| Welcome, Guest |
You have to register before you can post on our site.
|
| Forum Statistics |
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244
Full Statistics
|
| Online Users |
There are currently 566 online users. » 0 Member(s) | 564 Guest(s) Bing, Google
|
| Latest Threads |
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,320
|
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,233
|
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,608
|
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,298
|
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,643
|
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,076
|
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,467
|
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,504
|
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,040
|
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,239
|
|
|
| கோபிகா விபத்தில் சிக்கினார்...! |
|
Posted by: kuruvikal - 12-19-2004, 01:07 PM - Forum: சினிமா
- Replies (24)
|
 |
<img src='http://thatstamil.com/images25/cinema/gopika-mother-ather550.jpg' border='0' alt='user posted image'>
பெற்றோருடன் கோபிகா..!
தொட்டி ஜெயா படப்பிடிப்பில் ரயில் முன் விழுவது போன்ற காட்சியில் நடிகை கோபிகா படுகாயத்துடன் உயிர் தப்பியிருக்கிறார்.
கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்க துரை இயக்கும் இந்தப் படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடித்து வருகிறார் கோபிகா.
கடந்த சில நாட்களாக சென்னை மேற்கு மாம்பலத்தில் உள்ள ரங்கநாதன் மேம்பாலத்தில் இந்தப் படத்தின் சூட்டிங் நடந்து வருகிறது. இரவு நேரங்களில் நடந்து வரும் இந்தப் படப்பிடிப்பில் ரயிலை மையமாக வைத்து காட்சிகள் எடுக்கப்பட்டன.
ஒரு தண்டவாளத்தில் ரயில் வரும்போது அருகில் உள்ள இன்னொரு தண்டவாளத்தில் எதிர் திசையில் கோபிகா ஓட வேண்டும். இது போன்ற காட்சி நேற்று முன் தினம் இரவு எடுக்கப்பட்டுக் கொண்டிருந்தது.
ரயில் வந்து கொண்டிருந்தபோது எதிரே அடுத்த தண்டவாளத்தில் கோபிகா ஓட அதை ஒளிப்பதிவாளர் ஆர்.டி.ராஜசேகரன் படம் பிடித்துக் கொண்டிருந்தார். சூட்டிங்கிற்காக அந்த ரயில் வாடகைக்கு எடுக்கப்பட்டிருந்தது.
ஓட ஆரம்பித்த கோபிகா திடீரென தண்டவாளத்தில் தடுக்கி விழுந்தார். ரயில் வரும் பாதையில் விழுந்து விடாமல் சமாளித்துக் கொண்டு மறு பக்கத்தில் விழுந்தார் கோபிகா. கொஞ்சம் தடுமாறி ரயில் வந்த பக்கத்தில் விழுந்திருந்தால் பெரும் அசம்பாவிதம் நடந்திருக்கும்.
கீழே விழுந்த கோபிகாவின் காலில் வெட்டு ஏற்பட்ட ரத்தம் வழிந்தது. இதையடுத்து அவர் அப்பல்லோ மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். சம்பவம் குறித்து அறிந்து கோபிகாவின் தந்தை ஆண்டோ பிரான்சிசும் தாயார் டெய்சியும் அலறியடித்துக் கொண்டு ஓடி வந்தனர்.
ஒரு நாள் அப்பல்லோவிலேயே சிகிச்சையுடன் ஓய்வெடுத்த கோபிகா இன்று மீண்டும் காரைப்பாக்கம் பகுதியில் நடந்த தொட்டி ஜெயா சூட்டிங்கில் பங்கேற்கச் சென்றார்.
காயம் சிறியது தான் என்றாலும் ரயில் சக்கரத்தில் சிக்கயிருந்ததால் கோபிகா பெரும் அதிர்ச்சியடைந்துவிட்டதாக சூட்டிங் ஸ்பாட்டில் இருந்தவர்கள் கூறுகின்றனர்.
சூட்டிங் ஸ்பாட்டில் நடக்கவிருந்த மிகப் பெரிய அசம்பாவித சம்பவம் அதிர்ஷ்டவசமாக தவிர்க்கப்பட்டுள்ளதாக கோலிவுட்டில் கூறுகிறார்கள்.
தட்ஸ்தமிழ்.கொம்
|
|
|
| நடிகர் ஜெமினிகணேசன் உடல்நிலை |
|
Posted by: aathipan - 12-19-2004, 10:37 AM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (3)
|
 |
<img src='http://www.hindu.com/thehindu/fr/2003/08/15/images/2003081501500303.jpg' border='0' alt='user posted image'>
பழம்பெரும் நடிகர் ஜெமினி கணேசன் (வயது 83). உடல் நிலை பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு கடந்த சில நாட்களாக டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். டயாலிசிஸ் முறையில் ரத்தம் செலுத்தப்பட்டது.
ஜெமினிகணேசன் ரத்தசோகை நோயினால் பாதிக்கப்பட்டு இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்து உள்ளனர்.
நேற்று ஜெமினிகணேசனின் உடல் நிலை மிகவும் மோசம் அடைந்தது. அவருக்கு அதிக அளவில் `ஓ' பாசிடிவ் ரத்தம் தேவைப்பட்டது. அதையும் சேகரித்து ஜெமினிக்கு செலுத்தப்பட்டு வருகிறது.
உடல் நில கவலைக்கிடமாக இருப்பதால் தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து டாக்டர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
|
|
|
| தமிழ் யுனிகோட் |
|
Posted by: hari - 12-19-2004, 09:34 AM - Forum: கணினி
- Replies (17)
|
 |
<span style='font-size:25pt;line-height:100%'>தமிழ் யூனிகோட் எழுத்துருகொண்டு இணைப்பக்கங்களை பார்வையிடுவது தவிர வேறு என்ன செய்ய முடியும்?</span>
<img src='http://nila.brinkster.net/uni_sample/Image1_small.jpg' border='0' alt='user posted image'>பெரிய படம்<img src='http://nila.brinkster.net/uni_sample/Image2_small.jpg' border='0' alt='user posted image'>பெரிய படம்
<img src='http://nila.brinkster.net/uni_sample/Image3_small.jpg' border='0' alt='user posted image'>பெரிய படம்<img src='http://nila.brinkster.net/uni_sample/Image4_small.jpg' border='0' alt='user posted image'>பெரிய படம்
<img src='http://nila.brinkster.net/uni_sample/Image5_small.jpg' border='0' alt='user posted image'>பெரிய படம்<img src='http://nila.brinkster.net/uni_sample/Image6_small.jpg' border='0' alt='user posted image'>பெரிய படம்
<img src='http://nila.brinkster.net/uni_sample/Image7_small.jpg' border='0' alt='user posted image'>பெரிய படம்<img src='http://nila.brinkster.net/uni_sample/Image8_small.jpg' border='0' alt='user posted image'>பெரிய படம்
<img src='http://nila.brinkster.net/uni_sample/Image9_small.jpg' border='0' alt='user posted image'>பெரிய படம்<img src='http://nila.brinkster.net/uni_sample/Image10_small.jpg' border='0' alt='user posted image'>பெரிய படம்
<img src='http://nila.brinkster.net/uni_sample/Image11_small.jpg' border='0' alt='user posted image'>பெரிய படம்
<img src='http://nila.brinkster.net/uni_sample/Image12_small.jpg' border='0' alt='user posted image'>பெரிய படம்
நன்றி எழில் நிலா.கொம்
|
|
|
| அடிப்படை செயற்கை உயிரி..?! |
|
Posted by: kuruvikal - 12-18-2004, 09:35 PM - Forum: விஞ்ஞானம் - தொழில்நுட்பம்
- Replies (6)
|
 |
<img src='http://newsimg.bbc.co.uk/media/images/40642000/jpg/_40642671_jell_pnas_203.jpg' border='0' alt='user posted image'>
பச்சை நிறப் புளொரொளிர்வைக் காட்டும் செயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட உயிரியற் புடகம்...!
சில உயிரிகளின் கூறுகளைக் கொண்டு ஒரு செயற்கை உயிரிக்கான உயிரின் அடிப்படையான எளிமையான கலத்தின் நிலைக்கு ஒத்த ஆனால் ஆரம்ப நிலை உயிரியல் தொழிற்பாட்டுப் புடகம் ஒன்றை அமெரிக்க விஞ்ஞானிகள் உருவாக்கி உள்ளனர்...!
இதன் மென்மையான வெளிப்புற கலச் சுவர் ஆக்கப்பட்டது முட்டை வெள்ளைக்கருவில் இருந்து பெறப்பட்ட கொழுப்புக் கொண்டு என்றும் கல உள்ளடக்கம் என்பது குடலில் வாழும் பற்றீரியாவான (bacteria) E. coli இருந்து பெறப்பட்டது (அதன் பிறப்புரிமையியல் கூறுகள் அகற்றப்ப்பட்ட பின் ) என்றும் டி என் ஏ தரவுகளை வாசிக்க ( DNA code translation) உதவும் நொதியம் வைரசில் இருந்து பெறப்பட்டது என்றும் கூறிய உள்ளனர் இந்த ஆய்வை மேற்கொண்ட ஆய்வாளர்கள்....!
இக்கூறுகள் கொண்டு ஆக்கப்பட்ட அந்த உயிரியற் தொழிற் புடகத்தினுள் (vesicle bioreactors) ஜெலிமீனின் (Jelly fish) குறித்த ஒரு இனத்தில் இருந்து பெறப்பட்ட புளரொளிர்வுக்கான புரத்தத்தை (fluorescent protein) உருவாக்கும் ஜீனையும் (gene) இன்னொரு வகை பற்றீரியாவான Staphylococcus aureus இல் இருந்து பெறப்பட்ட கலச்சுவரில் நுண்துளையிடும் ஜீனையும் புகுத்தி அவதானித்த போது அந்தப் புடகங்கள் புளொரொளிர்வுள்ள புரதங்களை உருவாக்குவனவாகவும், அவை வளர்க்கப்பட்ட வளர்ப்பூடகத்தில் இருந்து... கலச்சுவரில் உருவாக்கபட்ட துளைகள் ஊடாக போசனைக்கான இரசாயனக் கூறுகளைப் பரிமாறி பல நாட்கள் தொழிற்பட்டக் கூடியதாக இருந்ததாகவும் இவ்வாய்வு தொடர்பாக மேலும் கருத்துக்கள் பகரப்பட்டுள்ளன...!
ஆனால் இந்தப் புடகங்களுள் நடந்தவை சாதாரண நிலை உயிரியல் இரசாயனத் தாக்கங்கள் என்றும் இவை கலத்துக்கு வெளியேயான கலச்சாறுகளை கொண்டும் நடத்தப்படக் கூடியன என்றும் கூறியுள்ள அந்த ஆய்வாளர்கள்...இந்த ஆய்வு ஒரு உயிரியை தேவைக்கேற்ப மீள வடிவமைக்கக் கூடிய செயற்கை முறை உயிரியலின் (synthetic biology) அடிப்படை வெற்றி என்றும் கூறியுள்ளனர்...!
மேலதிக தகவல் இங்கே...
|
|
|
| testing |
|
Posted by: john - 12-18-2004, 07:50 AM - Forum: அறிமுகம்
- Replies (19)
|
 |
<span style='font-size:25pt;line-height:100%'>வணக்கம் நண்பர்ககளே உள்ளே வரலாமா?</span>
|
|
|
| பேசுகிறான், ஏசுபிரான்!-- தொ. சூசைமிக்கேல் |
|
Posted by: hari - 12-18-2004, 07:00 AM - Forum: கவிதை/பாடல்
- Replies (3)
|
 |
<span style='font-size:25pt;line-height:100%'> பேசுகிறான், ஏசுபிரான்!
<img src='http://webdeveloper.com/animations/holiday/christmas/gifs/candle_5.gif' border='0' alt='user posted image'><img src='http://www.bromike.com/xmas/mary/manger1.jpg' border='0' alt='user posted image'><img src='http://webdeveloper.com/animations/holiday/christmas/gifs/candle_5.gif' border='0' alt='user posted image'>
- தொ. சூசைமிக்கேல்(tsmina2000@yahoo.com)
[size=14]
ஊருலகம் துயில்கொள்ளும் ஓரிரவின் காரிருளில்
உத்தமியாம் மகிமைமிகு மரியணங்கின் மணிவயிற்றில்
பேருலகம் போற்றிடவே பிறப்பெடுத்த நாளிதனில்
பேசுகிறான் எம்பெருமான் ஏசுபிரான்! - ஒரு
பிள்ளையெனும் உருவில்அருள் வீசுகிறான்!
வானவர்கள் பண்மொழிய, வண்ணமுகில் பனிபொழிய,
வையமெலாம் வந்திருந்து வாஞ்சையுடன் துதிபுரிய,
தேனமுதச் செய்தியொடு செம்பவள வாய்திறந்து
தெய்வமகன் எம்பெருமான் பேசுகிறான் - சின்னஞ்
சிறுமழலை தீபஒளி வீசுகிறான்!
வாட்டுகின்ற குளிர்தன்னைத் தளிர்மேனி வரவேற்க,
வையகத்து மாந்தருக்கு வாட்டமிலா நெறிதன்னைக்
காட்டுகின்ற பெருந்தலைவன் கச்சிதமாய்ப் புல்லணையில்
கண்ணயர்ந்த வனப்பினிலும் காணுகிறான் - தன்றன்
கருணையினால் மானிடத்தைப் பேணுகிறான்!
திருமங்கை மடிமீது சீர்விளங்க எழுந்தருளி,
தெளிஞானப் பொன்வதனப் பூவிழியால் வரமருளி,
தருமங்கள் தழைப்பதற்கு அவதரித்த பால்மழலை
தரணிதனை அன்பாலே ஆளுகிறான் - தன்னைச்
சரணடைந்தோர் நெஞ்சினிலே வாழுகிறான்!
உள்ளமெனும் கொட்டிலுக்குள் தொட்டிலொன்றைக் கட்டிவைத்து,
உணர்வுகளால் அழகியதோர் புல்லணையும் புனைந்துவைத்து,
அள்ளியிரு கைகளிலே அண்ணல்தனை அணைத்தெடுத்து,
அரும்பண்ணால் தாலாட்ட வாரீரோ - அந்த
ஆராரோ சுகம்பெறுவார் யார்யாரோ?..
என்னவனே! மன்னவனே! எம்மைக்கும் முன்னவனே!
இறையவனின் மறையவனாய் எழுந்தருளும் நிறையவனே!
சின்னவன்யான் தொடுத்திருக்கும் செந்தமிழ்ப்பா மாலையிது:
திருப்பதத்தில் அர்ப்பணமாய் அமையட்டும் - உன்றன்
திருப்புகழே ஒலிக்கட்டும் திசையெட்டும்!!</span>
<img src='http://webdeveloper.com/animations/holiday/christmas/gifs/lights.gif' border='0' alt='user posted image'>
<img src='http://webdeveloper.com/animations/holiday/christmas/gifs/bells4.gif' border='0' alt='user posted image'><img src='http://webdeveloper.com/animations/holiday/christmas/gifs/merry_christmas_2.gif' border='0' alt='user posted image'><img src='http://webdeveloper.com/animations/holiday/christmas/gifs/bells1.gif' border='0' alt='user posted image'>
|
|
|
| இதுதான் உலகம் |
|
Posted by: aathipan - 12-18-2004, 05:57 AM - Forum: செய்திகள்: உலகம்
- Replies (8)
|
 |
நோபல் பரிசு பெற்82 வயது விஞ்ஞானி கல்லூரி மாணவியை மணக்கிறார்
பீஜிங், டிச. 18_
சீனாவைச் சேர்ந்த விஞ்ஞானி டாக்டர் சென் நிங் யாங். 82 வய தான இவர் இயற்பியல் துறையில் இன்னொரு விஞ்ஞானியுடன் கூட்டு சேர்ந்து ஆராய்ச்சி செய்து அதன் மூலம் சில கண்டுபிடிப்பு களை செய்தார். இதற்காக 1957_ம் ஆண்டு இந்த ஜோடிக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது.
சென் நிங் யாங்கின் மனைவி கடந்த ஆண்டு மரணம் அடைந் தார். இதைத் தொடர்ந்து
28 வயது வோங் பான் என்ற கல் லூரி மாணவியை அவர் மணந்து கொள்ள இருக்கிறார். யாங்கும் அவர் மனைவியும் வோங்கை 1995_ம் ஆண்டு சந்தித்தனர்.
`கடவுள் எனக்கு கொடுத்த கடைசிப் பரிசு வோங்' என்று சென் நிங் யாங் கூறி இருக்கிறார்.
"மனதளவில் யாங் இளமை யானவர். நான் அவரைப் பெரி தும் மதிக்கிறேன். அவர் அறிவி யலுக்கு பெரும் தொண்டாற்றி இருக்கிறார் என்று வோங் கூறி னார்.
தாம்பத்ய உறவு இல்லாத திருமணம்
சீனாவில் பிரபலமாகி வருகிறது
பீஜிங், டிச. 18_
தாம்பத்ய உறவு இல்லாத திரு மணங்கள் சீனாவில் இப்போது பிரபலமாகி வருகின்றன. இப்படி தாம்பத்யம் இல்லாத திருமணம் செய்து கொள்ள விரும்பும் மணமக்களுக்கு உதவுவதற்காக தரகர்கள் தனி அலுவலகம் தொடங்கி உள்ளனர்.
இதேபோன்ற ஒரு திருமண ஏஜென்சி ஜியாங்சு மாநில தலை நகர் நான்ஜிங்கில் தொடங்கப் பட்டு உள்ளது.
தாம்பத்ய உறவு இருந்தால் உடல் ரீதியாகவும், மன ரீதியாக வும் பிரச்சினைகள் ஏற்படுவதாக வும், அவற்றைத் தவிர்ப்பதற்கு தாம்பத்ய உறவு இல்லாத திரு மணங்கள் பிரபலமாகி வருவ தாக அந்த ஏஜென்சி கூறி உள் ளது.
|
|
|
| கவிஞர் ச.வே பஞ்சாட்சரம் - "பூகம்ப பூக்கள்" கவிதை தொகுப்பு |
|
Posted by: kavithan - 12-18-2004, 12:00 AM - Forum: கவிதை/பாடல்
- Replies (24)
|
 |
<img src='http://kavithan.yarl.net/kavithan_img/desertrosesbwp5-thumb.jpg' border='0' alt='user posted image'>
வெகு விரைவில் <b>கவிஞர் ச.வே பஞ்சாட்சரம் </b>அவர்களின் <i><b>"பூகம்ப பூக்கள்"</b></i> கவிதை தொகுப்பு உங்களுக்காக மின்னூல் வடிவில் கவிதை தோட்டத்தில் மலரவுள்ளது.
விடுதலை போர் உக்கிரமாக நடந்து கொண்டிருந்த வேளையில் படிப்பவர்களின் நரம்புகளில் சூடேற்றும், நெஞ்சங்களில் சிலிர்ப்பூட்டும் பாடல்களைக் காலத்தின் குரலாக, காலத்தின் தேவையை பூர்த்தி செய்யும் படைப்பாக ஆதவன் கல்வி நிலையத்தின் உதவியுடன் கவிஞர் 2000 ம் ஆண்டு சித்திரை மாதத்தில் இப் படைப்பை நூலாக வெளியிட்டார்.
கவிஞர் அவர்கள் மரபிலக்கியத்தில் ஊறித்திளைத்தவர்கள் ஆனாலும் நவீன இலக்கியத்தை மறுதலிப்பவர் அல்லர். அவரும் தனது கவிதைக்குள் நவீன உத்திகளையும் புதுமைகளையும் புகுத்தி இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலான வரலாறுடைய தமிழ் கவிதை மரபினையும் மீறாமல் கவிதை வடிப்பதில் வல்லவர்.
சிந்து, குறள் வெண்பா போன்ற யாப்பு வடிவங்களில் இயற்றப்பட்டவை இக்குறும்பாக்கள். அத்தோடு பண்டிதர் அவர்கள் சமுக, அரசியல் செய்திகளை மிகவும் சுவைபட கூறி உள்ளார் இந்நூலில்.
<b>சமூகத்தில் குடிப்பழக்கத்தினால் அப்பாவி குடும்பங்கள் எதிர் நோக்கும் சீரழிவை எப்படி நயம்பட உரைத்துள்ளார் பாருங்கள்</b>
<span style='font-size:22pt;line-height:100%'>கொட்டில் வீட்டில் நெருப்பு வைத்து வைத்து விட்டான்- மனைவி
கொண்டை கூட அறுத்தெறிந்து விட்டான்!
வெட்டிரும்பு போட்டுவந்த சுப்பா - ஆனால்
விடிந்தெழும்பும் போது நல்ல அப்பா!</span>
<b>அரசியலையும் போராளிகள் தியாகத்தையும் எப்படி சொல்கிறார் பாருங்கள்</b>
<span style='font-size:22pt;line-height:100%'>பாவிகட்காய் யேசுமுத்தன்
பட்டி ஆடும் மீட்க புத்தன்
ஆவி வெந்து தெய்வமானார் அன்று- அவரை
அகிலமேத்தும் மதங்களமைத்தின்று!
பாவித்தமிழர் எங்களுக்காய்
பட்டி மந்தை எங்களுக்காய்
சாவைத்தழுவும் வேங்கை என்னும் சுத்தர் - நாளை
தமிழர் வணங்கும் மதத்து யேசு, புத்தர்!</span>
<b>யாழ் இந்துக் கல்லூரியில் ஒரு விழாவில் கவிஞர் அவர்கள் பாடிய ஒரு பாடல் [ காலம்:ஜனாதிபதி பிரேமதாசாவின் அணியில் இருந்து அத்துலத்து முதலி சிறீமாவுடன் சேர்ந்து கொண்டு பிரேமாவை எதிர்த்த காலம்]</b>
<span style='font-size:22pt;line-height:100%'>சிறீமா ஒரு மா! பிறேமா ஒரு மா!
மாவும் மாவும் அரைபடலாமா?
மாவை அரைக்க மா எழலாமா?
வாதிடலாமா? மோதிடலாமா?
உலக்கையில் ஒட்டிய ஒருமா சிறீமா - அச்சு
உலக்கையில் ஒட்டிய ஒருமா சிறீமா
உலக்கையால் உதைபடும் ஒருமா பிறேமா!
ஆமா தர்மம் சும்மா விடுமா?
எங்களை வாட்டிய கறுமம் விடுமா?</span>
இப்படி அருமையாக நகைச்சுவையாக கவிதைகளை வடிக்கும் ஒரு புலவர் தான் ச.வே. பஞ்சாட்சரம் அவர்கள். என்ன நீங்கள் தயாரா அவரின் பூகம்ப பூக்கள் கவிதை தொகுப்பை படிக்க , சுவைக்க.
மேலும் ஒரு விடயம் , இவர் எழுதிய <i><b>எழிலி</b></i> என்ற நூல் <b>இலங்கை சாகித்திய மண்டலப் பரிசினையும்</b> பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
வெகு விரைவில் உங்களுக்காக... கவிதை தோட்டத்தில்
http://www.kavithan.yarl.net
|
|
|
|