Welcome, Guest
You have to register before you can post on our site.

Username
  

Password
  





Search Forums

(Advanced Search)

Forum Statistics
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244

Full Statistics

Online Users
There are currently 496 online users.
» 0 Member(s) | 493 Guest(s)
Applebot, Bing, Google

Latest Threads
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,324
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,233
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,608
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,299
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,645
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,079
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,468
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,505
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,041
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,240

 
  கணிணிகளும் கண் சார் உபாதைகளும்
Posted by: Mathan - 12-24-2004, 05:48 PM - Forum: மருத்துவம் - Replies (11)

கணிணிகளும் கண் சார் உபாதைகளும்
-ஒரு மருத்துவச் செய்தித் துணுக்கு......

மிகப் பிந்திய ஆய்வுகளிலில் இருந்து தொடர்ச்சியான கணணிப் பாவனை Glaucoma எனும் கண் சார் நோய்க்கு காரணகர்த்தாவாகிறது எனக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவ்வாய்வறிக்கை மேலும் ஒரு அதிர்ச்சியான தகவகையும் வெளியிட்டுள்ளது. அதுவென்னவென்றால் தொடர்ச்சியாகக் கணணிகளைப் பாவிப்போரில் 10,000 த்தில் 5 வீதமானோர்(%) பார்வைக் கோளாறுகளை எதிர் நோக்குகின்றனர்.

8 மணி நேரத்திற்கும் தொடச்சியாகப் கணணித் திரைக்கு முன்னாலிருக்கும் தூரப் பார்வைக் குறைபாடு (Short sighted) உள்ளவர்களே மிக மிக அபாயகரமா நிலையில் இருக்கின்றனர்.

ஆகவே இவ்வகை நோயளிகள் முன்கூட்டியே வைத்திய அலோசனைகளைப் பெறுவது ஊக்கப்படுத்தப்பட வேண்டியதாகும்

நன்றி - விகடன்

Print this item

  துணைக்கண்ட தமிழ்ப் பெண் நடிகைகள் - ஒரு அலசல்
Posted by: Mathan - 12-24-2004, 05:44 PM - Forum: சுமுதாயம் (வாழ்வியல்) - No Replies

துணைக்கண்ட தமிழ்ப் பெண் நடிகைகள் - ஒரு அலசல்.

இது ஒரு ஆழமான அர்த்தம் கொண்ட தலைப்பு. ஒவ்வொரு சொல்லிற்கும் அர்த்தம் இருக்கவே செய்கிறது. அதுமட்டுமல்ல பலதரப்பினரின் ஏளனத்தையும் கவனத்தையும் குவித்துள்ள கருப்பொருளும் கூட.

இந்தத் தலைப்பை நான் தேர்ந்ததற்குக் காரணம், எனக்குத் தெரிந்ததை பறை தட்டுவதற்கல்ல, மாறாக தெளிவை எனக்கும் மற்றவர்களுக்கும் ஏற்படுத்துவதற்கே.

முதலில் தலைப்பின் இரகசியம். ஒவ்வொரு சொல்லையும் தேர்ந்ததன் பின்னணி:

துணைக்கண்டம் (இந்தியா)- நான் ஒரு தமிழன் (இனவாதம் பேசவில்லை) மேலும் இலங்கைக் குடிமகன். எனவே எனக்கும் இந்தியாவுக்குமான தொடர்பு இதுவரை மறுக்கப்படாத ஒரு வரலாறு, கலாச்சாரம் சார்ந்தது, பல அயலாரின் மதம் சார்ந்தது(நான் மனித குல ஒற்றுமைக்காகவே மதத்தைத் துறக்கிறேன்), சில சமயங்களில் ஆதிக்கம் வாய்ந்தது(இது மழுப்பப்பட்டுவரும் அரசியல்-எனக்கு அதிகம் தெரியாது). ஆகவே இத்துணைக் கண்டத்தின் மேல் எனக்கு ஆர்வமும், உறவும் உண்டு.
தமிழ்- நான் இதுவரை 99.98% பார்த்தவை தமிழ்த் திரைப் படங்கள். ஏதோ ஒரு காரணத்தால் இதை எனக்குப் பிடித்துவிட்டது. நான் பேசும் மொழி என்பதாலோ தெரிய்ச்வில்லை.
பெண்- ஆண்களைப் பற்றி இப்போது பேச வேண்டாம். ஒன்றும் இல்லை என்பதற்கல்ல, இன்னொரு முறை பார்க்கலாம்.

எந்தவொரு குற்றமும் தடுக்கப்படுவது, அதை இழைப்பவர் உணருவதாலோ அல்லது அதற்கான காரணியும் சந்தர்ப்பமும் இல்லாதிருப்பதுமே. எனது வாதம் இரண்டாவதைச் சார்ந்தது. பல பெண்ணிய வாதிகளின் வாதம் ஒன்று உள்ளது. ஏற்றுக் கொள்ளப்படக்கூடியதும், கொள்ளப்பட்டுவிட்டதும் கூட. "சினிமாவை வழங்கும் ஆண்களே பெண்களின் உடலுக்கும் விலை கொடுக்கிறார்கள்." என்பது இத்தரப்பினரின் வாதம். இவர்களின் நோக்கு இதுவரை குற்றத்தை இழைப்பவரை உணரச் செய்வதாகவே இருக்கிறது. இது சுலபமானதும் நடைமுறைக்கு ஏற்றதாகவும் தென்படவில்லை.

எனது பாரவை இதையும் தாண்டியதாகத் துலங்குகிறது. அதாவது இன்னொரு, மறைக்கப்பட்ட பரிமாணம் சார்ந்தது. குறிப்பிட்ட நடிகைகளின் கற்பு (சமூகத்தால் உருவாக்கப்பட்ட பதம்) பறிபோகிறதே எனக் கதறும் பெண்ணிய வாதிகள், ஏன் இழப்பினை அடையும் பெண்களுக்குப் புத்தி புகட்டுவதில்லை. அதாவது, ஊசி இடம் கொடுத்தாற் தானே நூல் நுளைகிறது.

ஒருகாலத்தில் கொடிகட்டிப் பறந்த நடிகையான பானுப்பிரியா திரையுலகத்திற்குள் புகுமுன் சூறையாடப்பட்டாள் என எங்கேயோ படித்தது ஞாபகத்திற்கு வருகிறது. அவருக்காக வருத்தப்படுகிறேன். ஆனால் எல்லோரும் பானுப்பிரியாக்களா?

தற்கால நடிகையான த்ரிஷா, அலை எனும் படத்தில் தோன்றியவிதம் அருவருக்கத்தக்கது. அவர் நினைத்திருந்தால் (கூடவே துணிந்திருந்தால்) தடுக்கப்பட்டிருக்க முடியும். அந்தப் பாடற் காட்சியில் த்ரிஷா ஒரு தூணிற்கு முன்னால் அரைகுறையா நிற்க little super star (இவர் போன்றவர்கள் தாஙகளே சூடும் மகுடம்) உச்சியிலிருந்து உள்ளங்கால்வரை, தனது மனைவியுடன் கட்டிலின் மேல் தடவுவது போல் உரஞ்சுவது எப்படி. (வசன அமைப்பு சாணக்கியா போன்றவர்கள் எழுதும் நோக்கத்தில் எழுதப்படவில்லை) இதற்குத்தான் இன்னடிகைக்குச் சம்பளம் கொடுக்கப்படுகிறதா? அப்படி இருந்தால் சினிமாவில் நடிகைகள் என வரும்பொழுது scope எனப்படுவது அவர்கள் எவ்வளவுக்கும் விபச்சாரம் செய்ய ஒத்துளைக்கிறார்கள் என்பதில் தான் அளக்கப்படுகிறதா? இப்படி நிலை கிடக்க பெண்பாத்திரங்கள் வளமூட்டப்படுவது எப்படி? எல்லா விபச்சாரிகளாலும் சிவாஜி கணேசனாகவோ, கமல் ஹாசனாகவோ (தனுஷ்?, பரத்?) வருவது சாத்தியமா?

இதெல்லாவற்றையும் விட்டு நல்ல கதைகளை எடுக்கும் இயக்குனர்களைப் பார்த்தால் அவர்களும்கூட அருவருக்கத்தக்க செயற்கையூட்டப்பட்ட ஆபாசத்தை முன்னிறுத்துவது ஏன்? உதாரணமாக அண்மையில் வெளிவந்த 'செல்லமே' (காந்தி கிருஷ்ணா) எனும் திரைப்படத்தின் அடிப்படைக் கருப்பொருள் உன்னதமானது, உளவியல் ரீதியாக ஏற்றுக்கொள்ளப் படக்கூடியது. கதை இப்படி இருக்க ரீமா சென் ஆபாசப்பொருளாக camera முன் கொணரப்பட்டது ஏன்? சந்தர்ப்பத்தை வழங்கியது யார்? இடங்கொடுத்தது யார்?

விளக்கங்கள் போதுமாக இருக்குமென நினைக்கிறேன். ஆயினும் மட்டுப்படுத்தப்பவில்லை.

இக்கட்டுரை மூலம் நான் பெண்ணியம் பேசும் நபர்களைக் கேட்டுக்கொள்வது என்னவென்றால், இப்படியெல்லாம் நடக்கிறது எனப் புலம்புவதை விட்டுவிட்டு, சம்பசங்கள் நடப்பதை இனிமேலாவது தடுப்பதற்கு மூலைக்கல்லை நாட்டுங்கள்.

முதற்படியாக நடிகர் சங்கத்தில் ஒரு ஏற்பாட்டினை நடைமுறைப்படுத்த் முடியும்.....இது இலேசான கருமம் அல்ல.....

advance இனைக்கொடுத்துவிட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்தை வாங்கும் போது ஆடைக்களைவுக்கும் உத்தரவாதத்தைப் பெறுவதைத் தடுக்கும் வண்ணம் முன்னேற்பாடுகளை எடுக்கலாம். காரணம் இவ்வாறான ஒப்பந்தங்களே நடிகைகள் வஞ்சிகப்படுவதிலிருந்து விலக முக்கிய விலங்குகளாக இருக்கின்றன. சட்டரீதியான பாதுகாவலை உருவாக்குங்கள்

இதையும் மீறி காசுக்காக செயற்கைத்தனமாக உடலினைக் காட்டும் பெண்களுக்கு அறிவு புகட்டுவதும் எமது கடமையாகும். முக்கியமாக பெண்ணிய தீவிரவாதிகளின் (activist) கடமை. சினிமா இனிமேலும் விபச்சார ஊடகமாகத் திகழ்வது தடுக்கப்படவேண்டியது

நன்றி - விகடன்


?

Print this item

  இந்தப் பொண்ணுக்கு பையன் தேடுறாங்க...!!!
Posted by: kuruvikal - 12-24-2004, 04:09 PM - Forum: சினிமா - Replies (11)

<img src='http://www.thatstamil.com/images25/cinema/meena3-400.jpg' border='0' alt='user posted image'>

நடிகை மீனாவுக்கு மும்முரமாக மாப்பிள்ளை பார்க்கும் வேலை நடக்கிறது.

திமுக தலைவர் கருணாநிதியின் திரைக்கதை, வசனம் மற்றும் பாடலில் உருவாகும் கண்ணம்மா திரைப்படம் கிட்டத்தட்ட முழுமையடைந்து விட்டது. இந்தப் படத்தில் டிவி நடிகர்களான வெங்கட், பிரேம்குமார் ஆகியோருக்கு ஜோடியாக நடிகைகள் மீனா, விந்தியா நடிக்கின்றனர்.

இப்படத்தின் டப்பிங் உள்ளிட்ட பணிகள் நடந்து வருகின்றன. கருணாநிதி எழுதிய 4 பக்க வசனத்தை அழகாகக் பேசி பாராட்டு வாங்கினாராம் மீனா. விரைவில் படம் முழுமையடைந்ததும் கருணாநிதி அதைப் பார்க்கவுள்ளார். பிப்ரவரி மாதம் படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளார்கள்.

இந்தப் படத்தின் சூட்டிங் முடிந்து விட்டதால் மீனா கையில் இப்போது 2 படங்களே உள்ளன. அதில் ஒன்று எஸ்.ஜே. சூர்யா இயக்கத்தில் உருவாகும் அன்புள்ள நண்பரே.

இப் படத்திற்கு முதலில் பி.எப் என்று பெயர் சூட்டப்பட்டிருந்தது. தமிழ் பாதுகாப்பு இயக்கத்தின் 'அன்புக்' கட்டளைக்குப் பிறகு படத்தின் பெயர் மாற்றப்பட்டது.

இந்தப் படத்தில் மீனா நாயகி இல்லை. அதற்கு சிந்து துலானி இருக்கிறார். நியூ படத்தில் கிரண் நடித்தது போன்ற ஒரு 'கெரக்கமூட்டும்' வேடமாம் மீனாவுக்கு.

இது தவிர மானிடன் என்ற படத்தில் மீனா நடிக்கிறார். இதிலும் கொஞ்சம் கசமுச வேடம் தான் மீனாவுக்கு. காதல் வர வேண்டிய இளம் வயதில் ஒரு இளைஞன் காமத்தால் துடிக்கிறானாம். அந்த இளைஞனுக்கு அண்ணியாக மீனா நடிக்கிறாராம்.

இதற்கிடையே ரப்பர் டேன்சரின் வலையில் மீண்டும் சிக்கி மீண்டிருக்கிறார் மீனா என்கிறார்கள். முன்பு இருவரும் கல்யாணம் செய்து கொள்ளும் அளவுக்கு நெருங்கிப் பழக இடையில் பாய்ந்த மீனாவின் அம்மா மல்லிகா, மகளை படாதபாடு பட்டு மீட்டார்.

ஆனால், நடிகரும் மீனாவும் இப்போது வாய்ப்பு இல்லாமல் வீட்டில் குந்திக் கொண்டிருப்பதால் மீண்டும் இருவருக்கும் இடையே 'டச்' ஆரம்பித்ததாம். ஆனால் இம்முறையும் ரப்பரிடம் இருந்து மகளைக் காப்பாற்றிவிட்டாராம் மல்லிகா.

இதையடுத்து மகளுக்கு சட்புட்டென்று திருமணம் செய்து வைத்துவிட அம்மா தயாராகிவிட்டார். இதுவரை, இப்போ வேண்டாம் என்று சொல்லி வந்த மீனாவும் கூட திருமணத்துக்குத் தயாராகிவிட்டாராம்.

அண்மையில் நல்ல கணவன் அமைய வேண்டி திருவண்ணாமலையில் கிரிவலம் வந்தார். அதோடு கருமாரியம்மன் கோயிலும் மீனாவை அடிக்கடி பார்க்க முடிகிறது.

சமீபத்தில் ஒரு ஆங்கிலப் பத்திரிக்கையில் மீனாவின் பெயர் விவரத்தைச் சொல்லாமல் மாப்பிள்ளை தேவை விளம்பரமும் கொடுத்தார்களாம். நிறையவே ரெஸ்பான்ஸ்கள் வந்தாலும் மீனா வீட்டிற்கு ஒரே பிள்ளையாதலால், வீட்டோடு மாப்பிள்ளையாக இருக்க விருப்பம் தெரிவிப்பவர்களைத் தேடி வருகிறார் மல்லிகா.

அம்மா மாப்பிள்ளை தேட, மீனாவோ புதுசாக இரு நாய்களை வாங்கி வளர்த்து வருவதோடு தபால் மூலம் எம்.ஏ.(வரலாறு) படித்துக் கொண்டிருக்கிறார்.


தற்ஸ் தமிழ்.கொம்..!

Print this item

  நடிகை நக்மாவுடன் கோவில் கோவிலாக செல்லும் சாமியார்
Posted by: Vaanampaadi - 12-24-2004, 02:24 PM - Forum: சினிமா - Replies (6)

நடிகை நக்மாவுடன் கோவில் கோவிலாக செல்லும் சாமியார் - பக்தர்கள் வியப்பு

பழநி, டிச.24- நடிகை நக்மாவுடன் கோவில் கோவிலாக சாமியார் ஒருவர் உடன் செல்கிறார். இதனால் பக்தர்கள் வியப்படைந்துள்ளனர்.

விக்தி விகாஸ் கேண்ட்ரா நிறுவனர் பூஜ்யஸ்ரீ ஸ்ரீரவி சங்கர்ஜி கும்பகோணத்தை சேர்ந்தவர். இவர் இள வயதிலேயே யோகா முறைகளை கற்று பெங்களூரை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறார். தமிழ்நாட்டில் வாழும் கலை என்ற பெயரிலும் இந்தியாவின் பல இடங் களில் அந்தந்த மொழிகளில் மன்றங்கள் உள்பட உலகில் 146 நாடுகளில் தனது கிளைகளை அமைத்து தனது ஆசிரமத்தில் பயிற்சி பெற்ற ஆசிரியர்களை கொண்டு ஒவ் வொரு ஊர்களிலும் பொது மக்களுக்கு கட்டண அடிப் படையில் ஒரு வாரம் யோகா பயிற்சி அளித்து வருகிறார். இவர் தற்போது தமிழ்நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ளார். இவர் கொலை வழக் கில் கைது செய்யப்பட்ட காஞ்சி ஜெயேந்திரருக்கு ஆதரவாக குரல் கொடுத்தும் வருகிறார்.

நடிகை நக்மாவுடன் பயணம்

இவர் நடிகை நக்மாவுடன் சேர்ந்து கோவில் கோவிலாக சென்று வருகிறார். நேற்று முன்தினம் இவர்கள் ராமேசுவரம் கோவிலுக்கு சென்றனர். நேற்று காலை மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கும், மதியம் பழநி கோவிலுக்கும் சென்று சாமி கும்பிட் டனர். இவர் அந்தந்த ஊர்களில் பக்தர்களுக்கு அருளாசி உரை இன்னிசை நிகழ்ச்சி நடத்தினார்.

பழநி

நேற்று (வியாழன்) பழநி மலைக் கோவிலுக்கு வந்த இவர்கள் ரோப்காரில் சென்ற னர். அங்கு உச்சி கால பூஜையில் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். ரவி சங்கர்ஜிக்கும், நடிகை நம்மா விற்கும் கோவில் பிரசாதங் கள் வழங்கப்பட்டது. பின்னர் ரோப் கார் மூலம் கீழே அடி வாரத்தில் இறங்கி சித்த னாதன் திருமண மகால் வளாகத்தில் உள்ள ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி திருமண மண்டபத்திற்கு சென்றனர். அங்கு அவருக்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப் பட்டது. அதன் பின்பு அங்கு நடந்த கூட்டத்தில் பக்தர்களுக்கு அருளாசி வழங்கி உரையாற்றினார்.

வியப்பு

யோகா அமைப்பும் ஆன் மீகமும் கொண்டதாக கூறப் படும் ஸ்ரீரவிசங்கர்ஜியுடன் இப்போது சினிமாவில் புறக்கணிக்கப்பட்ட நடிகை நக்மா உடன் செல்வது வியப்பாக உள்ளது என்று பொதுமக்கள் பேசிக் கொண்டனர்.

நன்றி............தினகரன்

Print this item

  உங்களுடன் இணைய வந்திருக்கும் என்னையும்.............
Posted by: தமிழரசன் - 12-24-2004, 07:45 AM - Forum: அறிமுகம் - Replies (21)

யாழ் வலை வாசிகளுக்கு வணக்கம்.
என்னையும் உங்களுடன் சேர்த்துக் கொண்டால்தொடர்ந்து சந்திப்போம்....................



[/url][/b]

Print this item

  Count Down Start...
Posted by: DV THAMILAN - 12-24-2004, 05:46 AM - Forum: அறிமுகம் - Replies (4)

______________________________________________________________________
மாவீரர் நாளன்று கருணாவும் ஒரு 'உரை" நிகழ்த்தியிருந்தார். கருணாவை 'ர்" விகுதி போட்டு அழைப்பதிலுள்ள அபத்தம் புரிகிறது. இருந்த போதிலும் மரபைத் தவறவிடுவது மனித இயல்பன்று. எதிரியாயினும் மதிப்பளிப்பது மனித நடைமுறை. மனிதனையும் மிருகத்தையும் வேறுபடுத்தும் எல்லைக்கோடு இது. கருணா மனித விழுமியங்களில் இருந்து நழுவி விலங்குகளுடன் இணைந்து நீண்ட நாட்களாகிறது. அது தமது அறிவிற்கேற்றாற்போல் சிந்திக்கும் என்பது மூத்தோர் மொழி. கருணா தனது அறிவிற்குட்பட்டுச் சிந்திக்கிறார். அதற்காக நாம் எமது அறிவை இழந்துவிட முடியாது.

தமிழ் மக்கள் கருணா என்ற மனிதன் குறித்து கட்டமைத்திருந்த பிம்பம் -படிமம் எத்துணை வேகமாகக் கலைக்கப்பட்டிருக்கிறது. கருணா என்ற முன்னாள் போராளி மீது நாம் கட்டமைத்திருந்த பிம்பம் போரியல் 'மேதமை" என்ற கருத்திலிருந்துதான் பிறப்பெடுத்திருந்தது. இன்று அவரை துருப்புச்சீட்டாகப் பயன்படுத்தி களத்திலிறங்கத் தயாராகும் இனவாத -அந்நிய சக்திகளும் நம்புவதும் இதைத்தான். கருணாவை இன்று வெறுப்பவர்களில் பெரும்பாலானோர்கூட அவரின் இந்த 'மேதமையை" மறுதலிக்கவில்லை.

ஆனால் இனி இலங்கைத் தீவின்; போரியல் வரலாற்றில் கருணா என்ற மனிதனுக்கான பக்கங்கள் நிரந்தரமாக மூடப்பட்டுவிட்டன. இதை தர்க்க ரீதியாகவும் கோட்பாட்டு ரீதியாகவும் சுலபமாக நிறுவமுடியும். ஆனால் அதன் அவசியம் ஒன்றும் இப்போது ஏற்பட்டு விடவில்லை.

இங்கு கருணாவின் உரைக்கு எதிர்வினையாற்றும் நோக்கம் எனக்கில்லை. அதைவிட முட்டாள்த்தனம் வேறில்லை இந்த உலகில். நான் இங்கு பேச விழைவதும் கருணாவின் முன் வைப்பதும் போர் அறவியல் சார்ந்த கேள்வி ஒன்று.

கருணா தனது உரையில் தனது சகோதரன் றெஜியையும் கஸ்ரோ உள்ளிட்ட ஏழு உறுப்பினர்களையும் புலிகள் நயவஞ்சகமாக நித்திரையில் வேற்று மண்ணில் வைத்துக் கொலைசெய்து விட்டதாகப் புலம்பியிருந்தார். இந்தப் புலம்பலின் மூலம்தான் தானொரு போரியல் 'கத்துக்குட்டி" என்பதை நிரூபித்துள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து நீக்கப்பட்டபிறகு கருணா போரியல் பால பாடத்தையே மறந்துவிட்டதுபோல் தெரிகிறது. (முதலில் இந்தப் புலம்பல்களை நிறுத்துங்கள். ஒரு போர்வீரனுக்கு இது அழகல்ல. நீங்கள் ஒரு போரியல் மேதையாக வலம் வருவது ஒருபுறம் இருக்கட்டும்ää முதலில் அடிப்படைத் தகுதிகளைக் காப்பாற்றக் கற்றுக்கொள்ளுங்கள்.)

சந்தடி சாக்கில் தனது சகோதரனையும் நித்திரையில் வைத்து கொலை செய்ததாகக் குற்றம் சாட்டியுள்ளார் கருணா. ஆனால் றெஜியை சிங்கள இராணுவ முகாமுக்கு அருகில் வைத்து ஜெயந்தன் படையணிப் போராளிகள் கொன்றொழித்தனர். இது ஊரறிந்த கதை. பிறகு ஏன் வீண் வியாக்கியானங்கள். மற்றவர்களுக்கு பதவியில்லைää சகோதரருக்கு மட்டும் கேணல் பதவி கொடுத்திருக்கிறார் கருணா.

ஒரு படையணியில் பட்டாலியன்ää டிவிசன்ää பிரிக்கேட் என்றெல்லாம் அணிகள் பிரிக்கப்பட்டு பதவி வழங்கப்படுவது நாம் சொல்லித் தெரியவேண்டியதில்லை. இது இவ்வாறிருக்க நாலுபேர் கொண்ட ஒரு கும்பலில் எவ்வாறு ஒரு கேணல் முளைத்தார். கேலியாக இல்லையா? அல்லது ஒரு தொகுதி சிங்கள இராணுவ பட்டாலியனுக்கு றெஜி பொறுப்பாகச் செயற்பட்டாரா!

கொட்டாவ சம்பவத்திற்கு புலிகள் உரிமை கோரவில்லை. எதிரி எங்கிருந்தாலும் தேடிப்பிடித்து அழிப்பதுதான் போரியல் தந்திரம். சொந்த மண்ணில் சாக நினைத்தவர்களை வேற்றுமண்ணில் அழித்துவிட்டார்கள் என்ற கூச்சலுக்கு எந்தக் கனமும் கிடையாது.

சொந்த மக்களுக்கு துரோகமிழைத்துவிட்டு எதிரிகளுடன் கூடாரமடித்துத் தங்கியிருந்தவர்களை சரியான புலனாய்வுத் தகவல்களுடன் பின்தொடர்ந்து ஊடுருவி உளவு பார்த்து திட்டமிட்டு தாக்குதலை முடித்து வெற்றிகரமாக தளம் திரும்பிய அந்தப்போர் வீரர்கள் போரியல் விதிப்படி பாராட்டுக்குரியவர்கள். முன்னாள் போராளியான கருணாவுக்கு இது எப்படித் தெரியாமல் போனது. அழுது புலம்புகிறார்.

ஒன்றுமட்டும் தெளிவாகத் தெரிகிறது. புலியணியில் இருக்கும்வரை கருணாவும் மாவீரன்தான். ஆனால் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து என்று நீக்கப்பட்டாரோ அன்றே அவரது வீரமும் சேர்த்து உறிஞ்சப்பட்டு விட்டது. இன்று கருணாவில் ஒட்டிக்கொண்டிருப்பது மரண பயமும்ää அச்சமும்தான். கருணாவின் உரையைப் பார்த்தவர்களுக்கு உரை விளங்கியதோ இல்லையோ தெளிவாகத் தெரிந்த செய்தி இதுதான்.

கருணாவிற்கு ஒரு சிறு விண்ணப்பம். உங்களின் போரியல் தம்பட்டங்களை நம்பித்தான் சில அந்நிய சக்திகள் தமிழீழப் போரில் தலையிட முற்படுகின்றன. ஆனால் அதைப் புரிந்துகொள்ளாமல் மாவீரர் உரை என்ற பெயரில் பல அபத்தங்களைப் புரிந்திருக்கின்றீர்கள். இதன் மூலம் உங்கள் போரியல் கத்துக்குட்டித்தனம் அம்பலத்திற்கு வந்துகொண்டிருக்கிறது.

இந்த 'ரேஞ்சில" போனால் புலிகளுக்கு வேலையில்லாமல் போய்விடும். உங்களை அவர்களே அவர்களது மண்ணில் வைத்து நித்திரையில் நஞ்சை வைத்துக் கொன்றுவிடுவார்கள்.

இந்தக் கணக்கு தமிழர்கள் தீர்க்கவேண்டிய கணக்கு. தயவுசெய்து பொறுமை காக்கவும். இலங்கையில் யுத்த மேகங்கள் சூழத்தொடங்கிவிட்டன. எதிரிகளை வேண்டுமென்றால் களத்தில் கொல்லலாம் - ஆனால் துரோகிகளை சொந்த மண்ணில் வைத்துத்தான் கொல்லவேண்டும் என்ற எந்த விதியும் கிடையாது. புரிகிறதுதானே!

உங்களுக்கான நாட்கள் எண்ணப்படத் தொடங்கிவிட்டன.

Print this item

  மறந்தது பறந்தது...!
Posted by: kuruvikal - 12-24-2004, 04:51 AM - Forum: கவிதை/பாடல் - Replies (8)

<img src='http://kuruvikal.yarl.net/archives/gopika-simbu4-340.jpg' border='0' alt='user posted image'>

<b>கண்ணோடு கதை பேசி
கனி மொழி தான் பேசி
இனித்தவளே
இதயத்துள் இருக்கையிட
இதமாய் உட்கார்ந்து
என்னை வதைத்தவளே
அது வலி சுகம் என்று
ஆயுள் வரை
உன்னை சுமக்க எண்ண....

பறக்கும் துப்பட்டாவில்
கொழுக்கிபோட்டு அலைபவளே
யாருக்கிந்த பம்மாத்து என்ற....
"ஜீன்ஸ்" போட்டு
"சீன்" போட்டவளே
காலம் போல
கோலம் மாறும்
நவகால நங்கையே
விடுதலையின் நாயகியே
என்னைத் தெருவோடு விட்டாயே
இந்தா....
விடுதலை என்று...!

வீட்டுக்குள் நீ
அடங்கிக் கிடந்தாயாம்
அடக்கப்பட்டாயாம்
அப்போ
எப்படியாம் இப்போ
நீ நீயானாய்
இன்று நானெல்லோ
அடங்கிக் கிடக்கிறேன் உன்னோடு
எனக்காய்
ஒருவேளை தானும்
விடுதலைக் குயில் கூவாதோ
மறந்தவள் பறந்தவள்
நினைவது விடுதலை வாங்கிட....!</b>

நன்றி.. http://kuruvikal.yarl.net/

Print this item

  ஆண்களின் மாற்றம் குறித்து சில பெண்களின் பார்வை...!
Posted by: kuruvikal - 12-23-2004, 07:35 PM - Forum: சுமுதாயம் (வாழ்வியல்) - Replies (5)

<b>கலாசார சிலுவையை சுமக்க வேண்டியது பெண்கள் மட்டுமா?</b>

நம் சமுதாயத்தில் பெண்கள் வாழ்க்கையில் முன்னேறுகிறார்களா, மாற்றம் ஏற்பட்டுள்ளதா என்றுப் பார்க்கும்பொழுது முன்னேற்றம் நன்றாக தெரிகிறது. பெண் சிசு கொலை என்பது இன்னும் கிராமங்களில் இருக்கிறது என்றாலும், தொழிற்சார்ந்த பெண்கல்வி பெருகுவதால் ஹைவுஸ் ஒய்ப் என்ற கான்செப்ட்டும் இனி வரும் தலைமுறையில் இருக்குமா என்ற சந்தேகமும் எழுகிறது. வருடம் ஒருமுறை தமிழகம் வருவதால், பெண்கள் என்றால் வளர்ந்ததும் கல்யாணம் என்று மட்டுமே இல்லாமல், அவர்களின் படிப்பை குறித்த கருத்துக்களை, படிப்பறியாத பெற்றோர்கள் கூட கேட்கிறார்கள்.

ஆனால் இவை மட்டுமே போதுமா என்ற கேள்வியும், பெண்களின் சுயசிந்தனை என்பது முளையிலேயே மழுக்கடிக்கப்படுவதை பார்க்கும்பொழுது வேதனையாகத்தான் உள்ளது. படிப்பு வேலைக்கு என்றாலும் கணிணி வேலைக்கான ஐ.டியும், மருத்துவம் என்றாலும் பெண்களுக்கான மருத்துவம், குழந்தை மருத்துவம், பல் மருத்துவம் போன்றவை மட்டுமே படிக்க வலியுருத்தப்படுகின்றனர்.

இன்னும் பெண் பெரியவள் ஆனதை ஊர் கூடிக் கொண்டாடுவதும், அமெரிக்க மாப்பிள்ளை கிடைத்ததும், படித்த படிப்பை ஓரம் கட்டி வைத்து, பெரியவங்க நல்லதுதான் சொல்லுவாங்க என்று ஊர் கூடி பெண்ணை மூளை சலவை செய்வதும் அப்படியே இருக்கிறது. பெண்களின் எந்த விஷயமும் சமூகம் சார்ந்தே முடிவெடுக்கப்படுகிறது. உறவினரில் இருந்து, பக்கத்து வீட்டார் முதல் அறிவுரை சொல்லப்படும்.

பிரபல மகளிர் இதழ் ஒன்றில், தொலைக்காட்சி தொடரான " கோலங்கள்" , நாயகிக்கு இப்பொழுது விவாகரத்து கிடைத்துள்ளது.
அவருக்கு இரண்டாவது திருமணம் செய்யலாமா என்று பள்ளி மாணவிகளைக் கேட்டால், அத்தனை பேரும் பெண்ணுக்கு இரண்டாம் கல்யாணம் என்பது நம் கலாச்சாரத்துக்கு ஒத்து வராது என்று கிளிப்பிள்ளையாய் சொல்லியிருக்கிறார்கள். இன்னொரு கட்டுரையில் கிராமங்களில் இன்னும் உயிர்வாழ்ந்துக் கொண்டிருக்கும் இத்தகைய பழக்கங்களால்தான், நம் கலாச்சாரம் இன்னும் அழியாமல் இருக்கிறது என்ற சொல்லப்பட்டுள்ளது. "இந்த கலாசாரம்" எது தெரியுமா? பன்னிரண்டு வயது பெண்ணுக்கு ஊர் கூடி நடத்தும் மாராப்பு சேலை என்று வயது வந்ததும் நடத்தும் சடங்கு. அன்றைய காலக்கட்டத்தில் பெரியவள் ஆவது என்பது சுற்றத்தார்களுக்கு ஒரு அறிவிப்பு. என் மகள் தயாராய் இருக்கிறாள் என்று. அதிலும் சில பிரிவில் பெண் கேட்டுவர வேண்டும் என்று உள்ளது. ஆனால் இன்று இச்சம்பவம் நடந்த பிறகு வெளியுலகில் அச்சிறுமி கால் வைக்கும்பொழுது, பலவித மன உளச்சலுக்கும் ஆளாவாள் என்பதை நாம் கவனிக்க தவறுகிறோமே!

கலாசார சீரழிவு மற்றும் அதற்கான காரணங்கள் அதைக் கட்டிக்காக்க வேண்டிய பொறுப்பு அனைத்துமே பெண்களை வைத்தே சொல்லப்படுகிறது. இதில் எந்த இன, மதத்தைச் சார்ந்த ஆண்களின் பார்வை ஒன்றுதான். நம்கலாசாரம் என்ற பேச்சு எடுத்தால் உடனே ஆரம்பிக்கப்படும் முதல் விஷயமே, பெண்மைக்கு அழகான புடைவையும், நீண்ட கூந்தலும்தான்.

அறுபது ஆண்டுகளுக்கு முன்பு நம்நாட்டில் ஆண்கள் அனைத்து பிரிவினருக்கும் குடுமியும், கடுக்கனும் இருந்தது. வேட்டியும் துண்டுமே உடையாகவும் இருந்தது. பின்பு செளகரியம் கருதி முடியை வெட்டிக் கொண்டார்கள். கடுக்கனும் போனது. ஆனால் இன்று நாகரீக போர்வையில் அங்கும் இங்கும் தென்படுவதை விட்டு விடலாம். வேட்டி மேல் கோட்டும், பின்பு சூட்டு கோட்டும், அதற்கு பின்பு பேண்டு சட்டையாய் மாறியது. வீட்டில் வேட்டி போய், லுங்கி வந்தது. இன்று லுங்கி போயே போச்சு. வீட்டிலும், தெருவிலும், ஏன் பொது நிகழ்ச்சியிலும் ஆண்கள் அரை டிரவுசர் அணிந்து வருகிறார்கள். ஆனால் இது கலாசார இழிவு என்று யாராவது பேசினார்களா என்ன? உட்காரும்பொழுது, அரை டிரவுசர், தொடைக்கு மேல் ஏறி கால் டிரவுசராய் மாறி எதிரில் உட்காருபவர்களை நெளிய வைக்கும்.
பதினெட்டு வயதில் இருந்து வயதான கிழங்கள் வரை இந்த உடைதான்.

பெண்ணின் உடை, கண்ணியமாகவும், கவுரவமாகவும், எதிர்பாலினரின் உணர்ச்சியை உசுப்பேத்தும்படியும் இருக்கக்கூடாது என்று சவுண்டு விடுபவர்கள், மத குருமார்கள் முதல் கொண்டு குருமூர்த்தி, சோ வரை இதை ஏன் கலாசார சீரழிவு என்றுச் சொல்லுவதில்லை? அதிலும் இந்த அரை டிரவுசர் கலாசாரம் படித்த, நாகரீகமான, மேல்தட்டு ஆண்களின் உடையாக மாறிவிட்டது. பெண்களின் உணர்வுகளை உசுப்பேத்தும் விதமெல்லாம் இல்லை, இது என்ன கண்ராவி தரிசனம் என்று மானசீகமாய் தலையில் அடித்துக் கொண்டு எழுந்தோட வைக்கிறது.

ஆனால் புடைவையை விட செளகரியமான, உடல் முழுவதும் மூடும் சல்வார் கம்மீசும், வேலைக்குப் போகும் பெண் காலை அவசரத்தில் நேரத்தை மிச்சப்படுத்த வெட்டிய தலைமுடியும் இவர்கள் கண்ணுக்கு ஏன் உறுத்தலாய் இருக்கிறது என்று புரியவில்லை? ஹவுஸ் கோட் என்பது இன்னும் கூட்டு மற்றும் மாமியார் மாமனார் வசிக்கும் வீட்டு பெண்கள் அணிவது சரியில்லை என்று சொல்லப்படுகிறது.

கலாச்சாரம் என்பது மாறிக் கொண்டிருக்கும் விஷயம். உணவு, உடை, பேச்சு, நடவடிக்கை அனைத்தும் சேர்ததுதான் காலசாரம். காலை கஞ்சி, கூழ் போன்றவைப் போய், இட்லி தோசை ஆனது இன்று ரொட்டியும், கார்ன் பிளேக்சுமாய் மாறிப் போனது. மாறி வரும் மொழிக்கு உதாரணம் வேண்டும் என்றால் ஐம்பது அறுபது வருடத்துக்கு முந்திய கதைகளைப் படித்தால் தமிழ் எப்படி மாறியிருக்கிறது என்று தெரிய வரும்.

ஆக கலாசாரம் என்ற வெறும் பம்மாத்து வார்த்தை, ஆண்டாண்டு காலமாய் பெண்ணை அடக்கி ஆளும் ஆண்களுக்கு
கிடைத்த துருப்பிடித்துப் போன ஆயுதம். ஆனால் பெண்களின் சிந்தனையில் மாற்றம் வந்துக் கொண்டு இருக்கிறது. உதாரணம்,
தொலைக் காட்சி தொடரைப் பற்றி மேலே குறிப்பிட்டிருந்தேனே, அதில் இல்லத்தரசிகள் தொலைக்காட்சி தொடரின் நாயகிக்கு
மறுமணம் செய்து வைக்க சொன்னார்களாம். காலம் மாறுகிறது, பெண்களின் எண்ணங்களும் மாறுகிறது. வளரும் இளைய தலைமுறைக்கும் சுயசிந்தனையை வளர்க்க வேண்டும். ஆனால் சுய சிந்தனை என்ற பெயரில் கட்டுப்பாடற்ற வாழ்க்கையை சொல்லவில்லை.

நன்றி : http://womankind.yarl.net/

Print this item

  &quot;காதல்&quot; படம் பார்க்கத்தவறவேண்டாம்
Posted by: aathipan - 12-23-2004, 07:32 PM - Forum: பொழுதுபோக்கு - Replies (3)

<img src='http://www.tamilcinema.com/CINENEWS/GALLERY/MOVIES/kaathal00/kaath02.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://www.tamilcinema.com/CINENEWS/GALLERY/MOVIES/kaathal00/kaath04.jpg' border='0' alt='user posted image'>

சங்கரின் தயாரிப்பில் பாலாஜி சக்திவேலின் இயக்கத்தில் இப்போது சென்னையைக் கலக்க ஆரம்பித்திருப்பது காதல். இந்தப்படத்திற்கு போதிய விளம்பரங்கள் எதுவும் செய்யப்படவில்லை. அற்புதமான படங்களுக்கு ஏன் விளம்பரஙகள் என்று விட்டுவிட்டார்கள் போல. உண்மையில் ஒரு காவியம் இந்தப்படம். ரெயின்போக்காலனி மற்றம் காதல் கொண்டேன் போன்ற படங்களை எல்லாம் எடுத்து ஏப்பம் விடும்அளவு இந்தப்படம் கலக்கப்போகிறது. இனி சக்திவேல்தான் சூப்பர் இயக்குனர்.

இந்தப்படம் ஒரு உண்மைக்கதை. அதனால் எதிலும் செயற்கைத்தன்மை இல்லை. ஒரு ஏழை மெக்கானிக்குக்கும் ஒரு பணக்கார சாதிவெறிபிடித்த ஒரு தாதாவின் மகளுக்கும் இடையில் ஏற்பட்ட காதலும் அதனால் அவர்கள் வாழ்வில் ஏற்பட்ட நிகழ்வுகளும்தான் படம். கதையைச்சொன்னால் நன்றாக இருக்காது. அதனால் அதை திரையில் இரசியுங்கள். இசை அற்புதமாக உள்ளது. காதல் காட்சிகள் இயற்கையாக உள்ளன. உண்மையில் இந்தப்படம் இரண்டுநாட்களாவது அதன் சிந்தனையில் இருக்க வைக்கும். பரத் நடித்துள்ளார் கதாநாயகனாக ஆனால் எல்லாப்பாத்திரங்களும் சம அளவு முக்கியத்துவம்பெற்றுள்ளன. கதாநாயகி பெயர் தெரியவில்லை. ஆனால் நல்லபடி தனது வேலையை செய்துள்ளார்.

Print this item

  எம் தேசத்தின் எதிர்காலத்தை தத்தெடுங்கள்
Posted by: shiyam - 12-23-2004, 06:34 PM - Forum: புலம் - Replies (7)

எம் தேசத்தின் எதிர்காலத்தை தத்தெடுங்கள்.. எம்தேசத்தின் எதிர்காலம் இன்றைய குழந்தைகளே யுத்தத்தால் பாதிக்கப்பட்டு தமது உறவுகளை இழந்த மற்றும் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை தத்தெடுத்து எமதுதேசத்தின் எதிர்காலத்தை காப்பாற்றுங்கள் உறவுகளே.அவர்களிற்கான மாதாந்த கல்வி மற்றும் உணவு செலவு வெறும் 25 யுறேக்களே மேலதிக விபரங்களிற்கு உங்கள் நாடுகளில் உள்ள தமிழர் புனர்வாழ்வு கழகத்தை நாடுங்கள்

Print this item