07-11-2004, 02:58 AM
<b> <span style='color:red'>மனிதனுக்குள்ளே ஒரு மிருகம்
-மதன்</span>
இந்தத் தலைப்பில் ஒரு தொடரை எழுதுகிறேன் என்று ஆர்வத்தில் சற்று அவசரப்பட்டு ஜூ.வி. ஆசிரியரிடம் ஒப்புக்கொண்டு விட்டேனோ என்று, எழுத உட்கார்ந்தவுடன் தோன்றுகிறது!
வரலாறு சம்பந்தப்பட்ட எதை எழுத ஆரம்பிக்கும்போதும் மனம் ரொம்பத் தெளிவாக இருக்கும். இந்த நிகழ்ச்சியில் துவங்கி, இந்த இடத்தில் முடிக்கலாம் என்று மூளை நேர்க்கோட்டில் சிந்திக்கும்.
தொடர் என்பது நதி மாதிரி! அதன் கூடவே கரையிலும் படகிலும் பயணிக்க முடியும். நான் தற்போது பயணிக்கப் போவதோ கடலில். ஆரம்பம், முடிவில்லாத பெருங்கடல்!
ஜில்லென்று காற்று வீசும் மெரீனா கடற்கரையை உடனே கற்பனை செய்துகொள்ளாதீர்கள். நான்... நானென்ன? நாம் பயணிக்கப்போகும் கடல் சற்று சிவப்பானது!
சுறாக்களே பயந்து நடுங்கும் கொடூரமான, விசித்திரமான மிருகங்கள் நீந்தும் கடல் அது! ரத்தச் சுவை மிகுந்த வன்முறைக் கடல்!
ஜூ.வி. வாசகர்களே, உங்கள் எல்லோருக்குமே 'உயிர்கள் அனைத்தும் கடலிலிருந்துதான் தோன்றின' என்கிற உண்மை தெரிந்திருக்கும்.
ஆனால், அது நம் கண்ணுக்குத் தெரியும் ஒரே ஒரு கடல் அல்ல... இரண்டு கடல்கள் என்பது தெரியுமா? ஒன்று, உடலை உருவாக்கிய வெளிப்படையான கடல். மற்றது, மனதைத் தயாரித்த மறைமுகக் கடல்!
மனிதனின் மூளைக்குள் கொடூரமான 'வன்முறை ஸெல்'களைப் படரவிட்டு, அவனை ஆக்கிரமித்த இந்த இன்னொரு கடலைப்பற்றி எழுதப் போவதாகத்தான் ஆசிரியரிடம் ஒப்புக்கொண்டேன்.
பிறகு, அதற்காக நூலகங்களுக்கும் புத்தகக் கடைகளுக்கும் கிளம்பிச் சென்றபோதுதான், திகிலேற்படுத்தும் ஓர் உண்மை புரிந்தது. மனித வன்முறையைப் பற்றிய புத்தகங்கள் அங்கே ஆயிரக்கணக்கில், ராணுவ வீரர்களைப் போல வரிசையாக அலமாரிகளில் அணிவகுத்து என்னைப் பயமுறுத்தின!
தனிமனித வன்முறை பற்றியும் வன்முறைக்கான மனோதத்துவ காரணங்கள் பற்றியும் யுத்தங்களைப் பற்றியும் இனவெறி, மதவெறி பற்றியும் தொடர் கொலைகாரர்களைப் பற்றியும் சர்வாதிகாரிகளைப் பற்றியும் எத்தனையெத்தனை புத்தகங்கள்! எதைப் படிப்பது... எதை எழுதுவது... எதை விடுவது..?! சற்றுத் தலை சுற்றியது!
மனித இனத்தோடு வன்முறையும் வளர்ந்து, அரக்கரூபம் எடுத்த வரலாற்றை முழுவதுமாகப் படித்து முடிக்க, ஒரு மனித ஆயுள் போதாது. இது சத்தியம்!
'சரி, மிக மிக முக்கியமான சில புத்தகங்களை மட்டுமே தேர்ந்தெடுத்துப் படிப்போம்' என்று முடிவு கட்டினேன்.
ஏற்கெனவே, கடந்த ஆண்டுகளில் (இப்படி ஒரு தொடர் எழுதப் போகிறோம் என்றே தெரியாமல்!) நான் படித்திருந்த புத்தகங்களும் இருக்கவே இருக்கின்றன!
எழுதத் துவங்கியபோது, நான் முதலில் நினைத்துப் பார்த்தது வாசகர்களைப் பற்றித்தான்! என்முன்னே வந்து நின்ற அவர்கள் சொன்னது இதுதான்.........
"எங்களுக்கு எல்லா உண்மைகளும் தெரிந்தாக வேண்டும். எதையும் விட்டுவிடாதீர்கள். எதை விவரமாகச் சொல்ல வேண்டும், எதைச் சுருக்கமாகச் சொல்ல வேண்டும் என்பது உங்களுக்குத் தெரியும். எதை எழுதினாலும் 'ரம்பம்' போட மாட்டீர்கள், போரடிக்காமல் எழுதுவீர்கள் என்கிற நம்பிக்கை மட்டும் எங்களுக்கு உண்டு. 'மனிதனுக்குள்ளே ஒரு மிருகம்' என்று ஒட்டுமொத்தமாக ஒரு தலைப்புக் கொடுத்துவிட்டீர்கள்! அந்தத் தலைப்பை, உங்கள் தொடர் மூலம் அழுத்தந்திருத்தமாக நிரூபிக்க வேண்டும் என்பது எங்கள் எதிர்பார்ப்பு. இதோ, நாங்கள் தயார்!"
நல்லது! நம்மைச் சுற்றிலும் நிகழ்ந்து வரும் வன்முறைகளைப் பற்றிப் பல கோணங்களில் நீங்கள் படித்திருப்பீர்கள், பார்த்திருப்பீர்கள்!
மனிதர்கள் மேற்கொள்ளும் பல அக்கிரமங்களையும் கொடூரங் களையும் பற்றிப் படித்த பிறகு, உங்கள் மனதில் தோன்றும் ஒரு கேள்வி 'ஏன் மனிதர்கள் இப்படி இருக்கிறார்கள்?' என்பதாகத்தான் இருக்கும்.
சிம்பிளான, அதேசமயம் சிக்கலான இந்தக் கேள்விக்கான பதில்களைத்தான், என்னால் முடிந்தவரை இந்தத் தொடரில் விவரிக்கப் போகிறேன்.
கூடவே, உங்களை எச்சரிக்கவும் வேண்டி யிருக்கிறது!..
எந்தவொரு விஷயத்திலும் சற்று ஆழமாகப் போய்ப் பார்க்கும்போது ஏற்படும் உணர்வுகளும் அனுபவங்களும் சற்று வேறு மாதிரியானவை. 'உண்மை கசக்கும்' என்பது நிஜமான வார்த்தை!
நான் எழுதப்போவதும் கசப்பான உண்மைகள்தான். அதற்காக உங்களைத் தொய்வடையச் செய்யும் 'பெஸ்ஸிமிஸ்டிக்' ஆன ஒரு தொடர் இது இல்லை. கலவரப்படுத்துவதற்காக எழுதப்படும் தொடரும் அல்ல..!
ஒரு மனித உடலுக்குள் வளர்ந்துவிட்ட கட்டி (Tumor) ஒன்றை 'ஸ்கேன்' பண்ணிப் பார்த்து ஆராய்ச்சி செய்தால்தான், அதை அகற்றுவதற்கான சிகிச்சைகளை மேற்கொள்ள முடியும்.
மனிதனுக்குள்ளே, அவனுடைய மூளையில் ஒரு பாதாள அறையில் அமர்ந்திருக்கும் கொடூரமான மிருகம்,Tumorஐவிட ரொம்பச் சிக்கலானது.
சிலரிடம் கடைசிவரை அந்த மிருகம் வெறுமனே அமர்ந்துவிட்டு மரிப்பதும் உண்டு. சிலரிடம் அது அவ்வப்போது வெளிப்பட்டு தன் கோரப் பற்களைக் காட்டி லேசாக உறுமுகிறது. சிலரிடம் அது அரக்கத்தனமாக விஸ்வரூபமெடுத்து ஆக்கிரமிப்பு செய்கிறது. அப்போது மனிதன் முழுசாக அதன் கைப்பாவை ஆகிவிடுகிறான்!
அந்தப் பாதாள அறைக்குள் நாம் புகுந்து பார்த்துவிடுவோமா?! எதையுமே நேரில் பார்த்து, எடை போட்டுவிட்டால் உண்மை புரிந்துவிடும். நம்மைச் சிந்திக்கவைத்துத் தெளிவு தரக்கூடியது உண்மை மட்டுமே!
[b]ஒரு குறிப்பு:</b> சற்று அதிகமான பயங்கரங்களை நுணுக்கமாக விவரிக்கும் 'பாரா'க்களின் துவக்கத்திலும் முடிவிலும் இந்த குறி 'தி' இருக்கும். லேசான மனம் உள்ளவர்கள், அந்த பாராவை மட்டும் தவிர்த்துவிட்டுப் படிக்கலாம். 'அந்த பாராவை இன்னும் ஆர்வமாகப் படிக்கவைக்கும் ட்ரிக் இது' என்று வாசகர்கள் தயவுசெய்து நினைக்க வேண்டாம்!
இந்தியாவில் தேர்தல் வரும்போதுதான் கருத்துக் கணிப்பு, புள்ளிவிவரங்களுக்கெல்லாம் திடீர் மதிப்பு வரும். அமெரிக்காவுக்குப் 'புள்ளிவிவர நாடு' என்றுகூடப் பெயர் வைக்கலாம்! 'தெருவில் நடந்தவாறு பாப்கார்ன் சாப்பிடுகிறவர்கள் எத்தனை பேர்?' என்கிற புள்ளிவிவரம்கூட அங்கே கிடைக்கும்! ஆகவே, மனித சமுதாயத்தைப் பற்றிய பல தகவல்களுக்கு நாம் அமெரிக்காவுக்குப் போக வேண்டியிருக்கிறது.
பலவிதங்களில் மிகவும் முன்னேறிய ஜனநாயக வல்லரசாகத் திகழும் அமெரிக்காவுக்குள், அதன் ஜிகினா திரைகளையெல்லாம் விலக்கிக்கொண்டு போய்ப் பார்த்தால், பயத்தையும் பரிதாபத்தையும் ஏற்படுத்தும் அளவுக்குச் சில அவலமான உண்மைகள் மேடைமீது ஏறுகின்றன!
சாம்பிளுக்குச் சில இதோ...
கடந்த இருபதாண்டுகளில் நாலு கோடி தனிப்பட்ட அமெரிக்கர்கள் வன்முறைக்கு இரையாகி இருக்கிறார்கள். இருபத்திரண்டு விநாடிகளுக்கு ஒருமுறை ஒரு அமெரிக்கராவது கத்தியால் குத்தப்பட்டோ, துப்பாக்கியால் சுடப்பட்டோ செத்துப் போகிறார்.
உலக மக்கள்தொகையில் அமெரிக்காவின் பங்கு ஐந்து சதவிகிதம். ஆனால், உலகெங்கும் திரியும் தொடர் கொலைகாரர்களில் (Serial Killers)எழுபத்தைந்து சதவிகிதக் கொலைவெறியர்கள் வசிப்பது அமெரிக்காவில்தான். F.B.I. தரும் தகவல்படி, தற்போது சுமார் ஐந்நூறு சாடிஸ சீரியல் கொலைகாரர்கள் இன்னும் போலீஸ் கையில் பிடிபடாமல் அங்கே வளைய வந்துகொண்டிருக்கிறார்கள்! அமெரிக்க போலீஸ், தங்கள் புத்திசாலித்தனத்தையெல்லாம் பயன்படுத்தித் தேடித் தேடி, ஒருவழியாகப் பிடித்துச் சிறைக்குள் தள்ளியிருப்பது நூற்றுஅறுபது கொலைவெறியர்களை மட்டுமே!
ஆயிரம் வசதிகள் இருந்தும், வன்முறைக்கு நடுவில் அச்சத்தோடு அமெரிக்கர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இந்தப் பயம் ஒரு 'அப்ஸெஷனாக' அங்கே தளும்பிக் கொண்டிருக்கிறது! ஹாலிவுட் சினிமாவிலும் இது எதிரொலிக்கிறது. அங்கே தயாரிக்கப்படும் படங்களில் எட்டுக்கு ஒரு படத்தில் மிருகத்தனமான கற்பழிப்புக் காட்சி உண்டு! ஒரு அமெரிக்கச் சிறுவனுக்குப் பதினெட்டு வயதாவதற்குள், அவன் நாற்பதாயிரம் கொலைகளை டெலிவிஷனில் பார்க்கிறான்.
<b>ஏன் அங்கே இப்படி?! </b>
இப்படிப்பட்ட புள்ளிவிவரங்கள் அமெரிக்காவிலும் சில ஐரோப்பிய நாடுகளிலும்தான் தயாரிக்கப்படுகின்றன என்பதால், மற்ற நாடுகளில் மனிதர்கள் சற்று மேம்பட்டவர்களாக இருப்பதாகத் திருப்திப் பட்டுக்கொள்ளத் தேவையில்லை!
வன்முறையின் அகோர அலைகள் அத்தனை உலக நாடுகளையும் சூழ்ந்துகொண்டிருக்கிறது. வன்முறை மனித இனம் முழுவதற்கும் பொதுவானது.
எல்லா நாடுகளிலும் தனிப்பட்ட (புலியைப் போல வலம்வரும்) கொலைகாரர்கள் உண்டு. கூட்டமாக இருக்கும்போது வந்து சேரும் கொலைவெறி வேறு வகை! உலகெங்கும் கொலைகார ஆட்சியாளர்களும் வந்துபோகிறார்கள். முதலில், தனிப்பட்ட ஓரிரு பயங்கர மனிதர்களை உங்களுக்கு அறிமுகப்படுத்தப் போகிறேன். ஒரு தனி மனிதன் எந்த அளவுக்கு வன்முறையில் ஈடுபடுவான்?! உங்களால் கற்பனை செய்ய முடியுமா? சரி, நானே சொல்கிறேன்!
மேலும்...
Thanks: http://www.vikatan.com/jv/index.html