Yarl Forum
நீதி(க்கதைகள்) - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: சிந்தனைக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=7)
+--- Forum: தத்துவம் (மெய்யியல்) (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=33)
+--- Thread: நீதி(க்கதைகள்) (/showthread.php?tid=7865)



நீதி(க்கதைகள்) - சாமி - 11-04-2003

மிக அழகாக குயில் ஒன்று பாடிக் கொண்டிருந்தது. அவ்வழியே மேலே பறந்து சென்ற பருந்து, இந்த கானத்தைக் கேட்டு 'சரேல்' என்று டைவ் அடித்தது, மரக்கிளைக்கு. குயிலை தன் கால்களில் பற்றிக்கொண்டு மலை உச்சிக்குச் சென்று, நகங்களையும் அலகையும் தீட்டிக்கொண்டு சாப்பிடத் தயாராகியது.

அப்போது குயில், ''பருந்தாரே! நான் ஒரு சிறிய பறவை. என்னைச் சாப்பிடுவதால் உம் பசி ஆறப்போவதில்லை. உங்கள் வலிமைக்கும், பறக்கும் திறமைக்கும் மிகப் பெரிய பறவைகளை..., ஏன் ஒரு முயல் குட்டி, மான் குட்டியையே கவர்ந்துகொண்டு வந்து சாப்பிட முடியும். சிறு பறவை, என்னை விட்டுவிடும்'' என்றது.

பருந்து யோசித்தது. ''நீ சொல்வது சரிதான்! ஆனால், உன் பேச்சைக் கேட்டுவிட்டு கைவசம் இருக்கும் சிறிய உணவை கைவிட நான் தயாராக இல்லை'' என்றது.

''என் பாட்டு நன்றாக இல்லையா?'' என்றது குயில்.

''உன் பாட்டு நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால் இது பசிவேளை'' என்ற பருந்து அந்தக் குயிலைச் சாப்பிட்டது.

நீதி : காட்டு நியாயத்தில் செவிக்குணவு முக்கியமல்ல.

நன்றி: அம்பலம்


பாவனை - சாமி - 11-11-2003

முயல் வேகமாக ஓட, அதை ஒரு ஓநாய் துரத்தியது. காடும் மலையும் கடந்து துரத்தி வந்தது. மிக அருகே வந்ததும், அதை தடவிக் கொடுத்தது. முயல் ஆச்சரியப்பட்டபோது, ஓநாய் உடனே அதைக் கடிக்க வந்தது. மறுபடி ஓட வேண்டியிருந்தது. இப்படித் திரும்பத் திரும்ப நடைபெற, முயல் குழம்பிப்போய் ஒரு இடத்தில் நின்று இடுப்பில் முன்னங்கால்களை வைத்துக்கொண்டு ஓநாயை முறைத்துப் பார்த்து,

''ஏ ஓநாயே! நீ நல்லவனா கெட்டவனா சொல்?'' என்றது.

''ஏன் அப்படிக் கேட்கிறாய்?''

''உன் மனசில் என்ன நினைத்துக் கொண்டிருக்கிறாய்? புரியவே இல்லை. ஒரு சமயம் தடவிக் கொடுக்கிறாய், ஒரு சமயம் கடித்து சாப்பிட வருகிறாய். எதையாவது ஒன்றை உருப்படியாகச் செய். இப்படி சித்திரவதை செய்யாதே. ஓடவா? நிற்கவா? ஒன்றுமே புரியவில்லை'' என்றது.

ஓநாய், முயலை கடைசியில் கொன்று தின்றது.

நீதி : - நண்பனாக இரு, இல்லை எதிரியாக இரு, இரண்டும் கெட்டானாக இராதே.

நன்றி: அம்பலம்


மனமாற்றம் - சாமி - 11-11-2003

ஒரு நீர்நிலையில் சிங்கத்திற்கும், காட்டுப்பன்றிக்கும் பெரிய வாக்குவாதம். யார் அங்கே தண்ணீர் குடிப்பது என்ற சண்டை பலமாகி, கைகலப்புவரை போய்விட்டது. சிங்கம், ''நான்தான் தலைவன். நான் குடித்தபின்தான் மற்றவர்கள் குடிக்க வேண்டும்'' என்றது. காட்டுப்பன்றியும் பிடிவாதமான மிருகம். ''நீ என்னதான் காட்டு ராஜாவாக இருந்தாலும், என் பிறப்புரிமை இந்த இடத்தில்¢ நீரருந்துவது. அதனால் சாகும்வரை போராடுவேனே தவிர, உனக்காக காத்திருக்க மாட்டேன்'' என்றது.

சிங்கமும் விட்டுக்கொடுக்கவில்லை. இரு மிருகங்களுக்கும் ஆக்ரோஷமான சண்டை துவங்கியது. நடுவே சிங்கம் வானத்தை நோக்கி கர்ஜித்தது. மேலே வானில் இரண்டு பருந்துகள் பறந்து கொண்டிருந்தன. சண்டை முடிந்து இருவரில் ஒருவர் இறந்து போவார்கள். அதுவரை காத்திருக்கலாம் என்று வட்டமிட்டுக் கொண்டிருந்தன.

சிங்கம் காட்டுப்பன்றியைக் கூப்பிட்டு, ''பிழைத்துப்போ! தண்ணீர் குடி! பரவாயில்லை'' என்றது.

''ஏன் இந்த மனமாற்றம்?'' என்று காட்டுப் பன்றி கேட்டபோது, ''பருந்துக்கு விருந்தாக இருப்பதைவிட, பன்றியுடன் சமாதானம் உயர்ந்தது'' என்றது சிங்கம்.

நீதி: - யதார்த்தம் பிடிவாதத்தைத் துரத்தும்.

நன்றி: அம்பலம்


நீதி: உயிராசை மிக அதிச - சாமி - 11-24-2003

காட்டில் அலைந்து கொண்டிருந்த போது ஒரு மிதப்பான ஓநாய் புதர்களுக்கிடையே ஒரு முயல் ஒளிந்து கொண்டிருப்பதைப் பார்த்தது. உடனே அதைத் துரத்த ஆரம்பித்தது. சுவாரஸ்யமான துரத்தல், கீழ்க்கோர்ட்டில் முன் ஜாமீன் வாங்கி அது கிடைக்காமல் மேல் கோர்ட்டில் அப்பீல். அங்கே கேஸ் தோற்றுப் போய் உச்சநீதிமன்றத்தில் ரிட். இப்படி மெதுவானதாக இல்லாமல் விரைவானதுடிப்பான துரத்தல். அதை ஒரு ஆடோட்டும் சிறுவன் பார்த்துக் கொண்டிருந்தான்.
என்ன வேகமாகத் துரத்தினாலும் முயலை பிடிக்க முடியவில்லை. கடைசியில் முயல் தப்பித்துப் போய் விட்டது. களைத்துப்போன ஓநாயை, சிறுவன் சிரித்துக் கொண்டே கேட்டான். ''என்னப்பா... இவ்வளவு பெரிய ஓநாயா இருக்கே, உடம்பில் மயிர் அடத்தியுடன் வலுவான கால்களில் எல்லா சக்தியும் வைத்திருக்கிறாய். இத்தனை விரைவாக ஓடுகிறாய். கேவலம் ஒரு முயலை பிடிக்க முடியவில்லையே'' என்றான். ஓநாய் சிறுவனை அலட்சியமாகப் பார்த்தது. ''பிடிக்க முடியவில்லைதான். ஆனால் அதன் ஓட்டத்துக்கும் என் ஓட்டத்துக்கும் ஒரு முக்கியமான வித்தியாசம் உண்டு. கவனித்தாயோ? நான் என் உணவுக்காக ஓடினேன். அது தன் உயிருக்காக ஓடியது.''

நீதி: உயிராசை மிக அதிசயமான தகுதிகளைக் கொடுக்கும்.

நன்றி:
எம்பரர்


- veera - 11-26-2003

அருமை!
மனிதனின் தேடல்களிற் சிறந்தது தமக்கும் மற்றவர்க்கும் பயனளிக்கும் தேடல்களே..

பாராட்டுக்கள் சாமி அவர்களே


நிற்க தரைவேண்டும் - சாமி - 12-22-2003

ஒரு அமெச்சுர் விஞ்ஞானி இரவு வேளையில் வானத்து நட்சத்திரங்களை உன்னிப்பாக கவனித்து அவைகளைப் பற்றி குறிப்பு எடுத்துக் கொண்டிருந்தார். அதன் சுவாரஸ்யத்தில் நடந்து கொண்டே சென்றவர் ஒரு பாதுகாப்பற்ற கிணற்றில் தவறி விழுந்துவிட்டார். 'உதவி உதவி' என்கிற அவர் அறைகூவல் பக்கத்து வீட்டுக்காரருக்கு கேட்டது. அவர் ஒரு சாதாரண குமாஸ்தா. கிணற்றில் எட்டிப் பார்த்து ''என்ன விஞ்ஞானியே, வானத்தைப் பார்க்கிற சுவாரசியத்தில் காலடியில் பூமியை புறக்கணித்து விட்டீர். நல்லவேளை முழங்கால் சிராய்ப்புகளுடன் தப்பித்தீர்'' என்று மெல்ல மெல்ல அவரை மேலே கொண்டுவந்து ஆசுவாசப்படுத்தினார்.

நீதி:- பிரபஞ்சத்தை அறிய முயற்சிப்பதன் முன் உன் காலடியில் உள்ளதை அறிந்துகொள்¢.

நன்றி: அம்பலம்


குபேர பொம்மை - சாமி - 09-08-2004

ஒருவன் மைலாப்பூர் குளத்தருகில் ஒரே மாதிரி பொம்மைகளை விற்றுக் கொண்டிருந்தான். ''இது என்ன பொம்மை'' என்று போவோர் வருவோர் கேட்க, ''குபேரன் பொம்மை இது. இதை தெற்கு பக்கமாக வீட்டில் வைத்திருந்தால் செல்வம் கொழிக்கும். வாங்கிச் செல்லுங்கள்''¢ என்றான். பலரும் வாங்கினார்கள். அவர்களில் ஒரு அறிவு ஜீவி ''வெய்ட் எ மினிட்! இந்த பொம்மை செல்வச்செழிப்பு தரும் என்றால் உனக்கே பலன் அளித்திருக்குமே. இப்படி ப்ளாட்பாரத்தில் பொம்மை விற்பாயா?'' என்று கேட்க, பொம்மைக்காரன் ''நீங்கள் சொல்வது சரிதான், ஆனால் என் குபேர பொம்மைகள் பலன் அளிக்க சில வருஷங்கள் ஆகும். அதுவரை பொம்மை விற்றுப் பிழைத்து வருகிறேன்'' என்றான்.

நீதி: - புத்திசாலி எல்லாவற்றுக்கும் காரணம் சொல்வான்.

நன்றி அம்பலம்.கொம்


- Thiyaham - 09-09-2004




- சாமி - 09-12-2004

தியாகம் ஏதோ கேள்வி கேட்டிருந்தீர்கள் போலிருக்கு. தற்போது கேள்வியைக் காணோம் <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->


பறப்பதற்கு முன் சரியா - சாமி - 10-06-2004

கடலோர ஆமை, விண்ணில் திரியும் பறவைகளைப் பார்த்து பெருமூச்சுவிட்டது.

''யாரும் எனக்குப் பறக்க கற்றுத் தரமாட்டீர்களா?'' என்றது.

அவ்வழியே பறந்து சென்ற பருந்து 'கற்றுத் தந்தால் என்ன தருவாய்?' என்றது.

ஆமை, ''கடல்¢ செல்வங்கள் அனைத்தையும் தருவேன்'' என்றது.

பருந்து, கிருஷ்ணப் பருந்து. வலுவான கால்கள். ஆமையைத் தூக்கிக்கொண்டு மேலே மேலே சென்று, மேகத்தின் அருகில் அதை விடுவித்து ''பற! இப்படித்தான் என் குஞ்சுக்கு சொல்லிக் கொடுப்பேன்'' என்றது.

ஆமை நேராக விழுந்து, ஓடு உடைந்து சிதறியது.

''பூமியில் வேகமாக நடக்கவே பழகாதவன், பறக்க விரும்பினேன் பாரு! எனக்கு நன்றாக வேண்டும்'' என்று பிராணனை விட்டது.

நீதி: பறப்பதற்கு முன் சரியாக நடக்கக் கற்றுக்கொள்.

நன்றி அம்பலம்


- kavithan - 10-06-2004

<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


பத்திரம் - சாமி - 10-06-2004

சிங்க ராஜாவுக்கு வயசாகிவிட்டது. முன்போல இரை தேடி வேட்டையாட முடியவில்லை. அதனால் அது ஒரு தந்திரம் செய்தது.

'ராஜாவுக்கு உடல் நலம் சரியில்லை. எல்லாரும் போய் நலம் விசாரியுங்கள்' என்ற செய்தியைக் காட்டில் பரப்பியது. குகைக்குள் போய் படுத்துக்கொண்டது. காட்டு மிருகங்கள் ஒவ்வொன்றாக குகைக்குள் வந்து நலம் விசாரித்தன. சிங்கம் அவைகளை பரிவுடன் கிட்டே வரச் சொல்லி, கட்டிப்பிடித்து சற்றும் எதிர்பாராத சமயத்தில் அடித்து சாப்பிட்டது.

நரி மட்டும் உள்ளே வரவில்லை. குகை வாயிலிலிருந்து சத்தமாக ''அரசே! உங்கள் உடல் நலம்¢ சரியில்லையென்றார்கள். இப்போது எப்படி இருக்கிறது? டாக்டரிடம் காட்டினீர்களா?''

சிங்க ராஜா, ''ஏதோ சௌக்கியம்! வயசாகிவிட்டதல்லவா! ஆமாம், ஏன் வாசலிலேயே நிற்கிறாய்? உள்ளே வாயேன்''என்றது.

நரி, ''அரசே, இங்கேதான் பத்திரம். வெளியிலிருந்தே விசாரிக்கிறேன்''¢ என்றது.

''ஏன்?''

''பல மிருகங்கள் குகைக்கு உள்ளே செல்லும் காலடிகள்தான் தெரிகின்றன. வெளியேவரும் காலடிகளைக் காணவில்லை'' என்று சொன்னது.

நீதி : முதலில் உயிர். அப்புறம்தான் துக்கம் விசாரிப்பது எல்லாம்.

நன்றி அம்பலம்


- tamilini - 10-06-2004

நன்றி சாமி. நல்ல ஒரு தத்துவ கதை...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- kavithan - 10-06-2004

<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


வாபஸ் - சாமி - 10-23-2004

அங்க தேசத்துக்கும், வங்க தேசத்துக்கும் எப்போதும் விரோதம், பகை! அங்க தேசத்து ராஜா, வங்க தேசத்து ராஜாவுக்கு ஒரு லிகிதம், ''உன்னுடன் பேச்சு வார்த்தைத் தொடர்வதற்குமுன் உங்கள் நாட்டு தூதுவரை நீங்கள் திருப்பி அழைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கிறேன்'' என்று எழுதினார். இதனால் மிகவும் கோபம் கொண்ட வங்க தேசத்து ராஜா, ''எங்கள் தூதுவரை எக்காரணம் கொண்டும் திரும்ப அழைக்க மாடடோம். உங்கள் கோரிக்கையை உடனே திரும்பிப் பெறவில்லையேல் எங்கள் தூதுவரை திரும்ப வாபஸ் வாங்கி விடுவோம்'' என்று காட்டமான பதில் அனுப்பினார். இதற்கு எப்படி பதில் அளிப்பது என்று அங்க தேசத்து ராஜா குழப்பத்தில் தடுக்கி விழுந்துவிட்டார்.

நீதி : பல சமயங்களில் அண்டை நாடுகளுக்கிடையே காரணம் புரியாமலேயே விரோதம் இருக்கும்.

நன்றி - அம்பலம்


- Sriramanan - 10-24-2004

<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->