Yarl Forum
பலத்த பாதுகாப்பில் நியூயார்க்...! - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள்: உலகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=14)
+--- Thread: பலத்த பாதுகாப்பில் நியூயார்க்...! (/showthread.php?tid=6845)



பலத்த பாதுகாப்பில் நி - kuruvikal - 08-02-2004

[b]பலத்த பாதுகாப்பில் நியூயார்க், நியூஜெர்சி

அல்கொய்தா தாக்குதல் நடத்தலாம் என அஞ்சப்படுவதால், நியூயார்க், வாஷிங்டன், நியூஜெர்சி ஆகிய நகர்களிலும் பாதுகாப்பு ஏற்பாடுகளை அமெரிக்கா தீவிரப்படுத்தியுள்ளது.

குறிப்பாரக வாஷிங்டனில் உள்ள சர்வதேச நிதியம், உலக வங்கி, நியூஜெர்சியில் உள்ள புரூடென்சியல் நிதி நிறுவனம், நியூயார்க்கில் உள்ள 39 மாடி ஐக்கிய நாடுகள் சபை, சிட்டி குரூப், பங்குச் சந்தை ஆகிய கட்டடங்கள் தாக்குதலுக்கு உள்ளாகலாம் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது.

நேற்று முன் நியூயார்க்கில் மட்டுமே தீவிர பாதுகாப்பும், கண்காணிப்பும் போடப்பட்டது. இந் நிலையில் வாஷிங்டன், நியூஜெர்சியும் தாக்குதலுக்கு உள்ளாகலாம் என்று உளவுப் பிரிவுகள் எச்சரித்தையடுத்து அங்கும் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

இந்த மூன்று நகர்களிலும் உச்சபட்ச பாதுகாப்பு அமலாக்கப்பட்டுள்ளது. நவம்பரில் நடக்கவுள்ள அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு முன் நிச்சயமாக தாக்குதல் நடக்கலாம் என்று அந் நாட்டு உளவு அமைப்புகள் கருதுகின்றன.

கார், டிரக்குகளில் வெடிகுண்டுகளை நிரம்பிப் கொண்டு கட்டடங்களில் மோதி தாக்குதல் நடக்கலாம் என அவை எச்சரித்துள்ளன.

உள்நாட்டு பாதுகாப்புத்துறை அமைச்சர் டாம் ரிட்ஜ் உயர் மட்ட அதிகாரிகளுடனும், மூன்று நகர்களின் முக்கிய கட்டடங்களின் பாதுகாப்பு அதிகாரிகளுடனும் ஆலோசனை நடத்தினார்.

மூன்று நகர்களிலும் அநாதையாக நிற்கும் கார்களை உடனே பார்க்கிங் பகுதிகளில் இருந்து வெளியேற்றுவது, கட்டடங்களில் நுழையும் கார்களை முழுமையாக சோதனையிடுவது, அண்டர்கிரவுண்ட் பார்க்கிங் பகுதிகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்துவது, பார்சல்களை முழுமையாக சோதிப்பது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளன.

மெக்சிக்கோ வழியாக அரேபியர்கள் அல்லாத பிற நாட்டவரை அமெரிக்காவுக்குள் ஊடுருவ வைத்து அமெரிக்காவில் தாக்குதல் நடத்த அல் கொய்தா முயன்று வருவதாகத் தெரிகிறது.

thatstamil.com