![]() |
|
அடிப்படை செயற்கை உயிரி..?! - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: அறிவியற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=5) +--- Forum: விஞ்ஞானம் - தொழில்நுட்பம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=25) +--- Thread: அடிப்படை செயற்கை உயிரி..?! (/showthread.php?tid=6159) |
அடிப்படை செயற்கை உயிரி..?! - kuruvikal - 12-18-2004 <img src='http://newsimg.bbc.co.uk/media/images/40642000/jpg/_40642671_jell_pnas_203.jpg' border='0' alt='user posted image'> பச்சை நிறப் புளொரொளிர்வைக் காட்டும் செயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட உயிரியற் புடகம்...! சில உயிரிகளின் கூறுகளைக் கொண்டு ஒரு செயற்கை உயிரிக்கான உயிரின் அடிப்படையான எளிமையான கலத்தின் நிலைக்கு ஒத்த ஆனால் ஆரம்ப நிலை உயிரியல் தொழிற்பாட்டுப் புடகம் ஒன்றை அமெரிக்க விஞ்ஞானிகள் உருவாக்கி உள்ளனர்...! இதன் மென்மையான வெளிப்புற கலச் சுவர் ஆக்கப்பட்டது முட்டை வெள்ளைக்கருவில் இருந்து பெறப்பட்ட கொழுப்புக் கொண்டு என்றும் கல உள்ளடக்கம் என்பது குடலில் வாழும் பற்றீரியாவான (bacteria) E. coli இருந்து பெறப்பட்டது (அதன் பிறப்புரிமையியல் கூறுகள் அகற்றப்ப்பட்ட பின் ) என்றும் டி என் ஏ தரவுகளை வாசிக்க ( DNA code translation) உதவும் நொதியம் வைரசில் இருந்து பெறப்பட்டது என்றும் கூறிய உள்ளனர் இந்த ஆய்வை மேற்கொண்ட ஆய்வாளர்கள்....! இக்கூறுகள் கொண்டு ஆக்கப்பட்ட அந்த உயிரியற் தொழிற் புடகத்தினுள் (vesicle bioreactors) ஜெலிமீனின் (Jelly fish) குறித்த ஒரு இனத்தில் இருந்து பெறப்பட்ட புளரொளிர்வுக்கான புரத்தத்தை (fluorescent protein) உருவாக்கும் ஜீனையும் (gene) இன்னொரு வகை பற்றீரியாவான Staphylococcus aureus இல் இருந்து பெறப்பட்ட கலச்சுவரில் நுண்துளையிடும் ஜீனையும் புகுத்தி அவதானித்த போது அந்தப் புடகங்கள் புளொரொளிர்வுள்ள புரதங்களை உருவாக்குவனவாகவும், அவை வளர்க்கப்பட்ட வளர்ப்பூடகத்தில் இருந்து... கலச்சுவரில் உருவாக்கபட்ட துளைகள் ஊடாக போசனைக்கான இரசாயனக் கூறுகளைப் பரிமாறி பல நாட்கள் தொழிற்பட்டக் கூடியதாக இருந்ததாகவும் இவ்வாய்வு தொடர்பாக மேலும் கருத்துக்கள் பகரப்பட்டுள்ளன...! ஆனால் இந்தப் புடகங்களுள் நடந்தவை சாதாரண நிலை உயிரியல் இரசாயனத் தாக்கங்கள் என்றும் இவை கலத்துக்கு வெளியேயான கலச்சாறுகளை கொண்டும் நடத்தப்படக் கூடியன என்றும் கூறியுள்ள அந்த ஆய்வாளர்கள்...இந்த ஆய்வு ஒரு உயிரியை தேவைக்கேற்ப மீள வடிவமைக்கக் கூடிய செயற்கை முறை உயிரியலின் (synthetic biology) அடிப்படை வெற்றி என்றும் கூறியுள்ளனர்...! மேலதிக தகவல் இங்கே... - kuruvikal - 12-19-2004 என்ன ஒருத்தருக்கும் செயற்கை உயிரியப் பிடிக்கேல்லையா...இல்ல விளங்கேல்லையா...?! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink: :roll:
- tamilini - 12-19-2004 நாங்க இன்னும் படிக்கல.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- hari - 12-19-2004 மன்னிகவும் குருவிகளே! யுத்த ஏற்பாடுகளை மும்முரமாக கவனித்துக்கொண்டிருப்பதால் இதை தவரவிட்டுட்டன், தகவலுக்கு நன்றி - tamilini - 12-19-2004 என்னங்க இது.. உவடத்து பற்றீரியாவையும்... வைரஸ்யையும் பாவிக்கிறாங்க.. இந்த கணணிக்கு வாற வைரஸ் பாவிச்சா.. எவ்வளவு நல்லாய் இருக்கும் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
- KULAKADDAN - 12-19-2004 நல்ல விசயம் எப்ப உதுகளின் விளைவு பற்றி மனிசனில் சோதிக்க போகினம் சிறை கைதியளிலை சொதிச்சு ஒணடுமில்லை எண்டு விடுதலை செய்ய ... அவை 10 பெருக்கு பரப்ப..100 ஆக.. கடைசிலை மருந்து கண்டுபிடிக்கேலமை.. முழுச..... கணக்கு சாி.... - kavithan - 12-20-2004 எனக்கு ஒண்டும் விளங்கேல்லை குருவிகளே எல்லமே கலங்கலா கிடக்கு ஆனால் ஏதோ நல்லவிடையம் என்று தெரியும்... நன்றிகள் தொடருங்கள் உங்கள் சேவையை <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
|