| Welcome, Guest |
You have to register before you can post on our site.
|
| Forum Statistics |
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244
Full Statistics
|
| Online Users |
There are currently 440 online users. » 0 Member(s) | 438 Guest(s) Bing, Google
|
| Latest Threads |
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,305
|
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,231
|
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,604
|
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,293
|
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,632
|
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,058
|
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,461
|
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,479
|
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,026
|
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,238
|
|
|
| அழிக்க முடியாத வடு இது....! |
|
Posted by: tamilini - 07-23-2004, 11:43 PM - Forum: கவிதை/பாடல்
- Replies (3)
|
 |
<img src='http://www.yarl.com/forum/files/july23_kodumai.jpg' border='0' alt='user posted image'>
ஜுலை.. இது கறுப்பு ஜுலை...
தமிழரின் ரத்தம் குடிக்க வந்த ஜுலை
சொத்திழந்து சொந்தமிழந்து...
தமிழனை அனாதையாக்கிய ஜுலை
தாரோடு உருகியும்...
நெருப்பில் கருகியும்...
நெஞ்சமெல்லாம் ஆசைகளுடன்...
நிறைவேறாத ஆசைகளுடன்...
பல்லாயிரம் தமிழரை பரலோகம் அனுப்பிய ஜுலை...
காடையரிடம் இருந்து கற்பை காக்க முடியாது....
கன்னிகள் கண்ணீருடன் கருகவைத்த ஜுலை இது.....
கண்முன்னே தாயை கற்கழிக்க....
மகனை குற்றூயிராய் கிடக்க வைத்த ஜுலை இது....
கால்களும் கைகளும் வெட்டப்பட்ட நிலையில்.....
தம்பிள்ளைகளை பிழைக்க வைக்க முடியாது...
பெற்றோரை ரத்த கண்ணீர் வடிக்க வைத்த ஜுலை இது...
தமிழனை அழிப்பதாக இறுமாப்புடன் சிங்களம்...
தமிழனுக்கு கேட்க நாதியில்லை என்று
கனவு கான வைத்த ஜுலை இது.....!
நீ யார்...? எப்படி வாழ்கிறாய் ...? என்று
ஒவ்வொரு தழிழனையும் தட்டிக்கேட்ட ஜுலை இது.....
பற்பல வீர சாதனைகளின் பின்னே...
அழியாத காவியமாய் தமிழரின்
நெஞ்கங்களில் ஓவியமான ஜுலை இது....!
அழிவிலேயே உணர்வை கிளப்பிய ஜுலை இது
சுதந்திர தீயை ஏற்றிய ஜுலை இது.......!
தமிழர்களுக்கு தம்மை உணர்த்திய ஜுலை இது...
தாயக உதயத்திற்கு... தமிழரின் ரத்தத்தால்...
சிங்களம் செய்த அர்ச்சனை இது....
எத்தனை ஆண்டுகள் சென்றாலும்....
நெஞ்சங்களில் அழிக்க முடியாத வடு இது...........................!
|
|
|
| வணக்கம் கள நண்பர்களே! |
|
Posted by: Senthuran - 07-23-2004, 07:42 PM - Forum: அறிமுகம்
- Replies (16)
|
 |
வணக்கம் கள நண்பர்களே!
உங்களோடு இணைந்து கொள்ள வந்திருக்கும் புதியவனான என்னை வரவேற்கக் காத்திருக்கும் அனைவருக்கும் எனது இனிய வணக்கங்கள்.
|
|
|
| TV |
|
Posted by: Aalavanthan - 07-23-2004, 06:36 PM - Forum: பொழுதுபோக்கு
- Replies (3)
|
 |
இரண்டு வாரங்களுக்கு முன்னால் ஒரு வெள்ளிக் கிழமை சாயந்தரம் என் நண்பர் ராம்ஸ் விருந்து கொடுத்தார். அவர் புண்ணியத்தில் 3 மணி நேரம் கேபிளில் சன் டிவி பார்த்தேன். இங்கே அமெரிக்காவில் பத்தரை மணி நேர வித்தியாசத்தில் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்படுவதாகச் சொன்னார். பல மாத இடைவெளிக்குப் பிறகு சன் டிவி பார்ப்பதால் லோகோவையே ரொம்ப நேரம் ஆவென்று பார்த்துக் கொண்டிருந்தேன்.
3 மணி நேரத்தில் நான் பார்த்த நிகழ்ச்சிகளை, பார்த்த அதே வரிசைக் கிரமத்தில் கீழே தருகிறேன்.
► மை டியர் பூதம் - சீரியல்
► ஆனந்தம் - சீரியல்
► கோலங்கள் - சீரியல்
► செய்திகள் - சீரி... ஸாரி.
► திரை விமர்சனம் - நியூ. நெளிந்து கொண்டே பார்க்க வேண்டியிருந்தது.
► மெட்டி ஓலி - மறுபடியும் சீரியல்.
இப்போதெல்லாம் மெகா சீரியல் டைட்டில் ஸாங்கில் தவறாமல் ஒரு கோஷ்டி நடனம் வேறு வந்து விடுகிறது. சினிமா புளித்த நடிகைகள் கண்ணீரும் கம்பலையுமாய் டைட்டிலில் மட்டும் தோன்றி விட்டு மறைந்தார்கள்.
ராம்ஸின் மனைவி பெருமை ததும்பச் சொன்னார். " சத்யராஜ்குமார், இந்த சீரியல்ஸ்ல ஒரு ஸ்பெஷாலிட்டி என்னன்னா எத்தனை நாள் கழிச்சுத் திரும்பப் பார்த்தாலும் புரியும்ங்க. "
" கரெக்ட்டுதான். அதை விட கண்ணை மூடிட்டுப் பார்த்தாலும் எனக்குப் புரியுதுங்களே பவானி. " என்று சொல்லி மெய் சிலிர்த்தேன். விஷுவலா கிலோ எத்தனை?
அத்தோடு விட்டாரா? வாட்டசாட்டமான ஓர் இளைஞனைப் பார்த்து, " பாவம் இவன் போன மாசம் செத்துட்டான். " என்றார்.
நான் கொஞ்சம் அதிர்ந்துதான் போனேன். " என்னாச்சு, ஹார்ட் அட்டாக்கா? "
" இல்லேங்க. ஆள் போன மாசம் வேறோரு சீரியல்ல செத்துப் போய்ட்டான். டெட்பாடியை ரெண்டு வாரம் எடுக்காம அப்படியே வெச்சிருந்தாங்க. "
தமிழர்களுக்குப் பொழுது எப்படிப் போகுது பாருங்கள்.
மூலம்: http://valaippoo.yarl.net/archives/001484.html
|
|
|
| தேடுகிறோன் ஓர் வசந்தம் அரை நொடியில்.... |
|
Posted by: kuruvikal - 07-23-2004, 03:21 PM - Forum: கவிதை/பாடல்
- Replies (92)
|
 |
<img src='http://kuruvikal.yarl.net/archives/kuruvikal%20manthoppoo.jpg' border='0' alt='user posted image'>
மலரே..
என் முதல் நேசமே....
காத்திருக்க கணப்பொழுதில்
உறுதி சொன்னேன்
காத்திருக்கும் கணங்கள்
யுகங்களாக
தேடுகிறோன் ஓர் வசந்தம்
அரை நொடியில்....!
வாடிய உன் இதழெடுத்து
கோர்த்து என் உயிர் மூச்சளித்து
மீண்டும் மலர வைத்தேன்
ஆனால் நீ மட்டும்
மலர்சியாய் இல்லையே...???!
ஏன் இன்னும் வாட்டம்
பூங்குருவிதன்
வருத்தம் புரியவில்லையா...???!
மலரோடு கூடிக் களித்த மனம்
மடியுதில்லை பணியுதில்லை
மீண்டும் அரை நொடியில்
தேடுகின்றேன் ஓர் வசந்தம்
உன்னோடு தொலைத்த
என் வசந்தம் மீண்டும் வாசம் வீச....!
நீ வேண்டும் என்றும் என்னோடு
இன்றேல் இதயம் கூட
உன் இருப்பின்றி இயங்க மறுக்கின்றதே....!
என்செய்வேன் என் இதய மலரே...!
நன்றி... http://kuruvikal.yarl.net/
|
|
|
| விருமாண்டிக்கு விருது |
|
Posted by: AJeevan - 07-23-2004, 02:09 PM - Forum: சினிமா
- Replies (6)
|
 |
<b>விருமாண்டிக்கு விருது </b>
-உதயா
<img src='http://sifyimg.speedera.net/sify.com/cmsimages/Entertainment/Movies/Tamil/13528388_kamal_sandiyar120.jpg' border='0' alt='user posted image'>
வெற்றிநடைபோட்ட விருமாண்டி இப்போது விருது வாங்கி வீரநடை போடுகிறார்.
கொரியாவில் நடைபெறும் முதல் "ஐரோப்பியன் ஃபெடரேஷன் ஆஃப் ஃபன்டாஸ்டிக் ஃபிýம் ஃபெஸ்டிவல்' படவிழாவில் "சிறந்த ஆசிய படம் 2004' என்ற விருதிற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது விருமாண்டி. ஒரே படத்தில் சமூகம், காதல், நகைச்சுவை, ஆக்ஷன் உட்பட சகல கலை அம்சங்களும் சமவிகிதத்தில் கலந்த சரியான படம் என்ற பாராட்டையும் பெற்றிருக்கிறது.
இதைவிட கொரியா விழாவில் இன்னொரு ஆச்சரியம் , இப்படத்தை எழுதி இயக்கி, நாயகனாகவும் நடித்தவர் கமல் ஒருவரே என்பதை அறிந்து கமலை உச்சிமோந்து மெச்சிக்கொண்டிருக்கின்றனர் விருதுக்குழுவினர். இந்த சந்தோஷத்தை கொரியாவில் இருந்து கமல்ஹாசன் தொலைபேசி மூலம் உடனடியாக தெரிவித்தது கூடுதல் சந்தோஷம்.
அப்போ... உலக விருது உலகநாயகனுக்கு தொட்டுவிடும் தூரம்தான்!
Thanks: http://tamil.sify.com/movies/fullstory.php?id=13528389
<span style='font-size:25pt;line-height:100%'>வாழ்த்துக்கள் கமல்.</span>
|
|
|
| "சின்ன தேவதை" |
|
Posted by: AJeevan - 07-23-2004, 12:53 PM - Forum: குறும்படங்கள்
- Replies (1)
|
 |
<span style='color:brown'><b>சோமரட்ண திசநாயக்காவின் \"சின்ன தேவதை\" திரைப்படம்
சுமதி ரூபன்</b>
சோமரட்ண திசநாயக்காவின் சின்னதேவதை திரைப்படம் மே மாதம் 16ம் திகதி ஒன்ராறியோ சயன்ஸ் சென்ரறில் திரையிடப்பட்டது.. இத்திரைப்படம் பல நாடுகளில் திரையிடப்பட்டு பல விருதுகளைப் பெற்றுள்ளது என்பது எமக்கும் பெருமையான விடயமே..
1983ம் ஆண்டு 13 சிங்கள இராணுவம் கொலைசெய்யப்பட்டபோது தோன்றிய இனப்படுகொலைகள் பற்றிய ஒரு சில வரிகளுடன் திரைப்படம் தொடங்கியது..
பணக்காரக்குடும்பத்தில் பிறந்த சம்பத் எனும் 10 வயது சிங்களச்சிறுவன்.. சிறுவயதிலிருந்தே பெற்றோரின் கவனிப்பின்மை, அவர்களுக்கிடையிலான வாக்குவாதம் போன்றவற்றை நேரடியாகப் பார்த்து வளர்ந்ததால் மனநிலைபாதிக்கப்பட்டவனாய், வாய் பேசமுடியாத நிலையில் பொருட்களைப் போட்டு உடைக்கும் வக்கிர மனம் கொண்டவனாக இருக்கின்றான்.. தாய் தனது காதலனுடன் சென்று விட பணக்காற அப்பா அவனிற்கு அன்பைத் தவிர அத்தனையும் கொடுத்து வளர்க்கின்றார்..
சம்பத்தின் வீட்டில் பலவருடங்களாக வேலு எனும் தமிழன் ஒருவன் வேலை பார்த்து வருகின்றான்.. பணக்கஷ்டம் காரணமாக தனது 8 வயது மகளான சத்யாவை தன்னோடு அழைத்து வந்து சின்னச் சின்ன வேலைகளைச் சொல்லிக்கொடுக்கின்றான்.. பெரிய கண்களும்> நீண்ட முடியும்> அழகான சிரிப்புமாய் தனது குறும்பால் பார்வையாளர்களின் மனதைக் கவர்ந்ததோடு மட்டுமல்லாமல் சத்யா சம்பதின் மனதிலும் இடம்பிடிக்க.. சம்பத்திடம் மாற்றங்கள் தோன்றி முடிவில் அவன் சத்யாவிடம் சரளமாக தமிழ் கதைக்கற்றுக்கொண்டு விடுகின்றான்.. தனது மகன் தாய்மொழியான சிங்களத்தைக் கதைக்காது வேலக்காறியுடன் சேர்ந்து தமிழைக் கதைக்கின்றானே இது எங்கு போய் முடியுமோ என்று முதலில் அவனது தந்தை சங்கடப்பட்டாலும் சத்யாவின் நட்புத்தான் அவனிற்கு நல்ல மருந்து என்ற வைத்தியரின் ஆலோசனையை அவரால் புறக்கணிக்க முடியவில்லை.. மெல்ல மெல்ல அவர் சத்யாவின் மேலும் பாசம் கொள்ளுகின்றார். சத்யாவுடன் சேர்ந்து சாப்பிடுவது> விளையாடுவது, படிப்பது என்று சம்பத் முற்றிலும் தேறிவிடுகின்றான்..
83ம் ஆண்டுக் கலவரம் பல அப்பாவித் தமிழ் மக்களைப் பலி கொள்ள.. அதில் வேலைக்காறன் வேலும் தனது உயிரை விடுகின்றான்.. சத்யாவை சம்பத்தின் குடும்பம் பாதுகாத்தாலும் சிங்களவரும் தமிழரும் சேர்ந்து வாழும் காலம் வரட்டும் அதன் பின்னர் எனது மகளை அழைத்து வருகின்றேன் என்று கூறிக் கலங்கிய கண்களுடன் தனது மகளை சத்யாவின் அம்மா அழைத்துப் போகின்றாள்.. கலங்கிய கண்களுடன் தனக்கு மிகவும் பிடித்த சின்ன தேவதைக் கதைப் புத்தகத்தை அன்பளிப்பாக சம்பத்திற்குக் கொடுத்து விட்டு அவள் தாயாருடன் புறப்படுகின்றாள்.. சத்யாவின் பிரிவைத் தாங்காது சம்பத் மீண்டும் பழைய நிலைக்கே திரும்பி விடுகின்றான்..
திரைப்படத்தில் அடிக்கடி வந்து போகும் சின்னதேவதை என்ற தமிழ் பாடல் மனதை நிறைக்கின்றது. இந்திய தமிழ் இயக்குனர்களின் பணம் பண்ணும் வித்தையில் நசிந்து போய்க்கொண்டிருக்கும் ஈழப்போராட்டம்> ஒரு சிங்கள இயக்குனரால் காக்கப்பட்டிருக்கிறது என்பது முற்றிலும் உண்மை.
எமது நாட்டின் இனக்கலவரத்தின் கொடுமையை துப்பாக்கியும் இரத்தமும் கொண்டு தராமல் சிறுவர்களின் மனநிலை மூலம் காட்டியிருக்கின்றார் இயக்குனர். மிக எளிமையாக நகைச்சுவை கலந்து எடுக்கப்பட்டிருக்கும் சின்ன தேவதை சிங்களத் திரைப்படம் என்ற போதும் திரைப்படத்தின் பாதிப்பகுதி தமிழிலேயே நகர்கின்றது..
தொழில்நுட்ப வசதிகள் அதிகமுள்ள கனடாவில் வாழும் எமது தமிழ் மக்கள் பலரும் திரைப்படங்கள் எடுப்பதில் ஆர்வமாக இருப்பது சந்தோஷமான விடயமாக இருந்த போதிலும் அவர்களின் படைப்பில் தரமற்ற இந்திய தமிழ் திரைப்படங்களின் பாதிப்பு மட்டுமே இருப்பது மிகக்கவலைக்கிடமாகவே உள்ளது.. அவர்களின் கவனம் இப்படியான தரமான படைப்புகளின் மீதும் திரும்பினால் நல்லது.
எமது நாட்டவர் ஒருவர் இனக்கலவரத்தைப் பின்னணியாக வைத்துத் தரமான ஒரு திரைப்படத்தை எடுத்து பல நாடுகளில் பல விருதுகளைப் பெற்று அத்திரைப்படத்தை கனடாவில் திரையிட்ட போதும்.. தரமற்ற இந்தியத் திரைப்படத்திற்கு கொடுக்கும் வரவேற்பை எமது மக்கள் இத்திரைப்டத்திற்கு கொடுக்கவில்லை என்பது கவலைக்கிடமாக உள்ளது.. ஊடகங்களும் அதிகம் இதில் நாட்டம் கொள்ளவில்லை என்றே படுகின்றது..</span>
Thanks:http://www.thinnai.com/ar0722048.html
|
|
|
| எங்கள் மந்தையிலும் சில கறுப்பு ஆடுகள் ? |
|
Posted by: kuruvikal - 07-22-2004, 07:50 PM - Forum: சுமுதாயம் (வாழ்வியல்)
- Replies (12)
|
 |
<b>யாழ் பல்கலைக்கழக புவியியல் மாணவனின் எம். எ பட்டத்திற்கான ஆய்விற்காக கொடுக்கப்பட்ட தலைப்பு ? ? குடாநாட்டு மாட்டு வண்டில்கள்.? </b>
ஆகமொத்தம் முன்னாள் பேராசிரியருக்கு குடாநாட்டின் கல்விசார் பிரச்சனைகள் நன்கு தெரியும். அதனாலேயே கூட்டங்களில் அவ்வாறான கருத்துத்தெரிவித்து வருகின்றார். ஆனால் அவருடைய நிர்வாக காலப்பகுதியில் தேவையானவற்றைப் பூர்த்தி செய்வதற்கு எந்தவிதமான நடவடிக்கைகளும் மேற்கொள்ளவில்லை. அதுமட்டுமல்லாமல் மாணவர்களை வேறு வேறு திசைகளுக்கும் திட்மிட்டு திசைதிருப்பியுள்ளார். என்பது இவ்வாய்வுகளின் முடிவாகும்.
யாழ் பல்கலைக்கழகத்தின் நிர்வாக சீர்கேட்டிற்கும், கல்வித்தர வீழ்ச்சிக்கும் முன்னாள் துணைவேந்தரே நேடி, மறைமுக காரணமாக இருப்பதாக அண்மைக்காலங்களில் இணையத்தளங்களில் கட்டுரைகள் வெளிவந்தவண்ண இருப்பதை வாசகர்கள் அறிந்ததே (தமிழ்நாதம் www.TamilNaatham.com , சூரியன் இணையத்தளங்கள்).
மிக அண்மையில் சூரியன் இணையத்தளத்தில் வெளிவந்த 'கைக்கெட்டியும் வாய்க்கெட்டாத யாழ் நூலகம்" என்னும் கட்டுரையிலும் கூட முன்னாள் துணைவேந்தர் விமர்சிக்கப்பட்டு இருந்தது வாசகர் அறிந்த விடயமாகும். பல உண்மைத்தகவல்கள் இணையத்தளங்களுடாக வெளிவந்துகொண்டிருக்கும் வேளையிலேயே....
12.06.2004ம் திகதி நடைபெற்று முடிந்த நிகழ்வில் துணைவேந்தர் உரையாற்றியதாக கூறி, 19.07.2004ம் திகதி செய்தி வெளியிடப்பட்டிருந்தது. பத்திரிகையில் இடப்பற்றாக் குறைகாரணமாக உடனடியாக செய்தி பிரசுரிக்காமல் தவறுவதற்கு சந்தர்பங்கள் இருக்கும். இருப்பினும், ஒரு மாதமும் 7 நாட்களும் கடந்தநிலையில் செய்தியை நிகழ்ச்சி நாள் குறிப்பிடப்படாது பிரசுரித்திருப்து ஐயத்தை ஏற்படுத்துவதே!
மேலதிக தகவல் இங்கே.... sooriyan.com
|
|
|
| சினிமா ஒரு சாக்கடை உண்மையா....??! |
|
Posted by: kuruvikal - 07-22-2004, 07:35 PM - Forum: சினிமா
- Replies (14)
|
 |
<img src='http://www.thatstamil.com/images23/cinema/cheran250.jpg' border='0' alt='user posted image'>
(இவர்தான் சேரன் ஓட்டோகிராப் திரைப்பட நாயகன்.. இயக்குனர்...!)
சேரன், தங்கர்பச்சான் மீது பெண் பாலியல் வல்லுறவுப் புகார்...!
தன்னை இயக்குநர்கள் சேரன் மற்றும் தங்கர்பச்சான் ஆகியோர் மானபங்கப்படுத்தியதாக, ஒரு இளம்பெண் பரபரப்பான புகார் தெரிவித்துள்ளார்.
உறையூர் கீரைக்கொல்லை தெருவை சேர்ந்த நவாப்ஜான், ஜெகராபேகம் தம்பதியின் மகளான நிஷா என்ற ரஹமத்துனிஷா(20), உறையூர் போலீசில் ஒரு பரபரப்பு புகார் கொடுத்தார்.
தந்தையால் கைவிடப்பட்ட தனது தாயும், சகோதரர் சையது அமீரும் சேர்ந்து தன்னை விபச்சாரத்தில் ஈடுபடுத்துவதாகவும், மறுத்தால் தன்னை அடித்து துன்புறுத்துவதாகவும் கூறியிருந்தார்.
இந்தப் புகாரை போலீசார் முதலில் வாங்க மறுக்கவே, ஜனநாயக மாதர் சங்கத்தின் உதவியை நிஷா நாடினார். இதையடுத்து அந்த அமைப்பின் பத்திரிக்கைகளுக்கு செய்தி தந்ததோடு, வழக்கைப் பதிவு செய்ய போலீசாருக்கும் நெருக்குதல் கொடுத்தனர்.
Thatstamil.com
|
|
|
|