| Welcome, Guest |
You have to register before you can post on our site.
|
| Forum Statistics |
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244
Full Statistics
|
| Online Users |
There are currently 321 online users. » 0 Member(s) | 318 Guest(s) Applebot, Bing, Google
|
| Latest Threads |
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,302
|
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,231
|
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,604
|
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,292
|
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,631
|
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,057
|
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,460
|
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,477
|
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,025
|
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,238
|
|
|
| மலரே உன் வரம் வேண்டி.... |
|
Posted by: kuruvikal - 07-16-2004, 02:06 AM - Forum: கவிதை/பாடல்
- Replies (17)
|
 |
<img src='http://kuruvikal.yarl.net/archives/white_flower.jpg' border='0' alt='user posted image'>
மலரே....
ஒரு மொழி பேசு
என் செவிகள் இனிக்கப் பேசு....
உன் மெளனம் என்னைக் கொல்ல
நான் உனக்காய் கொண்ட நேசம்
என் நெஞ்சை அடைக்குது....!
உன்னோடு...
கொண்ட நேசம் பகிரத்தான் வழியில்லை
காத்திரமாய் பாசம் காட்டவும்
பாதை தெரியவில்லை...!
நீயோ திடகாத்திரம் என்று
தினமும் என்னை சிதைப்பது அறியாயோ....???!
மென்மையின் இலக்கணமே
என் இலக்கிய நாயகி ஆகாயோ....???!
உன் ஒரு மொழிக்காய் காத்திருப்பேன்
என் வாழ்விலக்கியத்தின்
முதலடி எடுத்து வைக்க.....!
இப்படிக்கு...
உன் வாய் மொழியில்
ஓர் வரம் வேண்டக் காத்திருக்கும்
பூங்குருவி...!
<img src='http://kuruvikal.yarl.net/archives/parrot2.jpg' border='0' alt='user posted image'>
நன்றி... http://kuruvikal.yarl.net/
|
|
|
| யாழ்.மாவட்ட கல்வித்தரம் சரிவடைகிறது |
|
Posted by: Kanani - 07-16-2004, 01:50 AM - Forum: தமிழ் /தமிழர்
- Replies (34)
|
 |
யாழ்.மாவட்ட பாடசாலைகளது கல்வித்தரம் சரிவடைகிறது - வெ.இளங்குமரன் தமிழீழக் கல்விக் கழகப் பொறுப்பாளர்
"...வடகிழக்கின் ஏனைய மாவட்டங்களோடு ஒப்பிடும் போது இங்குள்ள பாடசாலைகள் வளமுடையவனவாக உள்ளன. தனியார் கல்வி நிலையங்களும் அவ்வாறே ஆகும். நிலையிலும் கல்வி பின்னடைவு காண்பது வேதனை தருகிறது என விடுதலைப்புலிகளின் தமிழீழக் கல்விக் கழகப் பொறுப்பாளர் வெ.இளங்குமரன் தினக்குரலுக்கு தெரிவித்தார்..."
1999ம் ஆண்டுக்கு முன்னர் முதல் நிலையிலிருந்த யாழ்.மாவட்டக் கல்வி நிலை இன்று பின்னோக்கிச் செல்கிறது. இதற்கான பொறுப்பைப் பாடசாலைகளும் தனியார் கல்வி நிலையங்களும் ஏற்க வேண்டும். பாடசாலைகளது செயற்பாடுகளுக்குத் தனியார் கல்வி நிலையங்கள் குந்தகமாகவுள்ளன என்று பாடசாலைகளும், பாடசாலைகளில் படிப்பு நடைபெறுவதில்லை. நாங்கள் படிப்பிப்பதால்தான் மாணவர்கள் பரீட்சைகளில் சித்தியடைகின்றனர் என்று தனியார் கல்வி நிலையத்தினரும் உரத்துப் பேசுகின்றனர்.
வடகிழக்கின் ஏனைய மாவட்டங்களோடு ஒப்பிடும் போது இங்குள்ள பாடசாலைகள் வளமுடையவனவாக உள்ளன. தனியார் கல்வி நிலையங்களும் அவ்வாறே ஆகும். நிலையிலும் கல்வி பின்னடைவு காண்பது வேதனை தருகிறது என விடுதலைப்புலிகளின் தமிழீழக் கல்விக் கழகப் பொறுப்பாளர் வெ.இளங்குமரன் தினக்குரலுக்கு தெரிவித்தார்.
முன்னைக்காலத்தில் யாழ்.மாவட்டம் முழுவதற்கும் ஒரே கல்விப் பணிப்பாளர் ஒரே ஒரு கல்விப் பணிமனையிலிருந்து கடமையாற்றினார். தற்போது ஜந்து வலயங்களாகப் பிரிக்கப்பட்டு ஜந்து கல்விப் பணிப்பாளர்களும் அவர்களுக்கான ஆளணியினரும் கடமையாற்றுகின்றனர். இதனால் ஒரே தொகையான பாடசாலைகளை வழிநடத்துவதற்கான நிர்வாக வலு 5மடக்கு அதிகரிக்கப்பட்டுள்ளது என்று கொள்வதிற் தவறு இல்லை. இப்படியான நிலையிலிருந்தும் கல்வியில் வீழ்ச்சி காண்பது விளங்கிக் கொள்ள முடியாத ஒன்றாகக் காணப்படுகிறது என்று மேலும் அவர் குறிப்பிட்டார்.
கேள்வி - என்னத்தை அடிப்படையாக வைத்துக் கொண்டு கல்வியில் யாழ்.மாவட்டம் பின்தங்கி விட்டது என்று கூறுகின்றீர்கள்?
பொதுப் பரீட்சை முடிவுகள் வந்ததும் ஊடகங்கள் வாயிலாக A/L பரீட்சையில் 3A எடுத்தது எத்தனைபேர்? O/L பரீட்சையில் 10A எடுத்தது எத்தனை பேர்? என்று சிறந்த பெறுபேறுகளை மட்டும் பாடசாலைகள் பறை தட்டி வெளியிடுகின்றன. இவற்றை ஒப்பீடு செய்து சிறந்த அடைவுடைய பாடசாலை எதுவென்று கணிப்பீடுகளும் நடைபெறுகின்றன. அவ்வளவோடு அலுவல்கள் சரி. இங்கு தரும் புள்ளி விபரங்களை அவதானியுங்கள்.
கேள்வி - யாழ் மாவட்டத்தில் ஆசிரியர் பற்றாக்குறையால் இப்பாதிப்பு ஏற்பட்டிருக்குமா?
அது தவறு. வடகிழக்கு மாகாணத்தில் ஆசிரியர் பற்றாக்குறை உண்டுதான். ஆனால் ஒப்பீட்டளவில் யாழ்.மாவட்டத்தில் மற்றைய மாவட்டங்களை விட ஆசிரியர்கள் பற்றாக்குறை குறைவு. அதிலும் யாழ்ப்பாணக் கல்வி வலயத்தில் 119 ஆசிரியர்கள் ஆளணியைவிடக் கூடவுள்ளனர். ஏனைய நான்கிலுமே பற்றாக்குறை உண்டு. சில பாடங்களுக்குத் தகுதியான ஆசிரியர்கள் இல்லாது போனால் சுய முயற்சியுள்ள அதிபர்கள் அவ்விடயங்களுக்குத் தொண்டர் ஆசிரியர்களை நியமித்து சேவையாற்றுகின்றனர்.
கேள்வி - அப்படியானால் வீழ்ச்சிக்குரிய காரணங்கள் எவை எனக் கருதுகின்றீர்கள்?
<img src='http://www.yarl.com/forum/files/chat1.jpeg' border='0' alt='user posted image'>
கற்பித்தலிலுள்ள குறைபாடுகள் தான் முக்கிய காரணம். கல்வி அபிவிருத்தியில் ஆசிரியர்கள் இன்றியமையாத இடத்தை வகிக்கின்றார்கள். அவர்களது உளப்பாங்குகள் பெரிதும் மாறியுள்ளன. கிளிநொச்சி, முல்லைத்தீவு. மாவட்டங்களில் நல்லபெறுபேறுகள் கிடைத்துவருவதற்கு ஆசிரியர்கள் அர்ப்பணிப்போடு ஈடுபட்டு வருகின்றமை தான் முக்கிய காரணம் ஆகும். அத்தோடு மாணவர்களும் சொந்த முயற்சியாக, ஆர்வமுடன் அங்கு கற்கின்றனர். ரியூட்டறிகள் அம் வட்டங்களில் இருந்தாலும் அவற்றின் தாக்கம் யாழ்ப்பாணத்தைக் காட்டிலும் ஒப்பீட்டளவில் குறைவு.
பாடசாலை 2.30க்கு முடிவடைத்தால் பெரும்பாலான பாடசாலைகள் வெறிச்சோடிவிடுகின்றன. அண்மையிலுள்ள பிள்ளைகளுக்குச் சில பாடசாலைகளில் அனுமதி வழங்கப்படுவதில்லை. அதுவும் இந்நிலைமையைக்கொரு காரணமாகும்.
படிப்பு மட்டும் பின்னடையவில்லை. விளையாட்டுத் துறைகளுங்கூட அருகிவருகின்றன. குறிப்பாக நகர்ப்புறப் பாடசாலைகளில் இப்பின்னடைவைத் தெளிவாக அவதானிக்க முடிகிறது.
கேள்வி - கல்விக் கழகம் இப் பின்னடைவுகளைச் சீராக்க நடவடிக்கை எடுக்கிறதா?
கல்விக் கழகம் நேரடியாக இவ்விடயங்களிற் பிரவேசிப்பதில்லை. பிரவேசிப்பது சரியுமல்ல. ஆனால் தான் கண்டறிந்த விடயங்களை மாகாணக் கல்வி அமைச்சு மட்டத்தில் சமர்ப்பித்து அவற்றை நடைமுறைப்படுத்தும்படி ஆலோசனைகள் வழங்குகின்றது.
கேள்வி - யாழ்.மாவட்டத்தில் கல்வி அபிவிருத்திக்கு நீங்கள் கூறும் ஆலோசனைகள் என்ன?
மத்திய கல்வி அமைச்சோ தேசியக் கல்வி நிறுவனமோமாற்றான் தாய் மனப்பான்மையுடன் வடகிழக்கு மாகாணத்தைப் பொறுத்த வரையிற் செயற்படுகின்றன. இங்கு சில கட்டிட வேலைகள் நடைபெற்றுள்ளவே ஒழிய அதற்கு அப்பால் எதுவுமில்லை. எனவே நாம் ஒவ்வொருவரும் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு எமது தேசத்தின் விடிவுக்கு உழைக்க வேண்டும். அப்படியான ஒரு மனநிலை கல்விச் சமூகத்தில் ஏற்படாதுவிட்டால் விடிவுகாண முடியாது.
<img src='http://www.yarl.com/forum/files/chat2.jpeg' border='0' alt='user posted image'>
கல்வி என்றால் முதன்மைப் பொறுப்புடையவர்கள் ஆசிரியர்கள். யாழ்.மாவட்டத்தில் முன்னை நாள் ஆசிரியர்கள் எமது சமூகத்தினால் புகழ்ந்து பேசப்படுவார்கள். இன்றும் அந்த நிலை ஏற்பட வேண்டும்.
கல்வித் திணைக்களத்தின் மேற்பார்வையிலேயே ஆசிரியர்களை வளர்த்தெடுத்தல், வளப்படுத்தல் எல்லாம் தங்கியுள்ளது. எனவே இவ் அதிகாரிகள் அர்ப்பணிப்போடு களத்தில் இறங்க வேண்டும்.
ஆசிரியர் பற்றாக்குறை உண்டுதான். அதை மட்டும் குறிப்பிட்டுச் சமாளித்துக் கொண்டிராது இருக்கும் ஆசிரியர்களை உரிய முறையில் பங்கீடு செய்ய வேண்டும்.
1990களில் ஏற்பட்ட கல்வி இழப்புக்களை வடமராட்சி கிழக்கில் ஈடு செய்ய நாம் ஆசிரியர்களை அங்கு அனுப்ப நடவடிக்கை எடுத்தோம். சேவையாற்றும் கால இறுதி எல்லையை இடமாற்றக் கடிதத்திலேயே போட்டு அந்த ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டது. அதனால் ஆசிரியர்கள் உற்சாகமாகச் சென்று வேலை செய்தனர். இதனால் நல்ல அடைவுகளையும் காண்டோம். அதேபோல இன்று தீவகம்,வலிகாமம், போன்ற பகுதிகளுக்கு ஆசிரியர் பங்கீடு செய்யப்பட வேண்டும். யாழ். வலயத்தில் மேலதிகமாக 119 ஆசிரியர்கள் இருந்தும் அதே வலயத்தில் அச்சுவேலி, கோப்பாய், பகுதிகளில் பற்றாக்குறை உண்டு என்றால் நாம் என்ன தான் செய்யலாம்? ஒரு பொதுத் திட்டத்தை இறுக்கமாகக் கடைப்பித்து நிலைமைகளைச் சீராக்க வேண்டும்.
பெற்றோர்கள் தமது பிள்ளைகளுக்கு நல்ல கல்வியை வழங்க வேண்டுமென்று அங்கலாய்க்கின்றனரே ஒழிய சரியான வழியைக் கண்டறிவதில்லை.
பாடசாலைகளும், ரியூட்டரிகளும் அலையும் பிள்ளைகள் பரிதாபத்துக்குரியவர்கள். இப் பாடசாலைகளும் ரியூட்டறிகளும் சேர்ந்து ஏற்படுத்திய சாதனைகளை மேலே கண்டோம். மாணவர்கள் சுயமாகக் கற்பதனாலேயே இன்று இலங்கையில் முதலாவது இரண்டாவது இடங்களில் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்கள் விளங்கக் காரணமாகும். அதனால் அங்கு ஆசிரியர்களும் மகிழ்வோடு கற்பிக்கின்றனர். எனவே சுயகற்றலைப் பெற்றோரும் ஆசிரியர்களும் ஊக்குவிக்க வேண்டும்.
தொழில்நுட்பப் பாடங்கள் பற்றியும் ஒரு விடயத்தை இங்கு குறிப்பிட விரும்புகிறேன். யாழ்.மாணவர்கள் வர்த்தக பாடத்தை மட்டும் பெருமளவுக்கு இன்று படிக்கின்றார்கள். இலத்திரனியல் தொழில்நுட்பம், நிர்மாணத் தொழில்நுட்பம் முதலான வாழ்க்கைக்கு மிகுந்த பயனளிக்கக்கூடிய பாடங்கள் பல இருந்தும் எமது மாணவர்களிடம் அவை சென்றடையவில்லை. சுமார் 95 சதவீதமான சிங்களமாணவர்கள் இப்பாடங்களைக் கற்க 5 வீதத் தமிழ் மாணவர்களே இவற்றைக் கற்கின்றனர். இதனாற் பின்விளைவுகள் விபரீதமாகவிருக்கும் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
சங்கரன் தினக்குரல்
|
|
|
| அழகான களத்தை அசிங்கம் பண்ணலாமா??? |
|
Posted by: Mayuran - 07-16-2004, 12:52 AM - Forum: உங்கள் கருத்துக்கள்
- Replies (27)
|
 |
அழகான களத்தை அசிங்கம் பண்ணலாமா???
தமிழில் உறவாட கருத்தாட உருவாக்கப்பட்டிருக்கும் இத்தளத்தில் திருவிழா மலசலகூடம் போல் சிலர் அப் பகுதிக்கு ஒவ்வாத தேவையற்ற கருத்துக்களை எழுதி அரிய கருத்தாடலை அசிங்கப்படுத்துகிறார்களே! அவர்கள் புரிந்துகொண்டு ஒழுங்கான முறையில் கருத்தாடினால் களம் இன்னும் சிறப்பாக இருக்கும்.
இது என் தனிப்பட்ட கருத்து.
|
|
|
| நான் தேடும் உலகு.....! |
|
Posted by: kuruvikal - 07-15-2004, 03:10 PM - Forum: கவிதை/பாடல்
- Replies (3)
|
 |
<img src='http://kuruvikal.yarl.net/archives/44414_wallpaper280.jpg' border='0' alt='user posted image'>
பருவ வயது
ஆசைகள் அறுத்தேன்
ஆடிப்பாடும் துடிப்புத் துறந்தேன்
கண் முன்னே மனித அவலங்கள்
கண்ணீரைக் காணிக்கையாக்கி
அதுவும் தீர்ந்துபோயாயிற்று....!
காலங்கள் மட்டும் கடுகதியாய்
கடைசியில் முடிவெடுத்தேன்
மனிதனுக்காய் மனிதனாய் வாழ
மனிதம் தன்னை என்னோடாவது
இயன்றவரை சுமந்திட....
அதற்காய் நான் ஜேசுவுமல்ல
அன்னை திரேசாவும் அல்ல
மாநிலம் வாழ் அற்ப மனிதன்....!
நாளை என் வாழ்வு
கனவுகளோடே சமாதியாகலாம்
அதனால் இன்றே திறந்தேன்
என் மனக்கதவு...
இதோ காண்பீர் நான் தேடும் அந்த
ஜீவகாருணியம் நிறை அன்புலகை....!
நன்றி... http://kuruvikal.yarl.net/
|
|
|
| என்னை வரவேற்பீர்கள்தானே??? |
|
Posted by: Mayuran - 07-15-2004, 12:08 AM - Forum: அறிமுகம்
- Replies (21)
|
 |
அனைவருக்கும் வணக்கம்
நீண்ட இடைவெளிக்குப் பின்னர் மீண்டும் யாழின் கருத்துக் களத்தினு}டாக உங்களோடு இணைந்துகொள்ள வந்திருக்கின்றேன். என்னை வரவேற்பீர்கள்தானே???
தூர தேசம் வாழ்ந்தாம் தூய தழிழை மறவேன்
|
|
|
| இயக்குநர் பாலா கரம்பிடித்தார். |
|
Posted by: AJeevan - 07-13-2004, 09:32 PM - Forum: சினிமா
- Replies (15)
|
 |
<b>இயக்குநர் பாலா கரம்பிடித்தார்.</b><img src='http://www.yarl.com/forum/files/thumbs/t_01.jpeg' border='0' alt='user posted image'>
[size=15]மணமகன் : இயக்குநர் பாலா
மணமகள் : முத்து மலர்
மணநாள் : 5.7.2004
இடம் : பி.டி.ஆர். திருமண மண்டபம், தல்லாகுளம், மதுரை.
<img src='http://www.yarl.com/forum/files/thumbs/t_pic-5.jpeg' border='0' alt='user posted image'>
பிரபல திரைப்பட இயக்குநர் பாலா, பெரியகுளம் நிலச்சுவான்தாரர் கே.எம்.மகாதேவன் என்பவரின் மகள் முத்துமலரை, 5.7.2004 அன்று கரம்பிடித்தார். இவர் பாலாவிற்கு நெருங்கிய உறவினர் மற்றும் பட்டதாரிப் பெண்.
கல்யாணத்தின் சில ஹைலைட்ஸ்...
:!: மணப்பெண்ணின் தந்தை காங்கிரஸ் பிரமகர் என்பதால் ஜி.கே.வாசன், மீனாட்சி மிஷன் டாக்டர் சேதுராமன், முன்னாள் சபாநாயகர் பி.டி.ஆர்.பழனிவேல்ராஜன், மு.க.அழகிரி உள்ளிட்ட பல்வேறு அரசியல் பிரமுகர்கள் வந்திருந்து வாழ்த்தினார்கள்.
:!: நடிகர் சூர்யா, தந்தை சிவகுமார், தம்பி கார்த்திக், தங்கை பிருந்தா மற்றும் தயாருடன் ஆஜராகி இருந்தார். மாப்பிள்ளை தோழனாக நின்று சூர்யா செய்த வேலைகள் அனைவரையும் பிரமிக்க வைத்தன.
:!: இயக்குநர் மணிரத்னம், பாரதிராஜா, தரணி, பாக்யராஜ், மனோபாலா, எஸ்.பி.முத்துராமன், ஷங்கர் மற்றும் தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் உள்ளிட்ட சினிமாப் பிரமுகர்கள் திருமணத்திற்கு வந்திருந்த வாழ்த்தினார்கள்.
:!: நடிகர் விக்ரம், தனது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் வந்திருந்தார். ஹீரோயிசம், பந்தா இல்லாமல் பாலாவிற்கு பக்கத்திலேயே இருந்து கூட்டத்தினை ஒழுங்குபடுத்தியது அவரது பணிவுக்கு எடுத்துக்காட்டு!
:!: கருணாஸ் குழுவினரின் இசை நிகழ்ச்சி படு ஜாலி! தவிர, மதுரை நகர போலீஸ் குழுவின் பேண்டு வாத்திய நிகழ்ச்சியும் நடந்தது.
:!: நடிகர்களைப் பார்க்க மதுரை ரசிகர்கள் கூட்டம் அலை மோதியதால் மண்டபமே நிரம்பி வழிந்தது. ஸ்டண்ட் மாஸ்டர் சிவா, பெரியகுளம் ஜிம், தனியார் செக்யூரிட்டி மற்றும் பெரியகுளம் வாலண்டயர்ஸ் ஆகியோர் பாதுகாப்புப் பணி மற்றும் கூட்டத்தை சீர்படுத்தினார்கள்.
:!: சுஹாசினி, 'பிதாமகன்' சங்கீதா, ரோகிணி ஆகிய நடிகைகளும் கலர்ஃபுல்லாக வந்திருந்தனர். சூர்யா மாப்பிள்ளை தோரணையில் பட்டு வேட்டி அணிந்து கலக்கினார். அவரது தம்பியும் அண்ணன் காட்டிய வழியில் பட்டு வேட்டியில் மின்னினார்.
:!: மணமக்கள் ஹனிமூனுக்காக அமெரிக்கா செல்லவிருக்கிறார்களாம். அமெரிக்காவிலிருந்து திரும்பியதும் தனுஷை வைத்து ஒரு படம் இயக்கப் போகிறார் பாலா.
http://www.kumudam.com/
புதுமணத்தம்பதிகளுக்கு வாழ்த்துகள்.
|
|
|
| தொடரும் தவிப்பு |
|
Posted by: AJeevan - 07-13-2004, 04:35 PM - Forum: நூற்றோட்டம்
- Replies (1)
|
 |
<b>'தொடரும் தவிப்பு'</b>
இது பாதிக்கப்பட்ட பெண்களின் வலி..
<b>'தொடரும் தவிப்பு'</b> என்றொரு நாவல் மூலம் தமிழ் எழுத்துலகில் பரபரப்பைக் கிளப்பியிருக்கிறார் பூங்குழலி. பிரபல அரசியல்வாதி பழ. நெடுமாறனின் மகள்.
[b]<span style='color:red'>ராஜீவ்காந்தி கொலைவழக்கில்
உச்சநீதிமன்றம் உறுதிப்படுத்தியபடி
தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட
நான்கு பேரில் ஒருவரான
பேரறிவாளனின் தாய் அற்புதம்மாளின்
உணர்வுகள்தான்.........
நாவலின் களம்!
அப்பாவைப் போலவே ஒடிசலான தேகம்.. சாந்தம் தவழும் கண்கள்.. எப்போதும் புன்னகை வழியும் இதழ்கள்.. வீணையிலிருந்து தெறித்து வந்தது போன்ற மிக மெல்லிய குரல்.. எம்.சி.ஏ. பட்டதாரி. எம்.ஃபில் படிக்கிறார். படிப்பின் மேன்மை தெரிகிறது பேச்சில். இதுதான் பூங்குழலி!
ஒரு மாலைநேரத்தில் அவரைச் சந்தித்துப் பேசினோம்..
"அதென்ன பூங்குழலி.. புனைபெயரா?"
"அப்பா வெச்ச பெயர். ஆனா, பள்ளி ஆவணங்கள்லயும் தோழிகளுக்கும் நான் உமாதான். இப்போ இந்தப் புத்தகம் மூலமா, மீண்டும் 'பூங்குழலி' பிறந்திருக்கா.." சிநேகமாக சிரிக்கிறார்.
தந்தை தீவிர அரசியலில் இருந்தாலும், பூங்குழலியை அதிகம் ஈர்த்தது அவரது தீவிர எழுத்துதானாம். அந்த உத்வேகத்தோடு இவர் எழுதிய பல கட்டுரைகளும், கவிதைகளும் சிறுபத்திரிகைகளில் வெளிவந்துள்ளன.
"பத்திரிகையாளராகறதுதான் என்னோட ஆசை. அது நிறைவேறல. ஆனாலும், எழுத்துல ஆர்வம் இருந்ததால எழுத்தாளராகணும்னு முடிவு செய்தேன். அப்பா எனக்கு பெரிய பலம். என்னோட பார்வை, சிந்தனை, செயல்பாடு எல்லாத்துலயும் அப்பாவின் பாதிப்பு இருக்கும். எழுதியதை வெளியிட நான் தயங்கினப்போ, 'உன்கிட்ட ஒரு திறமை இருந்தா, அது சமுதாயத்துக்கு பயன்படணும். அதுதான் நேர்மை. இல்லேன்னா அது துரோகம்'னு சொல்லி, நாலு சுவர்களுக்குள்ள இருந்த என் எழுத்துக்களை வெளிக்கொண்டு வந்தவர் அப்பாதான்.." 'தொடரும் தவிப்பு' நூலிலிருந்து..
"எட்டு ஆண்டுகளாக சிறைச் சுவர்கள் மட்டுமே என்பது வெறும் சொல்லுக்காகச் சொன்னதல்ல. மிகையுமல்ல. ஏனெனில் பூந்தமல்லியில் நீதிமன்றமும் சிறையும் ஒரே வளாகத்தில் அமைந்திருந்தபடியால் நீதிமன்ற விசாரணை நாட்களில்கூட வெளி உலகைப் பார்க்கும் வாய்ப்பு இல்லாமல் போனது.
சிறை, நீதிமன்றம், வழக்கு சார்ந்த மனிதர்கள் மற்றும் காண வரும் உறவினர்கள், நண்பர்கள் தவிர வேறு மனித முகங்களே காணாது ஓடிவிட்டது 8 ஆண்டுகள். பகலிலாவது பரவாயில்லை. மாலை 6 மணிக்கு மேல்தான் இன்னும் கொடுமை. தனி அறையில் பூட்டிவிட்ட பிறகு தனிமை, தனிமை, தனிமை.. மட்டுமே துணை.
இப்படி ஒரு வாழ்வை மகன் வாழும்போது, எத்தகு வாழ்க்கையுமே கசந்துவிடுமே ஒரு தாய்க்கு. அந்த நிலையில்தான் இருந்தார் அற்புதம். அறிவின் நெற்றியில் கம்பி பதிந்த தடத்தை காணும்போதெல்லாம் தன் மகன் சிறைக் கம்பிகளூடே வெளியே பார்த்துக்கொண்டிருப்பான் என்பது புரிந்தது.
ஒருவேளை, விசாரணையின் முடிவில் அவர்கள் குற்றமற்றவர்கள் என்பது நிரூபணமாகி விடுதலையானால் கூட, இழந்துவிட்ட இந்த எட்டு வருட வாழ்க்கையை யார் மீட்டுத் தருவார்கள்? இந்த அரசாங்கமா, காவல்துறையா, சிறை அதிகாரிகளா அல்லது இத்தனைக்கும் காரணமான சி.பி.ஐ.யா?
இந்தக் கேள்வி அற்புதத்தின் மனதில் எழும்பாத நாளே இல்லை எனலாம். ஒவ்வொரு நாள் கழியும்போதும் 'இதோ என் மகன் வாழ்வில் பாதிக்கப்பட்ட மற்றொரு நாள் முடிந்தது' என்ற எண்ணம்தான் ஏற்படும். ஒவ்வொரு மகிழ்ச்சியான நொடிகளின்போதும், 'என் மகன் இதை அனுபவிக்காது வாடுகிறானே' என்ற வருத்தமே மேலோங்கும்.."
"இந்த நாவலை சமீபத்துல தான் எழுதினீங்களா?"
"இல்ல.. 2001ம் வருஷம் ஜூன் மாதம் தொடங்கி செப்டம்பர்ல முடிச்சேன். நாவலோட கரு ரொம்ப சென்சிடிவானதுங்கிறதால கொஞ்சம் பொறுத்து வெளியிடலாம்னு இருந்தோம். அதுக்குள்ளே அப்பாவை கைது பண்ணி உள்ளே வச்சுட்டாங்க. அப்பா வெளிவந்ததும் நூலும் வெளிவந்திருக்கு.." என்று நகைச்சுவையோடு பேசிக்கொண்டிருந்தவர், நூலின் மையக்கருவைப் பற்றிக் கேட்டதும் முகம் மாறினார். எங்கிருந்தோ ஒரு தீவிரமும், சோகமும் வந்து அப்பிக்கொள்ள வேகமாக, ஆனால் அழுத்தமாகக் கொட்டத் தொடங்கினார்.
"அற்புதம்மாள்தான் என் புத்தகத்தோட கரு, உரு, கதாநாயகி எல்லாமே! ராஜீவ்காந்தி கொலை வழக்கில் மரணதண்டனை விதிக்கப்பட்ட 26 பேர்ல ஒருத்தரான அறிவு என்கிற பேரறிவாளனின் தாய். தூக்குத் தண்டனையை எதிர்நோக்கி, தனிமைச் சிறையில் வாடும் அறிவு, சிறை செல்லும்போது 19 வயசு இளைஞன்.
அவர் உள்பட 26 பேருக்கு தூக்குங்கிற விஷயம் என்னை ரொம்பவே உலுக்கிடுச்சு. அப்பாதான் அந்த கேஸை நடத்தியதால, எல்லா சம்பவங்களையும் அருகே இருந்து பார்க்க வாய்ப்பு கிடைச்சுது.. அப்போதான், தண்டனை விதிக்கப்பட்டவங்களைவிட, அவங்களைச் சுத்தி இருக்கறவங்க எவ்வளவு மோசமா பாதிக்கப்படறாங்கன்னு புரிஞ்சுக்கிட்டேன்.
அவ்வளவு பேரோட ஒட்டுமொத்த வேதனையை அற்புதம்மாள்கிட்ட பார்த்தேன். பன்னிரண்டு வருஷமா மகனை மீட்டெடுக்கணும்னு தனியரு மனுஷியா போராடுற அற்புதத் தாய் அவங்க..." சிறிய இடைவெளி விட்டார் பூங்குழலி. அவரே தொடரட்டும் எனக் காத்திருந்தோம்.
"அப்பா சொல்ற மாதிரி, நமக்குத் தெரிஞ்ச விஷயங்களை எல்லோருக்கும் தெரியப்படுத்தறது என் கடமைனு நினைச்சேன். அப்பாகிட்டே கேட்டேன்.. 'நல்ல விஷயம்மா. செய்'னு தட்டிக்கொடுத்தார். அற்புதம்மாளை சந்திச்சு, பன்னிரண்டு வருஷக் கதையைச் சொல்லணும்னு கேட்டப்ப, தயக்கத்தோட சம்மதிச்சாங்க. தன் பிள்ளைக்கு எதுவும் ஆயிடக்கூடாதேனு பயந்தாங்க. அப்பாவின் மேற்பார்வையில்தான் நூல் வெளிவரும் என்பதால் சம்மதிச்சாங்க.
மகனைச் சிறையில் பார்க்கப் போனப்போ அனுபவித்த மனப் போராட்டங்களை விவரிக்கும்போது அந்தத் தாய் அப்படியே இறந்த காலத்தில் உறைஞ்சுடுவாங்க. சில சமயம் ஒரு வெற்றுப் பார்வை மட்டும்.. பல சமயம் கதறல்.. வேதனையை மறைத்தபடி பிசிறடிக்காத குரலில் சொல்வாங்க. ஒரு தாயை இப்படி கஷ்டப்படுத்தி ஒரு புத்தகம் எழுதணுமானுகூட ஒவ்வொரு சமயம் தோணும். யப்பா.." அந்த பயங்கரத்தை நினைத்து தோள் குலுக்கி சிலிர்க்கிறார் பூங்குழலி.
"உச்சநீதிமன்றத் தீர்ப்புக்குப் பின் விடுதலையாகி வெளியே வந்தவர்களில், பத்மா, செல்வி, சாந்தி மூணு பேரையும் சந்திச்சேன். அவங்கள்ல ரெண்டு பேர் கைக்குழந்தைகளுடன் உள்ளே போனவங்க. அவங்களைப் பார்த்தபின், பாதிக்கப்பட்ட ஒட்டுமொத்தப் பெண்களின் வலியையும் பதிவு செய்தேன்.
சில சித்ரவதை சம்பவங்களை எழுதும்போது, உணர்வுகள் மரத்துப்போன நிலையில், பேனாவைக் கீழே போட்டுட்டு அப்படியே படுத்துடுவேன்.." & கலங்கிய கண்களோடு கூறுகிறார்.
"நூலுக்கான விமரிசனங்கள் வரத் தொடங்கியிருக்குமே?"
"இன்னும் முழு வீச்சில் வரலை. நண்பர்கள், உறவினர்கள் படிச்சுட்டுப் பாராட்டினாங்க. ஆனா, அது மட்டும் எனக்குப் போதாது.." என்றவர், தனக்குக் கிடைத்த பெரிய விருதாக எண்ணிப் பூரிப்பது தந்தையின் பாராட்டைத்தான்.
"நூலில் நீதிமன்றக் காட்சியைப் படிச்சிட்டு, உதடு பிதுங்க அழுதார் அப்பா. வார்த்தைகள் இல்லாத பெரிய பாராட்டு அது. நல்லாயிருக்குன்னு சொல்லியிருந்தாக்கூட அந்த திருப்தி இருந்திருக்காது. இந்தப் புத்தகத்தைப் படிச்சுட்டு, அரசியல் கலப்பில்லாத இளைஞர்கள் அந்தத் தாய்க்காக ஒரு சொட்டு கண்ணீர் விட்டா, அதுவே போதும். முக்கியமா, பெண்கள் கட்டாயம் இதைப் படிக்கணும்.." என்று உணர்ச்சிவசப்படுகிற பூங்குழலி, அடுத்த நாவலுக்கு தயாராகிவிட்டார். வீரப்பனைத் தேடும் வேட்டையில் அதிரடிப் படையால் பாதிக்கப்பட்ட பெண்கள்தான் கதைக் கருவாம்.
பெண் எழுத்தாளர்கள் நிறைய வரவேண்டும் என்கிற தாகம் இருக்கிறது இவருக்கு.
"பொதுவா, பெண்கள்னாலே வம்பு பேசுற வங்கனு நினைக்கிறாங்க. வம்புங்கிறதை தன்னைச் சுத்தி நடப்பதை உற்றுநோக்கி கிரகித்துக் கொள்ளும் திறனாத்தான் நான் பார்க்கிறேன். ஆணைவிட பெண்ணுக்கு இயல்பிலேயே இது அதிகம். அதை ஏன் எழுதுறது போன்ற விஷயங்களில் ஆக்கபூர்வமா பயன்படுத்தக்கூடாது? அதைத்தான் நான் செய்றேன்" என்கிறார் அழகாக.
-மித்ரா </span>
Thanks:
http://www.vikatan.com/aval/2004/jul/02072.../aval0107.shtml
|
|
|
| மென்மை வேண்டுமெனக்கு |
|
Posted by: Paranee - 07-13-2004, 10:47 AM - Forum: கவிதை/பாடல்
- Replies (16)
|
 |
வைரமுத்துவின் கவிதை வாசித்தபோது என் எண்ணம் வரைந்தவை, எப்போதுமே அப்படித்தான் அவரின் வரிகள் கண்டவுடன் எனது கரங்களும் வரையத்தொடங்கிவிடும்.
(எப்போதும் அனுபவக்கவிதைகளும், கதைகளும் அழுத்தம் தருபவையாகவும் அழகுறுபவவையாகவும் அமைந்துகொள்கின்றன. ம் இது எனக்கு கேள்விஞானக்கவிதை )
[u][b][size=18]மென்மை வேண்டுமெனக்கு
<img src='http://www.yarl.com/forum/files/sm_2_271.jpg' border='0' alt='user posted image'>
மடியேற்றி வைத்த பாதங்கள்
வாஞ்சையுடன் வருடும் கரங்கள்
உச்சந்தலை தொடங்கி
உள்ளங்கால் வரையான உன்
இதழ்வருடல் இறுக்கத்துடன் வேண்டும்
ஆதிக்கம் இல்லாத ஆர்ப்பாட்டம் காட்டாத
அந்தரங்கம் மறைக்காத உன் ஆண்மை மறந்த
பெண்மை வேண்டும்
பூப்பறிக்க நீ படையெடுப்பு எதற்கு ?
புன்னகை ஓன்றே போதும்
என் பெண்ணகை விழிக்கும்
காமத்தீ அணைக்க
நீ எனக்குள் கடல்தேடும் போதும்
காதல் மணம் வீசிக்கொள்ளவேண்டும்
புலரும் பொழுதிலும் நீ எனக்குள்
புதையல் தேடவேண்டும்
தேடிக்களைத்து தேய்நிலவாகவேண்டும்
மார்போடுனையணைத்து எனை மஞ்சமாக்கவேண்டும்
தாரம் என்றென்னை தனித்துவைக்காமல்
உன் தாய்மடிவாசம்
என்னுள்ளேயும் நீ காணவேண்டும்
அழும்போது அணைக்கவேண்டும்
ஆனந்தத்தில் என்னை ஆலவட்டம்போடவேண்டும்
எந்த துளி எங்கே வீழ்ந்ததென்று
சமுத்திரம் ழூழ்கி தேடாமல்
என் மனதில் தேடி
என்னுள்ளம் நிறைக்கவேண்டும்
பிரிவு என்ற வார்த்தையை
நீ மறந்து வாழவேண்டும்
எனை மறக்காத ஓர் நொடிவேண்டும்
தாய்மை நான் கண்டால்
தாயாக நீ மாறவேண்டும்
சேயாக நான் மாறி சே~;டைகள் செய்திடும்போது
சினக்காமல் வாழவேண்டும்
மாதத்தில் ழூன்று நாட்கள்
மரணவேதனை நான் படும்போது
மார்போடு அணைக்கவேண்டும்
மலர் வருடல் தரவேண்டும்
உன் அன்பின் மழையில்
என் அடிவயிற்று தீக்கொழுந்து
அணைந்துபோகவேண்டும்
இருபத்தைந்தில் கமழும் அன்புமணம்
எழுபத்தைந்திலும் நிலைக்கவேண்டும்
வாரிசுகள் எமக்கு வந்தாலும்
வாஞ்சையுடன் எனை தினம் அணைக்கவேண்டும்
செய்வாயா ?
சோந்துகொள்கின்றேன்
|
|
|
| அன்பே..! நலமா......? |
|
Posted by: kavithan - 07-13-2004, 04:21 AM - Forum: கவிதை/பாடல்
- Replies (177)
|
 |
<span style='font-size:30pt;line-height:100%'><b>அன்பே நலமா......?</b></span>
<img src='http://www.yarl.com/forum/files/srikan5555.jpg' border='0' alt='user posted image'>
[b]<span style='font-size:25pt;line-height:100%'>
அன்பே..! நலமா......?
நீ அருகில் இருக்கும் போது,
உன் அன்பு எனக்கு தெரியவில்லை.
நீ நெருங்கி வரும் பொழுது,
உன் பாசம் எனக்கு புரியவில்லை.
நீ கனவில் வரும் போது,
உன் காதலை நான் அறியவில்லை .
ம்.....ம் ... இழந்துவிட்டேன்..
அந்த சுகமான நாட்களை.
இப்போது தவிக்கின்றேன்
உன் அன்புக்காக, பாசத்துக்காக
நேசத்துக்காக, காதலுக்காக.
நீ எங்கு தான் வசிக்கின்றாய்
தொலைவில் இருக்கிறாயா?-ஆனால்
உன் அன்பு எனக்கு தெரிகிறதே
நீ விலகிப் போகிறாயா? – ஆனால்
உன் பாசம் எனக்கு புரிகிறதே
நீ கனவில் வரவில்லையா?- ஆனால்
என் மனதில் நிக்கின்றாயே.
இனியும் என்னை தண்டிக்காதே
இனியவளே(னே)....உன் நலமறிய ஆவல்..
உன் மடலுக்காக காத்திருக்கின்றேன்.
என் மடல் விழி மூடாது.</span>
<img src='http://www.yarl.com/forum/files/sneha55666.jpg' border='0' alt='user posted image'>
(யாவும் கற்பனை)
கவிதன்
|
|
|
|