Welcome, Guest
You have to register before you can post on our site.

Username
  

Password
  





Search Forums

(Advanced Search)

Forum Statistics
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244

Full Statistics

Online Users
There are currently 335 online users.
» 0 Member(s) | 332 Guest(s)
Applebot, Bing, Google

Latest Threads
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,304
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,231
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,604
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,292
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,632
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,058
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,461
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,477
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,025
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,238

 
  கறுப்பு ஜீலை
Posted by: Mayuran - 07-20-2004, 11:42 PM - Forum: கவிதை/பாடல் - Replies (4)

கறுப்பு ஜீலை

இருபத்தொரு ஆண்டுகள் - கண்
இமைக்கும் நொடியில் கரைந்து விட்டாலும்
அந்த இரத்த நெடி
இன்றும் வீசிக்கொண்டுதானிருக்கிறது.

Print this item

  20/07 தமிழருக்கு பிடித்த சனியன்
Posted by: தமிழன் - 07-20-2004, 11:30 PM - Forum: செய்திகள் : தமிழீழம் - Replies (1)

[size=18]
20/07/1960 இன்று உலகின் முதல் பெண் பிரதமர் சிலோனில் தேர்ந்தெடுக்கப்பட்டார்

திருமதி சிறீமாவோ பண்டாரநாயக்கே சிங்களப் பேரினவதிகளாகிய புத்த கிளர்ச்சியாளர்களால் 26/09/1958 அன்று படுகொலை செய்யபட்ட சிலோன் பிரதமர் சோலமன் பண்டாரநாயக்கேயின் விதவை மனைவி உலகின் முதல் பெண் பிரதமராக பதவியேற்றார்.

இப்பெண்மணி பிரதமராக வரக் காரணம் அவரது அழுகைதானாம். தேர்தல் பிரச்சார மேடைகளில் அழுது அழுது முதலைக் கண்ணீர் வடித்த காரணமே இவருக்கு அனுதாப ஒட்டுக்கள் பெற்றுக்கொடுத்து இவரை தேர்தலில் வெல்லச் செய்ததது. இதனாலேயே இவருக்கு "அழுகை விதவை" என்று உலகமெல்லலாம் அறியக்கூடிய பட்டபெயரும் உண்டாயிற்று.
<img src='http://newsimg.bbc.co.uk/media/images/38854000/jpg/_38854223_bandar278.jpg' border='0' alt='user posted image'>

சிறீமாவோ பண்டாரநாயக்கே செய்த சாதனைகள்:

சிலோனை தனி புத்த சாம்ராஜியமாக மாற்ற முதற்க்ட்டமாக சிங்கள மொழி சிலோனின் தேசிய மொழியக மாற்றப்பட்டது.

தமிழ் மக்களின் வாழ்க்கை திண்டாடும் வகையில் நிறைய புதிய அதிகாரங்களை நிறைவேற்றினார்.
இதனால் தமிழ் மக்கள் கொதிப்படைந்தனர்.

சலோன் குடியரசு நாடாக மாற்றப்பட்டது

1972ல் சிலோன் என்ற பெயர் அழிக்கப்பட்டு "சறீ லங்கா" என்று சிங்களவர்க்கு ஏற்றவகையில் பெயர் மாற்றி அமைக்கப்பட்டது.

இந்த பெண்மணியின் ஆட்ச்சிக் காலத்தில் வேலையில்லாத் திண்டாட்டம்இ உணவு பற்றாக்குறை மற்றும் பஞ்சம் நாடெங்கும் தலைதூக்கி ஆடியது. நாட்டின் தெயிலை ஏற்றுமதியும் எவ்வகையிலும் பொருளாதாரத்திற்கு உதவிசெய்யவில்லை.

தன் அதிகாரங்கள் யாவையும் பயன்படுத்தி தமிழர்கள் வாழ்வை கெடுப்திலேயே குறியாக இருந்தார்.

அதிகாரங்களை தவறாக பயன்படுத்திய காரணத்தால் 1977 பொதுத்தேர்தலில் இவரது கட்ச்சி பெரும் தோல்வியைத் தழுவியது.

1980ம் ஆண்டு பாரளுமன்றத்தில் இருந்து தூக்கியெறியப்பாட்டார்.

ஆனால் 1994ம் ஆண்டு நாட்டில் அமைதியை மீண்டும் கொண்டுவருவேன் என்று பொய்பிரச்சாரம் செய்து ஆட்சிக்கு வந்த இவரது மகள் சந்திரிக்க குமாரதுங்க தன் அதிகாரங்களைப் பயன்படுத்தி தன் தாயாரை மீண்டும் பிரதமராக அமர்தினார் இப்பபெண்மணியும் சிறிதும் வெட்கமின்றி ஏற்றுக்கொண்டார் தாயும் மகளும் கூட்டாக தமிழருக்கு இன்னல்கள் இழைத்தன்ர். இது கண்டு குடவுளுக்கும் பொறுக்கவிலை. அதுதான் என்னவே 10/08/2000ம் ஆண்டு நெஞ்சு வலியால் சிறீமாவோ பண்டார நாயக்கே அந்தோ மாய்ந்தார். அவரது மரணத்திற்க்கு இரண்டு மாதம் கழித்து அவரது பதவி நீக்கப்பட்டது. தமிழர்மீது பாய்ந்து வந்த குண்டுகளில் ஒன்று ஒழிந்தது.


- தமிழன்

Print this item

  இணையங்கள் போகும் போக்கைப் பாரு...
Posted by: kuruvikal - 07-20-2004, 05:49 PM - Forum: இணையம் - No Replies

சிலின்கோ நிறுவன தலைவர் மீதான இணையத்தளத் தாக்குதலை நீக்குமாறு நீதிமன்றம் உத்தரவு

சிலின்கோ கூட்டு நிறுவனத்தின் தலைவர் லலித் கொத்தலாவல மீது இணையத்தளம் ஒன்றில் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை நீக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த மார்ச் முதலாம் திகதி சிங்கள நெட் எனப்படும் இணையத்தளத்தில்.செலின்கோ தலைவரின் மீது இந்த குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட செய்தி வெளியாகியிருந்தது. நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட சிஹல உறுமயவின் பிரதான பௌத்த பிக்குகளை கொலை செய்ய கொத்தலாவல முயற்சிக்கிறார் என்ற செய்தியே அதுவாகும்.

பாணந்துறையில் நடைபெற்ற சிஹல உறுமயவின் பொதுக்கூட்டம் ஒன்றை ஒலி ஒளி பதிவு செய்தமை இதன் அடிப்படையிலேயே இடம்பெற்றுள்ளதாகவும் குறிப்பிட்ட செய்தியில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனை அடுத்து இதனை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரணை செய்த கொழும்பு மேல் நீதிமன்றம் குறிப்பிட்ட செய்தியை எதிர்வரும் 14 நாட்களுக்குள் இணையத்தளத்தில் இருந்து நீக்கிவிட வேண்டும் அல்லது நட்ட ஈட்டை செலுத்த வேண்டியேற்படும் எனவும் மேல் நீதிமன்றம் எச்சரித்துள்ளது.


ஆதாரம் புதினம் டொட் கொம்...!

Print this item

  மங்கை நீ மலராமோ....????!
Posted by: kuruvikal - 07-20-2004, 05:20 PM - Forum: கவிதை/பாடல் - Replies (11)

<img src='http://kuruvikal.yarl.net/archives/sridevi1-450.jpg' border='0' alt='user posted image'>

மலரிடை மலராய்
மங்கை - நீ
மலர்ந்திட்டால்
மலராமோ....????! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

நன்றி.... http://kuruvikal.yarl.net/

Print this item

  கள்ளமற்ற மழழைகள் கருகி துடித்ததை எண்ணி
Posted by: தமிழன் - 07-20-2004, 02:14 PM - Forum: தமிழ் /தமிழர் - Replies (5)

<span style='color:darkblue'>கள்ளமற்ற மழழைகள் கருகி துடித்ததை எண்ணி

கும்பகோணத்தில் இடம்பெற்ற விபத்தில் கருகி மாண்ட சிறுவர்களை நினைவுகூர்ந்து ஐபிசி தமிழ் வானொலியில் தமிழீழச் சிறுமி ஒருவர் பாடிய பாடல்

கீழ்காாணும் இணைப்புகளில் பாடலைக் கேட்கலாம்.

http://www32.brinkster.com/famoustamils/fo...konam_kids.smil
அல்லது

http://www.tamilnatham.com/audio/special/s...gs20040719.smil

- தமிழன்
[size=9]
நன்றி தமிழ்நாம்</span>

Print this item

  வக்கீல்-நீதிபதிகள் நகைச்சுவை தொகுப்பு
Posted by: ÀÃ狀¡¾¢ - 07-20-2004, 12:01 PM - Forum: நகைச்சுவை - Replies (12)

<b>நகைச்சுவை எண் = 1

´Õ °Ã¢ø ¦Àâ À½ì¸¡Ãý, «Å÷ þÈìÌõ ¾ÌÉò¾¢ø ¾ýÛ¨¼Â §Á¦Éƒ÷, ¼¡ì¼÷, Å츣¨Ä ÅÃŨÆò¾¡÷. ¾¡ý Å¢¨ÃÅ¢ø þÈóÐ §À¡Å¾¡Öõ, ¸ñÊôÀ¡¸ ¾ÉìÌ §Á§Ä¡¸ò¾¢ø ¦º¡÷ì¸õ ¸¢¨¼ì¸¡Ð, ¬¸§Å ±ý À¢½ò¨¾ ±Ã¢ìÌõ ¿¡ý ¯í¸ÙìÌ ¦¸¡ÎìÌõ À½ò¨¾Ôõ ¨ÅòÐ ±Ã¢òРŢÎí¸û ±ýÚ ¦º¡øÄ¢ ¬ÙìÌ 1 þÄðºõ åÀ¡ö ¦¸¡Îò¾¡÷.

«ÅÕõ þÈóÐ §À¡ÉÐõ «ÅÃÐ À¢½ò¨¾ ±Ã¢òÐÅ¢ðÎ «ÅÃРţðÊüÌ ÅóÐ ºÃìÌ ÌÊò¾¡÷¸û, º¢È¢Ð §¿Ãò¾¢ø §Á§Éƒ÷ ¼¡ì¼¨ÃÔõ Å츣¨Ä¨ÂÔõ À¡÷òÐ, ±ý ÁÉÍ ºÃ¢Â¢ø¨Ä, ¿¡ý ¾ÅÚ ¦ºöРŢð§¼ý, ¦ÀâÂÅ÷ ¦¸¡Îò¾ À½ò¾¢ø 25,000 ±ÎòÐÅ¢ð§¼ý, Á£¾¢¨Â ¾¡ý ¨ÅòÐ ±Ã¢ò§¾ý.

«¾üÌ ¼¡ì¼÷: ±ÉìÌõ ¾¡ý ÁÉÍ ºÃ¢Â¢ø¨Ä, «¾¢ø 50,000 åÀ¡ö ±ÎòÐÅ¢ð§¼ý, Á£¾¢¨Â ¾¡ý ¨ÅòÐ ±Ã¢ò§¾ý.

¸¨¼º¢Â¡¸ Å츣ø: ¿£í¸û þÕÅÕõ ºÃ¢Â¡É ²Á¡üÚ측Ã÷¸û, ¿¡ý «Å÷ ¦º¡ýÉÀÊ 1 þÄðºò¾¢üÌ ´Õ §Àíì ¦ºì ¨ÅòÐ ±Ã¢òРŢð§¼ý.</b>

Print this item

  மானிடராய் மறுபிறப்புக்கு ஒத்திவைப்பு...!
Posted by: kuruvikal - 07-20-2004, 01:30 AM - Forum: கவிதை/பாடல் - Replies (1)

<img src='http://kuruvikal.yarl.net/archives/fighters.jpg' border='0' alt='user posted image'>

இயத்திரக் கழுகுகளா...
எங்கே புறப்பட்டீர்
எத்தனை உடல்கள்
கிழிக்கப் புறப்பட்டீர்
குருதியாற்றில் நீச்சல் போட
புஷ்ஷுக்காய் ஈராக் போறீரோ....??!

என்ன... கோபமாய்ப் திருப்புகிறீர்
எம் கேள்வி கண்டு
உம் பார்வை எம் நோக்கி....
மன்னிக்கவும்....
நீரல்ல இயந்திரம்
உம்மை இயக்கும் மனிதர்களே
இயந்திரங்கள் இரும்புகள்
பிறகெங்கே மானுடம் தழைக்கும்
பிழைக்கும்...!

இப்பவே விண்ணப்பிப்போம்
அடுத்த ஜென்மம்
யுத்தமில்லாப் பூமியில் என்று
அதுவரை மானிடராய் மறுபிறப்புக்கு
ஒத்திவைப்புக் கேட்டுமே...!

நன்றி...!

Print this item

  கிரிக்கெட் - ஆசியக் கோப்பை 2004
Posted by: kuruvikal - 07-20-2004, 12:37 AM - Forum: பொழுதுபோக்கு - Replies (48)

<img src='http://www.webulagam.com/cricket/images/top-cricket.gif' border='0' alt='user posted image'>

கிரிக்கெட்: இந்தியா இலங்கையிடம் தோல்வி

ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியா 13 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது.

இந்த ஆட்டத்தில் காயம் அடைந்த வி.வி.எஸ். லட்சுமணுக்கு பதிலாக விக்கெட் கீப்பர் பார்த்தீவ் பட்டேல் அணியில் சேர்க்கப்பட்டார்.

டாஸ் வென்ற இலங்கை முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. தொடக்க வீரர்களாக ஜெயந்தாவும், குணவர்த்தனேயும் களம் இறங்கினர். இரண்டாவது ஓவர் தொடங்கியபோது ஆட்டம் மழையால் சிறிது நேரம் தடைபட்டது.

பின்னர் இலங்கை அணியினர் இந்திய அணியினரின் பந்து வீச்சை எதிர்கொள்ள மிகவும் தடுமாறினர். ரன்வேகம் மிகவும் மெதுவாக இருந்தது.

ஸ்கோர் 63 ஆக இருந்தபோது 34 ரன் எடுத்திருந்த ஜெயந்தா பாலாஜி பந்தில் அவுட் ஆனார். பின்னர் கேப்டன் அட்டபட்டு ஆட வந்தார். இந்த ஜோடி 20.4 ஓவர்களில் அணியின் ஸ்கோர் 100யைக் கடக்க உதவியது. ஸ்கோர் 128 ஆக இருந்தபோது குணவர்த்தனே (49 ரன்கள்) ரன் அவுட் ஆனார். அடுத்த வந்த சங்கக்கரா அடித்து ஆட ஆரம்பித்தார்.


மறுமுனையில் 50 ரன்களை எடுத்திருந்த அட்டபட்டு ரன் அவுட் ஆனார். பின்னர் சங்கக்கராவுடன் ஜெயவர்த்தனே இணைந்து அதிரடி ஆட ஆரம்பித்தார். சங்கக்கரா 57 ரன் எடுத்து அவுட் ஆனார். இறுதியில் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் இலங்கை 4 விக்கெட் இழப்புக்கு 282 ரன்கள் எடுத்தது.

283 ரன்கள் இலக்குடன் தொடக்கவீரர்களாக டெண்டுல்கரும், பார்த்தீவ் பட்டேலும் களம் இறங்கினர். 4 ஓவரில் 11 ரன் எடுத்து இருந்த டெண்டுல்கர் ஜோய்சா பந்தில் அவுட் ஆனார்.

அப்போது அணியன் ஸ்கோர் 16. பின்னர் வந்த ஷேவாக் அடித்து ஆட ஆரம்பித்தார். அதிர்ஷ்டவசமாக இவர் கொடுத்த கேட்ச்சை சமிந்தா வாஸ் தவறவிட்டுவிட, ஷேவாக் ரன்களை வேகமாக சேகரிக்கத் தொடங்கினார்.

மறுமுனையில் 6 ரன் எடுத்து இருந்த பார்த்தீவ் பட்டேல் ஜோய்சா பந்தில் கேட்ச் அவுட் ஆனார். இதனையடுத்து கங்குலி ஷேவாக்குடன் இணைந்தார். 13.4 ஓவரில் ஷேவாக் இரண்டு ரன்களை எடுக்க முயன்று ரன் அவுட் ஆனார். அதற்கு அடுத்த ஓவரிலேயே கங்குலியும் அவுட் ஆனார்.

4 முக்கிய விக்கெட்டுகளை 71ரன்களில் இழந்த அணியை டிராவிட், யுவராஜ் ஜோடி சரிவில் இருந்த மீட்டது. டிராவிட் 73 பந்துகளில் 50 ரன்களைக் கடந்தார். இந்தியா 40.1 ஓவரில் 200 ரன்களை எடுத்தது. அப்போது 47 ரன்களை எடுத்திருந்த யுவராஜ் சிங் வாஸ் பந்தில் கேட்ச் அவுட் ஆனார்.

பின்னர் வந்த கயூப் 22 ரன்களிலும் டிராவிட் 82 ரன்களிலும் அவுட் ஆனார்கள். இறுதியில் இந்திய அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது.

மற்றொரு ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி 173 ரன்கள் வித்தியாசத்தில் ஹாங்காங்கை தோற்கடித்தது. பாகிஸ்தான் வீரர்கள் சோயப் மாலிக், யூனுஸ்கான் ஆகியோர் சதம் அடித்தனர்.

thatstamil.com

Print this item

  லண்டன் திருக்கோயில் வியாபார நிலையம்
Posted by: kuruvikal - 07-19-2004, 09:43 PM - Forum: புலம் - Replies (30)

கோயில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம். இதை யார் கடைப் பிடிக்கிறார்களோ இல்லையோ இலண்டன் வாழ் நம்மவர்கள் சரியாக கடைப்பிடிக்கிறார்கள்.
இலண்டனில் ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட புலம் பெயர்ந்த ஈழத் தமிழ் மக்கள் வாழ்கிறார்கள் என்று அன்மைய கணக்கெடுப்புகள் கூறுகின்றன. இவர்களில் பெரும்பாலானோர் தலைநகரையும் அதனை சூழ உள்ள புற நகர் பகுதிகளிலுமே வாழ்கிறார்கள்.

இவர்கள் அனைவருமே தமது வாழ்கை தரத்தில் சிறந்து விளங்குகிறார்கள. இனி மேற்கூறிய முது மொழிக்கமைய இவர்கள் வாழ்கின்ற பகுதிகளிலே எதாவது ஒரு கோயிலையும் யாராவது ஒருவர் அமைத்துக் கொள்கிறார். அந்த வகையில் இன்று இலண்டனில் அமைந்துள்ள சைவக திருக்கோயில்களின் எண்ணிக்கை சிறியதும் பெரியதுமாக ஏறத்தாழ 30 க்கும் மேற்ப்பட்ட கோயில்கள் (தமிழ் ஒலை 2004, இங்கு குறிப்பிட வேண்டிய விடயம் தமிழ் ஒலைகள் ஏப்பிரல் மாதத்தில் வெளியிடப்படுவதனை கவனத்தில் கொள்க, காரணம் அதன் பின்பு இரண்டு கோயில்கள் புதியதாக ஆரம்பிக்கப் பட்டுள்ளன) உள்ளன.

இக் கோயில்கள் எப்படி ஆரம்பிக்கப்படுகின்றது என்று கேட்டால் கவலையாக இருக்கின்றது. இந்து சமயத்தில் சொல்லப்பட்ட ஆகம விதியினை கடைப்பிடிக்கிறார்களா? இல்லையே ஒரு கோயிலில் உள்ள நிர்வாக பிரச்சனையால் அதில் இருந்து வெளியேறியவர்களால அல்லது அக்கோயில் குருக்கலுடனான முரன்பாட்டால் வெளியேறிய ஐயரினால் உடனடியாகவே எதாவது மண்டபத்தையோ அல்லது வியாபார நிலையங்களுக்கு மேல் உள்ள பகுதியை வாடகைக்கு எடுத்து எதோ வாயில் நுழையாத பெயரினை வைத்து கோயிலை தொடக்கி விடுகிறார்கள் (இப்படி வியாபார நிலையங்களுக்கு மேல் அமைந்துள்ள கோயில்கள் மாத்திரம் இன்று இலண்டனில் பல) அது மாத்திரமா பூசலார் தான் மனதிலே கோயில் கட்டினார் ஆனால் எம்மவர்கள் இணையத்திலேயே கோயில் கட்டியிருக்கிறார்கள்

இக்கோயில்கள் எல்லாமே பக்தி நோக்கத்திலா அமைக்கப்பட்டது என்றால் கேள்வி குறிதான். அன்றி சமுதாய நோக்கமா என்றாலும் கேள்விக்குறிதான் (விதி விலக்கு ஒரு சில கோயில்கள் தாயகத்துக்கான உதவிகளை செய்கிறார்கள்) நிச்சயமாக சொல்லலாம் இவை அனைத்துமே வியாபார நோக்குடன் அமைக்கப்பட்டது என்று இக்கூற்றை யாராலும் மறுத்துரைக்க முடியாது.

இலண்டன் கோயில்களும் இன்றைய நிலமையும் சில உதாரணங்கள்

1) இலண்டனில் உள்ள கோயில் ஒன்று இங்கு திரு விழா குளிர்கால முடிவிலே இடம்பெறும்கிறது அக்காலத்திலேயே தேரும் உட்புறத்திலேயே இழுக்கப்படுகிறது. இதை பிழை என்று சொல்ல முடியாது ஆனால் இலண்டனில் பல கோயில்களில் தேர் வெளி றோட்டிலேயே இழுக்கப் படுகிறது அதற்காக குறிப்பிட்ட அக்கோயிலும் இன்னோர் நாளிலே வெளி றோட்டில் இழுக்கப்பட்டு பல வீதிகளினூடாக ஒரு விளையாட்டு மைதானத்தை அடைந்து அங்கு இளைபாறி வியாபார நிலையங்கள் அமைத்து கலை நிகழ்ச்சிகளை நிகழ்த்தி மீண்டும் பின் இரவு கோயிலுக்கு செல்கிறது இதற்கேற்படுகிற செலவிலும் பார்க்க அரிசனையாலும், வியாபார நிலையங்களாலும் வருகின்ற வருமானம் கூட. அடுத்து ஊரில் ஒரு குறிப்பிட்ட சுவாமியுள்ள கோயில் (பிள்ளையார், அம்மன், முருகன்) எனில் அச் சுவாமிக்கென்று தனியே ஒரே ஒரு சூரன் போர்தான் இடம்பெறும். (ஆதாவது பிள்ளையார் கோயில் எனில் கஐமுகா சம்காரம். முருகன் கோயில் எனில் சூர சம்காரம்,) ஆனால் மேற்குறிப்பிட்ட இலண்டன் கோயிலிலே எனோ தெரிய வில்லை ஓரே ஆண்டில் மூன்று சூரன் போர் இடம்பெறுகிறது ஏன் என்று மாத்திரம் விளங்க வில்லை? இது மாத்திரம் அல்ல இரண்டு வருடங்களுக்கு முன்பு இக்கோயில் அமைந்துள்ள கட்டிடத்தை வாங்குவதற்காக வட்டியில்லா கடன் வழங்குமாறு பொது மக்களுக்கு ஒரு வேண்டுகோளை பத்திரிகை வாயிலாகவும் வெளியிட்டு இருந்தார்கள். பாவம் பொது சனம் பய(ம்)பக்தியாக கும்பிட்டு காசைப்போட்டு விட்டு செல்கிறார்கள்.


2) அடுத்த இலண்டனிலே புகழ்பூத்த நகரிலே அமைந்துள்ள கோயில் இக்கோயில் இலண்டனிலே பழமையான ஒரு கோயில் தனக்கென சொந்தமான கட்டிடத்தில் இயங்கி வருகிறது. இக் கோயிலிலே கடந்த 8 வருடங்களுக்கு முன்பு திருவிழா ஆரம்பிக்கப்பட்ட போது 10 திருவிழாவாக இருந்து இன்று 25 திருவிழாவாக உயர்ந்துள்ளது இதற்கு காரணம் தெரிய வில்லை? ஆகம வீதியில் எதாவது மாற்றமா? அல்லது பக்ககோடி?களின் வேண்டுகோளா? அல்லது ஆலய அறங்காவலரது ஆசையா? தெரியவில்லை.
எது எப்படி இருப்பினும் ஒரு கோயிலில் திருவிழா என்ற போர்வையிலே எவ்வளவு பணம் வீண்விரையமாகிறது பாருங்கள். இவ் நேரத்திலே பல புதிய வியாபாரிகள் வந்துவிடுவார்கள் (மேளம், சாப்பாடு கொடுப்பவர்கள், பூமாலை கட்டுவோர்)
ஓரு திருவிழாவுக்கு என்று கோயில் நிர்வாகத்துக்கென்று குறிப்பிட்ட தொகை பணம் செலுத்த வேண்டும் (500- 600 பவுண்ஸ்கள் வரை இத்தொகை கோயிலுக்கு கோயில் மாறுபடும்)

அடுத்து மேளம் கடந்த இரண்டு மூன்று வருடங்களாக தாயகத்தில் இருந்தும் இந்தியாவில் இருந்தும் பல தவில் கலைஞர்களை இங்கு வரவழைத்து அவர்களை வைத்து வியாபாரத்தில் ஈடுபடுவோரது தொகையும் அதிகரித்துள்ளது நான்கு பேர்களை கொண்ட அக்கலைஞர்களுக்கென்று ஒரு நாளைக்கு 5 மணித்தியாலங்களுக்கு என்று 600-800 பவுண்ஸ்கள் வரை அறவிடப்படுகின்றது. அப்போ 25 நாட்களுக்கும் எவ்வளவு தொகையான பணத்தினை குறிப்பிட்ட நபர் பெறுகிறார்? இது தனியே ஒரு கோயிலில் மாத்திரம் பெறுவது எனேய கோயில்களிலும் பெறுவார்கள் எனேனில் 6 மாத விசாவில் எல்லா வந்தவர்கள்.

சாப்பாட்டு விடயம் மக்களே கொஞ்சம் சிந்தியுங்கள் வெளிநாட்டில் வாழ்கின்ற யாராவது ஒரு நேர சாப்பாட்டுக்கு வழியில்லாமல் இருக்கிறார்களா? அப்படி வேலைதான் செய்ய முடியாது என்று சொன்னாலும் அரசாங்க உதவிதொகையிலே இராச வாழ்கை வாழலாம். அதை விடுத்து திருவிழா காலங்களில் கோயில்களில் ஒரு நேரத்துக்கென்று எவ்வளவு சாப்பாடு செய்யப்படுகிறது எவ்வளவு சாப்பாடு குப்பையில் கொட்டப்படுகிறது. இதற்கான செலவு எவ்வளவு? ஆது மாத்திரமா முன்னர் சுண்டலுடன் முடிந்த இரவு திருவிழாக்கள் எல்லாம் இப்பொழுது இடியப்பம், இட்லியுடன் முடிகிறது போற போக்கை பார்த்தால் எதிர்காலங்களில் பீசா. காம் பேக்கர் உடன் திருவிழா இடம் பெற்றாலும் இடம்பெறலாம்? சற்றாவது தாயக்ததை திரும்பி பாருங்கள்.

3) அடுத்து கோயில்கள் தமக்கிடையே ஒற்றுமையில்லாமல் செயற்படுகின்றது குறிப்பாக இங்குள்ள இரண்டு கோயில்கள் எதோ தமிழ் நாட்டு அரசியல் கட்சி போல் தமக்கென்று தனித்தனியே இலவசப் பத்திரிகைகளை வைத்துக்கொண்டு ஒருவரை ஒருவர் தனிப்பட்ட ஒரு நபரை குற்றம் சாட்டி தமது கோயில்களின் புகழ்? பரவ செய்கிறார்களாம்? அதுமாத்திரமல்ல இத்தனை கோயில்களும் தமக்குள் என்று ஒரு ஒற்றுமையான போக்கை கடைப்பிடிப்பதில்லை உதாரணமாக ஊரிலே எதாவது ஒரு விசேட தினம் (கந்தசஷ்டி. வருடபிறப்பு) என்றால் ஒரே நாள் அல்லது ஒரே நேரத்தில் தான் இங்கெல்லாம் அப்படியல்ல சிலவேளைகளிலே கந்தசஷ்டி விரதம் (6 நாட்கள்) 7 நாட்கள் எல்லாம் பிடித்தவர்கள் எராளம் காரணம் அம்மன் கோயிலி;ல் முன்னர் ஆரம்பிப்பார்கள் முருகன் கோயிலிலே ஒரு நாள் பின்னர் ஆரம்பிப்பார்கள் இரண்டு கோயில் ஐயர்களிடமும் மக்கள் கேட்டால் ஐயரும் எதோ எதோ கிரக நிலைகளை சொல்லி காரணங்கள் கூறுகிவார் இதையெல்லாம் பக்த கோடியான திருவாளர் பொதுசனம் பய(ம்)பக்தியுடன் 7 நாட்களும் கந்தசஷ்டி இருக்கிறார்கள் (விளம்பரம் ஓன்று பிரித்தானிய சைவக்கோயில்கள் ஓன்றியத்தின் ஆண்டு விழாவாம. எதற்காக?)

4) அடுத்து இக்கோயில்களிலே சமுதாயத்தொண்டு என்று கூறிக்கொண்டு தமிழ் பாடசாலைகள்????? ஆரம்பிக்கப் படுகின்றன அல்லது பாட்டு வகுப்பு நடன வகுப்பு வீணை. வயலின் வகுப்பு நல்ல நோக்கம் இவ் நோக்கம் நிறைவேறியதா? தனியே அரங்கேற்றம் செய்தால் (கடந்த வைகாசி மாதம் மாத்திரம் கிட்டத்தட்ட 20 மேற்பட்ட அரகேற்றங்கள் இடம்பெற்றுள்ளது) மாத்திரம் சரியா போன்ற கேள்விகள் எழ செய்கிறது. எனெனில் இக்கோயிலில் தமிழ் படிக்கின்ற பிள்ளைகளே தேவாரத்தை ஆங்கிலத்தில் எழுதி எல்லா படிக்கிறார்கள் அது தான் பரவாயில்லை அவர்கள் கதைப்பது கூட ஆங்கிலமாக எல்லா இருக்கிறது இது என்ன கண்துடைப்பான சமுதாயப் பணியா?

5) தாயகம் நோக்கிய உதவிக்கரம் என்ற போர்வையிலே அங்கு பல கஸ்டங்களுக்குள் பல ஆண்டுகளாக இயங்கி வந்த பல சிறுவர் இல்லங்களுக்கும் முதியோர் இல்லங்களுக்கும் இன்று இவர்களது வியாபார விளம்பரங்களுக்காக தமது தனித்தன்மையை இழந்து இக்கோயில்களுக்கு கீழ் அடிபணிந்து இயங்குகின்ற நிலமைதான் இன்று காணப்படுகிறது. அது மாத்திரமன்றி இச் சமாதான சூழ்நிலையை பயன்படுத்தி பலர் தாம் நினைத்த மாத்திரத்தில் சிறுவர் காப்பகங்களை அமைக்கிறார்கள் இது எந்த வகையில் சரி என்பதனை காலம் தான் பதில் சொல்ல வேண்டும்

அப்படியாயின் நீங்கள் நினைக்கலாம் கோயில்கள் தேவையில்லை என்று அப்படியில்லை கோயில்கள் நிச்சயம் தேவை பராசக்தி திரைப்படத்தில் கலைஞர் கருனாநிதி அவர்களுடைய வசனமாகிய கோயில்கள் கூடாது என்று சொல்லவில்லை அது (கொடியவர்களது) வியாபார கூடாரமாக அமையக்கூடாது என்பதே இந்த இடத்தில் என்னை போன்ற பலரது கருத்தாகும் உண்மையில் கோயில்கள் மனத்தில் உள்ள துன்பம் என்னும் பாரத்தை இறக்கி வைத்து மன நிம்மதி அடைந்து இறைவனை கும்பிட சிறந்த இடம. ஆனால் அவை வியாபார நிலையமாக மாறக்கூடாது என்பது தான் இக்கட்டுரையின் நோக்கம் அப்படியாயின் மக்கள் ஒன்று கூடுவதற்காகதானே திருவிழா (வீதி தேரோட்டம்) செய்கிறோம் அவர்கள் எல்லாம் எங்கு ஒன்று கூடுவது என்று கேட்கலாம். மக்கள் ஒன்று கூடுவதற்கு தானே எத்தனையோ நிகழ்சிகள் இருக்கினறனவே? மக்கள் தேருக்கு வருகிறார்கள் என்றால் பய(ம்) பக்தி தான் காரணம். எம்மை எல்லாம் சி;றியவர்களாக இருக்கும் காலத்திலே நிலாச்சோறு ஊட்டும் போதே அப்புசுவாமி குத்தும் சாப்பிடு இராசா என்று பய(ம்)பக்தியாக வளர்த்து விட்டார்கள் அப்படி பயபக்தியான மக்களை வைத்துக் கொண்டு தயவு செய்து காசு பார்காதீர்கள்?

தாயகம் நோக்கிய உதவிகள் என்ன பிழையா என்று கேட்கலாம் அது பிழையில்லை அவ் உதவிகளை செய்வதற்கு தானே தமிழர் புனர்வாழ்வு கழகம., வெண்புறா போன்ற அமைப்புகள் அனைத்து நாடுகளிலும் கிளைகளை பரப்பி தாயகத்துக்கான உதவிகளை செய்கின்றன அவர்கள் ஊடாக உங்கள் உதவிகளை செய்யுங்கள் அப்படி செய்யும் போது அவ் உதவி நிச்சயமாக சரியான நபரை சென்றடையும்.

இன்று பலர் என்னுடை கோயில் நான் எப்படியும் செய்வேன் என்று செய்றபடுகிறார்கள் ஆனால் காசு மக்களுடையது அல்லவா????

ஆறு அன்பு - இலண்டன் (கறோ) and sooriyan.com

Print this item

  தமிழ் கொண்டது தாய் நாடு
Posted by: தமிழன் - 07-19-2004, 09:06 PM - Forum: கவிதை/பாடல் - Replies (2)

<span style='color:darkblue'>தமிழ் கொண்டது தாய் நாடு!
<img src='http://www.eelamstore.co.uk/exi/tamilflag.jpg' border='0' alt='user posted image'>

வந்நது எம் தாய்நாடு செந்தமிழீழம் எம்மிடமே
தமிழ் கொண்டது தாய் நாடு எந்நிகரே
முத்தமிழ் உயிர் கொண்ட முடியுடை மன்னவா
உமக்கெம் முதல் வணக்கம்
உம்முயிர் போக்கி எம் மண்ணுயிர் காத்த
மா வீரர்களே புலி வீரர்களே உமக்கெம்
இதய வணக்கம்!

-தமிழன்.

------------------------------------------------
[size=9]இக்கவிதை இதுவரை நான் இயற்றிய கவிதைகிளில் மூன்றாவது கவிதையாகும். முன்னர் வெகு நாட்களுக்கு முன்னர் தமிழீழம் வேண்டும் என்று இயற்றியிருந்தேன் ஆனால் இப்பொழுது தமிழீழம் வந்தபிறகு அது தேவையில்லை என்ற காரணத்தால் அதை இங்கு பிரசரிக்க இல்லை
முடியுடை மன்னவா - கடவுளுக்கும் தேசிய தலைவருக்கும் ஒரே வரியில் முடித்து விட்டேன்.</span>

Print this item