| Welcome, Guest |
You have to register before you can post on our site.
|
| Forum Statistics |
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244
Full Statistics
|
| Online Users |
There are currently 335 online users. » 0 Member(s) | 332 Guest(s) Applebot, Bing, Google
|
| Latest Threads |
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,304
|
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,231
|
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,604
|
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,292
|
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,632
|
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,058
|
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,461
|
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,477
|
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,025
|
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,238
|
|
|
| கம்பியுட்டர் கஷ்டங்கள் |
|
Posted by: AJeevan - 07-22-2004, 03:40 AM - Forum: கணினி
- Replies (2)
|
 |
<img src='http://www.yarl.com/forum/files/thumbs/t_com.jpeg' border='0' alt='user posted image'>
முன்பெல்லாம் எல்லோர் வீட்டிலும் ரேடியோ இருந்தது. பிறகு ரேடியோவின் இடத்தை டிவி அடைந்தது. இப்போது ஏறக்குறைய எல்லோரது வீட்டிலும் கம்ப்யூட்டர் நுழைந்து கொண்டிருக்கிறது. கம்ப்யூட்டரைப் பற்றிப் படிப்பவர்கள் மேலதிகமாகத் தெரிந்துகொள்ள, வீட்டிலுள்ள பெரியவர்கள் பல விஷயங்களை டைப் செய்ய, இன்டர்நெட் பார்க்க, குழந்தைகள் விளையாட என்று பல்வேறு காரணங்களுக்காக ஒவ்வொரு வீட்டிலும் ஒரு கம்ப்யூட்டரை வாங்கிக் கொண்டிருக்கிறார்கள். கம்ப்யூட்டர் என்பது மரியாதைக்குரிய பொருள் மட்டுமல்ல, அத்தியாவசியமான பொருளும்கூட. ஆனால் இது வந்த பிறகு நமக்கு ஏற்படும் பிரச்சினைகள் பற்றி நமக்கு இன்னும் விழிப்புணர்வு வரவில்லை. காரணம், கம்ப்யூட்டரால் நம்முடைய உடலில் பலவிதமான பிரச்சினைகள் ஏற்படலாம் என்று நாம் நினைக்க ஆரம்பிக்கவில்லை. எனவே, கம்ப்யூட்டரைப் பற்றி நமக்கு இதுவரை எந்தப் புகாரும் இல்லை.
கம்ப்யூட்டரால் அப்படி என்ன பிரச்சினை நமக்கு வந்துவிடும்? இந்தக் கேள்விக்கு டாக்டர் மது சொன்ன விஷயம் நம்மை ஆச்சரியத்துக்குள்ளாக்கியது.
"நான் அடிப்படையில் ஒரு எலும்பு மருத்துவர். சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னை மலர் மருத்துவமனையில் பணியாற்றிக் கொண்டிருந்தேன். அந்த நேரத்தில் என்னைத் தேடிவந்த நோயாளிகளில் பத்தில் மூன்றுபேர் கம்ப்யூட்டர் நிறுவனத்தில் வேலை பார்ப்பவர்கள். எனவே, அதனால் பாதிக்கப்பட்டவர்கள். ஆனால், கம்ப்யூட்டரால் பாதிக்கப்பட்டிருக்கிறோம் என்கிற விஷயமே அவர்களுக்குத் தெரியவில்லை.
முதலில் கழுத்து வலிக்கிறது என்பார்கள். கை வலிக்கிறது என்பார்கள். கண் எரிகிறது என்பார்கள். இந்தப் பிரச்சினைகளைப் போக்கிக்கொள்ள முதலில் ஏதாவது ஒரு மருத்துவரைப் பார்த்திருப்பார்கள். பிறகு, எலும்பு நிபுணரையோ, நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்சினைகளை சரிசெய்கிற டாக்டரிடம் சென்று காட்டியிருப்பார்கள். கடைசியில்தான் என்னை வந்து பார்ப்பார்கள். இந்தக் காலகட்டத்துக்குள் அவர்களுக்கு இருக்கிற பிரச்சினை மிகவும் உக்கிரமாகி இருக்கும். இன்ன காரணத்திற்காக அவர்களுக்கு இது மாதிரியான வலி வருகிறது என்பதை மிகவும் கூர்மையாக கவனித்துப் பார்த்தால் கம்ப்யூட்டரால் பிரச்சினைகள் ஏற்படுகின்றன என்பதைப் புரிந்து கொள்ளலாம்.
வெளிநாடுகளில் கம்ப்யூட்டரால் என்னென்ன பிரச்சினைகள் ஏற்படுகின்றன என்பதைத் தெளிவாகக் கண்டுபிடித்து, அதற்கேற்ப மருத்துவ சிகிச்சைகளையும் உருவாக்கி வைத்திருக்கிறார்கள். கம்ப்யூட்டரால் உடலுக்கு ஏதாவது பாதிப்பு வந்தால் உடனே டாக்டர்களை அணுகுவது அங்கே வழக்கமான விஷயமாக இருக்கிறது. தனிப்பட்ட மனிதர்களை மட்டும் நான் சொல்லவில்லை. கம்பெனிகளில்கூட அது மாதிரியான சூழ்நிலை இன்னும் வரவில்லை என்பதே உண்மை.
கம்ப்யூட்டர் துறையில் வேலை பார்ப்பவர்கள் ஒரு நாளைக்கு குறைந்தது எட்டு மணி நேரமாவது உழைக்கவேண்டிய கட்டாயம். இப்படித் தொடர்ச்சியாக பல ஆண்டுகள் பணிபுரிய வேண்டியதால் பல விதமான பிரச்சினைகள் ஏற்படுகின்றன.
இந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வு அறுவை சிகிச்சைகளோ, மாத்திரைகளை விழுங்குவதோ அல்ல. சின்னச் சின்னதாக சில உடற்பயிற்சிகள், நம்முடைய உடலை ரிலாக்ஸ் ஆக்கிக் கொள்ளும் சில டெக்னிக்குகள், உட்கார்ந்திருக்கும் முறைகள் இவற்றைத் தெரிந்து வைத்திருந்தாலே போதும், எளிதாக துன்பத்திலிருந்து எளிதாகத் தப்பித்து வந்துவிடலாம்.
முதலில், உங்களுக்கு முன் இருக்கும் கம்ப்யூட்டர் திரை, உங்கள் கண் பார்வையிலிருந்து இரண்டு இஞ்ச் தாழ்வாக இருக்க வேண்டும். உங்கள் கண் பார்வையிலிருந்து கம்ப்யூட்டர் திரை உயரமாக இருக்கும் பட்சத்தில் நீங்கள் உங்கள் தலையைத் தூக்கித்தான் பார்க்க வேண்டும். அது உங்கள் கழுத்துக்கு அநாவசியமான வலியைக் கொடுக்கும். எனவே அந்த விஷயத்தில் ஜாக்கிரதையாக இருங்கள்.
எப்படி இதைச் சரி செய்வது?
உங்கள் டேபிளின் உயரத்தைக் குறைத்துக் கொள்ளலாம். அல்லது நீங்கள் உட்கார்ந்திருக்கும் சேரின் உயரத்தை அதிகரிக்கலாம். கம்ப்யூட்டர் முன்பு உட்காரும்போது, ரோலிங் சேரைப் பயன்படுத்தினால் நல்லது. ரோலிங்சேர் மூலம் எளிதாக ஒரு பகுதியிலிருந்து இன்னொரு பகுதிக்கு நகர முடியும் என்பதோடு உயரத்தையும் அதிகப்படுத்தவோ, குறைக்கவோ முடியும். இந்த உயரத்தைச் சரிசெய்கிற விஷயத்தை நம்மில் பலரும் தெரிந்துகொள்வதே இல்லை. கம்ப்யூட்டர் பற்றி படித்தவர்கள் அனைவரும் இந்த உயரம் சரிசெய்கிற விஷயத்தை அவசியம் தெரிந்துகொள்ள வேண்டும்.
கம்ப்யூட்டர் முன்பு உட்காரும்போது, சேரில் சாய்ந்து உட்கார வேண்டும். சேரில் சாயாமல் நேராக உட்காருவதோ, கூன் போட்டு உட்காருவதோ கூடாது. கம்ப்யூட்டரில் உட்கார்ந்து டைப் செய்யும்போது, கைகள் இரண்டும் சேரின் கைப்பிடியின் மீது வசதியாக இருக்கிற மாதிரி பார்த்துக்கொள்ள வேண்டும். சில இடங்களில் கைப்பிடி மிகவும் கீழே இருக்கிறது அல்லது மிகவும் மேலே இருக்கிறது. இதனால் நமக்குத் தீமையே. இதைவிட, கைப்பிடி இல்லாமலிருப்பது நல்லது.
கம்ப்யூட்டரோடு பொருத்தப்பட்டிருக்கும் மௌஸ் பெரும்பாலும் அதற்குப் பக்கத்திலேயே இருக்க வேண்டுமே ஒழிய, டேபிளுக்கு மேலே தனியாக இருக்கக்கூடாது. மௌஸ் பக்கத்தில் இருந்தால்தான் அதை எளிதாக எட்டிப் பிடித்து பயன்படுத்த முடியும். மிக தூரத்தில் இருந்தால் கஷ்டப்பட்டு கையை நீட்டி மௌஸைப் பயன்படுத்த வேண்டியிருக்கும். அதனால் கைகளுக்கும், தோளுக்கும் பாதிப்புதான்.
இதேபோல கம்ப்யூட்டர் டைப் செய்ய உதவும் விசைப்பலகையும் மேல்பாகம் சற்று தூக்கலாகவும், கீழ்பாகம் சற்று இறக்கமாகவும் இருப்பதைவிட, கீழ்பாகம் சற்று தூக்கலாகவும், மேல் பாகம் சற்று இறக்கமாகவும் இருந்தால் நல்லது.
கம்ப்யூட்டரைத் தொடர்ந்து பார்ப்பதனால் கண்களுக்குப் பாதிப்பு ஏற்படும். மிக அதிக அளவில் பாதிப்பு ஏற்பட்டிருந்தால், ஒரு நல்ல கண் மருத்துவரை அணுகுவதுதான் சரியான விஷயம். ஆனால், கம்ப்யூட்டரால் கண்களுக்குப் பிரச்சினைகள் வராமல் தடுக்க சில பயிற்சிகளை மேற்கொள்ளலாம். உதாரணமாக, இருபது நிமிடங்களுக்கு கம்ப்யூட்டர் திரையையே நீங்கள் பார்த்துக் கொண்டிருந்தால் ஒரு பத்து வினாடிக்கு திரையிலிருந்து பார்வையை விலக்கி வேறு பக்கத்தில் உள்ள பொருளைப் பார்க்கலாம்.
ஏன் இப்படிச் செய்கிறோம் தெரியுமா?
சாதாரணமாக, நாம் ஒரு பொருளைப் பார்க்கிறபோதோ, புத்தகம் படிக்கிறபோதோ கண்களை மூடி மூடித் திறக்கிறோம். கண்களுக்குத் தேவையான குளிர்ச்சியும், எண்ணெய்ப்பசையும் கண் சிமிட்டலால் கிடைக்கிறது. ஆனால், கம்ப்யூட்டர் திரைகளை நாம் பார்த்துக்கொண்டே இருக்கும் பட்சத்தில் இந்தக் கண்சிமிட்டல் நடப்பதில்லை. இதனால் கண் பாதிப்படைகிறது. இதைப் போக்கத்தான் வேறு ஒரு திசையில் பத்து வினாடிகள் பார்க்க வேண்டும் என்று சொல்கிறேன்.
தொடர்ந்து ஐம்பது நிமிஷம் நீங்கள் கம்ப்யூட்டரில் பணிபுரிந்தால், ஒரு பத்து நிமிஷத்துக்கு வேறு ஒரு வேலையைச் செய்யலாம். உதாரணமாக, ஃபைல்களைக் கொஞ்சம் அடுக்கி வைக்கலாம். அல்லது போன் பேசலாம். லேசாக ஒரு நடை போட்டுவிட்டு வரலாம்.
இது மாதிரியான சின்னச் சின்ன விஷயங்களை கவனித்தாலே போதும், கம்ப்யூட்டரால் எந்தக் கஷ்டத்தையும் வராமல் பார்த்துக் கொள்ளலாம்" என்கிறார் டாக்டர் மது.
_ சந்திப்பு: ஏ.ஆர்.குமார்
படம்: சித்ரம் மத்தியாஸ்
kumudam.com
|
|
|
| உனக்காய் காத்திருப்பேன்.... |
|
Posted by: kuruvikal - 07-22-2004, 02:51 AM - Forum: கவிதை/பாடல்
- Replies (10)
|
 |
<img src='http://kuruvikal.yarl.net/archives/rose.jpg' border='0' alt='user posted image'>
மலரே...
வசந்தத்தின் வரவே
காலம் மாற நீயும் மாறினையோ
நொடியோடு வந்த வாசம் போல்
உன் வசந்தமும் மறைய
பூங்குருவி தன் வசந்தமும்
வாடி வீழுமோ.....???!
வீழட்டும் உன் வதனம்
வேசங்கள் மீது நேசங்கள் எதற்கு
நிலையில்லா உலகில்
நிலையானது என்ன
தேடினேன்
கண்டேன் உண்மை
வீழ்வது நின் உருவாகினும்
வாழ்வது நம் நேசமாகும்...!
மனதோடு மட்டும் நேசம் வாழுமா
அங்கும் ஆசைகள் கூடவே
நேசங்கள் ஓரங்கட்டுது
இருந்தும்....
மாற்றாரிடம் கடன் கொடுக்க
என் நேசம் ஒன்றும் பண்டம் அல்ல
பரிமாறிப் பாழ்படுத்த
நான் ஒன்றும் பரோபகாரியும் அல்ல
என் நேசம் என்னோடு
உன் நேசம் உன்னோடு
அங்கு நான் சுயநலவாதிதான்
நேசமிரண்டும் நிலையாய் நேசித்தால்
மீண்டும் சந்திப்போம்
அடுத்த வசந்தத்தில்....!
அதுவரை நீ
என் நினைவறையில்
நீக்கமற இருப்பாய்....!
நானோ மாந்தோப்பில்
அதே தனிமையில்
உனக்காய் காத்திருப்பேன்
விழி மூடாது....!
நன்றி... http://kuruvikal.yarl.net/
|
|
|
| தமிழனுக்கு இனி திசைகள் நான்கல்ல; நாலாயிரம். |
|
Posted by: AJeevan - 07-22-2004, 02:29 AM - Forum: புலம்
- No Replies
|
 |
<img src='http://www.yarl.com/forum/files/thumbs/t_paries.jpeg' border='0' alt='user posted image'>
<span style='font-size:21pt;line-height:100%'>
பாரீஸ் _ என் இளம்பிராயத்தின் கனவுகளைக் கட்டிய நகரம். நான் பாண்டிச்சேரியில் பிறந்தவன். 'கஃபே' (காபி), 'ரிதோ' (திரைச்சீலை), 'ஷொக்ளா' (சாக்லெட்) என்று பல பிரெஞ்சு வார்த்தைகள் என் தாயின் நாவில் அன்றாடம் புரளும். இப்படித்தான் 'பரி' என்ற பிரெஞ்சு உச்சரிப்பில் பாரீஸ் நகரம் எனக்கு அறிமுகமானது. நான் வளர வளர எனது கனவு நகரத்தைப் பலமுறை கலைத்துப் போட்டிருக்கிறேன். எனது வாசிப்பின் எல்லைகள் விரிய விரிய, பாரீஸ் நகரம் எனது விருப்பத்திற்கேற்ப மறுபடி தன்னைக் கட்டியெழுப்பிக் கொண்டது. திடீரென்று ஒருநாள் நான் பாரீஸ் நகரத்தில், ரத்தமும் சதையுமாகச் சென்று நின்றபோது, எனது கனவுக்குள் நான் நுழைந்துவிட்டதாக உணர்ந்தேன். 'ஐரோப்பாவின் பண்பாட்டுத் தலைநகரம்', 'ஷாப்பிங் இன் மெக்கா, வெளிச்ச நகரம், காதலின் நகரம், கண்ணுக்குப் புலப்படாத நகரம் என்றெல்லாம் வர்ணிக்கப்பட்ட பாரீஸ், என்னைப் பொறுத்தமட்டிலும் என் விளையாட்டுத் தோழன்.
புரட்சிகள், முரண்பாடுகள், காதல், வீரம் என்று இரண்டாயிரம் ஆண்டுக்கால வரலாற்றைச் சுமந்துகொண்டு ஒன்றும் தெரியாததுபோல் நகர்ந்து கொண்டிருந்தது நகரம். என்னை வரவேற்க வந்திருந்த எனது சகோதரர் மூர்த்தி எழாபேன் என் கையைப் பிடித்துக் குலுக்கினார். அப்போதும் நான் கனவிலிருந்து மீண்டதாகத் தெரியவில்லை. வான்கோ, பிகாசோ, சார்த்ரூ, காம்யூ, பாதலேர், ரைம்போ, ஃபூக்கோ, தெரிதா என்று... உலகத்தின் சிந்தனை நதியில் சுழல்களை உருவாக்கிய மேதைகளின் ஞாபகங்களின் கீழே நசுங்கிக் கொண்டிருந்தேன் நான். வெளியே மழைத்தூறல். என்னை காரில் ஏற்றிக்கொண்டு சென்றபோது எனது சகோதரர் சொன்னார், \"உன்னால் பாரீசைப் புரிந்துகொள்ள முடியாது. அது ஒரு புதிர். இருபது நாட்களானாலும், இருபது ஆண்டுகளானாலும் பாரீசைப் புரிந்து கொள்ள முடியாது. இதன் சீதோஷ்ண நிலையைப் பார். நாங்கள் இதை பைத்தியக்கார சீதோஷ்ண நிலை என்று சொல்வோம்.\" போகிற வழியில் பிப்ரவரி மாதத்து மழை வலுத்துவிட்டது.
எனக்கு பிரெஞ்சுக்கவி பாதெலெரின் கவிதை வரிகள் சில நினைவுக்கு வந்தன:
பிப்ரவரி மாதம்
பாரீசின்மீது சீறிப்பாய்கிறது.
இருண்ட மழையையும்
உயிரை வாங்கும் குளிரையும்
பக்கத்திலிருக்கும்
புதைகுழிகளை வாடகைக்கு விடுபவர்கள்மீதும்
மூடுபனியுள் மறையும்
புற நகரங்களில் வாடகைக்கு இருப்பவர் மீதும்
வாரித்தெறிக்கிறது.
வீட்டின் தரையில் பரவியிருக்கும் கற்கள்
எனது பூனை
தனது உடம்பை வசதியாக வைத்துக்கொள்ள
உகந்ததாக இல்லை.
யாரோ ஒரு பழைய கவிஞரின் ஆவி
சாக்கடையில் சென்று தங்கி
ஒரு பேய்கூட குளிரை வெறுக்கும் என்று
சொல்வதுபோல ஊளையிடுகிறது.
பாதலேர் பிறந்து, ஓர் எழுத்தாளனாக வாழ்ந்து, நிறைய கடன் சுமையும் மேக நோயும் பெற்ற நகரம் இது. அவரைத் திருத்துவதற்காக அவரது பெற்றோர் கப்பலில் ஏற்றி இந்தியாவுக்கு அனுப்பினார்கள். ஆனால், அவர் கப்பலிலிருந்து தப்பி மீண்டும் பாரீசுக்கே வந்தார். திரும்பி வந்த அவருக்கு நிறைய சொத்து கிடைத்தது. ஆர்ட்காலரிகளிலும் கேஃப்களிலும் காலம் கழித்தார். பிரெஞ்சுக் கவிதையைத் திசை திருப்பினார். முந்தைய ரொமாண்டிக் கவிஞர்கள் போலல்லாமல் இந்த பாரீஸ் நகரத்திலிருந்தே தன் கவிதைக்கான உத்வேகத்தைப் பெற்றார். கவிதைத்தனமில்லாத சூழல்களிலிருந்தும் அழகை உருவாக்க வேண்டும் என்று வாதிட்டார். இவரது கவிதைகள் நகரத்தின் அழகையும், அழிவையும் ஒரே நேரத்தில் பதிவு செய்தன. ஆனாலும், அவரை அவர் காலத்தில், 'சபிக்கப்பட்ட கவிஞன்' என்றுதான் சொன்னார்கள்.
மாறாக, அவரது கவிதையினால் பாதிக்கப்பட்டு பிரெஞ்சுக் கவிஞர்கள் பலர் தோன்றினார்கள். குறிப்பாக, ஸ்டீஃபன் மல்லார்ம். தூய கவிதையின் எடுத்துக்காட்டு இவர். \"யதார்த்தத்தின் பின்னால் ஏதுமில்லை. ஆனால், இந்த ஏதுமற்ற சூன்யத்தில்தான் சுருதி சுத்தமான வடிவத்தின் சாரம் இருக்கிறது. இந்த சாரத்தை ஒரு திட வடிவமாக்குவதுதான் கவிஞனின் கடமை\" என்று பேசிய மல்லார்ம், ஜேம்ஸ் ஜாய்ஸ், டி.எஸ். எலியட் போன்றவர்களையெல்லாம் தனது தூய கவிதையால் பாதித்தார். ஆன்டிரி கைட், பால் வெலேரி போன்ற பிரெஞ்சுக் கவிஞர்கள் இவரைச் சூழ்ந்திருந்தார்கள். குட்டி போட்டு பால் கொடுக்கும் ஒரு விலங்கைப்போல பாரீஸ் நகரம் இவர்களை ஈன்று வளர்த்தெடுத்திருக்கிறது.
பாரீஸ் நகரத்தை ஒரு விலங்கு என்று சொன்னதற்கு ஒரு காரணமிருக்கிறது. நான் தங்கிய சில நாள்களில் எனக்கு தரிசனம் கொடுத்த பாரீஸ் அத்தகையதாகத்தான் எனக்குத் தோன்றியது. வைகறைக்கு முன்னால் செய்ன் நதியிலிருந்து மூடுபனி நகரத்துக்குள் நுழைந்து, பாலங்களையும், விளக்குக் கம்பங்களையும் தாண்டி ஊடுருவுகிறபோது கவர்ச்சியாகத்தான் தெரிகிறது. பகல் நேரங்களில் _ குறிப்பாக மழை பெய்யும் நேரங்களில் _ சலோன்களில் தேனீர் அருந்திக்கொண்டும், மாலை நேரங்களில் பியோனா பார்களில் விஸ்கியை உறிஞ்சிக் கொண்டும் ஓவியர்களும், கவிஞர்களும், நாடகக்காரர்களும், இசைவாணர்களும், இவர்களை ரசிப்பவர்களும் வாழ்க்கையை ரசித்துவிட்டு, இரவிலும் இன்னும் வாழ்க்கை எஞ்சியிருக்கிறது என்று அதை சுவைக்கத் தொடங்குகையில் பாரீஸ் வெளிச்ச நகரம்தான்.
ஆனால், எனக்கு நெருங்கிய பெண் ஓவிய சேகரிப்பாளர் சோஃப்பி லிஸ்காட் பாரீசின் மற்றொரு முகத்தை எனக்கு விளக்கிக் காட்டினார். அந்த நகரத்திலேயே பிறந்து வளர்ந்த அவரது இளமைக்காலத்து பாரீஸ் நகரம் இன்று தளர்ந்துபோய் நிற்பதாகக் குறிப்பிட்டார். இந்த நகரம் இன்று போக்குவரத்து நெரிசலிலும், மாசடைந்த நிலையிலும், கும்பல் கும்பலாக மக்கள் ஈடுபடும் வன்முறைகளிலும் ஒவ்வொரு மூலை முடுக்கிலும் பரந்து கிடக்கும் வேலையில்லா திண்டாட்டத்திலும் கிடந்து தவிப்பதாகச் சொல்லிப் புலம்பினார்.
இதை நான் எனது குறுகிய காலத்திலேயே உணர முடிந்தது. உன்னதமான நாட்டர் டாம் தேவாலயத்தைப் பார்க்கச் சென்றபோது அந்தப் பகுதி, பேருந்துகளாலும் கார்களின் நிறுத்தல்களாலும் அழகு குலைந்திருந்தது. ஹாம்பர்கள் விற்பவர்களால் நிரம்பி வழிகிறது கடற்கரை. டூரிஸ்ட் படகுகளில் சுற்றுலாப் பயணிகளைக் கவர்ந்திழுக்க அரை டஜன் மொழிகளில் கத்துகிறார்கள் மனிதர்கள். ஆனால் பாரீஸ் நகரத்தின் அக்கறை எல்லையற்றது.
இதனால்தான் ஸ்பெயினிலிருந்து தன்னை நோக்கி வந்த ஓவிய மேதை பிகாசோவையும், ஹாலந்திலிருந்து வந்த வின்சென்ட் வான்கோவையும், ரஷ்யாவிலிருந்து வந்த மார்க் ஷேகலையும் (Mare Chagall) அணைத்து அவர்களை வளர்த்தெடுத்தது பாரீஸ். பிகாசோ பாரீஸ் வந்த பிறகுதான் ஜியார்ஜ் பிரேக் (1882_1963) எனும் ஓவியருடன் சேர்ந்து ஓவிய வடிவங்களில் புதிய பரிமாணங்களைத் தேடினார். பிரேக் தீட்டிய இயற்கைக் காட்சி ஓவியம் ஒன்றை விளக்கி எழுதியபோதுதான் ஹென்றி மத்தீஸ் (1869_1964) எனும் ஓவியர் 'கியூபிசம்' என்ற வார்த்தையைப் பயன்படுத்தினார். இவர்தான் கேன்வாஸின் மீது வண்ணங்களை அவற்றின் டியூபிலிருந்தே நேரிடையாகப் பூசும் முறையைக் கொண்டு வந்தார். 'ஃபாவிசம்' (Fawuism) தோன்றியது. மார்ஷல் டுஷாம்ப் 'டாடாயிசம்' என்பதையும், ஆன்ட்ரே பிரிட்டன் 'சர்ரியலிசம்' என்பதையும் முன் வைத்து வளர்த்தது இந்த நகரத்தில்தான்.
பாரீஸ் எனக்கு மிகவும் சுவாரசியமாகத் தெரிந்ததற்குக் காரணம், அது தனது மரபான பழமையை விடாமல் கையில் பிடித்துக்கொண்டிருக்கிற அதே நேரத்தில், அதிநல்ல புதுமைக்கும் இடம் கொடுக்கிறது என்பதுதான்.
இதை உலகின் மிகப்பெரிய அருங்காட்சியகமான 'லூர்' (Louvre) கட்டடத்தைப் பார்க்கிற எவரும் உணர்ந்துகொள்ளலாம். கடந்த எட்டு நூற்றாண்டுகளாக நிலை கொண்டிருக்கும் இக்கட்டடம் உண்மையில் ஒரு கோட்டையாகக் கட்டப்பட்டு பிறகு அரண்மனையாகப் பயன்பட்டது. ஆனால், இத்தகைய வரலாற்றுப்பழமை கொண்ட ஒரு கட்டடம் இன்று லூர் மியூசியமாகத் திகழ்கிறது. இந்தப் பழமையைப் பாதுகாக்கிற அதே நேரத்தில், இதன் நுழைவாயிலின் முன்னால் 1981_ல் மிஸ் பை எனும் நவீன கட்டடக் கலைஞரால் கண்ணாடியும், ஸ்டீலும், கேபிளும் கொண்டு அதிநவீன பிரமிட் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. உலகின் மிகப்பெரிய இந்த அருங்காட்சியகம் பழமைக்கும் புதுமைக்கும் ஒரே நேரத்தில் இடம் கொடுத்துக்கொண்டு கம்பீரமாய் நிற்கிறது.
உலகப் புகழ்பெற்ற 'மோனலிசா' ஓவியத்திலிருந்து பளிங்குச் சிற்பம் 'வீனஸ்' வரை உன்னதமான கலைப் படைப்புகளைத் தாங்கி நிற்கிறது லூர்.
பாம்பிடோ மையம், உலகின் நவீன படைப்புகளையெல்லாம் திறந்த கண்களுடன் ஊக்கப்படுத்தி நிற்கிறது. உலகின் பல கோடிகளிலிருந்து வந்த கலை ஆர்வலர்கள் இவற்றை ரசிப்பதைப் பார்க்கிறபோது Êஏனோ என் மனம் சற்று நிம்மதியிழந்து தவித்தது. லூர் மியூசியத்தின் உன்னதமான சேகரிப்புகளைக் காண்கிறபோது எனது மனம் 1943_ஆம் ஆண்டின் மே மாதம் 27_ஆம் நாளுக்குப் பின்னோக்கிச் சென்றது.
அன்றுதான் பாரீசுக்குள் நுழைந்த ஹிட்லரின் படைகள் பிகாசோ, எர்னஸ்ட், க்ளி, மிரோ போன்ற உன்னதமான ஓவியர்களின் ஆயிரக்கணக்கான ஓவியங்களை தீக்கிரையாக்கின. அந்தத் தீ தின்று மீந்த படைப்புகள்தான் இன்று லூர் அருங்காட்சியகத்தில் உள்ளன. ஹிட்லரின் படை உள் நுழையப்போகிறது என்று தெரிந்தவுடனேயே லூர் அருங்காட்சியகப் படைப்புகள் பாரீசின் நிலவறைகளுக்குள் சென்று பதுங்கிவிட்டன. இவ்வாறு உலகின் உன்னத கலைப்பொக்கிஷங்களைக் காப்பாற்றியதால்தான் அது ஐரோப்பிய பண்பாட்டின் தலைநகரம் என்று அழைக்கப்படுகிறது.
என் வாழ்க்கையில் நான் கண்டு என் உயிருக்குள் ரசித்த இயற்கைக் காட்சி... உலக அதிசயங்களில் ஒன்றெனப் புகழப்படும் ஈஃபிள் கோபுரத்தின்மீது பௌர்ணமி முழுநிலவு ஒளிர்ந்த காட்சி. ஈஃபிள் கோபுரத்தின் பிரமாண்டத்தில் எனது சிறுமையை உணர்ந்த அதே நேரத்தில், அதன் லிஃப்டில் ஏறி மேலே சென்றபோது நான் கண்ட காட்சி என்னை மெய்மறக்கச் செய்தது. மொத்த பாரீஸ் நகரமும் எனக்குக் கீழே. பௌர்ணமி நிலவின் பால்வெளிச்சத்தில் நனைந்துகொண்டு, எனது இளமைக்காலம் தொட்டு எனது விளையாட்டு பொம்மையாய் இருந்து வந்த ஈஃபிள் கோபுரம் இன்றைக்கு எனது விசாலப் பார்வைக்கு ஒரு விருந்தாயிற்று. இரும்பும், ஆணியும் கொண்டு எழுப்பப்பட்ட ஈஃபிள் கோபுரமும் நிலவும் ஒரு புதிய இயந்திர அழகியல் உணர்வை எனக்கு ஊட்டின. நான் என்னை ஒரு கவிஞனாக உணர்ந்தேன்.
இன்று பாரீஸ் நகரத் தெருக்களில் ஏராளமான தமிழர்களைப் பார்க்கிறேன். தமிழ்ப் பயிற்றுவிக்கும் பள்ளிக்கூடங்களைப் பார்க்கிறேன். தமிழிலிருந்து பிரெஞ்சுக்கு மொழி பெயர்ப்பு செய்து தரும், 'மொழி பெயர்ப்புக் கடை' என்ற ஒன்றை கவிஞர் கி.பி. அரவிந்தன் எனக்குக் காட்டியபோது வியந்து போனேன்.
என் கனவு நகரத்தின் காற்றில் தமிழின் ஓசையும் கலந்திருப்பது என் இதயத்தைக் குளிர்வித்தது. குறிப்பாக ஈழத்திலிருந்து புலம்பெயர்ந்து வந்த தமிழர்கள் பாரீஸ் நகரில் இன்று அதிகரித்துள்ளனர்.
எழுபதுகளிலிருந்து தொண்ணூறுகள் வரை விமர்சனம், தத்துவம், கோட்பாடு ஆகியவை பாரீசின் இலக்கியத்தின் மீது நிறைய செல்வாக்கு செலுத்தியிருக்கிறது. சம்பிரதாய முறையில் கதை சொல்லுதலை கேள்விக்குள்ளாக்கிய \"nouvean roman' 'புதுநாவல்' எனும் பரிசோதனை முயற்சி வெற்றி பெற்றிருக்கிறது. கவிதையின் எல்லைகள் விசாலப்படுத்தப்பட்டுள்ளன.
பரிசோதனைக்கான சுதந்திரக் காற்றை பாரீஸ் நகரத் தமிழர்கள் சுவாசிக்கையில், நவீனத் தமிழுக்கு ஒரு புத்துயிர் ஊட்டப்படுமென உணர்ந்தேன்.
எனது ஐரோப்பிய கலைப்பயணம் எனக்குச் சொன்னதெல்லாம் இதுதான்: தமிழனுக்கு இனி திசைகள் நான்கல்ல; நாலாயிரம்.</span>
தீராநதி
|
|
|
| விடுதலைப்புலிகள் பத்திரிகையின் செய்தி |
|
Posted by: Mayuran - 07-22-2004, 12:16 AM - Forum: அரசியல் / பொருளாதாரம்
- Replies (7)
|
 |
[url=http://www.eelampage.com/index.shtml?id=200406212110465961&in=http://[/url]]http://www.eelampage.com/i....&in=[url][/url]
'கேள்விக்குறியாக உள்ளது சமாதானத்தின் எதிர்காலம்" - விடுதலைப்புலிகள் பத்திரிகை
கேள்விக் குறியாக உள்ளது சமாதானத்தின் எதிர்காலம் என்ற முகப்புச் செய்தியுடன் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் அதிகாரபூர்வ ஏடாக 'விடுதலைப்புலிகள்" பத்திரிகையின் ஆனி-ஆடி மாதத்திற்குரிய 117வது இதழ் இன்று வெளிவந்துள்ளது.
சமாதானப் பேச்சுக்ள் தொடர்பாக சந்திரிகா அம்மையாரின் குழப்பகரமான கருத்துக்களும் சிங்கள அரசின் ஸ்திரமின்மையும் ஒன்று சேர்ந்து சமாதான சூழலை கேள்விக்குறியாக்கி வருகின்றது.
சமாதானப் பேச்சை அர்த்தமுள்ளதாக்க தேவையான அரசியல் நடைமுறைகளை புலிகள் இயக்கம் தெளிவாக வரையறுத்து உலகிற்கு தெரியப்படுத்தியுள்ளது கசப்பான கடந்தகால அனுபவங்களை கருத்தில் எடுத்து பேச்சுக்களை இடைநடுவில் குழம்பா வண்ணம் விவேகமான வகையில் அரசியல் நிகழ்ச்சி நிரலை புலிகள் வரைந்து அரசிடம் கையளித்திருந்னர்.
ஆனால் சந்திரிகா அரசு இதுவரை புலிகளின் பேச்சுவார்த்தைக்கான நிகழ்ச்சி நிரலை ஏற்றுக்கொள்ளவும் இல்லை முற்றாக நிராகரிக்கவும் இல்லை. அதற்குப் பதிலாக நேரத்திற்கு ஒரு கருத்தைக் கூறி காலத்தை கடத்தும் தந்திரத்தையே அது கடைப்பிடித்து வருகிறது.
1994ஆம் ஆண்டு அம்மையார் வெளியிட்ட தீர்வுப் பொதியின் அடிப்டையிலேயே பேச்சுவார்த்தை நடாத்தப்படவேண்டும் என்று அவர் பொதுக் கூட்டம் ஒன்றில் கூறியுள்ளார். இத்துடன் பேச்சுவார்த்தையை முன்னெடுக்க ஒரு ஆலோசனை சபை வேண்டுமென்று கூறி அதற்கு நாடாளுமன்று உறுப்பினர்கள் கொண்ட சபை அமைக்கப்படும் என்றும் அம்மையார் கூறியுள்ளார்.
அம்மையாரின் முன்னைய தீர்வுப்பொதி தமிழ் மக்களால் நிராகரிக்கப்பட்டு எப்போதோ செத்துப் போய்விட்டது. பத்து வருடங்களின் பின் மீண்டும் அதற்கு உயிர் கொடுக்க அம்மையார் முனைவது எந்தப் பயனையும் கொடுக்கமாட்டாது. ஏற்கனவே இருக்கின்ற அமைப்பு முறையே சமாதானத்தை முன்நகர்த்த உதவாதபோது மேலும் ஒரு சபை என்ற கருத்து சலிப்பைத் தருவதாவவே உள்ளது.
இதேவேளை அம்மையாரின் ஆட்சிப் பங்காளிகளான ஜே.வி.பியினர் பேச்சுவார்த்தை எப்படி நடத்தப்பட வேண்டும் என்று சிங்கள மக்களிடம் கருத்துக்கணிப்பு நடத்தப்படவேண்;டும் என்று கூறியுள்ளனர்.
இவையெல்லாம் தற்போதைய சமாதானச் சூழலுக்கு ஏற்புடைய விடயங்களல்ல. பேச்சை அரசு விரும்பவில்லை பேச்சை நடாத்தும் நிலையிலும் அரசு இல்லை என்ற உண்மையைத் தான் காட்டுகின்றன.
ஒரு கூட்டத்தில் சமாதானம் பற்றி அம்மையார் ஒரு கருத்தைக் கூறுகிறார். பின்னர் அதை அவரே மறுக்கின்றார். அம்மையார் கூறியதற்கு முரனாக ஜே.வி.பி இன்னொரு கருத்தைக் கூறுகிறது. அதை அம்மையாரும் ஏற்றுக் கொண்டுள்ளார் என்று ஜே.வி.பி கூறுகின்றது. தமிழ்த் தேசிய கூட்மைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களை சபையைவிட்டு விரட்டியடிக்க வேண்டும் என்று பச்சை இனவாதத்தை ஜே.வி.பி தலைவரே கூறுகிறார்.
புலிகள் சமர்ப்பித்த இடைக்கால தன்னாட்சி அதிகார சபைக்கு எதிராக நச்சுப்பிரச்சாரத்தை சிங்களப் பேரினவாத சக்திகள் வேகப்படுத்தியுள்ளன.
ஜே.வி.பி இதில் முன்னணி வகிக்கின்றது சிங்கள ஊடகங்களும் தமது பங்கிற்கு இனவாதப்பணி செய்கின்றன.
கிராமங்கள் தோறும் ஜே.வி.பி. இந்த நச்சுப்பிரச்சாரத்தை தீவிரமாக செய்து வருகின்றது. சமாதான முயற்சிகள் தொடர்பாக புலிகளின் நிலைப்பாடுகள் எதையும் ஏற்க மறுத்துள்ள ஜே.வி.பி. இப்போதே போர்ப்பிரச்சாரங்களை ஆரம்பித்துவிட்டது சந்திரிகா அம்மையாரும் தமது கட்சியின் நிலைப்பாட்டை நிராகரிக்கவில்லை என்று ஜே.வி.பி. கூறிவருக்கின்றது.
இத்தைகய சமாதான விரோதக் கருத்துக்கள் தமிழ் மக்களை விரக்தியின் விளிம்புக்கு கொண்டு செல்கின்றது. சமாதான வழியில் தமிழரின் இன்பிரச்சினை தீர்க்கப்பட முடியாத ஒன்று எனத் தமிழ் மக்கள் எண்ணத் தலைப்பட்டுள்ளனர்.
சமாதானப் பேச்சைத் தட்டிக்கழிக்கும் அதேவேளை சிங்கள அரசு தமிழ்த் தேசியத்தை சிதைக்க முனையும் அரசியல் சதிகளிலும் ஈடுபட்டு வருகின்றது. தனது இராணுவப் புலனாய்வுப்பிரிவினரை பயன்படுத்தி கிழக்கில் கொலைகளிலும் குழப்பத்தை உண்டு பண்ணும் செயல்களிலும் ஈடுபடுகின்றது.
இத்தகைய சதி அரசியல் மூலம் புலிகள் இயக்கத்தை பலவீனப்படுத்தலாம் என்று சிங்கள அரசு நினைத்தால் அது பல வரலாற்றுப் பாடங்களை மறந்து விட்டது என்பது தான் அர்த்தமாகும்.
துரோகங்களும் சதிகளும் புலிகள் இயக்கத்தைப் பலவீனப்படுத்துவதற்கு பதிலாக பலப்படுத்தியுள்ள பல வரலாற்றுச் சம்பவங்களை எமது போராட்ட வாழக்கையில் காணலாம்.
சமாதானத்திற்கு சாதகமாகவும் சிங்கள அரசு செயற்படவில்லை போர் நிறுத்தத்தையும் அது மதிக்கவில்லை. ஆனால் சமாதானச் சூழல் நிலவுகின்றது என உலகிற்கு காட்ட விரும்புகின்றுது.
தமிழ் மக்களைப் பொறுத்த வரையில் சமாதானமும் இல்லை அபிவிருத்தியும் இல்லை மீள்குடியேற்றமும் இல்லை. அகதி வாழ்வும் தொலைந்த பாடு இல்லை நிகழ்கால நிம்மதியுமில்லை எதிர்கால நம்பிக்கையும் இல்லை என்ற விரக்தி நிலையிலேயே உள்ளனர்.
தமிழ் மக்களின் இந்த அரசியல் மனநிலைக்கு மதிப்பளிக்கவேண்டிய நிர்பந்தம் புலிகள் இயக்கத்திற்கு உண்டு. போர்மூலம் தோற்கடிக்க முடியாது தமிழரின் விடுதலைப்போராட்டத்தை சமாதானம் என்ற சதி அரசியல் மூலம் தோற்கடிக்க சிங்கள அரசு முயல்கின்றதோ! என்ற ஐயம் தமிழ் மக்களுக்கு ஏற்பட்டுள்ளது.
காலம் கடந்தபடி உள்ளது சமாதானத்திற்காக காத்திருக்க புலிகள் தயார். ஆனால் சிங்கள அரசு ஒரு சூழ்ச்சிகரமான நிகழ்ச்சி நிரலை வைத்துக் கொண்டு அதை நடைமுறைப்படுத்துவதற்காக சமாதானச் சூழலை இழுத்தடிப்பதை உணர்ந்து கொண்டும் முட்டாள் தனமாக காத்திருக்க புலிகள் இயக்கம் தயார் இல்லை அதை தமிழ் மக்களும் அனுமதிக்க மாட்டார்கள்.
தமிழ் மக்களின் இந்த அரசியல் மனநிலையை சந்திரிகா அரசும் சர்வதேச சமூகமும் புரிந்து கொள்ள வேண்டும்.
நன்றி. புதினம்
|
|
|
| இலவச நிகழ்வு (Program) |
|
Posted by: Aalavanthan - 07-21-2004, 11:33 PM - Forum: கணினி
- Replies (2)
|
 |
<img src='http://www.yarl.com/forum/files/ui.gif' border='0' alt='user posted image'>
Picasa. Everything you need to enjoy your digital photos in a single software product:
Auto-transfer photos from your digital camera.
Organize and find pictures in seconds.
Edit, print, and share photos with ease.
Create slideshows, order prints and more!
தரவிறக்க முகவரி:
http://www.picasa.com/google/
|
|
|
| விடை சொல்ல முடியாத கேள்வி எது? |
|
Posted by: AJeevan - 07-21-2004, 10:49 PM - Forum: பொழுதுபோக்கு
- Replies (11)
|
 |
<b> <span style='color:brown'>அரசு கேள்வி பதிலை படித்த போது
வித்தியாசமாக இருந்த ஒரு பதிலை
நம் யாழ் பிரியர்கள் கையில் கொடுத்து
கருத்து எழுதி
ஒரு பொழுதை சுவாரசியமாக்கச் செய்யலாமே
என எண்ணி கீழே இடம் பெற வைக்கிறேன்.
[size=15]
[b]விடை சொல்ல முடியாத கேள்வி எது? </b>
\"கடவுள் இல்லை\" என்கிறான் நாத்திகன்.
\"கடவுள் இருக்கிறாரா?\" என்று கேட்கிறான் விஞ்ஞானி.
\"கடவுள் கல்லில் இருக்கிறார்\" என்கிறான் பக்தன்.
\"கடவுள் எனக்குள்ளே இருக்கிறார்\" என்கிறான் தத்துவஞானி.
\"நான்தான் கடவுள்\" என்கிறான் கர்வம் கொண்டவன்.
இவ்வளவு விடைகள் இருக்கின்றன. ஆனால் எது தெளிவாக இருக்கிறது?
</span>
|
|
|
| நியு விமர்சனம் |
|
Posted by: AJeevan - 07-21-2004, 10:19 PM - Forum: சினிமா
- Replies (3)
|
 |
<img src='http://www.yarl.com/forum/files/thumbs/t_1.jpeg' border='0' alt='user posted image'>
<img src='http://www.yarl.com/forum/files/2.jpeg' border='0' alt='user posted image'>
எட்டு வயசுப் பையன் விபரீத விஞ்ஞானத்தால் திடீரென்று இருபத்தெட்டு வயசு வாலிபன் ஆகிவிட்டால், என்னென்ன களேபரங்கள் நேரும் என்பது கதை. இப்படி லட்டு மாதிரியான கதை கிடைத்தால் எஸ்.ஜே.சூர்யா மாதிரியான மன்மத ராஜா சும்மா விடுவாரா? புகுந்து விளையாடிவிட்டார். பல இடங்களில் காய்ந்த மாடு கம்பங்கொல்லையில் புகுந்த உணர்வு.
இயக்குனர்கள் ஹீரோக்கள் ஆகும் காலம் இது. ஒரு ஹீரோவாக, கம்பி மேல் நடந்து, பாஸ் மார்க் என்ன, அதற்கு மேலேயே வாங்கி நடிப்பில் முத்திரையைப் பதித்துவிட்டார் சூர்யா. திறமையான லைட்டிங் மற்றும் ஃப்ரேம்கள் மூலம் தன் குறைகளை மறைத்து, வித்தியாசமான மாடுலேஷன், சுறுசுறுப்பான ஆக்டிங் என்று பாத்திரத்துக்கு உயிர் கொடுத்திருக்கிறார். சிறுவர்களுக்கான படுக்கையை அவர் வரைந்து விளக்கும் காட்சியில் தியேட்டர் அதிர்கிறது.
சாயங்காலம் ஆறு மணி வரை பையன். அதற்குமேல் காலை ஆறு வரை இளைஞன் என்பது சுவாரஸ்யம். அந்த சிக்கலைச் சமாளிக்கும் காட்சிகள் அதிகம் இல்லாதது கதையுடன் ஒன்ற முடியவில்லை. காலை ஆறுமணியிலிருந்து கணவனைக் காணோம் என்றால், ஒரு மனைவி சந்தேகப்பட மாட்டாளோ? அதுவும் சிம்ரன் மாதிரியான ஷார்ப் காரெக்டர்?
அடடா, கல்யாணம் பண்ணிக் கொண்டு ஒதுங்கி விட்டாரே? என்று ஃபீல் பண்ணும்படி பிரமாதப்படுத்தியிருக்கிறார் சிம்ரன். நடனம், காதல், கண்டிப்பு, குறும்பு என்று அத்தனையிலும் வெளுத்து வாங்குகிறார்.
முன்பாதியில் உடனே உடனே வரும் ஒரே மாதிரியான பாடல்களும், ஒரே மாதிரியான செட் நடனங்களும் அலுப்பூட்டுகின்றன.
கரகரப்பான குரலில், கண்டிப்பான, பாசமிகு தாய் தேவயானி _ கச்சிதம்.
சிம்ரன் கழுத்தில் தொங்கும் விசிலைத் துரத்தும் சூர்யா _ சத்தமா ஊதுவேன் டயலாக், ஜனகராஜிடம் போர்வைக்குள் நடப்பதை சைகை மூலம் விளக்குவது, ஆட்டோவில் சிம்ரன் மார்பில் தலைசாயும் சிறுவன் போன்ற காட்சிகள் டூ மச்.
அவை டூ மச் என்றால் த்ரீ மச், ஃபோர் மச் என்று பல 'மச்'களைக் கொண்டது கிரண் வரும் காட்சிகள். பயங்கர ஷகீலா படவாசனை!
தமாஷான படம் என்று முடிவு பண்ணியாகி விட்டது. வில்லன்களையும் கோமாளிகள் ஆக்கியாச்சு. (உண்மையில் அந்த வில்லன் படு தமாஷ்!) கடைசி க்ளைமாக்ஸில் மட்டும் கர்ப்பிணி சிம்ரனைக் கொல்ல (அய்யோ! தெலுங்கு ஸ்டைல்!) வெறியுடன் வருகிறார்களாம். ரசிக்க முடியவில்லை.
குகனின் காமிரா நல்ல சுறுசுறுப்பு. ரஹ்மான் இசையில் மூன்று பாடல்கள் தாளம் போட வைக்கின்றன.
http://www.kumudam.com/
|
|
|
| Return back |
|
Posted by: sayanthan - 07-21-2004, 12:39 PM - Forum: அறிமுகம்
- Replies (14)
|
 |
வணக்கம்.. நீண்ட இடைவெளிக்கு பின்னர் இணைகின்றேன்.. எல்லோரும் எப்படி இருக்கிறீர்கள்.. சில வரடங்களுக்கு முன்னர் தாயகத்தில் இருந்து வந்த எழுநா இணையத்தளம் சிலருக்க நினைவு இருக்கலாம்.. அந்த நண்பர்களில் ஒருவன்.. மீண்டும் சந்திப்போம்..
|
|
|
|