Welcome, Guest
You have to register before you can post on our site.

Username
  

Password
  





Search Forums

(Advanced Search)

Forum Statistics
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244

Full Statistics

Online Users
There are currently 530 online users.
» 0 Member(s) | 527 Guest(s)
Applebot, Bing, Google

Latest Threads
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,303
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,231
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,604
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,292
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,631
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,057
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,460
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,477
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,025
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,238

 
  மணிரத்னம் முன் வைக்கும் மாற்று அரசியல்
Posted by: AJeevan - 07-17-2004, 04:43 PM - Forum: சினிமா - Replies (4)

<img src='http://www.yarl.com/forum/files/thumbs/t_ajeevan.authaeluththu.jpeg' border='0' alt='user posted image'>

ஆய்த எழுத்தின் கதை சொல்லும் உத்தி, கதையின் கட்டமைப்பு, கதாபாத்திரங்களின் உருவாக்கம், இவற்றில் உள்ள குறைகள், நிறைகள், கதாபாத்திரங்களை ஏற்று நடித்த நடிகை, நடிகர்களின் பொருத்தமான நடிப்புத்திறன், பாடல்கள், இசை, ஒளிப்பதிவுக் கூர்மை, ஒலிப்பதிவின் கவனமின்மை பற்றியெல்லாம் பத்திரிகைகளில் நிறைய விமரிசனங்கள் வந்துவிட்டன. ஆனால், ஆய்த எழுத்து ஒரு திரைப்படம் என்கிற எல்லையையும் தாண்டி விவாதிக்கப்பட வேண்டிய படம். குறிப்பாக, அதன் அரசியல் பார்வை. இவ்விமரிசனம் அதில்தான் கவனம் செலுத்தப் போகிறது.

ஆய்த எழுத்து நீண்ட நாட்களாகத் தயாரிப்பில் இருந்த படம். நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாகவே நிறைவு பெற்று விட்டது என்றாலும், திரையரங்கிற்கு அப்படம் வந்தபொழுது தேர்தல் முடிவுகள் வந்துவிட்டன. தமிழகத்தில், அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமும், மத்தியில் ஆட்சியிலிருந்த பாரதிய ஜனதா கட்சியும் இணைந்த கூட்டணி படுதோல்வியைச் சந்தித்துள்ளது. மு. கருணாநிதி அமைத்த திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான கூட்டணி நாற்பது இடங்களிலும் வெற்றி பெற்று, மைய அரசின் அதிகாரத்தில் பெரும்பங்கைப் பெற்றுள்ளது. ஆய்த எழுத்து படத்தைத் தயாரித்துள்ள மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் தயாரித்த இருவர் என்ற படம், 1996_ல் வெளியானபோதும் ஆட்சியிலிருந்த அ.இ.அ.தி.மு.க. பெரும் தோல்வி அடைய, ஜெயலலிதா அதிகாரம் இழந்தார். மு.கருணாநிதி ஆட்சியைப் பிடித்தார். இருவர் படத்திற்கும் ஆய்த எழுத்து படத்திற்கும் ஒருவிதத்தில் நோக்கம் ஒன்றுதான். 1967க்குப் பின் தமிழ்நாட்டின் ஆட்சியதிகாரத்தில் இருந்துவரும் திராவிட இயக்க அரசியலை விமரிசனம் செய்வது. இருவர், திராவிட இயக்க அரசியல் தலைவர்களான அண்ணாதுரை, மு. கருணாநிதி, எம்.ஜி.ராமச்சந்திரன் போன்றோரின் இரட்டை நிலையை, அந்தரங்க வாழ்வு ஒன்றாகவும் அரசியல் வாழ்வு வேறாகவும் இருக்கிறது என நேரடியாகப் பேசியது. ஆய்த எழுத்தோ, திராவிட இயக்க அரசியல்வாதிகளின் அரசியலை, நடைமுறைகளை, அதிகார வெறியை, பின்பற்றும் உத்திகளை, அவற்றில் உள்ள குரூரமான வன்முறைகளை மறைமுகமாக விமரிசனம் செய்கிறது. ஆனால், இவ்விரண்டு படங்களையுமே தமிழ் சினிமாவின் பார்வையாளன், அவனுக்கே உரிய வெறியுடன் அணுகவில்லை என்பது சுவாரசியமான முரண்பாடு. பொதுவாக மணிரத்னத்தின் படங்களை அளவுக்கதிகமாக ஆதரித்து எழுதும் பெரும்பத்திரிகைகளும்கூட ஆதரவைத் தந்ததில்லை.

ஒரு திரைப்படத்தின் ஒருவரிக் கதை என்பது, பெரும்பாலும், அப்படத்தின் மூலம் அதன் இயக்குநர், பார்வையாளனுக்குச் சொல்ல விரும்பும் செய்திதான். தமிழ்ப் பட இயக்குநர்கள் அனைவரும், சொல்ல விரும்பும் செய்தியிலிருந்தே, தங்களின் சமூகப் பார்வையிலிருந்தே ஒருவரிக்கதையை உருவாக்கிக் கொள்கிறார்கள் என்று சொல்ல முடியாதுதான். ஆனால், மணிரத்னம் அப்படிப்பட்டவர் அல்ல. தனது நோக்கத்திலிருந்தே, சமூக அக்கறையிலிருந்தே, சமூகம் எவ்வாறு மாறவேண்டும் என்ற விருப்பத்திலிருந்தே ஒரு வரிக் கதையை உருவாக்குகிறார். அதன் பேரிலேயே தனது படங்களின் திரைக்கதையைக் கட்டமைக்கிறார். அவரது எல்லா படங்களிலும் தெளிவான ஒற்றை நோக்கம் ஒருவரிக் கதை இருக்கத்தான் செய்கிறது. அவரது படங்கள் பெரும்பாலும் நிகÊழ்காலச் சம்பவங்களின் பின்னணியில் அமைக்கப்படுவதால், சர்ச்சையை எழுப்பிக் கொள்ளும் தன்மையுடன் விரிகிறது. ஆய்த எழுத்தின் தன்மையும் அதுதான். ஆய்த எழுத்தின் ஒருவரிக் கதை, நிகழ்காலத் தேர்தல் அரசியலைக் கண்டு மாணவர்கள் ஒதுங்கிவிடக் கூடாது. பங்கேற்க வேண்டும். மாற்றம் கொண்டு வர முயலவேண்டும் என்பது.

படித்தவர்கள் அரசியலில் ஈடுபட்டால், சாக்கடையாகிவிட்ட இந்திய அரசியல் சுத்தம் செய்யப்பட்டுவிடும் என்பது ஒரு பொதுப் புத்தி வாசகம். ஆனால், ஆய்த எழுத்து, படித்தவர்கள் என்று பொத்தாம் பொதுவாகச் சொல்லவில்லை என்பது கவனிக்கப்பட வேண்டிய ஒன்று. நடைமுறை அரசியலில் எல்லாக் கட்சியிலும், குறிப்பாக திராவிட இயக்க அரசியலில் ஈடுபட்டுள்ளவர்களில் பெரும்பாலோர் பட்டதாரிகளாகவும் முதுநிலைப் பட்டதாரிகளாகவும் சட்டம், பொறியியல், மருத்துவம் எனத் தொழிற்கல்வி கற்றவர்களாகவும் இருக்கிறார்கள். இந்நிலையில் படித்தவர்கள் என்று பொதுநிலையில் சொல்வது அறியாமையின் வெளிப்பாடாகவே இருக்கும் என்பதால், சிறப்பான தகுதியுடைய மாணவர்கள் என்கிறது படம். இந்தச் சிறப்புத் தகுதிகள்: அமெரிக்கப் பல்கலைக்கழகத்தின் நிதியுதவியைப் (ஸ்காலர்சிப்) பெறுவது, டெல்லி ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸில் கல்வி கற்பது, ஐ.ஏ.எஸ். அதிகாரிகளாகத் தேர்வு பெறும் ஆசையுள்ள அளவு மதிநுட்பம் அல்லது அமெரிக்க கம்பெனிகளுக்கு சாஃப்ட்வேர் எழுதும் அறிவு; முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்று டாக்டர்களாகும் அல்லது ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம். போன்ற சிறப்பு நிலை நிறுவனங்களில் கல்வி கற்கும் தகுதியுடைய திறன் போன்றவைதான். இத்தகைய சிறப்பான மாணவர்கள் தேர்தல் அரசியலில் ஈடுபடுவதன் மூலம் இப்போதுள்ள அதிகாரத்துவக் கட்சிகளை, அதன் தலைவர்களான முரட்டு மனிதர்களை அதிகாரத்திலிருந்து அகற்ற வேண்டும் எனக் கூறுகிறது படம். வெளியில் கறுப்புச் சட்டையுடனும் மனதில் சதித்திட்டங்களுடனும் அலையும் அரசியல்வாதிகள் அனைவரும் சட்டசபையில் வெள்ளைச் சட்டை, வெள்ளைவேட்டிக்காரர்களாகக் காட்சி தருகிறார்கள். அவர்களின் முகமூடிகளை அம்பலப்படுத்த ஜீன்ஸ் போட்டவர்களும் சல்வார்கம்மிஸ் பெண்களும் பலவண்ண ஆயத்த ஆடை இளைஞர்களும் நுழைய வேண்டும் என்பது இயக்குநர் மணிரத்னத்தின் விருப்பம், நோக்கம்.

இந்த நோக்கம், விருப்பம் ஏற்புடைய ஒன்றுதான். இப்போதுள்ள அரசியல்வாதிகளும் அவர்களின் கட்சிகளும் தமிழக அரசியல் அரங்கிலிருந்து அகற்றப்பட வேண்டியவர்கள் என்கிற முன்மொழிதல் நடுத்தரவர்க்கத்தின் படித்தவர்களின் விருப்பங்கள்தான். அவர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் கருத்துதான் மாற்றம் வேண்டும்; நாகரிகமான அரசியல் வேண்டும் என்பது. இதை யார்தான் மறுக்கப் போகிறார்கள்?

இப்போதுள்ள அரசியலுக்கு மாற்றாகப் பலரும் பலவிதமான முன்மொழிதல்களை, முன்மாதிரிகளைச் சொல்லிக் கொண்டும் இருக்கிறார்கள். பேரரசியல் நிலைப்பாடுகள் தொடர்ந்து தோல்விகளைத் தழுவிக்கொண்டும் அதற்கு மாறாக நுண்ணரசியல் சாதி, மத, இனம் சார்ந்த அடையாள அரசியலாக வெற்றி பெற்றுக் கொண்டும் வரும் சூழலில், ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் ஏன் ஒட்டுமொத்தத் தமிழகத்திற்குமான அரசியலையும்கூட முன்வைக்க முடியாமல் தவிக்கின்றனர். சாதி, இன அரசியலுக்கு மாற்றாக மதமும் நிற்க முடியாமல் போகின்றபொழுது, யுக புருஷர்கள் முன் நிறுத்தப்படுவது ஓர் உத்தி. பாபா உருவத்தில் ரஜினிகாந்த் முன்னிறுத்தப்பட்டது அதன் வெளிப்பாடு. மணிரத்னம், யுகபுருஷர்கள் வேண்டாம்; பிறவிப் புத்திசாலிகள் வேண்டும் என்கிறார். அவர்களிடம் நேர்மையும் அச்சமின்மையும் எதிர்ப்புக் குணமும் ரத்தத்திலேயே ஊறியிருக்கும் என்கிறார். புத்திசாலிப் படிப்பாளிகளால் மாற்றம் தர முடியும் என்னும் மணிரத்னத்தின் காட்சி விரிப்புகளுக்கு, வசனம் சுஜாதா. சென்னையின் துறைமுகப்பகுதியில் உள்ள நேப்பியர் பாலம் அரசு அதிகாரத்தின் குறியீடான தலைமைச் செயலகத்தையும் அறிவின் குறியீடான சென்னைப் பல்கலைக்கழகத்தையும் இணைக்கும் பாலம். அதன் அருகில், சென்னைத் தாதாக்களின் உறைவிடங்களான மீனவக் குப்பங்களும் உள்ளன. அந்தப் பாலத்திலிருந்து தனது படத்தைத் தொடங்கி விரித்துள்ளார் மணிரத்னம். ஒரு குறிப்பிட்ட நாளில் குறிப்பிட்ட நேரத்தில் ஒரே நேர்கோட்டில் வருகிறார்கள் மூன்று இளைஞர்கள். அந்த மூவரும் அதுவரை சந்தித்துக் கொண்டதில்லை.

காதலியை அவளது பணி இடத்தில் இறக்கி விட்டுவிட்டுத் திரும்புகிறான் மைக்கேல் (சூர்யா). அமெரிக்காவில் படிக்க உதவித் தொகை கிடைத்தும் இந்தியாவிலேயே தங்கி, அந்நாட்டு அரசியலை மாணவர்களைக் கொண்டு தூயதாக்கத் தயாராகவுள்ள அறிவு ஜீவி அவன். காதல், காமம், குடும்பம், அன்பு, கலை, தேசம் பற்றியெல்லாம் மரபான சிந்தனைகளுக்கு மாற்றான சிந்தனையுடையவன். இவனைச் சுட்டுக் கொல்லும்படி அனுப்பப்பட்டவன் இன்பா (மாதவன்). கட்டிக்கொண்ட மனைவி (மீரா ஜாஸ்மீன்)யின் மீது தீராக்காமமும் அடிதடி வன்முறைமீது ஆறாக்காதலும் கொண்ட குப்பத்து இளைஞன். இந்த இன்பசேகரனின் அண்ணன் குணா (சேகரன்). அமைச்சர் செல்வநாயகத்தின் ஏவலாளி. அமைச்சர் செல்வநாயகம் (பாரதிராஜா) கறுப்புச் சட்டை போட்டபடி வெளியில் உலவும் அரசியல்வாதி. எதிலும் ஆழமான பிடிப்பின்றி, சவடால் மொழி மூலமே பொய்களைப் புனைவுகளாக்கி வீரவுரையாற்றி, டெல்லி அரசியலுக்கு எதிராகத் தமிழ் திராவிட அரசியல் நடத்துபவர். மைக்கேலைக் கொல்லும்படி குணாவின் மூலம் இன்பாவை ஏவிவிட்டவர்.

இடையில் தனது தற்காலிகக் காதலை, நிரந்தரக் காதல் என நம்பும்படி வலியுறுத்தி உரையாடிச் செல்லும் இன்னொரு இளைஞன் அர்ஜுன் (சித்தார்த்). அவனது காதலி மீரா (த்ரிஷா). பைக்கில் வந்த மைக்கேலை, ஜீப்பில் வந்த இன்பா சுட்டுத்தள்ள, நடந்து வந்த அர்ஜுன் அதைப் பார்க்கிறான். தனக்கு லிஃப்ட் கொடுத்து உதவியவன் சுட்டுத்தள்ளப்பட, பார்த்தவன் என்ன செய்கிறான் என்பதை மூன்று திருப்புக் காட்சிகள் (Flash back) மூலம் சொல்கிறார் இயக்குநர். அம்மூன்று இளைஞர்களின் கடந்த கால வாழ்வில், தமிழ்ச் சமூகத்தின் அரசியல் கண்ணிகள் எவ்வாறு ஊடும்பாவுமாக இழையோடுகின்றன என்பதையும் காட்டி விடுகிறார்.

இந்த ஆய்த எழுத்தின் பின்னணியில் நடப்பு அரசியலின் சுயநலமும், இலக்கற்ற வெற்று கோஷங்களும், அதிகார வெறியும், விஷயங்களை மொண்ணையாகப் புரிந்து கொள்ளும் மௌடீகமும் உள்ளன என்பதைக் காட்டி அவை வென்றெடுக்கப்பட வேண்டியவை எனவும் முன்மொழிகிறார் இயக்குநர். மாற்றத்தைக் கொண்டு வரப்போவது அதிபுத்திசாலித்தனம் நிரம்பிய மாணவர் தலைமைதான் எனக் கைகாட்டுகிறார் மணிரத்னம். இந்தக் கைகாட்டுதல்தான் பார்வையாளர்களின் நம்பிக்கையைப் பெறத் தக்கதாக இல்லை.

நெய்க்காரன்பட்டிப் பஞ்சாயத்து இடைத் தேர்தலில் ஒரு பெண்ணை நிறுத்தி வெற்றிபெறச் செய்வது போலவே சட்டமன்ற _ நாடாளுமன்றத் தேர்தல்களையும் கணித்துச் செயல்படும் அப்பாவித்தனமான மாணவர்களை இந்தியாவின் தலைவிதியை மாற்றும் வல்லமை படைத்தவர்கள் எனக் கைகாட்டும் மணிரத்னமும் வசனகர்த்தா சுஜாதாவும், இவ்வளவு அப்பாவித்தனமாக யோசிப்பவர்கள் அல்ல என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். அது தெரியாமல் இருந்தால், இவையெல்லாம் வெறும் சினிமா, பார்வையாளர்களைக் கவர்வதற்கான கதைப்பின்னல் மட்டும்தான் எனக் கருதிப் படத்தைப் பார்த்துவிட்டு வந்துவிடலாம். ஆனால் அவ்வளவு சுலபமாக ஒதுக்கிவிட முடியாதபடி வேறொன்றையும் கலந்தே கொடுத்துள்ளது படம். அரசியல்வாதிகள்தான் எல்லாவற்றிற்கும் காரணம் எனச் சொல்லும், அருள் போன்ற பொத்தாம் பொதுவான படமாக இல்லாமல், அரசியல் விமரிசனத்தை வேறொரு வஸ்துவுடன் கலந்து தரவேண்டும் எனத் தீர்மானித்து எடுக்கப்பட்டுள்ள படம் ஆய்த எழுத்து. மருந்தைக் கலந்து கொடுப்பதுபோல என்றொரு பழமொழி தமிழில் உண்டு. அரசியல் என்னும் மருந்தைத் தனக்குள் கொண்டுள்ள அந்தத் தேன், பாலியல் இன்பத்தைத் தூண்டும் காட்சிகள்தான். போதையில் தனது உடலை மிதக்கச் செய்ய விரும்பும் மனிதன் விரும்புவது மது அல்லது கஞ்சா. இந்த வஸ்துக்கள் மனித உடலைத் தற்காலிகமாக வேறொரு பிரக்ஞைக்குள் கொண்டு போய்விட்டுத் திரும்பவும் தன்னுணர்வுக்குத் திருப்பிவிடும் இயல்புடையன. அந்த உடலையே போதைப் பொருளாக்கிவிட்டால், என்ன விளைவுகள் ஏற்படும்?

தமிழ்நாட்டின் அரசியல் நடைமுறைகளும், செயல்பாடுகளும் மாற்றப்பட வேண்டுமென்று லட்சியம் பேசும் ஒரு படத்தில் ஆண் உடலும் பெண் உடலும் போதையின் களன்களாகக் காட்டப்படும் நோக்கம் என்னவாக இருக்கமுடியும் என்று கேட்டுப் பாருங்கள். வெளியில் அடிதடியும் கோபமும் கொண்டவனாகக் காட்டப்படும் இன்பா, மனைவியிடம் காட்டுவதைக் காதல் என்றோ காமம் என்றோ வகைப்படுத்திவிட முடியாது. முரட்டுத்தனமான காமம் என்று வகைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பது இயக்குநரின் விருப்பம். த்ரிஷாவை சித்தார்த் சந்திக்கும் டிஸ்கொதோ ஒரு மென்பொருள் என்றால், அவர்கள் இருவரும் கடற்கரையில் சந்தித்துக் கட்டிப் புரள்வது வன்பொருள் நிலைதான். மிகத்துல்லியமாக உடலில் ஒட்டியிருக்கும் ஒரு சிறு மணற்துளியையும் நீர்த்திவலையையும் தனித்துக் காட்டிவிடும் காமிராவின் கோணங்கள், பெண்ணுடலையும் ஆணுடலையும் தனித்தனியேயும் இணைத்தும் திரை முழுக்க விரிக்கும்பொழுது பார்வையாளன், குறிப்பாக யுவதியாகவும் இளைஞனாகவும் இருக்கும் பார்வையாளன் அடைவது தன்னை மறக்கும் நிலையாகத்தானே இருக்கமுடியும்? அரசியலைத் தூய்மையாக்கப் போவதாகச் சூளுரைக்கும் மைக்கேல் வசந்தும் கூடத் தனது காதலியின் மேலாடையைக் கிழித்துப் பார்வையாளர்களைக் கிரங்கடிக்கத் தவறவில்லை. அதிபுத்திசாலி மாணவர்களின் லட்சியப் பயணத்தில் யுவதிகளின் பணி தனது உடலின் மூலம் போதையேற்றுவது மட்டும்தான் போலும்! மணிரத்னம், உன்னதமான அரசியலை, காமமயக்கத்தில் ஆழ்த்திய நிலையில், ஆழ்மனத்திற்குள் புகுத்திவிடும் முறையியலை இப்படத்தில் பரிசோதனை செய்திருக்கிறார் என்றே நினைக்கத் தோன்றுகிறது.

முடிவாகச் சில கேள்விகள்...

கடந்த முப்பத்தைந்து ஆண்டுகளாக ஆட்சியதிகாரத்தில் உள்ள திராவிட இயக்க அரசியலை வீழ்த்த நினைப்பவர்கள், நேரடியாகக் காட்சிகளை அமைத்துப் படம் எடுக்கத் தயங்குவதும், மறைத்து மறைத்துப் பேசுவதும் கலையியல் சார்ந்த சங்கதிகள்தானா அல்லது பயம் கலந்த தவிர்ப்பா?

காமத்தின் வழியான பயணமோ, போதையின் வழியான தேடலோ உன்னதத்தைத் தரும் என்பது தனிநபர் சார்ந்த சித்தாந்தம்தானே; அதனை அரசியல் போன்ற வெகுமக்கள் சார்ந்த நடைமுறைக்குப் பயன்படுத்த முடியுமா?

மாற்று அமைப்புகளையோ, இயக்க நடைமுறைகளையோ, அரசியல் தத்துவத்தையோ அடையாளங்காட்டாமல், புத்திசாலி மாணவர்கள் என்று அடையாளம் காட்டுவது, திராவிட அரசியலுக்கு எதிராகப் பிராமணீய மறுஉயிர்ப்புதான் என்று சொல்ல வாய்ப்பிருக்கிறது என்பதை மணிரத்னம் அறியாதவரா? பிராமணீய மறுஉயிர்ப்பு இந்தியாவில் இனி சாத்தியம்தானா?

ஹார்டுவேடுப் பல்கலைக்கழகப் பட்டதாரியும் பேராசிரியருமான சுப்பிரமணிய சுவாமி அதிபுத்திசாலிதான். அவரது அரசியல் மாதிரியைத்தான் மணிரத்னம் பரிந்துரைக்கிறாரா?

தீராநதி

Print this item

  எனக்கே எனக்காக.......!
Posted by: tamilini - 07-17-2004, 04:00 PM - Forum: கவிதை/பாடல் - Replies (13)

<i><b>எனக்கே எனக்காக.......!</b></i>

எனக்காக உயிர் வாழ
என் உள்ளம் தனையாள
எனக்கே எனக்காக
ஒரு உறவுக்காய்...

சொல்லும் முன்னே புரிந்திட
அழும் முன்னே அணைத்திட
அன்பாக கோவிக்க
ஒரு உறவுக்காய்....

என்னை மட்டும் பார்த்திருக்க
என்னுடன் மட்டும் பேசிக் கொள்ள
எனக்கு ஒரு உலகாக
ஒரு உறவுக்காய்....

கண்கள் மட்டும் பேசிக்க
பொடிநடையாய் உலகை சுற்றி வர
என்னுடன் கூட வர
ஒரு உறவுக்காய்...

நாட்கள் முடியாமல்...
வயதுகள் கூடாமல்...
பல காலங்கள் என்னுடன் வாழ
ஒரு உறவுக்காய்.....

வாழ்த்திட வார்த்தை இன்றி
அனைவரும் பார்த்திருக்க...
உரிமையாய் நான் கை பிடிக்க...
ஒரு உறவுக்காய்...

அன்பால் எனையாழ
அவளுக்காய் நான் வாழ
எனக்கே எனக்காக
ஒரு உறவுக்காய்
காத்திருக்கிறேன்...
இனியவளின் வரவுக்காய்.....!

கற்பனை மட்டுமே.....!

Print this item

  விவேக் &amp; த்ரிஷா
Posted by: வெண்ணிலா - 07-17-2004, 11:22 AM - Forum: சினிமா - Replies (4)

<b>"சாமி" மாமியை சின்னக் கலைவாணர் விவேக் சந்தித்து அவர் பாணியில் பேட்டியெடுத்தால் எப்படியிருக்கும்................................</b>

<b>விவேக்:</b> வணக்கம மாமி. ஸாரி…மேடம். நீங்க ஒல்லியா இருந்தாலும் நடிப்புல "கில்லி"யா இருக்கீங்க. இந்த சொத்தைய ஐ மீன் வித்தைய எங்க கத்துக்கிட்டீங்கனு கொஞ்சம் தமிழ்ல சொல்லமுடியுமா?

<b>த்ரிஷா:</b>முடிப்பதங்கு முன் குறுக்கிடுகிறார் விவேக்)

<b>விவேக்: </b> ஆக்சுவலி... தலைவலி எல்லாம் தேவையா? அதுதான் வாங்கி கட்டிக்கிட்டீங்கள்ல…. அப்புறமென்ன? ஆக்சுவலியை வுட்டுட்டு. தமிழ்..தமிழ்..

<b>த்ரிஷா: </b>
<b>விவேக்: </b> தமிழ்ல பேசுறேன்னு சொல்றீங்க.. அப்புறம் என்ன ஓ.கே.. ஓ.கே..? சரி.. சரி.. இப்படியே நேரத்தை வீணாக்காம வயத்துக்கு வருவோம். நீங்க நடிக்க வந்தது எப்படி?

<b>த்ரிஷா:</b>

<b>விவேக்:</b> அப்படின்னா...தயாரிப்பாளர் யாராவது உங்க மீது காரை ஓட்டிட்டாங்களா? இல்ல நீங்க தயாரிப்பாளர் மீது மோதிட்டீங்களா?

<b>த்ரிஷா:</b>
<b>விவேக்:</b> இத முன்னாடியே சொல்லியிருக்கலாம்ல அதவுட்டுட்டு விபத்து ஆபத்துன்னு ஏன் பயமுறுத்துறீங்க. அதென்ன சாபமோ தெரியலை. சினிமாவுல ஹீரோவாகணும் டைரக்டர் ஆகணும்னு வர்றவங்க ஏகப்பட்ட கஷ்டப்பட்டு எலும்புக்கூடாகி அப்புறமா வாய்ப்பு கிடைச்சு ஜெயிக்கிறாங்க. ஆனா உங்கள மாதிரி கதாநாயகியாக வர்றவங்களுக்கெல்லாம் இந்த கஷ்டமெல்லாம் தெரியாமலேயே நடிகையாக வளர்ந்த பிறகு நடிக்க வந்தது தற்செயலான சம்பவம்னு சொல்றீங்க.

<b>த்ரிஷா:</b>

<b>விவேக்:</b> சொல்லுங்க சிஸ்டர்...

<b>த்ரிஷா:</b>
<b>விவேக்:</b> யாரு சினிமா எடிட்டர் பி. லெனின்ட்டயா இல்ல வி;.பி. விஜயன்ட்டயா?

<b>த்ரிஷா:</b>
<b>விவேக்:</b> என்ன மேடம்.. போலீஸ்காரங்க ஒயர் லெஸ்ல பேசுற மாதிரி ஓவர் ஓவர்னு ஓவரா சொல்றீங்க.

<b>த்ரிஷா:</b>.

<b>விவேக்: </b> கேட்குறேன் கேட்குறேன். "நியூ" பட விழாவில் டி. ஆர். உங்களை தமிழ்ல பேச சொல்லி அட்வைஸ் பண்ணப்ப சிம்புவோடு அப்படியென்ன அரட்டை அடிச்சிக்கிட்டு இருந்தீங்க.

<b>த்ரிஷா</b>.

<b>விவேக்:</b> நான் மூக்க நுழைக்கிற அளவுக்கு "அசைவமா?" அதாவது மீன் குழம்பு கறிக்குழம்பான்னு கேக்குறேன். நீங்க பப்ளிக்குக்கு வந்துவிட்டீங்க. அதனால நாங்களும் பப்ளிக்காதான் கேள்வி கேட்போம். சரி! அதவிடுங்க. கிசுகிசுவில் சிக்குவீங்களே அதபத்தி என்ன நினைக்கிறீங்க?

<b>த்ரிஷா:</b>
<b>விவேக்:</b> இப்படித்தான் ஆரம்பத்துல எல்லா நடிகைகளும் அடக்கி வாசிப்பாங்க. கிளைமாக்ஸ்ல பாத்தா காதலுக்காக காம்பவண்ட் ஏறிக் குதிச்சு வந்து கூட கல்யாணம் பண்ணிக்குவாங்க. கல்யாணத்துக்குப் பிறகு கசந்து விவாகரத்து வாங்கறதும் இப்ப லேட்டஸ்ட் ஃபேஷனா போச்சு.

<b>த்ரிஷா: </b>

<b>விவேக்: </b> நான் ஒண்ணும் இஷ்டத்துக்கு பேசல. நீங்க இஷடப்படுறது யாரைன்னுதான் கேட்குறேன்.

<b>த்ரிஷா: </b>

<b>விவேக்: </b> அத நீங்களே வச்சுக்குங்க. அப்புறம் ஒரு முக்கியமான மேட்டரு. உடம்ப இவ்வளவு மெலிசா சீவி வச்சுருக்கீங்களே. ஸாரி.. ஸாரி.. சீரா வச்சுக்கீங்களே தயாரிப்பாளர் செலவுல எதுவும் சாப்பிடுறது இல்லையா?

<b>த்ரிஷா:</b>
<b>விவேக்:</b> இதுக்கு பேரு ஸ்லிம் இல்ல. அம்புட்டும் வினை மாதிரி தெரியுது

<b>த்ரிஷா:</b>

<b>விவேக்:</b> ஒண்ணுமில்ல… உங்க குரல் வீணை வாசிக்கிறது மாதிரி இருக்குன்னு சொல்ல வந்தேன். டங்க் ஸ்லிப்பாகி வினை ன்னு சொல்லி விட்டேன். வர வர தெலுங்கு படத்துக்கு நிறைய கால்ஷீட் தர்றீங்களே என்ன காரணம்?

<b>த்ரிஷா:</b>

<b>விவேக்: </b> அது உண்மையில்லைன்னு நான் சொல்றேன் தெலுங்குகாரு நிறைய சம்பளம் தர்றதுனால காரு பங்களான்னு நிறைய துட்டு பார்க்கலாங்கிற பேராசை...ஆம் ஐ கரெக்ட்

<b>த்ரிஷா:</b>
<b>விவேக்:</b> உங்குளுக்கு "சாமி" பிடிக்குமா? நான் கேக்குறது விக்ரம் இல்ல...தெய்வம்

<b>த்ரிஷா:</b>
<b>விவேக்:</b> சிம்ரன் சீட்ட நீங்க பிடிச்சுட்டாதா நினைக்கிறீங்களா?

<b>த்ரிஷா:</b>

<b>விவேக்:</b> இந்த மேட்டர கடைசி வரை ஞாபகம் வச்சுக்க நிறைய வல்லாரை சாப்பிடுங்க. இல்லைன்னா உங்களுக்கு சீட்டே இருக்காது. அப்புறம் நான் வந்து ரொம்ப நேரமாச்சு. இன்னும் கொஞ்சம் லேட்டானா அப்புறம் என்னோட சீட்ட கிழிச்சிருவாங்க… மாமி அப்ப நான் வரட்டுமா?
<b>த்ரிஷா:</b>

Print this item

  உண்மை அன்பு வேண்டின்....
Posted by: kuruvikal - 07-17-2004, 02:37 AM - Forum: கவிதை/பாடல் - Replies (13)

<img src='http://kuruvikal.yarl.net/archives/catcat.jpg' border='0' alt='user posted image'>

ஏய் பூனைக்குட்டி
எதற்காய் வாய் பிளக்கிறாய்...
நீயும் தாய்ப்பால் மறந்து
"கற் பூட்டோடு"
ஐக்கியமாகி விட்டாயோ...?!
கவனம் ரின்னோடு
விழுங்கிடப் போகிறாய்....!

பாவம் அன்னை....
பாலோடு தன்னன்பூட்டத் தவிக்க
நீயோ ரின்னோடு கட்டிப்புரள்கிறாய்...!
மானிடர் தான்
தாய் அன்பு பகிராது
பதர்களாகின்றார் என்றால்
அவருடன் கூடி நீயுமா...???!
இந்தச் சந்தோசம் நிலைக்காது...
அன்னை மடியில் பால் குடித்து வா
அன்பு என்னவென்று உணர்வாய்
நன்கே வளர்ந்த பின்னும்....!

தாய் அன்பின் மகிமை
அகிலம் அறிவது
தாய்ப்பால் கண்டுமே
இந்த உண்மை
நீயும் உணர வேண்டும்
உண்மை அன்பு வேண்டின்....!

நன்றி... http://kuruvikal.yarl.net/

Print this item

  சுவிஸில் ஈழத்து தமிழ் அரங்கில் பெண்
Posted by: AJeevan - 07-17-2004, 02:32 AM - Forum: நூற்றோட்டம் - No Replies

<span style='font-size:22pt;line-height:100%'>
<b>ஈழத்து தமிழ் அரங்கில் பெண்</b>
<img src='http://www.yarl.com/forum/files/thumbs/t_jaya._book.jpg' border='0' alt='user posted image'>
<b>சுவிஸில் நூல் வெளியீட்டு விழா</b>

சங்க காலச் சமூக அமைப்பிலிருந்து படிப்படியாக மாற்றம் பெறும் அரங்க நிகழ்வுகளைப் பெண் என்ற தளத்தில் இந்நூல் விவாதிக்கிறது.

மேல் குறித்த விவாதங்களை வெளிப்படுத்துவதற்கு அடிப்படையாகப் பெண் என்ற கருத்து நிலை குறித்த விளக்கங்களையும் அக்கருத்து நிலை அரங்கில் தொழில்படும் பாங்கினையும் முன்னோட்டமாக இந்நூல் பதிவு செய்துள்ளது.

கோட்பாடு சார்ந்த பயன்படுத்தம் பயன்படுத்துவதற்கு அடிப்படையாகவுள்ள இலக்கியப் பிரதிகள் என்ற முறைப்படுத்தப்பட்ட அனுகுமுறையில் இவ் ஆய்வு உருவாக்கப் பெற்றிருப்பதைக் காண முடியும்.

சர்வதேச நிலையில் அமைந்த பெண்நிலைவாதம் என்ற கருத்து நிலையைச் சார்ந்து தமிழ் அரங்கில் தொழில்படும் பெண்நிலைவாத அரங்கத்தைக் கண்டறியும் முயற்சியாக அமையும் இந்நூலின் பல்வேறு தன்மைகளைத் தொகுத்துக் கொள்ள முடியும்.

<i>- பேராசிரியர் வீ.அரசு
சென்னை பல்கலைக் கழகம்</i>


<img src='http://www.yarl.com/forum/files/thumbs/t_jaya.1.jpg' border='0' alt='user posted image'>

<b>நூல் வெளியீட்டு விழா</b>
<b> 25.07.2004
மாலை. 15.00 மணிக்கு
சுவிஸ் சூரிச் பொல்க் ஹவுஸ்
மண்டபத்தில் </b>

மேலதிக விபரங்களுக்கு : 0041 (0)62 923 13 11
kriap@yahoo.com
</span>

Print this item

  பிரான்ஸ், குறும்பட மாலை
Posted by: AJeevan - 07-17-2004, 01:36 AM - Forum: குறும்படங்கள் - Replies (16)

<b><span style='font-size:25pt;line-height:100%'>குறும்பட மாலை - கோடை 2004
வில்தனூஸ் - பிரான்ஸ்</b></span>

17.07.2004 சனி 16:00 மணி - 19:00 மணி

La salle Motricite de l'ecole J.B.
4 Place J.B. Clement
93430 VILLETANEUSE
Devant la Poste - Villetaneuse
Bus: 256 (Eglise de Villetaneuse). 356/354 (la Piscine)


+ பிரித்தானியா - அஜீவன் [அழியாத கவிதை]
+ பிரான்சு - ஓசை மனோ [தாகம்]
+ ஜேர்மனி - கலைக்கண் பாலராஜா [கனவுகள்]
+ சுவிஸ் - அஜீவன் [எச்சில் போர்வை]
+ பிரான்சு - வதனன் [விலாசம்]
+ சுவிஸ் - அஜீவன் [நிழல் யுத்தம்]

புகலிடத்திலும் தன் திரைப் பணியைத் தொடரும்
மூத்த கலைஞன் இரகுநாதன் கெளரவிப்பு
கலந்துரையாடல் - திரை இரசனை


நன்றி:
ஈழவர் சினி ஆர்ட்ஸ் எஸ்.ஜே.ஜோசெப்.
திரைக்கலை ஆர்வலர் அஜீவன், வதனன்
மற்றும் புகலிடத் தமிழ்திரை வளர்ச்சியில்
அயராத ஒத்துழைப்பைத் தரும் சமுக ஆர்வலர்கள்

பாரீஸ் தமிழர் சினிமாக்கலை இரசனை மன்றம்
198 Avenue de la division Leclerc, 93260 Villetaneuse, France

தொடர்பு: kmukunthan@hotmail.com
ஒத்துழைப்பு: www.appaal-tamil.com

Thanks: http://www.appaal-tamil.com/index.php?opti...&id=74&Itemid=2

Print this item

  என்னவளே நின் முகம்தான் தெரியுதெடி
Posted by: Mayuran - 07-17-2004, 12:34 AM - Forum: கவிதை/பாடல் - Replies (4)

இன்று இடைவேளையின் போது கிறுக்கியது. உங்கள் கருத்துக்காக முன் வைக்கின்றேன்.

சித்திரையில் வந்துதித்த
சித்திரமே - என்
நித்திரையிலும்
நிழலாக வருபவளே!
முத்திரையாய் - உன்
முகம்தான் என் நெஞ்சுக்குள்
எத் திரையில் பார்த்தாலும்
என்னவளே நின் முகம்தான் தெரியுதெடி

Print this item

  மேஜர் பாரதியின் &quot;காதோடு சொல்லிவிடு&quot;
Posted by: tamilini - 07-16-2004, 09:34 PM - Forum: கவிதை/பாடல் - Replies (3)

என் இனிய தேசமே

என் இனிய தேசமே!
குறிப்பெடுத்துக் கொள்@
எரியுண்டு
சிதையுண்டு போன
என் தேசத்தின்
காப்பகழி ஒன்றில்
எழுகின்ற
உணர்வு அலைகளை
குறிப்பெடுத்துக் கொள்.
இந்தத் தேசத்தை
எப்படி நான்
நேசித்தேன் என்று
தெரிளுமா உனக்கு?
என் தலைமையை
எப்படி நான்
தெரிந்தெடுத்தேன் என்று
தெரியுமா உனக்கு?
கீழ்வானம் எமக்கு
எப்பபோது சிவக்கும்?
என் இதயத்தின் துடிப்பிது.
கேட்கிறதா உனக்கு?
என்னால்
விளங்கப்படுத்த முடியவில்லை.
ஆனாலும்
என் தேசமே
குறிப்பெடுத்துக் கொள்.
இன்னும்
என்
அம்மா என்ற பெயரில்
உறிரோடு உலாவும்
உலும்புக் கூட்டை
நீ
கண்டிருக்கிறாயா?
ஆம்! கண்டிருப்பாயானால்
நடைப்பிணமாய்த் திரியும்
அதன் கால்கள்
நிச்சயம்
உன் மடியில்
பதிந்திருக்கும்.
வாழ்வின்
பற்றுக்கோட்டினை
தேடி அலையும்
இந்த எலும்புக்கூடு
தி;னம் தினம்
என் நினைவில்
வந்து போனாலும்
இன்னும் எதன்மீது
அன்பு செலுத்துகிறேன்
தெரியுமா உனக்கு?
தெரிந்துகொள்.
உன்மீதுதான்.
இருண்டு போயிருக்கும்
என் தேசத்தில்
எற்றப்படும்
விடுதலைத் தீபத்துக்கு
என் உயிரும்
எண்ணெயாய்
ஊற்றப்பட வேண்டும்.
குறிப்பெடுத்துக் கொள்.
என் தேசமே
குறிப்பெடுத்துக் கொள்.

மேஜர் பாரதியின் "காதோடு சொல்லிவிடு"

கவிமூலம்.... ஈழம் வெப்...

Print this item

  பயங்கரத் தீ விபத்து - 80 குழந்தைகள் பலி
Posted by: kuruvikal - 07-16-2004, 04:26 PM - Forum: செய்திகள்: உலகம் - Replies (58)

<img src='http://www.thatstamil.com/images23/children7-240.jpg' border='0' alt='user posted image'>

<img src='http://www.thatstamil.com/images23/children5-260.jpg' border='0' alt='user posted image'>

கும்பகோணத்தில் ஒரு தனியார் பெண்கள் பள்ளியில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 80 க்கும் மேற்பட்ட ஆரம்பப் பள்ளி மாணவிகள் உடல் கருகி பரிதாபமாக உயிழந்தனர்.

நூற்றுக்கும் அதிகமான குழந்தைகள் பலத்த தீக் காயங்களுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 75 குழந்தைகளின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. இதில் பல உடல்கள் கரிக்கட்டைகளாகிவிட்டன. பல அடையாளம் தெரியாத அளவுக்கு எரிந்து போய்விட்டன.

இறந்த குழந்தைகள் அனைவரும் 1 முதல் 5ம் வகுப்பு படிக்கும் 10 வயதுக்கு உட்பட்ட மாணவிகள்.

கும்பகோணம் காசிராமன் தெருவில் பகவான் கிருஷ்ணா பெண்கள் தொடக்கப் பள்ளி மற்றும் உயர் நிலைப் பள்ளி, சரஸ்வதி ஆரம்பப் பள்ளிகள் உள்ளன. இரண்டு மாடிக் கட்டடத்தில் இவை அமைந்துள்ளன.

தரைத் தளத்தில் உயர் நிலைப் பள்ளி வகுப்புகளும், முதல் தளத்தில் நடுநிலைப் பள்ளி வகுப்புகளும், அதன் மேல் கூரையால் வேயப்பட்ட மேல் தளத்தில் சரஸ்வதி ஆரம்பப் பள்ளியின் வகுப்புகளும் இயங்கி வருகின்றன.

மூன்று தளத்திலும் சேர்த்து சுமார் 900 மாணவிகள் படித்து வருகின்றனர். கூரை வேயப்பட்ட ஆரம்பப் பள்ளியில் 1 முதல் 5ம் வகுப்பு வரையிலான மாணவிகள் படித்து வந்தனர்.

இந்தக் கட்டடத்தின் மிக அருகே பள்ளியின் சத்துணவுக் கூடம் உள்ளது. இங்கிருந்து கிளம்பிய தீப் பொறிகள் மேல் தளத்தில் உள்ள கூரையில் விழுந்தன. பலத்த காற்றும் வீசியதால் காலை 11.30 மணியளவில் அந்தக் கூரையில் தீப் பிடித்துக் கொண்டது.

கட்டடத்தின் மேல் தீப் பிடித்துக் கொண்டதைப் பார்த்த சில மாணவிகள் கூச்சல் போடவே, தரைத் தளத்திலும், முதல் தளத்திலும் இருந்த நடுநிலைப் பள்ளி, உயர் நிலைப் பள்ளி மாணவிகள் வேகமாக வகுப்புகளை விட்டு வெளியே ஓடி வந்துவிட்டனர்.

ஆனால், மேல் தளத்தில் இருந்த 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை பயிலும் 8, 10 வயதுக்குட்பட்ட குழந்தைகளால் உடனே ஓட முடியவில்லை. தங்கள் தலைக்கு மேல் தீ எரிவதைக் கண்ட பிஞ்சுகள் தப்பிக்க முயலவில்லை.

இந் நிலையில் கூரை முழுவதும் தீ பரவி, முழுக் கூரையும் தீயுடன் அப்படியே மாணவிகள் மீது விழுந்துள்ளது. இதனால் பல மாணவிகள் அந்த இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

சிறுமிகள் கதறித் துடித்துக் கொண்டிருக்க, மளமளவென எல்லா பக்கமும் பரவியுள்ளது. இதில் நூற்றுக்கணக்கான மாணவிகளும் ஆசிரியர்களும் சிக்கிக் கொண்டனர்.

வகுப்பறைகளில் இருந்து வெளியேறும் வழியும், மாடிப் படிகளும் மிகக் குறுகலாக இருந்ததால் நெருக்கியடிக்குக் கொண்டு ஓடி வந்த மாணவிகளும் நிலை தடுமாறி விழுந்தனர். அதற்குள் தீயின் நாக்குகள் பரவியதாலும், புகை மூட்டம் ஏற்பட்டதாலும் மாணவிகள் மயங்கி விழ, தொடர்ந்து வந்த தீக்கு பலியாகிவிட்டனர்.

தீ பரவியதும் குழந்தைகளைக் காப்பாற்ற முயன்று தோற்ற ஆசிரியர்கள் காயங்களுடன் தப்பிவிட்டனர். (முன்னதாக சில ஆசிரியர்களும் பலியானதாக தகவல்கள் வந்தன. ஆனால், அதை மாவட்ட கலெக்டர் ராதாகிருஷ்ணன் மறுத்தார்).

தீயணைப்புப் படையினர் தகவல் அறிந்து விரைந்து வந்து தீயை அணைக்க பள்ளிக்குள் நுழைய முயன்றனர். ஆனால் தீ மிக பயங்கரமாக எரிந்ததால் தீயணைப்பு வண்டிகளால் உள்ளே நுழைய முடியவில்லை. தீயணைப்பு வீரர்களும் உள்ளே நுழைய முடியாமல் தவித்தனர்.

பின்னர் கிரேன்களின் உதவியால் பள்ளியின் சுவர்களை உடைத்துக் கொண்டு தீயணைப்புப் படையினர் உள்ளே நுழைந்தனர். கும்பகோணம், தஞ்சாவூர், திருவிடைமருதூர், பாபநாசம் உள்ளிட்ட பல்வேறு ஊர்களிலிருந்தும் தீயணைப்பு வண்டிகள் விரைந்து வந்தன.

மிகுந்து சிரமத்துக்குப் பின்னரே தீயை அணைக்கும் பணியை அவர்களால் தொடங்க முடிந்தது. 2 மணி நேர கடும் போராட்டத்துக்குப் பின்னரே தீ அணைக்கப்பட்டது.

ஆனால் அதற்குள் 75க்கும் மேற்பட்ட மாணவிகள் பரிதாபமாக கருகி இறந்துவிட்டனர். தீ எரிந்தபோது ஓடி வந்த பல குழந்தைகளின் பெற்றோர்கள் தீயையும் மீறிக் கொண்டு பள்ளிக்குள் நுழைய முயன்றனர். அவர்களை மற்றவர்கள் தடுத்துவிட்டனர்.

விபத்தில் படுகாயமடைந்த 32 மாணவிகள் கும்பகோணம் மற்றும் தஞ்சாவூர் அரசு மருத்துவமனைகளிலும் மேலும் பல மாணவிகள் பல தனியார் மருத்துவமனைகளிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 5 பேர் பலியானதையடுத்து சாவு எண்ணிக்கை 80 ஆக உயர்ந்துவிட்டது.

பள்ளிக்குள் இருந்து இதுவரை 75 மாணவிககளின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.

அண்டை மாவட்டங்களில் இருந்து அரசு டாக்டர்கள் கும்பகோணத்துக்கு விரைந்துள்ளனர். பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளாதால் உயிர்ப் பலிகள் நூறைத் தாண்டும் என்று அஞ்சப்படுகிறது.

1992ம் ஆண்டு கும்பகோணத்தில் மகாமகத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 60 பேர் பலியாயினர். அதன் பிறகு இந்த கோவில் நகரத்தில் ஏற்பட்டுள்ள மிகப் பெரிய கோர சம்பவம் இது.

thatstamil.com

---------------------------------

<img src='http://newsimg.bbc.co.uk/media/images/40389000/jpg/_40389769_burned203.jpg' border='0' alt='user posted image'>
Rescuers had found it hard to get to the school's top floor (Photo: Senthil Kumar)

<b>India school inferno kills dozens</b>

At least 75 children have died in a fire in a primary school in the southern Indian state of Tamil Nadu.
More than 30 children were admitted to hospital suffering serious burns.

Some 200 children were said to be in the affected primary section of the school in Kumbakonam, 300km (185 miles) south-west of state capital Madras.

The fire will again raise questions of school safety - correspondents say many India schools lack even basic firefighting equipment.

BBC.com

Print this item

  கமலுக்கு டாக்டர் பட்டம்...!
Posted by: kuruvikal - 07-16-2004, 04:04 PM - Forum: சினிமா - Replies (1)

<img src='http://www.thatstamil.com/images23/cinema/kamal400a.jpg' border='0' alt='user posted image'>

நடிகர் கமல்ஹாசனுக்கு சத்யபாமா நிகர்நிலை பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் வழங்கவுள்ளது.

கமல், பிரபு, ஸ்னேகா, பிரகாஷ்ராஜ் ஆகியோர் நடிக்கும் 'வசூல்ராஜா எம்.பி.பி.எஸ்' படத்தின் பாடல் கேசட் விழா சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் நடைபெற்றது.

விழாவில் கமல், ஏவி.எம். சரவணன், பிரபு, கவிஞர் வைரமுத்து, இயக்குநர் சரண், இசையமைப்பாளர் பரத்வாஜ், சத்யபாமா நிகர்நிலை பல்கலைக்கழக துணைவேந்தர் ஜேப்பியார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

ஏவி.எம் சரவணன் கேசட்டை வெளியிட்டார். அதனையடுத்து, கமலின் 44 வருட கலை சேவையைப் பாராட்டி சத்யபாமா பல்கலைக் கழகம் சார்பில் டாக்டர் பட்டம் வழங்கப்படுவதாக ஜேப்பியார் அறிவித்தார்.

பின்னர் கமல் பேசுகையில்,

இங்கு பேசியவர்கள் என்னை சிவாஜியின் கலைவாரிசு என்றார்கள். பிரபு கூட, சிவாஜியின் மூத்த மகன் என்றே என்னைக் குறிப்பிட்டார். இது என்மீது அவர் வைத்திருக்கும் அன்பின் வெளிப்பாடு ஆகும். சிவாஜியின் கலைவாரிசு ஆவதற்கான தகுதிகளை நான் வளர்த்துக் கொள்ள வேண்டும்.

வைரமுத்துவின் பாடல்களைக் கேட்டால் எனக்கு தன்னம்பிக்கை வரும். இந்தப் படத்திலும் அத்தகைய பாடல்களை எழுதியுள்ளார். டாக்டர் பட்டம் எனக்கு வழங்கப்படும் ஒரு பெரிய பொறுப்பு, சுமை. அதை கவனமாகத் தக்க வைத்துக் கொள்வேன் என்றார்.

வைரமுத்து பேசுகையில், கமல் 44 வருடங்களாக சினிமாவுலகில் இருந்து கொண்டு மக்களை மகிழ்வித்துக் கொண்டு வருகிறார். அவருடைய சாதனைகளைத்தான் வெளியுலகம் அறியும். ஆனால், அதற்காக அவர் பட்ட சிரமங்கள் யாருக்கும் தெரியாது. 'வசூல்ராஜா எம்.பி.பி.எஸ்' படத்தை மருத்துவர் குலம் தவறான அணுகுமுறையில் கசப்பான பார்வை பார்க்க வேண்டாம்.

படத்தின் தலைப்பு பாத்திரத்தின் பெயரைத் தான் குறிப்பிடுகிறதேயொழிய, மருத்துவரைக் குறிப்பிடவில்லை என்றார்.

கமல் படத்துக்கு பரத்வாஜ் இசையமைப்பது இதுவே முதல்முறையாகும்.

இதனால் பாடல் கம்போசிங்கின் போது மெட்டுக்களை உற்சாகமாக அள்ளிக் குவித்தாராம் பரத்வாஜ். இயல்பாகவே இசை ஞானம் உள்ளவர்களாக கமலும், இயக்குனர் சரணும் இருப்பதால் பாடல்கள் அனைத்தும் சிறப்பாக வந்துள்ளதாக சொல்கிறார்கள்.

கமலும் இரண்டு பாடல்களைப் பாடியிருக்கிறாராம்.

thatstamil.com

Print this item