகினாத்தனமான வண்ணக் கலவைகளைச் சேர்க்காத இந்த பரீட்சார்த்த தைரியம் வரவேற்கத்தக்கதே! கலைக்கும் வணிகத்துக்கும் நடுவே தனக்கென ஒரு தனிப்பாதை போட்டுக்கொண்டு... கதை சொல்லும் விதத்திலும் காட்சி அமைப்பின் நேர்த்தியிலும்புதிய தலைமுறை இயக்குநர்களில், பாலா தமிழ்த்திரையுலகிற்கு நம்பிக்கை தரும் ஒரு பிதாமகன் தான்! நன்றி: தினமலர் - aathipan - 10-30-2003 அச்சச்;;சோ எல்லோரும் இப்படத்;தைப் பார்க்க வேண்டும் என்றல்லவா காத்திருந்ததேன். இப்போது எல்லோருக்கும் கதை தெரிந்துவிட்டால்; ஆறிப்போன பாதி உண்ட உணவை மீண்டும் உண்ணும் உணர்வுஅல்லவா ஏற்படும். - AJeevan - 10-30-2003 [quote=தினமலர்]பிதாமகன்: கலைக்கும் வணிகத்துக்கும் நடுவே தனக்கென ஒரு தனிப்பாதை போட்டுக்கொண்டு... கதை சொல்லும் விதத்திலும் காட்சி அமைப்பின் நேர்த்தியிலும்புதிய தலைமுறை இயக்குநர்களில், பாலா தமிழ்த்திரையுலகிற்கு நம்பிக்கை தரும் ஒரு பிதாமகன் தான்! நல்லதொரு பாராட்டு பாலாவுக்கு............. கலைஞர்கள் அனைவருக்கும், வாழ்த்துக்கள்............................... திரைப்படத்தைப் பார்த்த பின்னர் தொடருகிறேன். - veera - 10-30-2003 பாலா,சூர்யா,விக்ரம் - இந்தக் கூட்டணி ஏற்படுத்திய பிரம்மையும் எதிர்பார்ப்பும் ஏதோ ஒரு வகையில் காப்பாற்றப்பட்டு விட்டது. இருந்தாலும் விக்ரம் என்கின்ற நடிகரிடம் ஒரு பார்வையாளனாக நான் எதிர்பார்த்த வெளியீட்டைக் காண முடியவில்லை. ஆனாலும் எதிர்பார்க்காத கதா பாத்திரத்தில் வந்து இன்ப அதிர்ச்சியை தந்து விட்டார் சூர்யா. - மிக மிக அருமை யதார்த்தமான நடிப்பில் பாலாவின் செதுக்கலுக்கொரு பயன் கிடைத்தது என்றால் அது லைலா மூலமாகக் கிடைத்தது எனலாம் அவ்வளவு இயற்கையான நடிப்பு. ரீ ரேகோடிங் இசையை இளையராஜுா திறம்பட செய்துள்ளார்.பாலாவின் இயக்கத்திற்கு நல்ல மகுடம் தான். எனினும் சூர்யாவின் வளர்ச்சிக்கு இது ஒரு திருப்பு முனையாகவும்,விக்ரமைப் பொறுத்தவரை இன்னுமொரு நடிப்பாற்றலுக்கான காவியமாகவும் அமையந்திருக்கிறது என்பது எனது பார்வை. காசியை விட சேதுவைவிட பிதா மகனில் விக்ரம் தொலைந்து போய்விட்டார் அவரின் நடிப்பு மாத்திரம் இன்னும் கொஞ்சம் மெருகோடு ஊமையாகவே இருக்கிறது. - AJeevan - 10-30-2003 [b][size=18]பாலாவின் பிதாமகன் திரைப்பட விமர்சனம் ! <img src='http://www.tamilnet.dk/cinema/pidamagan04.jpg' border='0' alt='user posted image'> நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட பாலாவின் பிதாமகன் நேற்று இரவு டென்மார்க்கிலும் திரையிடப்பட்டது. விக்ரம், சூர்யா, லைலா ஆகியோரின் முக்கோண நடிப்பில் கதையை பாலா வளர்த்துச் சென்றிருக்கிறார். வழமையாக வெளிவரும் மசாலா சினிமாப்படங்களின் வரிசையில் இது வேறுபட்டு நிற்கிறது பிதமகன். பல இடங்கள் பாராட்டும்படியாக இயக்குநரின் கைவண்ணம் மிளிர்கிறது. மூலக்கதை ! யாரோ ஒரு பெண்மணி அவர் யார் ? ஏன் அந்த நிலைக்கு ஆளானார் என்பதை திரைப்படம் இறுதிவரை சொல்லவே இல்லை. முதலாவது காட்சியில் அப்பெண்மணி சுடலையில் வந்து, விக்கிரமை பெற்றுவிட்டு இறந்துவிடுகிறார். சுடலையில் வெட்டியானாக இருப்பவர் அந்தக் குழந்தையை எடுத்து வளர்க்கிறார். சுடலை சிவன் இருக்கும் இடம், அங்கு யாரென்ரே தெரியாமல் பிறந்த காரணத்தால் அவரை சிவன் என்னும் பிதாமகன் என்கிறார் வெட்டியான் இதுதான் பிதாமகன் என்ற பெயருக்குக் காரணம். சித்தன் என்ற பெயரோடு உலகம் தெரியாத ஒருவனாக பிணம் எரிக்கும் வெட்டியானாக வளர்ந்து வருகிறார் விக்ரம். விக்கிரமை வளர்த்த தந்தையும் ஒரு நாள் சுடலையிலேயே இறந்துவிட, அவரையும் எரித்துவிட்டு சுடலையை விட்டு வெளியேறுகிறார். இந்த நேரத்தில் அநாதையாக பல் வேறு குறும்புகள் செய்து பணம் திரட்டி வருகிறது சூர்யா குழு. இவர்கள் சிறிய தெருச் சுதாட்டத்தில் லைலாவை ஏமாற்றுகிறார்கள். வீட்டை விட்டு வெளியேறிய விக்ரம் பல அடிதடிகள் பட்டு கஞ்சா விற்கும் ஒரு பெண்மணி மூலம் கஞ்சா முதலாளியிடம் சேர்த்து விடப்படுகிறார். அவரோடு சேர்ந்த விக்ரம் கைது செய்யப்படுகிறார். சூர்யாவையும் லைலா போலீசில் பிடித்துக் கொடுக்க அவரும் சிறை செல்கிறார். இருவரும் சிறையில் சந்திக்கிறார்கள். அங்கு வழமையாக நடைபெறும் சண்டைகள் நடைபெறுகின்றன. பின்னர் வெளியே வருகிறார்கள். அந்த நேரம் கஞ்சா வியாபாரம் நடைபெறும் இடத்தை உளவறியும் போலீஸ்காரனை வில்லன் கொலை செய்கிறான். அந்த சவத்தை விக்ரம் எரிக்கிறார். இதனால் அவர் கைது செய்யப்பட கலக்டரிடம் வித்தை சொல்லி விக்கிரமை மீட்கிறார் சூர்யா. கோபமடைந்த வில்லன் சூர்யாவை அடித்து கொன்று சாக்கில் கட்டி வீதியில் வீசுகிறான். இறுதியில் விக்ரம் கஞ்சா தோட்டத்தை கொழுத்தி, வில்லனையும் பழி தீர்க்கிறார், இதுதான் கதை. கதைக்கு அழகு கொடுக்கும் நடிப்பு ! விக்ரம் கடைசிவரை பேசிய வசனங்கள் ஒன்று இரண்டு வரிகள்தான். மனநிலை பாதித்த அல்லது சித்தப்பிரமை பிடித்த ஒருவராக அவர் வருகிறார். இரண்டு கைகளையும் தொங்க விட்டபடி பாய்ந்து பாய்ந்து ஓடுவது அவருடைய நடிப்பின் சிறப்பு முத்திரை. ஏற்ற பாத்திரத்தை அழகுபட நடித்திருக்கிறார். சூர்யாவையும் ஒரு மசாலா கதாநாயகனாக அறிமுகம் செய்து காதல் காட்சிகளை அவர் வழங்கவில்லை. ஆனால் அவர் அளவுக்கு அதிகமாகக் கதைத்துப் புலம்பித் திரியும் ஒரு பாத்திரமாக வடிவமைக்கப்பட்டுள்ளார். நடிப்பு சூர்யாவினுடைய சொந்த நடிப்பல்ல, இயக்குநருக்காக அவர் நடித்திருக்கிறார். இரண்டு பாத்திரங்களையும் வித்தியாசமாக நடிக்கப்பண்ணினாலும் கூட சூர்யாவின் நடிப்பில் செயற்கைத் தன்மை நன்கு தெரிகிறது. லைலாவின் குரல் வித்தியாசமாக உள்ளது, சொந்தக் குரலில்தான் பேசினாரோ தெரியவில்லை. ஆனால் அவருடைய பாத்திரத்தை செம்மையாக நடித்துள்ளார். இருவரோடும் லைலாவும் போட்டி போட்டு நடித்திருக்கிறார். மூவரில் முன்னணி வகிப்பது லைலாவின் நடிப்புத்தான் என்றும் ஒரு சில இடங்களில் எண்ணத் தோன்றுகிறது. மற்ற நடிகர்களும் நடிப்பில் சோடை போகவில்லை. இளையராஜாவின் இசையமைப்பு ! நீண்ட இடைவெளிக்குப் பிறகு இளையராஜாவின் முத்திரை இசையமைப்பு இதில் இடம் பெறுகிறது என்றார்கள். அவருடைய கற்பனை வளத்திற்கேற்ப பல வகைகளிலும் முயற்சி எடுத்திருக்கிறார். பல இடங்களில் இசை கதையை நிமிர்த்துகிறது. மேலும் பல இடங்களில் பரிசோதனை முயற்சிகள் கதை நகர்வை தடுத்து நிறுத்துகிறது. பாடல்கள் போதிய வேகம் பெறவில்லை, சிம்ரன் வரும் ஆட்டத்தைக்கூட பழைய பாடல்களின் உதவியோடு சமாளித்துள்ளனர். இளையராஜாவின் பிடிவாதத்தை இசையில் காண முடிகிறது. படப்பிடிப்பும், எடிட்டிங்கும்... கிராமத்தின் இயற்கைக் காட்சிகள், கஞ்சா தோட்டங்கள், மலைச் சாரல்கள் ஆகியவற்றை மிகவும் அழகாக திரைக்குள் வைக்கிறார்கள். குழப்பமில்லாமல் நேர்கோட்டு வடிவத்தில் கதையை எடிட் செய்துள்ளனர். ஆகவே பார்ப்பவர்க்கு எந்தக் குழப்பமும் கிடையாது, பெரிய அரங்குகள் எதுவும் அமைக்காவிட்டாலும் கூட காட்சிப்படுத்திய நேர்த்தி வளர்ந்துவிட்ட திரைப்படங்களுடன் போட்டியிடுகிறது. இயக்குநர் பாலாவின் பணி.. இன்றுள்ள இயக்குநரில் சற்று வித்தியாசமாக கதை சொல்ல வந்திருப்பவர் பாலா என்பதை மீண்டும் நிறுவுகிறார். தமிழ் சினிமா இயக்குநர்கள் கை வைக்கத் தயங்கும் இடங்களில் அவர் கை வைத்துள்ளார். தேவையில்லாத காதல் காட்சிகள், பொருத்தமில்லாத நகைச்சுவைகள் எதுவும் இல்லாமல் நடிப்பையும், கூடுதல் நிஜத்தன்மையையும் கவனத்தில் எடுத்தது அவருடைய சிறப்பம்சமாகும். அவர் படமெடுத்துள்ள முறையயைப் பார்த்தால் சிறந்த வர்த்தக சினிமாக் காட்சிகளை எடுப்பது அவருக்கு சிரமமான பணியல்ல என்பது தெரிகிறது. வித்தியாசமாக செய்ய வேண்டுமென எண்ணி ரிஸ்க் எடுத்து செயற்பட்டுள்ளார். சூர்யாவை கொன்று வீசிய இடத்தில் நாயை வைத்து அவரது சடலத்தை வீசியிருப்பது அவருடைய இயக்கத்திற்கு நல்ல முத்திரை. நடிகர்களை எந்த இடத்திலும் இயல்பை மீறி அழகுபடுத்தக்கூட அவர் அனுமதிக்கவில்லை. பாலாவின் முயற்சிக்கு பிதாமகன் படத்திற்கு கிடைத்த வரவேற்பும், விலையும் நல்ல உதாரணம். திரைப்படத்தில் உள்ள பின்னடைவுகள்.. விக்கிரமையும், சூர்யாவையும் வித்தியாசமாகக் காட்ட வேண்டும் என்ற நோக்கத்தால் உயிர் நாடியான கதையைக் கோட்டை விட்டுவிட்டார். நடிப்பும், கதையும் ஒன்றாகக் கைகோர்த்தால்தான் நடிப்பின் பரிசோதனைகள் வெற்றிபெறும். இடைவேளைவரை என்ன கதையென்றே தெரியவில்லை. இடைவேளைக்குப் பிறகும் தெளிவின்மை நீடிக்கிறது, கதை முடிவிற்கு சிறிது முன்னர்தான் கஞ்சாக் கடத்தல்தான் மூலக்கதை என்பது தெரிகிறது. கண்ணுக்கு தெரியாத சின்னஞ்சிறு கதையைச் சொல்ல இவ்வளவு ஆர்பாட்டம் அவசியமில்லை. ஏற்கெனவே வந்த போன மசாலா கதை ஒன்றைச் சொல்ல இவ்வளவு எடுப்புக்கள் தேவையில்லை. விக்கிரமையும் சூரியாவையும் நடிக்க வைக்க வேண்டும் என்பதில் எடுத்த கவனத்தால் மற்றதை எல்லாம் கோட்டை விட்டுவிட்டார். அதேவேளை ஏதோ பயங்கரப்படம் போல விளம்பரம் செய்ததும் தவறாகியிருக்கிறது. அது படத்தின் எதிர்பார்ப்பிற்கு பிழையான விளம்பரம் என்பதை படம் பார்க்கும்போது எளிதாகத் தெரிய முடிகிறது. சூர்யாவின் நடிப்பு அவரால் இயலாத பாத்திரத்தைச் சொல்லப் புறப்படுகிறது. அவர் நடிக்கும் பாத்திரத்தை இயல்பாக அவரால் புரிய முடியவில்லை. பல இடங்களில் அவருடைய நடிப்பில் செயற்கைத் தன்மை தெளிவாகத் தெரிகிறது. விக்கிரமும் இவ்வளவு து}ரம் நடிப்பை வெளிப்படுத்தினாலும், அது மற்ற நடிகரால் இயலாத நடிப்பென்று கூற முடியவில்லை. இதே பாத்திரத்தை இதற்கு முன்னர் பல நடிகர்கள் மிகச் சிறப்பாக செய்துள்ளனர். நான் வணங்கும் தெய்வம் என்ற பழைய படத்தில் சிவாஜி இன்று போல தொழில் நுட்பமே இல்லாத காலத்தில் செய்து முடித்திருக்கிறார். இளையராஜாவின் இசையும் கைகொடுக்கவில்லை, மந்தமாகவே உள்ளது. படம் முடிந்து போகும்போது பலரிடம் விசாரித்தபோது இசையும் ஏமாற்றிவிட்டதாகவே சொன்னார்கள். முடிவாக என்னதான் இருக்கிறது என்று பார்த்தால் விக்கிரமின் நடிப்பு இருக்கிறது என்று சொல்லலாம். அதுமட்டும் இருந்து என்ன பயன் ? ஒரு திரைப்படத்திற்கு கூடிவரவேண்டிய மற்றைய அம்சங்கள் கூடி வரவேண்டாமா என்ற கேள்வியைக் கேட்டால் பிதாமகன் வெற்றிப்படமாகிவிட முடியாது. தீபாவளி ஓட்டத்தில் பிதாமகனை மற்றைய படங்கள் எளிதாக முந்திவிட முடியும். ஜெயம் போன்ற ஒரு சிறிய பட்ஜெட் படமே போதியது பிதாமகனை எளிதாகக் கடப்பதற்கு. ஆனால் வந்திருக்கும் படங்கள் எல்லாமே பத்தாம்பசலிப் படங்கள் என்றால் பிதாமகனுக்கே வாய்ப்பு அதிகம். சேது படத்திற்குப் பின்னர் எடுத்து வரும் சகல படங்களிலிமே பாலா எறத்தாழ ஒரே கதையைத்தான் சொல்லி வந்திருக்கிறார். பிதாமகனும் அப்படி ஒரு படம்தான், ஆனால் சேது போல ஒரு தாக்கமான படமல்ல. பாலாவால் நல்ல படங்களை தரமுடியும் என்பதை வெளிக்காட்டும் ஒரு படமே பிதாமகன். நடிப்பு 50 புள்ளிகள். இசை 30 புள்ளிகள் படப்பிடிப்பு 55 புள்ளிகள் இயக்கம் 45 புள்ளிகள் பிதாமகன் சராசரி - 45 புள்ளிகள். நன்றி: அலைகள் திரை விமர்சனக் குழு 26.10.2003 - aathipan - 10-30-2003 இந்தப்படத்தை பார்த்தபின் வீட்டுக்கு வந்த நான் முதலில் குளித்தேன்....... நான் ஏதோ சுடுகாட்டுக்கே போய்விட்டு வந்தது போல உணர்வு. அந்தளவு காட்சிகள் என்னைப் பாதித்து விட்டிருந்தது. விக்ரம் விளக்குமாற்றால் அடிவாங்கும் காட்சி தத்ரூபமாக வந்துள்;ளது. எந்த கதாநாயகனும் இப்படியான காட்சிகளுக்கு ஒத்துககொள்வர்களா என்பது சந்தேகம் தான். சூரியா நல்ல நடிகன்; அனால் இப்படத்தில் அவர் அப்பாபையே தூக்கி சாப்பிட்டுவிடும் நவரச நடிப்பு. அவரை இயக்கிய பாலாவிற்;க்கு தான் எல்லாப்பாராட்டும் போச்சேரவேண்டும். இளையராஜாவின் இசை என்று உணரவே முடியவில்லை. மீண்டும் அதைக்கேட்க நான் இன்னொருதடவை தான் பார்க்கவேண்டும். யுவன் சங்கரைவைத்து இசையமைத்தாரோ என்னவோ. ஒரே ஒரு பாட்டு காதில் விழுந்த உணர்வு கொஞ்சம் இருக்;கிறது. ஆனால் படத்தின் வேகத்தில் அது கூட அடிவாங்கி காணாமல் போய்;விட்டது. லைலாவபை;பாராட்டியே ஆகவேண்டும். அவர்தான் எங்களை சிரிக்க வைத்தார். கருணாஸ் கொடுத்ததை அழகாகசேய்;துள்ளார். கவர்ச்சி நடிகை ராசிகாவிடம் இவ்வளவு திறமையா. அவருக்கு நல்ல எதிர்காலம் உண்டு - AJeevan - 10-30-2003 aathipan Wrote:இந்தப்படத்தை பார்த்தபின் வீட்டுக்கு வந்த நான் முதலில் குளித்தேன்....... குளியலுக்கு பின்னர் துாக்கம் வந்ததா? துக்கம் கவ்விக் கொண்டதா?. சூரியா, தனது திறமையை காக்க காக்கவில் வெளிக்காட்டியுள்ளார். லைலா, கவர்ச்சி நடிகை ராசிகா மட்டுமல்ல திறமையான எத்தனையோ கலைஞர்களுக்கு நல்ல கதாபாத்திரங்களும், வாய்ப்பும், இயக்குனரும் வாய்த்தால் நல்ல எதிர்காலம்தான்............. நட்புடன், அஜீவன் - aathipan - 10-30-2003 இதுபோல படங்கள் தொடர்ந்து வந்தால் தமிழ்ப்பட ரசிகர்ளின் ரசனை உயர்ந்துள்ளது என் எடுத்துக்கொள்ளலாமா?. இனி எல்லோரும் இப்படிப்படம் எடுத்தால் மசாலாபடங்கள் எல்லாம் ஓடி ஒளிந்துவிடும் தானே. நல்ல தரமான படங்களை கொடுப்பவர்கள் என்னற வகையில் வெஸ்ட் பெங்கால் போல் தமிழ்நாடும் மாறிவிடும் இல்லையா. ; - Paranee - 10-30-2003 மொத்தத்தில் பிதாமகன் மக்கள் மகன் ஆகிவிட்டார் வாழ்த்துக்கள் அனைத்து நடிகர்களிற்கும்.குறிப்பாக பாலாவிற்கு - shanmuhi - 10-31-2003 மக்கள் மகன் ஆகிவிட்ட <b>பிதாமகனை</b>ப் பார்க்க ஆசைதான். ஆனால் இங்கு வந்து சினிமா திரையரங்குகளில் இன்னும் ஒரு படம்கூட பார்க்கவில்லை. யாழ்களத்தில் சினிமாவிமர்சனங்களை பார்த்த பின்புதான் படம் பார்க்க வேண்டும் என்ற ஆசையே ஏற்படுகிறது. - aathipan - 11-01-2003 நிச்சயமாக இதை திரை அரங்கில் தான் பார்க்க வேண்டும் விசிடிகள் நி;ச்சயமாக முழுமையான உணர்கை கொடுக்க மாட்டா. விசடியில் பார்த்;துவிட்டு விமர்சனமர் செய்வதை நிச்சயம் ஏற்க முடியாது நன்பாகளே. - சாமி - 11-01-2003 நாம் அதிகம் தெரிந்து கொண்டிராத அதீத மனிதர்களை நமக்கு அறிமுகப்படுத்துவதை வழக்கமாகக் கொண்டிருக்கும் இயக்குநர் பாலா, இந்தப் படத்தில் நிகழ்விலிருந்து விலகி நிற்கும் "சித்தன்" என்ற பாத்திரத்தை விக்ரம் மூலமாகவும் இயல்பில் கண்டுகொள்ளாமல் கடந்து போகிற "சக்தி' என்ற பாத்திரத்தை சூர்யா மூலமாகவும் அறிமுகப்படுத்துகிறார். சுடுகாட்டில் பிறக்கும் விக்ரமின் ஜனனத்தில் துவங்குகிறது கதை. சவங்களினூடான வாழ்க்கையில் தனித்துப் போகும் விக்ரமுக்கு மனித உறவுகளின் மகத்துவம் புரியத் துவங்குவதுடன் கதை முடிகிறது. இந்த ஒற்றை வரியில் சொல்லத்தக்க கதை, சுடுகாடு தொடங்கி கஞ்சாத் தோட்டம், சிறைச்சாலை முதலான வாழ்வின் இயல்பு வெளிச்சம் படாத இருண்ட பிரதேசங்களில் பயணிக்கிறது. எல்லாமே புதிய அனுபவங்கள்; அவற்றைப் புரிய வைப்பதில் வெற்றி பெறுகிறார் பாலா. சித்தன் பாத்திரம் நுட்பமானது. உடுத்தத் தெரியும்; துவைக்கத் தெரியாது, மொழி தெரியும்; பேசத் தெரியாது, விசுவாசம் தெரியும்; அன்பு கொள்ளத் தெரியாது. தூங்கத் தெரியும்; துக்கம் தெரியாது. இதை நடிப்பால் வடித்துக் காட்டியிருக்கிறார் விக்ரம். கண்களைச் சிமிட்டக் கூடத் தெரியாத ஒரு மனிதனை எப்படிக் கற்பனை செய்வது? "செய்திருக்கிறார்' விக்ரம். சுடுகாட்டுச் சிதைக்கு அருகில் எதையோ அவர் எடுத்துத் தின்னும்போது "பக்'கென்றிருக்கிறது - அது ஒரு பட்டாணிக் கடலையாகக் கூட இருக்கலாம். அவரைப் பார்த்துப் பரிதாபப்பட்டு உணவளிக்கும் சங்கீதாவின் பின்னால் அவர்... சரியாகச் சொல்வதானால் விசுவாசமுள்ள ஒரு நாய் போலவே தொடர்வது நெகிழ வைக்கிறது. தூங்கும் அவரைச் சங்கீதா தட்டி எழுப்ப உறுமுகிறாரே ஒரு உறுமல்.... அவருக்குள்ளிருக்கும் மிருகம் வெளிப்படும் கட்டங்கள். அவருக்கு வேலை வேண்டும் என்பதைப் புரிந்து கொண்ட சங்கீதா, ""கலெக்டர் வேலை இருக்கு, போறியா?'' என்றதும் "சரி' என்று தலையாட்டும்போது மிருகத்துக்குள்ளிருக்கும் அப்பாவிக் குழந்தை தலைகாட்டுகிறது. இப்படி அடங்காத மிருகம், அப்பாவி மனிதன் என்று மாறும் முயற்சியில் சித்தனுக்குள் காணாமல் போய்விடுகிறார் விக்ரம். அந்தக் கரும்பாறையைச் செதுக்கும் உளியாக சூர்யா. விக்ரம் ஏற்றிருக்கும் பாத்திரத்தின் முன்னால் பதற்றப்பட்டு விடாமல் தன்னம்பிக்கையுடன் நடித்துத் திகைக்க வைக்கிறார் அவர். பொய்யையும், புரட்டையும் உருட்டி, கிண்டி வயிறு வளர்க்கும் போக்கிரியான இந்த வேடத்தை இதற்கு முன்னால் - அவரது அப்பா சிவகுமார் உள்பட யாரும் செய்ததாகத் தெரியவில்லை; இவ்வளவு நன்றாகவும். வாழ்க்கையை விளையாட்டுத் தனமாக எடுத்துக் கொண்டு உயிர்விடும் அந்தப் பாத்திரம் சூர்யாவால் உயிர்பெறுகிறது. உடலில் இருக்கும் அத்தனைப் பொருள்களையும் சிவாஜி, பத்மினி மேல் சூதாடித் தோற்கும் லைலா இனி என்ன செய்யப் போகிறார் என்று நினைத்தால், செய்கிறாரே ஒரு ரகளை! அவரது கிளைமாக்ஸ் நடிப்பு விக்ரம், சூர்யாவுடன் போட்டி போடத் தக்கது என்று "பந்தயமே' கட்டலாம். ரசிகாவாகக் காணாமல் போய் கஞ்சா விற்கும் பெண்ணாகத் திரும்பி வந்திருக்கும் சங்கீதா, இனி தமிழ்ப் படவுலகில் கண்டு கொள்ளப்படுவார். விக்ரம், சூர்யா இருவரையும் சைக்கிளில் வைத்து அவர் அடிக்கும் "டிரிபிள்ஸ்...' அடேங்கப்பா! வில்லன் மகாதேவன் புதுமுகமாம். வெகுகாலம் நம்முடன் பழகிய தோற்றம் அவருக்கு. யார் யார் மாதிரியோ தோன்றினாலும் புதிதாகத் தெரிகிறார். கண்ணில் தெரியும் இவர்களுக்கிடையில் காணாமல் காட்சியளித்துக் கொண்டிருக்கும் இன்னொரு பிதாமகன், இளையராஜா. தனியாகப் பாடல்களைப் பிரித்துக் காட்டி "பிளாட்டினம் டிஸ்க்' வாங்கிய வணிக நிலைகளையெல்லாம் கடந்து படத்தின் உயிர்மூச்சாகியிருக்கிறது அவரது இசை. விக்ரமின் மாற்றத்தை "வளையாத மூங்கிலில், ராகம் வளைஞ்சு ஓடுதே' என்று ஒற்றை வரியில் சொன்ன பழநிபாரதிக்கும் ஒரு "பலே'! சிம்ரன் ஆடும் அந்த ஆட்டம் கதைப் போக்கில் நேரும் "இனிய இடையூறு'. பாலசுப்பிரமணியெம்மின் ஒளிப்பதிவு, காட்சிக் கவிதை. இயல்பான சண்டைக் காட்சிகளில் பெயருக்கேற்றவாறு "ஸ்டன்' சிவா ஸ்தம்பிக்க வைக்கிறார். இத்தனை விசைகளையும் முடுக்கியும், அந்த சக்தியைத் திறம்பட இயக்கியும் காட்டியிருக்கும் பாலாவின் உழைப்பு அயர வைக்கிறது. "விருதுக் கமிட்டி'களுக்கு இருக்கிறது நெருக்கடி...இந்தப் பிதாமகனால். - வேணுஜி நன்றி: தினமணி - Paranee - 11-05-2003 படத்தைப்பற்றி ஒற்றைவரியில் சொல்வதனால் எல்லாமே தேவைக்கேற்ப பயன்படுத்தப்பட்டிருக்கின்றன வாழ்த்துக்கள் பாலா ! விக்ரம் சந்திக்காத மனிதர் சூர்யா வாழ்வில் நாம் சந்தித்த ஒருவர் லைலா நம்கூடவே வாழும் ஒருவர் வில்லன் கண்ணில் விழுந்த ஒரு உறுத்தல் சங்கீதா வயலிற்கிறைத்த நீர் சிம்ரன் தரிசுநிலத்தில் பெய்த மழை எல்லாமே அற்புதம் இன்னும் கண்ணைவிட்டு அகலவில்லை அவர்களின் அந்த நடிப்பும் காட்சியமைப்பும் எல்லாமுமே ! - vasisutha - 11-06-2003 அலைகளின் விமர்சனம் ஒரு பாமரனின் அதாவது சாதரண சினிமா ரசிகனின் பார்வையில் இருக்கிறது என்பது எனது தாழ்மையான கருத்து. அதற்கு உதாரணம் கதையில் ஆரம்பத்தில் வரும் பெண் யார் என கேட்டிருப்பது. சாதராண இரசிகன் அப்படித்தான் எதிர்பார்ப்பான். கமல் கூட ஒரு படத்தில் இதை கிண்டல் பண்ணியிருக்கிறார் சிங்காரவேலன் என்று நினைக்கிறேன். ஒரு சாதாரண இரசிகன் என்ன எண்ணி காத்திருப்பான். விக்ரம் வளர்ந்து தன் தாயை யார் என அறிந்து அவளுக்கு ஏன் அந்த நிலை என தெரிந்து.. பழிவாங்க புறப்படலாம் என்றே நினைப்பான். இதுதான் பல சினிமாவில் காட்டப்பட்டு வந்ததும். இதை விட்டு விலகி யதார்த்தம் என்ற ஒன்றில் நுழைந்து பார்த்தால். பிதாமகன் நெஞ்சத்தை சுடும் கண்ணீர் வரவவைக்கும். அவன் ஏன் இப்படி மிருகம் போல மாறினான். பிறந்தது சுடுகாட்டில் வளர்ந்தது வெட்டியானிடம். அப்படியானால் வெட்டியான்கள் எல்லோரும் மிருகமா? இல்லை. அப்படியானால் இவன் ஏன் இப்படி??? இந்த கேள்விக்கு விடைதான் முதல் காட்சி. பிறந்ததுமே தாய் இல்லை சொந்தங்கள் இல்லை வெட்டியானும் தனியாள் இவன் பார்க்கும் மனிதர்கள் பிணங்களும் அவற்றை சுமந்து வரும் மனிதர்களையும். அழுகை மட்டுமே அவன் அதிகம் சந்தித்தது. அவன் மிருகமாக இருப்பதில் ஆச்சரியம் இல்லை. இசை என்றால் பாடல் மட்டுமல்ல என்று நினைக்கிறேன். பிண்ணணி இசையில் மனங்களை அதிரவைத்திருக்கிறார் இளையராஜா. குறிப்பாக கஞ்சாக்காடு வரும் காட்சிகளிலும் இறுதிக்காட்சியிலும் இசையாலேயே சுூழ்நிலையை புரியவைத்திருக்கிறார். பாடல்களும் நன்றாக உள்ளது படத்தோடு சேர்ந்து பார்க்கும் போது. சிறையில் விக்ரமை காப்பற்றப்போய் சுூர்யா போலிசிடம் இரத்தம் வருமளவிற்கு அடிவாங்கி திரும்புகிறார். இதுவரைக்கும் யாரிடமும் பேசாத சித்தன் பரிவுகாட்டாத சித்தன் மிருகம் போலவே குணங்களை கொண்ட அவன்.. சுூரியா தனக்காக தான் அடிபட்டு வந்துள்ளான் என்பதை உணர்ந்து கிட்டவந்து சுூரியாவை குனிந்து பார்க்கிறாரே இந்த இடத்தில் இளையராஜா ஒரு பாடலை போட்டார் பாருங்கள்.. அந்த காட்சியும் பாடலும் சேர்ந்து உள்ளத்தை உருக்கி விட்டது. சுூரியா அற்புதம் ஏமாற்று வேலை செய்பவன் எந்தளவுக்கு போலியாக மிகையாக பேசி ஏமாற்றுவானோ அதை நகைச்சுவையாகவும் இயல்பாகவும் பின்னியெடுத்துவிட்டார் மனிதர். லைலா இன்னொரு அற்புதமான நடிப்பு. சுூரியாவை பிணமாக பார்த்ததும் அழுகிறாரே ஒரு அழுகை எங்களையும் அழவைத்து விடுவாரோ என்று இருந்தது. அவ்வளவு உணர்வான நடிப்பு. படத்தில் வரும் அனைத்து பாத்திரங்களுமே அருமையாக நடித்திருந்தார்கள். யாரும் படத்திற்கு அநாவசியமான பாத்திரப் படைப்பு இல்லை என்பது இன்னும் சிறப்பு. - kuruvikal - 11-06-2003 எதுவானாலும் சினிமா சினிமா தான்....! சும்மா பொழுது போகாட்டி பார்க்கலாம்...அவ்வளவும் தான்...! :twisted: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- aathipan - 11-06-2003 vasisutha அருமையாக விமர்சித்துள்ளீர்கள். பாத்திரிகைக காரர்கள் தோற்றார்கள் உங்களிடம். இன்னும் இன்னும்எழுதுங்கள். - vasisutha - 11-06-2003 நன்றி ஆதிபன். முயற்சிக்கிறேன். நிறைய எழுத ஆசை. ஆனால் கருத்துக்களத்தினை குப்பையாக்கக் கூடாது என்று மோகன் அண்ணா என்னை மிரட்டி வைத்திருக்கிறார். இல்லாவிட்டால் உங்கள் பாடு திண்டாட்டம் தான். <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
- AJeevan - 11-07-2003 vasisutha Wrote:நன்றி ஆதிபன். முயற்சிக்கிறேன். நிறைய எழுத ஆசை. ஆனால் கருத்துக்களத்தினை குப்பையாக்கக் கூடாது என்று மோகன் அண்ணா என்னை மிரட்டி வைத்திருக்கிறார். இல்லாவிட்டால் உங்கள் பாடு திண்டாட்டம் தான். <!--emo&இன்னும் நான் பிதாமகனை பார்க்கவில்லை. பார்த்த பின் உங்கள் விமர்சனத்தை வாசித்து விட்டு எழுதுகிறேன்.OK? - சாமி - 11-11-2003 'இன்று, கோடம்பாக்கம் வேறு அரசு ஆதரவு இல்லாமல், சுய வலிமையில் நிற்க வேண்டியுள்ளது. இது போன்ற நாட்களில் விஷப் பரிட்சை வேண்டாம். வெற்றிப் படம் என்றால், அதற்கு ஃபார்முலா ஒன்று ரெடியாக இருக்கிறது' என... வெள்ளித்திரையின் பிதாமகர்கள் என சொல்லப்பட்ட பலரும் மிகுந்த முன்யோசனைகளோடு படம் எடுக்கும் நிலையில் - பாலாவின் இந்த துணிச்சலான முயற்சி பாராட்டப்பட வேண்டியதுதான், சந்தேகமில்லை. ஆனால்... போடிநாயக்கனுர். 'போடி' என்று சுருக்கமாக - தமிழ் சிலேடை தன்மையைப் பயன்படுத்தி, உச்சரிப்பு வித்தியாசத்தால் கிண்டலாகவும்..., குறிப்பிடும் ஊரில் இன்னொரு 'கிக்'கான வஸ்தும் உண்டு. கஞ்சா. இப் பகுதியை ஒட்டிய சில தென் மாவட்டங்கள் தவிர, மற்ற மக்களுக்கு அவ்வப்போது செய்தித்தாள்களில் 'கஞ்சா தோட்டம் அழிப்பு' என்று செய்தி வருவதை தவிர, வேறு எதுவும் தெரியாத நிலையில் - கிட்டத்தட்ட ஒரு இன்டஸ்ட்ரி ரேஞ்சில் கஞ்சா வளர்ப்புத் தொழில் திரைமறைவில் நடப்பது எப்படி என்று ஒரு ஆவணப்படமாகவும் 'பிதாமக'னைப் பார்க்கலாம். ஆனால், இது எக்ஸ்ட்ரா. விஷயத்துக்கு வருவோம். 'போடி' மயானத்தில் ஒரு நிறைமாத கர்ப்பிணி. அங்கேயே பிள்ளை பெற்றவுடன் உயிர்விட, மயானத்து வெட்டியான் குழந்தையை எடுத்து வளர்க்கிறான். அதனால் குழந்தை, 'சித்தன்'-க்கு உணவு, உறங்கல்வரை எல்லாமே மயானத்தில்தான். விழித்தது முதல் பிணங்களோடும், கல்லறையோடும் வாழ்ந்து, அந்த சாம்பல், கொள்ளித் தீ, பிணவாடை எல்லாம் சேர்ந்து சித்தனை, ஒரு 'சித்தன'£கவே (விக்ரம்) - உணர்வுகள் அற்றவனாக (அ) மரத்தவனாக மாற்றிவிடுகிறதாம். பாதி மிருகமாக வாழ்கிறான். வளர்த்த வெட்டியான் காலமான பிறகு, சித்தன் நகரத்துக்குள் நுழைய... நிஜ கதை தொடங்குகிறது. வெட்டியான் என்பதால் அவனை கடை, காட்சிகளில் சேர்த்துக் கொள்ள மறுக்கிறார்கள். பசிக்காக துடிக்கும் அவன், உணவுக்கு இடைஞ்சலாயிருக்கும் ஆட்களுடன் மோதுகிறான். உள்ளிருக்கும் மிருகத்தன்மை வெளிப்படுகிறது. சில்லறை கஞ்சா வியாபாரி கோமதி (சங்கீதா) அந்த நேரத்தில் ஆதரவாக இருந்து உணவிட, அவள் பின்னால் சித்தன். முதல் உறவு! கோமதியின் சிபாரிசில் கஞ்சா தோட்டத்தில் வேலைக்கு போகிறான் சித்தன். அங்கும் அவன் போக்கு... சிவன்போக்கு! ஒருமுறை தோட்டத்திலிருந்து கஞ்சா கடத்தும்போது போலிஸ் சுற்றிவளைக்க, கூட வந்த மற்ற எல்லாரும் தப்பி ஓடிவிடுகிறார்கள். ஏன் ஓடுகிறார்கள் என்பதுகூட புரியாத சித்தன், தன்போக்கில் அலட்டிக் கொள்ளாமல் நின்று பிடிபடுகிறான். கஞ்சா கடத்தல் வழக்கில் சிறை வாசம். அங்கேதான் சக்தி (சூர்யா) சித்தனுக்கு அறிமுகமாகிறான். சிறையில், சித்தனைச் சீண்டியவர்களிடம் மீண்டும் மிருகத்தனம். நிஜமாகவே கோர முகம் காட்டுகிறது மிருகம். மோதியவனை தூக்கி எறிய, கொதிக்கும் சாம்பாரில் விழும் அவன் துடிப்பையும் காமிராவில் காட்டுகிறார்கள். இது அதீத மூர்க்கத்தனம். சித்தனை யாரும் கட்டுப்படுத்த முடியவில்லை என, போலிஸார் திட்டமிட்டு சிறைப்படுத்தி - கால், கை கட்டிய நிலையில் தொங்கவிட்டு தாக்குகிறார்கள். இந்த நேரத்தில் பரிவு காட்டுவது சக்தி. அதனால் இருவருக்கும் நட்பு முளைக்கிறது. இந்த நட்புதான் பின்பு சக்திக்கு பிரச்னையாகிறது. தன்னைக் காட்டிக் கொடுத்தான் என கஞ்சா தோட்ட முதலாளி சக்தியை கொலை செய்ய, அதற்கு சித்தன் எப்படி பதில் சொல்கிறான் என்பதுதான் மீதிக்கதை. சித்தன் பாத்திரத்திற்கு விக்ரம் முழுமையான நியாயம் செய்திருக்கிறார். ஆனால், இயக்குனர் பாலாதான் அந்த பாத்திரத்தை - நிஜ மிருகமாகவா... இல்லை ஆதி மனிதனாகவா... அல்லது மென்மையான மனித உணர்ச்சிகளும் தலையெடுக்கும் நாகரிக மனிதனாகவா... எப்படி சித்தரிப்பது என்பதில் சற்றே குழம்பி, முன்னுக்கும், பின்னுக்கும் தள்ளாடுகிறார். நம்மில் வெகு சிலரே வெட்டியான் கேரக்டரை நேரில் பார்த்து, உணர்ந்திருக்கக் கூடிய வாய்ப்பு உள்ளதால் - வெட்டியான்கள் இப்படியும் இருப்பார்களோ என்ற கருத்து உருவாக்கக்கூடிய அளவு நடிப்பில் அழுத்தம். சக்தியாக நடித்திருக்கும் சூர்யா, தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் முன்னேறிக் கொண்டிருக்கிறார். இந்தப் படத்தில் - புத்திசாலித்தனமான ஏமாற்று வேலைகள் செய்து, வாய் ஜாலத்தால் பிழைப்பு ஓட்டும் கேரக்டர். ஆரம்பத்தில் லோக்கல் சூதாடியாக..., ரயில் வண்டியில் ஃபாரின் ஐட்டம் விற்பவராக..., பின்னர் வாயு தொல்லைக்கு லோக்கல் வைத்தியராக... ஒவ்வொரு இடத்திலும் ஒரு மாதிரி. அசத்தலான வார்த்தை ஜாலம்... அதற்கு பொறுத்தமான டெலிவரி... டைமிங் சென்ஸ்... என அம்சமாக பொருந்தி வருகிறது. அதேபோல சிறைக்குள் நுழையும்போது அறிமுகம் செய்து கொண்டு அடிக்கும் லந்து... இப்படி எல்லாவற்றிலுமே.... சூர்யாவுக்குள் ஒரு கலகலப்பு, காமெடி சித்தர் புதைந்திருக்கிறார் என்பதை வெளிக்கொண்டு வந்த பாலாவுக்கு கோடம்பாக்கம் கோடி நமஸ்காரம் போடலாம். பின்பாதியில் உருக்கமான காட்சிகளிலும் சோடை போகவில்லை. குறிப்பாக கோணிப்பையில் பிணமாக காட்டும்போது... யாரந்த மேக்கப் மேன்? ரெட்டை சபாஷ்!! விருதுக்கு போட்டியிடத் தகுதியான காட்சி. லைலா, ஒரு மாணவியாக அறிமுகமாகிறார். என்ஜினியரிங் மாணவர்கள் வைத்திருக்கும் மினிடிராப்டரைத் தூக்கிக் கொண்டு, காக்கி சாட்டை போட்டு உலவ விட்டிருந்தாலும்... அவர் படிக்கும் இடம் என எதையும் காட்டாமலேயே, குழந்தைத்தனம் மாறாத குறுகுறு மாணவி காரெக்டர் பளிச்சிடுகிறது. முதல்முறை சக்தியிடம் ஏமாந்ததிலிருந்து, அவனைப் பார்க்கும்போதெல்லாம் பரபரப்பு. கடைசியில் போலிசில் பிடித்துக் கொடுத்தபின், அவன் சிறையிலிருந்து திரும்பி வந்து என்ன செய்வனோ என அப்பா வீட்டில் பயந்து நடுங்கிக் கொண்டிருக்க, 'பின்னாடி அவார்ட் வாங்கி வருவேன். அப்ப நீங்க யாரும் தொடக்கூடாது' என்று வீரம் பேசுவதாகட்டும்..., சிறையில் சூர்யாவிடம் பேசி விட்டு வெளியேறும்போதாகட்டும்... பல இடங்களில் கிராமத்து அப்பாவி சூரப்புலி கண்முன் தோன்றுகிறார். சங்கீதா, மெச்சூரிட்டி உள்ள கிராமத்துப் பெண்ணாகவே வாழ்ந்திருக்கிறார். ஊரெல்லாம் விரட்டும் சித்தனின் பசிக்கு உணவு தந்ததோடு முடிந்தது என்று தன் போக்கில் போனவரை, சித்தன் பின் தொடர... அவனுக்கு வேலை வாங்கித் தந்தது, அப்புறம் சிறையில் இருந்து பெயிலில் எடுத்தது என மெல்ல மெல்ல ஒட்டிக் கொள்ளும் அந்த முரட்டுக் கேரக்டர் மீது காதல் வருவதை இயற்கையாக காட்டியிருக்கிறார். பின்னர் சக்தி அநியாமாக கொலையானதும் உணர்ச்சியில்லாமல் ஓரமாக உட்கார்ந்திருக்கும் சித்தனை கரித்துக் கொட்டுவதாகட்டும், உடலை இடுகாட்டுக்கு தூக்க வரும் சித்தனை துடைப்பத்தால் அடித்து விரட்டுவதாகட்டும்... கிராம பெண் வாழ்க்கையை சித்தரிப்பதில் பாலாவும் சேர்ந்தே ஜெயித்திருக்கிறார். பாலாவின் சென்ற படத்தில் கலக்கியிருந்த கருணாஸ§க்கு, இந்த படத்தில் சுருதி குறைவுதான். கனமான, மற்ற நான்கு கேரக்டர்கள் கிளப்பும் வெள்ளத்தில் அவர் இருக்கும் இடம் தெரியாமல் அடித்துச் செல்லப்பட்டிருக்கிறார் - சூர்யா கூடவே படம் முழுக்கத் தோன்றினாலும். மனோபாலாவும் இந்த கம்பெனியில் பக்க மேளம் வாசித்திருக்கிறார். இவர்கள் தவிர, கஞ்சா தோட்ட முதலாளி அதற்கான கர்ணகடுரத்தை காட்டியிருப்பது பிளஸ். பாலாவுக்கு மிக முக்கியமான ஆதரவு - பின்னணி இசையைமத்துள்ள இளைராஜா, மற்றும் காமிராமென் பாலசுப்ரமணியன். கஞ்சா காட்டில்... காட்டு பாதைகளில்... மயான பூமியில்... இப்படி ஒவ்வொரு இடத்திலும் இவர்கள் இருவரும் செய்திருக்கும் மாயாஜாலம், சம்பவங்களை அப்படியே கண்முன் நிற்க வைக்கிறது. பாடல்களுக்கும் குறைவில்லை. மசாலா விஷயம் மாதிரி எக்ஸ்ட்ராவாக சேர்க்கப்பட்டிருந்தாலும், சிம்ரன் நடிகையாகவே வந்து ஆடிப்பாடும் காட்சிகளில் இருக்கும் வெரைட்டியும், கலகலப்பும், சுறுசுறுப்பும் படத்தின் போக்கில், வேகத்தில் இடறவில்லை என்பதுடன், ரசிக்க வைக்கிறது. இவ்வளவு இருந்தென்ன? பாலா முக்கியமான இந்த விஷயத்தில் தூங்கியிருக்கக் கூடாது. படம் முழுக்க காட்டப்படும் கண்முடித்தனமான violenceக்கு நியாயமே, சித்தன் காரண காரியம் புரிந்து..., முன்பின் யோசித்து செயல்படுபவன் அல்ல; Impluse reactive character என்பதுதான். அப்படியான சித்தனுக்கு..., சக்தி இறந்துபோய் சடலம் வீட்டில் இருந்தபோது கூட உணர்வில்லாமல் வானத்தையும் பூமியையும் பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருந்தவனுக்கு... லைலா எதுவுமே வாய் திறந்து சொல்லாதபோதும்கூட சக்தியைக் கொன்றது கஞ்சா தோட்ட முதலாளிதான் என்பதை எப்படி தெரிந்து கொள்ள முடிந்தது. அந்த அளவுக்கு யோசிக்கத் தெரிந்த காரெக்டராக சித்தனை படத்தில் காட்டவில்லையே! அடுத்து, கஞ்சா தோட்ட முதலாளி இருக்கக்கூடிய வாய்ப்புள்ள இடம் ஒவ்வொன்றாக தேடிதேடி சென்று... காத்திருந்து, விரட்டி விரட்டி... கொடுரமாகக் கொலை செய்யும் முன் லைலாவுக்கு அவன் முகத்தைத் தூக்கிக் காட்டி, பழி தீர்த்துவிட்டதாகச் சொல்லாமல் சொல்லும் சித்தன் காரெக்டருக்கு மற்ற இடங்களில் மட்டும் 6வது அறிவை ஆப் செய்யப்பட்டுள்ளது இடிக்கிறது. தேவைப்படும்போது தேவையானபடி கூடுவிட்டு கூடு பாய்கிறது அந்த காரெக்டர். கோமதி மீது காதல் உணர்வு வருகிறது... மஞ்சுவும் (லைலா), சக்தியும் காதலிக்க... அவர்களுக்கு Privacy தேவைப்படும் என ஒதுங்கி சென்று வழிவிடுகிறார் சித்தன். இதெல்லாம் படத்தில் காட்டப்படும் அரை மனித, அரை மிருக சித்தனுக்கு சாத்தியமா என்ற கேள்விகள் எழ வாய்ப்பில்லாமல் பார்த்துக் கொண்டிருக்கலாம். ஆனால் இதையெல்லாம் சொல்லத் தவறிவிட்டால் அது பாலாவிற்கும், அவர் மீது தமிழ் மீடியா வைக்கும் எதிர்பார்ப்புக்கும் துரோகம் என்றே தோன்றுகிறது. மற்றபடி பிதாமகன், நம்ம வீட்டுப் பிள்ளைதான் - அதாவது, குடும்பத்தோடும் போய் பார்க்கலாம். - சந்திரன் -------------------------------------------------------------------------------- நன்றி: அம்பலம் |