Yarl Forum
நியு விமர்சனம் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8)
+--- Forum: சினிமா (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=39)
+--- Thread: நியு விமர்சனம் (/showthread.php?tid=6898)



நியு விமர்சனம் - AJeevan - 07-21-2004

<img src='http://www.yarl.com/forum/files/thumbs/t_1.jpeg' border='0' alt='user posted image'>
<img src='http://www.yarl.com/forum/files/2.jpeg' border='0' alt='user posted image'>


எட்டு வயசுப் பையன் விபரீத விஞ்ஞானத்தால் திடீரென்று இருபத்தெட்டு வயசு வாலிபன் ஆகிவிட்டால், என்னென்ன களேபரங்கள் நேரும் என்பது கதை. இப்படி லட்டு மாதிரியான கதை கிடைத்தால் எஸ்.ஜே.சூர்யா மாதிரியான மன்மத ராஜா சும்மா விடுவாரா? புகுந்து விளையாடிவிட்டார். பல இடங்களில் காய்ந்த மாடு கம்பங்கொல்லையில் புகுந்த உணர்வு.

இயக்குனர்கள் ஹீரோக்கள் ஆகும் காலம் இது. ஒரு ஹீரோவாக, கம்பி மேல் நடந்து, பாஸ் மார்க் என்ன, அதற்கு மேலேயே வாங்கி நடிப்பில் முத்திரையைப் பதித்துவிட்டார் சூர்யா. திறமையான லைட்டிங் மற்றும் ஃப்ரேம்கள் மூலம் தன் குறைகளை மறைத்து, வித்தியாசமான மாடுலேஷன், சுறுசுறுப்பான ஆக்டிங் என்று பாத்திரத்துக்கு உயிர் கொடுத்திருக்கிறார். சிறுவர்களுக்கான படுக்கையை அவர் வரைந்து விளக்கும் காட்சியில் தியேட்டர் அதிர்கிறது.

சாயங்காலம் ஆறு மணி வரை பையன். அதற்குமேல் காலை ஆறு வரை இளைஞன் என்பது சுவாரஸ்யம். அந்த சிக்கலைச் சமாளிக்கும் காட்சிகள் அதிகம் இல்லாதது கதையுடன் ஒன்ற முடியவில்லை. காலை ஆறுமணியிலிருந்து கணவனைக் காணோம் என்றால், ஒரு மனைவி சந்தேகப்பட மாட்டாளோ? அதுவும் சிம்ரன் மாதிரியான ஷார்ப் காரெக்டர்?

அடடா, கல்யாணம் பண்ணிக் கொண்டு ஒதுங்கி விட்டாரே? என்று ஃபீல் பண்ணும்படி பிரமாதப்படுத்தியிருக்கிறார் சிம்ரன். நடனம், காதல், கண்டிப்பு, குறும்பு என்று அத்தனையிலும் வெளுத்து வாங்குகிறார்.

முன்பாதியில் உடனே உடனே வரும் ஒரே மாதிரியான பாடல்களும், ஒரே மாதிரியான செட் நடனங்களும் அலுப்பூட்டுகின்றன.

கரகரப்பான குரலில், கண்டிப்பான, பாசமிகு தாய் தேவயானி _ கச்சிதம்.

சிம்ரன் கழுத்தில் தொங்கும் விசிலைத் துரத்தும் சூர்யா _ சத்தமா ஊதுவேன் டயலாக், ஜனகராஜிடம் போர்வைக்குள் நடப்பதை சைகை மூலம் விளக்குவது, ஆட்டோவில் சிம்ரன் மார்பில் தலைசாயும் சிறுவன் போன்ற காட்சிகள் டூ மச்.

அவை டூ மச் என்றால் த்ரீ மச், ஃபோர் மச் என்று பல 'மச்'களைக் கொண்டது கிரண் வரும் காட்சிகள். பயங்கர ஷகீலா படவாசனை!

தமாஷான படம் என்று முடிவு பண்ணியாகி விட்டது. வில்லன்களையும் கோமாளிகள் ஆக்கியாச்சு. (உண்மையில் அந்த வில்லன் படு தமாஷ்!) கடைசி க்ளைமாக்ஸில் மட்டும் கர்ப்பிணி சிம்ரனைக் கொல்ல (அய்யோ! தெலுங்கு ஸ்டைல்!) வெறியுடன் வருகிறார்களாம். ரசிக்க முடியவில்லை.

குகனின் காமிரா நல்ல சுறுசுறுப்பு. ரஹ்மான் இசையில் மூன்று பாடல்கள் தாளம் போட வைக்கின்றன.

http://www.kumudam.com/


- kuruvikal - 07-21-2004

அட தமிழ் சினிமாவும் விஞ்ஞானரீதியாச் சிந்திக்க வெளிக்கிட்டிருக்கு எண்டுறியள்... பாப்பம் எப்படி இருக்கென்று விஞ்ஞானச் சிந்தனை... <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- vasisutha - 07-22-2004

கொப்பி பண்ணுறதில நம்மாளுங்களை மிஞ்சவே முடியாதா? :roll:
இந்த படம் BIG என்ற ஆங்கிலப்படத்தின் கதைக் கருவை சுட்டதோடு இல்லாமல். அந்தப் படத்தில் வரும் பல காட்சிகளையும் அப்படியே கொப்பி பண்ணியுள்ளார்கள். அதில் 12 வயது சிறுவன் இதில் 8 வயது சிறுவன்.
ஆங்கிலப் படத்தைப் பற்றிய விபரங்கள்...



starring: Tom Hanks, Elizabeth Perkins, Robert Loggia,

Director: Penny Marshall

Story:
When 13-year-old Josh Baskin (David Moscow) wishes that he was 'big', little does he know that his wish is about to come true. He wakes up the next morning trapped in the 30-something body of Hanks and, when his mum chucks a wobbler at this unrecognisable man standing in her front room, flees to New York City in desperation.

Thankfully, bezzie mate Billy (Jared Rushton) is on hand to help him track down the mystical fairground slot-machine responsible for granting the wish in the first place. Meantime, Josh finds himself a job with a toy company, where his childish ways make something of an impression on both his boss MacMillan (Robert Loggia) and ambitious workmate Susan (Elizabeth Perkins).


- Paranee - 07-22-2004

எப்பவும் அப்படித்தானே வசி
இதிலென்ன மாற்றம்
இதிலென்ன அதிசயம்
கொப்பி செய்தாலும ;அதை திறம்பட செய்வதிலும் ஓர் திறமை வேண்டுமல்லவா?