![]() |
|
TV - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8) +--- Forum: பொழுதுபோக்கு (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=37) +--- Thread: TV (/showthread.php?tid=6883) |
TV - Aalavanthan - 07-23-2004 இரண்டு வாரங்களுக்கு முன்னால் ஒரு வெள்ளிக் கிழமை சாயந்தரம் என் நண்பர் ராம்ஸ் விருந்து கொடுத்தார். அவர் புண்ணியத்தில் 3 மணி நேரம் கேபிளில் சன் டிவி பார்த்தேன். இங்கே அமெரிக்காவில் பத்தரை மணி நேர வித்தியாசத்தில் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்படுவதாகச் சொன்னார். பல மாத இடைவெளிக்குப் பிறகு சன் டிவி பார்ப்பதால் லோகோவையே ரொம்ப நேரம் ஆவென்று பார்த்துக் கொண்டிருந்தேன். 3 மணி நேரத்தில் நான் பார்த்த நிகழ்ச்சிகளை, பார்த்த அதே வரிசைக் கிரமத்தில் கீழே தருகிறேன். ► மை டியர் பூதம் - சீரியல் ► ஆனந்தம் - சீரியல் ► கோலங்கள் - சீரியல் ► செய்திகள் - சீரி... ஸாரி. ► திரை விமர்சனம் - நியூ. நெளிந்து கொண்டே பார்க்க வேண்டியிருந்தது. ► மெட்டி ஓலி - மறுபடியும் சீரியல். இப்போதெல்லாம் மெகா சீரியல் டைட்டில் ஸாங்கில் தவறாமல் ஒரு கோஷ்டி நடனம் வேறு வந்து விடுகிறது. சினிமா புளித்த நடிகைகள் கண்ணீரும் கம்பலையுமாய் டைட்டிலில் மட்டும் தோன்றி விட்டு மறைந்தார்கள். ராம்ஸின் மனைவி பெருமை ததும்பச் சொன்னார். " சத்யராஜ்குமார், இந்த சீரியல்ஸ்ல ஒரு ஸ்பெஷாலிட்டி என்னன்னா எத்தனை நாள் கழிச்சுத் திரும்பப் பார்த்தாலும் புரியும்ங்க. " " கரெக்ட்டுதான். அதை விட கண்ணை மூடிட்டுப் பார்த்தாலும் எனக்குப் புரியுதுங்களே பவானி. " என்று சொல்லி மெய் சிலிர்த்தேன். விஷுவலா கிலோ எத்தனை? அத்தோடு விட்டாரா? வாட்டசாட்டமான ஓர் இளைஞனைப் பார்த்து, " பாவம் இவன் போன மாசம் செத்துட்டான். " என்றார். நான் கொஞ்சம் அதிர்ந்துதான் போனேன். " என்னாச்சு, ஹார்ட் அட்டாக்கா? " " இல்லேங்க. ஆள் போன மாசம் வேறோரு சீரியல்ல செத்துப் போய்ட்டான். டெட்பாடியை ரெண்டு வாரம் எடுக்காம அப்படியே வெச்சிருந்தாங்க. " தமிழர்களுக்குப் பொழுது எப்படிப் போகுது பாருங்கள். மூலம்: http://valaippoo.yarl.net/archives/001484.html - பரஞ்சோதி - 07-23-2004 நண்பர் ஆளவந்தான் நீங்க சொன்னது அத்தனையும் உண்மை. இந்த நிலை என்று மாறுமோ என்று நினைக்க வேண்டிய நிலையில் இருக்கிறோம். - sarihalim - 07-24-2004 நண்பர் ஆளவந்தான் சொல்வது போல இன்றைய மக்கள்(!?) நிறைய இருக்கிறார்கள்.ஆண்டவன் தான் அவர்களுக்கு நல்ல புத்தியைக் கொடுக்கனும். - வெண்ணிலா - 07-24-2004 <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
|