| Welcome, Guest |
You have to register before you can post on our site.
|
| Forum Statistics |
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244
Full Statistics
|
| Online Users |
There are currently 457 online users. » 0 Member(s) | 454 Guest(s) Applebot, Bing, Google
|
| Latest Threads |
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,307
|
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,231
|
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,604
|
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,295
|
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,634
|
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,060
|
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,463
|
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,481
|
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,028
|
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,238
|
|
|
| அல்ப்ஸ் கூத்தாடிகள் - விவரணப் படம் |
|
Posted by: Aalavanthan - 08-06-2004, 12:14 AM - Forum: குறும்படங்கள்
- No Replies
|
 |
அல்ப்ஸ் கூத்தாடிகள் - விவரணப் படம்
-----------------------------------------------------------
அருண்குமார், கேடிஸ்ரீ
1985ஆம் ஆண்டு அகதிகளாக சுவிட்சர்லாந்து நாட்டுக்கு சென்ற ஈழத்தமிழர்கள், அந்நாட்டினருடன் இணைந்து நாடகங்களை மேடையேற்றத் தொடங்கினர். நாடகங்களின் உள்ளடக்கம், அகதிகள் பிரச்னைகளை, குறிப்பாக ஈழத்தமிழர்களின் பிரச்னைகளைப் பேசுவதாக இருந்தது. இவை பள்ளி, கல்லூரி மற்றும் மக்கள் கூடும் இடங்களில் நிகழ்த்தப்பட்டன. அவ்வாறு மேடையேற்றப்பட்ட நாடகங்கள் சுவிட்சர்லாந்து மக்களிடையே ஓர் புரிந்துணர்வை ஏற்படுத்தியது.
நாடகங்கள் மூலம் நடந்த இம்மாற்றத்தை பத்திரிகை, தொலைக்காட்சி, வானொலி, இணையம் போன்ற ஊடகங்கள் முக்கிய இடம் தந்து பதிவு செய்தன. தொடர்பானவர்களைப் பேட்டி கண்டன. இதன் மூலம் ஈழத்தமிழர்களின் நாடகச் செயல்பாடுகள் முக்கியத்துவம் கொண்டதாக பார்க்கப்பட்டது.
மறளம், ஐயோ, ஸ்ரீசலாமி, பாண்டவர்களும் கிளவுஸ் முனிவரும், கடலம்மா, மலையப்பா போன்ற நாடகங்கள் தமிழ் மற்றும் டொய்ச் மொழிகளில் மேடையேறிய நாடகங்களாகும். இருமொழிக் கலைஞர்களும் பங்கேற்ற நாடகங்களாகும்.
நாடகம், சமூகத்தில் மாற்றத்தை நிகழ்த்த முடியும் என்பதைக் கண்ட சிலர் முறையான நாடகப் பயிற்சி பற்றி யோசிக்கத் தொடங்கினர். தாங்கள் முன்பு பயிற்சியின்றி நாடகப் புரிதலின்றி மேற்கொண்ட நாடகச் செயல்பாடுகளை பரிசீலிக்கத் தொடங்கினர். இதன் காரணமாகத் தோன்றியது 'சுவிஸ் தமிழ் நாடகக் கல்லூரி'.
வேலை செய்து கொண்டே மாலை நேரங்களிலும், விடுமுறை நாட்களிலும் பல்வேறு சிரமங்களோடு நாடகப் பயிற்சிகளில் ஈடுபட்டனர். கவிஸ் நாட்டு நாடகக் கலைஞர்கள், தமிழ்நாடகக் கலைஞர்களோடு மொழியறிஞர்கள், எழுத்தாளர்கள், நடன- நாட்டுப்புறக் கலைஞர்களைப் போன்று பலரிடமிருந்தும் கற்றவை ஒரு நல்ல அடித்தளத்தைத் தந்தது. இப்படி மூன்றாண்டுகளில் கவிஸ் தமிழ் நாடகக் கல்லூரியில் படித்து 'கலைவளரி' என்ற பட்டத்தைப் பெற்ற மாணவர்கள், இன்று பல டொய் நாடகங்களில், தொலைகாட்சி தொடர்களில், வானொலி நாடகங்களில் பங்கேற்று வருகிறார்கள். இரு மொழிக் கலைஞர்கள் கூடிச் செயலாற்றுவது அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் - இந்தப் பின்னணியில் 'அல்ப்ஸ் கூத்தாடிகள்' என்ற விவரணப்படம் ஒன்றை சி. அண்ணாமலை எழுதி இயக்கியுள்ளார். இவர் கூத்துப்பட்டறையில் முழு நேர நடிகராக இருந்தவர். அதுமட்டுமல்லாமல் 'சுபமங்களா', கணையாழி', 'குமுதம்' இதழ்களில் பணியாற்றியவர். நாடகம் தொடர்பாகவும் தொடர்ந்து நிறைய எழுதி வருகிறார்.
கிட்டத்தட்ட 35 நிமிடம் ஓடுகிறது இக்குறும்படம். அகதிகளாக புலம்பெயர்ந்த தமிழர்களின் நிலைப்பற்றியும், கடந்த 500 ஆண்டுகளுக்கு மேலாக தமிழர்கள் பல இடங்களுக்கு, பல நாடுகளுக்கு புலம்பெயர்ந்ததையும், அகதிகளாய் வாழும் அவர்களின் நிலைமைகளை நாடக வடிவில் சுவிட்சர்லாந்து நாட்டு நாடகக்கலைஞர்களுடன் இணைந்து மிகவும் தத்ரூபமாக சொல்கிறது படம்.
''சுவிஸ் தமிழ் நாடகக் கல்லூரி' மாணவர்களை சந்தித்து அவர்களின் நாடக பயிற்சித் தன்மைப் பற்றி அறிந்துக் கொள்வதற்காக சுவிட்சர்லாந்து நாட்டிற்குச் சென்றேன். அங்கு நான் அவர்களுடன் உரையாடும் போது எங்களது உரையாடல்களை அவர்கள் பதிவு செய்துக்கொண்டதைப் பார்த்தேன். அது மட்டுமல்லாமல் அங்கு வாழும் தமிழர்கள் சுவிஸ் நாட்டு நாடகக்கலைஞர்களுடன் இணைந்து தயாரித்த நாடகங்களை காண சந்தர்ப்பம் ஏற்பட்டது. என்னுடைய பேட்டி மற்றும் அவர்களின் நாடகங்கள் அனைத்தையும் 40 மணிநேரம் வரக்கூடிய அளவில் பதிவு செய்திருந்தார்கள். அதிலிருந்து பலவற்றை நீக்கி கிட்டத்தட்ட 35 நிமிடத்திற்கு ஓடும் குறும்படமாக உருவாக்கப்படடது ஆல்ப்ஸ் கூத்தாடிகள்.'' என்கிறார் இக்குறும் படத்தின் இயக்குனர், எழுத்தாளர் சி. அண்ணாமலை.
புலம்பெயர்ந்த தமிழர்கள் பல நாடுகளில் வசித்தாலும், சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள தமிழர்கள் சற்று வித்தியாசப்பட்டு காணப்பட்டார்கள்.
ஆம். அங்குள்ள மக்கள் தங்கள் நாட்டிற்கு அகதிகளாக வந்த தமிழர்களைப் பற்றி, அவர்களின் நிலைமை, அவர்களுடைய சமூக பொருளதாரம் போன்ற எல்லாவற்றிலும் அதிக அளவில் அக்கறை செலுத்துகிறார்கள். அங்கு தமிழ்நாடகக்கலைஞர்களால் நடத்தப்பட்ட நாடகங்களில் காணப்படும் யதார்த்தம் அவர்களின் இதயத்தை தொட்டது. இதுவே அம்மக்கள் இவர்களுடன் ஒன்றிணைந்ததற்கான காரணங்களாகின எனலாம். நாளாவட்டத்தில் சுவிஸ் மக்களும், தமிழர்களும் ஒன்றிணைந்து நாடகங்கள் பல உருவாக்கினர்.
சுவிட்சர்லாந்து நாட்டு மக்கள் நாடகங்கள் அதிகஅளவில் நடத்துகிறார்கள். அதிகளவில் நாடகங்களுக்கான அரங்குகள் அங்கு உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
வெறும் தமிழில் மட்டும் நாடகங்கள் அமைத்தால் சுவிஸ் மக்களுக்கு தமிழர்களின் நிலைமை தெளிவாக புரியாது என்பது புரிப்பட்டதனால், அந்நாட்டு மக்களோடு இணைந்து இருமொழி நாடகங்களை தமிழர்களும், சுவிஸ் மக்களும் உருவாக்கினர். இந்நாடகங்கள் மூலம் தமிழர்கள் தங்கள் நிலையை வெளியுலகத்திற்கு அறிய வைத்தனர்.
ஸ்ரீ சாலமி, பாண்டவர்களும் கிளவுஸ் முனிவரும் போன்ற நாடகங்கள் அங்கு பிரபலமாயின. இந்நாடகங்களில் சுவிஸ் நாடக கலைஞர்களும் பங்கேற்றனர். இருமொழிகளும் இணைந்து இந்நாடகங்கள உருவாயின.
அங்குள்ள சுவிஸ் தமிழ் நாடகக் கல்லூரி மாணவர்களுடன் அண்ணாமலை அவர்கள் தொடர்ந்து 9 நாட்கள் பேட்டிகள் பல எடுத்தார்.
இந்நாடகங்களை நாம் ஏன் வெளியுலகத்திற்கு அறியச் செய்யக்கூடாது என்கிற எண்ணம் ஆன்டன் பொன்ராசா மற்றும் சி. அண்ணாமலைக்கு ஏற்பட அவர்களின் முயற்சியின் விளைவே 'ஆல்ப்ஸ் கூத்தாடிகள்' . இவர்களுடன் A.S. பத்மாவதி அவர்களும் இணைந்து செயல்பட்டார். லண்டன், சுவிட்சர்லாந்து மற்றும் இலங்கை போன்ற நாடுகளில் இக்குறும்படம் வெளியிடப்பட்டது.
''உலகளவில் இப்படத்தின் மூலம் தமிழர்களின் குறிப்பாக புலம்பெயர்ந்த அகதிகளின் நிலைமையை எடுத்துச் சென்று பலர் அறிய செய்ய வேண்டும் என்பதே எங்களின் நோக்கம்'' என்கிறார் அண்ணாமலை.
மேலும் விவரங்களுக்கு அணுக வேண்டி முகவரி
சி.அண்ணாமலை
3, நாதன்ஸ் ஆற்காடு
21, மாளவியா அவென்யூ
எல்.பி. சாலை
சென்னை 600 041.
தொலைபேசி எண் 24455383 (வீடு) 24462726 (அலுவலகம்)
மின்னஞ்சல் : c.annamalai@indiatimes.com
ஆறாம்திணை
|
|
|
| 'ஏய்','கில்லி','சுள்ளான்'-எதிர்காலத் தமிழகம்? |
|
Posted by: tamilini - 08-05-2004, 09:59 PM - Forum: சினிமா
- Replies (14)
|
 |
'ஏய்','கில்லி','சுள்ளான்'-எதிர்காலத் தமிழகம்?
நா.முத்து நிலவன்
கலையும், கலைகள் காட்டும் வாழ்க்கை நெறிகளுமே ஒரு சமூகப்போக்கின் குறுக்குவெட்டுத்
தோற்றங்கள்.கலைத்தொடர்புச் சாதனங்கள் வெறும்கண்ணாடி போன்றவை என்பதால், உள்ளதைத்தான் அப்படியே பிரதிபலிக்கும் என்றுமட்டும் சொல்லிவிடமுடியாது. நவீன ஊடக வளர்ச்சியில், அவற்றின் தாக்கம் சமூகக்கருத்தை உருவாக்குவதிலும், நல்லதாகவோ கெட்டதாகவோ ஒருகருத்தை வளர்த்தெடுப்பதிலும் பெரும்பங்கு வகிப்பதைக் கவனிக்கவேண்டும்.
கதை,கவிதை போலும் இலக்கியங்கள் சமூகத்தில் நிகழ்த்தும் பாதிப்புகளை விடவும் தொலைக் காட்சி
மற்றும் திரைப்படங்களில் காணும் கலைவடிவத்திற்கு விளைவும் அதிகம், வேகமும் அதிகம். பெரிய
அரசியல்கட்சிகளின் தீர்மானங்களுக்கு நிகரானது இக்கலைவடிவங்களின் சாராம்சம்.
அந்த வகையில், பாரம்பரியம் மிகுந்த கவிதையும், பாட்டும் கூத்துமாய் உலகம் வியக்க செழித்துக்கிடந்த
நம் தமிழ்ச்சமூகத்தில், இன்றைய -பெரும்பாலான மக்கள்காணும்- கலைவடிவங்கள், 'அச்சமும் பேடிமையும்
அடிமைச்சிறுமதியும் உச்சத்தில் கொண்டவை'யாகி வருவதுடன், நம்மையும் 'ஊமைச் சனங்களாக' வளர்க்க உரம் போட்டு வருவது மிகுந்த கவலை தருவதாகவே உள்ளது.
'வீரபாண்டிய கட்டபொம்மன்', 'கப்பலோட்டிய தமிழன்' என்றெல்லாம் பெயர் சூட்டிமகிழ்ந்த தமிழ்த்
திரைப்பட உலகம், இன்று 'ஏய்','கில்லி','சுள்ளான்' என்றெல்லாம் பெயர் வைக்கும் அளவுக்குப்
பொறுப்பற்ற நிலைமைக்குப் போய்விட்டதை எண்ணிக் கவலைப் படாமல் இருக்கமுடியவில்லை.
கடந்த 18 மாதங்களாக வெளிவந்த நேரடித்தமிழ்ப்படங்கள் 125. (2003இல்90+2004இல் ஜூன் முடிய35). இதில் சில படங்களின் பெயர்கள்: பாப்கார்ன், வெல்டன், தூள்,ஜே.ஜே.,எஸ்.மேடம்,
தம்,செமரகளை,குத்து,ஜோர்! இதெல்லாம் என்ன? இதுபோல அர்த்தமற்ற -அல்லது ங்கிலத்திலான- சுமார் 22 (அதாவது நான்கில் ஒரு பங்கு) படங்களின் பெயர்கள், எந்த அளவிற்குத் தமிழ்த் திரைப்பட உலகம் பொறுப்பற்று இருக்கிறது என்பதற்கு சாட்சிகளாக நிற்கின்றன. மொழியளவிலும், சமூக அளவிலும் எந்த அளவுக்கான அலட்சியம் என்பதை அறிந்தவர் அறிவாராக. இந்த ஒன்றரை ண்டுக்காலத்திலேயே, ‘புன்னகைப் பூவே’, ‘நிலவில் களங்கமில்லை’, ‘கண்களால் கைதுசெய்’ போலும் கவித்துவம் மிகுந்த நல்ல பெயர்களும் வைக்கப்பட்டுள்ளன என்பதை, கவனத்தோடு பாராட்டவேண்டும். ஏனெனில், நல்ல தமிழ்ப் பெயர்களை மட்டும் வைத்துக்கொண்டு உருப்படாத கதைகளோடு வந்த படங்களும் உண்டு, 'ட்டோ கிராப்' போல ங்கிலப்பெயர்களை பெயர்களை வைத்துக்கொண்டு வந்த அருமையான படங்களும் உண்டு!
'படங்களின் பெயர்களில் என்ன இருக்கிறது?' என்று சிலர் நினைக்கலாம். தலைப்பிலேயே படம்எடுப்பவர்களின் நோக்கத்தைப் புரிந்துகொண்டுவிடலாமே? அதில் காணப்படும் 'விட்டேத்தி'யும்,
'விடலைத் தன்மை'யும் தான் அந்தப் படம் முழுவதும் விரவியிருக்கும் என்பதுதானே சிக்கல்! மூலக்கதை கூட, 'அநியாயம் தோற்கும், நியாயம் வெல்லும்' எனும் பஞ்சதந்திரக்கதையாக இருக்கலாம்.னால்,அதைக் ட்சிவடிவாக்க அவர்கள் காட்டும் தந்திரத்திற்குப் பஞ்சமே இருக்காது! அடாடா! குட்டிச்சுவரில்
உட்கார்ந்து/ வீதியில் பாட்டுப்பாடி/ வகுப்பு நேரத்தைக் 'கட்'டடித்து, 'தம்' அடித்து,'பீர்'குடித்து/
பெண்களைக் கிண்டல் செய்து/ அப்பாவை எப்போதும் வெறுத்துப்பேசி/ பொழுதைக் கழிக்கும் விடலைதான்
பின்னர் ஊரே புகழும் 'பெரீய்ய்ய' மனிதனாகிவிடுவானாம்! இந்த மாணவர்கள்/ விடலைகள்/ வேலைவாய்ப் பில்லாதவர்கள்தாம் திரும்பத்திரும்ப வந்து படத்தைப் பார்ப் பவர்கள் என்பது தெரியாதா என்ன? அதனால்
படப்பெயர்கள் அப்படித்தான் இருக்க வேண்டும் என்பதில் அவர்கள் தௌ¤வாகவே இருக்கிறார்கள்!
சில ண்டுகளின் முன்பு 'ஜீன்ஸ்' என்றொரு தமிழ்ப்படம் வந்தது. 'அட!'இரட்டையர் கதை'
என்பதைஉணர்த்தும் வகையில், ‘ஜீன்கள்' (GENES) என்று ழ்ந்து யோசித்துப் பெயர் வைத்திருக்
கிறார்களே! என்று,(என்னைப் போல்)'கிறுக்குத்தனமாக,தவறாக' யாரும் புரிந்துகொண்டு விடக்கூடாது'
எனும் கவலையோடு, அந்தப் பட விளம்பரங்களில் 'JEANS' என்றே ங்கிலத்திலும் போட்டார்கள்! எந்த அளவிற்கு 'அர்த்தமற்ற பெயர் வைக்கும் கலை'யில் இவர்கள் தேர்ந்திருக்கிறார்கள் பாருங்கள்!
இந்தியச் சுதந்திர மாளிகையைக் கட்டி எழுப்புவதற்காகத் தன் சதையைச் சேறாகவும், ரத்தத்தை நீராகவும் வார்த்ததோடு உயிரையே அடிக்கல்லாகவும், தன்மானத்தையே மேற்காரையாகவும் இட்டுச்சென்ற தியாகியர் எண்ணற்றோர்! உயர்குணம் மிகுந்த அந்தத் தலைவர்களைப் பற்றி நம் குழந்தைகளுக்கு உரியவகையில் எடுத்துக்கூற
நமக்கும் 'நேரமில்லை'!
இந்நாளின் இழிந்த குணங்கள் பலவும் நிறைந்த தலைவர்களையே ஊடகங்களில் பார்த்துப் பார்த்து வளர்ந்துவரும் நம் குழந்தைகளுக்கு 'தர்ச புருஷர்கள்' யார்? 'இளைய தளபதி', புரட்சிக் கலைஞர்' 'இளைய திலகம்', எனும் தமிழ்ப் புகழ்மொழிகளோடு, 'சூப்பர் ஸ்டார்', 'எவர்க்ரீன்-ஸ்டார்' 'சுப்ரீம் ஸ்டார்', 'அல்டிமேட்
ஸ்டார்' 'க்ஷன்கிங்'‘எனும் பட்டங்களோடும் சின்ன-வண்ணத் திரைகளில் உலாவந்து-உதிர்ந்துபோகக்கூடிய-
நட்சத்திரங்களையே இன்றைய மாணவர்கள், மற்றும் இளைஞர்கள் நெஞ்சில் நிறுத்திவருவது நல்லோர்கள் நெஞ்சை
உறுத்துவதாக அல்லவா இருக்கிறது?
பொதுவாக நல்ல நோக்கத்தை வெளிப்படுத்துவதாகவும், கதையின் சாராம்சத்தைச் சொல்வ தாகவுமே திரைப்படங்களின் பெயர்கள் இருக்கவேண்டும், அப்படித்தான் பெரும்பாலும் இருந்தன. னால் அப்படியே இன்றும்
இருப்பதாகச் சொல்லமுடியாது. இருப்பினும், நல்லதமிழில் -கவித்துவமாக இருக்கவேண்டும் என்பதில்
பிடிவாதமாக இருந்த -இருக்கின்ற- சில இயக்குநர்களும் உண்டு! 'கல்யாணப்பரிசு'முதல்,
'காதலுக்குமரியாதை' வரை இந்தவகையினர் தொடர்வது பாராட்டுக்குரியது. னால், புகழ்பெற்றுவிட்ட
நடிகர்களுக்கான பட்டங்கள் கலைத்தன்மையிலிருந்து விலகி அரசியல் நோக்கோடு அமையத் தொடங்கியதும்,
அவர்கள் தம் படப்பெயர்களை கதைகளை விடவும் தமக்காகவே அமைக்கத் தொடங்கியதும் ஒன்றுக்கொன்று தொடர்புடையதுதான்.
இன்றைய இளம் நடிகர் ஒருவரை 'இளைய தளபதி' என்று சொல்கிறார்கள். அரசியலில் சில மக்கள்
போராட்டங்களுக்குத் தலைமையேற்ற இளைய தலைவர்களை 'தளபதி' என்றும் 'மக்கள் தளபதி' என்றும்
கூறுவதையாவது ஒருவகையில் ஏற்றுக்கொள்ளலாம். இந்த 'சினிமாத் தளபதி'கள் எந்தப் போர்க்களத்தில்
யாருக்கெதிராகப் படை நடத்தி, வெற்றிக்கொடி நாட்டினார்களாம்?
திரைக்கதைப்படி 'அநியாயம் செய்யும்' சில பெரியமனிதர்களின் அடாவடித்தனத்தை எதிர்த்து
-'டூப்பு'களை பலிகடாவாக்கி- வேசப் போர்புரிவதற்கே இவர்களை 'தளபதி' என்றழைத்தால், அதே
படங்களில், நடனம் என்ற பெயரில், அசிங்கமான அசைவுகளுடன் இவர்கள் வழங்கும் பாசக் கூத்திற்கு என்ன பட்டம் தருவது? இதனால், அவர்களுக்குக் கிடைப்பதோ சில பல கோடிகள். நம் குழந்தைகளுக்குக்
கிடைப்பதோ எதார்த்தமற்ற ஒரு மாய உலகம் பற்றிய மனக்கோட்டைகள் தானே? இதிலிருந்து நம்
குழந்தைகளை மீட்டெடுக்க, நம்மிடம் ஏதுமில்லையே?
இந்தத் தளபதிகளும், சூப்பர்-சுப்ரீம்-அல்டிமேட்-எவர்க்ரீன்-ஸ்டார்களும் 'நடிகர் திலக'த்தையோ
'புரட்சிநடிகரை'யோ முன்னுதாரணமாக நினைப்பார்களேயானால்,அது கேலிக்கூத்தாகத்தான் முடியும்."வெட்கங்கெட்ட வெள்ளைக் கொக்குகளா - நீங்க- விரட்டி அடிச்சாலும் வாரீகளா?" என்றும், "தேம்சு நதிக்கரையின் கொக்கு -நர- மாம்ச வெறிபிடித்த கொக்கு" என்றும் வள்ளி திருமணத் தில்கூடதேசபக்தியைமேடையில் கொண்டுவந்து,கைதாகி,மேடையிலேயே உயிர்துறந்த கலைஞர்களும் தமிழ்நாட்டில் இருந்திருக்கிறார்கள் என்பதாவது இந்த 'ஸ்டார்'களுக்குத் தெரியுமா? இவர்களுக்குத்தான்,
படங்களில் மட்டுமல்லாமல் விளம்பரங்களிலும் நடிப்பதற்காகப் பன்னாட்டுக் 'கும்பினி'க்காரர்கள் அள்ளி அள்ளிக் கொடுக்கிறார்களே, பிறகு தேசமாவது பக்தியாவது! யினும்
அவர்களிடையே 'அது என்தேசத்திற்கு எதிரானது' என்று நடிக்கமறுத்தார் மம்மூட்டி என்பதே பெருமை
யானது.இச்செய்தி உண்மையெனில், இன்னும் பாஸ்கரதாஸ்,விஸ்வநாததாஸ்,ஜானகியம்மாள்களின் தேச பக்தக் கலைப்பாரம்பரியம் முற்றிலுமாக அற்றுப்போய்விடவில்லை என்றறிய சற்றேறுதலாக உள்ளது!!
இவர்கள் படங்களில், 'ஜெய்ஹிந்த்' முழக்கத்துடன், தேசவிரோதிகளைப் பிடிக்கப் போவார்கள்! னால்
கூடவரும்ஒருபெண் 'கண்ணா என்சேலைக்குள்ள கட்டெறும்பு புகுந்திருச்சு' என்று கதறுவாள்!
இவர்கள் படங்களில்,கல்லூரிமாணவராகவருவார்கள், உலகில்லாதஒரு'குரூப்டான்ஸ்' இருக்கும். னால்
கல்லூரிமுதல்வர் 'கேணை'யாகவும், சிரியர்கள் 'கிறுக்காக'வுமே இருப்பார்கள்!
இவர்கள் படங்களில், 'சந்தன'வீரப்பனைக் காட்டுக்குள் தேடிச்சென்று பிடித்து விடுவார்கள்! னால்,
அரசாங்கம் தேடும்போது ஒரு பத்திரிகைக்காரனை அனுப்பிவிட்டு வேடிக்கை பார்ப்பார்கள்!
இவர்கள் படங்களில், மனிதர்களை ஒன்றாகப்பாவிக்கும் சாதிமதஒற்றுமையே சத்தியம் பேசும். னால், அவர்களே தம் சாதிபார்த்து வெல்லும் வியூகங்களோடு அரசியலில் இறங்குவார்கள்!!
இவர்கள் படங்களில் று மாடிக்கட்டிடத்தின் மேலிருந்துகூட அனாயாசமாகக் குதிப்பார்கள், னால் நிஜ வாழ்வில் ஒன்றரை அடி ஸ்டூலிலிருந்து குதிக்கக் கூட உதவியாளைத் தேடுவார்கள். இவர்களுக்கு மகளாக நடித்த பெண் இவர்களுக்கே காதலியாகவும் தாயாகவும் கூட நடிப்பார்! mனால், கதாநாயகனுக்குமட்டும் வயதாவதே இல்லை! அந்த ஸ்டைலும் பலமும் அப்படியே இருக்கும்!
உண்மையைச் சொல்லப்போனால், பலதிரைப்பட 'வில்லன்கள்' உண்மையில் நல்லவர்களாகவும், சில 'நாயகர்கள்' உண்மையில் 'வில்லன்'களாகவுமே இருந்திருக்கிறார்கள்!
'எங்களிடம்மட்டும்சமூகப்பொறுப்பு அதுஇதுஎன்று ஏன்எதிர்பார்க்கிறீர்கள்? மற்ற தொழில்களைப் போலவே
நடிப்பது எங்கள்தொழில்'என்று இவர்களாக ஒருவிளக்கம் வேறு அவ்வப்போது தருகிறார்கள்! அவர்கள் வாதத்தின் படியே, திரைப்படமும் ஒரு தொழில்தான் என்று வைத்துக்கொண்டால் கூட அந்தத் தொழிலின் 'உற்பத்திப் பொருள்' தரும் விளைவால் எத்தனைஇளம்உள்ளங்கள் விஷமாகி வருகின்றன என்பதையாவது .வர்கள்ஏன் புரிந்துகொள்ள மறுக்கிறார்கள்? 'உற்பத்திப்பொருளைப் பயன்படுத்துபவன் பாதிப்புக்குஉள்ளாகும்போது' உற்பத்தி செய்தவரைக் கேட்க உரிமை உண்டல்லோ?
னால், இவர்கள்மேல்மட்டும் பிழையில்லை. கான்வெண்ட் பள்ளி ண்டுவிழாக் கூத்துகளில், ''அடுத்து... இதோ
சூப்பர் ஸ்டார் மேடைக்கு வருகிறார்'' என்று தன் மகனை அறிமுகப்படுத்துவதைப் பெருமையாகக் கருதிமகிழும்
பெற்றோர்கள்தாமே பெரும்பான்மையாக இருக்கிறோம்? தமிழ்பேசி வந்த 'காந்தி','பாரதி' மற்றும்
'காமராசர்'போன்ற உண்மை வரலாற்றுப் ப(£)டங்களை நம் குழந்தை களுக்கு பெற்றோர்களாகிய நாம்
அறிமுகப்படுத்தினோமா என்பதை யோசிக்கவேண்டும்.
இவ்வளவு பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் இந்தப் பண்பாட்டுச்சீரழிவை எப்படியாவது தடுக்க வேண்டுமென்று அரசுகளும் கவலைப்படுவதாகத் தெரியவில்லை. தணிக்கையாளர்கள், 'பாயில் புகாதே' என்றால்,
இவர்கள்'தடுக்கில்புகுந்துவருவதை' தடுக்கத்தெரியாமல் தடுமாறுகிறார்கள்! தொலைக்காட்சி யினரோ
அந்தத்தொந்தரவும் இல்லாமல், 'கலைச்சேவை'யைத்தொடர்கிறார்கள்! எதையும் பகுத்தறிந்து உள்வாங்கக்
கற்றுத்தரும் -சமகாலத்தை விளங்கிக் கொள்ளும்- பாடத்திட்டங்களும் இல்லை!
ஒருபக்கம் திரைப்படம் என்றால், இன்னொருபக்கம் விரும்பியோ விரும்பாமலோ குடும்பத்தோடு எல்லாரும்
பார்த்துக்கொண்டிருக்கும் தொலைக்காட்சியும் இதில் சர்வ அலட்சியத்துடனே செயல்படு வதும் பெரும்
வேதனைக்குரியது. 'காமெடி டைம்', டைமுக்குக் காமெடி',’காமெடி தர்பார்' என்பன போலும் ஏராளமான 'கலப்பட' நிகழ்ச்சித் தலைப்புகள், மற்றும் தொடர்கள் தரும் பண்பாட்டுச் சிதைவுகளை ழ்ந்து யோசித்துப் பார்த்தால் இதுபோலும் கட்டுரைகள் இன்னும் பல எழக்கூடும்!
'கில்லி', 'ஏய்', 'சுள்ளான்', போன்ற சிறுபிள்ளைத் தனமான தலைப்புகளில் வரும் படங்கள்
-தமிழ்ச்சமூகத்தை ‘மெதுவாய்க் கொல்லும் விஷங்கள்’ என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். இதன் பாதிப்பு
உடனடியாகத் தெரியாது, சமூகச்சீரழிவில் -அவசியமான விஷயங்களை அலட்சியப் படுத்து வதில்,
அல்பமான விஷயங்களுக்கு லாய்ப் பறப்பதில்- கொண்டுபோய் விடும். தலைப்பை வித்தியாசமாக வைத்து, எப்படியாவது பார்த்துவிடத் தூண்டும் இவர்களின் நோக்கத் தைப்
புரிந்துகொண்டு, நல்ல படம் / நிகழ்ச்சி என்றால் மட்டுமே பார்ப்பது, அல்லது தவிர்த்துவிடுவது என்று
புரிந்துகொண்டால் மட்டுமே தமிழ்ச்சமூகம் உருப்படுவது சாத்தியமாகும் என்பதே சத்தியமாகும்.
நன்றி
திண்ணை...!
|
|
|
| சமாதானச் சுருள் திரை மாலை |
|
Posted by: AJeevan - 08-05-2004, 01:18 PM - Forum: குறும்படங்கள்
- Replies (2)
|
 |
<span style='font-size:30pt;line-height:100%'><b> சமாதானச் சுருள் திரை மாலை </b></span>
<img src='http://www.yarl.com/forum/files/thumbs/t_tropy.2.jpg' border='0' alt='user posted image'>
யாழ்பாணத்தின் யுத்தகாலத்துக்கு பின்னர் உள்ள சூழலில் வாழும் பிஞ்சுக் குழந்தைகளின் வாழ்வியலை ஊடறுத்துச் செல்லும் உண்மைகளை திரையில் செதுக்கியிருக்கும் அருமையான படைப்புகளே சமாதானச் சுருள் 7 குறும்படங்கள்...........
31.07.2004 சூடு தணியாத மாலைவேளையின் குறிக்கப்பட்ட நேரத்துக்குள் மண்டபத்துக்குள் நுழைய வேண்டும் என்ற ஆதங்கத்தோடு சினிமா ஆர்வலர்கள் வந்து அமர்கிறார்கள்.
"இக்குறும்படங்களை 3வது தடைவையாக நான் பார்க்கப் போகிறேன்" என்கிறார் ஒரு நண்பர்.
"ஊரை விட்டு வெளியேறி வெகு காலமாகி விட்டது அந்த மண்ணைத் ஒரு முறை இப்படியாவது தரிசிக்க வேண்டும் என்ற ஆவல்" என்கிறார் மற்றொருவர்.
சுவிஸ் மக்களுக்கு இது புதியது.
"என்ன சொல்லியிருக்கிறார்கள்" என்று சுவிஸ் நாட்டவர் வினவுகிறார்.
"பார்த்து விட்டு சொல்லுங்களேன் உங்கள் கருத்தை.............." என்கிறேன்.
மௌனமாகிறார். யோசிக்கிறார்.
மாலை 8.00 மணிக்கு Europe Movi Club தலைவர் <b>மார்க்கஸ் பஸ்லர்</b> வந்திருப்போரை வரவேற்கிறார்.
யாழ் திட்ட இணைப்பாளரும்
அழுத்தம் குறும்பட இயக்குனருமான <b>கா.ஞானதாஸ் </b>
மற்றும்
போருக்குப் பின் இயக்குனர் <b>ஜெயரஞ்சனி ஞானதாஸ்</b> ஆகியோரை பார்வையாளருக்கு அறிமுகம் செய்து வைக்கிறார்.
அலட்டல் இல்லாமல் இரத்தினச் சுருக்கமாக இருக்கிறது அவரது அறிமுகம்.
பார்வையாளர்கள் கரகோசம் செய்கிறார்கள்.
திரு.திருமதி. ஞானதாஸ் இருவரும் அமைதியாக எழுந்து நிற்கிறார்கள்.
மீண்டும் கரகோசம்.
கரகோசத்தோடு சேர்த்து இருளை கவ்வத் தொடங்குகிறது மண்டபம்.
<b>திரையில்.............</b><span style='color:brown'>
<img src='http://www.yarl.com/forum/files/thumbs/t_1_307.jpg' border='0' alt='user posted image'>
<b>அதிகாலையின் இருள்</b>
களத்தில் கிடந்த ரவைகளைக் கூட புல்லாங்குழலாக்கி
போரினால் ஏற்பட்ட ஊனத்தை மறந்து சமாதானத்துக்காக ஏங்கும் இளம் உள்ளங்கள்....................
<img src='http://www.yarl.com/forum/files/thumbs/t_9.jpg' border='0' alt='user posted image'>
<b>அழுத்தம்</b>
கல்வியே கருந்தனம் என்று கருதும் யாழ்பாண மத்தியதர வர்க்க நிலைப்பாடால் குழந்தைகளது சிந்தனைகள் எவ்வாறு கட்டுப்படுத்தப்படுகிறது.
<img src='http://www.yarl.com/forum/files/thumbs/t_3.jpg' border='0' alt='user posted image'>
<b>செருப்பு</b> காலுக்கு செருப்பு வேண்டுமென கேட்ட சிறுமிக்கு கண்ணி வெடியின் கோரம் அதை சாத்தியப்பட வைத்ததா?
ஓவ்வொரு படத்தின் இறுதியிலும் ஒரு சில நொடிகளின் அமைதிக்குப் பின் கரகோசம் வருகிறது...............
3 குறும்படங்களின் திரையிடலுக்குப் பின்னர் 30 நிமிட இடைவேளை விடப்படுகிறது.
செருப்பு குறும்படத்தில், நிலக் கண்ணி வெடியில் மாட்டிக் கொண்டு காலையிழக்கும் காட்சியில் அதிர்ந்த சுவிஸ் பெண்கள் கண்ணைத் துடைத்துக் கொண்டு வெளியே வருகிறார்கள்.
குறும்படங்கள் முடிந்தவுடன் உள்ள கலகலப்பு இல்லாத ஒரு மயான அமைதி.
யாரும் யாரோடும் பேசாதிருக்கின்றனர்.
யுத்தம் நிறைந்து கிடந்த யாழ் மண்ணின் ஒரு பகுதிக்குள் சென்று வந்த உணர்வாகயிருக்கலாம்.
அங்கு நடக்கும் இன்னல்களில் ஒரு சில துளிகளே இவை.
என் நண்பர்கள் என்னைப் பார்ப்பதோடு சரி. என்னிடம் எதுவுமே கேட்பதாக இல்லை.
உணவகத்துக்கு சென்று 30 நிமிடங்களுக்குள் கொஞ்சம் சாப்பிடுகிறார்கள்.
மீண்டும் மண்டபத்துக்குள் நுழைகிறார்கள்.
அழுது கொண்டு வெளியேறியவர்களைக் காணவில்லை.
உணவகத்தை நடத்தும் நண்பரிடம் கேட்கிறேன்.
வேறு யாராவது வெளியில் இருக்கிறார்களா என்று.
\"இல்லை.
அந்த பெண்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை\"
என்று சொல்லி விட்டுச் சென்று விட்டனர் என்கிறார்.
காட்சிகள் மீண்டும் குறும்படங்களாக திரையில் விரிகின்றன...........
<img src='http://www.yarl.com/forum/files/thumbs/t_4.jpg' border='0' alt='user posted image'>
<b>தடை</b>
மருந்துகளுக்கான தடையினால் ஏற்படும் விபரீதங்கள்.
<img src='http://www.yarl.com/forum/files/thumbs/t_5.jpg' border='0' alt='user posted image'>
<b>மூக்குப் பேணி</b>
சுகபோகப் பொருட்கள் வழி கவரும் ஆக்கிரமிப்பாளர்கள்,
மனிதனின் புலனுக்குப் புரியாமலே,
யுத்தத்தை உருவாக்கும் அபாயம்
<img src='http://www.yarl.com/forum/files/thumbs/t_6.jpg' border='0' alt='user posted image'>
<b>ஒளித்துப் பிடித்து</b>
127 இளைஞர்களின் கொலைக்கு வழி வகுத்த, பிந்துனுவௌ தடுப்பு முகாம் கொலைப் பின்னணி...........
<img src='http://www.yarl.com/forum/files/thumbs/t_7.jpg' border='0' alt='user posted image'>
<b>போருக்குப் பின்</b>
இராணுவத்தால் கைது செய்யப்பட்டு தடுப்பு முகாமலிருக்கும் தந்தையைப் பற்றி அறியத் துடிக்கும் , ஒரு சிறுவனின் ஆக்ரோசம்.
திரையிடலின் முடிவில் அனைவரது கரகோசமும் மண்டபத்தை நிறைக்கிறது.
தலைவர் திரு.திருமதி. ஞானதாஸ் இருவரையும் அழைத்து அனைவரது கரகோசத்தின் நடுவே நினைவுப் பரிசில்களை வழங்குகிறார்.
குறும்படங்கள் பற்றி கலந்துரையாடப் போகிறீர்களா என்று பார்வையாளர்களைப் பார்க்கிறார்.
பார்வையாளர்கள் யுத்த கோரத்திலிருந்து இன்னும் விடுபட்டதாக இல்லை.
அதிகமானவர்கள் சினிமா மீடியாவில் இருப்பவர்கள்.
அமைதியாகவே இருக்கிறார்கள்.
பேசுவதாக இல்லை.
திரு.ஞானதாஸ் அனைவருக்கும் நன்றி கூறியதோடு பார்வையாளர்கள் திரு.திருமதி. ஞானதாஸ் இருவரைச் சுற்றி நின்று பேசத் தொடங்குகிறார்கள்.
யுதார்த்தம் சினிமாவுக்குள் வரும் போது அது நிஜம்..................
சினிமா தெரிந்தவனைக் கூட பாதித்து மௌனமாக்கிவிடுகிறது என்பதற்கு இந் நிகழ்வு உதாரணம்.
திரைப்பட விழாக்களில் கேள்விகளைத் தொடுத்து இயக்குனர்களை விமர்சிக்கும் நண்பன் ஒருவனிடம்
ஏன் இன்று பேசமல் இருக்கிறாய் என்று கேட்கிறேன்.
இது கடினமாக இருக்கிறது.
அமைதிதான் இங்கே சமர்ப்பணமாக வேண்டும் என்கிறான்.
சுவிஸ் மக்கள் யுத்தங்களைப் பார்த்தவர்கள் இல்லை.
எங்களால் இதைத் தாங்கிக் கொள்ள முடியாது.
அதுவும் பச்சிளம் குழந்தைகள் பாடு நெஞ்சை நெகிழ வைக்கிறது என்கிறான்.
அமைதியோடு கலைகிறோம்........................
மறு நாள் காலையில் மற்றுமொரு சுவிஸ் நண்பன் தொலைபேசி வழி
"உன்னிடம் சொல்லாமல் வந்து விட்டேன் என்று வருத்தமாக இருந்தது.
என்னை மன்னித்துவிடு.
நானும் எனது காதலியும் நேற்று இரவு பேசிக் கொள்ளவே இல்லை.
இன்னும் இதயம் பாரமாகவே இருக்கிறது என்று கூறி தொலைபேசி தொடர்பை துண்டித்துக் கொள்கிறான்.
நானும் இப்போதைக்கு அந்த 7 குறும்படங்களின் கலைஞர்களுக்கும் படைப்பாளிகளுக்கும் அமைதியாகவேதான் என் தாக்கங்களை வெளிப்படுத்தலாம்...................</span>
[size=15]AJeevan
|
|
|
| திட்டுவாங்கும் நியூ...! |
|
Posted by: kuruvikal - 08-04-2004, 06:25 PM - Forum: சினிமா
- Replies (11)
|
 |
பெண்களை கேவலப்படுத்துகிறார் சூர்யா!
"நியூ" படத்தில் பெண்களை எஸ்.ஜே.சூர்யா கேவலப்படுத்துவதாக உள்ளது என்று இ.கம்யூனிஸ்டு எல்.எல்.ஏ.வும் அனைத்திந்திய மாதர் சங்க துணைத் தலைவருமான பாலபாரதி கண்டனம் தெரிவித்தார்.
இதுபற்றி அவர் கூறியபோது, "நியூ படத்தில் இரட்டை அர்த்த வசனங்களும், காட்சி அமைப்புகளும் ஆபாசமாக உள்ளன.
எட்டு வயது பையனிடம் "நீ அப்பாவாகி விட்டாய்" என்று நர்சு சொல்வது போல் காட்சி உள்ளது. இது மிகைப்படுத்தப்பட்ட வசனம் ஆகும். அது மட்டுமல்ல எட்டு வயது பையன் பேசுவது போல் இரட்டை அர்த்தம் தொணிக்கும் ஆபாச வசனமும் படத்தில் உள்ளது.
பெண்ணுக்கு பொறுமை வேண்டும். புடவை கட்டுவது தான் மக்கள் தொகை பெருக்கத்துக்கு காரணம் என்றெல்லாம் படத்தில் காட்சிகள் உள்ளன.
அப்படியானால் வயலில் வேலை செய்யும் பெண் கவர்ச்சி காட்டத்தான் சேலை கட்டுகிறாளா? இந்தக் காட்சிகளெல்லாம் தவறான கண்ணோட்டத்தில் வைக்கப்பட்டு உள்ளன. இது கண்டிக்கத்தக்கது" என்று அவர் கூறினார்.
இதற்கு பதிலளித்த டைரக்டர் எஸ்.ஜே.சூர்யா, "ஆபாசம் என்பது அவரவர் பார்வையை பொறுத்தது. நல்ல படமாக "நியூ"வை தந்துள்ளேன். அதற்கு மக்கள் ஆதரவு தந்து உள்ளனர்" என்றார்.
webulagam.com
|
|
|
| ஆட்டோகிராஃப் வெற்றிக்கு விலையா இது?! |
|
Posted by: vasisutha - 08-04-2004, 04:04 AM - Forum: சினிமா
- Replies (8)
|
 |
<b>சீறுகிறார் சேரன்!</b>
<img src='http://www.vikatan.com/av/2004/aug/08082004/p13.jpg' border='0' alt='user posted image'>
டைரக்டர்கள் சேரன் மற்றும் தங்கர்பச்சான் மீது கற்பழிப்புக் குற்றம் சாட்டப்பட்டதில், தமிழ் திரையுலகமே அதிர்ச்சிக்குள்ளாகியிருக்கிறது. ஃபிலிம் சேம்பர் தியேட்டரில் பத்திரிகையாளர்களைச் சந்தித்து தன்னிலை விளக்கம் அளித்துவிட்டு புறப்பட்ட சேரனை ஓரங்கட்டினோம். குமுறலும் கொந்தளிப்புமாகச் சீறித் தள்ளிவிட்டார்.
தப்பு செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டியதுதான். ஆனால், துளியும் சம்பந்தமில்லாத என்னைக் குற்றம் சாட்டிக் கதை கட்டியது என்ன நியாயம்?
அந்த திருச்சி பொண்ணு எங்க மேல அநாவசியமா ஏன் சேத்தை வாரி இறைக்கணும்..? இதுக்கு என்ன பின் னணினு எங்களுக்கு எதுவும் புரியலை. நாங்க விசாரிச்சவரை, சரியான பதிலும் கிடைக்கலை. இந்த விஷயத்தில் திருச்சி மாதர் சங்கமும் அவசரப்பட்டிருக்காங்க. இதிலே பாதிக்கப்பட்டது எங்க தனிப்பட்ட வாழ்க்கைதான்.
தெளிவா... சந்தோஷமா குடும்பம், குழந்தைனு போய்ட்டிருந்த வாழ்க்கை யில சூறாவளி கிளப்பி விட்டுட்டாங்க. தமிழ் சினிமாவின் போக்கை, திசை மாற்றி நல்ல பாதைக்குக் கொண்டுபோன என் மீது இப்படி ஒரு குற்றச்சாட்டா? அதுவும் மிகப்பெரிய குற்றமான, கற்பழிப்புப் புகாரா? என்னால இன்னமும் ஜீரணிக்கவே முடியலை. நெஞ்சை அடைக்குது!
எங்கம்மா ஊரிலிருந்து போன் பண்றாங்க... இரண்டு வார்த்தை பேச றாங்க... அப்புறம் அவங்களுக்கு வார்த் தையே வரலை. பேச முடியாம தாரை தாரையா அழறாங்க... அவங்க எவ் வளவு உடைஞ்சு போயிருக்காங்கன்றது அந்த அழுகையிலேயே தெரியுது. எனக் கும் என்ன பதில் சொல்றதுனு தெரி யலை. வர்ற செய்திகளை நம்பாதே... எம்மேல தப்பில்லேம்மானு சொல் லிட்டு போனை வெச்சிட்டேன்.
வீட்லயும் நிம்மதி இல்லை. போன் வந்தாலே திரும்பத் திரும்ப அதுபத்தியே பேசி விளக்கம் குடுக்க வேண்டியிருக்கு. இரண்டு குழந்தைகள், மனைவி என்று அழகான குடும்பம், இப்போ குழம்பிக் கிடக்கு. என் மனைவியோட கண்ணீர், குழந்தைகளோட தடுமாற்றம்... பார்க்கப் பார்க்க அப்படியே நொறுங்கிப் போய்க் கிடக்கிறேன்.
ஆட்டோகிராஃப்Õ படம் ஜெயிச்ச சந்தோஷத்தில் இருக்கும்போது, இப்படி ஒரு களங்கம்... மனச்சுமை! நான் போற பாதையில நிறையப் பேர் பள்ளம் தோண்டி வெச்சிருக்காங்க. அதையெல்லாம் சரிபண்ண வேண்டியதும் என் வேலைனு இப்பதான் எனக்குப் புரியுது. அய்யோ, இப்படி நம்மளை சொல்லிட்டாங் களேன்னு உட்கார்ந்து கவலைப்பட்டுட்டு இருந்தா அடுத்த ஸ்டெப் நகர முடி யாது. இதுவும் ஒரு சவால் தான். நான் சமாளிப்பேன்.
<b>இப்படி புகார் வர யார் காரணம்னு ஏதாவது தோணுதா? </b>
முதல் தகவல் அறிக்கை, அடுத்த அறிக்கை இதில் இல்லாத எங்கள் பெயர்களைப் பிறகு சேர்த்திருக் கிறார்கள். எங்கள் மேல் புகார் சொன்ன அந்தப் பெண்ணின் கடந்த காலப் பின்னணியை முழுக்க விசாரித்து வைத்திருக்கிறோம். வேடிக்கையும் விநோதமும் நிறைந்த இந்த ஜோடிப்பு வழக்கில் என்னைச் சேர்க்க என்ன காரணம்னு தேடிட்டு இருக்கேன். ஒரு ஆட்டோகிராஃப் வெற்றிக்கு கொடுக்க வேண்டிய விலையா இது?
எனக்கு மன உளைச்சல் ஏற்படுத்தினவங்களைக் கண்டுபிடிக்காம விடப்போறதில்லை. சதிக்குப் பின்னால் இருக்கிறவங்களைக் கண்டுபிடிச்சு, அவங்களை மக்கள் முன் நிறுத்தறதுதான் என் முதல் வேலை என்று சூடாகச் சொன்னவர் தொடர்ந்தார்...
போலீஸ் விசாரித்தவரை எனக்கோ தங்கர்பச்சானுக்கோ இதில் எந்த சம்பந்தமும் இல்லை என்கிற முடிவுக்கு வந்திருக்கிறார்கள். இந்தப் பொய்க் குற்றச்சாட்டுக்கு கதை தேட, பெரிய போலீஸ் அதிகாரிகள் களமிறங்க வேண்டிய அவசியம் என்ன? எவ்வளவோ முக்கியமான வேலைகள் அவர்களுக்கு இருக்கும். அதையெல்லாம் விட்டுட்டு அவங்க உழைப்பை வீணாக்க வேண்டிய அவசியம் என்ன? கொஞ்ச நாள் கழிச்சு எங்க மேலே சுமத்தப்பட்ட இந்தக் களங்கம் பொய் என்றுஆகும் போது, இதுவரை சுமந்த சுமைக்கு, இந்த வலிக்கு, மன உளைச்சலுக்கு என்ன நிவாரணம்?
இப்படியான குற்றச்சாட்டை யார்மேலயும் சொல்லலாமே? நாளைக்கே ஒரு பெரிய நடிகர் மீதோ அரசியல்வாதி மீதோ இதே ஸ்டைல் குற்றச்சாட்டு சுமத்தப்படலாமே? என்னங்க நடக்குது இங்கே..?
என்னை நம்புகிற தமிழ் மக்களுக்கு கரம் கூப்பிச் சொல்கிறேன்... நான் குற்ற மற்றவன். என் படங்களில் கூட ஆபாசத்தை அனுமதிக்காத மனது என்னுடையது. நான் எடுத்த பாரதி கண்ணம்மா படம் பார்த்துட்டு பலபேர் தங்கள் பிள்ளைகளை ஸ்கூல்ல சேர்க்கும்போது சாதியைச் சொல்லாம சேர்த்திருக்காங்க. பொற்காலம் பார்த்துட்டு, ஊனமுற்ற பெண்ணுக்கு வாழ்க்கை கொடுத்து இருக்கேங்க!னு எனக்கு எத்தனை பேர் கல்யாணப் பத்திரிகைகள் அனுப்பி னாங்க தெரியுமா? வெற்றிக்கொடி கட்டு பார்த்துட்டு கால்காசானாலும் நம்ம ஊர் மாதிரி வராதுனு, வெளிநாட்டு மோகத்தை விட்டு இங்கேயே பிழைத்தவர்கள் இருக்கிறார்கள். பாண்டவர் பூமி பார்த்துட்டு கை நழுவிப் போய்க்கொண்டிருக்கும் கிராமத்துப் பாசத்தை அதிகரித்துக் கொண்டவர்கள் அதிகம்.
இப்படி நான் என் படங்களின் மூலமா மனுஷங்ககிட்டே அன்பு, பாசம், பண்பாடு, கலாசாரம்னு பேசிட்டிருக்கேன். அப்படிப்பட்ட நானே இந்தக் கீழ்த்தரமான செயலைச் செய்திருப்பேனா... சொல்லுங்க..?
ஐந்து படங்கள் சம்பாதித்துத் தராத புகழையும் பணத்தையும் ஆட்டோகிராஃப் தந்திருக்கலாம். ஆனாலும் அதுவே நிறைய பேர் கண்ணை உறுத்தி இப்படி ஒரு களங்கம் வந்திருக்கிறது. இந்தத் துயரத்திலும், கனடா மாண்ட்ரீல் பட விழாவில் பங்கேற்கிற ஒரே தமிழ்ப்படமாக ஆட்டோகிராஃப் தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கிறது. ஆசியாவின் சிறந்த படம் என்ற தகுதியில் போகிறது. ஆனா, இந்த சந்தோஷத்தை என்னால முழுசா அனுபவிக்க முடியலை.
<b>அடுத்த படங்கள் என்ன?</b>
இன்னும் கதை, தலைப்பு முடிவுக்கு வரவில்லை. ஆட்டோகிராஃப்க்கு அடுத்த கட்டத்தைத் தாண்டணும்னா ஏராளமான உழைப்பு வேண்டி இருக்கு. இந்தியன் தியேட்டருக்கும் பஞ்சு அருணாசலம் சாருக்கும் படம் பண்றதுங்கிறது மட்டும் முடிவாகியிருக்கு.
<b>நடிகர், இயக்குநர்... எது உங்களுக்குப் பிடிச்சிருக்கு?</b>
இயக்குநர் பதவி ரொம்பப் பெரிசு. மனசுக்குப் பிடிச்சது. கிட்டத்தட்ட படைக்கிற பிரம்மா மாதிரி. நான் டைரக்ஷ னைப் பாடமா படிச்சது இல்லை. வாழ்க்கை தெரியும். அனுபவங்கள்தான் எனக்கு தியரி. நாம சந்திக்கிற மனிதர்கள்தான் என் கதாபாத்திரங்கள். வாழ்க்கையைவிட சிறந்த வாத்தியார் எங்கே இருக்கிறார் சொல்லுங்கள்!
வாழ்க்கைதான் எல்லாமே கத்துக் கொடுக்குது. நான் புத்தகம் படிக்கிறவன் இல்லை. ஒரு வாரத்துக்கு முன்னாடி கும்பகோணம் போயிருந்தேன். அந்த ஸ்கூலில் போய்ப் பார்த்தால், மனசே பாரமாகிப் போச்சு. ஆட்டோகிராஃப் 150 நாள் விழாவை கொண்டாடவே இல்லை. அதற்காக வெச்சிருந்த மூன்று லட்சத்தையும் இறந்து போன குழந்தைகளோட குடும்பத்துக்குக் கொடுத்துட்டேன்...மேலே பேச முடியாமல் கண்கள் கலங்க நகர்கிறார் சேரன்.
http://www.vikatan.com/
|
|
|
| காதல் தேசம்....! |
|
Posted by: kuruvikal - 08-04-2004, 01:11 AM - Forum: கவிதை/பாடல்
- Replies (53)
|
 |
<img src='http://kuruvikal.yarl.net/archives/bird_paradise.jpg' border='0' alt='user posted image'>
[size=9](Bird paradise எனும் பொதுப்பெயர் கொண்ட மகரந்தப் பரம்பலுக்கு பறவைகளை மட்டுமே நம்பி இருக்கும் மலர்)
கலி முத்தியதோ
புத்தி பேதலித்ததோ
மானிடர் மனமெங்கும் ஊனம்
மந்திகளிலும் கடையாய்
அவர் தம் வாழ்வு...!
அதற்குள்
காதலாம் கண்ணாமூஞ்சியாம்
கண்றாவிகள் கண்முன்னே
குமரன்களும் குமரிகளும்
கனவுலகில் கிடந்துகொண்டு
நடத்தினமாம் கறுமமெல்லாம்
நரகம் பூலோகத்தில்....!
இத்தனைக்குள்ளும்
இயற்கையவள் வரைந்த
விதி நின்று
வரம்புமீறா வாழ்வு வாழுதுகள்
அழகான இந்த மலர்கள்
குருவிகளோடு நேசமாய்
மாசில்லா பாசம் காட்டும்
இந்தத் தேசமே
உண்மைக் காதல் தேசம்....!
நன்றி... http://kuruvikal.yarl.net/
|
|
|
| கவனிப்பாரற்ற புலம் பெயர் தொழிலாளர்களுக்கு நம்பிக்கை |
|
Posted by: AJeevan - 08-04-2004, 12:44 AM - Forum: செய்திகள்: உலகம்
- No Replies
|
 |
<b>கவனிப்பாரற்ற புலம் பெயர் தொழிலாளர்களுக்கு நம்பிக்கை தரும் அறிகுறி </b>
தாய்லாந்து பொருளாதாரத்தின் ஆரோக்கியத்தை விருத்தி செய்ய வியர்வை சிந்தி உழைத்த புலம் பெயர் தொழிலாளர்களுக்கு இறுதியில் ஒளிமயமான எதிர்காலம் ஒன்று தென்படுவதாக தெரியவந்துள்ளது. ஆனால் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்படலாம் என்ற அச்சத்துடனேயே அவர்கள் வாழ்ந்து வருகிறார்கள்.
தாய்லாந்து க்குள் வாழ்ந்துவரும் சுமார் ஒரு மில்லியன் புலம்பெயர் தொழிலாளர்கள் அங்கு தொடர்ந்து வசிப்பதை ஒழுங்குமுறைப்படுத்தும் கொள்கை ஒன்றை அந்நாட்டு அரசாங்கம் ஜூலை மாதம் முதலாம் திகதிதொடக்கம் அமுல் செய்ய இருப்பதால் இந்த நம்பிக்கைஒளி பிறந்துள்ளது.
இக்கொள்கையின்படி, ஆவணப்படுத்தப்பட்ட மற்றும் ஆவணப்படுத்தப்படாத புலம் பெயர் தொழிலாளர்கள் அவர்களது தொழில் தருநருக்கு ஊடாக அன்றி நேரடியாகவே தங்களை பதிவு செய்து கொள்ள வாய்ப்பு அளிக்கப்படும். தொழிலாளரின் குடும்ப உறுப்பினர் எவரும் அவருடன் வந்திருந்தால் அவர் தொழில் வாய்ப்பின்றி இருந்தாலும் அவரையும் பதிவு செய்து கொள்வதற்கான வசதி அளிக்கப்படும்.
பதிவு செய்து கொண்டதும் புலம் பெயர் தொழிலாளர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்படுவதால் இக் கொள்கையின் அடிப்படை நோக்கம் சிறந்ததே. இந்த அடையாள அட்டையை அவரே வைத்திருக்கலாம். தொழில் கொள்வோரிடம் கொடுக்க வேண்டியதில்லை என்றுவட பகுதி நகரான சியாங்மாயில் அமைந்துள்ள மைக்றன்ட் அக்ஷன் ப்ரோகிறாம் எனப்படும் அரச சார்பற்ற அமைப்பை சேர்ந்த ஜக்கி பொலக் கூறுகிறார்.
பொலிஸாரால் அல்லது அவர்களது தொழில் கொள்வோரால் துன்புறுத்தப்படுவதை தவிர்ப்பதற்கு ஓரளவு பாதுகாப்பை இது கொடுக்கும் என்று பொலொக் கூறினார்.
மேலும், ஜூலை மாதத்திலிருந்து ஆரம்பிக்கப்பட இருக்கும் கொள்கையின்படி புலம் பெயர் தொழிலாளர்களின் உரிமைகள் தொடர்பாக உத்தரவாதமும் அளிக்கப்பட இருக்கிறது. இத்தகைய உத்தரவாதம் இதுவரை வழங்கப்படாதிருந்தால் உரிமை மீறல்களும் துஷ்பிரயோகங்களும் இடம் பெற்று வந்தன.
தாய்லாந்துத் தொழிலாளர்களுக்கான தொழில் சட்டங்களின்கீழ் அவர்களுக்கு அளிக்கப்படும் பாதுகாப்பு புலம்பெயர் தொழிலாளர்களுக்கும் கிடைக்கவிருக்கிறது. மேலும் தாய்லாந்துத் தொழிலாளர்களுக்கு உத்தரவளிக்கப்பட்டுள்ள ஊதியங்கள் அனுகூலங்கள் அனைத்தையும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு பெற்றுக்கொள்வர்.
தற்போதைய ஆகக் குறைந்த ஊதியம் நாளொன்றுக்கு 135 பாஹ்த் (3.35 அமெ.டொலர்) ஆகும். சுகாதார பராமரிப்பு, புலம்பெயர் தொழிலாளர்களில் தங்கியிருக்கும் குடும்ப உறுப்பினர்களின் கல்வி அனுகூலங்களும் கிடைக்கின்றன.
ஆனால் தாய்பர்மா எல்லைக்கருகில் மாயே சொட் போன்ற நகரங்களில் தங்கள் ஆடைத் தொழிற்சாலைகளில் பர்மிய தொழிலாளர்களை வேலைக்கமர்த்தும் தொழில் கொள்வோர் அவர்களுக்கு போதிய சம்பளம் கொடுப்பதில்லை என்று அடிக்கடி அறிவிக்கப்படுகிறது.
ஆவணப்படுத்தப்பட்ட மற்றும் ஆவணப்படுத்தப்படாத புலம்பெயர் தொழிலாளர்கள் நாளொன்றுக்கு 50 பர்த்திலிருந்து 80 பாஹ்த் (1.282.0 அமெ.டொலர்) வரை ஊதியமாகப் பெறுகிறார்கள்.
இதுபற்றி முறைப்பாடு செய்வோர், கைது. நாடு கடத்தல் அல்லது துஷ்பிரயோகம் போன்ற துன்புறுத்தல்களுக்கு ஆளாகிறார்கள்.
புலம்பெயர் தொழிலாளர்களுக்கென ஒழுங்கு முறையிலான சட்டம் ஒன்றை அமுல்படுத்துவதற்கான தாய்லாந்தின் முயற்சி உலகளாவிய போக்கின் ஒரு பிரதிபலிப்பே என்று சர்வ தேச புலம்பெயர் ஸ்தாபனத்தின் பாங்கொக் அலுவலகத்தில் திட்ட அதிகாரியாக பணியாற்றும் றிக்கார்டோ கொர்டேரோ ஐ.பி.எஸ்.ஸிடம் தெரிவித்தார்.
இத்தொழிலாளர்களை அனுப்பும் நாடுகள் இவர்களை பாதுகாப்பதற்காக இவர்களுக்கு வேலை வழங்கும் நாடுகளின் அரசாங்கங்களுடன் செய்து கொண்டஒப்பந்தங்களின் பயனாக இது சாத்தியமாகி உள்ளது.
பர்மா, லாவோஸ், கம்போடியா ஆகிய நாடுகளுடன் தாய்லாந்து செய்து கொண்ட ஒப்பந்தங்களால் கடைப்படிக்கப்பட இருக்கும் புதிய கொள்கையே ஜூலை மாதத்திலிருந்து அமுல் செய்யப்பட இருக்கிறது என்று றிக்கார்டோ தெரிவித்தார்.
தாய்லாந்து எதிர்நோக்கும் சவால் பாரியது என்பது தங்களுக்குத் தெரியுமெனக் கூறிய றிக்கார்டோ புலம்பெயர் தொழிலாளர்கள் எதிர்நோக்கும் சகல பிரச்சினைகளுக்கும் தீர்வு கண்டுவிட முடியாது என்றும் குறிப்பிட்டார்.
ஆனால், ஒப்பந்தங்கள் ஒரு முக்கிய முதல் நடவடிக்கை என்றும் அவர் கூறினார்.தாய்லாந்தில் ஏறத்தாழ 1.2 மில்லியன் புலம்பெயர் தொழிலாளர்கள் இருக்கிறார்கள். இவர்களில் அநேகமானோர் இந்த தென்கிழக்காசிய நாட்டில் பணியாற்றுவதற்கு அவசியமான ஆவணங்கள் இல்லாதிருக்கிறார்கள்.
கிட்டத்தட்ட ஒரு மில்லியன் பேர் பர்மாவைச் சேர்ந்தவர்கள். 110,000 பேர் லாவோஸையும் 88,000 பேர் கம்போடியாவையும் சேர்ந்தவர்களாவர்.
2001 ஆம் ஆண்டில் பாங்கொக், அங்கு பணியாற்றும் தொழிலாளர்களில் இயன்ற அளவு தொகையினரை ஆவணப்படுத்தும் நோக்கத்துடன் புலம் பெயர் தொழிலாளர்களை பதிவு செய்யும் பணிகளை ஆரம்பித்தது. ஆனால் மொத்தம் 568,000 பேர் மாத்திரமே அவ்வேளை பதிவு செய்து கொண்டார்கள். இவர்களில் சுமார் 460,000 பேர் பர்மாவிலிருந்து சென்றவர்களாவர்.
அடுத்த வருடத்தில் பதிவு செய்து கொண்டோர் தொகை 409,000 ஆக வீழ்ச்சி அடைந்தது.
தாய்லாந்தின் முக்கிய பொருளாதார வளங்களான விவசாயம், மீன்பிடி, ஆடை உற்பத்தி ஆகியன அயல் நாடுகளிலிருந்து செல்லும் குறைந்த கூலி பெறும் தொழிலாளர்களிலேயே தங்கி உள்ளன.இதற்கு மேலாக, கட்டிட நிர்மாண புலம் பெயர் தொழிலாளர்களே கூடுதலாக பணியாற்றுகிறார்கள். வீட்டுப் பணிகளைச் செய்ய உள்ளநாட்டுப் பெண்கள் அதிகரித்து ஊதியம் கோரி வருவதால் வெளிநாட்டுப் பெண்கள் இப்பணிகளில் ஈடுபடுத்தப்படுவது அதிகரித்து வருகிறது.
உதாரணமாக,2000ஆம் ஆண்டில் தாய்லாந்தின் பொருளாதாரத்திற்கு பதிவுசெய்யப்பட்ட புலம் பெயர் தொழிலாளர்களின் மொத்தப் பங்களிப்பு 2.3 மில்லியன் அமெரிக்க டொலர் என்று அந்நாட்டு தொழில் திணைக்களம் மதிப்பிட்டது.
2003 ஆம் ஆண்டில், 80,000 பர்மிய தொழிலாளர்கள் பணியாற்றும் வடமேல் மாகாணமான டக்கில் இயங்கிவரும் தொழிற்சாலை உரிமையாளர்களின் அமைப்பான டக் கைத்தொழில் பிரிவு வெளியிட்ட அறிக்கை ஒன்றில் 12 மாதகாலத்தில் அப் பிராந்தியத்தில் 125 மில்லியன் அமெரிக்க டொலர் சம்பாதிக்கப்பட்டதாக தெரிவித்தது.
பர்மாவில் பொருளாதார வீழ்ச்சி, ஆளும் இராணுவ அரசாங்கத்தின் அரசியல் ஒடுக்குமுறை ஆகியன காரணமாக பர்மிய தொழிலாளர்கள் வேலைவாய்ப்பை எதிர்பார்த்து தாய்லாந்துக்குள் படையெடுக்க ஆரம்பித்தார்கள்.
ஆனால், தாய்லாந்துக்கும் பர்மாவுக்குமிடையே செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தம் காரணமாக தாய்லாந்து அதன் புதிய கொள்கையை அமுல் செய்ய ஆரம்பித்ததால் இவர்கள் தாய்லாந்தில் பதிவு செய்து கொள்வது அவ்வளவு இலகுவாக இருக்கவில்லை. ஒப்பந்தத்தின்படி, பர்மிய அதிகாரிகளின் சிபாரிசுடன் கூடிய தொழிலாளர்களின் பெயர்களை பதிவு செய்து கொண்ட தொழிலாளர்களுக்கு மட்டுமே தொழில் அனுமதிப் பத்திரங்களும் அடையாள அட்டைகளும் வழங்கப்படுமென தாய்லாந்து அதிகாரிகள் தெரிவித்து விட்டனர்.
இதனால் பல புலம்பெயர் தொழிலாளர்கள் கவலை அடைந்தார்கள். பர்மிய அரசாங்கம் தங்கள் பெயரை வைத்து என்ன செய்யுமோ என்றும் தங்களை பர்மியர்கள் என்று பர்மிய அதிகாரிகள் அங்கீரிப்பார்களா என்றும் அவர்கள் அஞ்சினார்கள்.ஆனால், நாளாந்தம் நாடு திருப்பப்படும் பெருந்தொøயான பர்மிய தொழிலாளர்களை பர்மிய அரசாங்கம் கைது செய்யவோ அவர்களை பின்தொடர்ந்து செல்லவோ இல்லை என்பதால் இத்தகைய அச்சம் அநாவசியமானது என்று பர்மிய வழக்கறிஞர் சபையைச் சேர்ந்த பீஜோய் சேன் தெரிவித்தார்.
Veerakesari
|
|
|
|