![]() |
|
சினிமா ஒரு சாக்கடை உண்மையா....??! - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8) +--- Forum: சினிமா (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=39) +--- Thread: சினிமா ஒரு சாக்கடை உண்மையா....??! (/showthread.php?tid=6890) |
சினிமா ஒரு சாக்கடை உண் - kuruvikal - 07-22-2004 <img src='http://www.thatstamil.com/images23/cinema/cheran250.jpg' border='0' alt='user posted image'> (இவர்தான் சேரன் ஓட்டோகிராப் திரைப்பட நாயகன்.. இயக்குனர்...!) சேரன், தங்கர்பச்சான் மீது பெண் பாலியல் வல்லுறவுப் புகார்...! தன்னை இயக்குநர்கள் சேரன் மற்றும் தங்கர்பச்சான் ஆகியோர் மானபங்கப்படுத்தியதாக, ஒரு இளம்பெண் பரபரப்பான புகார் தெரிவித்துள்ளார். உறையூர் கீரைக்கொல்லை தெருவை சேர்ந்த நவாப்ஜான், ஜெகராபேகம் தம்பதியின் மகளான நிஷா என்ற ரஹமத்துனிஷா(20), உறையூர் போலீசில் ஒரு பரபரப்பு புகார் கொடுத்தார். தந்தையால் கைவிடப்பட்ட தனது தாயும், சகோதரர் சையது அமீரும் சேர்ந்து தன்னை விபச்சாரத்தில் ஈடுபடுத்துவதாகவும், மறுத்தால் தன்னை அடித்து துன்புறுத்துவதாகவும் கூறியிருந்தார். இந்தப் புகாரை போலீசார் முதலில் வாங்க மறுக்கவே, ஜனநாயக மாதர் சங்கத்தின் உதவியை நிஷா நாடினார். இதையடுத்து அந்த அமைப்பின் பத்திரிக்கைகளுக்கு செய்தி தந்ததோடு, வழக்கைப் பதிவு செய்ய போலீசாருக்கும் நெருக்குதல் கொடுத்தனர். Thatstamil.com - Mathivathanan - 07-22-2004 ஏன்ராப்பா குருவி.. சினிமாவிலை அரைகுறை உடுப்போடைவாற சினிமாக்காரியளின்ரை படங்கள் கொண்டுவந்துபோட்டு மலர்.. பூ.. வாசம்.. எண்டு வருணனை செய்யேக்கை என்ன வாடையடிச்சது.. அவளவை உங்கடை மூளைக்கு ஏதாவது அடிச்சுவிட்டவளவையே..? - Mathivathanan - 07-22-2004 குருவியள்.. பாதியைபோட்டிருக்கிறியள்.. ஏனிந்த ஒளிவு மறைவு.. முழுவதையும் போடுறன் தீர்மானிக்க வேண்டியவை தீர்மானிக்கட்டும்.. <span style='color:brown'>சேரன், தங்கர்பச்சான் மீது பெண் கற்பழிப்பு புகார் [size=14]தன்னை இயக்குநர்கள் சேரன் மற்றும் தங்கர்பச்சான் ஆகியோர் மானபங்கப்படுத்தியதாக, ஒரு இளம்பெண் பரபரப்பான புகார் தெரிவித்துள்ளார். உறையூர் கீரைக்கொல்லை தெருவை சேர்ந்த நவாப்ஜான், ஜெகராபேகம் தம்பதியின் மகளான நிஷா என்ற ரஹமத்துனிஷா(20), உறையூர் போலீசில் ஒரு பரபரப்பு புகார் கொடுத்தார். தந்தையால் கைவிடப்பட்ட தனது தாயும், சகோதரர் சையது அமீரும் சேர்ந்து தன்னை விபச்சாரத்தில் ஈடுபடுத்துவதாகவும், மறுத்தால் தன்னை அடித்து துன்புறுத்துவதாகவும் கூறியிருந்தார். இந்தப் புகாரை போலீசார் முதலில் வாங்க மறுக்கவே, ஜனநாயக மாதர் சங்கத்தின் உதவியை நிஷா நாடினார். இதையடுத்து அந்த அமைப்பின் பத்திரிக்கைகளுக்கு செய்தி தந்ததோடு, வழக்கைப் பதிவு செய்ய போலீசாருக்கும் நெருக்குதல் கொடுத்தனர். இதையடுத்து மகளை விபச்சாரத்தில் ஈடுபடுத்தியதாக தாய் மற்றும் சகோதரன் ஆகியோர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். அடுத்து அவர் சொன்ன குற்றச்சாட்டுதான் போலீஸாரை அதிரவைத்தது. இயக்குனர் சேரன் திருச்சி வந்தபோது அவர் தங்கியிருந்த ஹோட்டல் அறையில் என்னை மயக்க மருந்து கொடுத்து கற்பழித்தார். மறுநாள் காலை மயக்கம் கலைந்து அழுதபோது, ரூ.25,000 கொடுத்து என்னை வெளியே துரத்தி விட்டார். அதேபோல் இயக்குநர் தங்கர்பச்சானும் என்னுடன் வலுக்கட்டாயமாக உடலுறவு கொண்டார் என்று கூறி அதிர்ச்சி அலையை ஏற்படுத்தினார். சினிமாவில் நடிக்க சான்ஸ் கிடைக்கும் என்று சொல்லி, கட்டாயப்படுத்தி இவர்களிடம் தனது தாயாரே தன்னைக் கொண்டு போய் விட்டார் என்றும் கூறியுள்ளார் நிஷா. மேலும் அதைத் தொடர்ந்து தான் தன்னை முழு நேர விபச்சாரத்தில் தனது தாயார் தள்ளியதாகவும் கூறியுள்ளார். இந்தக் கற்பழிப்புப் புகார் கோடம்பாக்கத்தில் வேகமாகப் பரவ, சேரன் மற்றும் தங்கர்பச்சான் வீடுகளில் தொலைபேசி விசாரிப்புகள் ஓயாமல் ஒலிக்கிறது. புகார் குறித்து சேரனிடம் கேட்டபோது, சினிமாவில் கஷ்டப்பட்டு முன்னேறியவன் நான். என் மீது இப்படி ஒரு அசிங்கமான குற்றச்சாட்டு கூறப்பட்டுள்ளதை நினைத்து மனம் கூசுகிறது. பணம் பறிக்கும் நோக்கத்தோடு ஒரு கும்பல் மிகப பெரிய சதி செய்து இப்படி ஒரு புகார் தெரிவித்துள்ளது. ஆட்டோகிராஃப் பட விழாவுக்காக நான் திருச்சி போனது உண்மைதான். ஆனால் அந்தப் பெண் சொன்னபடி எந்த சம்பவமும் நடைபெறவில்லை. அந்தப் பெண் கறுப்பா சிவப்பா என்பதுகூட எனக்குத் தெரியாது. அந்தப் பெண் கூறியதை அப்படியே நம்பி போலீஸ் வழக்குப் பதிவு செய்துள்ளது. வழக்கு விசாரணைக்குப் பின் நான் நிரபராதி என்பது நிரூபிக்கப்பட்டால் இதனால் எனக்கு ஏற்பட்ட இழப்புகளை எப்படி ஈடுசெய்வார்கள்? இந்த விஷயத்தில் மாதர் சங்கமும் உண்மை தெரியாமல் நியாயம் கேட்கப் புறப்பட்டிருப்பதாகக் கூறுவது வேதனையாக இருக்கிறது. என் மீதான புகாரைக் கேள்விப்பட்ட பலர் எனக்காக ஒன்று திரண்டு போராடத் தயாராக இருக்கிறார்கள். அவர்களை நான் சமாதானப்படுத்திக் கொண்டிருக்கிறேன். இதை சட்டரீதியாக சந்திக்கப் போகிறேன் என்றார் சேரன் குமுறலுடன். இது தொடர்பாக தங்கர்பச்சான் கூறுகையில், என்னை யாரும் குற்றம் செல்ல முடியாதபடி ஒரு செருக்குள்ள மனிதனாக நான் வாழ்ந்து வருகிறேன். என் வெற்றியின் மீது பொறாமை கொண்ட சிலர் என் மீது சேற்றை வாரி இறைக்க வேறு விஷயம் கிடைக்காமல், இப்படி ஒரு பெண்ணை வைத்து குற்றம் சாட்டியிருக்கிறார்கள். நான் ஒரு தமிழினப் போராளி. என்னை எதிர்ப்பவர்கள் அனைவரும் தமிழின துரோகிகள். அவர்கள் விரைவில் அடையாளம் காட்ட தமிழர்களும் தமிழ் அமைப்புகளும் எனக்கு உதவியாக இருந்து இந்தப் புகாரைத் துடைத்து எறிவார்கள் என்றார். நிஷா கூறிய புகாரின் அடிப்படையில் முதல்கட்ட நடவடிக்கையாக அவரது தாயார் ஜெகராபேகம், சகோதரர் சையது அமீர் மற்றும் அவரைக் கட்டாயமாக விபச்சாரத்தில் ஈடுபடுத்திய குமரகுரு, அவரது மனைவி அமுதா, துரை, முஜூபூர் ரஹ்மான், பழனிச்சாமி ஆகியோரை போலீஸார் கைது செய்தனர். இருப்பினும் போலீஸாருக்குப் நிஷா மீதே சந்தேகம் எழுந்துள்ளது. இதுகுறித்து ஒரு போலீஸ் அதிகாரி கூறியதாவது: கடந்த ஒரு வருடமாக நிஷா விபசாரத்தில் ஈடுபட்டது வந்தததாக எங்களுக்குத் தகவல் வந்துள்ளது. ஆனால் இரண்டு மாதங்களுக்கு முன்புதான் முதல் தடவையா சேரன் என்னைக் கற்பழித்தார் என்று அவர் கூறுகிறார். இதை நம்பமுடியவில்லை. விசாரணையில் நிஷா கூறியது உண்மை என்று தெரிய வந்தால் சேரனும் தங்கர்பச்சானும் கைது செய்யப்படுவார்கள். இல்லையென்றால் நிஷா மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். தங்களது படங்களின் மூலம் சமூகப் பொறுப்புள்ள இயக்குநர்களாகத் தங்களை அடையாளப்படுத்திக் கொண்டிருக்கும் சேரனும், தங்கர்பச்சானும் இத்தகைய கற்பழிப்புக் குற்றச்சாட்டில் சிக்கியிருப்பது கோடம்பக்கத்தில் பலத்த அதிர்ச்சியைக் கிளப்பியுள்ளது. </span> http://www.thatstamil.com/specials/cinema/...ews/cheran.html - kirubans - 07-22-2004 சினிமா சாக்கடை என்று அதற்குள்ளேயே விழுந்து கிடப்பவர்கள் சொல்கிறார்கள். அங்கு போய் எப்படி நல்லவர்களாக இருக்க முடியும்? உத்தமர்களாக இருக்கிறோம் என்பவர்கள் பொய்யர்கள். - tamilini - 07-22-2004 எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு......! பெறுத்திருங்கள் காலம் பதில் சொல்லும்.....!
- AJeevan - 07-22-2004 சினிமா மட்டுமல்ல எந்த ஒரு இடமும் சாக்கடையாவதோ மோட்சமாவதோ அங்கு இருப்பவர்களைப் பொறுத்தது. நாம் யாரையும் ஒரேயடியாக நம்பி விட முடியாது.உண்மையில் அப்படி நடந்திருந்தால்; அது வெளிவந்தே தீரும். இருப்பினும் நிஷா இவ்வளவு காலத்துக்குப் பின்னர் இது பற்றி புகார் செய்ததில் இருந்து யாரோ பின்னணியில் இருக்கிறார்கள் போல் தெரிகிறது. சேரனும்-தங்கரும் தமிழக சாதி முறையால் பார்க்கப்படுகிறார்கள் என்றே தோன்றுகிறது. எதற்கும் விடை கிடைக்கும்........... - kuruvikal - 07-22-2004 Mathivathanan Wrote:ஏன்ராப்பா குருவி.. சினிமாவிலை அரைகுறை உடுப்போடைவாற சினிமாக்காரியளின்ரை படங்கள் கொண்டுவந்துபோட்டு மலர்.. பூ.. வாசம்.. எண்டு வருணனை செய்யேக்கை என்ன வாடையடிச்சது.. அவளவை உங்கடை மூளைக்கு ஏதாவது அடிச்சுவிட்டவளவையே..? <img src='http://www.pdn.ac.lk/arts/his/sigiri/image/Sigiricopul.jpg' border='0' alt='user posted image'> சிகிரியா குகை ஓவியங்கள் (Image from http://www.pdn.ac.lk/arts/his/sigiri/sigirisite.html ... Official website of University of Peradeniya..Kandy Srilanka.) <img src='http://kuruvikal.yarl.net/archives/sridevi1-450.jpg' border='0' alt='user posted image'> (இதுதான் குருவிகள் போட்ட படம்... இதற்காகத்தான் பொ... பொறுக்கிப் பட்டம் தந்து இக்களத்தில் சிலர் "கெளரவம்" வழங்கினர்...அதுவும் பெண்கள்...!) இதை எதிர்பார்த்துதான் அங்க படம் போட்டுக் கவிதையும் எழுதினது... உந்தப்படத்தால குருவிகள் வேண்டாத பொல்லாப்பெல்லாம் கேக்குதுகள்... சில பேர் கற்பனையில மிதந்து கொண்டு குருவிகளைப் பற்றி ஒரு தொடர்கதையே எழுதினம்...முழுத் தூசணத்தில... அதுபோக... மங்கை நீ மலராமோ.... கவிதை எழுதின படம் ஒன்றும் அரைகுறை ஆடைப்படம் இல்ல.... அது பண்டைய தமிழ் நாகரிக உடையைப் பிரதிபலிக்கும் உடை அலங்காரத்துடன் கூடிய படம்.... இதற்கான விளக்கம் முன்னரே இக்களத்தில் அளிக்கப்பட்டுள்ளது....அதில் கண்ணுக்கு இனிமை சேர்க்கும் விடயம் எதுவும் இல்லை.... சிகிரியா குகை ஓவியங்கள் பற்றியும் தான் படித்தோம்..அப்ப அவை என்ன கண்ணுக்கு இனிமை சேர்ப்பனவோ...அதுபோக எங்களுக்கு அப்படியான கறுமங்களை எல்லாம் பார்க்க வேண்டிய அவசியம்.. இல்லை... நாங்கள் பள்ளியில் படிக்கும் காலத்திலேயே .....மனிதனையே ஆராய்ந்து பார்த்துத்தான் இருக்கிறம்.... :wink: பாக்காதவைக்கு அதில கண்ணுக்கு இனிமையா ஏதோ இருக்கோ என்னவோ.....! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> ஆனா சினிமாவில இப்படி அடிப்படை மனித சமூக ஒழுக்கத்துக்கு எதிரான செயல்கள் நடக்குமா... அப்படியான செயல்களில் ஈடுபடும் நடிகர் நடிகைகளை படங்களில் பார்க்க கொஞ்சம் அருவருப்பா இருக்குது...அதுதான் கேட்டோம்....! வேறொன்றுமில்லை....! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- kuruvikal - 07-23-2004 Mathivathanan Wrote:குருவியள்.. பாதியைபோட்டிருக்கிறியள்.. ஏனிந்த ஒளிவு மறைவு.. முழுவதையும் போடுறன் தீர்மானிக்க வேண்டியவை தீர்மானிக்கட்டும்.. குறித்த செய்தியின் மீதிப்பகுதியில் பாவிக்கப்படும் சில சொற்பதங்கள் காரணமாக அவை இங்கு இடப்படுவது தவிர்க்கப்பட்டது... உதாரணமாக அங்கு பாவிக்கப்படும் கற்பழிப்பு எனும் பதம் தவறானது... கற்பு என்பது ஒரு நெறி அது ஆணுக்கும் பெண்ணிற்கும் பொதுவானது... எவரும் ஒரு நெறியை அழிக்க முடியாது....! - Mathivathanan - 07-23-2004 ம்.. ம்.. அந்தக்காலத்து அந்தப்புரத்து படமெல்லாம் பொறுக்கி கொண்டுவந்து போட்டு விலாசம் காட்டுறியள்.. சிகிரியா அந்தக்காலத்து அந்தப்புரம் என்றதுதான் வரவாறு.. பொறுக்கியள் அந்தக்காலத்திலையும் இருந்திருக்கிதுகள்.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- kuruvikal - 07-23-2004 Mathivathanan Wrote:ம்.. ம்.. அந்தக்காலத்து அந்தப்புரத்து படமெல்லாம் பொறுக்கி கொண்டுவந்து போட்டு விலாசம் காட்டுறியள்.. அந்தப்புறமோ கொல்லைப்புறமோ..பாடப்புத்தகத்தில இருக்குது...பல்கலைக்கழகத்தில் ஆய்வுப்பட்டத்துக்குப் படிக்கிறாங்கள்...அப்ப அவங்கள் எல்லாம் பொறுக்கி என்றால் எங்களுக்கும் பொறுக்கி என்று கேக்கிறதில விலாசம் இருக்கத்தானே செய்யும்.... பொ.... பொறுக்கி என்பது இப்ப பல்கலைக்கழக பட்டம் மாதிரி எண்ட மாதிரியாயிட்டுது.....! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- Mathivathanan - 07-23-2004 வரலாறு படிக்கவேண்டியவை படிக்கத்தான்வேணும்.. அதைமாதிரி டாக்குத்தர்மார் மற்ற மற்றதுகளும் படிக்கத்தான் வேணும்.. பாடப்புத்தகத்திலை இருக்கிறதெண்டால் பலதும் பாடப்புத்தகமா இருக்கு.. பகுத்தறிவுள்ளவன் எண்டு ஒரு தராதரம் உள்ளவங்களைத்தான் அதுகள் படிக்க அனுப்புறதும் அதுக்குத்தான்.. உந்தப் படங்கள்.. நீங்கள் போட்ட சினிமாப்படங்கள் அதுகளை கேலிக்கூத்தா ஆக்க நம்ம புது சந்ததி கொண்டுவந்து புகுத்திறது.. தீமைதான் மற்ற பக்கத்தாலை எய்ட்ஸ் எண்டு வளருதே.. கானேல்லையோ..? - aathipan - 07-23-2004 சண்டை சமாதானம் சார்மிளா பெறுமாதம் - kuruvikal - 07-23-2004 Mathivathanan Wrote:வரலாறு படிக்கவேண்டியவை படிக்கத்தான்வேணும்.. அதைமாதிரி டாக்குத்தர்மார் மற்ற மற்றதுகளும் படிக்கத்தான் வேணும்.. உந்தப் படம் பாத்து எயிட்ஸ் வாறதெண்டா... லண்டன் வீதியால போற கன பேருக்கு எயிட்ஸ் வந்திருக்க வேணுமே....நீங்கள் உட்பட....! பகுத்தறிவுள்ளவன் பகுத்தறிவோடதான் பார்ப்பான்....சாதாரண மனிதனுக்கு பகுத்தறிவு இருக்கெண்டுதான் இங்க அந்தப்படம் போட்டது... பகுத்தறிவு இல்லாத கண்ணுக்கு இன்பம் சேர்க்கிறதா எண்ணுற பாமரங்களுக்கு நாங்கள் என்ன செய்ய முடியும்... கண்ணைக்கட்டி காட்டில விட வேண்டியதுதான்....! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- kuruvikal - 07-23-2004 [quote=aathipan]சண்டை சமாதானம் சார்மிளா பெறுமாதம் அதுக்கு ஆஸ்பத்திரியில சேர்க்க வேண்டியதுதானே... ஏன் களத்தில நிக்கிறியள்... கொண்டோடுங்கோ...ஆஸ்பத்திரிக்கு...! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- vasisutha - 07-23-2004 Quote:ம்.. ம்.. அந்தக்காலத்து அந்தப்புரத்து படமெல்லாம் பொறுக்கி கொண்டுவந்து போட்டு விலாசம் காட்டுறியள்..<!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
|