![]() |
|
அழிக்க முடியாத வடு இது....! - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11) +--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52) +--- Thread: அழிக்க முடியாத வடு இது....! (/showthread.php?tid=6881) |
அழிக்க முடியாத வடு இது - tamilini - 07-23-2004 <img src='http://www.yarl.com/forum/files/july23_kodumai.jpg' border='0' alt='user posted image'> ஜுலை.. இது கறுப்பு ஜுலை... தமிழரின் ரத்தம் குடிக்க வந்த ஜுலை சொத்திழந்து சொந்தமிழந்து... தமிழனை அனாதையாக்கிய ஜுலை தாரோடு உருகியும்... நெருப்பில் கருகியும்... நெஞ்சமெல்லாம் ஆசைகளுடன்... நிறைவேறாத ஆசைகளுடன்... பல்லாயிரம் தமிழரை பரலோகம் அனுப்பிய ஜுலை... காடையரிடம் இருந்து கற்பை காக்க முடியாது.... கன்னிகள் கண்ணீருடன் கருகவைத்த ஜுலை இது..... கண்முன்னே தாயை கற்கழிக்க.... மகனை குற்றூயிராய் கிடக்க வைத்த ஜுலை இது.... கால்களும் கைகளும் வெட்டப்பட்ட நிலையில்..... தம்பிள்ளைகளை பிழைக்க வைக்க முடியாது... பெற்றோரை ரத்த கண்ணீர் வடிக்க வைத்த ஜுலை இது... தமிழனை அழிப்பதாக இறுமாப்புடன் சிங்களம்... தமிழனுக்கு கேட்க நாதியில்லை என்று கனவு கான வைத்த ஜுலை இது.....! நீ யார்...? எப்படி வாழ்கிறாய் ...? என்று ஒவ்வொரு தழிழனையும் தட்டிக்கேட்ட ஜுலை இது..... பற்பல வீர சாதனைகளின் பின்னே... அழியாத காவியமாய் தமிழரின் நெஞ்கங்களில் ஓவியமான ஜுலை இது....! அழிவிலேயே உணர்வை கிளப்பிய ஜுலை இது சுதந்திர தீயை ஏற்றிய ஜுலை இது.......! தமிழர்களுக்கு தம்மை உணர்த்திய ஜுலை இது... தாயக உதயத்திற்கு... தமிழரின் ரத்தத்தால்... சிங்களம் செய்த அர்ச்சனை இது.... எத்தனை ஆண்டுகள் சென்றாலும்.... நெஞ்சங்களில் அழிக்க முடியாத வடு இது...........................! - kavithan - 07-24-2004 நன்றி அக்கா கறுப்பு யூலையை சித்தரித்து கவிதை வடித்ததுக்கு...கவிதை நன்று - kuruvikal - 07-24-2004 ஈழத்தமிழனின் இதய வடுவாகிப் போன 83 இன் அந்த ஜூலையின் கோரக் காட்சிகளை காலம் தவறாமல் காலக்கண்ணாடி முன் காண வைத்த கவிக்கு ஈழத்தமிழனாய் எம் நன்றிகள்...! ஈனச் சிங்களத்தான் வால் பிடிக்கும் வீணர்கள் உணரட்டும் இந்த உண்மை நெஞ்சில் ஈரமிருந்தால்...! இன்றேல் தடவிப்பார்க்கட்டும் தம் இதய வடுவை....! புலிவீரன் கையிரு ஆயுதமே இன்னோர் கறுப்பு ஜூலை வரவின் முன் இரும்புத்திரையாய் நிற்கிறது உணர்வோம் பலப்படுத்துவோம் புலிவீரன் கரங்களை....! வேற்றுமை மறப்போம் ஈழத்தமிழராய் ஓரணியில் நிற்போம் புலிவீரன் பின்...! கண்கள் தோண்டிய போது சிங்களக் காடையன் கேட்டது நீ "தெமிழா" என்றே அன்றி வடக்கா கிழக்கா தெற்கா மேற்கா என்றல்ல என்ற உண்மையும் மறவாதீர்....! உம் உறவுகளின் குருதி காய்ந்த தடங்களின் மீதே இன்றைய உம் வாழ்வு இந்த உண்மைதனை ஒவ்வோர் தமிழனும் அனுதினமும் உணர்வீராக...! - tamilini - 07-24-2004 Quote:கண்கள் தோண்டிய போது இதைனை யாவரும் மனதில் வைத்தாலே போதும்........! |