Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
ஓட்டோகிராப் சேரன் மீது பழி .... உண்மை துலங்குமா...?!
#1
சேரன், தங்கர்பச்சான் கோபாவேச பேட்டி

நிஷா என்ற இளம் பெண்ணை இயக்குனர் சேரனும், தங்கர்பச்சானும் பாலியல் வல்லுறவு செய்ததாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அந்த இருவரும் கூட்டாக நிருபர்களை சந்தித்தனர்.

<img src='http://www.thatstamil.com/images23/cinema/cheran300.jpg' border='0' alt='user posted image'>

சேரன் கூறுகையில்,

மதுரை மாவட்டத்தில் இருந்து சினிமாவையே வாழ்க்கையாக நினைத்து சென்னைக்கு வந்து போராடியவன் நான். உழைப்பால் ரசிகர்கள் மத்தியில் நல்ல இடம் கிடைத்துள்ள நிலையில் சூழ்ச்சிக்காரர்களால் களங்கப்படுத்தப்பட்டு நிற்கிறேன்.

என் நிம்மதியும், என் அம்மா, அப்பா, மனைவி, குழந்தைகளின் நிம்மதியையும் பறி கொடுத்துவிட்டேன். இந்தக் குற்றச்சாட்டு முழுக்க முழுக்க தவறானது. என் மீதான களங்கத்தை நான் எப்படித் துடைக்கப் போகிறேன்?

பல வருடம் கழித்து நீதிமன்றத்தில் குற்றம் தவறானது என்று நிரூபிக்கப்பட்டாலும், மக்களிடம் பெற்ற பெயரை எப்படி திரும்பவும் நான் சம்பாதிப்பது?

முதலில் அந்தப் பெண் நிஷா திருமணமாகதவர் என்றார்கள், அப்புறம் திருமணமானவர் என்கிறார்கள். பல வருடங்களாக விபச்சாரத்தில் ஈடுபட்டிருந்தார் என்கிறது போலீஸ். விபச்சாரத்தில் இருந்தவரை நான் எப்படி முதன்முதலில் கெடுக்க முடியும்?

என் தாயும் தந்தையும் போன் செய்து என்னிடம் அழுகிறார்கள். அவர்களுக்கு நான் என்ன பதில் சொல்வேன். ஏன் இப்படி ஒரு சூழ்ச்சி செய்து பொய்யான வழக்கில் சிக்க வைத்தார்கள் என்று புரியவே இல்லை.

நான் யாருக்கும் சிறு துரோகமும் செய்யாதவன். இந்தக் குற்றச்சாட்டை பொய் என நிரூபிக்கும் வரை ஓய மாட்டேன் என்றார் சேரன்.

<img src='http://www.thatstamil.com/images23/cinema/thangar140.jpg' border='0' alt='user posted image'>

தங்கர்பச்சான் கூறியதாவது:

நான் எதையும் மனதில் வைத்துக் கொள்ளாமல் வெளிப்படையாகப் பேசிவிடுகிற ஆள். என் படைப்புகள் மூலம் என்னால் ஆனதை தமிழ்ச் சமுதாயத்துக்கு செய்து கொண்டிருக்கிறது ஒரு கலைஞன்.

இதைப் பொறுக்க முடியாத தமிழினத் துரோகிகள் என்னையும் சேரனையும் அழித்தொழிக்கும் கேவலமான வேலையில் இறங்கியிருக்கிறார்கள். படிக்காத பெற்றோருக்கு பிள்ளையாக, ஏழைக் குடும்பத்தில் பிறந்தவன் நான்.

என் கல்வியால் உயர்ந்தவன். உலக இலக்கியம், உலக சினிமா பற்றி ஆர்வம் கொண்டவன். என் படைப்புகளையும் தரத்துடன் தர முயல்பவன். இதைப் பொறுக்க முடியாத, கறுப்புத் தமிழனின் வளர்ச்சி பிடிக்காத சிலர் செய்த சதி தான் இது என்றார்.

thatstamil.com

------------------------------

யார் கண்டார் பெண்ணென்றால் பேயும் இரங்கும் என்பது இன்றும் இருக்கும் போது பெண்களும் எப்படித்தான் கூத்துப் போட மாட்டார்கள்....! பாவம் ஒரு பக்கம் பழி இன்னொரு பக்கமோ....???! :roll: :?:

மனிதனாய் உண்மையாய் கொண்ட குடும்பத்தோடு ஒழுக்கத்தோடு வாழ விரும்பும் ஆண்களே விழித்திருங்கள்....! :twisted: Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#2
Quote:யார் கண்டார் பெண்ணென்றால் பேயும் இரங்கும் என்பது இன்றும் இருக்கும் போது பெண்களும் எப்படித்தான் கூத்துப் போட மாட்டார்கள்....! பாவம் ஒரு பக்கம் பழி இன்னொரு பக்கமோ....???!

மனிதனாய் உண்மையாய் கொண்ட குடும்பத்தோடு ஒழுக்கத்தோடு வாழ விரும்பும் ஆண்களே விழித்திருங்கள்....!
Reply
#3
<span style='color:darkred'>சினிமா ஒரு சாக்கடை உண்மையா....??!
Quote:எழுதப்பட்டது: வியாழன் ஆடி 22, 2004 11:59

சினிமா மட்டுமல்ல எந்த ஒரு இடமும் சாக்கடையாவதோ மோட்சமாவதோ அங்கு இருப்பவர்களைப் பொறுத்தது.

நாம் யாரையும் ஒரேயடியாக நம்பி விட முடியாது.உண்மையில் அப்படி நடந்திருந்தால்; அது வெளிவந்தே தீரும்.

இருப்பினும் நிஷா இவ்வளவு காலத்துக்குப் பின்னர் இது பற்றி புகார் செய்ததில் இருந்து யாரோ பின்னணியில் இருக்கிறார்கள் போல் தெரிகிறது.

சேரனும்-தங்கரும் தமிழக சாதி முறையால் பார்க்கப்படுகிறார்கள் என்றே தோன்றுகிறது.

எதற்கும் விடை கிடைக்கும்...........
_________________
-அஜீவன்

<img src='http://www.vikatan.com/av/2004/aug/01082004/p41.jpg' border='0' alt='user posted image'>
[size=14]
Idea <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> \"நீ உன் ஃப்ரெண்ட்ஸ்கிட்டே சாமியாராகிடலாம்னு பார்க்கறேன்Õனு சொல்லிட்டிருக்கியாமே?

:!: :roll: மவனே... தொலைச்சுப்புடுவேண்டா உன்னை!
நான் ஒருத்தி பத்தலையா உனக்கு?!\"???????????</span>
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)