![]() |
|
பயங்கரத் தீ விபத்து - 80 குழந்தைகள் பலி - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள்: உலகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=14) +--- Thread: பயங்கரத் தீ விபத்து - 80 குழந்தைகள் பலி (/showthread.php?tid=6929) |
பயங்கரத் தீ விபத்து - 80 - kuruvikal - 07-16-2004 <img src='http://www.thatstamil.com/images23/children7-240.jpg' border='0' alt='user posted image'> <img src='http://www.thatstamil.com/images23/children5-260.jpg' border='0' alt='user posted image'> கும்பகோணத்தில் ஒரு தனியார் பெண்கள் பள்ளியில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 80 க்கும் மேற்பட்ட ஆரம்பப் பள்ளி மாணவிகள் உடல் கருகி பரிதாபமாக உயிழந்தனர். நூற்றுக்கும் அதிகமான குழந்தைகள் பலத்த தீக் காயங்களுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 75 குழந்தைகளின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. இதில் பல உடல்கள் கரிக்கட்டைகளாகிவிட்டன. பல அடையாளம் தெரியாத அளவுக்கு எரிந்து போய்விட்டன. இறந்த குழந்தைகள் அனைவரும் 1 முதல் 5ம் வகுப்பு படிக்கும் 10 வயதுக்கு உட்பட்ட மாணவிகள். கும்பகோணம் காசிராமன் தெருவில் பகவான் கிருஷ்ணா பெண்கள் தொடக்கப் பள்ளி மற்றும் உயர் நிலைப் பள்ளி, சரஸ்வதி ஆரம்பப் பள்ளிகள் உள்ளன. இரண்டு மாடிக் கட்டடத்தில் இவை அமைந்துள்ளன. தரைத் தளத்தில் உயர் நிலைப் பள்ளி வகுப்புகளும், முதல் தளத்தில் நடுநிலைப் பள்ளி வகுப்புகளும், அதன் மேல் கூரையால் வேயப்பட்ட மேல் தளத்தில் சரஸ்வதி ஆரம்பப் பள்ளியின் வகுப்புகளும் இயங்கி வருகின்றன. மூன்று தளத்திலும் சேர்த்து சுமார் 900 மாணவிகள் படித்து வருகின்றனர். கூரை வேயப்பட்ட ஆரம்பப் பள்ளியில் 1 முதல் 5ம் வகுப்பு வரையிலான மாணவிகள் படித்து வந்தனர். இந்தக் கட்டடத்தின் மிக அருகே பள்ளியின் சத்துணவுக் கூடம் உள்ளது. இங்கிருந்து கிளம்பிய தீப் பொறிகள் மேல் தளத்தில் உள்ள கூரையில் விழுந்தன. பலத்த காற்றும் வீசியதால் காலை 11.30 மணியளவில் அந்தக் கூரையில் தீப் பிடித்துக் கொண்டது. கட்டடத்தின் மேல் தீப் பிடித்துக் கொண்டதைப் பார்த்த சில மாணவிகள் கூச்சல் போடவே, தரைத் தளத்திலும், முதல் தளத்திலும் இருந்த நடுநிலைப் பள்ளி, உயர் நிலைப் பள்ளி மாணவிகள் வேகமாக வகுப்புகளை விட்டு வெளியே ஓடி வந்துவிட்டனர். ஆனால், மேல் தளத்தில் இருந்த 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை பயிலும் 8, 10 வயதுக்குட்பட்ட குழந்தைகளால் உடனே ஓட முடியவில்லை. தங்கள் தலைக்கு மேல் தீ எரிவதைக் கண்ட பிஞ்சுகள் தப்பிக்க முயலவில்லை. இந் நிலையில் கூரை முழுவதும் தீ பரவி, முழுக் கூரையும் தீயுடன் அப்படியே மாணவிகள் மீது விழுந்துள்ளது. இதனால் பல மாணவிகள் அந்த இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். சிறுமிகள் கதறித் துடித்துக் கொண்டிருக்க, மளமளவென எல்லா பக்கமும் பரவியுள்ளது. இதில் நூற்றுக்கணக்கான மாணவிகளும் ஆசிரியர்களும் சிக்கிக் கொண்டனர். வகுப்பறைகளில் இருந்து வெளியேறும் வழியும், மாடிப் படிகளும் மிகக் குறுகலாக இருந்ததால் நெருக்கியடிக்குக் கொண்டு ஓடி வந்த மாணவிகளும் நிலை தடுமாறி விழுந்தனர். அதற்குள் தீயின் நாக்குகள் பரவியதாலும், புகை மூட்டம் ஏற்பட்டதாலும் மாணவிகள் மயங்கி விழ, தொடர்ந்து வந்த தீக்கு பலியாகிவிட்டனர். தீ பரவியதும் குழந்தைகளைக் காப்பாற்ற முயன்று தோற்ற ஆசிரியர்கள் காயங்களுடன் தப்பிவிட்டனர். (முன்னதாக சில ஆசிரியர்களும் பலியானதாக தகவல்கள் வந்தன. ஆனால், அதை மாவட்ட கலெக்டர் ராதாகிருஷ்ணன் மறுத்தார்). தீயணைப்புப் படையினர் தகவல் அறிந்து விரைந்து வந்து தீயை அணைக்க பள்ளிக்குள் நுழைய முயன்றனர். ஆனால் தீ மிக பயங்கரமாக எரிந்ததால் தீயணைப்பு வண்டிகளால் உள்ளே நுழைய முடியவில்லை. தீயணைப்பு வீரர்களும் உள்ளே நுழைய முடியாமல் தவித்தனர். பின்னர் கிரேன்களின் உதவியால் பள்ளியின் சுவர்களை உடைத்துக் கொண்டு தீயணைப்புப் படையினர் உள்ளே நுழைந்தனர். கும்பகோணம், தஞ்சாவூர், திருவிடைமருதூர், பாபநாசம் உள்ளிட்ட பல்வேறு ஊர்களிலிருந்தும் தீயணைப்பு வண்டிகள் விரைந்து வந்தன. மிகுந்து சிரமத்துக்குப் பின்னரே தீயை அணைக்கும் பணியை அவர்களால் தொடங்க முடிந்தது. 2 மணி நேர கடும் போராட்டத்துக்குப் பின்னரே தீ அணைக்கப்பட்டது. ஆனால் அதற்குள் 75க்கும் மேற்பட்ட மாணவிகள் பரிதாபமாக கருகி இறந்துவிட்டனர். தீ எரிந்தபோது ஓடி வந்த பல குழந்தைகளின் பெற்றோர்கள் தீயையும் மீறிக் கொண்டு பள்ளிக்குள் நுழைய முயன்றனர். அவர்களை மற்றவர்கள் தடுத்துவிட்டனர். விபத்தில் படுகாயமடைந்த 32 மாணவிகள் கும்பகோணம் மற்றும் தஞ்சாவூர் அரசு மருத்துவமனைகளிலும் மேலும் பல மாணவிகள் பல தனியார் மருத்துவமனைகளிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 5 பேர் பலியானதையடுத்து சாவு எண்ணிக்கை 80 ஆக உயர்ந்துவிட்டது. பள்ளிக்குள் இருந்து இதுவரை 75 மாணவிககளின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. அண்டை மாவட்டங்களில் இருந்து அரசு டாக்டர்கள் கும்பகோணத்துக்கு விரைந்துள்ளனர். பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளாதால் உயிர்ப் பலிகள் நூறைத் தாண்டும் என்று அஞ்சப்படுகிறது. 1992ம் ஆண்டு கும்பகோணத்தில் மகாமகத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 60 பேர் பலியாயினர். அதன் பிறகு இந்த கோவில் நகரத்தில் ஏற்பட்டுள்ள மிகப் பெரிய கோர சம்பவம் இது. thatstamil.com --------------------------------- <img src='http://newsimg.bbc.co.uk/media/images/40389000/jpg/_40389769_burned203.jpg' border='0' alt='user posted image'> Rescuers had found it hard to get to the school's top floor (Photo: Senthil Kumar) <b>India school inferno kills dozens</b> At least 75 children have died in a fire in a primary school in the southern Indian state of Tamil Nadu. More than 30 children were admitted to hospital suffering serious burns. Some 200 children were said to be in the affected primary section of the school in Kumbakonam, 300km (185 miles) south-west of state capital Madras. The fire will again raise questions of school safety - correspondents say many India schools lack even basic firefighting equipment. BBC.com - kuruvikal - 07-16-2004 <b>இந்தக் கோரத் தீ விபத்தில் பரிதாபமாக உயிர்நீத்த அனைத்துப் பிஞ்சுகளின் ஆத்மா சாந்திக்காகவும் இறைவனைப் பிரார்த்திப்போமாக...! காயமடைந்த பிஞ்சுகள் விரைந்து குணம் பெறவும் இறைவனை வேண்டுவோமாக....!</b> - tamilini - 07-16-2004 இவர்களது ஆத்மா சாந்திக்காக இறைவனைப் பிரார்த்திகிறேன்.......
- shanmuhi - 07-16-2004 þì ¦¸¡Ê ¿¢¸úÅ¢ø ¯Â¢÷ þÆó¾ ÀÇõ ÌÆó¨¾¸Ç¢ý ¬òÁ¡ º¡ó¾¢Â¨¼Â À¢Ã¡÷ò¾¨É¸û - Aalavanthan - 07-17-2004 <img src='http://www.yarl.com/forum/files/1089986287929_980.jpg' border='0' alt='user posted image'> <img src='http://www.yarl.com/forum/files/1089987307.85134.jpg' border='0' alt='user posted image'> <img src='http://www.yarl.com/forum/files/1089987436.43362.jpg' border='0' alt='user posted image'> <img src='http://www.yarl.com/forum/files/fire_p1.jpg' border='0' alt='user posted image'> <img src='http://www.yarl.com/forum/files/fire_p2.jpg' border='0' alt='user posted image'> <img src='http://www.yarl.com/forum/files/fire_p3.jpg' border='0' alt='user posted image'> <img src='http://www.yarl.com/forum/files/fire_p4.jpg' border='0' alt='user posted image'> கும்பகோணத்தில் சோகம்: பள்ளியில் பயங்கர தீ - 100 குழந்தைகள் பலி கும்பகோணம் நகரத்தில் இருந்து 5 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள தாராசுரம் ஏரியாவில் காசிராமன் பகுதியில் லார்ட் கிருஷ்ணா நடுநிலைபள்ளி, உயர் நிலைபள்ளி, சரஸ்வதி நர்சரி என மூன்று வகையான பள்ளிகள் ஒரே கட்டிடத்தில் செயல்பட்டு வந்தன. மூன்று மாடிகளை கொண்ட அந்த கட்டிடத்தில் நர்சரி பள்ளி மூன்றாவது மாடியில் இயங்கி வருகிறது. 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை மாணவர்கள் அங்கு பயின்று வந்தனர். இந்த பகுதியில் கூரையால் வேயப்பட்டிருந்தது. கீழ்தளத்தில் உயர்நிலை பள்ளியும், முதல் தளத்தில் நடுநிலைப்பள்ளியும் செயல்பட்டு வந்தன. அரசு உதவியுடன் நடத்தப்படும் இந்த பள்ளியில் இன்று காலை 11.30 மணியளவில் சமையல் கூடத்தில் சமையல் வேலை நடந்த போது திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இதனால் தீ வேகமாக பரவியது. ஓலையால் வேயப்பட்ட பகுதியில் முதலில் தீ பிடித்தது. சில நிமிடங்களிலேயே தீ மளமள வென்று பரவர தொடங்கியது. ஒட்டு மொத்த கட்டிடம் தீ பற்றுவதற்கு முன்பே கீழ் பகுதியில் இருந்த உயர்நிலை மற்றும் நடுநிலை பள்ளி மாணவர்கள் வெளியே ஓடி உயிர் தப்பினர். மூன்றாவது மாடியில் இருந்த நர்சரி பள்ளி மாணவர்கள் தீயின் கோர நாக்கிற்கு பரிதாபமாக பலியானார்கள். நர்சரி வகுப்பில் படித்து வந்த 8 வயதிற்கு உட்பட்ட மாணவர்கள் வெளியேற முடியாமல் வகுப்பு அறைக்குள்ளேயே சிக்கிக் கொண்டனர். உயிர் பிழைக்க அந்த பிஞ்சுகள் போராடிய முயற்சி தோல்வி அடைந்தது. 3,4 மற்றும் 5 ஆம் வகுப்புகளில் படித்த பள்ளிக்குழந்தைகள் தீயில் கருகி கரிக்கட்டையாகின. ஓலையால் வேயப்பட்டிருந்த மேற்கூரை தீ பந்தங்களுடன் விழுந்ததால் குழந்தைகள் ஓ வென்று அலறி துடித்தன. தப்பிக்க கூட வழிதெரியாமல் நெருப்பில் சிக்கி குழந்தைகள் பலியானார்கள். தீ விபத்தை பார்த்த பலர் குழந்தைகளை காப்பாற்ற எடுத்த முயற்சிகள் பலன் அளிக்க வில்லை. நெஞ்சை பதற வைக்கும் இந்த சம்பவத்தால் கும்பகோணம் நகரம் சோகத்தில் ஆழ்ந்திருக்கிறது. தீ விபத்து நடந்த பகுதியில் ஏராளமான சடலங்கள் கரி கட்டைகளாய் கிடந்தன. தீயணைப்பு வண்டிகள் விரைந்து வந்து தீயை அணைக்க முற்பட்ட போதிலும் பலர் பலியானார்கள். இறந்த உடல்கள், காயம் பட்டவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அந்த பகுதி முழுவதும் குழந்தைகளின் பெற்றோர்கள், உறவினர்களின் அலறல் சத்தமாக காட்சி அளித்தது. தங்கள் குழந்தைகளின் நிலை என்ன, உயிரோடு இருக்கிறார்களா என்பதை கூட பெற்றோர்களால் தெரிந்து கொள்ள முடியாமல் பதட்டத்தில் அங்கும் இங்கும் அழுதுகொண்டே இருந்தார்கள். இறந்த உடல்களில் தங்கள் பிள்ளை இருக்கிறதா? என்பதை கூட தெரிந்து கொள்ள முடியாத நிலையில் இருந்தனர். அடையாளம் காட்ட முடியாத நிலைக்கு குழந்தைகளின் உடல்கள் கருகி போயிருந்தன. குழந்தைகள் ஒவ்வொன்றும் கடைசி நேரத்தில் தப்பி செல்ல முயற்சி செய்த நிலையில் அவர்களுடைய உடல்கள் கிடந்தன. உடல்கள் ஒவ்வொன்றும் கட்டி பிடித்துக்கொண்டு ஆங்காங்கே கிடைந்த காட்சியை பார்க்க கனத்த இதயம் வேண்டும். தீ விபத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை சுமார் 100ஐ தாண்டியது. இதுவரை 80 உடல்கள் கண்டெடுக்கப்பட்டிருக்கிறது. 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் பலத்த தீ காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். -தமிழ்ச்செழியன் மூலம் விகடன் படங்கள் விகடன் மற்றும் AP / AFP - AJeevan - 07-17-2004 மறைந்த அனைத்து பிஞ்சுகளின் ஆத்மா சாந்தியடையவும், மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அனைத்து குழந்தைகளும் சுகம் பெறவும் இறைவனை இறைஞ்சுவோம்........ - Mathivathanan - 07-17-2004 பிஞ்சுகளின் கருகிய உடலங்களை படத்தில் பார்க்கமுடியாமல் பக்கத்தை மூடவேண்டிய நிலை.. செய்தியை கேட்கமுடியாமல் வானொலியை நிறுத்தவேண்டியநிலை.. எதையும் எழுதமுடியவில்லை.. மன்னிக்கவும்.. - kavithan - 07-17-2004 பிஞ்சகளைப் பஞ்சாக நினைத்ததா தீ... மறைந்த அனைத்து பிஞ்சுகளின் ஆத்மா சாந்தியடைய..... இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
- aathipan - 07-17-2004 வீதி தோறும் கல்விச்சாலைகள் அமைப்போம் என்று பாரதி கூறியதாலோ என்னவோ தமிழ்நாட்டில் வீதிக்கு வீதி பாடசாலைகள். போதிய காற்றுவசதியோ விளையாட்டு மைதானமோ எதுவுமே இல்லாது இது போல நூற்றுக்கணக்கான பாடசாலைகள் இயங்குகின்றன. அரசு பள்ளியில் இலவசக்கல்வி தரம்மற்றதால் நடுத்தர மக்கள் இத்தகையபாடசாலைகளில் தான் தங்கள் குழந்தைகளை அனுப்பவேண்டி உள்ளது. தமிழ்நாடு அரசு இனியாவது கண்விழித்துக்கொள்ளகிறதா பொறுத்துத்தான் பார்க்கவேண்டும். எமது இலங்கை அகதிகள் கூட இத்தகைய கல்விக்கூடங்களுக்கு தான் குழந்தைகளை அனுப்பவேண்டிய நிலை. இந்த விபத்து நடந்த பள்ளியில் மூன்றாம் மாடியில் 1 முதல் 5 ம் வகுப்பும் அதற்கு அடுத்த தளங்களில் பெரிய மாணவர்களுக்கும் வகுப்புகள் ஒதுக்கப்பட்டுள்ளன. மொத்தம் 950 மாணவர்கள் இங்கு கல்விகற்று வந்தனர்.இந்த பள்ளிக்கூடம் மற்றைய கட்டடங்கறுக்கு நடுவே அமைந்துள்ளது. இந்தக்கட்டடத்தின் அகலம் மிகக்குறுகியது சுமார் இருபது அடிகள் தான் இருக்கும். பெரிய இரும்புக்கதவுதான் ஒரே வழி மாணவர்களுக்கு. அது எப்போதும் மூடியே இருக்கும். எந்த பாதுகாப்பு வசதியும் அறவே அற்ற பள்ளிகள். யார்வேண்டுமானாலும் இங்கு பள்ளிக்கூடம் ஆரம்பிக்கலாம். என்று மோசமான ஒரு நிலை உள்ளது. இதனால் பணம் பார்க்க விரும்பும் படிப்பறிவில்லாத முதலாளிகள் கூட தங்கள் பெயரில் ஒரு பள்ளி என ஆரம்பித்துவிடுகின்றாhகள். ஆசிரியர்களுக்கு மிகக் குறைந்த ஊதியமே இங்கு வழங்கப்படுகிறது. வேலைகிடைத்தால்போதும் என்ற நிலையில் சரியான பயிற்சிபெறாத ஆசிரியர்கள் தான் இங்கே கல்வி கற்பிக்கின்றனர். விபத்து நடந்த போது பள்ளியில் குறுகிய படிக்கட்டுகளால் மாணவர்கள் வேகமாக வெளியேற முடியவில்லை. சரியாக அவர்களை வேகமாக வழிநடத்த ஆசிரியர்களாலும் ஏனோ முடியவில்லை. அதற்குள் எல்லாம் முடிந்து விட்டது. குழந்தைகளை புூச்சூடி மதிய உணவுடன் தண்ணீர் பாட்டிலும் கொடுத்து அவர்கள் படித்துவிட்டு வருவார்கள் என காத்திருந்த பெற்றோர் தான் பாவம். அவர்கள் கதறி அழுதது நெஞ்சை உருக்கியது. வகுப்பறையில் அங்கங்கே அவர்கள் எடுத்துவந்து உணவுப்பொட்டலங்களும் தண்ணீர் பாட்டில்களும் சிதற்க்கிடந்தன. கும்பகோணம் வைத்த்pயசாலையில் குளிருட்டாப்பட்ட அறைகள் இல்லதமையால் பாவம் அவர்களை மீண்டும் தஞ்சாவுூருக்கு எடுத்துச்செல்லவேண்டிய நிலை. இது போன்ற விபத்துகள் இதற்கு முன்பும் நடந்துள்ளது. தஞ்சை பெரிய கோவிலில் யாகசாலை எரிந்து இதைப்போன்ற ஒரு கோரவிபத்து நடந்தது. அதற்குப்பின் ஒரு திருமணவீட்டில் நடந்த தீவித்தில் மணமகனே எரிந்து சாம்பலானது மிகக்கோரமானது. - Eelavan - 07-17-2004 தீயில் கருகிய மொட்டுக்களின் ஆன்மா சாந்தியடையவும் அவர்களின் பிரிவால் துயறுற்றிருக்கும் குடும்பத்தினருக்கு ஆறுதல் வேண்டியும் இறைவனைப் பிரார்த்திப்போம் - AJeevan - 07-17-2004 [size=15]லஞ்சம்-பாதுகாப்பின்மை- பொறுப்புணர்வற்ற காரணங்களால் இந்த அசம்பாவிதம் நடைபெற்றுள்ளது. இதற்கு பொறுப்பேற்க வேண்டியது இந்த பள்ளியோ அல்லது இதன் நிர்வாகிகளோ ஆசிரியர்களோ அல்ல. தமிழக மற்றும் இந்திய அரசே இதற்கு பொறுப்பேற்க வேண்டும். இவர்களது நஸ்டஈடுகள் இந்த பிஞ்சுகளைத் திருப்பித் தராது. இப்படியான பள்ளிகள் உருவாக அனுமதியளிக்கும் இவற்றின் பாதுகாப்புத் தன்மைகள் பற்றி கரிசனையற்ற அரசு தார்மீக பொறுப்பேற்று ஏனைய பள்ளிகளையாவது பரிசீலனைக்கு உட்படுத்தி பாதுகாப்பற்ற தன்மையில் இயங்கும் பள்ளிகளை தடை செய்ய வேண்டும். - Eelavan - 07-17-2004 அன்னதான அரசியல் நடக்கும் நிலையில் இது வெறும் கனவே அஜீவன் அண்ணா - aathipan - 07-17-2004 <img src='http://www.maalaimalar.com/images/news/Gallery/gallery241/tn/02.jpg' border='0' alt='user posted image'> <img src='http://www.maalaimalar.com/images/news/Gallery/gallery241/tn/17.jpg' border='0' alt='user posted image'> <img src='http://www.maalaimalar.com/images/news/Gallery/gallery241/tn/15.jpg' border='0' alt='user posted image'> - AJeevan - 07-17-2004 Eelavan Wrote:அன்னதான அரசியல் நடக்கும் நிலையில் இது வெறும் கனவே அஜீவன் அண்ணா[size=14]உண்மைதான் ஈழவன் சிங்கையின் வேலத்தலங்களில் <img src='http://www.yarl.com/forum/files/images.jpeg' border='0' alt='user posted image'> என்ற வாசகத்தை பார்த்திருப்பீர்கள். முதலில் உன் பாதுகாப்பு அதன் பின்னரே உன் சேவை சிங்கைக்கு தேவை என்பது அதன் கருத்தாகும். ஒவ்வொரு மனிதனும் அந்த நாட்டின் செல்வங்கள். அவர்களது இழப்புகள் அந்த நாட்டுக்கான இழப்பாகும் என்று சிங்கையை உருவாக்கிய Father of Singapore லீகுவான்யு அவர்கள் ஒரு விபத்து நடந்த போது சொல்லி கவனக் குறைவான பாதுகாப்பற்ற விபத்துகள் ஏற்படும் நிறுவனங்களை தடை செய்ய கடுமையான உத்தரவொன்றை கொண்டு வந்தார். இவர்களுக்கு வாடா போடா சட்டங்களை இயற்றத் தெரியுமே தவிர மக்களைக் காப்பாற்றும் சட்டங்களைக் கொண்டு வரத் தெரியாது. பிரச்சனைக்கு தீர்வு காண்பதல்ல இவர்களது குணம். நஸ்டஈடுகள் என்ற பெயரில் மக்கள் எழுச்சியை திசை திருப்பி இன்னொரு வகை லஞ்ச ஊழலுக்கு வித்திடுவதேயாகும். இதற்கென ஒதுக்கப்படும் பணத்தைக் கையாட ஒரு கூட்டம் இப்போதே தயாராக இருக்கும்............... - kuruvikal - 07-19-2004 இந்த நிகழ்வுகள் தொடர்பான சில கவிதைகள்... நம் கள உறுப்பினர் ஒருவரின் கவிதையும் உண்டு...! - sWEEtmICHe - 07-19-2004 <!--QuoteBegin-AJeevan+-->QUOTE(AJeevan)<!--QuoteEBegin-->மறைந்த அனைத்து பிஞ்சுகளின் ஆத்மா சாந்தியடையவும், மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அனைத்து குழந்தைகளும் சுகம் பெறவும் இறைவனை இறைஞ்சுவோம்....... <!--QuoteEnd--><!--QuoteEEnd--> hock: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <img src='http://www.geetham.net/forums/images/smiles/icon_pray.gif' border='0' alt='user posted image'> - sWEEtmICHe - 07-19-2004 <b><span style='font-size:30pt;line-height:100%'>கும்பகோணம் தீ விபத்து - படப்பிடிப்புகள் ரத்து. </b> [size=14]By Y.B <img src='http://cinesouth.com/images/new/17072004-THN12image1.jpg' border='0' alt='user posted image'> கும்பகோணம் தீ விபத்தில் 87 குழந்தைகள் பலியானது உலகையே உலுக்கிவிட்டது. போப் ஆண்டவர் ஜான்பால் உள்பட உலக தலைவர்கள் இந்த துயர சம்பவத்திற்கு இரங்கல் தெரிவித்து உள்ளனர். தமிழ் திரையுலகம் இன்று மதியம் இரண்டு மணி வரை அனைத்து படப்பிடிப்புகளையும் ரத்து செய்துள்ளது. ரஜினி, விஜயகாந்த, அஜித் உள்பட பலரும் தனித்தனியே அறிக்கைகள் வெளியிட்டுள்ளனர். தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் உள்ள பாணாதுறை காசிராமன் தெருவில் கிருஷ்ணா பெண்கள் உயர்நிலைப் பள்ளி, கிருஷ்ணா அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளி, சரசுவதி நர்சரிப்பள்ளி ஆகிய 3 பள்ளிகள் உள்ளன. நேற்று இப்பள்ளியில் தீ விபத்து ஏற்பட்டது. வெளியே தப்பிக்க முடியாமல் 87 பிஞ்சு குழந்தைகள் தீயில் கருகி இறந்தனர். மேலும் 27 குழந்தைகள் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கின்றன. இந்தக் கொடூர சம்பவம் அனைவர் உள்ளங்களையும் உருக்கிவிட்டது. இந்த துயர நிகழ்வுக்கு இரங்கல் தெரிவிக்கும் முகமாக இன்று தமிழ் திரையுலகின் படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதுபற்றி தமிழ்சினிமா தயாரிப்பாளர்கள் சங்க செயலாளர் சித்ரா லட்சுமணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கும்பகோணத்தில் 80க்கு மேற்பட்ட பள்ளிக் குழந்தைகள் பள்ளிக்கூரை எரிந்து விழுந்ததால் கருகி இறந்த பரிதாப சம்பவம் தமிழ்த்திரை உலகில் மாபெரும் அதிர்ச்சி அலையை உண்டாக்கியுள்ளது. பரபரப்போடும், பரிதவிப்போடும் திரைஉலகின் எல்லா பிரிவுகளிலும் இந்த சோகம் பகிர்ந்து கொள்ளப்பட்டது. தாங்க முடியாத இந்தக் கொடுமையினால் துயரத்தில் வாடும் குடும்பத்தாருக்கு தமிழ்த்திரை உலகின் அனுதாபத்தைத் தெரிவிக்கும் வகையில் இன்று காலை 11 மணிக்கு இரங்கல் கூட்டம் தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை திரை அரங்கில் நடைபெறவிருக்கிறது. இக்கூட்டத்தில் தமிழ்த்திரை உலகின் அனைத்துப் பிரிவினரும் கலந்து கொள்வதற்காக இன்று (17-07-04) மதியம் இரண்டு மணிவரை படப்பிடிப்பு, பாடல் பதிவு, பின்னணி இசை சேர்ப்பு உள்பட எல்லா திரைஉலகப் பணிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது" என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. விஜயகாந்த் விடுத்துள்ள அறிக்கையில், இந்த துயர சம்பவத்திற்கு காரணமானவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் கண்டுபிடிக்கப்பட்டு கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார். மேலும், இழந்து விட்ட உயிர்களுக்கு எந்த ஈடும் செய்ய முடியாது. எத்தனை கோடி ரூபாய் கொடுத்தாலும் இழந்து விட்ட உயிர்களுக்கு உயிரூட்ட முடியாது. என்றாலும் தங்களின் இன்னுயிர் குழந்தைகளை இழந்து நெஞ்சம் பதறி நிற்கும் குடும்பங்களின் அத்தனை பேர்களுக்கும் எனது கண்ணீர் நிறைந்த ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறேன். அந்த குடும்பங்களில் நிவாரண நிதியாக தமிழக முதலமைச்சரிடம் ரூபாய் 10 லட்சம் அளிக்கிறேன். மறைந்த பச்சிளங் குழந்தைகளின் ஆத்மா சாந்தி அடைய நெஞ்சார பிரார்த்திக்கிறேன், என்று கூறியுள்ளார். ரஜினிகாந்த் விடுத்துள்ள அறிக்கையில், "கும்பகோணத்தில் மனித தெய்வங்களுக்கு நடந்த கோர சம்பவத்துக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன். பாதிக்கப்பட்ட பெற்றோர்களுக்கு ஆறுதல் சொல்ல என்னிடம் வார்த்தைகள் இல்லை. அவர்களுக்கு இந்த சோகத்தை ஜீரணிக்கும் சக்தியை கொடுக்க ஆண்டவனை பிரார்த்திக்கிறேன்" என்று கூறியுள்ளார். கும்பகோணத்தில் 'ஜி' படப்பிடிப்பில் இருந்த அஜித் சம்பவத்தை கேள்விப்பட்டதும் உடனடியாக படப்படிப்பை ரத்து செய்துவிட்டு, இயக்குனர் லிங்குசாமியுடன் மருத்துவமனைக்கு விரைந்துள்ளார். அங்கு பிள்ளைகளை பறிகொடுத்த பெற்றோர்களுக்கு ஆறுதல் கூறியுள்ளார். நிருபர்களிடம் பேசிய அஜித், "கும்பகோணம் ஊர் மக்களின் ஒத்துழைப்பினால்தான், கடந்த 20 நாட்களாக இங்கு படப்பிடிப்பு நடத்த முடிந்தது. அவர்களுக்கு ஒரு துயரம் வரும்போது, அதில் பங்கேற்பது தான் நாகரீகம். மனித நேயம்." என்று தெரிவித்தார். அவர் தன் ரசிகர்களுக்கு விடுத்துள்ள வேண்டுகோளில், அனைத்து ரசிகர்களும் ஆளுக்கு இரண்டு அல்லது மூன்று ரூபாயாவது நிதி திரட்டி முதல் அமைச்சரின் நிவாரண நிதிக்கு வழங்கும்படி கேட்டுள்ளார். இவர்களை தவிர சரத்குமார், கே. ராஜன் உள்பட பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். இந்த துயர சம்பவத்திற்கு சினி சௌத்-ம் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது.</span> - Paranee - 07-19-2004 http://www.thatstamil.com/specials/art-cul...ems/barani.html - tamilini - 07-19-2004 பரணி அண்ணா கவிதை அருமை.....! - sWEEtmICHe - 07-19-2004 <b> <span style='font-size:25pt;line-height:100%'>6 குழந்தைகளின் நிலைமை தொடர்ந்து கவலைக்கிடம்.......... JULY 19, 2004 </b> <b>கும்பகோணம்: </b> கிருஷ்ணா பள்ளி தீ விபத்தில் காயமடைந்த மேலும் 3 குழந்தைகள் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தீ விபத்தில் லேசான காயமடைந்த இந்த 3 பேரையும் அவர்களது பெற்றோர் வீட்டில் வைத்து சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால், உரிய சிகிச்சை அளிப்பதற்காக தற்போது கும்பகோணம் அரசு மருத்துவனையில் சேர்த்துள்ளனர். இவர்களில் ஒரு சிறுவனுக்கு இடது கால் எரிந்து போய் விட்டது. இவர்களையும் சேர்த்து தற்போது கும்பகோணம் மருத்துவமனையில் 11 பேர் உயிருக்கு ஆபத்தில்லாத நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தஞ்சாவூர் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ள 4 சிறுமிகளின் நிலை கவலைக்கிடமாகவே உள்ளது. அவர்களுக்கு 40 சதவீதத்திற்கும் மேல் தீக் காயம் ஏற்பட்டுள்ளது. இதேபோல, சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள 2 குழந்தைகளின் நிலையும் கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன</span> |