Welcome, Guest
You have to register before you can post on our site.

Username
  

Password
  





Search Forums

(Advanced Search)

Forum Statistics
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244

Full Statistics

Online Users
There are currently 393 online users.
» 0 Member(s) | 390 Guest(s)
Applebot, Bing, Google

Latest Threads
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,323
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,233
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,608
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,299
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,644
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,079
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,468
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,504
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,041
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,240

 
  12 வயதில் டச்சு குழந்தைகளை பற்றிக் கொள்ளும் மது பழக்கம்
Posted by: ஊமை - 12-22-2004, 09:10 AM - Forum: செய்திகள்: உலகம் - Replies (1)

நெதர்லாந்து நாட்டில் ஒரு ஆய்வு நடத்தப்பட்டது. அதில் 9 வயதுக்கும் 15 வயதுக்கும் இடைப்பட்டவர்களில் 80 சதவீதம் பேர் மது அருந்துவது தெரிய வந்தது. சராசரியாக 12 வயதில் அங்கு சிறுவர்கள் மற்றும் சிறுமிகள் மது குடிக்கத் தொடங்குவது தெரிய வந்தது. பெண் குழந்தைகளை விட ஆண் குழந்தைகளே அதிகம் பேர் மதுப்பழக்கத்தை கைக் கொள்வது தெரிய வந்தது. 15 வயது நிறைந்தவர்களில் 68 சதவீதம் பேர் அடிக்கடி மது அருந்துவதாகவும் தெருவித்தனர். 40 சதவீத சிறுவர் சிறுமிகள் கூறும்போது முதல் தடவை மது அருந்தியது அவர்களின் பெற்றோரில் ஒருவருடன் சேர்ந்து என்று கூறினா

Print this item

  களப்பொறுபாளர் அவர்களுக்கு.
Posted by: ஊமை - 12-22-2004, 08:33 AM - Forum: உங்கள் கருத்துக்கள் - Replies (37)

பொறுப்பாளர் அவர்களே நான் எழுதும் பக்கங்களிலே வரும் எழுத்துப்பிழைகளை என்னால் திருத்த்ம் செய்ய முடியவில்லை ஏன் அவ்வாறு எனக்கு தடை விதிக்கபட்டுள்ளது.

Print this item

  மது அருந்தக் காரணங்கள்
Posted by: Vaanampaadi - 12-21-2004, 06:48 PM - Forum: சுமுதாயம் (வாழ்வியல்) - Replies (8)

இதுவரை நான் குடித்த பீர் அனைத்தையும் யோசித்தால் எனக்கு அவமானமாக இருக்கிறது. பிறகு கண்ணாடி டம்ளரைப் பார்க்கிறேன். பீர் கம்பெனியில் வேலை செய்யும் அனைத்து தொழிலாளர்களின் நம்பிக்கைகளையும் கனவுகளையும் யோசிக்கிறேன். இந்த பீரை நான் குடிக்காமல் இருந்தால், அவர்களது கனவுகள் அனைத்து சுக்குநூறாகும். பிறகு நான் என்னிடமே சொல்லிக்கொள்கிறேன், " சுயநலத்துடன் என்னுடைய ஈரலைப் பற்றிக் கவலைப்படுவதைவிட, இந்த பீரை குடித்து அவர்களின் கனவை நிறைவேற்றுவதே சிறந்தது என்று முடிவெடுக்கிறேன்".

- ஜாக் ஹாண்டி


குடிப்பதின் தீமைகளைப் பற்றி படித்ததும் விட்டுவிட்டேன் - படிப்பதை

- ஹென்றி யங்மேன்


குடிக்காதவர்களைப் பற்றி பரிதாபப்படுகிறேன். அவர்கள் காலையில் எழுந்ததும் அவர்கள் என்ன உணர்கிறார்களோ அதனைத்தான் நாள் முழுவதும் உணரவேண்டும்

- ப்ராங்க் சினாட்ரா

ஒரு புத்திசாலியான ஆள் சில நேரங்களில் முட்டாள்களுடன் நேரத்தை செலவழிப்பதற்காக குடிக்கும்படி ஆகிவிடுகிறது

- எர்னஸ்ட் ஹெமிங்வே


24 மணி நேரங்கள் - ஒரு பெட்டி பீரில் 24 பீர் பாட்டில்கள். தற்செயலா என்ன?

- ஸ்டீபன் ரைட்


நாம் குடிக்கும்போது, நாம் குடிபோதை ஏறிவிடுகிறோம். நமக்கு நன்றாக குடிபோதை ஏறினால், நமக்கு தூக்கம் வந்துவிடுகிறது. நாம் தூங்கும்போது எந்தப் பாவத்தையும் பண்ணுவதில்லை. நாம் பாவம் பண்ணுவதில்லை என்றால் நாம் சொர்க்கத்துக்குப் போவோம். ஆஆஆகவே.... நாம் எல்லோரும் குடித்துச் சொர்க்கத்துக்குப் போவோம்.

- ப்ரையன் ஓ-ரோர்க்கே


கடவுள் நம்மிடம் அன்பு செலுத்துகிறார் என்பதற்கும் நாம் சந்தோஷமாக இருக்கவேண்டும் என்றும் விரும்புகிறார் என்பதற்கு பீரே அத்தாட்சி

- பெஞ்சமின் ப்ராங்க்ளின்


***

Print this item

  ஒரு சேட்டரின் (chatter) புலம்பல்
Posted by: Vaanampaadi - 12-21-2004, 06:43 PM - Forum: நகைச்சுவை - Replies (3)

ஒரு சேட்டரின் (chatter) புலம்பல்


நான் அனுப்புவது PM அல்ல poem

அதை பாரமால் இருப்பதுவென்ன நியாயம்

உன் உள்ளமதை கொள்ளை கொள்ள

நான் அனுப்புவது PM அல்ல poem


நிலவுக்கு வான் அனுப்பும் PM

நீருக்கு மீன் அனுப்பும் PM

மலருக்கு தேன் அனுப்பும் PM

மங்கைக்கு நான் அனுப்பும் PM

அடித்து அனுப்புவது PM அல்ல poem


எத்தனையோ நினைத்திருக்கும் நெஞ்சம்

type அடித்தால் வருவதெல்லாம் கொஞ்சம்

ASL கேட்டிடவும் அஞ்சும்

Voice-இனிலே வாவென்று கெஞ்சும்


நான் அனுப்புவது PM அல்ல poem

அதை பாரமால் இருப்பதுவென்ன நியாயம்

உன் உள்ளமதை கொள்ளை கொள்ள

நான் அனுப்புவது PM அல்ல poem

Print this item

  மின்சார ரெயிலில் சிக்கி சினிமா நடிகர் பலி
Posted by: Vaanampaadi - 12-21-2004, 06:33 PM - Forum: சினிமா - Replies (17)

தண்டவாளத்தை தாண்டிய போது பரிதாபம்„ மின்சார ரெயிலில் சிக்கி சினிமா நடிகர் பலி
தாம்பரம், டிச. 21- பழவந்தாங்கல் ரெயில் நிலையத்தில் தண்டவாளத்தை தாண்டிய போது சினிமா நடிகர் சாருகேக்ஷ; மின்சார ரெயிலில் சிக்கி பலியானார்.

நடிகர் அர்ஜுன், நடிகைகள் nஜhதிகா, மீனா நடித்த ரிதம் தமிழ் படத்தில் நடித்தவர் சாருகேஷ்(வயது 26). இவர் தற்போது டி.வியில. ஒளிபரப்பாகி வரும் மனைவி, அவர்கள், கணவருக்காக தொடர்களில் நடித்து உள்ளார். ரிதம் படத்தில் மீனாவை கிண்டல் செய்பவர் வேடத்தில் நடித்திருந்தனர். இவரது வீடு நங்கநல்லு}ர் லட்சுமி நகரில் உள்ள அடுக்கு மாடி குடியிருப்பில் உள்ளது. நேற்று மதியம் 12.45 மணிக்கு சாருகேஷ் சென்னை செல்வதற்காக வீட்டில் இருந்து பழவந் தாங்கல் ரெயில் நிலையத் துக்கு வந்தார். சென்னை செல்லும் ரெயில்கள் நிற்கும் பிளாட்பாரத்துக்கு செல்ல தண்டவாளத்தை தாண்டி செல்ல முயன்றhர். அப்போது கடற்கரையில் இருந்து தாம் பரம் நோக்கி சென்ற மின்சார ரெயில் சாருகேஷ் மீது மோதியது. இதில் ரத்த வெள்ளத்தில் மிதந்த அவர் சம்பவ இடத்திலேயே பிணமானார்.

இது குறித்த தகவல் அறிந்ததும் தாம்பரம் ரெயில்வே போலீஸ் இசப்-இன்ஸ்பெக்டர் கணேசன் விரைந்து சென்று சாரு கேசின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.

பலியான சாருகேசுக்கு 2 ஆண்டுக்கு முன் திருமணம் நடந்தது. இவரது மனைவி சுவேதா. பி.எஸ்.சி பட்டதாரி. அவர்களுக்கு 6 மாதத்தில் ஒரு ஆண் குழந்தை உள்ளது. சாருகேசின் உடல் அடையாளம் தெரியாத அளவுக்கு சிதைந்து போனது. கணவரின் உடலை பார்த்து மனைவி சுவேதா கதறி அழுதது காண்போரை கலங்க செய்தது. மயங்கி விழுந்த சுவேதாவை உறவினர்கள் அழைத்து சென்றனர்.

Print this item

  பறந்து போனாளே...!
Posted by: kuruvikal - 12-21-2004, 06:15 PM - Forum: கவிதை/பாடல் - Replies (20)

<img src='http://kuruvikal.yarl.net/archives/crying1.jpg' border='0' alt='user posted image'>

<b>மாந்தோப்பு மலரெடுத்து
மங்கையாக்கி
மனதோடு கட்டிவைத்து
கனவு வீதி வழி
சோடிக் குயில்களாய்
கானகம் ஏகி
பாடினேன் ஒரு கானம்
அபூர்வ ராகம் கொண்டு...!

சிந்தைக்குள் இருந்து
சித்தம் ஆள்பவள்
சித்திரைக்கு வருவாள் என்று
காத்திருந்து காத்திருந்து
பாடினேன் சிந்து...!
நந்து அவள்
வருத்தம் தந்தும்
இன்னும் வரவில்லை...!

கரையும் காகம் கூட
என்னவள் வரவுக்காய்
ராகம் பாடுவதாய்
ஓர் கனவு கண்டேன்
பாவியவள்
பருதவிக்க விட்டாளே
வெட்டினாளே காய்....!

வெளிநாட்டுச் சிங்காரன்
டெலரும் பவுண்சும் தந்து
சிரிக்கச் சிரிக்கப் பேசுறானாம்
தடவிக் கொடுத்து
பூ மேனி மினுக்கிறானாம்
பூ...அவள்
சிந்தைக்கு உகந்தவனாம் - என்று
பறந்து போனாளே பிளேன் ஏறி...!
நானிங்கே
காக்கையோடு கவிபாடுறேன்
சோக ராகம் கொண்டு....!</b>

(குருவிகளுக்குக் கற்பனை...ஆனால் சமூகத்தில் நிகழ்வது...!)

நன்றி - http://kuruvikal.yarl.net/

Print this item

  புதிய MSN Messenger
Posted by: Mathan - 12-21-2004, 02:36 PM - Forum: இணையம் - Replies (93)

MSN 7 BETA

புதிய MSN Messenger 7 BETA Version வெளிவந்துள்ளது. உபயோகித்து பாருங்கள் .........

http://messenger.msn.com/beta/

Print this item

  கிழக்கின் அனர்த்தத்திற்கு உறவுகளின் உதவிப்பயணம
Posted by: thileepan2005 - 12-21-2004, 06:40 AM - Forum: செய்திகள் : தமிழீழம் - Replies (2)

கிழக்கில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு அரச, அரச சார்பற்ற நிறுவனங்களால் போதிய உதவிகள் இன்றி அல்லலுறும் எமது உறவுகளுக்கு எமது மக்கள் வழங்கும் உதவிகளை ஒருமுகப்படுத்தி சேகரித்து உரிய முறையில் கொண்டு சென்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்குவதற்காக மக்களால் உருவாக்கப்பட்டதே இந்த அமைப்பாகும்.

இந்த அமைப்பின் அலுவலகம் 43இ3ம் குறுக்குத் தெருஇ யாழ்ப்பாணம் எனும் முகவரியில் இயங்கும்.
தொலைபேசி 0212223739

சேகரிக்கும் பொருட்கள் - 1 உலர் உணவுப் பொருட்கள்
2 பால்மா
3 மருந்து வகைகள்
4 சிறுவர்களுக்கான புதிய உடைகள்

அமைப்பின் செயற்பாடுகள்

1. இவ் அமைப்பை நிறுவி செயற்படுத்துவதற்கு முன்னின்ற பல மக்கள் அமைப்புக்கள் தங்கள் பிரதேசத்திலுள்ள அனைத்து வளங்களையும் பயன்படுத்தி மக்களுக்கு இச் செயற்பாட்டின் அவசியத்தை விளங்க வைத்தல்

2. மக்களால் வழங்கப்படும் உதவிகளைச வாகனங்களில் சேகரித்தல்.

3. சேகரித்த உணவுப் பொருட்களை தரம் பிரித்து பொதி செய்து பாதுகாத்தல்.

4. 25ஃ12ஃ2004 ம் திகதி கிழக்கு மாகாணத்திற்கு இப் பொருட்களை வாகனத்தொடரணி மூலம் கொண்டு சென்று மக்களுக்கு வழங்குதல்.

5. உதவிகள் பணமாகப் பெற்றுக்கொள்ளப்படமாட்டாது.
[/b]

Print this item

  பலாலி விமானத்தளம் விரிவுபடுத்துவது
Posted by: aathipan - 12-20-2004, 08:24 PM - Forum: செய்திகள் : தமிழீழம் - Replies (1)

பலாலி விமானத்தளம் விரிவுபடுத்துவது இந்தியாவிற்கு அச்சுறுத்தலாக முடியும் அத்துடன் அது ஈழத்தமிழர்களுக்கு உகந்ததாக இருக்காது - மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்கழகம்.

இந்தியா பராளுமன்ற எம்பி மற்றும் மதிமுக உறுப்பினர் எல் கணேசன் இதுபற்றி பிரதமர் மன்மோகன் சிங்கின் கவனத்திற்குகொண்டுசென்றதாக பத்திரிகையாளர்களுக்கு கொடுத்த செவ்வியில் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் பேசுகையில் இந்தியப்பிரதமர் மற்றும் பாதுகாப்பு மந்திரி யுபியில் நடந்த சந்திப்பில் இதுபற்றி அவர்கள் உறுதியளித்துள்ளதாகவும்.
இலங்கையில் பலாலி விமானதளத்தை விரிவுபடுத்தி அதை தளமாக பயன்படுத்தும் திட்டம் எதுவும் இல்லை என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Print this item

  உங்களைத்தான் சித்தார்த்தன்.
Posted by: Aalavanthan - 12-20-2004, 04:49 PM - Forum: செய்திகள் : தமிழீழம் - Replies (9)

உங்களைத்தான்................... சித்தார்த்தன் பதில் சொல்லுங்கள்...............

<img src='http://www.yarl.com/forum/files/untitled-1.gif' border='0' alt='user posted image'>
<img src='http://www.yarl.com/forum/files/untitled-4.gif' border='0' alt='user posted image'>
<img src='http://www.yarl.com/forum/files/untitled-5.gif' border='0' alt='user posted image'>
<img src='http://www.yarl.com/forum/files/untitled-8.gif' border='0' alt='user posted image'>

தொடரும் உள்முரண்பாடுகளுக்கு முடிவு எப்போது?
தங்கள் நலன் கருதாது உங்களை வளர்த்த, தங்கள் உயிர்களைக் கொடுத்து எமது கழகத்தை வளர்த்த எமது அங்கத்தவர்களின் உயிரா?
தமது சொந்தக் கருத்துக்களை எழுத்திலும், பேச்சிலும், செயலிலும் சுதந்திரமாக வெளிப்படுத்த வேண்டும் என்ற எமது கழகத்தினரின் வாசகத்தை வரிக்குவரி கூறும் நீங்கள், கழகத்திற்குள்ளேயே கருத்துச் சுதந்திரத்தை மறுக்கிறீர்கள்.

உங்கள் அடிவருடிகளால் கடத்திச் செல்லப்பட்ட எமது சக கழக அங்கத்தவர்களான,
வேலாயுதப்பிள்ளை தர்மலிங்கம் (வித்தி)
அங்கமுத்து இராமநாதன் (சுதன்)
செல்லையா செல்வராசா (செல்வம்)
ஆகியோரின் குடும்பங்களுக்கு நீங்கள் சொல்லப்போகும் பதில் என்ன?

இச் செயலின் ஊடாக எமக்கு நீங்கள் கூறவரும் செய்தி தான் என்ன? கழகத்தின் ஆரம்ப நாட்களில் உமாமகேஸ்வரனின் உளவுப் படையினரால் மேற்கொள்ளப்பட்ட கழக உறுப்பினர்கள் மீதான கொலை வேட்டை, இன்று உங்களின் உளவுப் படையினரால் தொடரப்படுகிறது.

வெளியில் போலி முகத்தைக் காட்டிக் கொண்டு, தூள் பவான், பீற்றர், ஆனந்தி போன்ற உங்கள் கூலிப்படையினரை ஏவி நீங்கள் அராஜகம் செய்கிறீர்கள். தமது கணவன்மாரின் வருகையை எதிர்பார்த்து ஏங்கி நிற்கும் அவர்களின் மனைவிமாருக்கும், அவர்களின் பிள்ளைகளுக்கும் உங்கள் பதில் என்ன?

இராணுவத்தினர் மீதும், புலிகள் மீதும் பழிகளைப் போட்டுவிட்டு, தற்போது அரசியல் செல்வாக்கு இல்லாததால் என்னால் ஒன்றும் செய்யமுடியாது என்கிறீர்கள். ஆனால். உங்களுக்குப் பின்னால் நின்று ஊண் உறக்கமின்றி உங்களுக்காக - கழகத்திற்காக உழைத்தவர்களின் - உங்களை இன்று பலர் பேசும் அரசியல்வாதிகளாக்கியவர்களின் கருத்துக்களை கருத்துக்களால் எதிர்க்காது, அவர்களை கடத்திவிட்டு இன்று வேடிக்கை பார்க்கிறீர்கள். கூடவே சொல்கைமிடம் சென்று முறையிட்டு போலி நடிப்பு வேறு!
பேட்டிகளிலும் பேச்சுக்களிலும் மட்டும் ஜனநாயகத்தைப் பற்றிக் கதைத்துவிட்டு உங்கள் கழகத்திற்குள் ஏனோ ஜனநாயகத்தை மறுக்கிறீர்கள். குரோதம் - பழிவாங்கல் - பயம் நிறைந்த வாழ்க்கையை ஒழித்து சுதந்திரமாய் சுற்றித் திரியும் வாழ்க்கை நிறைந்த எம் பூமியை உருவாக்கிட உங்களுடன் கூட நின்று உழைத்தவர்களின் குடும்பங்களுக்கு நீங்கள் கொடுத்திருப்பது - அந்த அவலமான வாழ்க்கையைத் தான்.

இனத்தின் உரிமைக்காக எத்தனை உயிர்களை நாம் பறிகொடுத்தோம்.
இயக்க மோதல்களால் பறிக்கப்பட்ட உயிர்கள் தான் எத்தனை?

இவையனைத்திற்கும் அப்பால், கழக உரிமைக்காகவே உயிர்களை இழக்கும் கேவலமான இழிவான நிலை இன்று எமக்கு ஏற்பட்டுள்ளது. தமது கணவர்மாரின் வருகையை எதிர்பார்த்து வாழ்க்கையே சூனியமாகிப்போய் செய்வதறியாது ஏங்கித் திகைத்து நின்று கலங்கும் அவர்களின் மனைவிமாருக்கும், அவர்களின் பிள்ளைகளுக்கும் உங்கள் பதில் என்ன?

உங்களின் நமட்டு விசமப் புன்னகையா?
அல்லது நீங்கள் வைத்திருக்கும் பின் கதவு தொடர்புகளா?

சக்தி மின்னல் நிகழ்ச்சியில் கேள்வியொன்றிற்கு பதிலளிக்கும் போது உங்களுக்கும்; "PLOTE மோகன்" என்ற துரோகிக்கும் எத்தகைய தொடர்பும் இல்லை என்று அப்பாவி போலக் கூறினீர்கள். ஆனால் "PLOTE மோகனின்" மரணச் சடங்கில் உங்களின் உதவியாளர் பீற்றர் போன்றோர் கலந்து கொண்டதும், அதை நடத்தி வைத்ததும் நீங்கள் அறியாத ஒன்றல்ல. S.L.குணசேகரா போன்ற தீவிர சிங்கள இனவாதிகள், சிங்கள தேசத்தின் வீரன் என தலையில் வைத்துக் கொண்டாடிய "PLOTE மோகனின்" நீங்கள் "பின்கதவு" தொடர்பு வைத்திருந்தது தொடர்பாக கழக உறுப்பினர்களிடையே முணுமுணுப்புகள் இருந்ததும் நீங்கள் அறிந்ததொன்று - ஆனால் உங்களைப் பற்றி பிறர் அறிந்ததில் இது அறியாததொன்று.

புலிகளிடமிருந்து ஏற்பட்டுள்ள உயிர் அச்சுறுத்தலுக்கு நீங்கள் சிறிலங்காப் பாதுகாப்புப் படைகளிடமிருந்து பாதுகாப்புக் கோருகிறீர்கள். ஆனால், எமது கழகத்திற்குள்ளேயே எமக்குப் பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டால் நாம் யாரிடம் பாதுகாப்புக் கோருவது?
உங்களைத் தான் சித்தார்த்தன்....................

பதில் சொல்லுங்கள்...........................

அவலப்படும் கழக அங்கத்தவர்கள்

Print this item