| Welcome, Guest |
You have to register before you can post on our site.
|
| Forum Statistics |
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244
Full Statistics
|
| Online Users |
There are currently 211 online users. » 0 Member(s) | 208 Guest(s) Applebot, Bing, Google
|
| Latest Threads |
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,302
|
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,230
|
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,604
|
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,292
|
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,631
|
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,056
|
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,460
|
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,477
|
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,025
|
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,238
|
|
|
| உறங்கா விழிகள் |
|
Posted by: Paranee - 07-08-2004, 04:07 PM - Forum: கவிதை/பாடல்
- Replies (29)
|
 |
<img src='http://www.richardmay.com/coupbeach.jpg' border='0' alt='user posted image'>
காலை சோபை இழந்து
கவலைதோய்ந்த பொழுதாய்
இன்றுடன் ஆயிற்று சில திங்கள்
அவள் தொலைபேசி ஊடல் இல்லை
மின்னஞ்சல் மென்வருடல் இல்லை
என்னவாயிற்று என்னை மறக்க
என்றென்றும் நினைப்பதில்லை அவள்
அலுவலகம் சென்று அதட்டும் வேலைக்கிடையிலும்
அவளின் மின்னஞ்சல் தேடும் விழிகள்
மதியநேரம் வாசலோரம் மணியடிக்கும்
தபால்காரனை தாவித்தேடும் ஆசை மனசு
சில்லறையாய் தொலைபேசி சினுங்கினால்
ஆவல்பொங்க அதைநோக்கின் யாரோ தொடர்பில்
பாசத்தின் பொறுமையை சோதிக்கின்றாளா ?
ஓர் நொடி எனை மறக்காதவள்
ஓசையின்றி கழிந்த ஈர்திங்களாய் எங்கு சென்றாள்
அன்னைமுகம் காண விரைந்தவள்
அங்கேயே ஜக்கியமாகிவிட்டாளோ !
"என்னவாயிற்று என் செல்லக்குட்டிக்கு ? "
இறுதியாய் அவளுடன் கதைத்தது நினைவில் வந்தது
" நான் சந்தோசமாய் வந்து சேர்ந்துவிட்டேன் "
" நேரத்திற்கு சாப்பிடனும், நேரத்திற்கு உறங்கணும்."
"யாருமில்லா நேரம் தொடர்பு கொள்கின்றேன் "
ம்
இன்றுவரை தனிமை உன்னை ஆட்கொள்ளவில்லையா ?
இனி
கதைக்கும்போது நன்றாக கேட்டுக்கொள்ளவேண்டும்
எனை ஏன் மறந்தாய் என்று
ஏசித்தீர்க்கவேண்டும் - மனசுக்குள்
கடுமையாக திட்டித்தீர்த்துக்கொண்டேன்
இன்றுவரை நேரில் ஓர் வார்த்தை
கடுமையாய் பேசியதில்லை
நினைத்துக்கொண்டிருந்தபோது
தொலைபேசி சினுங்கித்தொலைத்தது
ஆவலுடன் நோக்கினேன்
புதிய இலக்கம்
எடுத்தவேகத்தில் ஏச நினைத்தேன்
மறுமுனையில் மௌனமும் சினுக்கமும்
"என்ன நடந்தது ? " " ஏன் அழுகின்றாய் ? "
"உனை மறந்து நிறைய நாள் இருந்திட்டேன்டா "
"எனை மன்னித்துக்கொள்ளடா "
"என் வீட்டில் எல்லாம் எதிர்ப்பு"
"நாம் இணைவது இனி இறைவன் கரங்களில்தான்"
அனலுடன் இருந்த என் மனசு
உறைபனியாய் விறைத்து நின்றது
எனை மறந்தாய் என நினைத்தேன் - நீயோ
எனை மறக்கமுடியாமல் உனையே வதைக்கின்றாயே
"அழுவதை நிறுத்து"
"என் அருகினில் நீ இருப்பாய்"
"என்றும் எமை யாரும் பிரிக்க முடியாது"
"நாம் என்றோ இணைந்துவிட்டோம்"
"இது தற்காலிக பிரிவு"
"பொறுமை கொள் உன்னை"
"விரைவில் மீட்டுக்கொள்வேன்"
ஆறுதல் வார்த்தைகூறி ஆசுவாசம் செய்து வைத்தேன்
இன்றுவரை அவளை திட்டியதில்லை
கோபம் வந்தாலும் எனக்குள்ளேயே
பொசுக்கி போட்டு என்னை மாற்றிக்கொள்வேன்
பாசம் மிகுமிடத்தில் கோபம் ஏன் தோன்றுகின்றது
கலங்கிய அவள் விழிகள்
சினுங்கிய அவள் குரல்
கேட்ட செவிகள் இன்றுவரை
இமைகளை மூடவிட்டதில்லை
உறங்கா விழிகளுடன் அவளிற்காய்
28.04.2004
|
|
|
| இறைவா மீண்டும் வாராயோ....???! |
|
Posted by: kuruvikal - 07-08-2004, 12:14 PM - Forum: கவிதை/பாடல்
- Replies (2)
|
 |
<img src='http://kuruvikal.yarl.net/archives/iraqi%20children.jpg' border='0' alt='user posted image'>
ஈராக்கிய தங்கச்சியே
பாசத்தம்பியுன் சட்டை பிடிக்க
பாதகர் உங்கள் தேசம் பிடித்து
நாசம் செய்யும் கோரம் தான் காரணமோ...!
உன் விழிகளில் தெரியுது
எதிர்காலத்தின் எதிர்காலம் பற்றியொரேக்கம்...
பாதகர் பார்வையோ சொல்லுது
தேசம் சுரண்டாமல்
அகலாது எங்கள் பாதணியென்று...!
யாரிருக்கார் மனிதருக்காய்
அவர்தம் அவலத்திற்காய் குரல் கொடுக்க....
மனிதர்கள் குரங்குகளாய் பகுத்தறிவிழந்து
கூர்ப்பில் பிந்தி அலையும் காலமெல்லோ இது...!
வேண்டுவோம் நாம் எல்லோரும்
இறைவா மீண்டும் ஒர் தடவை
வராயோ பூலோகம் என்றே.....
பாவிகள் வேரறுத்து மனிதம் கொள் மாசறுத்து
மனிதாபிமானம் வாழவைக்க.....!
நன்றி.... http://kuruvikal.yarl.net/
|
|
|
| அனைவரும் வாரீர்.... |
|
Posted by: shobana - 07-08-2004, 10:05 AM - Forum: அறிமுகம்
- Replies (60)
|
 |
அனைவரும் வாரீர்....
<b>யாழ் பக்க வாசகர் அனைவருக்கும் எனது வணக்கங்கள்...
உங்களைப்பற்றிய ஒரு சிறிய அறிமுகம் செய்துடுவீர்.....
அறிமுகம் என்றதும் பயந்து விடாதீர்..........
உங்கள் அறிமுகம் எத்தனை வீதம் உண்மையானது என்பது முக்கியம் இல்லை... ஆனால் மற்றைய வாசகர்களை உங்கள் அறிமுகம் கவர வேண்டும் என்பது தான் முக்கியம்
அனைவரும் வாரீர் அறிமுகம் செய்துடுவீர்....
நன்றி</b>
|
|
|
| யாகூ மடலாடல் |
|
Posted by: yarl - 07-08-2004, 09:59 AM - Forum: இணையம்
- Replies (6)
|
 |
யாகூ மடலாடல் குழு பற்றி அறிந்திருப்பீர்கள்.ஆரம்ப காலங்களிலிருந்து இயங்கும் ஒரு கருத்துக்களம்.
பல நல்ல விடயங்களை அங்கு எழுதுகிறார்கள்.
பற்பல பெயர்களில் பல குழுக்கள் இயங்குகின்றன.
இவைகளில் எது பற்றி உரையாடுகிறார்கள் என ஒரு மேலோட்டமான பார்வைக்கு..(எழுத்துரு திஸ்கி)
http://www.suratha.com/yahoo.htm
|
|
|
| களப்பொறுப்பாளர் கவனத்திற்கு |
|
Posted by: aathipan - 07-08-2004, 05:57 AM - Forum: உங்கள் கருத்துக்கள்
- Replies (19)
|
 |
முன்பு தளத்தில் புதிதாக எழுதியவற்றை மட்டும் படிக்க ஏதுவாக ஒரு Link இருந்தது ஆனால் இ;ப்போது அது இல்லாதது மிகவும் சிரமமாக உள்ளது. ஒவ்வொரு தடவையும் தேடித்தேடி படிக்கவேண்டி உள்ளது. புதிய மட்டும் படிக்க ஏதுவாக இருந்த அந்த link மீண்டும் இடம் பெறுமா..
|
|
|
| ஓட்டோகிராவ் - திரைப்படம் |
|
Posted by: sOliyAn - 07-08-2004, 04:10 AM - Forum: சினிமா
- Replies (9)
|
 |
'ஓட்டோகிராவ்' கெதியா பார்த்துடுங்கப்பா!
***
***
அவ் இணையத்தள உரிமையாளரின் வேண்டுகோளுக்கிணங்க முகவரிகள் நீக்கப்பட்டுள்ளது.
மோகன்
|
|
|
| அவதானம் அவசியம் |
|
Posted by: Kanani - 07-07-2004, 05:48 PM - Forum: சுமுதாயம் (வாழ்வியல்)
- Replies (1)
|
 |
<b>கோல்ட் குவெஸ்ட் 'சும்மா இருக்க கோடிஸ்வரர் ஆகலாம்'- நிதி மோசடி </b>
".... இலங்கையைப் பொறுத்தமட்டில் இவ்வாறான பண மோசடிகள் நமக்கு புதியவை அல்ல. 'ஷப்ரா' [ Shabra - Jaffna ] போன்று யாழ்ப்பாணத்தில் தொழிற்பட்ட நிதிநிறுவனங்கள் மக்களின் பணத்தை திட்டமிட்டு ஏப்பம் விட்டு - அதில் கொஞ்சம் கொடுக்க வேண்டியவர்கட்டு கொடுத்து - சட்ட நீதி நடவடிக்கைகளை முடக்கி இன்றும் கனவான்களாக யாழ்ப்பாணம்,கொழும்பு,U.Kல் வாழ்கிறார்கள். பணம் வைப்பிலிட்டு இழந்தவர்கள் தான் இன்றும் வாழ்வையும் வளத்தையும் தொலைத்து கண்ணீருடன் நிற்கின்றார்கள்.கொழும்பில். பிரமுக வங்கி அண்மையில் வங்குரோத்தாகி இன்னமும் மீளமைக்க முடியாமல் தவிக்கின்றார்கள். இப்போது (Gold Quest) - சூடு கண்ட பூனை அடுப்பங்கரை நாடாது! சூடு காணப் போகின்றீர்கள் என்ற பின்னும் பரீட்சிக்க நீங்கள் தயார் என்றால் தடுக்க யாராலும் முடியாது...."
கோல்ட் குவெஸ்ட் (Gold Quest) - இது இன்று சும்மா இருந்து கொண்டு பணம் சம்பாதிக்க நினைப்பவர்கள் வாயில் அடிபடும் பெயர். கொழும்பு, காலி, கண்டி, குருநாகல், அம்பாறை மலையகம் என தங்களின் நிதி மோசடி வலைப்பின்னலை விரித்தவர்கள் அண்மையில் யாழ்ப்பாணம் கூட சென்றிருக்கின்றார்கள்.
மாதச் சம்பளத்தில், விலையுயர்வுடன் போட்டி போட முடியாது தவிக்கும் மத்திய தர வர்க்கத்தின் பணத் தேவையை நன்கறிந்து 'நீங்களும் கோடீஸ்வரர் ஆகலாம்' என்ற வணிக மந்திரத்துடன் இந்த (Gold Quest) இலங்கையில் தனது நடவடிக்கைகளை தற்போது சற்று முனைப்பாக்கியுள்ளது. இந்த மோசடிக் கும்பல் இலங்கையில் கடந்த 4 வருடமாக இயங்கி வருவதாக அறிய முடிகிறது.
இவர்கள் தமது வியாபார விருத்தியில் நம்பியிருப்பது ஒருவரிடமிருந்து ஒருவருக்கான சங்கிலித் தொடர் வர்த்தகம் மற்றும் வாய்மொழி மூல நற்பெயர் சந்தைப்படுத்தல். இது எப்படி இயங்குகின்றது என அறிய இந்த (Gold Quest) தங்க வர்த்தகர் ஒருவருடன் தொடர்பை ஏற்படுத்தி இதன் முகவரை சந்திக்கக் கூடியதாக இருந்தது. ஜந்து நட்சத்திர ஹோட்டலில் றூம் போட்டு கோட் சூட் மற்றும் நவீன செல்லிடத் தொலைபேசி, மடிக் கணினியுடன் கனவான் போன்று தன்னைச் சுற்றி தானே ஒரு மாயையை உருவாக்கி இருந்தார். தான் ஒரு பொறியிலாளர் என்றும் வெளிநாட்டில் புகழ்பெற்ற நிறுவனத்தில் செய்து வந்த வேலையை விட்டு விலகி (அவர்களே விலக்கினார்களோ என்பது கேள்விக்குறி ? ) இதில் பண வருமானம் அதிகம் என்பதால் தான் ஈடுபடுவதாக ஆரம்பித்தார். இது வியாபாரத் தந்திரோபாயத்தின் ஒரு அங்கமான "Making First Impression as a Good Impression" எனும் முதல் பார்வையில் விழவைக்கும் உளவியல் தந்திரோபாயம் என என் மனம் உணர்த்தியது. எனினும் என்னதான் கூறப்போகிறார் என்ற ஆவலில் 'நானும் எவ்வாறு கோடீஸ்வரன்' ஆகலாம் என வினாவ- அவர் கூறினார்.
இந்த பவுண் திட்டத்தில் இணைய நீங்கள் Rs 50,000 (டொலரில்) செலுத்தி அங்கத்தவர் ஆகவேண்டும். அதன் பின்பு உங்களின் கீழ் இடதுபுறம் ஜந்து வலதுபுறம் ஜந்து என 10 உறுப்பினர்கள் சேர்ந்தால் உங்களுக்கு ஒரு பவுண் (இதன் பெறுமதி Rs 90,000 எனக் கூறுகின்றார்) குற்றி கிடைக்கும் மேலும் 10 பேர் சேர்ந்தால் $400 பணம் கிடைக்கும். உங்களுக்கு மேலே எவ்வளவு பேர் உள்ளனர் என பார்க்கமுடியாது. இது பிரமிட் வடிவமுடையது. நினைத்துப் பாருங்கள் உங்களுக்கு கீழே 1000 பேர் சேர்ந்தால் (எப்போது என்பது கேள்விக்குறி) உங்களுக்கு $40,000 USD கிடைக்கும் நீங்கள் கோடீஸ்வரர் தானே என்றார்?
சற்று ஆழமாக சிந்திக்காவிட்டால் நாமும் இந்த மோசடி வலையில் சிக்கலாம். இதன் விளைவு தனியே ஒரு தனி மனிதனின் பண இழப்பு அல்ல - ஒட்டுமொத்தமாக ஒரு சமூகத்தை கையாலாதவர்கள் ஆக்குவது. இது ஏன் ஒரு மோசடி என்பதற்கு பின்வரும் ஆய்வு முடிவுகள் சான்று பகர்கின்றன.
1. பொருளாதாரம் அல்லது பண முறைமையின் அடிப்படை பெறுமதி சேர்ப்பு எனப்படும் Value Addition ஒரு கிலோ உருளைக்கிழக்கு ரூ.100.00 என்றால் அது அந்த உருளைக்கிழக்கு விதை உருவாக்கத்தில் இருந்து, விவசாயின் உழைப்பு, சந்தைக்கான போக்குவரத்து என பெறுமதி சேர்க்கப்பட்டு விழைந்த இறுதிப்பெறுமதி. இந்த (Gold Quest) என்ற முறையில் பொய் கூறுவதைத்தவிர பெறுமதி ஏதும் சேர்க்கப்படவில்லை.
2. இந்த (Gold Quest) முறைமையை ஒரு மூடிய தொகுதியாக எடுத்துக் கொண்டால் பலர் பணம் போடுகிறார்கள் பலர் பணம் எடுக்கிறார்கள். எவ்வாறு அனைவரும் போட்டதையும் விட கூட எடுக்க முடியும்?
3. இந்த (Gold Quest) முறையை சாதாரணமாக பிரமிட் மோசடி என்று கூறுவார்கள். பிரமிட் என்றவுடன் எமக்கு ஞாபகத்திற்கு வருவது அடிப்பகுதியில் பரந்த பரப்பளவுடையதும் மேற்பகுதி நோக்கி கூராக செல்லும் ஒரு முக்கோணம். இந்த (Gold Quest)ம் அப்படித்தான் அவர்கள் கூறும் போது வெளித் தோற்றத்திற்கு அடியில் பலமுடைய பிரமிட் போல காட்சியளிக்கும் - உண்மையில் இது தலைகீழான ஒரு பிரமிட் ஒரு கட்டத்தில் மேலே உள்ள சுமை தாங்கமுடியாமல் சுக்கு நூறாகும். இதனால் தான் அவர்கள் இந்த முறையில் உங்களுக்கு மேலே எத்தனை பேர் உள்ளனர் என பார்க்க முடியாது என கூறுகின்றார்கள்.
4. இது பல நாடுகளில் (நேபாளம்) சட்டபூர்வமாக தடைசெய்யப்பட்ட நடவடிக்கை. தற்போது இலங்கை மத்திய வங்கி இதை சட்டபூர்வமாக தடை செய்ய நடவடிக்கை எடுத்துள்ளது. சுங்கத் திணைக்களம் இவர்களின் தங்க பொதிகளை தடுக்கின்றது.
5. இங்கு இவர்கள் சேகரிப்பதெல்லாம் பண ஆசை உடையவர்களின் தனிப்பட்ட விபரங்கள். இவை எல்லாம் வெளிநாட்டு புலனாய்வு நிறுவனங்களிற்கு தமது உளவு வலைப்பின்னலை வளர்க்க நல்ல தீனி போடும் தகவல்கள்.
6. இந்த திட்டத்திற்கு உரிய பணம் டொலர்களில் நாட்டை விட்டு வெளியே செல்வது நமது தேசத்திற்கு அந்நியச் செலாவணி ரீதியில் பாரிய இழப்பை ஏற்படுத்துகின்றது.
இலங்கையைப் பொறுத்தமட்டில் இவ்வாறான பண மோசடிகள் நமக்கு புதியவை அல்ல. 'ஷப்ரா' [ Shabra - Jaffna ] போன்று யாழ்ப்பாணத்தில் தொழிற்பட்ட நிதிநிறுவனங்கள் மக்களின் பணத்தை திட்டமிட்டு ஏப்பம் விட்டு - அதில் கொஞ்சம் கொடுக்க வேண்டியவர்கட்டு கொடுத்து - சட்ட நீதி நடவடிக்கைகளை முடக்கி இன்றும் கனவான்களாக யாழ்ப்பாணம்,கொழும்பு,U.Kல் வாழ்கிறார்கள். பணம் வைப்பிலிட்டு இழந்தவர்கள் தான் இன்றும் வாழ்வையும் வளத்தையும் தொலைத்து கண்ணீருடன் நிற்கின்றார்கள்.
கொழும்பில். பிரமுக வங்கி அண்மையில் வங்குரோத்தாகி இன்னமும் மீளமைக்க முடியாமல் தவிக்கின்றார்கள். இப்போது (Gold Quest) - சூடு கண்ட பூனை அடுப்பங்கரை நாடாது! சூடு காணப் போகின்றீர்கள் என்ற பின்னும் பரீட்சிக்க நீங்கள் தயார் என்றால் தடுக்க யாராலும் முடியாது.
நன்றி சூரியன் இணையம்
|
|
|
| களத்தில் காணப்படும் பிரச்சனைகள்... |
|
Posted by: சாகரன் - 07-07-2004, 11:31 AM - Forum: உங்கள் கருத்துக்கள்
- Replies (2)
|
 |
இன்று ஒரு போஸ்டிங் செய்யும் போது, இந்த பிரச்சனை வந்தது.இது நீங்கள் அறிந்தது தானா?
Could not find email template file :: topic_notify
DEBUG MODE
Line : 111
File : /home/virtual/site1/fst/var/www/html/forum/includes/emailer.php
|
|
|
| சுவாரசியமான சம்பவங்கள் |
|
Posted by: kavithan - 07-07-2004, 12:32 AM - Forum: செய்திகள்: உலகம்
- Replies (64)
|
 |
<span style='font-size:30pt;line-height:100%'><b>சம்பவம் 1</b></span>
<b>130 </b>டாலர் விலைமதிப்புள்ள விஷமுறிவு மருந்து இல்லாததினால், 700 டாலருக்கும் அதிகமான விலைமதிப்புள்ள ஒட்டகத்தை இழக்கும் இக்கட்டான நிலை Kazakhstan குடியரசுக்கு வந்து சேர்ந்திருக்கின்றது. Black Widow என்று அழைக்கப்படும் ஒரு விஷச் சிலந்தி இனத்தின் படையெடுப்பே இதற்குக் காரணமாகும். சோவியத் ஒன்றியத்திலிருந்து பிரிந்துள்ள இந்தச் சிறுகுடியரசின் மேற்கத்திய பிராந்தியத்தின் ஒரு கிராமத்தின் பண்ணையிலுள்ள ஒட்டகங்களுக்கே இந்த அவலம் வந்து சேர்ந்திருக்கின்றது. இப் பிராந்தியத்தில் 4000க்கு மேற்பட்ட ஒட்டகங்களைக் கொண்ட, இந்தப் பண்ணையே மிகப் பெரியதாகும். இப் பிராந்தியத்தின் கடுங் குளிரையும், வேக வைக்கும் வெயிலையும் தாங்கி, வாரக்கணக்காக குடிநீரும் உணவும் இல்லாமல் வாழக்கூடிய இந்த மிருகங்கள், இந்தச் சிறிய சிலந்தியின் கடியைத் தாங்கும் சக்தி இல்லாதவையாக இருக்கின்றன. இதுவரையில் 100 வரையிலான ஒட்டகங்கள், சிலந்திக் கடியின் தாக்கத்திற்கு ஆளாகி இருக்கின்றன. நிதி உதவி கிடைக்காதவரை இந்த நிலை தொடரப்போகின்றது.
சூரியன் இணையம்
|
|
|
|