Yarl Forum
கை வைத்தியம் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: அறிவியற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=5)
+--- Forum: மருத்துவம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=28)
+--- Thread: கை வைத்தியம் (/showthread.php?tid=7886)



கை வைத்தியம் - shanmuhi - 11-01-2003

<b>தொண்டை நோவுக்கு கை வைத்தியம் ஏதும் தெரிந்தால்........... தெரிவிப்பீர்களா ? ? ?

நன்றி.</b>


- yarl - 11-02-2003

அதிமதுரம் நல்லது என்பார்கள் .எஙகே எடுக்கலாம் என கேட்காதீர்கள்..<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->


- nalayiny - 11-02-2003

தேன் நல்லது தொண்டை நோவை குறைக்கும். அதிமதுர வேர் இங்குள்ள மருந்து மூலிகைக்கடைகளில் (துரோக்கறி) இருக்கிறது. வாங்கலாம். :wink:


- AJeevan - 11-02-2003

[quote=nalayiny]தேன் நல்லது தொண்டை நோவை குறைக்கும். அதிமதுர வேர் இங்குள்ள மருந்து மூலிகைக்கடைகளில் (துரோக்கறி)

துரோகிகளிடமிருந்தால், வாங்கி எனக்கும் அனுப்புங்களேன்....................


- aathipan - 11-03-2003

வேப்பம் எண்ணை எடுத்து தொண்டையில் தேய்த்துக்கொள்ளுங்கள்.

கிருமிகளினால் தொற்று ஏற்பட்டிருப்பினும் வலி இருக்கும் அதற்கு இளஞ்சூடான நீரில் உப்புஇட்டு நன்கு கலக்கி அதைத்தொண்டையில் சில நிமிடங்கள் வைத்திருக்க வேண்டும்;. ஒருநாளைக்கு மூன்று தடவை செய்தாலே சரியாகிவிடும்.


- nalayiny - 11-03-2003

AJeevan Wrote:[quote=nalayiny]தேன் நல்லது தொண்டை நோவை குறைக்கும். அதிமதுர வேர் இங்குள்ள மருந்து மூலிகைக்கடைகளில் (துரோக்கறி)

துரோகிகளிடமிருந்தால், வாங்கி எனக்கும் அனுப்புங்களேன்....................

ஓ எமது நாட்டு மூலிகைகளை சுரண்டிக்கொண்டு வருவதனால் இத்தகைய மருந்து கடைகள் கூட துரோகியாகிவிட்டதோ..?! <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> வாங்கி அனுப்பினா போச்சு. வந்து சேருது.


பசுப்பாலுக்குள் மஞ்சள் தூள் : மிளகு தூள் கொஞ்சம் சேற்து நன்கு சுூடாக்கி குடித்தாலும் குணமாகும்.


- shanmuhi - 11-03-2003

கை வைத்தியம் கூறிய அனைவருக்கும் நன்றிகள் பல.


- AJeevan - 11-03-2003

தொண்டை நோவுகள் ஏற்படுவதற்கு முக்கிய காரணம் கிருமிகளின் தொல்லைதான்...............

எனவே
அதிகாலையிலும்(படுக்கையை விட்டு எழுந்ததும்) செய்து வாருங்கள்.

(கொகல் = தொண்டைக்குள் கொஞ்சநேரம் நீரை வைத்து குலுங்க வைப்பது.
இதற்கான தமிழ் சொல் தெரியவில்லை..........)

<span style='font-size:25pt;line-height:100%'>இந்தப் பிரச்சனையே வராது.</span>


- Paranee - 11-03-2003

சமஹன்
பருகுங்கள். சகல தொல்லைகளிலிருந்தும் நிவாரணி
(நிர்வாணி இல்லை)


- AJeevan - 11-03-2003

nalayiny Wrote:
AJeevan Wrote:[quote=nalayiny]தேன் நல்லது தொண்டை நோவை குறைக்கும். அதிமதுர வேர் இங்குள்ள மருந்து மூலிகைக்கடைகளில் (துரோக்கறி)

துரோகிகளிடமிருந்தால், வாங்கி எனக்கும் அனுப்புங்களேன்....................

ஓ எமது நாட்டு மூலிகைகளை சுரண்டிக்கொண்டு வருவதனால் இத்தகைய மருந்து கடைகள் கூட துரோகியாகிவிட்டதோ..?! <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> வாங்கி அனுப்பினா போச்சு. வந்து சேருது.

<span style='font-size:22pt;line-height:100%'>நளாயினி,
அவர்களாவது, கொண்டு வந்த இடத்தையாவது சொல்கிறார்கள்?</span>


- sOliyAn - 11-03-2003

Quote:(கொகல் = தொண்டைக்குள் கொஞ்சநேரம் நீரை வைத்து குலுங்க வைப்பது.
இதற்கான தமிழ் சொல் தெரியவில்லை..........)
தமிழ் டிக்சனெறி ஒன்றை எடுத்து நல்லாய் 'கொப்புளிச்சு' துப்புங்கள்.. சொல் வந்து விழும்.. <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- Paranee - 11-03-2003

கொகல்
தொங்காமல் விட்டால் சரி


- சாமி - 11-13-2003

சுறுசுறுவெனும் காரத் தன்மை கொண்ட மிளகு சளி, இருமல், விஷத் தன்மை, வாதம் முதலியவற்றிற்கு அருமருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது. மிளகு நெருப்பின் குணம் உடையது என்பார்கள்.

1. தொண்டை வலி இருந்தால், கொஞ்சம் மிளகு, ஓமம், உப்பு
ஆகிய மூன்றையும் சேர்த்து வாயில் போட்டு மென்றால்
தொண்டை வலி குணமாகும்.

2. மிளகைப் பொடி செய்து, சிறிது உப்பு சேர்த்து சூடாக்கி சிறிது
நெய்யில் கலந்து கொண்டு சாப்பிட்டால் வயிற்று உப்புசம்,
பசியின்மை போன்றவை உடனே குணமாகும்.

3. சளி, தடுமன் (ஜலதோஷம்) அதிகமாக இருந்தால், மிளகு ஒரு
ஸ்பூன் எடுத்து நெய்யில் வறுத்து பொடி செய்து
வைத்துக்கொண்டு தினமும் மூன்று வேளை அரை ஸ்பூன்
பொடியைச் சாப்பிடுவது நல்லது இரண்டு நாள்களிலேயே நல்ல
குணம் காணலாம்.

4. பசியில்லாமலிருந்தால், ஒரு ஸ்பூன் மிளகை வறுத்துப் பொடி
செய்து கைப்பிடியளவு துளசி இலையைப் போட்டுக் கொதிக்க
வைத்து, சூடு ஆறியவுடன் தேனில் கலந்து குடித்தால்
சரியாகும்.

5. நன்றாய் சளி பிடித்துக் கொண்டு மூக்கு ஒழுகத்
தொடங்கினால் மிளகை நன்றாக இடித்து சூரணம் செய்து
வைத்துக் கொண்டு தேனில் கலந்து சாப்பிட்டு வர வேண்டும்.
இரண்டொரு நாள்களில் சரியாகி விடும்.

மிளகில் இத்தனை மருத்துவ குணம் இருப்பதால்தான், நாம் உணவில் தாராளமாகச் சேர்த்துக் கொள்கிறோம்.

நன்றி: வெப்உலகம்