Posts: 608
Threads: 7
Joined: Nov 2003
Reputation:
0
அனைவரும் வாரீர்....
<b>யாழ் பக்க வாசகர் அனைவருக்கும் எனது வணக்கங்கள்...
உங்களைப்பற்றிய ஒரு சிறிய அறிமுகம் செய்துடுவீர்.....
அறிமுகம் என்றதும் பயந்து விடாதீர்..........
உங்கள் அறிமுகம் எத்தனை வீதம் உண்மையானது என்பது முக்கியம் இல்லை... ஆனால் மற்றைய வாசகர்களை உங்கள் அறிமுகம் கவர வேண்டும் என்பது தான் முக்கியம்
அனைவரும் வாரீர் அறிமுகம் செய்துடுவீர்....
நன்றி</b>
Posts: 4,986
Threads: 34
Joined: Jun 2004
Reputation:
0
<b>நாமெல்லாம் ஏற்கனவே அறிமுகம் செய்து விட்டேடாம் தானே. ஏன் மறுபடியும் அறிமுகம்?</b>
----------
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
முதல் அறிமுகம் குருவிகள்...
சூட்டிய நாமம் - குருவிகள்..!
(காரணம்.. பறவைகள் மீது இயல்பிலேயே ஒரு காதல் என்பதால்...!)
பிறப்பிடம் - தமிழீழ தேசத்தில் அன்னை மடியில்...!
கல்வி - நாலு நல்லதைப் படிக்கவும் கேட்டுக் கிரகிக்கும் வகையிலும்...!
நாமே வகுத்துப் பிடித்த கொள்கை - "நீ உனக்கு உண்மையாக இருக்கிறாயா... நடக்கிறாயா...உனக்கு நீயே நீதிபதி... மாற்றான் எவருக்கும் அந்தத் தகுதியில்லை....!"
நேசிப்பது - குருவிகள் மனம் பிடித்த அனைத்தையும்...!
தூசிப்பது - மனிதாபிமானமற்று மனிதம் தொலைத்து சுயநலத்தோடு அலையும் மனிதப் பிறவிகளை....!
காக்க நினைப்பது - ஒழுக்கம், நேசம், தேசம், மொழி.
செய்த சாதனை - இதுவரை... கொண்ட கொள்கை தவறாமை...!
பிடித்த மனிதர்கள் - அப்பா, அம்மா, சகோதரங்கள், இறைமகன் ஜேசு, சுவாமி விவேகானந்தர் மற்றும் மாசில்லா அன்பு கொண்ட அனைவரையும்...!
உறுதிமொழி - மேலே சொன்னது அனைத்தும் உண்மை...!
---------------------
(சரி சோபனாத் தங்கையே...குருவிகளின் சிறு அறிமுகம் உங்களுக்கு உற்சாகமளிக்கும் என்று எண்ணுகின்றோம்... தலைப்புத்தான் விளங்கா மொழியில் இருக்கிறது கவனிக்கவும்)
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 4,986
Threads: 34
Joined: Jun 2004
Reputation:
0
<b>இப்படியான அறிமுகமா? குருவிகளின் அறிமுகம் நன்று</b>
----------
Posts: 608
Threads: 7
Joined: Nov 2003
Reputation:
0
குருவி அண்ணா,
தலைப்பு எப்படி சரி செய்வது என எனக்கு விளங்கவில்லை
நான் எதிர்பார்த்த மாதிரியே உள்ளது உங்களது அறிமுகம்.. நன்றி
Posts: 608
Threads: 7
Joined: Nov 2003
Reputation:
0
தலைப்பு எழுதிய நானும் அறிமுகம் சொல்லத்தானே வேண்டும்...
பெயர் : அம்மா, அப்பாவின் தெரிவு
வயது: அம்மாவை கேட்க வேண்டும்
படிப்பு : சகலசலா வல்லவள் அல்ல
அம்மா : உணர்ந்து கொள்ள முடியாத ஒரு உறவு
அப்பா : நல்ல நண்பன்
சகோதரர்கள் : அன்பானவர்கள்
குடும்பம் : அன்பானது.
நண்பர்கள் : நேர்மையானவர்கள், பண்பாணவர்கள்.
உறவுகள் : என்றும் விரும்பத்தக்கதுவும், வரவேற்பதுவும்.
சிந்தனை : 24 மணி நேர இடைவிடாத சேவை
காதல் : உணர்வுகளால் மட்டுமே வாசிக்கப்படக்கூடிய ஒரு நல்ல நாவல்.
செய்யவிருப்புவது : உதவி
மறக்கமுடியாதது : தாயக வாழ்க்கை
மறக்க முயல்வது : பிறருக்கு செய்த நல்லவை.
என்றும் நினைப்பது : நல்லவளாக வாழ.
பாசம் : இனம் புரியாதது.
ஆசை : இதை வளர்க்க ஆசையில்லை
நேசிப்பது : என்னை, ஆனால் சுயநலவாதி அல்ல.
Posts: 608
Threads: 7
Joined: Nov 2003
Reputation:
0
வணக்கம் வெண்ணிலா,
இப்போது கூறுங்களேன் உங்களது அறிமுகத்தையும்
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
குருவி அண்ணாவுக்கும்... சோபனா தங்கைக்கும் அடுத்தது... எனது அறிமுகம்..!
பெயர்: தமிழினி...
வசிப்பது: நிலையில்லா உலகில் நிரந்தரமற்ற முகவரியில்.
கற்றது: எழுத படிக்க
நம்புவது: என்னை மட்டும்
விரும்புவது: நண்பர்களை
வெறுப்பது: துரோகிகளை
வாழ்வது: கற்பனையில்
வாழ்க்கை : விடுகதை
பிடித்த பொழி: தமிழ்
சொர்க்கம் : என் தாய் நிலம்
பொழுது போக்கு : புத்தகம் வாசித்தல்.. நண்பர்களுடன் அரட்டை..
சாதிக்க இருப்பது : ரகசியம்
நினைப்பது : முடிந்தவரை நல்லவையை......!
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 347
Threads: 14
Joined: Aug 2003
Reputation:
0
வணக்கம் சோபனா,
<b>கருத்தின் தலைப்பினை தமிழில் எழுதுதல்</b>
கருத்து எழுதும் பெட்டிக்குள் தலைப்பைத் தமிழில் எழுதிவிட்டு, பிறகு அதனை வெட்டி (select > ctrl+x) தலைப்பிற்கான பெட்டியுள் ஒட்டவும் (ctrl+v).
Posts: 1,646
Threads: 97
Joined: Apr 2003
Reputation:
0
[b][size=18]எனது அறிமுகம்
<img src='http://www.richardmay.com/02-children-6.jpg' border='0' alt='user posted image'>
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
[b] ?
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
என்ன பரணீ அண்ணா இந்த சிரிப்பு தான் உங்கள் அறிமுகமோ....!
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 608
Threads: 7
Joined: Nov 2003
Reputation:
0
வணக்கம் உபதலைவர்
நீங்கள் கூறிய மாதிரித்தான் ஏற்கனவே எழுதினேன். ஆனால் வரவில்லை ..
அடுத்தமுறையும் முயற்சிக்கிறேன்
தகவலுக்கு நன்றி
Posts: 1,073
Threads: 25
Joined: Jan 2004
Reputation:
0
வெண்ணிலா அவரைச் சந்தித்தால் நான் நலம் விசாரித்ததாகக் கூறுங்கள்
\" \"
Posts: 608
Threads: 7
Joined: Nov 2003
Reputation:
0
வெண்ணிலா, நீங்கள் நான் தாயகம் நிக்கும் போது உங்களது ஆசையை கூறியிருந்தால், அவரை சந்திக்க உதவியிருப்பேன்..