Yarl Forum
பிரான்ஸ், குறும்பட மாலை - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11)
+--- Forum: குறும்படங்கள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=51)
+--- Thread: பிரான்ஸ், குறும்பட மாலை (/showthread.php?tid=6926)



பிரான்ஸ், குறும்பட மால - AJeevan - 07-17-2004

<b><span style='font-size:25pt;line-height:100%'>குறும்பட மாலை - கோடை 2004
வில்தனூஸ் - பிரான்ஸ்</b></span>

17.07.2004 சனி 16:00 மணி - 19:00 மணி

La salle Motricite de l'ecole J.B.
4 Place J.B. Clement
93430 VILLETANEUSE
Devant la Poste - Villetaneuse
Bus: 256 (Eglise de Villetaneuse). 356/354 (la Piscine)


+ பிரித்தானியா - அஜீவன் [அழியாத கவிதை]
+ பிரான்சு - ஓசை மனோ [தாகம்]
+ ஜேர்மனி - கலைக்கண் பாலராஜா [கனவுகள்]
+ சுவிஸ் - அஜீவன் [எச்சில் போர்வை]
+ பிரான்சு - வதனன் [விலாசம்]
+ சுவிஸ் - அஜீவன் [நிழல் யுத்தம்]

புகலிடத்திலும் தன் திரைப் பணியைத் தொடரும்
மூத்த கலைஞன் இரகுநாதன் கெளரவிப்பு
கலந்துரையாடல் - திரை இரசனை


நன்றி:
ஈழவர் சினி ஆர்ட்ஸ் எஸ்.ஜே.ஜோசெப்.
திரைக்கலை ஆர்வலர் அஜீவன், வதனன்
மற்றும் புகலிடத் தமிழ்திரை வளர்ச்சியில்
அயராத ஒத்துழைப்பைத் தரும் சமுக ஆர்வலர்கள்

பாரீஸ் தமிழர் சினிமாக்கலை இரசனை மன்றம்
198 Avenue de la division Leclerc, 93260 Villetaneuse, France

தொடர்பு: kmukunthan@hotmail.com
ஒத்துழைப்பு: www.appaal-tamil.com

Thanks: http://www.appaal-tamil.com/index.php?opti...&id=74&Itemid=2


வணக்கம் - இளைஞன் - 07-17-2004

நன்றி அஜீவன் அண்ணா...
இதில் வதனனின் "விலாசம்" என்கின்ற குறும்படம் ரிரிஎன் தொலைக்காட்சியில் இன்று அல்லது நாளை (சனி அல்லது ஞாயிறு) ஒளிபரப்புகிறார்கள். நேரம் சரியாகத் தெரியவில்லை. ரிரிஎன் தொலைக்காட்சி இணைப்பு வைத்திருப்பவர்கள் பாருங்கள்.


- AJeevan - 07-17-2004

[size=14]இளைஞன்,

வதனனின்
[b]"விலாசம்" பற்றி ஏற்கனவே எனக்குச் சொன்னீர்கள்.
பார்த்த பலர் நன்றாக இருப்பதாகவும்,
ஒரு முறை பாருங்கள் என்றும் சொன்னார்கள்.
சொன்னவர்கள் புலம் பெயர் சினிமா ஒன்றில் அக்கறை கொண்டவர்கள்.

[b]மகிழ்ச்சியாக இருக்கிறது.
அவர்களுக்கு என் இதயம் கனிந்த வாழ்த்துகள்.

ரிரிஎன் தொலைக்காட்சியில் எப்போது ஒளிபரப்புகிறார்கள் என்று அறிந்து எழுதினால்
பலர் பார்க்க எத்தனிப்பார்கள்.

அக்குறும்படத்தைக் பார்க்க எனக்கும் ஆசையாக இருக்கிறது.
தொடர்பு மின்அஞ்சல் முகவரிகளோ, தொலைபேசி இலக்கமோ


- இளைஞன் - 07-18-2004

வணக்கம் அஜீவன் அண்ணா...

விலாசம் குறும்படம் இன்று மாலை 6:30 இற்கு ரிரிஎன் னில் ஒளிபரப்புகிறார்கள். பார்த்துவிட்டு உங்கள் கருத்தைச் சொல்லுங்கள். முடிந்தால் அங்கு திரையிடப்படும் 6 குறும்படங்களையும் இணையத்தில் ஒளிபரப்புவதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> எந்தளவு சரிவரும் என்று தெரியவில்லை.


- AJeevan - 07-18-2004

இந்தக் குறும்படங்கள் உங்களுக்குக் கிடைக்காவிடில் அறிவியுங்கள்.
இணையத்தில் இக்குறும்படங்களை போடுவது பற்றி பிரச்சனை வராது.

எப்படியோ எமது கலைஞர்களது படைப்புகள் வெளியே வந்தால் போதும்.

நேற்றைய நிகழ்வு சிறப்பாக நடந்தாக பலர் பிரான்சிலிருந்து தொலைபேசி வழி சொன்னார்கள்.

ஒழுங்கு செய்த சலனம் குழுவினருக்கும் பார்வையாளர்களுக்கும் நன்றிகள்.

இலங்கையில் உருவான குறும்படங்கள் எனக்குக் கிடைத்தால் அவர்கள் அனுமதியுடன் யாழுக்கு கொடுக்க இருக்கிறேன்.


- இளைஞன் - 07-19-2004

வதனனின் விலாசம் குறும்படத்தைப் பார்த்தேன். அதன்பின்னான அவருடைய நேர்காணலையும் பார்த்தேன். இது அவருக்கு முதல் முயற்சி என்று குறிப்பிட்டுள்ளார். அவருக்குமட்டுமல்ல, அவருடன் பணியாற்றிய அநேகமான கலைஞர்களுக்கு இது முதல் முயற்சி என்றும் குறிப்பிட்டுள்ளார்.

ஒளிப்பதிவாளர் சுகந்தன் ரிரிஎன் தொலைக்காட்சியில் பணியாற்றுகிறார். ஒளித்தடம் என்கிற குறும்படங்களுக்கான நிகழ்ச்சியையும் அவரே நிகழ்த்துகிறார் என எண்ணுகிறேன். அதேபோல் நம்மவர் பாடல்களைக் காட்சிப்படுத்துகின்ற முயற்சியையும் மேற்கொண்டுள்ளார்.

கதை, வசனம், இயக்கம் வதனன். வதனன் என்பவர் வில்லிசையைக் கலைஞர் நாச்சிமார் கோயிலடி இராஜன் அவர்களின் மருமகன் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இசை சாரங்கன். ரிரிஎன் னில் இடம்பெறும் படலைக்குப் படலை தொடர்நாடகத்தின் கதாநாயகன். ரிரிஎன் தொலைக்காட்சியின் இசைப்பிரிவிற்குப் பொறுப்பானவர்.

மற்றவர்கள் அனைவரும் பெரிதாக அறிமுகமாகாதவர்கள் தான் என்றாலும், விரைவில் மக்கள் மத்தியில் பெரும் கலைஞர்களாக திகழ்வார்கள் என்பது நிகழும்.

கதையின் கரு: தெருச்சண்டியர்கள் பற்றியது. போர்ச்சூழல் காரணமாகவோ, அல்லது குடும்பச் சூழல் காரணமாகவோ, புலம்பெயர்ந்து வந்து தேவையில்லாமல், சம்பந்தமில்லாமல் குழுச்சண்டைகளில் ஈடுபடும், அல்லது ஈடுபடத் தூண்டப்படும் இளைஞர்கள் பற்றியது. அதனால் ஏற்படும் குற்றச் செயல்கள், உயிரிழப்புகள் பற்றியது.

மேலதிகமாக முழுக்கதையையும் நான் சொல்ல விரும்பவில்லை. நீங்களே நேரடியாகப் பாருங்கள். <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->

இக்குறும்படத்தில் சில சில குறைகள் உள்ளன தான். காட்சியமைப்பு அவ்வளவாகத் தெளிவில்லை. உதாரணத்திற்கு இந்தக் கதைக்கான சூழலைத் தெரியாதவர்களுக்கு இக்குறும்படத்தை விளங்கிக்கொள்வது கொஞ்சம் கடினமாக இருக்கும் என்பது என் கருத்து. அடிக்கடி காட்சியின் நிறங்கள் மாறுகின்றன. அது ஒவ்வொருவிதமான காலத்தை அல்லது சூழலை வெளிப்படுத்துவதற்காக இருப்பினும், அடிக்கடி இப்படி நிகழ்வது கொஞ்சம் குழப்பமாக இருக்கிறது. ஒளிப்பதிவு நன்றாக இருக்கிறது. குறிப்பிட்ட சில இடங்களில் சிறப்பான தரம் இருக்கிறது. மொத்தத்தில் இந்தக் குறும்படம் இன்றைய இளைஞர் சமூகத்திற்குத் தேவையான ஒரு செய்தியைச் சொல்கிறது என்பதை மறுக்க முடியாது. ஆனால் அதன் அழுத்தம் இன்னும் கொஞ்சம் கூடுதலாக இருந்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும். ஆனாலும் இது அவர்களின் முதல் முயற்சி. இனித்தான் குறை நிறைகளை அறிந்து தம்மை வளப்படுத்துவார்கள்.

மேலும் மேலும் வதனனின் முயற்சிகள் வெற்றியடைய வாழ்த்துக்கள். அதேபோல் அந்தக் குறும்படக் குழுவின் கலைஞர்கள், தொழில்நுட்பவியலாளர்கள் அனைவருக்கும் பாராட்டுகள்.
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->


- இளைஞன் - 07-19-2004

Quote:ஒளித்தடம் என்கிற குறும்படங்களுக்கான நிகழ்ச்சியையும் அவரே நிகழ்த்துகிறார் என எண்ணுகிறேன்.
மன்னிக்கவும்! இந்த நிகழ்ச்சியினை நிகழ்த்துவது ஜெய்கீசன் என்பவர். வதனனின் விலாசம் குறும்படத்தில் வருகின்ற பின்னணிப் பாடல் ஒன்றை இவரது குரலில் பாடியிருக்கிறார். ஜெய்கீசனின் குறும்படங்களிற்கான ஒளித்தடம் என்கின்ற நிகழ்ச்சி நமது வளர்ந்துவரும் கலைஞர்களிற்கான களமாகவும், அவர்களை ஊக்குவிப்பதற்கான பலமாகவும் இருக்கும் என்று நம்புகிறேன்.

தனியே குறும்படங்களை ஒளிபரப்புவதோடும், கலைஞர்களை நேர்காணுவதோடும் மட்டும் நில்லாமல், இக்குறும்படங்கள் பற்றிய தொழில்நுட்ப ரீதியானதும், கதைத்தளம் மீதிலானதுமான விவாதங்களைக் கருத்துப் பரிமாறல்களையும் இந்நிகழ்ச்சியில் சேர்த்துக்கொண்டால் அதுவே குறைகளைக் களைந்து படைப்பாளிகளை மேலும் வளரச்செய்யும் என்று நம்புகிறேன். அதுவே படைப்புக்களைத் தரமுள்ளதாக ஆக்கித்தரும் என்று எண்ணுகிறேன். வாழ்த்துக்கள். பாராட்டுக்கள்.


- AJeevan - 07-19-2004

[size=15]இளைஞன்
<b>விலாசம்</b> குறும்படத்தை நான் இன்னும் பார்க்கவில்லை.
நேற்று முன் தினம் பிரான்சில் நடைபெற்ற சலனம் குறும்பட விழாவில் திரையிடப்பட்ட போது இந்த இளைஞர்களது முயற்சி பாராட்டக்குரியதாக இருப்பதாகவே பலர் என்னிடம் சொன்னார்கள்.

ஒரு சில குறைபாடுகள் இருந்த போதிலும் இக் குறும்படம் இளைஞர்களின் பிரச்சனைகளை இளைஞர்களது பார்வையோடு படைக்கப்பட்டிருப்பது சிறப்பாகவும் அவர்களது எண்ணத்தை பிரதிபலிப்பதுமாக இருப்பதாக, பலர் கருத்து தெரிவித்தனர்.
இது புலம் பெயர் சினிமா ஆர்வலர்களை மகிழ்ச்சிக்குரியதாக்கியுள்ளது.

<img src='http://www.yarl.com/forum/files/flowers.jpeg' border='0' alt='user posted image'>
<b>இவ் இளைஞர்களது கலைப்பயணம் வெற்றிகரமாக தொடர வாழ்த்துக்கள்.

[b]விலாசம்</b> குறும்படத்தைப் பார்த்த பின் எனது விமர்சனத்தை எழுதுகிறேன்.

<b>பார்த்தவர்கள்,
தங்கள் கருத்துகளை எழுதி ,
இவ் இளைஞர்களை
ஊக்குவிக்கும் படி பணிவன்புடன் வேண்டுகிறேன்.</b>



- Manithaasan - 07-22-2004

சலனம் அமைப்பினர் நடாத்திவரும் குறும்படப் பரவலாக்கம் யேர்மனியையும் எட்டியிருக்கிறது.15.8.04 ல் யேர்டனி மெசடே நகரில் பாரிசில் திரையிடப்பட்ட 6 குறும்படங்களும் திரையிடப்படவுள்ளது.. தொடர்ந்து, அன்றே கருத்தரங்கொன்றும் நிகழவுள்ளதாகவும் தெரிகிறது..நேர விபரங்கள் பெற்று மீண்டும் தருகிறேன்.


- vasisutha - 07-22-2004

<b>இளைஞன்</b>,
Quote:முடிந்தால் அங்கு திரையிடப்படும் 6 குறும்படங்களையும் இணையத்தில் ஒளிபரப்புவதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. எந்தளவு சரிவரும் என்று தெரியவில்லை.


போட இயலுமா? எனக்கும் பார்க்க ஆசையாக இருக்கிறது. <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->


- AJeevan - 07-22-2004

பொறுத்திருங்கள்.
நிச்சயம் பார்க்க முடியும்.


- shanmuhi - 07-22-2004

குறும்படங்களை பார்க்க ஆவலுடன் காத்திருக்கிறேன்.


- Aalavanthan - 07-23-2004

TTN தொலைக்காட்சியில் கடந்த 4 வாரங்களில் "போருக்குப்பின்", "பட்டமரம் பூக்கும்", "அழுத்தம்", "விலாசம்" ஆகிய படங்களை பார்க்கக்கூடியதாக இருந்தது. இதில் "போருக்குப்பின்", "அழுத்தம்" படங்கள் தாயகத்தில், தற்போதும் தாயகத்தில் இருக்கும் கலைஞர்களால் script net, நிதர்சனம் துணையுடன் உருவாக்கப்பட்டது. மற்றைய படங்களான "பட்ட மரம் பூக்கும்" நோர்வேயிலும், "விலாசம்" பிரான்சிலும் உருவாக்கப்பட்டுள்ளது.

போருக்குப்பின் - யுத்தத்தில் தந்தையை இழந்த ஒரு சிறுவனின் கதை (மனநிலை) பற்றியது.

அழுத்தம் - எமது கல்வி முறைபற்றியதும், யுத்தத்தின் மூலம் புதிய முயற்சிகள் பற்றியதுமான கதை.

பட்டமரம் பூக்கும் - புலத்திற்கு இடம்பெயர்ந்த ஒரு வயோதிபரது கதை

விலாசம் . குழுச்சண்டைக்குள் வலிந்து திணிக்கப்படும் ஒரு இளைஞனது கதை.

பார்த்த நான்கு குறும்படங்களும் மிகச் சிறப்பாகப் படமாக்கப்பட்டுள்ளன. மொத்தத்தில் இப்படங்களைப்பார்க்கும் போது இத்துறையில் எம்மவர்களிடம் உள்ள இடைவெளி இனி குறுகிக் கொண்ட வரும் என எண்ணத் தோன்றுகின்றது.


- AJeevan - 07-24-2004

நன்றி ஆளவந்தான்.
இப்படியே தொடர்ந்தால் நம் புதிய தலைமுறை எதையாவது செய்வார்கள் என்ற நம்பிக்கை வருகிறது.
அதுவே எனது ஆசையும் பிரார்த்தனையும்.


- இளைஞன் - 07-24-2004

பிரான்ஸ் குறும்படமாலை நன்றாக நிகழந்ததாம். அதுபற்றிய மேலதிக தகவல்களும் + புகைப்படங்களும்.


- AJeevan - 07-24-2004


<b><span style='color:brown'>சலனம் வழங்கிய குறும்படமாலை
எழுதியவர் -குயிலி
Friday, 23 July 2004

வழமையான கோடையைவிட 17-07-2004 சனிக்கிழமை மாலை நேரக் கோடை சற்று வித்தியாசமானதாக இருந்தது. பாரிசின் புறநகர்ப் பகுதியான வில்தானூஸில் கடும் வெயிலுக்குப் பதிலாக மெல்லிய தூற்றலுடன் கூடிய மழையும் இதமான காற்றும் எங்கும் பரவியிருந்தது.

அந்தக் கிராமத்தின் பாடசாலை மண்டபத்தினுள்ளே நாங்கள் சுமார் ஐம்பது பேர் அளவில் குறும்பட மாலை நிகழ்வுக்காக் காத்திருந்தோம்.

அமைதி வணக்கத்துடன் நிகழ்ச்சி ஆரம்பமானது. நிகழ்ச்சிக்காக வந்திருந்தவர்கள் எல்லோரும் குறும்படங்களைப் பார்க்கும் ஆர்வத்துடன் காணப்பட்டனர். அந்தக் குறும்பட நிகழ்வில் அழியாத கவிதை, தாகம், கனவுகள், எச்சில்போர்வை, விலாசம், நிழல் யுத்தம், ஆகிய ஆறு குறும்படங்கள் திரையிடப்பட்டன.

அத்துடன் புகலிடத்திலும் தன் திரைப்பணியைத் தொடரும் மூத்த கலைஞர் ரகுநாதன் அவர்களைக் கௌரவிக்கும் நிகழ்வும் இடம்பெற்றது. இந்நிகழ்வினை சலனம் என்னும் பாரிஸ் தமிழர் சினிமாக்கலை இரசனை மன்றம் ஏற்பாடு செய்திருந்தது.

அப்பால்-தமிழின் நெறிப்படுத்தலில் இயங்கும் சலனத்தின் இந்த முயற்சிக்குத் தமிழர் புனர்வாழ்வுக் கழக வில்தானூஸ் கிளையினர் ஒத்துழைப்பு வழங்கியிருந்தனர்.

<img src='http://www.appaal-tamil.com/images/stories/2.jpg' border='0' alt='user posted image'><img src='http://www.appaal-tamil.com/images/stories/4.jpg' border='0' alt='user posted image'>
(பார்வையாளர்கள்)

முதலில் ஈழவர் திலைக்கலை மன்றம் தயாரித்த மூன்று படங்களில் ஒன்றான [b]அழியாத கவிதை </b>திரையிடப்பட்டது. இதனை சுவிசில் வதியும் அஜீவன் அவர்கள் இயக்கி இருந்தார். இதன் முக்கிய பாத்திரத்தில் புகழ்பெற்ற கலைஞர் ரகுநாதன் நடித்திருந்தார். தா.பாலகணேசனின் பொற்கூண்டு என்ற தனிநடிப்புக்கான நாடகப்பிரதி அழியாதகவிதையென திரைக்கதையாகியிருந்தது. அந்தத் திரைக்கதையானது புலம்பெயர் நாட்டிற்கு வலிந்தழைக்கப்படும் முதியவர் ஒருவர் தனது பிள்ளைகளுடன் வாழநேர்ந்ததின் நிகழ்வை இலண்டனின் பின்னணியில் விபரிக்கின்றது. 21 நிமிடங்கள் கொண்டதான இந்தக் குறும்படத்தைத் தொடர்ந்து..........

<b> தாகம்</b> திரையிடப்பட்டது. திரு. மனோ அவர்களின் எழுத்து இயக்கத்தில் உருவான இந்தக் குறுப்படம் மகளுடன் வாழும் முதியவர் ஒருவருக்கு ஏற்படும் சுருட்டுப்பிடிக்கும் தீராததாகத்தைப் பற்றி எடுத்துக் கூறுகின்றது. 15 நிமிடங்கள் கொண்ட இக்குறும்படத்தில் எல்லோராலும் நன்கு அறியப்பட்ட முகத்தார் யேசுரட்ணம் அவர்கள் முதியவராக நடித்திருந்தார்.

மூன்றாவது குறும்படமாக பாலராசா அவர்களது <b>கனவுகள்</b> திரையிடப்பட்டது. முதிர் இளைஞன் ஒருவனின் திருமண முயற்சி பற்றியும் அதனால் ஏற்படுகின்ற சிக்கல்கள் பற்றியும் எடுத்துக் கூறுகின்றது.

அடுத்து அஜீவனின் <b>எச்சில் போர்வை</b> காண்பிக்கப்பட்டது. 1998 மாவீரர்தின குறும்பட நிகழ்வில் பரிசு பெற்ற இக்குறும்படம் சுவிசில் தஞ்சமடைந்த இளைஞன் தனது புகலிட இருப்பை உறுதி செய்யத் தவிப்பதும் இவனது தவிப்பைப் புரியாத தாயகத்தில் வாழும் பெற்றோர் இவனிடமிருந்து பணத்தை எதிர்பார்ப்பதும் 11 நிமிடங்களுக்குள் கதையாக்கப்பட்டுள்ளது.

அடுத்ததாக நல்லூர்ஸ்தான் தயாரித்து வதனன் இயக்கிய <b>விலாசம்</b> எனும் குறும்படம் திரையிடப்பட்டது. பிரான்சில் வாழும் அடுத்த தலைமுறையினர் எதிர்கொள்கின்ற பிரச்சனையை மையக் கருவாகக் கொண்டு 17 நிமிடங்களில் இக்குறும்படம் தயாரிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து அஜீவனின் <b>நிழல் யுத்தம் </b>திரையிடப்பட்டது. இத்திரைப்படமும் மாவீரர் தின குறும்பட நிகழ்வில் பரிசு பெற்றது குறிப்பிடத்தக்கது. சுவிசில் அகதியாக வாழும் கணவன் மனைவிக்கிடையே ஏற்படுகின்ற பிரச்சனையை 15 நிமிடத்தில் இக்குறும்படம் விளக்குகிறது.

குறும்பட நிகழ்வில் முதல் மூன்று படங்கள் திரையிட்டதன் பின் சிறிய இடைவேள வழங்கப்பட்டது.

அது முடிந்து மற்றைய படங்கள் திரையிடப்படுவதற்கு முன்னே மூத்த கலைஞர் ரகுநாதன் அவர்கள் கௌரவிக்கப்பட்டார். வில்தானூஸ் கிராம தமிழ்மக்கள் சார்பாக புனர்வாழ்வுக்கழகத்தின் தலைவர் பொன்னாடை போhர்த்திக் கௌரவித்தார்.

<img src='http://www.appaal-tamil.com/images/stories/1.jpg' border='0' alt='user posted image'>
(கெளரவிக்கப்பட்ட மூத்த கலைஞர் ரகுநாதன் எற்புரை வழங்குகிறார்)

கௌரவிப்பை ஏற்ற ரகுநாதன் அவர்கள் ஏற்புரை நிகழ்த்தினார்.

இந்த நிகழ்வின் இறுதியாக பார்வையாளர்கள் குறும்படங்கள் பற்றிய தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டனர். கருத்துக்களில் பிரதானமாக தென்பட்டது இதுவரையில் ஏன் இந்தப்படங்கள் எங்களுக்கு காண்பிக்கப்படவில்லை என்பதே. ஏனெனில் அஜீவனின் குறும்படங்களான நிழல்யுத்தம், எச்சில் போர்வை போன்றவை 1997ம்,1998ம் ஆண்டுகளில் தயாரிக்கப்பட்டவையாகும். அதுவும் அப்படங்கள் பிரான்சில் நடாத்தப்பட்ட குறுப்படத் தெரிவுப்போட்டியில் கலந்து முதலிடத்தை பெற்ற படங்களாகும்.

இந்நிலையில் எங்கள் தொலைக்காட்சி ஊடகங்கள் அதனை திரையிடாததன் காரணங்கள் என்ன என்பது போன்ற கேள்விகள் கருத்துக்களாக முன்வைக்கபடட்டன. சலனம் நெறியாளர் க.முகுந்தன் சலனம் பற்றிய விளக்கவுரையை நிகழ்த்தினார்.

பல சிறுவர்கள் அந்த நிகழ்வில் பெற்றோருடன் கலந்துகொண்ட போதும் மிக அமைதியாக அவர்கள் குறும்படங்களை பார்த்தது நிகழ்ச்சியின் சிறப்பம்சமாக தென்பட்டது.
<img src='http://www.appaal-tamil.com/images/stories/3.jpg' border='0' alt='user posted image'>
(வில்தானூஸ் தமிழ்ச்சோலை பொறுப்பாளர் திரு.குணசேகரன் கருத்துரை வழங்குகிறார்)
<img src='http://www.appaal-tamil.com/images/stories/5.jpg' border='0' alt='user posted image'>
(சலனம் பொறுப்பாளர் திரு.க.முகுந்தன் கருத்துரை வழங்குகிறார்)
</span>

நன்றி:
http://www.appaal-tamil.com/index.php?opti...&id=95&Itemid=2
&
இளைஞன்.


- AJeevan - 07-26-2004

<span style='font-size:21pt;line-height:100%'><b>கலந்துரையாடலில் தெறித்த சில கருத்துகள்</b>

Idea சுமார் 5 வருடங்களாகியும் மாவீரர் போட்டியில் வென்ற படங்களைக் கூட எங்கள் தொலைக்காட்சிகள் ஏன் ஒளிபரப்ப வில்லை?
<b>- நடுத்தர வயதுடைய குடும்பத்தர்</b>

Idea இப்படங்களில் எமது வாழ்வையும், எம் பிள்ளைகளையும் பார்ப்பது போல இருந்தது.
<b>- நடுத்தர வயதுடைய குடும்பத்தர்</b>

Idea அந்த அக்கா மாதிரி எனக்கு அப்படியான திருமணப் பேச்சு வந்தால் நானும் எதிர்த்து விலகிப்போவேன் .............. நல்ல முடிவு
<b>- கனவுகள் தொடர்பாக 20 வயதுடைய பல்கலைக்கழக மாணவி</b>

Idea நாங்களும் இவ்வகையில் படங்கள் எடுக்கலாமே?
<b>- நடுத்தர குடும்பத்தர்</b>

Idea இதில் சில படங்களை நான் மீண்டும் பார்க்கிறேன் ஆனாலும் விறுவிறுப்பாகவே இருக்கிறது
<b>- குடும்பத் தலைவி</b>

Idea விலாசம் படத்தை எமது பிள்ளைகள் ஆர்வத்துடன் பார்த்தார்கள், இதில் இந்த இளைஞர்களது எண்ணங்கள் மிகத் தெளிவாக புலப்படுத்தப்படுகிறது. குறிப்பாக பாரதியின் கவிதை வரியில்….. « நல்லதோர் வீணை செய்தே அதை நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ ? ............ மெட்டு இதயத்தைத் தொடுகிறது.
<b>- குடும்பத்தர் ஒருவர்</b>

Idea அழியாத கவிதையில் நீண்ட இடைவெளியின் பின் காணும் தகப்பனாரை வரவேற்கும் மகனின் உப்புச் சப்பற்ற உறவாடல்............. எமது பாச உறவுகளுக்கான உண்மையின் மேல் மிகப் பெரிய கேள்வியை எழுப்புகிறது.
<b>- நடுத்தர குடும்பத் தலைவி</b>

Idea ஈழத் தமிழர் வித்தியாசமானவர்கள். தமது தாயக உணர்வுகளை மீட்டுக் கொண்டிருப்பவர்கள். துடிப்பானவர்கள். குறைந்த கால புகலிட இருப்பிலேயே நிறையவே செய்ய முனகிறார்கள்.
<b>- இப்பட நிகழ்வை முதன்முதலாகப் பார்த்த பிரெஞ்சுகார நண்பர்</b>

Idea இப்படியான முயற்சிகள் ஊக்கமடைய எம்மவர் தொலைக்காட்சிகள் கை கொடுக்கவேண்டும். இதற்கான அழுத்தத்தைக் கொடுக்க நாங்கள் கடிதங்களை அல்லது மின்னஞ்சல்களை இந்தத் தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு அனுப்பவேண்டும்.
<b>- பலத்த கரகோசத்தின் மத்தியில் கருத்துரைஞர்</b>

Idea \"நான் வாழ்க்கையில் நடிப்பதில்லை\"
<b>- மூத்த கலைஞர் இரகுநாதன்</b>

Idea \"அம்மா சிறிலங்காத் தமிழ் மாமாக்கள் இப்படி போத்திலால் குத்திச் சண்டை பிடிப்பார்களா ? \"
<b>- புலத்தில் பிறந்து வளரும் 9 வயது சிறுவன் தன் தாயிடம்</b>

Idea \"யாழ்ப்பாணச் சமூகம் விசித்திரமானது. தன்னை மிஞ்சிய பிள்ளையின் வளர்ச்சி கண்டே பொறாமை படக் கூடியது.........\"
<b>- ஏற்புரையின்போது இரகுநாதன்</b>

Idea நிழல்யுத்தம் புகலிட வாழ்வை மிகக் குறுகிய நேரத்தில் அழககாகச் சொல்கிறது.
<b>- நடுத்தரக் குடும்பத்தர்</b>

</span>http://www.appaal-tamil.com/index.php?option=content&task=view&id=95&Itemid=