Welcome, Guest
You have to register before you can post on our site.

Username
  

Password
  





Search Forums

(Advanced Search)

Forum Statistics
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244

Full Statistics

Online Users
There are currently 456 online users.
» 0 Member(s) | 453 Guest(s)
Applebot, Bing, Google

Latest Threads
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,307
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,231
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,604
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,295
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,634
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,060
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,463
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,481
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,028
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,238

 
  தமிழ் செம்மொழியாக....
Posted by: Kanani - 08-03-2004, 08:02 PM - Forum: தமிழ் /தமிழர் - No Replies

தமிழ் செம்மொழியாக்கப்பட்டுள்ளது தெரிந்ததே...அதனைத்தொடர்ந்து............

<b>தமிழுக்கு செம்மொழி அந்தஸ்தா?

கன்னட மொழியியலாளர்கள் எதிர்ப்பு</b>

தமிழை செம்மொழியாக அறிவிப்பதற்கு கன்னட மொழி வல்லுநர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இவர்களின் எதிர்ப்புக்கு, கிருஷ்ணகிரி மாவட்டம் கருமலையைச் சேர்ந்த தமிழக ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக அந்த இயக்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

எம்மொழியின் துணையின்றி தனித்தியங்கும் தன்மை கொண்ட தமிழை உலகின் பல பல்கலைக் கழகங்கள் செம்மொழியாக ஏற்று பாடமாக வைத்துள்ள உண்மையை மறுத்து, ஒரு மொழியின் தொன்மை, அதன் இலக்கியத் தரம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு செம்மொழித் தகுதி வழங்குவதென்றால் தமிழுக்கு முன்னால் கன்னடத்திற்குத் தான் செம்மொழிப் பட்டம் வழங்க வேண்டும் என்கிறார் கன்னட நாடகாசிரியரான சந்திரசேகரக் கம்பர்.


மூவாயிரம் ஆண்டு பழமை வாய்ந்த தொல்காப்பியம், கி.பி.9ம் நூற்றாண்டில் எழுதப்பட்ட கன்னட இலக்கியமான 'கவிராஜ மார்க்கா'விற்குச் சமகாலத்தில் எழுதப்பட்டதுதான் என்று நஞ்சைக் கக்குகிறார் கன்னட மொழியியல் அறிஞர் பேராசிரியர் சித்தானந்த மூர்த்தி.

வன்னியர்கள், தேவர்கள், கவுண்டர்கள், முதலியார்கள், செட்டியார்கள், நாடார்கள் இவர்களில் எந்த சாதியினர் பேசுகிற தமிழைச் செம்மொழியாக ஏற்பது என்று கேள்வி எழுப்பியுள்ளார் கன்னடப் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் கே.வி.நாராயணா. வட்டார வழக்கில் உள்ள சொல் பலுக்கல் (உச்சரிப்பு) முறை வேறுபாட்டை உணராமல் அதை சாதி ரீதியாக வேறுபடுத்திப் பார்க்கும் இவரது மொழியியல் அறிவு கன்னட சார்புடையதே.

திராவிடம் என்றொரு மொழி இல்லை என்றாலும் தமிழேத்ரமிளமாகபின்னர் த்ரமிடமாகஅதற்குப் பின்னர் த்ராவிடமாக ஆரியர்களால் அழைக்கப்பட்டது என்ற உண்மையை மறுத்து, திராவிட மூல மொழியிலிருந்து தமிழும் மலையாளமும் ஒரே காலத்தில் பிறந்தன என்று கூறி, தமிழின் தோற்றத்தை சில நூற்றாண்டுகளுக்கு முன்னரே பிறந்த மலையாளத்தோடு ஒப்பிட்டு தனது தமிழ் எதிர்ப்பு படிந்த ஆய்வை வெளியிட்டுள்ளார் கன்னட பண்பாட்டு மானிடவியல் பேராசிரியர் கே.வி.ராஜகோபால்.

தமிழை விட கன்னடம்தான் அறிவியல் மொழி, அவ்வகையில் முதலில் கன்னடத்திற்குத் தான் செம்மொழித் தகுதி வழங்க வேண்டும் என்று கன்னட வளர்ச்சி ஆணையத்தின் தலைவர் பி.எம்.இடினப்பா இந்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சருக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார்.

தமிழ் செம்மொழியாக அறிவிக்கப்பட்டால் உலகம் முழுவதும் பல்கலைக் கழகங்களில் தமிழுக்கு தனியாக ஒரு துறை ஏற்படுத்தப்பட்டு தமிழ்ப் பண்பாடு, இலக்கியம் தொடர்பான ஆய்வுகள் அதிகம் நடைபெறும். இதன் மூலம் தமிழின் தோற்றம், வளர்ச்சி பற்றிய கருத்துக்கள் உலகம் முழுவதும் பரவும். இதன் மூலம் கன்னடம் உள்பட பல மொழிகளின் மூல மொழி தமிழே என்பதும் உலகமறியும். இதைப் பொறுக்க முடியாத வெறியர்களும், மொழியியல் அறிஞர்களும் தமிழைச் செம்மொழியாக்கக் கூடாது என்று அரம்பத்தனமாக அலறுகிறார்கள்.

தமிழ் செம்மொழியாக்கப்பட்டால் சமஸ்கிருதமும் தமிழும் ஒப்பாய்வு செய்யப்படும். இதன்மூலம் பழம் பெரும் மொழி சமஸ்கிருதம்தான் என்ற மாயை தகர்த்தெறியப்படும். தமிழை நீசபாஷை என்று சொல்லும் வாய்களில் வழியும் சமஸ்கிருதத்தின் தகுதி உலகுக்குத் தெரியும். இதனால் தமிழைச் செம்மொழியாக அறிவிக்கத் தடைகோரும் கன்னட வெறியர்களுக்கு வடமொழி வெறியர்களும் துணை நிற்கக்கூடும்.

கன்னட பேராசிரியர்களின் இத்தகைய அறிக்கையானது அவர்களது வெறியுணர்வையே வெளிப்படுத்துகிறது. இத்தகைய அறிக்கைகள் தமிழக, கர்நாடக மக்களுக்கிடையேயான இன மோதல்களை அதிகரிக்கவே உதவும்.

எனவே இவ் விஷயத்தில் தமிழ் மக்கள் விழிப்புடனும், ஒற்றுமையுடனும் இருந்து தமிழ் செம்மொழியாக அறிவிக்கப்படுவதற்குப் பாடுபட வேண்டும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

நன்றி அதுதமிழ் இணையம்

Print this item

  இந்தியாவின் முகத்திரை கிழித்த வல்லைப் படுகொலைகள்...!
Posted by: kuruvikal - 08-03-2004, 01:59 PM - Forum: தமிழ் /தமிழர் - No Replies

[b]<span style='color:red'>இந்தியாவுக்குக் களங்கம் விளைவித்த வல்வைப் படுகொலைகள்.

'மிஸ்டர் மேனன்!... ஒரு நகரத்தை இவ்வளவு மோசமாகத் தாக்கி, வைத்தியசாலைக்குள் அத்துமீறி நுழைந்து நோயாளிகளைக் காட்டுமிராண்டித்தனமாகத் தாக்கியிருக்கிறீர்... உம்முடைய செயல் எங்களுடைய நாட்டுக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தி விட்டது... இங்கு இருக்கின்ற பிரஜைகள் குழுவிடம் முதலில் நீர்மன்னிப்புக் கேட்க வேண்டும்...."

ஊறணி வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி அலுவலகத்தில் நின்ற பிரிகேடியர் சமேராம், மிகவும் கடுப்பாக நின்றமை கப்டன் மேனனை நிலைகுலையச் செய்துவிட்டது.

1989ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 19ஆம் திகதி வல்வெட்டித்துறை, ஊறணி வைத்திய சாலையில் வெறியாட்டம் ஆடிய இந்திய ஆக்கிரமிப்பு இராணுவத்திற்குத் தலைமை தாங்கிய கப்டன் கோபாலகிருஷ்ண மேனன் அன்று தனது உயர் அதிகாரி பிரிகேடியர் சமேராம் முன்னால் தலைகுனிந்து கூனிக்குறுகி நின்ற போதே என்றோ ஒருநாள் இந்த வல்வெட்டித்துறைக் கிராமத்தை அழிக்கவேண்டும்" என்று சபதம் எடுத்திருக்க வேண்டும் என்பதற்கு அடையாளமாக 1989ஆம் ஆண்டு ஓகஸ்ட் திங்கள் 2ஆம், 3ஆம், 4ஆம் திகதிகளில் வல்வெட்டித்துறைப் படுகொலைகள் இடம்பெற்று முடிந்தன.

1989ஆம் ஆண்டு ஓகஸ்ட் திங்கள் 2ஆம் நாள் ஊரிக்காடு இந்திய இராணுவ முகாமில் இருந்தும், பொலிகண்டி இராணுவ முகாமில் இருந்தும் வெளியேறிய இந்திய ஆக்கிரமிப்பு இராணுவக்கும்பலுக்குத் தலைமை வசித்தவர்களில் கப்டன் மேனன், கப்டன் கபூர் முக்கியமானவர்களாக இருந்தனர்.

ஆம்! கப்டன் மேனன் பழிவாங்கும் ஒருகளமாக அன்று வல்வெட்டித்துறையைக் குறிவைத்துச் செயற்பட்டான். அவனுடன் ஊரிக்காடு இராணுவ முகாம் பொறுப்பாளராக இருந்த மேஜர் சுதர்சன் சிங் தலைமையில் ஏ வடிவ வியூகம் அமைத்து விடுதலைப் புலிப் போராளிகளைக் குறிவைத்து நகர்ந்தபோதே இராணுவத்தினருடனான மோதல் ஆரம்பமானது.

வடமராட்சியின் ஏனைய பகுதிகளில் இந்திய இராணுவத்தினர் தாக்கப்பட்டபோது உடுப்பிட்டி இராணுவ முகாம் கேணல் சர்மா அன்று வல்வெட்டித்துறைப் பிரஜைகள் குழுவினு}டாக வடமராட்சிப் பொறுப்பாளர் மேஜர் ஜேம்சுடன் செய்து கொண்ட கனவான் ஒப்பந்தத்திற்கு அமைவாக அங்கே இந்தியச் சிப்பாய்கள் தாக்கப்படாமல் இருந்தார்கள் என்ற உண்மை வெளியுலகத்திற்கு அன்று தெரியாது.

அந்தக் கனவான் ஒப்பந்தத்தை மீறும் வகையில் விடுதலைப் புலிகளை அழிக்கும் நோக்குடன் செயற்பட்ட சீக்கியப்படைகளுக்கு ஒரு பாடம் கற்பிக்கவே அன்று அவர்கள் மீதான தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.

அன்று ஒன்பது சீக்கியச்சிப்பாய்கள் கொல்லப்பட்டது இந்திய ஆக்கிரமிப்பாளருக்குப் பேரதிர்ச்சியாக இருந்திருக்க வேண்டும். அதன் விளைவு!...

வெறிகொண்ட இந்தியப்படைகள் ஓகஸ்ட் திங்கள் 2ஆம், 3ஆம், 4ஆம் திகதிகளில் வல்வெட்டித்துறை நகரத்தையும் அயல் ஊர்களையும் சுற்றிவளைத்து ஊரடங்குச் சட்டத்தைப் பிரகடனப்படுத்திவிட்டு ஆடிய வெறியாட்டத்தில் நேர்ந்த 'வல்வெட்டித்துறைப் படுகொலைகள்" வரலாற்றில் இந்தியருக்குக் கறைபடிந்த செய்தியாக இன்றும் நிலைத்துவிட்டது.

அமெரிக்க இராணுவத்தினரின் வெறியாட்டத்திற்கு ஆளாகிய வியட்நாமின் மைலாய் படுகொலை போல் பிரித்தானிய இராணுவத்தினருக்கு இந்தியாவின் 'ஜாலியன் வாலா பாக்" படுகொலை போன்று இந்தியாவுக்கு ஒரு வல்வைப் படுகொலை களங்கம் சேர்த்துவிட்ட வரலாறாகிவிட்டது.

ஆம், அந்தப் படுகொலையின் விளைவாக 63 அப்பாவிப் பொதுமக்கள், மாணவர்கள், பெண்கள், வயோதிபர் என்ற பேதமின்றி வெட்டப்பட்டும், சுடப்பட்டும், எரிக்கப்பட்டும் கொல்லப்பட்டனர்.

நூற்றுக்கதிகமானோர் காயப்படுத்தப்பட்டனர்.

ஆயிரக்கணக்கான வீடுகளும், கடைகளும் எரிக்கப்பட்டன.

15 திருமணமான பெண்கள் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டனர்.

50இற்கும் அதிகமான இளம்பெண்கள் மானபங்கப்படுத்தப்பட்டனர்.

பல இந்துக்கோயில்கள் சேதமாக்கப்பட்டன.

இவ்வளவும் செய்துமுடித்த இந்திய இராணுவத்தை இலங்கைக்கு அனுப்பிப் படுகொலைகள் நிகழ்த்துவதற்குக் காரணமாக இருந்த இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியினால் அந்த ஓகஸ்ட் 2ஆம், 3ஆம், 4ஆம் திகதிகளில் எப்படி நிம்மதியாக உறங்கியிருக்க முடியும்?

அந்த அழியா நினைவுகள் - மறக்கமுடியாத அவலங்களை விதைத்துச்சென்ற கொடூரமான இந்திய இராணுவத்தையும் இந்திய அரசையும் துயரின் விளிம்பில் உழன்றுகொண்டிருக்கும் வல்வை மக்களால் எப்படி மறக்க முடியும்?... எப்படி மன்னிக்கமுடியும்?

அந்த நிலையிலும், இந்தியாவைத் தாய் நாடு என்று ஒரு காலத்தில் நம்பி இந்திய விசுவாசிகளாக இருந்து இந்தியர்களால் முதுகில் குத்தப்பட்ட இலட்சக்கணக்கான ஈழத்தமிழர்களில் ஒருசில ஆயிரமாக இருந்து கண்ணீர் விடுவதைத் தவிர விடுதலை வேள்விக்கு ஆயிரக்கணக்கான உயிர்களை ஆகுதியாக்கிய வல்வெட்டித்துறை மக்களால் வேறு எதைத் தான் செய்யமுடியும்?

ஆனால், எமது நெஞ்சில் துயரங்களை விதைத்துச்சென்ற அந்தத் துன்பியல் நாள்களை நினைவு கூரும் ஓகஸ்ட் 2ஆம், 3ஆம், 4ஆம் திகதிகளையும் ஈழத்தில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட படுகொலைகள் நிகழ்த்தப்படுவதற்குக் காரணமாகவும் பொறுப்பாகவும் இருந்த ராஜீவ் காந்தியையும் நிம்மதியான ஒரு நிரந்தரத் தீர்வுக்குத் தடையாக இருக்கும் இந்தியாவையும் எப்படி வல்வெட்டித்துறை மக்களால் மறக்கமுடியும்.

இன்றும் அந்த நினைவுடன் வாழும் நாம் அனைவரும் அன்று இந்தியர்களால் கொல்லப்பட்ட எம்மவர்களின் ஆத்ம சாந்திக்காகப் பிரார்த்திப்போமாக. </span>

puthinam.com

Print this item

  என் காதல் தேவதை
Posted by: kavithan - 08-03-2004, 06:54 AM - Forum: கவிதை/பாடல் - Replies (27)

<span style='font-size:30pt;line-height:100%'><b>என் காதல் தேவதை</b></span>

<img src='http://kavithan.yarl.net/kavithan_pic/srisnehakanakam1.PNG' border='0' alt='user posted image'>


<span style='font-size:25pt;line-height:100%'>நான்
ஒரு கானகத்தில்
தனிமையில் இருக்கிறேன்
ஒரு தேவதை வந்து.
கண்சிமிட்டி அழைக்கிறாள்.

கானகத்தில் காத்திருக்கும்
காதலனே...!
உன் காதல் தேவதை வந்திருக்கிறேன்.
வா...!
கான மழை பொழிந்து..
காதலர்கள் நாமிருவர்..
கவிபாடி கழித்திடுவோம்- இக்
காரிருளில்.

கண் மூடி நான் இருந்த
கானகத்தில் தேவதையா...?
குருவிகளின் கீச்சொலிகளுக்கிடையில்
குழலினும் இனிய குரலா...?
என்று ஆச்சரியதுடன்
கண் திறந்து பார்க்கிறேன்...

குறு..குறு த்த பார்வையும்
பட பட க்கும் இமையும்
சட... சட என அடித்த காற்றில்
பறக்கும் அழகிய நீண்ட கூந்தலும்
பால் போன்ற முகமும்
துடி துடிக்கும் உதடும்
கொண்டு ஒர் அழகு தேவதை
அடியேன் முன்...

ஆ ...! என்று வாய் பிளந்து நிற்கவா...!
இல்லை .., அள்ளி அணைக்கவா.......!
என்று..,
அரும்பிய மீசையை
அழகாய் முறுக்கியபடி
அழகியை முழுமையாய் பார்க்கிறேன்
அவளோ..! இன்னும்..இன்னும்..
அருகில் வருகிறாள்
இதற்கு மேலும்
பொறுக்கமுடியுமா..? என்று...
எட்டி கட்டியணைக்கிறேன்..!
ஆனால்,
பொறாமை கொண்ட
கட்டில் சட்டம்
என் தலையில்
குட்டி விடுகிறது</span>

[யாவும் கற்பனை]

Print this item

  சர்வதேச விழாவில் 'வானம் வசப்படும்'
Posted by: kuruvikal - 08-02-2004, 07:52 PM - Forum: சினிமா - No Replies

<img src='http://thatstamil.com/images23/cinema/vanam500.jpg' border='0' alt='user posted image'>

கேரளாவில் நடைபெறும் சர்வதேச திரைப்பட விழாவில் 'வானம் வசப்படும்' படம் திரையிடப்படுகிறது.

ஹங்கேரி, கனடா, இத்தாலியப் படங்கள் பங்கேற்கும் இந்த விழாவில் தமிழில் இருந்து வானம் வசப்படும் மற்றும் காக்க.. காக்க.. ஆகியவையும் பங்கேற்கின்றன. இதில் காக்க.. காக்க.. வர்த்தரீதியில் பெற்ற மாபெரும் பெற்றிக்காகக் திரையிடப்படுகிறது. வானம் வசப்படும் கதையம்சத்துக்காக இடம் பிடிக்கிறது.

தமிழ் சினிமா கேமராமேன்களுக்கு இந்திய அளவில் தனி மரியாதை ஏற்படுத்திக் கொடுத்தவர்கள் பாலுமகேந்திரா மற்றும் பி.சி.ஸ்ரீராம். ஒளிப்பதிவாளர்களாக மட்டுமின்றி இயக்குநர்களாகவும் தங்களது முத்திரையைப் பதித்தவர்கள்.

வியாபார ரீதியாக இவர்களது பல படங்கள் வெற்றி பெறாவிட்டாலும், கலை ரீதியாக நிராகரிக்கப்பட முடியாதவை. அதற்கு பி.சி.ஸ்ரீராம் இயக்கி சமீபத்தில் வெளிவந்த 'வானம் வசப்படும்' சரி உதாரணம்.

ரிலீஸான வேகத்திலேயே படம் பெட்டியில் பெட்டிக்குள் திரும்பி விட்டாலும், சினிமா விமர்சகர்கள் பலரின் பாராட்டுக்களைப் பெற்றது. இப்போது இந்தப் படம் திருவனந்தபுரத்தில் நடைபெறும் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படுகிறது.

கடந்த 30ம் தேதி தொடங்கிய இந்த விழா நாளையுடன் முடிவடைகிறது. விழாவில் குறிப்பாக ஹங்கேரி, கனடா மற்றும் இத்தாலி நாட்டுப் படங்கள் திரையிடப்படுகின்றன. 'வானம் வசப்படும்' படத்துடன் இலவச காட்சியாக காக்க காக்க திரைப்படமும் திரையிடப்படுகிறது.

மேலும் 'ஹாரி வில்லா', 'பெர்பக்ட் ஹஸ்பெண்ட்' மற்றும் ஆஸ்கார் விருது பெற்ற 'லார்ட் ஆஃப் தி ரிங்ஸ்', 'லாஸ்ட் சாமுராய்', 'மான்ஸ்டர் மற்றும் கோல்ட் மௌண்டன்' படங்களும் விழாவில் பங்கேற்கின்றன.

உலகின் பல்வேறு நாடுகளில் இருந்தும் தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், நடிகர்கள், திரை விமர்சகர்கள், சினிமா ஆர்வலர்கள் இந்த விழாவில் பங்கேற்கின்றனர்.

thatstamil.com

Print this item

  பலத்த பாதுகாப்பில் நியூயார்க்...!
Posted by: kuruvikal - 08-02-2004, 07:32 PM - Forum: செய்திகள்: உலகம் - No Replies

[b]பலத்த பாதுகாப்பில் நியூயார்க், நியூஜெர்சி

அல்கொய்தா தாக்குதல் நடத்தலாம் என அஞ்சப்படுவதால், நியூயார்க், வாஷிங்டன், நியூஜெர்சி ஆகிய நகர்களிலும் பாதுகாப்பு ஏற்பாடுகளை அமெரிக்கா தீவிரப்படுத்தியுள்ளது.

குறிப்பாரக வாஷிங்டனில் உள்ள சர்வதேச நிதியம், உலக வங்கி, நியூஜெர்சியில் உள்ள புரூடென்சியல் நிதி நிறுவனம், நியூயார்க்கில் உள்ள 39 மாடி ஐக்கிய நாடுகள் சபை, சிட்டி குரூப், பங்குச் சந்தை ஆகிய கட்டடங்கள் தாக்குதலுக்கு உள்ளாகலாம் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது.

நேற்று முன் நியூயார்க்கில் மட்டுமே தீவிர பாதுகாப்பும், கண்காணிப்பும் போடப்பட்டது. இந் நிலையில் வாஷிங்டன், நியூஜெர்சியும் தாக்குதலுக்கு உள்ளாகலாம் என்று உளவுப் பிரிவுகள் எச்சரித்தையடுத்து அங்கும் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

இந்த மூன்று நகர்களிலும் உச்சபட்ச பாதுகாப்பு அமலாக்கப்பட்டுள்ளது. நவம்பரில் நடக்கவுள்ள அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு முன் நிச்சயமாக தாக்குதல் நடக்கலாம் என்று அந் நாட்டு உளவு அமைப்புகள் கருதுகின்றன.

கார், டிரக்குகளில் வெடிகுண்டுகளை நிரம்பிப் கொண்டு கட்டடங்களில் மோதி தாக்குதல் நடக்கலாம் என அவை எச்சரித்துள்ளன.

உள்நாட்டு பாதுகாப்புத்துறை அமைச்சர் டாம் ரிட்ஜ் உயர் மட்ட அதிகாரிகளுடனும், மூன்று நகர்களின் முக்கிய கட்டடங்களின் பாதுகாப்பு அதிகாரிகளுடனும் ஆலோசனை நடத்தினார்.

மூன்று நகர்களிலும் அநாதையாக நிற்கும் கார்களை உடனே பார்க்கிங் பகுதிகளில் இருந்து வெளியேற்றுவது, கட்டடங்களில் நுழையும் கார்களை முழுமையாக சோதனையிடுவது, அண்டர்கிரவுண்ட் பார்க்கிங் பகுதிகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்துவது, பார்சல்களை முழுமையாக சோதிப்பது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளன.

மெக்சிக்கோ வழியாக அரேபியர்கள் அல்லாத பிற நாட்டவரை அமெரிக்காவுக்குள் ஊடுருவ வைத்து அமெரிக்காவில் தாக்குதல் நடத்த அல் கொய்தா முயன்று வருவதாகத் தெரிகிறது.

thatstamil.com

Print this item

  பரகுவாவில் தீ...!
Posted by: kuruvikal - 08-02-2004, 12:01 PM - Forum: செய்திகள்: உலகம் - Replies (1)

<img src='http://newsimg.bbc.co.uk/media/images/39908000/gif/_39908858_paraguay_map203.gif' border='0' alt='user posted image'><img src='http://newsimg.bbc.co.uk/media/images/39909000/jpg/_39909208_wreckage_ap203body.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://newsimg.bbc.co.uk/media/images/39908000/jpg/_39908976_rescue_ap203b.jpg' border='0' alt='user posted image'>


பரகுவா நாட்டின் தலைநரில் (Asuncion) நவீன சந்தைக் கட்டிடத் தொகுதியில் ஏற்பட்ட தீயில் சிக்கி சுமார் 280 க்கும் மேற்பட்ட அப்பாவிகள் பலி...பலர் படுகாயம்....!

(Image from bbc.com...News from yahoo.com)

------------------------

பராகுவேயில் பயங்கர தீ விபத்து: 300 பேர் பலி

தென் அமெரிக்க நாடான பராகுவேயில் தலைநகர் அசுன்சியனில் சூப்பர் மார்க்கெட்டில் ஏற்பட்ட மிக பயங்கரமாக தீ விபத்தில் சுமார் 300 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் நூற்றுக்கணக்கானவர்கள் படுகாயமடைந்துள்ளனர்.

இந்தத் தீயில் ஒரு மாடியே இடிந்து விழுந்தது. ஞாயிற்றுக்கிழமையான நேற்று இந்த சூப்பர் மார்க்கெட் கூட்ட நெரிசலில் சிக்கித் தவித்தது. பல மாடிகள் கொண்ட இந்தக் கட்டடத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

நேற்று பிற்பகலில் ஆரம்பித்து இரவு முழுவதும் தீ எரிந்து கொண்டிருந்தது. நூற்றுக்கணக்கான தீயணைப்பு வண்டிகள் நெடு நேரம் போராடித் தான் தீயை அணைத்தன.

தீ விபத்துக்குப் பின் வெடிச் சத்தம் கேட்டதாக சிலர் கூறியுள்ளனர்

thatstamil.com

Print this item

  நண்பர்கள் தின வாழ்த்துக்கள்
Posted by: kavithan - 08-01-2004, 11:12 PM - Forum: வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் - Replies (8)

யாழ் கள நண்பர்கள் அனைவருக்கும் எனது நண்பர்கள் தின வாழ்த்துக்கள். <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

இதனை எமக்கு எல்லாம் தெரிவித்த தமிழினி அக்கவுக்கு எனது நன்றிகள்

Print this item

  அலைகலாய் மோதியதே ......
Posted by: sWEEtmICHe - 08-01-2004, 11:36 AM - Forum: கவிதை/பாடல் - Replies (1)

<img src='http://is.freefoto.com/images_d/15/59/15_59_1_web.jpg' border='0' alt='user posted image'>

<span style='font-size:30pt;line-height:100%'><b>அலைகலாய் மோதியதே ...</b></span>
[size=18]மனதோடு வந்த நட்பு இன்று அலைகலாய் மோதியதே
உன் சிரிப்பை கண்டு அலைகள் வேகமாக அடித்து ஒயவில்லையே
அன்னமும் அழகாக அசைந்து அசைந்து வருகிறதே ....
என் தூது நீ தானே என் நண்பா என்று கண்ணீரோடு......
முங்கிலாய் காற்று வேகமாய் அடித்தும் நீ வரவில்லை...
கதியும் இதுதானே பூவுலகில்....!
என்று புலம்பியது ....
இந்த ஒயாத அலைகள்.... Cry Cry

[size=12]<b>இது MCgaL(சுவிற்மிச்சி )கவிதை :roll: :roll: </b>

Print this item

  பெண்களின் சமூகப் பங்கு குறித்து கத்தோலிக்கத் திருச்சபை..!
Posted by: kuruvikal - 07-31-2004, 11:55 PM - Forum: சுமுதாயம் (வாழ்வியல்) - No Replies

பெண்களின் சமூகப் பங்கு குறித்து கத்தோலிக்கத் திருச்சபை ஆவணம்

வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு அதிக உதவிகளும் மரியாதையும் கிடைக்கவேண்டும் என்று கத்தோலிக்கத் திருச்சபை தலைமைப்பீடம் அனைத்து கார்டினல்களுக்கும் ஆயர்களுக்கும் கடிதம் அனுப்பியுள்ளது.

அதேநேரம், ஆணும் பெண்ணும் ஒன்று என்று கூறுகிற பெண்ணிய சித்தாந்தங்களை எதிர்க்கவேண்டும் என்றும் அந்த ஆவணத்தில் கோரப்பட்டுள்ளது.

ரோம் நகரில் உள்ள ரோமன் கத்தோலிக்கத் திருச்சபையின் நிர்வாகத்தின் உயர்மட்டத்தில் ஆண்கள் மட்டுமே இருக்கமுடியும் என்கிற நிலைமையும் தகர்க்கப்பட்டுள்ளது.

ஓரினச்சேர்க்கையாளர்களின் திருமணத்தை திருச்சபை எதிர்ப்பது சரியே என்றும் பெண்கள் பாதிரியார்கள் ஆவதற்கு இருக்கும் தடை நியாயமானதே என்றும் இந்த ஆவணம் தெரிவித்துள்ளது.

bbc.com

Print this item

  &quot;சமாதனச் சுருள்&quot; கலைஞர்கள் கௌரவிப்பு
Posted by: AJeevan - 07-31-2004, 08:56 PM - Forum: குறும்படங்கள் - No Replies

<span style='font-size:21pt;line-height:100%'> <b>\"சமாதனச் சுருள்\" கலைஞர்கள் கௌரவிப்பு</b>

சுவிஸ் வந்திருக்கும் <b>REEL PEACE</b> , யாழ் திட்ட இணைப்பாளரும்
<b>அழுத்தம்</b> குறும்பட இயக்குனருமான <b>கா.ஞானதாஸ் </b>
மற்றும்
<b>போருக்குப் பின்</b> இயக்குனர்: <b>ஜெயரஞ்சனி ஞானதாஸ்</b> ஆகியோர்
30.07.2004 அன்று சுவிசில் கௌரவிக்கப்பட்டனர்.</span>

கீழே சில புகைப்படங்கள்:-

<img src='http://www.yarl.com/forum/files/thumbs/t_both_screen.jpg' border='0' alt='user posted image'>
குறும்படம் திரையிடலுக்கு முன் திரு.திருமதி.ஞானதாஸ் மண்டபத்தில்

<img src='http://www.yarl.com/forum/files/thumbs/t_bigining.jpg' border='0' alt='user posted image'>
மண்டபத்துக்குள் வரும் பார்வையாளர்கள்.

<img src='http://www.yarl.com/forum/files/thumbs/t_j.stand.jpg' border='0' alt='user posted image'>
திருமதி.ஞானதாஸ் அறிமுகம்

<img src='http://www.yarl.com/forum/files/thumbs/t_m.sa.g.jpg' border='0' alt='user posted image'>
திரு.ஞானதாஸ் அறிமுகம்

<img src='http://www.yarl.com/forum/files/thumbs/t_screen_995.jpg' border='0' alt='user posted image'>
திரையிடல்.........
<img src='http://www.yarl.com/forum/files/thumbs/t_tropy.2.jpg' border='0' alt='user posted image'>
Europe Movie Club & Swiss Movie தலைவர்:மார்க்கஸ் பஸ்லர்,
நினைவுப் பரிசுகளை திரு.திருமதி.ஞானதாஸ் ஆகியோருக்கு வழங்கிய போது ........
<img src='http://www.yarl.com/forum/files/thumbs/t_tropy.3.jpg' border='0' alt='user posted image'>
திரு.ஞானதாஸ் பார்வையாளர்களுடன் பேசுகிறார்.........
<img src='http://www.yarl.com/forum/files/thumbs/t_disc.1.jpg' border='0' alt='user posted image'>
திரு.திருமதி.ஞானதாஸ் பார்வையாளர்களுடன்..........

Print this item