Welcome, Guest
You have to register before you can post on our site.

Username
  

Password
  





Search Forums

(Advanced Search)

Forum Statistics
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244

Full Statistics

Online Users
There are currently 451 online users.
» 0 Member(s) | 448 Guest(s)
Applebot, Bing, Google

Latest Threads
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,307
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,231
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,604
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,295
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,634
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,060
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,463
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,481
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,028
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,238

 
  ஈழத்திலும் பல கும்பகோண நிகழ்வுகள்
Posted by: Paranee - 07-28-2004, 08:42 AM - Forum: சுமுதாயம் (வாழ்வியல்) - Replies (2)

ஈழத்திலும் பல கும்பகோண நிகழ்வுகள் இடம்பெறக்கூடிய சாத்தியக்கூறுகள் நிறைய தென்படுவதாக தகவல்

வவுனியா நகரப்பகுதியில் அமைந்துள்ள சுத்தானந்தா பாலர் பாடசாலை ஒரு பகுதி பாலர் வகுப்புகளும் மறுபகுதியில் திருமண வைபமும் நடந்தேறுகின்றன. திருமணம் என்னும்போது இந்து முறைப்படி யாகம் வளர்க்கப்பட்டு நிகழ்வுகள் இடம்பெறுகின்றன. இத்தகைய நடவடிக்கைகள் மிகமிக பாரதுரமானவை.

ஒரு சிறு பொறி போதும் பெருங்காடே நீறாகிவிடும்.

உரியவர்கள் கவனத்தில் எடுத்தல் நல்லது

இது ஒரு எடுத்துக்காட்டே ஆகுமு;. இதைப்போல பல பாடசாலைகள் ஈழத்தில் இருக்கின்றன.

Print this item

  வசூல்ராஜா MBBS க்குத் தடை...!
Posted by: kuruvikal - 07-28-2004, 04:02 AM - Forum: சினிமா - Replies (3)

<img src='http://gallery.indiainfo.com/tamil/albums/album63/04a.jpg' border='0' alt='user posted image'>

வசூல்ராஜாவுக்கு நீதிமன்றம் தடை

கமல்ஹாசன் நடிக்கும் 'வசூல்ராஜா எம்.பி.பி.எஸ்' படத்தைத் திரையிட சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

இந்தியில் 'முன்னாபாய் எம்.பி.பி.எஸ்' என்ற பெயரில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற படம் தமிழில் கமல்ஹாசன், ஸ்னேகா, பிரபு நடிக்க வசூல் ராஜா எம்.பி.பி.எஸ். என்ற பெயரில் தயாராகி வருகிறது.

இதற்காக டூயட் பாட சுவிஸ் சென்று திரும்பியுள்ளார் கமல். வட கொரிய திரைப்பட விழாவில் கலந்து கொண்டுவிட்டு அப்படியே சுவிஸ் பறந்துவிட்டார் கமல். ஸ்னேகா உள்ளிட்ட படக் குழுவினர் சென்னையிலிருந்து போய்ச் சேர்ந்தனர். (கூடவே கமலுக்கு ஒத்தாசைக்கு கௌதமியும் போயிருந்தார்... ஹி.. ஹி...)

அனைவரும் ஊர் திரும்பி விட்ட நிலையில், படத்துக்கு நீதிமன்ற சிக்கல் கிளம்பியுள்ளது. இந்தப் படத்தின் தலைப்பு டாக்டர்களை இழிவுபடுத்துவது போல உள்ளது, எனவே படத்தின் பெயரை மாற்ற வேண்டும் என்று தமிழ்நாடு டாக்டர்கள் சங்கம் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

இது தொடர்பாக படத்தின் இயக்குனர் சரணுக்கும், டாக்டர்கள் சங்க நிர்வாகிகளுக்கும் இடையே பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது.

படத்தின் தலைப்பு கமலை மட்டுமே குறிப்பதாகவும், டாக்டர்களையோ, டாக்டர் தொழிலையோ இழிவுபடுத்துவதாக இல்லை என்றும் கமல்ஹாசன் தரப்பிலும், படத் தயாரிப்பாளர்கள் தரப்பிலும் விளக்கம் தரப்பட்டது.

ஆனாலும், தலைப்பை மாற்றாவிட்டால் வழக்கு தொடருவோம் என டாக்டர்கள் கூறினர். சொன்ன மாதிரியே தமிழ்நாடு மருத்துவக் கவுன்சில் சார்பாக அதன் தலைவர் பாலசுப்ரமணியன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

அதில், 'வசூல்ராஜா எம்.பி.பி.எஸ்' என்ற பெயரில் கமல்ஹாசன் நடித்து வரும் படம், டாக்டர்களின் மதிப்பை குலைக்கும் விதமாக உள்ளது. இந்தப் படத்தின் தலைப்பை மாற்றக் கோரி சென்சார் போர்டிடம் மனு கொடுத்தோம். பல நாட்களாகியும் அதற்கு பதில் வரவில்லை.

இந்தியில் 'முன்னாபாய்' என்ற பெயரில் இந்தப் படம் எடுக்கப்பட்டது. அதன் தழுவல்தான் 'வசூல்ராஜா எம்.பி.பி.எஸ்'. முன்னாபாய் என்றால் சின்னப் பையன் என்று அர்த்தம். ஆனால் வசூல்ராஜா என்பது மருத்துவ விதிமுறைகளை மீறக் கூடிய சொல்லாக உள்ளது.

எனவே வசூல்ராஜா எம்.பி.பி.எஸ். என்ற பெயரில் படம் வெளியிட தடை விதிக்க வேண்டும் என்று மனுவில் கோரப்பட்டிருந்தது.

மனுவை நீதிபதி பாலசுப்ரமணியம் விசாரித்தார். வழக்கறிஞர்கள் போராட்டம் காரணமாக மனுதாரர் பாலசுப்ரமணியமே நேரில் ஆஜராகி வாதாடினார். அவரது வாதத்தைத் தொடர்ந்து 'வசூல்ராஜா எம்.பி.பி.எஸ்' படத்தை வெளியிட மத்திய தனிக்கைக் குழுவினர் சான்றிதழ் வழங்க இடைக்காலத் தடை விதிப்பதாக நீதிபதி அறிவித்தார்.

இந்தத் தடை நீங்கினால் தான் படத்தை ரிலீஸ் செய்ய முடியும்.

thatstamil.com

Print this item

  மனிதனாவது எப்போது...? ? ?
Posted by: shanmuhi - 07-27-2004, 11:35 PM - Forum: கவிதை/பாடல் - Replies (6)

<b>மனிதனாவது எப்போது...? ? ?</b>

<b>அர்த்தங்களின் சந்தையில் முகவரியை
தொலைத்து, அந்நிய நாட்டில் அகதியாய்
தஞ்சமாய் வந்துறங்கியபோதே எனை
நோக்கிட்ட வினா எந்த நாட்டவர் என்று
நளினமாய் கேட்டிட, நானும்
சிறீலங்கன் என்று நயமாய் பகிர்ந்திட
அன்று ஆரம்பித்த பதிவுகள்தாம்
இன்றுவரை தொடர்கிறது தொடர்கதையாய்...

இருமணம் கலந்த திருமணப் பதிவில்
இனிய மழலைகளின் பெயர் பதிவில்
வேலை தேடும் படலங்களில்
அந்நியரோடு அந்நியமாய் அஞ்சாமல்
அன்போடு உறவாட நினைக்கும்போது
தொடர்கிறது நான் ஒரு சிறீலங்கனாய்....

இந்தநாட்டு பிரஜா உரிமைக்காக
அந்தநாட்டு பிரஜா உரிமையை
இழந்தபோதும் தொடர்கிறது
நான் ஒரு சிறீலங்கனாக..
போகும் இடம் தன்னிலும் வருமிடம் தன்னிலும்
தொடர்கிறது என்றென்றும் தொடர்கதையாய்...

நான் ஒர் அந்நியனாய் அகதியாய்
சிறீலங்கனாய் வேண்டாம்
புலத்தில் நிறபேதமில்லாத மனிதனாக
மதித்திடும் காலம் தான் எப்போ வரும்</b>

Print this item

  இறந்த புஷ்
Posted by: AJeevan - 07-27-2004, 11:25 PM - Forum: செய்திகள்: உலகம் - Replies (3)

<img src='http://www.vikatan.com/av/2004/aug/01082004/p82a.jpg' border='0' alt='user posted image'>
<span style='font-size:25pt;line-height:100%'>ஈராக்கில்
இறந்த அமெரிக்க ராணுவ வீரர்களின் புகைப்படங்களால் உருவான
புஷ் படம்!</span>

மெயிலில் அனுப்பியவர்: வினோத்

Vikadan

Print this item

  &quot;ஐ, ரோபாட்&quot;
Posted by: AJeevan - 07-27-2004, 09:17 PM - Forum: சினிமா - Replies (1)

<img src='http://www.vikatan.com/av/2004/aug/01082004/p90a.jpg' border='0' alt='user posted image'>

சயின்ஸ் ஃபிக்ஷன் கதைகளுக்கே உரிய மவுசைப் பயன்படுத்தி காசு பார்க்கும் முயற்சியில் இன்னொரு படம் 'ஐ, ரோபாட்'. இன்னும் 31ஆண்டுகள் கழித்து சிகாகோவில் நடக்கும் கதை. ரோபாட்கள் இல்லாமல் எதுவுமே சாத்தியமில்லையாம் அப்போது. அந்தச் சுழலில் சிக்கித் தவிக்கும் ஒரு டிடெக் டிவ்வை ஹீரோவாக முன்னிறுத்தி கதையைக் கொண்டுபோகிறார்கள். ஸ்பெஷல் எஃபெக்ட்ஸில் புகுந்து விளையாடியிருக்கிறார்கள்!
<img src='http://www.vikatan.com/av/2004/aug/01082004/p88.jpg' border='0' alt='user posted image'>
புதிய மொந்தையில் பழைய கள்! முதல் ஜேம்ஸ்பாண்ட் சீன் கானரி நடித்த 'கோல்ட்ஃபிங்கர்' படத்தை தூசிதட்டி, டிஜிட்டல் கலக்கல்கள் நிகழ்த்தி, புது உருவேற்றி உலகெங்கும் ரிலீஸ் செய்கிறார்கள். நாற்பதாண்டுகள் கழித்துப் பார்த்தாலும் விறுவிறுப்பு கொஞ்சம்கூடக் குறையாமல் பரபரப் பாகப் பேசப்படும் என்கிறார்கள்.

ஆயுதகோடௌனை அழித்தொழித்து மியாமி பீச்சில் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கும் ஜேம்ஸ்பாண்டுக்கு அடுத்த வேலை வந்துசேர்கிறது. உலகப் பொருளாதாரத்தையே சீர்குலைக்கக்கூடிய தங்கக் கடத்தலை தனக்கே உரிய ஸ்டைலில் துப்பறிகிறார் பாண்ட். கோல்ட்ஃபிங்கர் என்பது வில்லனின் பெயர்!

vikadan.com

Print this item

  ஏக்கத்தில் நான்
Posted by: tamilini - 07-27-2004, 02:00 PM - Forum: கவிதை/பாடல் - Replies (30)

<img src='http://www.nagina.org/images/girl.jpg' border='0' alt='user posted image'>

பெண் நான்
தனித்து இயங்க முடியாது...
என் விருப்பத்தை நிறைவேற்ற முடியாது....
சழுகத்திற்காக பயந்து.....
பிறரில் சார்ந்து வாழும் ஒரு பிறவி......

நெஞ்சம் நிறைய இலட்சியங்கள் உண்டு......
அதை சாதிக்க பல தடைகள் முன்னால்.....
காரணம் நான் ஒரு பெண்.........
எதற்கும் மண்டியிட வேண்டும்....
நானாய் எதையும் செய்ய முடியாது.....
காரணம் நான் ஒரு பெண்.......
நான் செய்வதை இந்த சழுகம் ஏற்காது....
என் மேல் வசை பாடும்......
இதனால் எனக்கு எல்லாம் தடை......!
என்னை பாதுகாக்க வேண்டியது
என் குடும்பத்தின் கடமை.......
கடமையால் என் கனவுகள் சிதைக்க படுகிறது....

எனக்கு திறமையிருக்கலாம்...
என்னால் எல்லாம் செய்ய முடியாலாம்......
பாழாய் போன இந்த சழுகத்தால்...
வசைபாடுவதை நிறுத்த முடியாது....
என் குடும்பத்தால் சமூகத்திற்கு
பயப்படாது இருக்க முடியாது....
என் இலட்சியங்கள்
கற்பனைகளாகவே மட்டும் என்னுடன்.....

சந்தர்ப்பங்கள் கிடைத்தும்.....
சாதிக்க முடியாமல்.....
நான் கோழையாக வாழ்கிறேன்....
இப்படி இருந்தால் தான் நான் பெண்
என்பதை சழூகம் ஏற்கும் என்பதற்காக இல்லை....
நான் இப்படி இருந்தால் தான்....
என் குடும்பம் இந்த சழுகத்தில்
தலை நிமிர்ந்து வாழு முடியும் என்பதனால்
என் இலட்சியங்களை
என்னுள் புதைத்து.......
எனக்கு தடையான சழுகத்தை
என்ன செய்ய முடியும் என்ற ஏக்கத்தில் நான்.......!

Print this item

  மன்மதன் வந்திருக்கிறேன்..
Posted by: ÁýÁ¾ý - 07-27-2004, 01:03 PM - Forum: அறிமுகம் - Replies (30)

அன்பு நண்பர்களே.. அருமை நண்பன் பரஞ்சோதியின் மூலம் இங்கே உங்கள் நட்பை நாடி வந்திருக்கிறேன்.. இப்பொழுது வசிப்பது துபாயில். இனி வரும் பதிவுகளில் நிறைய பேசலாம்..

அன்புடன்
மன்மதன்

Print this item

  இதயக் கோவில்...!
Posted by: kuruvikal - 07-27-2004, 02:59 AM - Forum: கவிதை/பாடல் - Replies (39)

<img src='http://kuruvikal.yarl.net/archives/birdnest.jpg' border='0' alt='user posted image'>

மலரே...
நம்மிருவர்
வாழ்வே வசந்தமாக
பூங்குருவி
கட்டியது ஒரு கோவில்
இதயக் கோவில்...!

நீ என்றும் இங்கே வாழ்வாய்
வாழ்வது நித்திய வாசமாய்
வசந்தம் வீச.....!

நன்றி... http://kuruvikal.yarl.net/

Print this item

  ஓட்டோகிராப் சேரன் மீது பழி .... உண்மை துலங்குமா...?!
Posted by: kuruvikal - 07-27-2004, 02:42 AM - Forum: சினிமா - Replies (2)

சேரன், தங்கர்பச்சான் கோபாவேச பேட்டி

நிஷா என்ற இளம் பெண்ணை இயக்குனர் சேரனும், தங்கர்பச்சானும் பாலியல் வல்லுறவு செய்ததாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அந்த இருவரும் கூட்டாக நிருபர்களை சந்தித்தனர்.

<img src='http://www.thatstamil.com/images23/cinema/cheran300.jpg' border='0' alt='user posted image'>

சேரன் கூறுகையில்,

மதுரை மாவட்டத்தில் இருந்து சினிமாவையே வாழ்க்கையாக நினைத்து சென்னைக்கு வந்து போராடியவன் நான். உழைப்பால் ரசிகர்கள் மத்தியில் நல்ல இடம் கிடைத்துள்ள நிலையில் சூழ்ச்சிக்காரர்களால் களங்கப்படுத்தப்பட்டு நிற்கிறேன்.

என் நிம்மதியும், என் அம்மா, அப்பா, மனைவி, குழந்தைகளின் நிம்மதியையும் பறி கொடுத்துவிட்டேன். இந்தக் குற்றச்சாட்டு முழுக்க முழுக்க தவறானது. என் மீதான களங்கத்தை நான் எப்படித் துடைக்கப் போகிறேன்?

பல வருடம் கழித்து நீதிமன்றத்தில் குற்றம் தவறானது என்று நிரூபிக்கப்பட்டாலும், மக்களிடம் பெற்ற பெயரை எப்படி திரும்பவும் நான் சம்பாதிப்பது?

முதலில் அந்தப் பெண் நிஷா திருமணமாகதவர் என்றார்கள், அப்புறம் திருமணமானவர் என்கிறார்கள். பல வருடங்களாக விபச்சாரத்தில் ஈடுபட்டிருந்தார் என்கிறது போலீஸ். விபச்சாரத்தில் இருந்தவரை நான் எப்படி முதன்முதலில் கெடுக்க முடியும்?

என் தாயும் தந்தையும் போன் செய்து என்னிடம் அழுகிறார்கள். அவர்களுக்கு நான் என்ன பதில் சொல்வேன். ஏன் இப்படி ஒரு சூழ்ச்சி செய்து பொய்யான வழக்கில் சிக்க வைத்தார்கள் என்று புரியவே இல்லை.

நான் யாருக்கும் சிறு துரோகமும் செய்யாதவன். இந்தக் குற்றச்சாட்டை பொய் என நிரூபிக்கும் வரை ஓய மாட்டேன் என்றார் சேரன்.

<img src='http://www.thatstamil.com/images23/cinema/thangar140.jpg' border='0' alt='user posted image'>

தங்கர்பச்சான் கூறியதாவது:

நான் எதையும் மனதில் வைத்துக் கொள்ளாமல் வெளிப்படையாகப் பேசிவிடுகிற ஆள். என் படைப்புகள் மூலம் என்னால் ஆனதை தமிழ்ச் சமுதாயத்துக்கு செய்து கொண்டிருக்கிறது ஒரு கலைஞன்.

இதைப் பொறுக்க முடியாத தமிழினத் துரோகிகள் என்னையும் சேரனையும் அழித்தொழிக்கும் கேவலமான வேலையில் இறங்கியிருக்கிறார்கள். படிக்காத பெற்றோருக்கு பிள்ளையாக, ஏழைக் குடும்பத்தில் பிறந்தவன் நான்.

என் கல்வியால் உயர்ந்தவன். உலக இலக்கியம், உலக சினிமா பற்றி ஆர்வம் கொண்டவன். என் படைப்புகளையும் தரத்துடன் தர முயல்பவன். இதைப் பொறுக்க முடியாத, கறுப்புத் தமிழனின் வளர்ச்சி பிடிக்காத சிலர் செய்த சதி தான் இது என்றார்.

thatstamil.com

------------------------------

யார் கண்டார் பெண்ணென்றால் பேயும் இரங்கும் என்பது இன்றும் இருக்கும் போது பெண்களும் எப்படித்தான் கூத்துப் போட மாட்டார்கள்....! பாவம் ஒரு பக்கம் பழி இன்னொரு பக்கமோ....???! :roll: :?:

மனிதனாய் உண்மையாய் கொண்ட குடும்பத்தோடு ஒழுக்கத்தோடு வாழ விரும்பும் ஆண்களே விழித்திருங்கள்....! :twisted: Idea

Print this item

  இப்படியும் நடக்குது....!
Posted by: kuruvikal - 07-27-2004, 02:29 AM - Forum: சுமுதாயம் (வாழ்வியல்) - Replies (23)

<b>பஸ்சில் தாலி கட்ட முயன்ற வாலிபர் கைது</b>

ஓடும் பஸ்சில் கல்லூரி மாணவிக்குத் தாலி கட்ட முயன்ற வாலிபர் தர்ம அடி வாங்கி, போலீஸில் ஒப்படைக்கப்பட்டார்.

தஞ்சை மாவட்டம் திருச்சிற்றம்பலம் அருகே களத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் பாலமுருகன் (22). இவர் இதே ஊரைச் சேர்ந்த, புதுக்கோட்டை அரசு மகளிர் கல்லூரியில் பி.எஸ்.சி. முதலாமாண்டு பயிலும் மாணவியை ஒரு தலையாகக் காதலித்து வந்தார்.

தினமும் அந்த மாணவி கல்லூரிக்குச் செல்லும்போது பேருந்து நிலையம் வரை சென்று தனது காதலை ஏற்றுக் கொள்ளச் சொல்வது இவரது வழக்கமாக இருந்து வந்தது. ஆனால் அந்த மாணவி பாலமுருகனை ஏறெடுத்தும் பார்க்கவில்லை.

இந் நிலையில் கல்லூரிக்குச் செல்ல அந்த மாணவி பஸ்சில் ஏறியபோது, பாலமுருகனும் உடன் ஏறிக்கொண்டார். பஸ்சில் மாணவியிடம் தனது காதலை ஏற்றுக் கொள்ளும்படி வற்புறுத்தத் தொடங்கினார். இதற்கு அந்த மாணவியும் அவரது சக மாணவிகளும் பாலமுருகனைக் கண்டித்தனர்.

அதற்கு பாலமுருகன், இவள் எனது மாமன் மகள், எனவே நீங்கள் பேசாமல் இருங்கள் என்று கூற, உடனே அந்த மாணவி, இவர் எனது உறவினர் இல்லை. எனக்கும், இவருக்கும் எந்த சம்பந்தமும்இல்லை என்றார்.

இதனால் ஆத்திரமடைந்த பாலமுருகன் திடீரென தான் தயாராக வைத்திருந்த தாலி கயிறை எடுத்து மாணவியின் கழுத்தில் கட்ட முயன்றார். ஆனால் மாணவி விரைந்து விலகி, காலில் இருந்த செருப்பைக் கழற்றி பாலமுருகனை அடித்தார். அவருடன் சேர்ந்து சக மாணவிகளும் பாலமுருகனுக்கு தர்ம அடி கொடுத்தனர்.

இதனையடுத்து பயணிகள் பாலமுருகனை பிடித்துக்கொண்டனர். இதனையடுத்து வடகாடு என்ற இடத்தில் பஸ்சை நிறுத்தி பாலமுருகனை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். ஒடும் பஸ்சில் மாணவிக்கு கட்டாயத் தாலி கட்ட முயன்றது அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

(thatstamil.com)
-----------------------

இதெல்லாம் எதன் பாதிப்பு...வேற என்ன... சினிமாதான்....! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

Print this item