Yarl Forum
கமலுக்கு டாக்டர் பட்டம்...! - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8)
+--- Forum: சினிமா (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=39)
+--- Thread: கமலுக்கு டாக்டர் பட்டம்...! (/showthread.php?tid=6930)



கமலுக்கு டாக்டர் பட்ட - kuruvikal - 07-16-2004

<img src='http://www.thatstamil.com/images23/cinema/kamal400a.jpg' border='0' alt='user posted image'>

நடிகர் கமல்ஹாசனுக்கு சத்யபாமா நிகர்நிலை பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் வழங்கவுள்ளது.

கமல், பிரபு, ஸ்னேகா, பிரகாஷ்ராஜ் ஆகியோர் நடிக்கும் 'வசூல்ராஜா எம்.பி.பி.எஸ்' படத்தின் பாடல் கேசட் விழா சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் நடைபெற்றது.

விழாவில் கமல், ஏவி.எம். சரவணன், பிரபு, கவிஞர் வைரமுத்து, இயக்குநர் சரண், இசையமைப்பாளர் பரத்வாஜ், சத்யபாமா நிகர்நிலை பல்கலைக்கழக துணைவேந்தர் ஜேப்பியார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

ஏவி.எம் சரவணன் கேசட்டை வெளியிட்டார். அதனையடுத்து, கமலின் 44 வருட கலை சேவையைப் பாராட்டி சத்யபாமா பல்கலைக் கழகம் சார்பில் டாக்டர் பட்டம் வழங்கப்படுவதாக ஜேப்பியார் அறிவித்தார்.

பின்னர் கமல் பேசுகையில்,

இங்கு பேசியவர்கள் என்னை சிவாஜியின் கலைவாரிசு என்றார்கள். பிரபு கூட, சிவாஜியின் மூத்த மகன் என்றே என்னைக் குறிப்பிட்டார். இது என்மீது அவர் வைத்திருக்கும் அன்பின் வெளிப்பாடு ஆகும். சிவாஜியின் கலைவாரிசு ஆவதற்கான தகுதிகளை நான் வளர்த்துக் கொள்ள வேண்டும்.

வைரமுத்துவின் பாடல்களைக் கேட்டால் எனக்கு தன்னம்பிக்கை வரும். இந்தப் படத்திலும் அத்தகைய பாடல்களை எழுதியுள்ளார். டாக்டர் பட்டம் எனக்கு வழங்கப்படும் ஒரு பெரிய பொறுப்பு, சுமை. அதை கவனமாகத் தக்க வைத்துக் கொள்வேன் என்றார்.

வைரமுத்து பேசுகையில், கமல் 44 வருடங்களாக சினிமாவுலகில் இருந்து கொண்டு மக்களை மகிழ்வித்துக் கொண்டு வருகிறார். அவருடைய சாதனைகளைத்தான் வெளியுலகம் அறியும். ஆனால், அதற்காக அவர் பட்ட சிரமங்கள் யாருக்கும் தெரியாது. 'வசூல்ராஜா எம்.பி.பி.எஸ்' படத்தை மருத்துவர் குலம் தவறான அணுகுமுறையில் கசப்பான பார்வை பார்க்க வேண்டாம்.

படத்தின் தலைப்பு பாத்திரத்தின் பெயரைத் தான் குறிப்பிடுகிறதேயொழிய, மருத்துவரைக் குறிப்பிடவில்லை என்றார்.

கமல் படத்துக்கு பரத்வாஜ் இசையமைப்பது இதுவே முதல்முறையாகும்.

இதனால் பாடல் கம்போசிங்கின் போது மெட்டுக்களை உற்சாகமாக அள்ளிக் குவித்தாராம் பரத்வாஜ். இயல்பாகவே இசை ஞானம் உள்ளவர்களாக கமலும், இயக்குனர் சரணும் இருப்பதால் பாடல்கள் அனைத்தும் சிறப்பாக வந்துள்ளதாக சொல்கிறார்கள்.

கமலும் இரண்டு பாடல்களைப் பாடியிருக்கிறாராம்.

thatstamil.com


- tamilini - 07-16-2004

கமலுக்கு வாழ்த்துக்கள்......!
ஓ கமலை வாழ்த்த எனக்கு தகுதி காணாதோ.......?
:oops: :oops:
இருந்தாலும் வாழ்த்துக்கள்.....! :!: