Yarl Forum
இயக்குநர் பாலா கரம்பிடித்தார். - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8)
+--- Forum: சினிமா (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=39)
+--- Thread: இயக்குநர் பாலா கரம்பிடித்தார். (/showthread.php?tid=6936)



இயக்குநர் பாலா கரம்பி - AJeevan - 07-13-2004

<b>இயக்குநர் பாலா கரம்பிடித்தார்.</b><img src='http://www.yarl.com/forum/files/thumbs/t_01.jpeg' border='0' alt='user posted image'>

[size=15]மணமகன் : இயக்குநர் பாலா

மணமகள் : முத்து மலர்

மணநாள் : 5.7.2004

இடம் : பி.டி.ஆர். திருமண மண்டபம், தல்லாகுளம், மதுரை.

<img src='http://www.yarl.com/forum/files/thumbs/t_pic-5.jpeg' border='0' alt='user posted image'>

பிரபல திரைப்பட இயக்குநர் பாலா, பெரியகுளம் நிலச்சுவான்தாரர் கே.எம்.மகாதேவன் என்பவரின் மகள் முத்துமலரை, 5.7.2004 அன்று கரம்பிடித்தார். இவர் பாலாவிற்கு நெருங்கிய உறவினர் மற்றும் பட்டதாரிப் பெண்.

கல்யாணத்தின் சில ஹைலைட்ஸ்...

:!: மணப்பெண்ணின் தந்தை காங்கிரஸ் பிரமகர் என்பதால் ஜி.கே.வாசன், மீனாட்சி மிஷன் டாக்டர் சேதுராமன், முன்னாள் சபாநாயகர் பி.டி.ஆர்.பழனிவேல்ராஜன், மு.க.அழகிரி உள்ளிட்ட பல்வேறு அரசியல் பிரமுகர்கள் வந்திருந்து வாழ்த்தினார்கள்.

:!: நடிகர் சூர்யா, தந்தை சிவகுமார், தம்பி கார்த்திக், தங்கை பிருந்தா மற்றும் தயாருடன் ஆஜராகி இருந்தார். மாப்பிள்ளை தோழனாக நின்று சூர்யா செய்த வேலைகள் அனைவரையும் பிரமிக்க வைத்தன.

:!: இயக்குநர் மணிரத்னம், பாரதிராஜா, தரணி, பாக்யராஜ், மனோபாலா, எஸ்.பி.முத்துராமன், ஷங்கர் மற்றும் தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் உள்ளிட்ட சினிமாப் பிரமுகர்கள் திருமணத்திற்கு வந்திருந்த வாழ்த்தினார்கள்.

:!: நடிகர் விக்ரம், தனது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் வந்திருந்தார். ஹீரோயிசம், பந்தா இல்லாமல் பாலாவிற்கு பக்கத்திலேயே இருந்து கூட்டத்தினை ஒழுங்குபடுத்தியது அவரது பணிவுக்கு எடுத்துக்காட்டு!

:!: கருணாஸ் குழுவினரின் இசை நிகழ்ச்சி படு ஜாலி! தவிர, மதுரை நகர போலீஸ் குழுவின் பேண்டு வாத்திய நிகழ்ச்சியும் நடந்தது.

:!: நடிகர்களைப் பார்க்க மதுரை ரசிகர்கள் கூட்டம் அலை மோதியதால் மண்டபமே நிரம்பி வழிந்தது. ஸ்டண்ட் மாஸ்டர் சிவா, பெரியகுளம் ஜிம், தனியார் செக்யூரிட்டி மற்றும் பெரியகுளம் வாலண்டயர்ஸ் ஆகியோர் பாதுகாப்புப் பணி மற்றும் கூட்டத்தை சீர்படுத்தினார்கள்.

:!: சுஹாசினி, 'பிதாமகன்' சங்கீதா, ரோகிணி ஆகிய நடிகைகளும் கலர்ஃபுல்லாக வந்திருந்தனர். சூர்யா மாப்பிள்ளை தோரணையில் பட்டு வேட்டி அணிந்து கலக்கினார். அவரது தம்பியும் அண்ணன் காட்டிய வழியில் பட்டு வேட்டியில் மின்னினார்.

:!: மணமக்கள் ஹனிமூனுக்காக அமெரிக்கா செல்லவிருக்கிறார்களாம். அமெரிக்காவிலிருந்து திரும்பியதும் தனுஷை வைத்து ஒரு படம் இயக்கப் போகிறார் பாலா.

http://www.kumudam.com/

புதுமணத்தம்பதிகளுக்கு வாழ்த்துகள்.


- shanmuhi - 07-13-2004

புதுமணத்தம்பதிகளுக்கு வாழ்த்துகள்.


- kuruvikal - 07-14-2004

திருமணம் கண்டு இருமனம் ஒருமித்து அன்பு என்றும் உங்களை ஆட்சி செய்ய எம் வாழ்த்துக்கள்....! :wink:


- tamilini - 07-14-2004

மணமக்களிற்கு எமது வாழ்த்துக்கள்........!

ஆல் போல் தழைத்து அறுகு போல் வேருன்றி.... நீண்ட காலம் இனிதே வாழ எமது வாழ்த்துக்கள்........! <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

திருத்தப்பட்டுள்ளது நண்பரே......!


- kuruvikal - 07-14-2004

ஆழ் இல்லைத் தமிழினி ஆல்.... <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:


- tamilini - 07-14-2004

kuruvikal Wrote:ஆழ் இல்லைத் தமிழினி ஆல்.... <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
தவறு திருத்தியதற்கு நன்றி குருவிகளே......! தவறுக்கு வருந்துகிறோம்.........!


- kuruvikal - 07-14-2004

தளைக்கும் என்பதற்கு எந்த ... ழை இதுவா அல்லது ளையா..????! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :roll:


- Aalavanthan - 07-14-2004

பாலா கரம்பித்தால் நமக்கென்ன? இங்கு யாருக்காவது அவரைத் தெரியுமா? படம் எடுத்தார்,காசு கொடுத்துப்பார்த்தோம். பிறகென்ன மேலே வேண்டியிருக்கு. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- AJeevan - 07-14-2004

பாரதியாரை மட்டும் தெரியும்?


- tamilini - 07-14-2004

Aalavanthan Wrote:பாலா கரம்பித்தால் நமக்கென்ன? இங்கு யாருக்காவது அவரைத் தெரியுமா? படம் எடுத்தார்,காசு கொடுத்துப்பார்த்தோம். பிறகென்ன மேலே வேண்டியிருக்கு. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

காசா குடுக்கப் போறிங்க நாலு வார்த்தை....... நல்லதாய் சொல்லி போட்டு போறது..... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :x


- வெண்ணிலா - 07-14-2004

<b>
சுட்டி வெண்ணிவுக்கு யாரையும் வாழ்த்துமளவுக்கு வயது வரவில்லை. வாழ்த்துவதற்கு நல்ல தூய்மையான மனம் இருந்தால் போதும் என்பது என் கருத்து. எனவே புதுமணத் தம்பதிகளுக்கு எனது நல்வாழ்த்துக்கள்.</b>


- AJeevan - 07-14-2004

உயிரோடு இருப்பவர்களை வாழ்த்த மனசில்லாது போனா யோயிட்டுப் போகுது.
Quote:"சிங்களத் தீவுக்கோர் பாலம் அமைப்போம்."
என்ற
செத்துப்போன ஒருவரின்
தலைப்பை தொங்கப் போட்டுக் கொண்டு.............?


- Aalavanthan - 07-14-2004

அஜுவன் உங்களோடு பிரச்சனைப்படவேண்டும் என்பதற்காக மேலே நான் எழுதியிருக்கவில்லை. பாலா யார்? ஒரு திரைப்பட டைரக்கடர் அவ்வளவுதான். அஜுவனுக்கு திருமணம் என்று இங்கு வாழ்த்து சொன்னால் அது வேறுவிடயம். அஜுவன் ஒரு சக கருத்தாளர் + புலம்பெயர் சினிமாவுக்கு பல முயற்சிகளை செய்து வருபவர். நீங்கள் பாலாவையும் பாரதியையும் ஒப்பிட்டு உள்ளீர்கள். நன்றாகவே இல்லை


- AJeevan - 07-15-2004

ஆளவந்தான்,

யாரோடும் பிரச்சனைப்பட வேண்டும் என்பது எனது எண்ணமுமல்ல.

இப்பகுதி சினிமா பகுதி.
இதில் சினிமா மற்றும் சினிமாக்காரர்கள் தொடர்பான விடயங்களைத்தான் எழுத வேண்டும்?

நானும் அவர் போன்ற கலைஞன்,மனிதன்.
இவரும் ஒரு தமிழன்தான்.

நாங்கள் முகம் தெரியாத மக்களோடு வேற்று நாடுகளில் வாழ்கிறோம்.

இவர்களிடம் எவ்வளவோ நல்ல பழக்க வழக்கங்கள் இருக்கின்றன.
நாம் வாழும் நாட்டில் என்னவோ பண்பான மனிதர்களோடு பழகுகிறேம்.
எனவே அவர்கள் போலவே நாமும் நடந்து கொள்கிறேம்.???????????????

நீங்கள் புலத்தில் இல்லையானால் புலம் பெயர்ந்து வந்தோரைக் கேளுங்கள்.

வந்த பாதைகளில்-விழுந்த காடுகளில்-தஞ்சம் கொடுத்த நாடுகளில் ஒரு சொட்டு தண்ணி தந்தவன் உன் உறவினனா என்று?
அவனுக்கும் நமக்கும் என்ன உறவு?
அவன் எவனாக இருந்தாலும் என்ன ?
அவன் உள்ளத்தில் உள்ள மனித நேயத்தால்தான்
இன்றும் நாம் ஒரு கூரைக்கு கீழாவது நிற்கிறோம்.
அதனால் இங்கே பேசுகிறோம்?

தற்போதைய இயக்குனர்களில் ஒரு நல்ல இயக்குனர்பாலா.
தனிப்பட்ட ரீதியில் எனக்கும் இவரைத் தெரியாது.

விருந்தோம்பல், பாராட்டுவது, வாழ்த்துவது போன்றவை ஆரம்ப தமிழனது ஓர் உயரிய குணம்.
இது ஒரு மனிதனை பரந்த குணாதிசயங்களை நோக்கி கொண்டு செல்கிறது.

பாரதியும், பாலா போன்ற சராசரி மனிதர்தான்.
பாரதி வாழும் போது அவரையும் ஒதுக்கித்தான் வைத்தார்கள்.அவர் வாழும் போது இன்று கொண்டாடுவோரில் 10 சதவிகிதத்தினர் உதவியிருந்தால் தமிழுக்கு இன்னும் அவர் எவ்வளவோ செய்திருப்பார்?
இறந்த பிறகு பாரதி எழுதியதை வைத்து பிழைக்கிறார்கள்.

பாரதி ஒரு பிடிவாதக்காரர்.செருக்கு கொண்டவர்.
இவர் பறவைகளை; மிருகங்களை; வேற்று மனிதர்களை வாழ்த்தி பாடினான்.
அதுவும் ஒரு பிராமணண், அல்லாவைப் பற்றி கவி வடித்துக் கொடுத்தான்............இப்படி எத்தனையோ???????????
அவனை பின்பற்றும்
நமக்கு அவனது எண்ணத்தில் ஒரு சில துளியாவது இருக்க வேண்டாமா?

பாலா
ஒரு மனிதன்,
அது யாராக இருந்தாலும்
வாழும் போது ஒரு மனிதன்,
நல்லா வாழ்ந்து விட்டுப் போக வாழ்த்த முடிந்தால் வாழ்த்துவோம்.

"தன் வினை தன்னைச் சுடும்"

"தர்மம் தலை காக்கும்"

"விதை விதைத்தவன் விதை அறுப்பான்.வினை விதைத்தவன் வினை அறுப்பான்."

என்பதெல்லாம் பெரியோர் சும்மா சொன்னவையல்ல.

பெரிய மனதோடு வாழும் ஒருவன் கீழ் நிலையானவனாக இருப்பினும் அவன் மேலோன்தான்.

இது கருத்துக்களம். ஒவ்வொருவரது கருத்துகளை பகிர்ந்து கொள்கிறோம். பரிமாறிக் கொள்கிறோம்.

உங்களிடமிருந்து நல்லது ஏதாவது கிடைத்தால் எடுத்தக் கொள்கிறேன்.
அதில் ஏதாவது தவறு இருந்தால் வாதாடுகிறேன்.
ஏற்பதும் ஏற்காததும் அவரவர் விருப்பம்.

அனுபவம்,கருத்தாடல்கள்; ஒரு மனிதனை மாற்றும்.........அது வரை

<span style='font-size:17pt;line-height:100%'>(இவருக்கும் ஈழத்தவருக்குமான தொடர்புகள் எனக்குத் தெரியும். அதை இங்கே எழுத விரும்பவில்லை.
அது, நமக்கு உதவும் ஒருவர் என்ற விதத்தில் கருத்தை திசை மாற்றிவிடும்.)</span>


- AJeevan - 07-15-2004

Quote:என்னை தலை குனிய வைத்த ஒரு சம்பவம்.
பாரதி பற்றிய கருத்துகள் வந்ததால் எழுதத் தோன்றியது.
இடம் பெறும் பகுதி தவறானதுதான்.
இருந்தாலும் நண்பர்கள் மன்னிப்பார்கள் என்ற நம்பிக்கையில் இணைக்கிறேன்.

<span style='font-size:30pt;line-height:100%'><b>கிறிஸ்டல் தமிழன்</b></span>
-அஜீவன்

நான் கடந்த 2004 ஜுன் மாதம் 3ம் திகதி செக் (குடியரசு)நாட்டுக்கு போனபோது கிறிஸ்டல் வாங்குவதற்காக ஒரு கடைக்குள் நுழைந்தேன்.

சுற்றி கிறிஸ்டல்களை நோட்டம் விட்டுக் கொண்டே வந்தேன்.

"நீங்கள் தமிழ் பேசுவீர்களா?"
எனக்கு பின்னாலிருந்து ஒரு குரல் கேட்டது.

திரும்பிப் பார்த்தேன்.

எந்த தமிழரும் என் கண்ணில் படவேயில்லை.

எல்லோருமே வெள்ளை நிற மனிதர்கள்.
அது எனது மன பிரமையாக இருக்கும் என்று நினைத்துக் கொண்டு கிறிஸ்டல்களைப் பார்ப்பதற்காக மீண்டும் திரும்பினேன்.

நீங்கள் தமிழ் பேசுவீர்களா?
எனக்கு பின்னாலிருந்து மிக நெருக்கமாக மீண்டும் அதே குரல் கேட்டது.

சட்டென்று திரும்பினேன்.

ஒரு வெள்ளைக்கார இளைஞன்
"நீங்கள் தமிழ் பேசுவீர்களா?" என்று கேட்டவாறு சிரித்துக் கொண்டு நின்றார்.

"பேசுவேன்......" எனது பதில்.

"சங்கத் தமிழ் பேசுவீர்களா? சுத்த தமிழ் பேசுவீர்களா? பேச்சுத் தமிழ் பேசுவீர்களா?"

அவரது கேள்விக்கு உடனடியாக பதிலளிக்க முடியவில்லை.
ஒரு புறத்தில் அதிர்ச்சி; ஆனந்தம் ; இனம் புரியாத புூரிப்பு........... மெதுவாகவே புன்னகைக்க முடிந்த என்னால் , பேச வேண்டிய வார்த்தைகள் வெளி வர மறுத்தன.

என் நிலை அவருக்கு புரிந்திருக்க வேண்டும்.

"அதிர்ச்சியாக இருக்கிறீர்களா?
எனக்கு பேச்சு தமிழ் வராது. நல்ல தமிழும், சங்கத் தமிழும் பேசுவேன்." என்றார்.

"நீங்கள்....................?"
விடுபடா அதிர்ச்சியில் வார்த்தைகளை இழுத்தேன்.

"செக் பல்கலைக் கழகத்தில்தான்.........இங்கு தமிழ் பற்றி படித்த போது ஆர்வம் வந்தது.
ஒன்றரை வருடங்கள் தமிழ் நாட்டு அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் படித்தேன்.
இப்போது திரும்பி வந்து தொடர்ந்து தமிழ் பற்றிய ஆராச்சியொன்றில் செக் பல்கலைக் கழகத்தில் ஈடுபட்டு வருகிறேன்."

"ஏனைய நேரங்களில் இங்கு வேலை செய்கிறீர்களா?"

"ஆம், இது எங்கள் கடை.
இருந்தாலும் நான் இங்கு வேலை செய்யும் போது கிடைக்கும் பணத்தை வைத்து தமிழ் புத்தகங்கள் வாங்குகிறேன்."

"தமிழ் புத்தகங்கள்?"

"என்னிடம் (2000) இரண்டாயிரத்துக்கு மேல் தமிழ் புத்தகங்கள் இருக்கின்றன."
என்றவர் "யாருடைய புத்தகங்களைப் படிப்பீர்கள்?"

"எல்லாப் புத்தகங்களையும்........" என்றேன்.

சிரித்தார்.
சிரிப்புக்கு அர்த்தம் புரியவில்லை.
ஏன் சிரிக்கிறீர்கள் என்பது போல் அவரைப் பார்த்தேன்.

"இல்லை.
எல்லாப் புத்தகங்களையும் என்கிறீர்கள்.
மு.வரதராசன், கல்கி, திருக்குறள், பாரதியார் கவிதைகள்.........................."
என்று அடுக்கிக் கொண்டே போனார்.

எனக்கு தலை கிறு கிறுத்தது.
சோவென பனிமழை கொட்டி உடலெல்லாம் நனைந்து நடுங்குவது போன்ற உணர்வு.

திருகுறள்கள் சிலவற்றை சொல்லி, விளக்கம் வேறு தந்தார்.
பாரதியார் கவிதைகளை பாடிக் காட்டினார்.

"பாரதியார் தமிழில் பாடியிருக்கலாம்.
அவன் ஒட்டு மொத்த மனித சமுதாயத்துக்காக பாடினான்.
ஏதாவது தவறாக இருந்தால் சொல்லுங்கள்.
எனக்குத் தெரிந்த விளக்கம் தருகிறேன்." என்றார்.

வெட்கம்....................
தெரிந்தால்தானே தவறு என்று சுட்டிக் காட்டுவதற்கு.

"உங்களுக்குத் தெரிந்த தமிழ் எனக்குத் தெரியாது" என்றேன்.

"பார்த்திபன் கனவு போன்ற இலகுவான புத்தகங்களில் தொடங்குங்கள்" என்று அறிவுரை சொன்னார்.

பாரதியாரின் சமத்துவ, சமுதாய நோக்கு பற்றிய கவிதைகளை கூறி,
இது ஒட்டு மொத்த மனித சமுதாயத்துக்கு ஒரு மனிதன் விட்டுப் போனது" என்றார்.

நான் வாய் பேசாது விறைத்து நின்றதைப் பார்த்துவிட்டு,
கடைக்கு வந்த மனுசரிடம் வேறு விடயம் பேசுவதாக எண்ணியிருக்கலாம்.

"மன்னிக்கவும் நான் தமிழ் ஆர்வத்தில் பேசிக் கொண்டிருக்கிறேன். என்ன வாங்க வந்தீர்கள்?"
திகைத்துப் போய் நின்ற என்னை உலகுக்கு மீட்டு வந்தார்.

என் தேவைகளைச் சொன்னேன்.
எனக்கு வேண்டிய சில கிறிஸ்டல்கள் அவரது கடையில் இல்லை.
அடுத்த கடைக்கு அழைத்துச் சென்று எனக்கு வேண்டியதை வாங்க உதவினார்.

செக்கில் பார்க்க வேண்டிய இடங்கள் பற்றி விபரித்தார்.

இறுதியாக என்னோடு சென்றிருந்த,
இலங்கையில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் பற்றி கரிசனை காட்டும் அமெரிக்க விரிவுரையாளர் கலாநிதி.ஜெனட்டை அவருக்கு அறிமுகம் செய்து வைத்து விட்டு,
எனது விசிட்டிங்காட்டை அவரிடம் கொடுத்தேன்.

"என் பெயர் அஜீவன். உங்கள் பெயர்?"

"பாவெல் ஹோன்ஸ்."

அவரது விசிட்டிங்காட்டுக்கு பின்புறம் தமிழில் அவர் பெயரை எழுதித் தந்தார்.
<img src='http://www.yarl.com/forum/files/thumbs/t_pavel.3.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://www.yarl.com/forum/files/p.3.jpg' border='0' alt='user posted image'>
பாவெல்........... வயது 21-22 இருக்கும்.
சில தனிப்பட்ட விடயங்களை,அவர்களாகவே சொன்னாலன்றி, நான் கேட்பதில்லை.
எனவே மேலதிக விபரங்களில் எனக்கு ஆர்வமில்லை.

அவரிடமிருந்து விடை பெற்றேன்.

ஐரோப்பிய கிண்ணத்துக்கான போட்டியில் செக் கலந்து கொண்ட போது அதன் கப்டன் பாவெல் என்ற பெயர் , <span style='color:green'>தமிழ்பாவெலை நினைவலைக்கு கொண்டு வந்து கொண்டேயிருந்தது.

தொலைபேசி வழி தொடர்புகள் தொடர்கின்றன.................
அவரது இனிமையான செந்தமிழ்(செம்மொழி) என் காதுகளில் இன்றும் தேன் ரசம் பாச்சுகின்ற உணர்வாகவே இருக்கிறது..........
தமிழ் என்றும் கன்னியல்லவா?
என்றும் அவள் கன்னியாகவே உலா வருகிறாள்.

யாதும் ஊரே யாவரும் கேளீர்......................சொன்னவரை மறக்க முடியாது.</span>
-அஜீவன்
15.07.2004


- Kanani - 07-15-2004

இப்படி ஒரு வேற்றுநாட்டவர் செந்தமிழில் திறமையாகப் பேசுவதாக அறியும்போது என்தமிழை எண்ணி ........... <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->

அவருக்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்