Yarl Forum
பெண்களின் சமூகப் பங்கு குறித்து கத்தோலிக்கத் திருச்சபை..! - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: சிந்தனைக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=7)
+--- Forum: சுமுதாயம் (வாழ்வியல்) (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=34)
+--- Thread: பெண்களின் சமூகப் பங்கு குறித்து கத்தோலிக்கத் திருச்சபை..! (/showthread.php?tid=6849)



பெண்களின் சமூகப் பங்க - kuruvikal - 07-31-2004

பெண்களின் சமூகப் பங்கு குறித்து கத்தோலிக்கத் திருச்சபை ஆவணம்

வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு அதிக உதவிகளும் மரியாதையும் கிடைக்கவேண்டும் என்று கத்தோலிக்கத் திருச்சபை தலைமைப்பீடம் அனைத்து கார்டினல்களுக்கும் ஆயர்களுக்கும் கடிதம் அனுப்பியுள்ளது.

அதேநேரம், ஆணும் பெண்ணும் ஒன்று என்று கூறுகிற பெண்ணிய சித்தாந்தங்களை எதிர்க்கவேண்டும் என்றும் அந்த ஆவணத்தில் கோரப்பட்டுள்ளது.

ரோம் நகரில் உள்ள ரோமன் கத்தோலிக்கத் திருச்சபையின் நிர்வாகத்தின் உயர்மட்டத்தில் ஆண்கள் மட்டுமே இருக்கமுடியும் என்கிற நிலைமையும் தகர்க்கப்பட்டுள்ளது.

ஓரினச்சேர்க்கையாளர்களின் திருமணத்தை திருச்சபை எதிர்ப்பது சரியே என்றும் பெண்கள் பாதிரியார்கள் ஆவதற்கு இருக்கும் தடை நியாயமானதே என்றும் இந்த ஆவணம் தெரிவித்துள்ளது.

bbc.com