11-03-2003, 06:35 PM
<span style='font-size:25pt;line-height:100%'>முஸ்லிம்களின் ஆயுதப் போராட்டம் சாத்தியமா?</span>
(சாத்வீகன் - மட்டக்களப்பு ~தமிழ்அலை|)
'வடக்கு கிழக்கு முஸ்லிம்களின் உரிமைகள் மறுக்கப்பட்டால் முஸ்லிம்களும் தமது உரிமைக்காக ஆயுதம் ஏந்திப் போராடும் நிலை ஏற்படும்" என சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம், அண்மையில் இலங்கை வந்திருந்த கனேடிய வெளிவிவகார அமைச்சர் பில் கிரஹமிடம் தெரிவித்திருந்தார்.
புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்தான காலம் முதல், ரவுூப் ஹக்கிம் முதற்கொண்டு பல முஸ்லிம் தலைவர்களும் முஸ்லிம் இளைஞர்களின் ஆயுதப் போராட்டம் தொடர்பாக கருத்துக்களை அடிக்கடி வெளியிட்டு வருகின்றார்கள்.
அண்மையில் என்னை சந்தித்த ஒரு முஸ்லிம் ஊடகவியலாளரும், அதற்கான சாத்தியத்தை தெரிவித்திருந்தார். ~முஸ்லிம் இளைஞர்கள் மட்டும் ஆயுதப் போராட்டத்தில் குதித்துவிட்டால் அரபு நாடுகள் அனைத்தும் போட்டிபோட்டுக்கொண்டு ஆயுதங்களையும், இன்னோரன்ன உதவிகளையும் வழங்குவதற்கு தயாராக இருக்கின்றன| என்று அந்த அன்பர் குறிப்பிட்டார். ~முஸ்லிம்களுக்கு இயல்பாகவே அவர்களின் மார்க்கத்தில் உள்ள போர் அங்கீகாரமும், ஜிகாத்தை கொண்டு நடத்துவதற்காக அவர்களது மார்க்க நூல்களிலேயே வழங்கப்பட்டிருக்கின்ற அறிவுரைகளும், முஸ்லிம்களுக்கு பாரிய வெற்றியை நிச்சயம் பெற்றுத்தந்துவிடும் என்பதில் சந்தேகமில்லை| என்றும் அந்த அன்பர் மேலும் தெரிவித்தார்.
இலங்கையைப் பொறுத்தவரையில் முஸ்லிம்களின் ஆயுதப் போராட்டம் என்பது அந்த முஸ்லிம் அன்பர் கூறியது போன்று அவ்வளவு இலகுவான ஒரு விடயம் கிடையாது.
நிறைய விடயங்களைக் கருத்தில் எடுத்துதான் எந்த ஒரு தரப்பும் ஆயுதப் போராட்டத்தில் குதிக்கவேண்டும். இன்றைய கள நிலவரத்தை அடிப்படையாகக் கொண்டு பார்க்கும் போது, முஸ்லிம்களின் ஆயுதப் போராட்டம் ஒன்றிற்கான சாத்தியம் என்பது மிகவும் குறைவாகவே இருக்கின்றது. உணர்ச்சிவசப்பட்ட சில முஸ்லிம் இளைஞர்கள் வேண்டுமானால் ஒரு சில ஆயுதங்களை வைத்துக்கொண்டு வன்முறை நடவடிக்கைகள் சிலவற்றில் ஈடுபடமுடியும். ஒரு சில தாக்குதல்களை மேற்கொள்ள முடியும். ஆனால் தமிழ் சமூகம் போன்று பாரிய ஆயுதப் புரட்சி ஒன்றை நீண்ட காலத்திற்கு முன்னெடுக்கக்கூடிய களச் சாதகம் தற்பொழுது முஸ்லிம்களுக்கு நிச்சயம் கிடையாது என்றே கூறவேண்டும்.
முதலாவதாக முஸ்லிம்கள் ஒரு ஆயுதப் போராட்டத்தை ஆரம்பிப்பதற்கு அடிப்படையான தேவைகள் எதுவும் இலங்கையில் கிடையாது. ஆயுதப் போராட்டத்தை எதற்காக மேற்கொள்ளவேண்டும் என்ற குறிக்கோளும் போதுமான அளவிற்கு அவர்களுக்கு கிடையாது. ஆயுதப் போராட்டம் ஒன்றை தொடருவதை அவர்கள் சமூகத்தின் முன்நிலையில் அவர்களால் சரியான முறையில் நியாயப்படுத்தவும் முடியாது. முஸ்லிம்களின் உரிமைகள் மறுக்கப்படுவதாக அவர்கள் அரசியல் பேச முடியும். ஆனால் முஸ்லிம் என்ற காரணத்தினால் மட்டுமே உரிமை எதுவும் மறுக்கப்பட்ட எவரும் இங்கு இல்லை என்றுதான் கூறவேண்டும்.
கடந்த காலத்தில் ஏற்பட்ட சில கசப்பான நிகழ்வுகள் விடுதலைப் புலிகளின் தலைமையினால் நிவர்த்தி செய்யப்பட்டுவிட்டுள்ள நிலையில், ~தனி முஸ்லிம் அலகு| ~பேச்சுவார்த்தையில் ~சமபங்கு| என்ற கோரிக்கைகளை மட்டுமே முன்வைத்து ஒரு ஆயுதப் போராட்டத்தை ஆரம்பிப்பதை எவருமே ஏற்கமாட்டார்கள். அது நீண்ட கால நோக்கில் நடைமுறைச் சாத்தியமும் அற்றது. (தமிழ் மக்களின் போராட்டம் அவ்வாறு அல்ல. அவர்கள் தமிழ் மக்கள் என்ற ஒரே காரணத்திற்காக பலவற்றை இழந்திருந்தார்கள். தமிழ் மொழியை அழித்துவிடும் நடவடிக்கையில் சிங்களப் பேரினவாதிகள் சட்டாPதியாகவே பல காரியங்களைச் செய்தார்கள்.
தமிழ் மக்களை இல்லாதொழிக்கும் பல நடவடிக்கைகள் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டன. தமிழ் மக்கள் இந்த நாட்டில் வாழ்வதற்கு உரிமையில்லை என்று கூறப்பட்டது. ஆனால் முஸ்லிம்களுக்கு அவ்வாறானதொரு நிலை தமிழ் தரப்பால் ஏற்படவில்லை. யாழ்பாணத்தில் 1990 இல் ஏற்பட்ட நிலை தற்பொழுது முற்றாகவே மாறிவிட்டது. 90 இல் இடம்பெற்ற பள்ளிவாசல் சம்பவம்; போன்றதொரு சம்பவம் அதன் பின்னர் நடைபெறவேயில்லை. இன்று ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் தமிழ் பகுதிகளில், குறிப்பாக விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களில் விவசாயம் மற்றும் வியாபாரம் செய்து வரும் நிலையில், முஸ்லிம்கள் மதத்தின் அடிப்படையில் எந்தவித ஒடுக்குமுறைக்கும் உள்ளாகாத நிலையில், முஸ்லிம் தரப்பினால் தொடரப்பட இருப்பதாகக் கூறப்படும் ஆயுதப் போராட்டம் என்பது எந்தவித அடிப்படை நோக்கத்தையும் கொண்டதாக இருக்கமாட்டாது. அதானால் அது நின்று நிலைக்கவும் சந்தர்ப்பம் இல்லை.)
எந்த ஒரு ஆயுதப் போராட்டத்திற்கும் இரகசியமானதும், பாதுகாப்பானதுமான ஒரு தளம் இருப்பது அவசியம். ஆயுதப் பயிற்சி பெறுவதற்கும், அந்த ஆயுதப் போராட்டத்தின் தலைமை பாதுகாப்பாகத் தங்கியிருந்து போராட்டத்தை நெறிப்படுத்துவதற்கும், ஆயுதப் போராட்டத்திற்கான வளங்கல்களை தடையில்லாமல் வளங்கிக்கொண்டே இருப்பதற்கும் பாதுகாப்பானதும், இரகசியமானதுமான ஒரு நிரந்தரத் தளம் நிச்சயம் அவசியம். விடுதலைப் புலிகள் ஆரம்பத்தில் இந்தியாவை தமது தளமாக பயன்படுத்தினார்கள். பின்னர் ஓரளவு வளர்ச்சி அடைந்ததும், யாழ்ப்பாணத்தை தமது தளமாக பயன்படுத்தி வந்தார்கள். அதன் பின்னர் முல்லைக் காடுகளையும், வன்னிப் பெருநிலப்பரப்பையும் தமது தளங்களாகப் பயன்படுத்தி வருகின்றார்கள்.
முஸ்லிம்கள் தமது ஆயுதப் போராட்டத்தினை முன்னெடுப்பதற்கு ஒரு பாதுகாப்பான தளத்தை தக்க வைத்திருப்பது இலங்கையைப் பொறுத்தவரையில் சாத்தியம் இல்லை. வடக்கு கிழக்கில் காடுகள் அனைத்துமே விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருக்கின்றன. ஊரருக்குள், மக்கள் மத்தியில் தளம் அமைத்துப் போராடும் வசதி நீண்ட கால நோக்கில் நிச்சயம் முஸ்லிம் இளைஞர்களுக்கு கிடைக்கச் சாத்தியமில்லை.
முக்கியமாக முஸ்லிம்களின் ஆயுதப் போராட்டம் என்பது சர்வதேச சமுகத்தை எதிர்கொள்ளவது என்ற விடயத்தில் பாரிய பின்னடைவைச் சந்தித்துவிடும் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை. இன்று பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்ற பெயரில் அமெரிக்கா தலைமையில் கோதாவில் குதித்துள்ள சர்வதேச சமூகம், உண்மையிலேயே முஸ்லிம்களுக்கு எதிரான ஒரு போரைத்தான் நடாத்திக்கொண்டிருக்கின்றது. ஆயுத பலமுள்ள முஸ்லிம்களை அழித்தொழிக்கும் நடவடிக்கையைத்தான் அவை மேற்கொண்டும் வருகின்றன. அவர்களது பட்டியலில் ஆயுத பலமுள்ள முஸ்லிம் நாடுகள் கூட, பயங்கரவாதிகளாகத்தான் தென்படுகின்றார்கள். அப்படி இருக்கையில் புதிதாக ஒரு முஸ்லிம் குழு இலங்கையில் ஆயுதப் போராட்டத்தில் குதிப்பதற்கு அவர்கள் ஒருபோதும் அனுமதிக்கமாட்டார்கள்.
தமிழ் இளைஞர்கள் ஆயுதப் போராட்டத்தை ஆரம்பித்த போது சிறீலங்கா இராணுவத்தின் மொத்தப் படையினரின் எண்ணிக்கை வெறும் 5000 மட்டுமே. தமிழீழப் போராட்டம் ஆரம்பமான காலப்பகுதியில் சிறீலங்காப் படையினர் அணிவகுப்பு மரியாதையை மேற்கொள்ளும் ஒரு இராணுவ அமைப்பாக மட்டுமே இருந்தது. ஏ.கே 47 ரகத் துப்பாக்கியைக் கூட முதன்முதலில் தமிழ் போரளிகளே இலங்கையில் அறிமுகப்படுத்தும் அளவிற்கு போராட்டத்தின் ஆரம்பகட்டத்தில் சிறீலங்கா இராணுவம் பலவீனமான ஒரு நிலையிலேயே இருந்தது. ஆனால் இன்று சிறீலங்கா இராணுவத்தின் பலம் என்பது பாரியது.
அதேபோன்று விடுதலைப் புலிகளின் படைப்பலமோ இன்று சிறீலங்கா இராணுவத்தை விட பலமடங்கு பாரியது. குறிப்பாக விடுதலைப் புலிகளின் புலனாய்வுத் திறமை என்பது வல்லரசுகளின் புலனாய்வுக் கட்டமைப்புக்களுடன் ஒப்பிடும் அளவிற்கு வளர்ச்சி அடைந்துள்ளது. அப்படி இருக்கையில் வடக்கு கிழக்கு பிரதேசங்களில் முஸ்லிம் இளைஞர்கள் ஆயுதப் போராட்டம் ஒன்றை மேற்கொள்ளுவது என்பது நிச்சயம் படுதோல்வியையே அவர்களுக்குப் பெற்றுத் தரும் என்பதில் சந்தேகம் இல்லை. ஆயுத அமைப்புக்கள் உருவாகி சிறிது காலத்திலேயே அவை முற்றாக அழிக்கப்பட்டுவிடும் சாத்தியங்கள் அதிகம் காணப்படுகின்றன.
இலங்கையில் உள்ள முஸ்லிம்களில் பெரும்பான்மையானவர்கள் வியாபாரிகள். இலாபத்தை அடிப்படையாகக் கொண்டே அவர்களின் பெரும்பாலான நகர்வுகள் இருக்கும் என்பதில் எந்தவித மாற்றுக் கருத்தும் இருக்க முடியாது. அரசியலும், போராட்டமும் கூட அப்படித்தான் இருக்கும். இவ்வாறு வியாபார நோக்கில் ஊறிப்போயுள்ள ஒரு சமூகத்தின் மத்தியில், அவர்களின் வியாபாரத்தை முற்றாகவே சிதைத்துவிடும்படியான ஒரு ஆயுதப் போராட்டத்தை நீண்ட காலத்திற்கு நடாத்த அச்சமூகம் நிச்சயம் அனுமதிக்காது. இழப்புக்கள் ஏற்பட ஏற்பட, போராட்ட அமைப்புக்கள் காட்டிக்கொடுக்கப்பட்டுவிடும் சூழ்நிலை படிப்படியாக உருவாகும்.
முஸ்லிம்கள் மத்தியில் உருவாகும் ஆயுதக் குழுக்களில் உள்வாங்கப்படும் இளைஞர்கள், மார்க்க சிந்தனையில் ஊறிப்போனவர்களாகவே இருப்பார்கள். அவர்கள் திருக்குரானை அடிப்படையாக் கொண்டு இறுக்கமான கட்டுப்பாடுகளை முஸ்லிம் சமூகம் கடைப்பிடிக்கவேண்டும் என்று வற்புறுத்தும் நிலை நிச்சயம் ஏற்படவே செய்யும். அவற்றை மீறுவோருக்கு எதிராக மார்க்கத்தில் கூறப்பட்டபடி கடுமையான தண்டனைகளையும் வழங்க ஆரம்பிப்பார்கள். இதுபோன்ற அவர்களது செயற்பாடுகள் வெகு விரைவில் அவர்களை சமூகத்திலிருந்து அந்நியப்பட வைத்துவிடும். .
தமிழ் மக்களுக்கு எதிராக முஸ்லிம் இளைஞர்களின் ஆயுதப் போராட்டத்திற்கு சிறீலங்கா அரசு உதவிகள் புரியும் என்று ஒரு சிலர் கூறுகின்றார்கள். இது நடைமுறைச் சாத்தியமற்றது. முஸ்லிம் ஆயுத அமைப்புக்கள் உருவானால், அதனால் மட்டக்களப்பை விட மாவனல்லையும், மாளிகாவத்தையும்தான் அதிகம் பாதிப்புக்குள்ளாகும். இது சிறீலங்கா அரசுக்கு நன்றாகவே தெரியும். அதனால் அவர்கள் முஸ்லிம் ஆயுதக் குழுக்களை ஒரு அளவிற்கு அதிகமாக ஊக்குவிக்கமாட்டார்கள். முஸ்லிம் இளைஞர்களை உணர்ச்சிவசப்படுத்தி சிறீலங்காப் படைகளில்; அவர்களை இணைத்து பயன்படுத்திக்கொள்ளவே அவர்கள் முயல்வார்களே தவிர, முஸ்லிம்களை ஆயுதபாணிகளாக்கி தன் தலையிலேயே மண் அள்ளிப்போட ஒரு போதும் அவர்கள் விழையமாட்டார்கள்.
சிறீலங்கா அரசு முஸ்லிம் தீவிரவாதத்தை ஊக்குவிப்பதாக செய்திகள் வெளியாகிய மறு கணமே, சிறீலங்கா அரசு சர்வதேச சமூகத்தின் பாரிய எதிர்ப்பினை எதிர்கொள்ள வேண்டி இருக்கும். அதனால் சிறீலங்கா அரசு ஒரு வரையறைக்கு அப்பால் முஸ்லிம்களை ஆயுதபாணிகளாக்க முன்வராது
இவை அனைத்தையும் விட, முஸ்லிம் சமூகத்தின் மத்தியில் ஆயுதக் குழுக்கள் உருவாகுவதற்கு முஸ்லிம் அரசியல்வாதிகள் ஒரு போதும் அனுமதிக்கமாட்டார்கள். முஸ்லிம் இளைஞர்களை உணர்ச்சிவசப்படுத்தி தமது அரசியலைக் கொண்டு நடத்த வேண்டுமானால் அவர்கள் முயற்சிப்பார்களே தவிர, தமது கைகளை விட்டு முஸ்லிம் இளைஞர்கள் தொலைதூரம் செல்வதற்கு நிச்சயம் அனுமதிக்கமாட்டார்கள். ஆயுதப் போராட்டங்களை ஊக்குவித்த தமிழ் அரசியல்தலைமைகளுக்கு நேர்ந்த கதியை அவர்கள் நிச்சயம் மறந்திருக்கமாட்டார்கள்.
அடுத்ததாக, முஸ்லிம்கள் வன்முறையில் இறங்கிவிட்டால் எந்த ஒரு தீர்வையும் பெறமுடியாத அளவிற்கு நிலமை படு மோசமாக மாறிவிடும் என்பது புத்திஜீவி முஸ்லிம்களுக்கு நன்றாகவே தெரியும். முஸ்லிம்களின் உரிமைகள் மறுப்பதற்கு, முஸ்லிம்கள் ஆயுதப் போராட்டம் மேற்கொள்ளும் ஒரு காரணம் மட்டுமே போதுமானது என்பது முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கு நன்றாகவே விளங்கும்.
எனவே மொத்தத்தில் முஸ்லிம்களின் ஆயுதப் போராட்டம் என்பது இலங்கையைப் பொறுத்தவரையில் எந்தவகையிலும் சாத்தியமற்ற ஒன்று என்பதில் சந்தேகம் இல்லை.
முஸ்லிம் இளைஞர்கள் ஆயுதப் போராட்டத்தில் குதிக்கப்போவதாக சில முஸ்லிம் அரசியல்வாதிகள் அடிக்கடி பம்மாத்துக் காண்பிப்பது, ஒரு மிரட்டலே தவிர வேறு ஒன்றும் இல்லை. அது சாத்தியம் இல்லை என்பது அவர்களுக்கும் நன்றாகத் தெரியும்.
இன்றைய காலட்டத்தில் தமிழ் தரப்பைப் பொறுத்தவரையில் முஸ்லிம்கள் ஆயுதப் போராட்டத்தில் இறங்கினால் மட்டுமே தமிழ் தரப்பால் முஸ்லிம்களை இலகுவாக வெற்றிகொள்ள முடியும். இதுதான் களமுனை யதார்த்தம்.
நன்றி: மட்டக்களப்பிலிருந்து வெளிவரும் ~தமிழ்அலை| 02-11-03

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->