| Welcome, Guest |
You have to register before you can post on our site.
|
| Forum Statistics |
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244
Full Statistics
|
| Online Users |
There are currently 226 online users. » 0 Member(s) | 223 Guest(s) Applebot, Bing, Google
|
| Latest Threads |
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,302
|
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,230
|
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,604
|
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,292
|
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,631
|
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,056
|
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,460
|
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,477
|
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,025
|
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,238
|
|
|
| மனிதனுக்குள்ளே ஒரு மிருகம் |
|
Posted by: AJeevan - 07-11-2004, 02:58 AM - Forum: விஞ்ஞானம் - தொழில்நுட்பம்
- Replies (2)
|
 |
<b> <span style='color:red'>மனிதனுக்குள்ளே ஒரு மிருகம்
-மதன்</span>
இந்தத் தலைப்பில் ஒரு தொடரை எழுதுகிறேன் என்று ஆர்வத்தில் சற்று அவசரப்பட்டு ஜூ.வி. ஆசிரியரிடம் ஒப்புக்கொண்டு விட்டேனோ என்று, எழுத உட்கார்ந்தவுடன் தோன்றுகிறது!
வரலாறு சம்பந்தப்பட்ட எதை எழுத ஆரம்பிக்கும்போதும் மனம் ரொம்பத் தெளிவாக இருக்கும். இந்த நிகழ்ச்சியில் துவங்கி, இந்த இடத்தில் முடிக்கலாம் என்று மூளை நேர்க்கோட்டில் சிந்திக்கும்.
தொடர் என்பது நதி மாதிரி! அதன் கூடவே கரையிலும் படகிலும் பயணிக்க முடியும். நான் தற்போது பயணிக்கப் போவதோ கடலில். ஆரம்பம், முடிவில்லாத பெருங்கடல்!
ஜில்லென்று காற்று வீசும் மெரீனா கடற்கரையை உடனே கற்பனை செய்துகொள்ளாதீர்கள். நான்... நானென்ன? நாம் பயணிக்கப்போகும் கடல் சற்று சிவப்பானது!
சுறாக்களே பயந்து நடுங்கும் கொடூரமான, விசித்திரமான மிருகங்கள் நீந்தும் கடல் அது! ரத்தச் சுவை மிகுந்த வன்முறைக் கடல்!
ஜூ.வி. வாசகர்களே, உங்கள் எல்லோருக்குமே 'உயிர்கள் அனைத்தும் கடலிலிருந்துதான் தோன்றின' என்கிற உண்மை தெரிந்திருக்கும்.
ஆனால், அது நம் கண்ணுக்குத் தெரியும் ஒரே ஒரு கடல் அல்ல... இரண்டு கடல்கள் என்பது தெரியுமா? ஒன்று, உடலை உருவாக்கிய வெளிப்படையான கடல். மற்றது, மனதைத் தயாரித்த மறைமுகக் கடல்!
மனிதனின் மூளைக்குள் கொடூரமான 'வன்முறை ஸெல்'களைப் படரவிட்டு, அவனை ஆக்கிரமித்த இந்த இன்னொரு கடலைப்பற்றி எழுதப் போவதாகத்தான் ஆசிரியரிடம் ஒப்புக்கொண்டேன்.
பிறகு, அதற்காக நூலகங்களுக்கும் புத்தகக் கடைகளுக்கும் கிளம்பிச் சென்றபோதுதான், திகிலேற்படுத்தும் ஓர் உண்மை புரிந்தது. மனித வன்முறையைப் பற்றிய புத்தகங்கள் அங்கே ஆயிரக்கணக்கில், ராணுவ வீரர்களைப் போல வரிசையாக அலமாரிகளில் அணிவகுத்து என்னைப் பயமுறுத்தின!
தனிமனித வன்முறை பற்றியும் வன்முறைக்கான மனோதத்துவ காரணங்கள் பற்றியும் யுத்தங்களைப் பற்றியும் இனவெறி, மதவெறி பற்றியும் தொடர் கொலைகாரர்களைப் பற்றியும் சர்வாதிகாரிகளைப் பற்றியும் எத்தனையெத்தனை புத்தகங்கள்! எதைப் படிப்பது... எதை எழுதுவது... எதை விடுவது..?! சற்றுத் தலை சுற்றியது!
மனித இனத்தோடு வன்முறையும் வளர்ந்து, அரக்கரூபம் எடுத்த வரலாற்றை முழுவதுமாகப் படித்து முடிக்க, ஒரு மனித ஆயுள் போதாது. இது சத்தியம்!
'சரி, மிக மிக முக்கியமான சில புத்தகங்களை மட்டுமே தேர்ந்தெடுத்துப் படிப்போம்' என்று முடிவு கட்டினேன்.
ஏற்கெனவே, கடந்த ஆண்டுகளில் (இப்படி ஒரு தொடர் எழுதப் போகிறோம் என்றே தெரியாமல்!) நான் படித்திருந்த புத்தகங்களும் இருக்கவே இருக்கின்றன!
எழுதத் துவங்கியபோது, நான் முதலில் நினைத்துப் பார்த்தது வாசகர்களைப் பற்றித்தான்! என்முன்னே வந்து நின்ற அவர்கள் சொன்னது இதுதான்.........
"எங்களுக்கு எல்லா உண்மைகளும் தெரிந்தாக வேண்டும். எதையும் விட்டுவிடாதீர்கள். எதை விவரமாகச் சொல்ல வேண்டும், எதைச் சுருக்கமாகச் சொல்ல வேண்டும் என்பது உங்களுக்குத் தெரியும். எதை எழுதினாலும் 'ரம்பம்' போட மாட்டீர்கள், போரடிக்காமல் எழுதுவீர்கள் என்கிற நம்பிக்கை மட்டும் எங்களுக்கு உண்டு. 'மனிதனுக்குள்ளே ஒரு மிருகம்' என்று ஒட்டுமொத்தமாக ஒரு தலைப்புக் கொடுத்துவிட்டீர்கள்! அந்தத் தலைப்பை, உங்கள் தொடர் மூலம் அழுத்தந்திருத்தமாக நிரூபிக்க வேண்டும் என்பது எங்கள் எதிர்பார்ப்பு. இதோ, நாங்கள் தயார்!"
நல்லது! நம்மைச் சுற்றிலும் நிகழ்ந்து வரும் வன்முறைகளைப் பற்றிப் பல கோணங்களில் நீங்கள் படித்திருப்பீர்கள், பார்த்திருப்பீர்கள்!
மனிதர்கள் மேற்கொள்ளும் பல அக்கிரமங்களையும் கொடூரங் களையும் பற்றிப் படித்த பிறகு, உங்கள் மனதில் தோன்றும் ஒரு கேள்வி 'ஏன் மனிதர்கள் இப்படி இருக்கிறார்கள்?' என்பதாகத்தான் இருக்கும்.
சிம்பிளான, அதேசமயம் சிக்கலான இந்தக் கேள்விக்கான பதில்களைத்தான், என்னால் முடிந்தவரை இந்தத் தொடரில் விவரிக்கப் போகிறேன்.
கூடவே, உங்களை எச்சரிக்கவும் வேண்டி யிருக்கிறது!..
எந்தவொரு விஷயத்திலும் சற்று ஆழமாகப் போய்ப் பார்க்கும்போது ஏற்படும் உணர்வுகளும் அனுபவங்களும் சற்று வேறு மாதிரியானவை. 'உண்மை கசக்கும்' என்பது நிஜமான வார்த்தை!
நான் எழுதப்போவதும் கசப்பான உண்மைகள்தான். அதற்காக உங்களைத் தொய்வடையச் செய்யும் 'பெஸ்ஸிமிஸ்டிக்' ஆன ஒரு தொடர் இது இல்லை. கலவரப்படுத்துவதற்காக எழுதப்படும் தொடரும் அல்ல..!
ஒரு மனித உடலுக்குள் வளர்ந்துவிட்ட கட்டி (Tumor) ஒன்றை 'ஸ்கேன்' பண்ணிப் பார்த்து ஆராய்ச்சி செய்தால்தான், அதை அகற்றுவதற்கான சிகிச்சைகளை மேற்கொள்ள முடியும்.
மனிதனுக்குள்ளே, அவனுடைய மூளையில் ஒரு பாதாள அறையில் அமர்ந்திருக்கும் கொடூரமான மிருகம்,Tumorஐவிட ரொம்பச் சிக்கலானது.
சிலரிடம் கடைசிவரை அந்த மிருகம் வெறுமனே அமர்ந்துவிட்டு மரிப்பதும் உண்டு. சிலரிடம் அது அவ்வப்போது வெளிப்பட்டு தன் கோரப் பற்களைக் காட்டி லேசாக உறுமுகிறது. சிலரிடம் அது அரக்கத்தனமாக விஸ்வரூபமெடுத்து ஆக்கிரமிப்பு செய்கிறது. அப்போது மனிதன் முழுசாக அதன் கைப்பாவை ஆகிவிடுகிறான்!
அந்தப் பாதாள அறைக்குள் நாம் புகுந்து பார்த்துவிடுவோமா?! எதையுமே நேரில் பார்த்து, எடை போட்டுவிட்டால் உண்மை புரிந்துவிடும். நம்மைச் சிந்திக்கவைத்துத் தெளிவு தரக்கூடியது உண்மை மட்டுமே!
[b]ஒரு குறிப்பு:</b> சற்று அதிகமான பயங்கரங்களை நுணுக்கமாக விவரிக்கும் 'பாரா'க்களின் துவக்கத்திலும் முடிவிலும் இந்த குறி 'தி' இருக்கும். லேசான மனம் உள்ளவர்கள், அந்த பாராவை மட்டும் தவிர்த்துவிட்டுப் படிக்கலாம். 'அந்த பாராவை இன்னும் ஆர்வமாகப் படிக்கவைக்கும் ட்ரிக் இது' என்று வாசகர்கள் தயவுசெய்து நினைக்க வேண்டாம்!
இந்தியாவில் தேர்தல் வரும்போதுதான் கருத்துக் கணிப்பு, புள்ளிவிவரங்களுக்கெல்லாம் திடீர் மதிப்பு வரும். அமெரிக்காவுக்குப் 'புள்ளிவிவர நாடு' என்றுகூடப் பெயர் வைக்கலாம்! 'தெருவில் நடந்தவாறு பாப்கார்ன் சாப்பிடுகிறவர்கள் எத்தனை பேர்?' என்கிற புள்ளிவிவரம்கூட அங்கே கிடைக்கும்! ஆகவே, மனித சமுதாயத்தைப் பற்றிய பல தகவல்களுக்கு நாம் அமெரிக்காவுக்குப் போக வேண்டியிருக்கிறது.
பலவிதங்களில் மிகவும் முன்னேறிய ஜனநாயக வல்லரசாகத் திகழும் அமெரிக்காவுக்குள், அதன் ஜிகினா திரைகளையெல்லாம் விலக்கிக்கொண்டு போய்ப் பார்த்தால், பயத்தையும் பரிதாபத்தையும் ஏற்படுத்தும் அளவுக்குச் சில அவலமான உண்மைகள் மேடைமீது ஏறுகின்றன!
சாம்பிளுக்குச் சில இதோ...
கடந்த இருபதாண்டுகளில் நாலு கோடி தனிப்பட்ட அமெரிக்கர்கள் வன்முறைக்கு இரையாகி இருக்கிறார்கள். இருபத்திரண்டு விநாடிகளுக்கு ஒருமுறை ஒரு அமெரிக்கராவது கத்தியால் குத்தப்பட்டோ, துப்பாக்கியால் சுடப்பட்டோ செத்துப் போகிறார்.
உலக மக்கள்தொகையில் அமெரிக்காவின் பங்கு ஐந்து சதவிகிதம். ஆனால், உலகெங்கும் திரியும் தொடர் கொலைகாரர்களில் (Serial Killers)எழுபத்தைந்து சதவிகிதக் கொலைவெறியர்கள் வசிப்பது அமெரிக்காவில்தான். F.B.I. தரும் தகவல்படி, தற்போது சுமார் ஐந்நூறு சாடிஸ சீரியல் கொலைகாரர்கள் இன்னும் போலீஸ் கையில் பிடிபடாமல் அங்கே வளைய வந்துகொண்டிருக்கிறார்கள்! அமெரிக்க போலீஸ், தங்கள் புத்திசாலித்தனத்தையெல்லாம் பயன்படுத்தித் தேடித் தேடி, ஒருவழியாகப் பிடித்துச் சிறைக்குள் தள்ளியிருப்பது நூற்றுஅறுபது கொலைவெறியர்களை மட்டுமே!
ஆயிரம் வசதிகள் இருந்தும், வன்முறைக்கு நடுவில் அச்சத்தோடு அமெரிக்கர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இந்தப் பயம் ஒரு 'அப்ஸெஷனாக' அங்கே தளும்பிக் கொண்டிருக்கிறது! ஹாலிவுட் சினிமாவிலும் இது எதிரொலிக்கிறது. அங்கே தயாரிக்கப்படும் படங்களில் எட்டுக்கு ஒரு படத்தில் மிருகத்தனமான கற்பழிப்புக் காட்சி உண்டு! ஒரு அமெரிக்கச் சிறுவனுக்குப் பதினெட்டு வயதாவதற்குள், அவன் நாற்பதாயிரம் கொலைகளை டெலிவிஷனில் பார்க்கிறான்.
<b>ஏன் அங்கே இப்படி?! </b>
இப்படிப்பட்ட புள்ளிவிவரங்கள் அமெரிக்காவிலும் சில ஐரோப்பிய நாடுகளிலும்தான் தயாரிக்கப்படுகின்றன என்பதால், மற்ற நாடுகளில் மனிதர்கள் சற்று மேம்பட்டவர்களாக இருப்பதாகத் திருப்திப் பட்டுக்கொள்ளத் தேவையில்லை!
வன்முறையின் அகோர அலைகள் அத்தனை உலக நாடுகளையும் சூழ்ந்துகொண்டிருக்கிறது. வன்முறை மனித இனம் முழுவதற்கும் பொதுவானது.
எல்லா நாடுகளிலும் தனிப்பட்ட (புலியைப் போல வலம்வரும்) கொலைகாரர்கள் உண்டு. கூட்டமாக இருக்கும்போது வந்து சேரும் கொலைவெறி வேறு வகை! உலகெங்கும் கொலைகார ஆட்சியாளர்களும் வந்துபோகிறார்கள். முதலில், தனிப்பட்ட ஓரிரு பயங்கர மனிதர்களை உங்களுக்கு அறிமுகப்படுத்தப் போகிறேன். ஒரு தனி மனிதன் எந்த அளவுக்கு வன்முறையில் ஈடுபடுவான்?! உங்களால் கற்பனை செய்ய முடியுமா? சரி, நானே சொல்கிறேன்!
மேலும்...
Thanks: http://www.vikatan.com/jv/index.html
|
|
|
| நாம் ஏன் நம்மை சறீலங்கன் என்று கூற வேண்டும்? |
|
Posted by: தமிழன் - 07-10-2004, 01:40 PM - Forum: தமிழ் /தமிழர்
- No Replies
|
 |
வணக்கம்
நாம் தமிழர்தானே நமக்கு என்று தமிழீழ தாயகம் உண்டு இப்படியிருக்க எம்மைக் கொல்ல நினைக்கும் பேரினவாத சிங்களவர்களின் நாட்டவர் என்று ஏன் நாம் கூற வேண்டும். 64000 மக்களை கொன்று லட்சக்கணக்கான தமிழர்களை இடம்பெயர வைத்தவர்கள் இந்த சிங்களவர்கள்தானே.
குறிப்பாக எனக்கு தெரிந்த வகையில் இலண்டனில் அனைத்து தமிழ் பல்பொருள் அங்காடி கடைக்காரர்கள் எல்லாம் Specialist in Sri Lankan groceries and food என்று பலகையில் பெரிதாக பொறித்துள்ளனர் ஆனால் அவர்களின் வாடிக்கையாளர்களோ 100% தமிழர்கள்.
தமிழ் மக்களும் தம்மை சிறீலங்கன் என்றே எல்லோரிடமும் அடையாளப் படுத்துகிறார்கள். இந்ந நிலை மாற வேண்டும் என்பதே இந்த உயிரின் ஆசை.
வெல்க தமிழ்!
Sril Lankan = NO
|
|
|
| ஈழத்தில் இந்திய இராணுவக்காலம் - நூல்தொகுப்பு |
|
Posted by: Chandravathanaa - 07-10-2004, 01:10 AM - Forum: நூற்றோட்டம்
- Replies (24)
|
 |
[b]<span style='color:darkred'>ஈழத்தில் இந்திய இராணுவக்காலம் - நூல்தொகுப்பு
[b][size=18]ஒரு அறிவித்தல்</span>
[b]ஒல்கார்
"அமைதிப்படை" என்ற பெயரில் ஈழத்தில் இந்திய இராணுவம் இருந்த காலகட்டத்தைப்பற்றி எழுந்த சிறுகதைகள் கட்டுரைகளுக்கான தொகுப்பு. இந்திய இராணுவத்தால் ஏற்பட்ட பாதிப்பின் (கவிதை நீங்கிய) பிறவெளிப்பாட்டு வடிவங்களையும் தேடுகின்றோம்.
இந்திய இராணுவத்திடம் பெற்ற அனுபவங்களையோ நீங்கள் பார்த்தவற்றையோ கேட்டவற்றையோ கதைகளாகக் கட்டுரைகளாக எழுதியிருந்தால் அனுப்பலாம். இனி எழுத நினைப்பவர்களும் எழுதி அனுப்பலாம்.
அல்லது இந்திய இராணுவம் பற்றிய உங்கள் அனுபவங்களைப் பதிவு செய்ய விரும்பியும் உங்களால் எழுத முடியவில்லையாயின் தொடர்பு கொள்ளுங்கள். நாங்கள் அதைப் பதிவுகளாக்குவோம்.
நாட்களின் நகர்வுகளில்
ஞாபகங்களின் உடைவில்
காயங்கள் ஆறுவதும்
ஆற்றப்படுவதும் இயல்பு
தேசத்தின் வேர்களில்
நெருப்பள்ளிக் கொட்டியவரை
வானத்தின் மீது
இருளள்ளிப் பூசியவரை
மறக்கவும் முடியவில்லை
மன்னிக்கவும் முடியவில்லை
இன்னும்..........
[size=18][b]ஒல்கார்
###################
[b]படைப்புக்களை யூலை 31ந் திகதிக்குள் எதிர் பார்க்கிறார்கள்.
எழுத்துருவம் பாமினியில் இருக்க வேண்டுமென்பது அவர்களது தாழ்மையான வேண்டுகோள்.
படைப்புக்களை அனுப்பி வைக்க வேண்டிய முகவரி
POBox # 63617; 1571,
Sandhurst circle
Toronto-ON
Canada
M1V 1V0
Tel: 416-841-5172 : Email: tamilvoice@hotmail.com
|
|
|
| புலம்பெயர் சினிமாக்களும் பெண்களும் |
|
Posted by: AJeevan - 07-09-2004, 02:19 PM - Forum: குறும்படங்கள்
- Replies (3)
|
 |
<img src='http://www.yarl.com/forum/files/cinima.jpg' border='0' alt='user posted image'>
<span style='font-size:25pt;line-height:100%'>பெண்களே சமூகத்தின் கலாச்சார காவிகளாக இருக்கின்றார்கள். இதற்கு இன்று புகலிட நாடுகளில் எடுக்கப்படும் ஒரு சில குறுந்திரைப்படங்களும் தப்பவில்லை. உதாரணமாக சுவிஸிலிருந்து ஜீவனால் எடுக்கப்பட்ட \"நிழல்யுத்தம்\" என்ற படத்தில் வரும் பெண்ணின் பாத்திரத்தை எடுத்துக்கொண்டால் கூட கோயிலுக்கு போவதற்கு கூட அப்பெண் தன்னை அலங்கரிக்கும் விதத்தைக் கூறலாம். அத்துடன் பெண்கள் சந்தேகப்படுபவர்கள் என்றே அப்படம் காட்டுகிறது. பெண் என்றால் சந்தேகப்பிராணி என்பதும் பலவீனமானவள் என்பதும் ஆணாதிக்கம் நிலைநிறுத்துகின்ற கருத்தியல். இதையே நிழல்யுத்தமும் சொல்கிறது. அவளின் உணர்வுகள் கூட கணவனின் தேர்வுக்கு உட்படுத்தப்படுகிறது. அவள் கோவிலுக்கு போவதற்காக தன்னை அலங்கரித்து தயாராகிக் காத்திருந்து...ஏமாந்து...சோர்ந்து...உறங்கிப் போய்விடுகிறாள். ஆனால் அவரோ தன் நண்பனுக்கு உதவிசெய்து முடித்துவிட்டு மிக காலதாமதமாக வீட்டுக்கு வருகிறார். வந்து தான் பிந்தி வந்ததை நியாயப்படுத்துகிறார். அவள் கோபப்படுவதிலுள்ள நியாயத்தைக்கூட பார்வையாளரில் தொற்ற வைக்காமல் அது அவளின் சிடுமூஞ்சித்தனம் போன்று காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது. அப்படத்தின் முடிவும் சினிமாப்பாணியிலேயே எடுக்கப்பட்டிருக்கிறது. அவள் அவனைத் தேடி சோர்ந்து போய் வந்து சரணடைகிறாள். கண்ணீர்விடுகிறாள். நிழல் யுத்தம் முடிவுக்கு வருகிறது.
அப்பெண் தனித்து தனது காலில் நின்று உழைத்து வாழக்கூடிய தன்மையிலோ அல்லது கணவனின் குடும்பச்சுமையில் அவளும் பங்கு கொள்வதாகவோ காட்டப்படவில்லை. மாறாக ஒரு ஆண் எல்லாவற்றையும் சுமக்கிறான் என்றே காட்டப்படுகின்றது. இதே படத்தை ஒரு ஆண் சந்தேகப்படுபவனாகவோ, அல்லது ஒரு பெண் தனித்து குடும்பத்தை சுமக்கிறாள் என்பதையோ ஜீவனால் காட்டியிருக்க முடியும். ஆனால் அதை ஜீவன் செய்யவில்லை. அதற்கான காரணம் ஆண்நோக்கு நிலையில் நின்று சிந்திப்பதுதான். ஆணாதிக்கக் கருத்தியலை கேள்வி கேட்காத எவராலும் பெண்நிலையில் நின்று சிந்திப்பது முடியாத காரியம். அதனால் அவர்களால் பெண்களின் பிரச்சினைகளை உணர்வு பூர்வமாக புரிந்து கொள்வதில் தடைப்பட்டே இருக்கிறார்கள்.</span>
தொடர்ச்சி........
நன்றி: தோழியர்
|
|
|
| இலங்கைக்கும் பிரமிட் திருடர்கள் ஜாக்கிரதை |
|
Posted by: AJeevan - 07-09-2004, 11:43 AM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (2)
|
 |
<b>[size=24]பிரமிட் திருடர்கள் ஜாக்கிரதை
<img src='http://www.legamedia.net/lochlex/2001/01-09/mafia.jpg' border='0' alt='user posted image'>
[size=15]ஐரோப்பாவில் உள்ள வெளி நாட்டு மக்களை பணம் பெருகும் முறைகள் என்று ஏமாற்றி பணம் பறித்த நிறுவனங்கள் சில இலங்கைக்கும் சென்று விட்டதாக தகவல்.................... இது சுவிசில் வாழும் தமிழர்களது பணத்தையும் ஆசை வார்த்தை காட்டி ஏமாற்றி விட்டு நாட்டை விட்டு மாயமாகி விட்டது.இங்கே அகப்பட்டுக் கொண்டவர்கள் முகவர்கள் மற்றும் பணம் போட்டு விட்டு ஏனையோரையும் இணைத்தவர்கள்.
குபேர ஆசையில் வானம் பார்த்தவர்கள் பல்லாயிரம்...............சீட்டு போட்டு பணத்தை வாரிச் சுடுட்டிக் கொண்டு ஓடியவர்களை தேடியாவது கண்டு பிடிக்கலாம். இவர்களோ ஒரு மாபெரும் மாபியா கூட்டம்.இவர்களை???????????????? [b]No way.........?</b>
இதே முறை பிரமிட் பணம் கொட்டும் முறை என்று இலங்கைக்குள் அறிமுகமாகி இருக்கிறது.
ஆரம்பத்தில் முதலிடுவதோடு புதியவர்களை இணைத்துக் கொடுத்தால் அவர்களது பணத்திலிருந்து ஒரு விகிதம் இவர்களுக்கு வருமென்று சொல்வதோடு பணமும் கொடுக்கப்படும். பின்னர் கொடுத்த பணத்தை திருப்பிக் கட்டினேன் என்று சொன்ன பரிதாப முகவர்கள் அநேகம்.
இது பற்றிய தகவல்கள் இருந்தால் தயவு செய்து எழுதுங்கள்.
[size=18]யாராவது தப்பிக் கொள்ளட்டும்................
|
|
|
| இணையத் தளங்களை வைரஸ் தாக்கும் அபாயம் |
|
Posted by: வெண்ணிலா - 07-08-2004, 06:34 PM - Forum: இணையம்
- Replies (5)
|
 |
<b>வைரஸ எதிர்ப்பு வல்லுனர்களும் அமெரிக்காவின் உள்நாட்டு பாதுகாப்புத் திணைக்களமும் இணைந்து உலகின்; இணையத் தளங்கள் வைரஸினால் தாக்கப்படக் கூடிய சாத்தியப்பாடுகள் உள்ளன என்று எச்சரிக்கை விடுத்துள்ளன. வைரஸ் எதிர்ப்பு புரோகிராம் Antivirus Program இல்லாத கணனிகள் தாக்கும் என்று எதிர்பார்க்கப்படும் இந்த வைரஸ்கள் Scop Download Ject அல்லது Toofer போன்ற பெயர்கள் கொண்டவை என்று இனங்காணப்பட்டுள்ளன. மைக்ரோ சொப்ட் மென்பொருளின் ஒரு பதிப்பான INTERNET INFORMATION SERVER இது இலக்கு வைத்து தாக்கின்றது.
Microsoft Internet Explore ஐப் பயன்படுத்தும் பயன்பாட்டாளர்கள் இந்த வைரஸின் தாக்கத்தை எதிர்கொள்வர் என்று மைக்ரோசொப்டினால் எச்சரிக்கப்பட்டுள்ளது எனினும் Windows XP Service Pack 2RC2 என்ற மென்பொருளில் இயங்கும் கணனிகளுக்கு ஆபத்தில்லை என்று தெரிவிக்கப்படுகிறது. தீய நோக்கிலமைந்த குறியீடகளைக் கொண்ட இந்த வைரஸ் Program கள் Windows 2000 Serevr இலும் 115 இலும் இயங்கும் web server கொண்ட கணனிகள் 835732 புதுப்பித்தலை பெறாத பட்சத்தில் அவை Internet Explore பயன்படுத்துவோரின் கணனிகளைத் தாக்க பயன்படுத்தப்படலாம் என்று மைக்ரோசொப்ட் எச்சரித்துள்ளது. website நிர்வாகிகள் தமது வலையமைப்புக்களை பக்குவமாக பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்பதற்கு இது ஓர் எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.</b>
http://www.microsoft.com
|
|
|
| பிரஞ்சு-தமிழ்-பிரஞ்சு அகராதி |
|
Posted by: AJeevan - 07-08-2004, 05:44 PM - Forum: நூற்றோட்டம்
- Replies (3)
|
 |
<span style='color:brown'><b>பிரஞ்சு-தமிழ்
தமிழ்-பிரஞ்சு அகராதி</b>
<img src='http://www.yarl.com/forum/files/thumbs/t_book.ajeevan.jpg' border='0' alt='user posted image'>
[size=15]ஓரு அகராதி தயாரிக்கும் பணி ஒரு மொழியில் செய்யக் கூடிய அதியுன்னத ஆக்கப்பணியாகும்.
பிரெஞ்சு மொழியைப் போதித்த அனுபவ பலத்திலிருந்து இவ் அகராதி உருவாகியிருக்கிறது.
தமிழ் மொழியைத் தாய் மொழியாக் கொண்டவர்கள் என்ற தளத்திலிருந்து உருவாக்கப்பட்ட சிறப்பு இந்த அகராதிக்குரியது.
புலம் பெயர் ஈழத்தமிழர்கள் ஐரோப்பிய மொழிகளில் அகராதிகளை உருவாக்கும் வழியில் வெற்றிகரமாக செயல்பட்டு வருகின்றனர்.
உலகில் நவீன மொழிகள் அனைத்தையும் தமிழுக்கு வசப்படுத்தும் பெரும் பணியில் இதுவும் ஒன்றாகும்.
வசந்தி-பிரகலாதன் ஆகிய இருவரது கடினமான உழைப்பின் பாதையொன்றினூடாக உருவாக்கியுள்ள இவ் அகராதி தமிழர்களுக்கு ஓர் அரிய பொக்கிசமாகும்.
தொடர்புகளுக்கு:
Pirakalathan
9,rue des Loirs
77380 Combs la Ville,
France
email: asces@wanadoo.fr</span>
|
|
|
|