Yarl Forum
ஆ.. சாமி - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12)
+--- Thread: ஆ.. சாமி (/showthread.php?tid=7874)



ஆ.. சாமி - yarl - 11-03-2003

ஆ சாமி

தினபூமி

அதிகாரப் பகிர்வுக்கான
புலிகளின் திட்டம்: சுப்ரமணியசாமி எதிர்ப்பு

மதுரை, நவ. 3_

இலங்கை அரசுடன் அதிகாரப்பகிர்வு தொடர்பாக விடுதலைப்புலிகள் அறிவித்துள்ள திட்டத்திற்கு ஜனதாகட்சி தலைவர் சுப்ரமணியசாமி கடும் எதிர்ப்பு தெரிவத்துள்ளார்.

இது குறித்து சுப்ரமணியசாமி மதுரையில் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:_

இலங்கையில் அமைதிப்பேச்சு என்ற விடுதலைப்புலிகளது திட்டம் இலங்கையின் அழிவு மட்டுமல்லாது இந்தியாவின் தேசபாதுகாப்புக்கே சவாலாக இருக்கும். விடுதலைப்புலிகளது ஆட்சியை பங்கிடும் எந்த முறைக்கும் இந்தியா ஒத்துக் கொள்ள கூடாது.

விடுதலைப்புலிகள் கேட்கும் இடைக்கால அதிகாரம் தீவிரவாத நிலையை ஏற்படுத்துவதோடு நம் தமிழ்நாட்டில் தேசவிரோத சக்தி, தீவிரவாத செயல்கள், போதை மருந்து கடத்தல் மற்றும் மாநிலத்திலுள்ள விடுதலைப் புலிகளிடமிருந்து பணஉதவி பெரும் இயக்கத்துக்கு ஊக்கமளிப்பதாக இருக்கும். தமிழ்நாட்டில் தேர்தல் அமைப்பு லத்தீன் அமெரிக்காவிலுள்ள கொலம்பியா போல் ஆகிவிடும். அதன் பிறகு தமிழ்நாடு மற்றொரு காஷ்மீராக மாறிவிடும்.

விடுதலைப்புலிகளின் இந்த திட்டத்தை இலங்கை ஏற்றுக் கொண்டு அமைதிப் பேச்சுவார்த்தை நடத்துமானால் இலங்கை தோல்வியுற்ற தேசமாக ஒத்துக் கொள்ளப்படவேண்டும். இந்நிலையில் தேச நலனை பாதுகாக்க இலங்கையை இந்தியாவுடன் சேர்த்துக் கொள்வதை தவிர வேறு வழியில்லை.

இவ்வாறு சுப்ரமணியசாமி அதில் கூறிஉள்ளார்.


Re: ஆ.. சாமி - AJeevan - 11-04-2003

சுப்ரமணியசாமி அறிக்கை மன்னன் மட்டுமே!

இவருக்கு பதில் சொல்ல பிரேமதாச இல்லாமல் போய் விட்டாரே?


- aathipan - 11-04-2003

மதிப்பிற்குரிய சுப்பிரமணியசாமி ஒரு ஜோக்கர் என்பது இந்தியாவில் அனைவருக்கும் தெரியும். பாவம். பலநாளாக தன் புகைப்படம் செய்தித்தாள்களில் வரவில்லை என்ன ஏக்கத்தில் ஏதாவது சொல்லிவைப்பார்.

இவரைப்போல காங்கிரஸிலும் பலர் உள்ளனர். நல்லகாலம் காங்கிரஸில் பலமான கோஸ்டி மோதல் அதனால் ஒருவருக்கெதிராக ஒருவர் அறிக்கை வெளியிட்டு ஆசைகளை புூர்த்தி செய்கின்றனர்.

இவர்கள் யார் எமது சுதந்திரத்தை நிர்ணையிக்க. இந்திய அரசியல் வாதிகளுக்காக நாம் அடிமைகளாக வாழமுடியுமா என்ன?


- Paranee - 11-04-2003

சமீபத்தில் ஒரு பத்திரிகையிலோ புத்தகத்திலோ சுப்பிரமணிய சுவாமியின் படத்தை ஜோக்கர் உடையுடன் சித்தரித்திருந்தார்கள். இங்கு யாழ் அண்ணா இணைத்த செய்தியை வாசித்தவுடன் அந்த படம்தான் ஞாபகத்திற்கு வந்தது.

இடைக்கிடை இப்படி ஏதாவது அலையடிக்காவிட்டால் அவர் இருப்பதே நமக்கு தெரியாமல் போய்விடும்


- P.S.Seelan - 11-04-2003

அட எங்கே போயிருந்தது இந்த அரசியல் கோமாளி இத்தனை நாட்களும்.

அன்புடன்
சீலன்