![]() |
|
திட்டுவாங்கும் நியூ...! - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8) +--- Forum: சினிமா (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=39) +--- Thread: திட்டுவாங்கும் நியூ...! (/showthread.php?tid=6837) |
திட்டுவாங்கும் நியூ...! - kuruvikal - 08-04-2004 பெண்களை கேவலப்படுத்துகிறார் சூர்யா! "நியூ" படத்தில் பெண்களை எஸ்.ஜே.சூர்யா கேவலப்படுத்துவதாக உள்ளது என்று இ.கம்யூனிஸ்டு எல்.எல்.ஏ.வும் அனைத்திந்திய மாதர் சங்க துணைத் தலைவருமான பாலபாரதி கண்டனம் தெரிவித்தார். இதுபற்றி அவர் கூறியபோது, "நியூ படத்தில் இரட்டை அர்த்த வசனங்களும், காட்சி அமைப்புகளும் ஆபாசமாக உள்ளன. எட்டு வயது பையனிடம் "நீ அப்பாவாகி விட்டாய்" என்று நர்சு சொல்வது போல் காட்சி உள்ளது. இது மிகைப்படுத்தப்பட்ட வசனம் ஆகும். அது மட்டுமல்ல எட்டு வயது பையன் பேசுவது போல் இரட்டை அர்த்தம் தொணிக்கும் ஆபாச வசனமும் படத்தில் உள்ளது. பெண்ணுக்கு பொறுமை வேண்டும். புடவை கட்டுவது தான் மக்கள் தொகை பெருக்கத்துக்கு காரணம் என்றெல்லாம் படத்தில் காட்சிகள் உள்ளன. அப்படியானால் வயலில் வேலை செய்யும் பெண் கவர்ச்சி காட்டத்தான் சேலை கட்டுகிறாளா? இந்தக் காட்சிகளெல்லாம் தவறான கண்ணோட்டத்தில் வைக்கப்பட்டு உள்ளன. இது கண்டிக்கத்தக்கது" என்று அவர் கூறினார். இதற்கு பதிலளித்த டைரக்டர் எஸ்.ஜே.சூர்யா, "ஆபாசம் என்பது அவரவர் பார்வையை பொறுத்தது. நல்ல படமாக "நியூ"வை தந்துள்ளேன். அதற்கு மக்கள் ஆதரவு தந்து உள்ளனர்" என்றார். webulagam.com - tamilini - 08-04-2004 அப்ப அவங்க பாத்திட்டாங்க... நியூ வை...! - kuruvikal - 08-04-2004 இதைப் பற்றி நீங்க என்ன நினைக்கிறீங்க... நியூ பாத்தவங்க சொல்லுங்களேன்....! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- tamilini - 08-04-2004 பாத்தவங'க சொல்லுங்க...! - vasisutha - 08-04-2004 நான் பார்த்தேன். அது தான் A படம் என்று முன்னுக்கு சேர்டிபிகட் காட்டுறானே.. Aபடம் இப்படி இல்லாமல் எப்படி இருக்கும்? <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- AJeevan - 08-05-2004 வசிசுதாவின் கருத்துதான் எனது கருத்தும். http://newthefilm.com/index.htm - kavithan - 08-05-2004 நான் பாக்கலையுங்கோ.... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- AJeevan - 08-05-2004 படம் தெலுங்கில் பிளாப். தமிழில் ஹிட்................ Boys போலவே பிரச்சனைக்குரியதாகி வரும் அடுத்த திரைப்படமாகியிருக்கிறது. எப்படியோ வெளியீட்டு நாளன்றே வசூல் 1 கோடியை தாண்டியிருக்கிறது. அது வருமான வரித்துறையினரின் கண்ணை வேறு உறுத்தியிருக்கிறது. காய்த்த மரத்துக்குத்தான் கல்லடி விழும். - வெண்ணிலா - 08-05-2004 vasisutha Wrote:நான் பார்த்தேன். அது தான் A படம் என்று முன்னுக்கு சேர்டிபிகட் காட்டுறானே.. Aபடம் இப்படி இல்லாமல் எப்படி இருக்கும்? <!--emo& :oops: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
- aathipan - 08-05-2004 எட்டு வயதுடைய பப்பு என்கின்ற பையன் இருபத்தெட்டு வயதுடைய வாலிபனாகிறான். அதன்பின் என்ன நடக்கிறது ?என்பது தான் கதை. அழகி படம் போலோ அல்லது ஒட்டோகிராப் போலோ கற்பனைபண்ணிக்கொண்டு படம் பார்க்கசென்றால் ஏமாற்றம் தான் மிஞ்சும். கவலைகளை கொஞ்சம் மறந்து கொஞ்சம் சந்தோசமாக சிரித்துவிட்டு வர விரும்புபவர்கள் போகலாம். A ஜோக்ஸ் உங்களுக்கு பிடிக்காது. இரட்டை வசனம் எட்டாப்பொருத்தம் என்று வியாக்கியானம் சொல்லாமல் எல்லோரும் பாருங்கள். எனக்குத்தெரிந்து படத்திற்கு பெண்கள் கூட்டம் தான் இநதியாவில் அதிகமாக உள்ளது. அதுவும் வாலிப வயதுப்பெண்கள். யாரும் பாதியில் எழுந்து போகவில்லை. பாடல்கள் அற்புதம்.... சூர்யாவின் தன்னம்பிக்கைக்கு வெற்றி என்று சொல்லலாம். இவன் நடித்து எவன் பார்ப்பான் என்றுதான் நினைத்தேன். படம் வெற்றி... நீங்கள் பார்க்காவிட்டால் நல்ல ஒரு (A) நகைச்சுவையை நீங்கள் இரசிக்காதுவிட்டுவிடுகிறீர்கள். மன்னிக்கவும் பெற்றோருடன் பார்க்கும் படம் அல்ல. - kuruvikal - 08-05-2004 'நியூ' படம் குறித்து கடும் விமர்சனங்கள் எழுந்திருந்தாலும், பல இடங்ளில் அந்தப் படம் சக்கைபோடு போட்டு வருகிறது. இதனால் பண மழையில் குளித்து வரும் அந்தப் படத்தின் தயாரிப்பாளரான இயக்குனரான எஸ்.ஜே. சூர்யா அடுத்த படத்தை எடுக்கத் தயாராகிவிட்டார். சிம்ரன், கிரண், தேவயானியை வைத்து பல கோடிகளை செலவழித்து படத்தை இயக்கி, நடித்து, சூர்யாவே தயாரித்த 'நியூ' தெலுங்கில் பெரும் தோல்வியைத் தழுவியது. இதனால் தமிழில் படத்தை ரிலீஸ் செய்ய வினியோகஸ்தர்கள் யாரும் முன்வரவில்லை. கடும் முயற்சிகள் செய்து, பயத்துடன் தான் படத்தை தமிழில் ரிலீஸ் செய்தார். புதுப் படங்கள் எல்லாம் ஆகஸ்ட் 15ம் தேதிக்காக காத்திருக்க, இப்போதைக்கு நல்ல படங்கள் ஏதும் போட்டியில் இல்லாத 'ஆப்சீசனில்' ரிலீசானது 'நியூ'. ரிலீஸ் ஆன நாள் முதல், படம் குறித்து கடுமையான விமர்சனங்கள் வரத் தொடங்கின. படம் ஆபாசமாக உள்ளது என எல்லாப் பத்திரிக்கைகளும் வரிசை கட்டி எழுதத் தொடங்கின. காரணம் படத்தில் இடம் பெற்றுள்ள வசனங்களும், காட்சிகளும் அப்படி. மகளிர் சங்கங்கள் படத்துக்கு எதிராக போராடத் தொடங்கின. இங்கேதான் சூர்யாவுக்கு யோகம் அடிக்கத் தொடங்கியது. எல்லாரும் இப்படி படத்தைக் கரிச்சுக் கொட்டாறாங்களே, அப்படி என்னதான் இருக்கிறது என்று பார்ப்போம் என எல்லாரும் தியேட்டருக்கு வர ஆரம்பித்தார்கள். இவ்வாறு இலவசமாகக் கிடைத்த பப்ளிசிட்டி காரணமாக படம் இப்போது எல்லா இடங்களிலும் வசூலை வாரிக் குவித்து வருகிறது. விமர்சனங்களையும் தாண்டி பல இடங்களிலும் படம் மிக நன்றாகப் போய்க் கொண்டிருப்பதாகத் தகவல். இதனால் போட்ட காசை எடுத்துவிட்டதோடு, கையில் சரளமான நிதி நிலையில் மகிழ்ச்சியாக இருக்கும் சூர்யா அடுத்து படமெடுக்கத் தயாராகிவிட்டார். படத்துக்கு அவர் வைத்துள்ள தலைப்பு 'ஆஊ'. சிம்ரன், கிரணை வைத்து 'நியூ'வில் மகா விவகாரமான சப்ஜெக்டை தொட்ட சூர்யா, தனது அடுத்த படத்தின் தலைப்பையே பெரும் பரபரப்பாக்கிவிட்டார். 'நியூ' படத்துக்குக் கிடைத்துள்ள எதிர்ப்பு குறித்து சூர்யா கூறுகையில், ''படத்தை தவறாகப் புரிந்து கொண்டு விமர்சிக்கிறார்கள். இது ஆபாசப் படமே அல்ல. காமெடியும், கவர்ச்சியும் கலந்த ஒரு சயின்ஸ் பிக்ஷன் படம். இரட்டை அர்த்த வசனம் சேர்க்கப்பட்டது கதைக்குத் தேவைப்பட்டதால்தான். கிரண் பாத்திரம் கதைக்குச் சம்பந்தம் இல்லாதது என்கிறார்கள். கிரணை கவர்ச்சி ஊறுகாயாகத் தான் படத்தில் சேர்த்தோம். ஊறுகாய் இல்லாத மதிய சாப்பாடு நல்லா இருக்குமா என்று கேட்கிறார். விமர்சனங்கள் குறித்தெல்லாம் துளியும் அலட்டிக் கொள்ளாமல் கவலைப்படாமல் 'ஆஊ' எடுக்கத் தயாராகிவிட்டார் சூர்யா. அதிலும் ஹீரோ அவரே. நாயகியாக 'சுள்ளானில்' தனுஷûடன் ஆட்டம் போட்ட சிந்து துலானி நடிக்கிறார். சரி, 'ஆஊ' என்று வில்லங்கமான பெயரை வைத்துள்ளீர்களே, பிரச்சினை வராதா என்று கேட்டால், சிரிக்கும் சூர்யா சொல்லும் பதில், ''மறுபடியும் நீங்க தப்பா புரிஞ்சுக்கிறீங்க. 'ஆஊ'என்று அர்த்தம். <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> அதைத் தான் சுருக்கி வைத்தேன். இதற்கும் தப்பாகவே அர்த்தம் கற்பிக்கனுமா?'' என்று நம் மீதே செல்லமாய் கோபம் காட்டினார்.வில்லங்கமான ஆளுப்பா ! thatstamil.com - tamilini - 08-05-2004 Quote:சூர்யாவே தயாரித்த 'நியூ' தெலுங்கில் பெரும் தோல்வியைத் தழுவியது. வாழ்க தெலுங்கு சழூகம்.. எங்க போறாங்க நம்ம தமிழர்...! அது சரி இந்த படம் ஜரோப்பிய நாடுகளில் திரையிடவில்லையா... நம்மாக்கள் என்ன பண்ணிணாங்கள்... வசூலை வாரக்கொடுத்தாங்களா இல்லை...பாடம் புகட்டினாங்களா...? |