Yarl Forum
விருமாண்டிக்கு விருது - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8)
+--- Forum: சினிமா (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=39)
+--- Thread: விருமாண்டிக்கு விருது (/showthread.php?tid=6887)



விருமாண்டிக்கு விருத - AJeevan - 07-23-2004

<b>விருமாண்டிக்கு விருது </b>
-உதயா

<img src='http://sifyimg.speedera.net/sify.com/cmsimages/Entertainment/Movies/Tamil/13528388_kamal_sandiyar120.jpg' border='0' alt='user posted image'>
வெற்றிநடைபோட்ட விருமாண்டி இப்போது விருது வாங்கி வீரநடை போடுகிறார்.

கொரியாவில் நடைபெறும் முதல் "ஐரோப்பியன் ஃபெடரேஷன் ஆஃப் ஃபன்டாஸ்டிக் ஃபிýம் ஃபெஸ்டிவல்' படவிழாவில் "சிறந்த ஆசிய படம் 2004' என்ற விருதிற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது விருமாண்டி. ஒரே படத்தில் சமூகம், காதல், நகைச்சுவை, ஆக்ஷன் உட்பட சகல கலை அம்சங்களும் சமவிகிதத்தில் கலந்த சரியான படம் என்ற பாராட்டையும் பெற்றிருக்கிறது.

இதைவிட கொரியா விழாவில் இன்னொரு ஆச்சரியம் , இப்படத்தை எழுதி இயக்கி, நாயகனாகவும் நடித்தவர் கமல் ஒருவரே என்பதை அறிந்து கமலை உச்சிமோந்து மெச்சிக்கொண்டிருக்கின்றனர் விருதுக்குழுவினர். இந்த சந்தோஷத்தை கொரியாவில் இருந்து கமல்ஹாசன் தொலைபேசி மூலம் உடனடியாக தெரிவித்தது கூடுதல் சந்தோஷம்.

அப்போ... உலக விருது உலகநாயகனுக்கு தொட்டுவிடும் தூரம்தான்!

Thanks: http://tamil.sify.com/movies/fullstory.php?id=13528389

<span style='font-size:25pt;line-height:100%'>வாழ்த்துக்கள் கமல்.</span>


- kuruvikal - 07-23-2004

உண்மைக் கலைஞன்
உழைப்பது என்றும்
வீண் போனதில்லை...!
வாழ்க....
மேலும் வளர்க்க
உங்கள் கலைப்பணி...!!

கமலுக்கு கலாரசிகர்களா எமது மனமுவந்த வாழ்த்துக்களை உரித்தாக்கிக் கொள்கின்றோம்...!

<img src='http://shop.indiainfo.com/stores/Ferns/a208_775.jpg' border='0' alt='user posted image'>


- AJeevan - 07-23-2004

<span style='font-size:21pt;line-height:100%'> <b>வெல்கம் டாக்டர் கமல்! </b>

எம்.பி. உதயசூரியன்

\"டாக்டர் கமல்ஹாசன் வாழ்க!' இதுவரை ரசிகர்கள் போட்ட இந்த வாழ்த்து கோஷம் இப்போது உண்மையாகிவிட்டது.

அரிதாரம் பூசும் நடிகர்களுக்கிடையே நிஜமாகவே கமல் ஒரு அவதாரம். கனவுத் தொழிற்சாலையின் நிகரற்ற கலைஞன். இன்னும் இளமை ஊஞ்சலாடும் இவர் ஒரு ஆச்சரிய மனிதர். நடிகர் என்ற வசீகர வெளிச்சத்திற்கு அப்பாற்பட்டு படைப்பாளி, டெக்னீஷியன், மனிதநேயர், சமூக விமர்சகர் என்கிற பல ஒளிவட்டங்கள் கமலுக்கு உண்டு.

\"நடிப்புப் பல்கலைக்கழகமான' கமல்ஹாசனின் 44 ஆண்டுகள் கலைச்சேவையை பாராட்டி டாக்டர் பட்டத்தை வழங்குகிறது சத்யபாமா நிகர்நிலை பல்கலைக்கழகம்.

\"வசூல்ராஜா எம்.பி.பி.எஸ்.' கேஸட் வெளியீட்டு விழா மேடையில் கமலுக்கு இந்த கெளரவத்தை வழங்குவதாக அறிவித்தார் சத்யபாமா நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் வேந்தரான ஜேப்பியார்.

\"வசூல்ராஜா' படத்திற்கு டாக்டர்களால் எதிர்ப்பு கிளம்பியிருக்கிற இந்த சமயத்தில் கமலுக்கு டாக்டர் பட்டம் சூட்டப்படுவது சுவாரஸ்யமான விஷயம்தான்.

இதுவரை கமலுக்கு டாக்டர் பட்டம் அளிப்பதற்காக பல பல்கலைக்கழகங்கள் விரும்பியபோதெல்லாம் கமல் அதை விரும்பவில்லை. \"வசூல்ராஜா' விழா மேடையில்... அதற்கான அத்தாட்சி கடிதங்களை பார்த்ததாக இயக்குநர் சரண் சாட்சி சொன்னார்.

\"அப்போது மறுத்தீர்கள். இப்போது தந்தால் ஏற்றுக்கொள்ளுங்கள்' என்று கவிப்பேரரசு அன்புக் கட்டளையிட்டார்.

\"சொல்லி வைத்தால் போல' அடுத்த சில நொடிகளில் அந்த மேஜிக் நடந்தது.

\"இதோ ஒரு இனிய அதிர்ச்சி' என்று அன்பு அறிவிப்பாளர் அப்துல் ஹமீது சினர்க்க... உற்சாகமாக மேடையேறிய ஜேப்பியார் அதிகாரபூர்வமாக கமலுக்கு டாக்டர் பட்டம் வழங்குவதாக அறிவித்தார்.

உடனே எழுந்த கைதட்டல்களும், வாழ்த்தொலிகளும் சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா அரங்கையே அதிரவைத்தது.
இந்த திடீர் சந்தோஷத்தின் தாக்கம் கமலின் பேச்சில் அப்பட்டமாகத் தெரிந்தது....

\"\"இந்த டாக்டர் பட்டத்தை வழங்கிய ஜேப்பியாருக்கு நன்றி சொல்வது என் கடமை. அதே சமயம் இப்படிச் செய்ததற்காக அவரை கோபித்துக் கொள்வது என் தனிப்பட்ட உரிமை. இந்த கெளரவத்தை என் ரசிகர்களுக்கு காணிக்கையாக்குகிறேன். ஏனெனில் அவர்கள் என் வழித்தோழர்கள். ஏன் இப்படி சொல்கிறேன் என்றால்... ஒரு தலைவனாக அவர்களுக்கு முன்னால் செல்ல எனக்கு துணிவு இல்லை. அதேசமயம் அவர்களை முன்நடத்தி அவர்களின் பின்னால் செல்கிற அளவுக்கு எனக்கு பணிவும் இல்லை. அவர்களும் நானும் சமமாக நடப்பதால்தான் என்னை வழித்தோழன் என்று சொல்கிறேன்.

இந்த டாக்டர் பட்டம் கிடைத்து விட்டதால் தலையையும் நெஞ்சையும் நிமிர்த்துக்கொள்ள வேண்டாம். ஏனெனில் இந்த பட்டம் நமக்கு ஒரு சுமை. பெரிய பொறுப்பு. இதை தக்க வைத்துக் கொள்வதுதான் முக்கியம்.''

இப்படிப் பேசி நெகிழ்ந்தார் கமல்.

மாதா, பிதா, குரு, சினிமா இதுதான் கமல்ஹாசனின் வேதம். அல்லும் பகலும் உள்ளும் புறமும் சினிமாவையே நேசிக்கிற, சுவாசிக்கிற இந்த கலைஞானிக்கு வழங்கப்படுகிற டாக்டர் பட்டம்... தமிழ் சினிமாவையே கெüரவிப்பதற்கு சமம்.

கலைக்காகவே தன்னை அர்ப்பணித்துக் கொண்ட இந்த கலைஞானியின் தலையை அலங்கரிக்க இன்னும் எத்தனை எத்தனை மகுடங்களும், விருதுகளும் காத்திருக்கிறதோ?</span>
http://tamil.sify.com/movies/fullstory.php?id=13522473


- AJeevan - 07-23-2004

<img src='http://sifyimg.speedera.net/sify.com/cmsimages/Entertainment/Movies/Tamil/13522472_kamal_dr120.jpg' border='0' alt='user posted image'>
கமலுக்கு வாழ்த்து சொல்லக் கூடிய அருகதை எனக்கில்லை.
இருப்பினும் கலைக்காகவே வாழும் ஒரு மனிதனுக்கு கிடைக்கும் விருதுகளைப் பார்த்து மகிழ்ச்சியோடு ,
கமலின் வார்த்தைகளில் சொல்வதானால்
"வழித்தோழனாக அவரோடு பயணிக்கும் போது......"
அவருக்கு தூவப்படும் மலர்கள் எம் மீதும் வீசப்படுகிறது.

அப்போது ஒரு தமிழனாக எனக்குள் ஏற்படும் உணர்வுகளால்,

[b][size=15] வாழ்த்துகள்,
தொடரட்டும் உன் பயணம்........

என்று சொல்வதால் என் இதயமும் மகிழ்கிறது.


- kuruvikal - 07-23-2004

ஐரோப்பிய விழா: விருமாண்டிக்கு விருது

வட கொரியாவில் நடைபெறும் ஐரோப்பிய படவிழாவில் கமல்ஹாசனின் 'விருமாண்டி' சிறந்த படமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.

கம்யூனிஸ ஆட்சியில் இருக்கும் வட கொரியாவில் நடைபெறும் ஐரோப்பிய படவிழாவில் கலந்து கொள்வதற்காக கடந்த வாரம் கமல் அங்கு சென்றார். பெரும்பாலும் வெளிநாட்டு பட விழாக்களில் விருதுகள் எல்லாம் விழா தினத்தன்றுதான் அறிவிக்கப்படும்.

விழாவில் 'விருமாண்டி' படம் திரையிடப்பட்டது. விழா தொடர்ந்து நடந்து கொண்டிருந்தபோது அந்த இனிய அறிவிப்பு வெளியிடப்பட்டது. விழாவில் திரையிடப்பட்ட படங்களில் சிறந்த படமாக 'விருமாண்டி' தேர்வு செய்யப்பட்டது.

கதை, திரைக்கதை, வசனம், இயக்கம், தயாரிப்பு, நடிப்பு என பல துறைகளில் கமல் ஒருவரே கலக்கியிருப்பதை விழாவுக்கு வந்திருந்த அனைவரும் சிலாகித்துப் பாராட்டியிருக்கிறார்கள்.

விருது வாங்கிய குஷியோடு கமல் சுவிட்ஸர்லாந்து செல்கிறார். அங்கு 'வசூல்ராஜா எம்.பி.பி.எஸ்' படத்துக்காக கமலுடன் டூயட் பாட ஸ்னேகா உள்ளிட்ட குழுவினர் ஏற்கனவே போய் சேர்ந்துவிட்டனர்.

thatstamil.com


- vasisutha - 07-23-2004

வாழ்த்துக்கள் கமல்.


- AJeevan - 07-24-2004

:?: உங்களைவிட புத்திசாலிகளைச் சந்திக்கும்போது உங்கள் மனதில் (உண்மையாக) என்ன தோன்றும்?

Idea இவரிடமிருந்து புதுசாக என்ன தெரிந்துகொள்ளலாம் என்கிற ஆர்வம்!

Thanks: Mathan