Yarl Forum
புலம்பெயர் சினிமாக்களும் பெண்களும் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11)
+--- Forum: குறும்படங்கள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=51)
+--- Thread: புலம்பெயர் சினிமாக்களும் பெண்களும் (/showthread.php?tid=6955)



புலம்பெயர் சினிமாக்க - AJeevan - 07-09-2004

<img src='http://www.yarl.com/forum/files/cinima.jpg' border='0' alt='user posted image'>
<span style='font-size:25pt;line-height:100%'>பெண்களே சமூகத்தின் கலாச்சார காவிகளாக இருக்கின்றார்கள். இதற்கு இன்று புகலிட நாடுகளில் எடுக்கப்படும் ஒரு சில குறுந்திரைப்படங்களும் தப்பவில்லை. உதாரணமாக சுவிஸிலிருந்து ஜீவனால் எடுக்கப்பட்ட \"நிழல்யுத்தம்\" என்ற படத்தில் வரும் பெண்ணின் பாத்திரத்தை எடுத்துக்கொண்டால் கூட கோயிலுக்கு போவதற்கு கூட அப்பெண் தன்னை அலங்கரிக்கும் விதத்தைக் கூறலாம். அத்துடன் பெண்கள் சந்தேகப்படுபவர்கள் என்றே அப்படம் காட்டுகிறது. பெண் என்றால் சந்தேகப்பிராணி என்பதும் பலவீனமானவள் என்பதும் ஆணாதிக்கம் நிலைநிறுத்துகின்ற கருத்தியல். இதையே நிழல்யுத்தமும் சொல்கிறது. அவளின் உணர்வுகள் கூட கணவனின் தேர்வுக்கு உட்படுத்தப்படுகிறது. அவள் கோவிலுக்கு போவதற்காக தன்னை அலங்கரித்து தயாராகிக் காத்திருந்து...ஏமாந்து...சோர்ந்து...உறங்கிப் போய்விடுகிறாள். ஆனால் அவரோ தன் நண்பனுக்கு உதவிசெய்து முடித்துவிட்டு மிக காலதாமதமாக வீட்டுக்கு வருகிறார். வந்து தான் பிந்தி வந்ததை நியாயப்படுத்துகிறார். அவள் கோபப்படுவதிலுள்ள நியாயத்தைக்கூட பார்வையாளரில் தொற்ற வைக்காமல் அது அவளின் சிடுமூஞ்சித்தனம் போன்று காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது. அப்படத்தின் முடிவும் சினிமாப்பாணியிலேயே எடுக்கப்பட்டிருக்கிறது. அவள் அவனைத் தேடி சோர்ந்து போய் வந்து சரணடைகிறாள். கண்ணீர்விடுகிறாள். நிழல் யுத்தம் முடிவுக்கு வருகிறது.

அப்பெண் தனித்து தனது காலில் நின்று உழைத்து வாழக்கூடிய தன்மையிலோ அல்லது கணவனின் குடும்பச்சுமையில் அவளும் பங்கு கொள்வதாகவோ காட்டப்படவில்லை. மாறாக ஒரு ஆண் எல்லாவற்றையும் சுமக்கிறான் என்றே காட்டப்படுகின்றது. இதே படத்தை ஒரு ஆண் சந்தேகப்படுபவனாகவோ, அல்லது ஒரு பெண் தனித்து குடும்பத்தை சுமக்கிறாள் என்பதையோ ஜீவனால் காட்டியிருக்க முடியும். ஆனால் அதை ஜீவன் செய்யவில்லை. அதற்கான காரணம் ஆண்நோக்கு நிலையில் நின்று சிந்திப்பதுதான். ஆணாதிக்கக் கருத்தியலை கேள்வி கேட்காத எவராலும் பெண்நிலையில் நின்று சிந்திப்பது முடியாத காரியம். அதனால் அவர்களால் பெண்களின் பிரச்சினைகளை உணர்வு பூர்வமாக புரிந்து கொள்வதில் தடைப்பட்டே இருக்கிறார்கள்.</span>
தொடர்ச்சி........

நன்றி: தோழியர்


- AJeevan - 07-09-2004

[size=15]நீதிமன்றமொன்றில் வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்படும் போது
வாதி, வாதி சார்ந்த கருத்துகளையும்
பிரதிவாதி, பிரதிவாதி சார்ந்த கருத்துகளையும் முன்வைப்பதுதான் முறை..............

அது போலவே நிழல்யுத்தம் பற்றிய விமர்சன பார்வையும் (வாதி சார்ந்த கருத்துகளை) ரஞ்சியால் முன் வைக்கப்பட்டிருக்கிறது.

<img src='http://www.yarl.com/forum/files/cinima.jpg' border='0' alt='user posted image'>
[i]புகலிடத் தமிழ் சினிமா ஆகஸ்ட் 2000
by
யமுனா ராஜேந்திரன்

புகலிட தமிழ் சினிமா பற்றிய ரஞ்சியின் கட்டுரை புகலிடத் தமிழ் சினிமா (ஆகஸ்ட் 2000) புத்தகத்தில் வந்ததால் என்னால் எனது நிலையை விளக்க அன்று முடியவில்லை.

இணையதளங்களின் வரவால் அது பற்றி எனது கருத்தையும் சிறிது முன் வைப்பதற்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது என்றே கருதுகிறேன்.

யதார்த்த சினிமா படைப்பாளி
நடக்கும் நிகழ்வுகளை யதார்த்தமாக முன் வைக்கிறார்.
இங்கே படைப்பாளி அல்லது இயக்குனர் என்ற நிலையிலுள்ளவர் இரு பக்க வாதங்கங்களையும் வைக்க வேண்டியவராகவே இருக்கிறார்.
முடிவு சொல்லவோ/முடிவு செய்ய வேண்டியதோ நீதிபதியான மக்கள் கடமை,
அதாவது
முடிவு செய்ய வேண்டிய கடமை ரசிகர்களுக்கே உண்டு.


- Kanani - 07-09-2004

Quote:யதார்த்த சினிமா படைப்பாளி
நடக்கும் நிகழ்வுகளை யதார்த்தமாக முன் வைக்கிறார்.

இந்த விமர்சனத்தைப் பார்க்கும்போது...அதை முன்வைத்த பெண் தமிழ்ப்பெண்ணா எனும் சந்தேகம் எனக்கு வருகிறது...தமிழருடைய கலாசாரம்..யதார்த்தம் தெரியாமல் வந்த விமர்சனம் போலவே தோன்றுகிறது.....


- AJeevan - 07-11-2004

Kanani Wrote:
Quote:யதார்த்த சினிமா படைப்பாளி
நடக்கும் நிகழ்வுகளை யதார்த்தமாக முன் வைக்கிறார்.

இந்த விமர்சனத்தைப் பார்க்கும்போது...அதை முன்வைத்த பெண் தமிழ்ப்பெண்ணா எனும் சந்தேகம் எனக்கு வருகிறது...தமிழருடைய கலாசாரம்..யதார்த்தம் தெரியாமல் வந்த விமர்சனம் போலவே தோன்றுகிறது.....

நன்றிகள் கணணி.