Yarl Forum
மனிதனாவது எப்போது...? ? ? - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11)
+--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52)
+--- Thread: மனிதனாவது எப்போது...? ? ? (/showthread.php?tid=6863)



மனிதனாவது எப்போது...? ? ? - shanmuhi - 07-27-2004

<b>மனிதனாவது எப்போது...? ? ?</b>

<b>அர்த்தங்களின் சந்தையில் முகவரியை
தொலைத்து, அந்நிய நாட்டில் அகதியாய்
தஞ்சமாய் வந்துறங்கியபோதே எனை
நோக்கிட்ட வினா எந்த நாட்டவர் என்று
நளினமாய் கேட்டிட, நானும்
சிறீலங்கன் என்று நயமாய் பகிர்ந்திட
அன்று ஆரம்பித்த பதிவுகள்தாம்
இன்றுவரை தொடர்கிறது தொடர்கதையாய்...

இருமணம் கலந்த திருமணப் பதிவில்
இனிய மழலைகளின் பெயர் பதிவில்
வேலை தேடும் படலங்களில்
அந்நியரோடு அந்நியமாய் அஞ்சாமல்
அன்போடு உறவாட நினைக்கும்போது
தொடர்கிறது நான் ஒரு சிறீலங்கனாய்....

இந்தநாட்டு பிரஜா உரிமைக்காக
அந்தநாட்டு பிரஜா உரிமையை
இழந்தபோதும் தொடர்கிறது
நான் ஒரு சிறீலங்கனாக..
போகும் இடம் தன்னிலும் வருமிடம் தன்னிலும்
தொடர்கிறது என்றென்றும் தொடர்கதையாய்...

நான் ஒர் அந்நியனாய் அகதியாய்
சிறீலங்கனாய் வேண்டாம்
புலத்தில் நிறபேதமில்லாத மனிதனாக
மதித்திடும் காலம் தான் எப்போ வரும்</b>


- kuruvikal - 07-28-2004

சண்முகி அக்கா...நீண்ட நாட்களின் பின் தங்கள் கவிதை படிக்கக் கிடைத்ததில் மகிழ்ச்சி...!


- வெண்ணிலா - 07-28-2004

<b>ரொம்ப நன்றாக எழுதியிருக்கிறீர்கள் அக்கா. இன்னும் பிரஜாவுரிமை கிடைக்கவில்லையா அக்கா?</b> :roll: Confusedhock:


- Mathivathanan - 07-28-2004

சிறீலங்கனாய் இஞ்சை இருக்க விருப்பமில்லாட்டால் இருக்கவே இருக்கிறது வன்னி சிறீலங்கா..
இப்ப இருக்கிற நாட்டுக்காரன் பிடிச்சிழுத்து கட்டி வைச்சிருக்கிறானோ..? இல்லையே..

பிரஜா உரிமைப்பிரச்சனைகூட இல்லை.. இஞசையிருந்து நிறம்பற்றி புலம்பிறதைவிட அங்கையே போயிருந்து வன்னிப்புகழ் இன்னும் கொஞசம் தெம்பா பாடலாம்..


- tamilini - 07-28-2004

கவிதை நன்றாக இருக்கிறது சண்முகி அக்கா..! வாழ்த்துக்கள்........!


- AJeevan - 07-28-2004

Quote:நான் ஒர் அந்நியனாய் அகதியாய்
சிறீலங்கனாய் வேண்டாம்
புலத்தில் நிறபேதமில்லாத மனிதனாக
மதித்திடும் காலம் தான் எப்போ வரும்
_________________
SHANMUHI

வருந்திக் கொண்டே ஒரு செயலைச் செய்வது கடினம்தான்.

எனக்குத் தெரிந்த ஒரு நண்பர்
உங்களைப் போலவே சொல்லிக் கொண்டிருந்தார்.
பின்னர் நாட்டுக்குத் திரும்பிச் சென்றார்.
போனவர் பற்றிய தகவல் மற்றும் தொடர்புகள்
ஆரம்பத்தில் இருந்தன.
பின்னர் தொடர்புகள் அற்றுப் போய் விட்டது.
பல கடிதங்கள் போட்டேன்.
பதிலேயில்லை.??????????????

அவரது பெயர்: என்.நடராசா
சுவிசை விட்டு 2000ம் ஆண்டு சென்றார்.

அவரை ஒரு முறை சந்திக்க ஆசை..........


- kavithan - 07-29-2004

நன்றாக இருக்கிறது கவிதை தொடர்ந்து எழுதுங்கோ அக்கா.... <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->