Yarl Forum
கிழக்கின் அனர்த்தத்திற்கு உறவுகளின் உதவிப்பயணம - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12)
+--- Thread: கிழக்கின் அனர்த்தத்திற்கு உறவுகளின் உதவிப்பயணம (/showthread.php?tid=6142)



கிழக்கின் அனர்த்தத்திற்கு உறவுகளின் உதவிப்பயணம - thileepan2005 - 12-21-2004

கிழக்கில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு அரச, அரச சார்பற்ற நிறுவனங்களால் போதிய உதவிகள் இன்றி அல்லலுறும் எமது உறவுகளுக்கு எமது மக்கள் வழங்கும் உதவிகளை ஒருமுகப்படுத்தி சேகரித்து உரிய முறையில் கொண்டு சென்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்குவதற்காக மக்களால் உருவாக்கப்பட்டதே இந்த அமைப்பாகும்.

இந்த அமைப்பின் அலுவலகம் 43இ3ம் குறுக்குத் தெருஇ யாழ்ப்பாணம் எனும் முகவரியில் இயங்கும்.
தொலைபேசி 0212223739

சேகரிக்கும் பொருட்கள் - 1 உலர் உணவுப் பொருட்கள்
2 பால்மா
3 மருந்து வகைகள்
4 சிறுவர்களுக்கான புதிய உடைகள்

அமைப்பின் செயற்பாடுகள்

1. இவ் அமைப்பை நிறுவி செயற்படுத்துவதற்கு முன்னின்ற பல மக்கள் அமைப்புக்கள் தங்கள் பிரதேசத்திலுள்ள அனைத்து வளங்களையும் பயன்படுத்தி மக்களுக்கு இச் செயற்பாட்டின் அவசியத்தை விளங்க வைத்தல்

2. மக்களால் வழங்கப்படும் உதவிகளைச வாகனங்களில் சேகரித்தல்.

3. சேகரித்த உணவுப் பொருட்களை தரம் பிரித்து பொதி செய்து பாதுகாத்தல்.

4. 25ஃ12ஃ2004 ம் திகதி கிழக்கு மாகாணத்திற்கு இப் பொருட்களை வாகனத்தொடரணி மூலம் கொண்டு சென்று மக்களுக்கு வழங்குதல்.

5. உதவிகள் பணமாகப் பெற்றுக்கொள்ளப்படமாட்டாது.
[/b]


- thileepan2005 - 12-21-2004

பாராட்டத்தக்கவிடயம நானஇபபோதேபோன்செயகிறேன் <!--emo&:o--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/ohmy.gif' border='0' valign='absmiddle' alt='ohmy.gif'><!--endemo-->


- இராவணன் - 12-22-2004

கருத்து நகர்த்தப்பட்டுள்ளது.