![]() |
|
மென்மை வேண்டுமெனக்கு - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11) +--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52) +--- Thread: மென்மை வேண்டுமெனக்கு (/showthread.php?tid=6938) |
மென்மை வேண்டுமெனக்கு - Paranee - 07-13-2004 வைரமுத்துவின் கவிதை வாசித்தபோது என் எண்ணம் வரைந்தவை, எப்போதுமே அப்படித்தான் அவரின் வரிகள் கண்டவுடன் எனது கரங்களும் வரையத்தொடங்கிவிடும். (எப்போதும் அனுபவக்கவிதைகளும், கதைகளும் அழுத்தம் தருபவையாகவும் அழகுறுபவவையாகவும் அமைந்துகொள்கின்றன. ம் இது எனக்கு கேள்விஞானக்கவிதை ) [u][b][size=18]மென்மை வேண்டுமெனக்கு <img src='http://www.yarl.com/forum/files/sm_2_271.jpg' border='0' alt='user posted image'> மடியேற்றி வைத்த பாதங்கள் வாஞ்சையுடன் வருடும் கரங்கள் உச்சந்தலை தொடங்கி உள்ளங்கால் வரையான உன் இதழ்வருடல் இறுக்கத்துடன் வேண்டும் ஆதிக்கம் இல்லாத ஆர்ப்பாட்டம் காட்டாத அந்தரங்கம் மறைக்காத உன் ஆண்மை மறந்த பெண்மை வேண்டும் பூப்பறிக்க நீ படையெடுப்பு எதற்கு ? புன்னகை ஓன்றே போதும் என் பெண்ணகை விழிக்கும் காமத்தீ அணைக்க நீ எனக்குள் கடல்தேடும் போதும் காதல் மணம் வீசிக்கொள்ளவேண்டும் புலரும் பொழுதிலும் நீ எனக்குள் புதையல் தேடவேண்டும் தேடிக்களைத்து தேய்நிலவாகவேண்டும் மார்போடுனையணைத்து எனை மஞ்சமாக்கவேண்டும் தாரம் என்றென்னை தனித்துவைக்காமல் உன் தாய்மடிவாசம் என்னுள்ளேயும் நீ காணவேண்டும் அழும்போது அணைக்கவேண்டும் ஆனந்தத்தில் என்னை ஆலவட்டம்போடவேண்டும் எந்த துளி எங்கே வீழ்ந்ததென்று சமுத்திரம் ழூழ்கி தேடாமல் என் மனதில் தேடி என்னுள்ளம் நிறைக்கவேண்டும் பிரிவு என்ற வார்த்தையை நீ மறந்து வாழவேண்டும் எனை மறக்காத ஓர் நொடிவேண்டும் தாய்மை நான் கண்டால் தாயாக நீ மாறவேண்டும் சேயாக நான் மாறி சே~;டைகள் செய்திடும்போது சினக்காமல் வாழவேண்டும் மாதத்தில் ழூன்று நாட்கள் மரணவேதனை நான் படும்போது மார்போடு அணைக்கவேண்டும் மலர் வருடல் தரவேண்டும் உன் அன்பின் மழையில் என் அடிவயிற்று தீக்கொழுந்து அணைந்துபோகவேண்டும் இருபத்தைந்தில் கமழும் அன்புமணம் எழுபத்தைந்திலும் நிலைக்கவேண்டும் வாரிசுகள் எமக்கு வந்தாலும் வாஞ்சையுடன் எனை தினம் அணைக்கவேண்டும் செய்வாயா ? சோந்துகொள்கின்றேன் - sWEEtmICHe - 07-13-2004 அழும்போது அணைக்கவேண்டும் ஆனந்தத்தில் என்னை ஆலவட்டம்போடவேண்டும் எந்த துளி எங்கே வீழ்ந்ததென்று சமுத்திரம் ழூழ்கி தேடாமல் என் மனதில் தேடி என்னுள்ளம் நிறைக்கவேண்டும் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- tamilini - 07-13-2004 Quote:பிரிவு என்ற வார்த்தையை நன்றாய் இருக்கிறது பரணீ உங்கள் கவிதை... வாழ்த்துக்கள்........! - sWEEtmICHe - 07-13-2004 .. நன்றி பரணீ அண்ணா :wink: - AJeevan - 07-13-2004 [b]<span style='font-size:30pt;line-height:100%'>மென்மை வேண்டுமெனக்கு......</span> <img src='http://www.yarl.com/forum/files/ajeevan.jpeg' border='0' alt='user posted image'> பரணி Wrote:இருபத்தைந்தில் கமழும் அன்புமணம் [size=14]உண்மை அன்புக்கான இலக்கணம் வாழ்த்துகள் பரணி................ - kuruvikal - 07-13-2004 பரணி தாங்கள் வேண்டுவது மனதின் மென்மையோ அன்றி உடலின் மென்மையோ...??! முன்னையதற்கு வேண்டும் கொஞ்சம் தியாக குணம் பின்னையதற்கு வேண்டும் நல்லாய் தின்னும் குணம்...! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->கவிதை சொல்லும் கரு வரவேற்க வேண்டியது... மனிதர் மனங்களில் நிலைத்திருக்க வேண்டியது....வாழ்த்துக்கள் நண்பரே....! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- kavithan - 07-14-2004 paranitharan Wrote:செய்வாயா ? இதை இப்பவா கேட்கிறது....... சிறயை உடைத்து வந்த பின்....... பாவம் அண்ணா அண்ணி.......என்ன பாவம் செய்தா .....? என்றாலும் கவிதை நன்றாக இருக்கிறது... தொடருங்கள்.,,,,... - shanmuhi - 07-14-2004 <b>இருபத்தைந்தில் கமழும் அன்புமணம் எழுபத்தைந்திலும் நிலைக்கவேண்டும் வாரிசுகள் எமக்கு வந்தாலும் வாஞ்சையுடன் எனை தினம் அணைக்கவேண்டும் </b> ¸Å¢¨¾Â¢ø ¦Áý¨Á þ¨Æ§Â¡Î¸¢ýÈÐ. Å¡úòÐì¸û.... - phozhil - 07-15-2004 நாமத்தில் புறம்,நாவளத்தில் அகம் நெய்தல் மறுத்து பாலை வேண்டும் குணம்: நெகிழ்ந்தனம் நுமது முரண்நயம் கண்டு; <b>நாவல் கவியே, நாவல்!</b> - Paranee - 07-21-2004 வணக்கம் பொழிலாரே தங்கள் தமிழ்வளம் கண்டு மெய்சிலிர்த்து நிற்கின்றேன் தமிழ் அழகுறும் உம் தமிழ் வீச்சான்மையெண்ணி phozhil Wrote:நாமத்தில் புறம்,நாவளத்தில் அகம் - Paranee - 07-21-2004 [size=18]<b>செல்லம் செல்லம்</b> உன்னை நேசிக்க உன்னை சுவாசிக்க உன்னோடு ஒன்றாக உனக்காய் வாழ்ந்திட உன் சுவாசத்தில் என் வாசம் தேடிட அருகினில் நான் இல்லை தொலைவான தேசத்தில் தொலைந்த காலங்களில் அன்பான உன் வார்த்தைகள் அன்பான உன் அழைப்புகள் செவியெங்கும் சிருங்காரமிடுகின்றன உனக்காக வாழ உனக்காக வீழ என்றும் நான் உனக்காக எப்போதும் உன் அன்பாக காத்துக்கிடப்பேன் இருபது வருடமாய் தாய்மடியுடன் இன்றுமுதல் உன்மடியில் என்றும் ஓர் மடி அன்று ஈன்ற பாசம் இரத்த நேசம் இன்று அன்பின் ஆழம் புரிதலின் பரிவு வித்தியாசம் உணர்கின்றேன் எங்கேயோ பிறந்து எங்கேயோ வளர்ந்து என்னைத் தேடி எனக்குள் கலந்து களிப்பவள் நீ உனக்காக நான் வாழ்வேன் என்றும் என்றென்றும் மோகத்திற்காக காதல் இல்லை மோகமில்லாமலும் காதல் இல்லை இணைவதிலும் பிரிவதிலும் காதல் என்றும் சோபை போனதில்லை பிரிய பிரிய பிரியம் வளரும் இணைய இணைய இதயம் உருகும் அன்பிற்கு என்றும் தாழ் இல்லை அடைத்து வைத்தாலும் அது பொட்டித்தெறிக்கும் உன்னோடு நான் வாழ என்னோடு நீ வாழ என்றும் அந்த சுகம் எதிலும் கிடைக்ப்போவதில்லை விலக்கப்பட்டவர்கள் நாம் விதியால் இணைக்கப்பட்டுள்ளோம் உனக்கு நான் எனக்கு நான் வேறு உறவு இல்லை விழுதின்றிய வாழ்வு எமது வேர்களும் இல்லை புதிதாய் நடப்பட்ட நாற்றுக்கள் அடிக்கப்படும் புயலாலும் வெள்ளத்தினாலும் சிதைவடையலாம் நம் அன்பு என்னும் இறுகிய உறவால் என்றும் அது நடக்கப்போவதில்லை என்றென்றும் உன்னை விட்டகலேன் விரைவில் எமக்கென்று வேர்களும் விழுதுகளும் தோன்றும் எமைவிட்டு விலகிய கூட்டுக்குருவிகள் எம் நிழல் நாடி வரும் என்றோ ஓர்; நாள் அது நிட்சயம் நிகழும் தொலைவில் இல்லை அவ்வினிய நாள் கலங்காதே என் செல்லதுணையே உனக்காய் வாழ்வேன் நான் கலங்கிடும்போதெல்லாம் ஓர் கையாய் நான் இருப்பேன் நீ துவண்டிடும்போதெல்லாம் என் தோள்மீது து}ங்கவைப்பேன் ஆனந்த வெள்ளத்தில் நீ நனைய விழியிரண்டிலும் நான் சில துளி சிந்திக்கொள்வேன் உனக்காய் நான் பட்ட கஸ்டங்க்ள் கரைந்தோடி என் விழிவழியே வெளியேறும்; உன் சந்தோச சிதறல்களால் நான் பேரின்பம் பெறுவேன் மாதத்தில் சில தினங்கள் நீ வாடிநிற்கும்போது மார்போடுனையணைத்து மலர்வருடல் செய்து வைப்பேன் புூவான உன்தேகம் புதுமலர்ச்சி காணசெய்வேன் தாயாக நீ மாறும் ஈரைந்து மாதங்கள் என் சேயாக உனையெண்ணி பணிவிடைகள் செய்துவைப்பேன் அன்னை முகம் காண ஆவலாய் நீ ஏங்க அன்பாக அரவணைத்து ஆசைமுத்தம் தந்துவைப்பேன் என்றும் நீ என் செல்லதுணை உனக்காக வானம் நான் என்றும் உனக்காய் வாழ்வேன் எனக்கே எனக்காய் நீ வாழ்ந்தால் என்றும் என்றென்றும் அன்பென்னும் மழையினால் அனுதினம் நனையவைப்பேன - வெண்ணிலா - 07-21-2004 Quote:இருபது வருடமாய் தாய்மடியுடன் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> வாழ்த்துக்கள். - tamilini - 07-21-2004 Quote:என்றும் நீ என் செல்லதுணை அனுபவித்து எழுதிய மாதிரி இருக்கு... மிக அருமையான கவி பரணீ அண்ணா.. வாழ்த்துக்கள்.......! - kavithan - 07-22-2004 அனுபவம் தான் இப்ப ஒரு இரண்டு வாரமா அவர் எழுதின எல்லாத்தையும் வடிவாய் வாசித்தால் தெரியும்........ செல்லம்...செல்லம்... என்று கவிதை மழையிலை நனையவிடுறியள்...காச்சல் வந்திடப்போகுது....தமிழினி அக்காட்டை சொல்லி ஒரு குடை வேண்டுங்கோ..... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> கவிதை நன்றாக இருக்கிறது பரணி அண்ணா.... இதே சாட்டிலையாவது கவிதையை எழுதி களத்திலை போடுங்கோ.. நாங்கள் வாசிக்க ஆவலாய் உள்ளோம்.....ஒரே கல்லிலை இரண்டுமாங்காய்..... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - kuruvikal - 07-22-2004 [quote=Paranee][size=18]<b>செல்லம் செல்லம்</b> உன்னை நேசிக்க உன்னை சுவாசிக்க உன்னோடு ஒன்றாக உனக்காய் வாழ்ந்திட உன் சுவாசத்தில் என் வாசம் தேடிட அருகினில் நான் இல்லை தொலைவான தேசத்தில் தொலைந்த காலங்களில் அன்பான உன் வார்த்தைகள் அன்பான உன் அழைப்புகள் செவியெங்கும் சிருங்காரமிடுகின்றன உனக்காக வாழ உனக்காக வீழ என்றும் நான் உனக்காக எப்போதும் உன் அன்பாக காத்துக்கிடப்பேன் இருபது வருடமாய் தாய்மடியுடன் இன்றுமுதல் உன்மடியில் என்றும் ஓர் மடி அன்று ஈன்ற பாசம் இரத்த நேசம் இன்று அன்பின் ஆழம் புரிதலின் பரிவு வித்தியாசம் உணர்கின்றேன் எங்கேயோ பிறந்து எங்கேயோ வளர்ந்து என்னைத் தேடி எனக்குள் கலந்து களிப்பவள் நீ உனக்காக நான் வாழ்வேன் என்றும் என்றென்றும் மோகத்திற்காக காதல் இல்லை மோகமில்லாமலும் காதல் இல்லை இணைவதிலும் பிரிவதிலும் காதல் என்றும் சோபை போனதில்லை பிரிய பிரிய பிரியம் வளரும் இணைய இணைய இதயம் உருகும் அன்பிற்கு என்றும் தாழ் இல்லை அடைத்து வைத்தாலும் அது பொட்டித்தெறிக்கும் உன்னோடு நான் வாழ என்னோடு நீ வாழ என்றும் அந்த சுகம் எதிலும் கிடைக்ப்போவதில்லை விலக்கப்பட்டவர்கள் நாம் விதியால் இணைக்கப்பட்டுள்ளோம் உனக்கு நான் எனக்கு நான் வேறு உறவு இல்லை விழுதின்றிய வாழ்வு எமது வேர்களும் இல்லை புதிதாய் நடப்பட்ட நாற்றுக்கள் அடிக்கப்படும் புயலாலும் வெள்ளத்தினாலும் சிதைவடையலாம் நம் அன்பு என்னும் இறுகிய உறவால் என்றும் அது நடக்கப்போவதில்லை என்றென்றும் உன்னை விட்டகலேன் விரைவில் எமக்கென்று வேர்களும் விழுதுகளும் தோன்றும் எமைவிட்டு விலகிய கூட்டுக்குருவிகள் எம் நிழல் நாடி வரும் என்றோ ஓர்; நாள் அது நிட்சயம் நிகழும் தொலைவில் இல்லை அவ்வினிய நாள் கலங்காதே என் செல்லதுணையே உனக்காய் வாழ்வேன் நான் கலங்கிடும்போதெல்லாம் ஓர் கையாய் நான் இருப்பேன் நீ துவண்டிடும்போதெல்லாம் என் தோள்மீது து}ங்கவைப்பேன் ஆனந்த வெள்ளத்தில் நீ நனைய விழியிரண்டிலும் நான் சில துளி சிந்திக்கொள்வேன் உனக்காய் நான் பட்ட கஸ்டங்க்ள் கரைந்தோடி என் விழிவழியே வெளியேறும்; உன் சந்தோச சிதறல்களால் நான் பேரின்பம் பெறுவேன் மாதத்தில் சில தினங்கள் நீ வாடிநிற்கும்போது மார்போடுனையணைத்து மலர்வருடல் செய்து வைப்பேன் புூவான உன்தேகம் புதுமலர்ச்சி காணசெய்வேன் தாயாக நீ மாறும் ஈரைந்து மாதங்கள் என் சேயாக உனையெண்ணி பணிவிடைகள் செய்துவைப்பேன் அன்னை முகம் காண ஆவலாய் நீ ஏங்க அன்பாக அரவணைத்து ஆசைமுத்தம் தந்துவைப்பேன் என்றும் நீ என் செல்லதுணை உனக்காக வானம் நான் என்றும் உனக்காய் வாழ்வேன் எனக்கே எனக்காய் நீ வாழ்ந்தால் என்றும் என்றென்றும் அன்பென்னும் மழையினால் அனுதினம் நனையவைப்பேன பரணி இதொன்றும் புளுகில்லையே..... இல்ல இப்படித்தான் சொல்லி நயமாக் காதலிப்பினமாம்...பிறகு எனக்கு வாழவே நேரமில்ல கொஞ்சலும் குலாவலும் தான் அவசியமாக்கும்... எண்டு எல்லாம்....கண்ணாபின்னா எண்டு திட்டுவினமாம்...எரிஞ்சு விழுவினமாம்.... கூப்பிட்டாலும் கேக்காத மாதிரிப் போவினமாம்... இப்ப வேரும் விழுதும் எண்டுறதுகள்... நாளைக்கு நாயே எருமையே....இப்படி என்றும் மாறுங்களாம்...இப்ப கண்ணே மணியே செல்லம் எண்டுறதுகள்... நாளைக்கு தரித்திரமே...கொஞ்சம் எண்டாலும் நிம்மதியா இருக்கவிடுறியா என்னைப் பிடித்த சனியனே எண்டெல்லாம் மாறுங்களாம்... எண்டு உலகம் சொல்லுது.... எதுக்கும் பாத்து கண்ணுபடப் போகுது....! எங்களில கோபிக்காதேங்கோ... உலகம் சொல்லுறதைச் சொன்னம்...! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :wink:
- Paranee - 07-22-2004 வணக்கம் அதென்ன குருவிகள் எப்போதும் சற்று முரணாகவே பெண்களையும் காதலையம் நோக்குகின்றீர்கள் ம் அனுபவங்களோ காதல் எப்போதும் அலுத்துப்போவதில்லை( உண்மைக்காதல்) சில உளுத்துப்போன சாPரக்காதல் (குருவிகள் இதுவரை கண்டகாதல்) இடையிலே அலுத்துவிடும். அந்த அனுபவமோ குருவிகளிற்கு தெரியாது. அதுதான் எப்போதும் பெண்களையம் காதலையும் சற்று இளக்காரமான தொனியில் வரையறுத்து வைத்துள்ளன. - kuruvikal - 07-22-2004 பரணி.. இதொன்றும் அனுபவம் இல்லை... அனுபவித்தால் தான் வரிகளில் விபரிக்க முடியுமா என்ன... அவதானம்... வாழும் பூமியில் எத்தனை கோலங்கள்... அதில் அநேகம் மனம் வேதனைப்படும் படிதானே இருக்கின்றனவே தவிர மனிதம் சொல்லும் வழியில் இல்லையே... வார்த்தைக்கும் செயலுக்கும் முடிச்சுப் போடத் தெரியா போலிகள் தான் உலகில் அதிகம்...அல்லது போடும் முடிச்சை அவிழ்த்துவிட்டு ஓடும் துரோகிகள் தான் உலகில் அதிகம் ... இவர்களினுள் நல்லது எது கண்டுபிடிக்க முயற்சிக்கவில்லை... அது வீண் முயற்சி... அவையா அடையாளம் காட்டும் வரை அவதானிப்பதே சிறந்தது... எல்லாம் ஒரு அவதானிப்புத்தான்...என்ன நாங்கள் பொய்முகம் காட்டுவதைத் தவிர்க்க விரும்புகின்றோம்..அதனால் நாங்கள் முகமூடிகள்.... பலர் நிஜமுகம் என்று பொய்முகமே காட்டுகின்றனர்....!காரணம் அவர்கள் கொண்டதே பொய்முகம் தான்...! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> மேலும் நாங்கள் எழுதிய கருத்துப் பெண்களுக்குத்தான் உரித்தானது என்று எப்படித் தீர்மானித்தீர்கள்... உண்மையில் அது பொதுவான கருத்து பெண்ணுக்கும் பொருந்தும் ஆணுக்கும் பொருந்தும்....! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink: காதல் இளக்காரமாய்த்தான் உலகில் இருக்குது... இலட்சியமாய் இருந்த காலம் மலையேறிப் போய்விட்டதே நிஜம்...காரணம் அன்றைய காதல் இலக்கியங்களே இன்றும் வாழ்கின்றனவே தவிர ஏன் புதிய காதல் இலக்கியங்கள் படைக்கப்பட முடியலப்படவில்லை.... காதல் இலட்சியமாய் இருந்தால்தானே இலக்கியமாய் படைக்க....! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
|