Welcome, Guest
You have to register before you can post on our site.

Username
  

Password
  





Search Forums

(Advanced Search)

Forum Statistics
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244

Full Statistics

Online Users
There are currently 397 online users.
» 0 Member(s) | 394 Guest(s)
Applebot, Bing, Google

Latest Threads
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,323
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,233
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,608
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,299
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,644
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,079
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,468
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,504
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,041
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,240

 
  இலங்கை கடற்படையினரின் தாக்குதலில்
Posted by: Nada - 12-20-2004, 03:17 PM - Forum: செய்திகள் : தமிழீழம் - Replies (4)

இலங்கை கடற்படையினரின் தாக்குதலில்
இந்திய மீன்பிடி படகு கடலில் மூழ்கடிப்பு

சென்னை,

இந்திய மீனவர்களின் மீன்பிடிப்படகு ஒன்றை இலங்கைக் கடற்படையினர் நேற்று முன்தினம் தாக்குதல் நடத்தி கடலில் மூழ்கடித்து விட்டதாக இந்திய தொலைக்காட்சி நேற்று பிற்பகல் அறிவித்தது.
அச்செய்தியின் விபரம் வருமாறு:
இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்துவதாகக் கூறி இராமேஸ்வரம் மீனவர்கள் கடந்த ஒரு வாரகாலமாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வந்தனர்.
எனினும் கிறிஸ்மஸ் பண்டிகை வருவதால் இவர்கள் வேலை நிறுத்தத்தை கைவிட்டு நேற்று முன்தினம் இரவு கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர்.
நேற்று முன்தினம் நள்ளிரவில் இவர்கள் கச்சதீவுக்கு அருகில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்பொழுது இலங்கைக் கடற்படையினர் அங்கு வந்து இவர்கள் மீது தாக்குதல் நடத்தி அவர்களை துரத்திவிட்டனர்.
அத்துடன் அவர்களின் மீன்பிடிப்படகு ஒன்றின் மீது தாக்குதல் நடத்தி அதனைக் கடலில் மூழ்கடித்துவிட்டனர். இதிலிருந்த மீனவர்கள் ஒருவாறு நீந்தி கரைசேர்ந்தனர். இவ்வாறு அந்தச் செய்தி தெரிவித்தது.

நன்றி வீரகேசரி

இதற்காகத்தானே அவசரஅவசரமாக பயிற்சி கொடுத்துவிட்டவை. தன்னுடைய நாட்டு மக்களை கொல்வதற்கு இன்னொரு நாட்ட இராணுவத்தக்கு பயிற்சி கொடு;க்கிறவை இந்தியாவாகத்தான் இருக்கும்.

Print this item

  சற்சூத்திரர்களான சைவ மடாதிபதிகள்
Posted by: hari - 12-20-2004, 11:12 AM - Forum: செய்திகள் : தமிழீழம் - Replies (1)

[size=18]சற்சூத்திரர்களான சைவ மடாதிபதிகள்

<b> பழ. நெடுமாறன்</b>

தமிழ்நாட்டில் உள்ள சைவ மடங்கள் தொன்மையும் பாரம்பரியமும் மிக்கவையாகும். சைவமும் தமிழும் வளர்க்கத் தோற்றுவிக்கப்பட்டவை.

""இறைவன் என்னைப் படைத்தனன் தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறே'' என்ற வாக்கிற்கு இணங்க இறைத்தொண்டும் தமிழ்த்தொண்டும் செய்யப் பிறந்தவை. மூவர் தேவாரங்கள், தேனினுமினிய திருவாசகம், இவற்றிற்கான தமிழ்ப்பண்கள் ஆகியவற்றைப் பேணிக் காக்கும் கடமை சைவ மடங்களுக்கு உண்டு.

சேக்கிழார் பாடிய பெரியபுராணத்தில் சாதி வேறுபாடின்றி எல்லாச் சாதிகளையும் சேர்ந்த நாயன்மார்களும் போற்றிச் சிறப்பிக்கப்பட்டதைப் பின்பற்றிச் சாதிப்பாகுபாடு இல்லாத சைவ சமயத்தை வளர்க்கத் தங்களை அர்ப்பணித்துக் கொள்ள வேண்டியவை சைவ மடங்கள்.

தமிழ்நாட்டுச் சிற்பக் கலைக்கு உன்னதமான எடுத்துக்காட்டுக்களாகத் திகழும் கோயில்கள் சிதிலமடைந்தபோது உழவாரத் திருப்பணி செய்து அவற்றைப் பேணிக்காக்க வழிகாட்டிய திருநாவுக்கரசரைப் பின்பற்றித் தொண்டு புரிய வேண்டிய கடமை சைவ மடாதிபதிகளுக்கு உண்டு. ஆனால் தமிழகத்தில் உள்ள சைவ மடங்களில் பெரும்பாலானவை மேற்கண்ட கடமைகளைத் தவிர வேறுவேலைகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.

அண்டைநாடான இலங்கையில் திரிகோணமலையில் உள்ள கோணேசுவரம் கோயில், மன்னாரில் உள்ள திருக்கேதீசுவரம் கோயில் ஆகியவற்றில் உள்ள இறைவர்களைப் பாடி வணங்கினார்கள் சம்பந்தர், சுந்தரர் ஆகியோர். ஆனால் பாடல்பெற்ற அந்தக் கோயில்களும், மற்றும் நூற்றுக்கணக்கான சைவக் கோயில்களும் சிங்கள இனவெறியர்களால் இடித்துத் தகர்க்கப்பட்டபோது சைவமடாதிபதிகள் யோக நித்திரையில் ஆழ்ந்திருந்தனர்.

சைவ சமயத்தைப் பின்பற்றிய ஈழத்தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டபோதும் சைவ மடாதிபதிகள் வாயிருந்தும் ஊமையராக விளங்கினார்கள். சைவ¬ம் தமிழும் தழைக்க வேண்டுமானால் ஈழத் தமிழர்கள் உயிரோடு இருக்க வேண்டும். ஈழத் தமிழினமே அழியுமானால் சைவம் தழைப்பது எப்படி? தமிழ் வளர்வது எப்படி?

தமிழ் மன்னர்களின் ஆணையின் வண்ணம் தமிழ்நாட்டுச் சிற்பிகளால் எழுதப்பட்ட கோயில்களில் தமிழ் நுழையத் தமிழ்ப் பகைவர்கள் தடை விதித்தனர். கோயில்களில் இறைவனைப்பாடி வழிபாடு செய்வதற்காகவே எழுதப்பட்ட தேவார, திருவாசகங்களைத் தீட்டு மொழி எனப் புறந்தள்ளிவிட்டுத் தமிழர்களுக்குப் புரியாத வடமொழியில் வழிபாடு நடத்தப்பட்டு வருகிறது. சைவ மடங்களுக்குச் சொந்தமான நூற்றுக்கணக்கான கோயில்களிலும் இதே நிலைதான்.

இவற்றுக்கு எதிராகக் குரல் கொடுக்க ¬முன்வராத சைவ மடாதிபதிகள் தங்களின் நீண்ட தூக்கத்தில் இருந்து விழிப்புப் பெற்று அவசர அறிக்கையொன்றைக் கூட்டாக வெளியிட்டுள்ளனர்.

தமிழ்நாட்டுக் கோயில்களில் தமிழிலேயே வழிபாடு நடத்த வேண்டும் என்பதை வலியுறுத்தும் அறிக்கையா? அல்ல! அல்ல! அல்லவே அல்ல!

இலங்கையில் இடிக்கப்பட்ட சைவக் கோயில்களைப் புதுப்பித்துக்கட்ட உழவாரப் பணியை மேற்கொண்டு அங்குச் செல்லப் போவதாகக் கூறும் அறிக்கையா?

அல்ல! அல்ல! அல்லவே அல்ல!

பித்தா! பிறை சூடிப் பெருமானே! என நாள்தோறும் சிவனை வழிபட்டு உருகும் நமது மடாதிபதிகள் இப்படியெல்லாம் செய்யப் பித்தர்களா? இறைவன் வேண்டுமானால் பித்தனாக இருக்கலாம். இவர்கள் ஒரு போதும் பித்தர்களாக மாட்டார்கள். அதிர்ச்சியுடனும், அளவிலாத துயரத்துடனும் அவர்கள் கடந்த 171104 அன்று கீழ்க்கண்ட அறிக்கையை வெளியிட்டுள்ளார்கள்.

தமிழகச் சைவ ஆதினத் திருமடங்களான திருவாவடுதுறை, தருமபுரம், குன்றக்குடி, திருப்பனந்தாள், பேரூர் மற்றும் கவுமார திருமடங்களின் தலைவர்கள் சார்பாகக் குன்றக்குடிப் பொன்னம்பலத் தேசிகர் வெளியிட்டுள்ள அறிக்கை:

மிகப் பெரிய இந்து சமயத்தலைவர் காஞ்சி ஜெயேந்திரரை முன்னறிவிப்பு இன்றி, வக்கீல் இல்லாமல் இரவில் கைது செய்திருப்பது இந்து சமுதாய மக்களுக்கும், இந்து சமயத் தலைவர்களுக்கும் பெரும் அதிர்ச்சியைத் தந்துள்ளது. ஆயிரத்து 500 ஆண்டுக்கு மேற்பட்ட ஒரு பெரிய திருமடத்தின் தலைவரை, அவர்களுக்குரிய மரியாதையோடு விசாரிக்க வேண்டும். அரசியல்வாதிகளுக்குக் கொடுக்கப்படும் மரியாதை, வசதிகள் கூட அவருக்கு அளிக்கப்படாமல் கைது செய்திருப்பது முறையானதா என்பதைச் சிந்திக்க வேண்டும். சட்டத்தின் ¬முன் அனைவரும் சமம் என்பது உண்மை.

ஆனால், சட்டத்தைப் பிரயோகப்படுத்தும்போது அவர்களுக்குரிய தன்மையையும் இடத்தையும் பொறுத்துச் செயல்பட வேண்டியது மரபு. ஜெயேந்திரர் இந்து சமுதாயத்துக்காக அரும்பாடுபட்டு வருபவர். இந்து மக்களின் பெரும் மதிப்பைப் பெற்றவர். இவருக்கு இந்நிலை ஏற்பட்டது குறித்துப் பெரிதும் வருந்துகிறோம். உண்மையைக் கண்டறிந்து தடம் புரளாமல் நேர்மை தவறாமல் நன்கு சிந்தித்து விசாரணை செய்ய வேண்டும். (தினமணி 19.11.04)

ஆதிசங்கரரின் அத்வைத வேதாந்தத்தைச் சைவத் தமிழர்கள் ஒரு போதும் ஏற்றுக் கொண்டவர்களல்லர். சைவ சித்தாந்தத்திற்கு எதிரிடையானது எனக் கருதினார்கள். ஆதிசங்கரரின் தத்துவத்தை ""மிண்டிய மாயாவாதம் எனும் சண்டமாருதம் சுழித்து அடித்து ஆர்த்தது'' என மாணிக்கவாசகர் குறிப்பிடுகிறார்.

சைவ சித்தாந்த சாத்திரங்களில் மிகச் சிறந்ததான ""சிவஞான சித்தியார்'' எழுதிய அருள்நந்தி சிவாச்சாரியர் ""பரபக்கத்தில் மாயாவாதம்'' என்று சங்கரரின் அத்வைதத்தைச் சாடியுள்ளார். மாயாவாதத்தைப் பின்பற்றும் சங்கராச்சாரிகள் சிவன் கோயில்களில் நுழைவதே தவறு என்பதே உண்மையான சைவர்களின் கருத்து.

ஆனால் சைவக் கோயில்கள் அனைத்தும் சங்கராச்சாரியின் கட்டுப்பாட்டுக்குள் போனபோது ¬முணுமுணுப்புச் செய்யக்கூட முன்வராத சைவ மடாதிபதிகள் பரபரப்புடன் இப்போது அறிக்கை வெளியிடுகிறார்கள்.

""தமிழ்நாட்டுக் கோயில்களில் தமிழ்வழிபாடு கூடாது. வடமொழி வழிபாடே இருக்க வேண்டும்'' எனப் பிடிவாதமாகவும் ஆணவமாகவும் கூறிவரும் ஜெயேந்திரருக்கு ஆதரவாக அவசர அவசரமாக அறிக்கை வெளியிட்டுள்ளனர் சைவமும் தமிழும் தழைக்க வந்த மடாதிபதிகள்.

அடடா! என்ன கவலை? எத்தகைய அக்கறை? இந்தக் கவலையும் இந்த அக்கறையும் இவர்களிலேயே ஒருவர் கைது செய்யப்பட்ட போது உருவாகாதது ஏன்? சைவமடங்களில் பெரியதும் தலையாயதுமான திருவாவடுதுறை ஆதின இளைய சன்னிதானம் மீது கடந்த ஆண்டு கொலை முயற்சி வழக்குத் தொடரப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார். சாதாரண கிரிமினல் குற்றவாளியைப் போலவே அவர் நடத்தப்பட்டார். அவருக்குப்பிணை கிடைக்கவே 8 மாதங்களுக்கு மேலாயிற்று. இவ்வளவுக்கும் கொலை முயற்சிச் சதிக்கு உடந்தையாக இருந்தார் என்பதுதான் அவர் மீதான குற்றச்சாட்டு.

ஆனால் கொலைக்குற்றத்திற்கு ஆளான ஜெயேந்திரரைக் கைது செய்ததன் மூலம் இந்து சமயத்திற்கு ஊறு விளைவிக்கப்பட்டுவிட்டதாக அங்கலாய்க்கும் சைவமடாதிபதிகள் திருவாவடுதுறை இளைய ஆதினம் கொலை முயற்சிக் குற்றத்திற்காகக் கைது செய்யப்பட்டபோது வாய்மூடிக் கிடந்தது ஏன்? சிவமே எனச சும்மா கிடந்தது ஏன்?

""தமிழைப் பழித்தவனை என் தாய் தடுத்தாலும் விடேன்'' என முழங்கினார் புரட்சிக் கவிஞர். ஆனால் ""தமிழ் நீச பாஷை'' என வாய் கூசாமல் பழித்தவரும், கொடிய கொலைக் குற்றத்திற்கு ஆளானவருமான ஒருவருக்காகக் கண்ணீர் வடிக்கும் சைவ மடாதிபதிகள் தாங்கள் ""சற்சூத்திரர்களே'' என்பதை மீண்டும் உறுதி செய்துள்ளனர்.

(தென்செய்தி டிசம்பர் 01-15 இதழில் வெளியான கட்டுரை)

பழ.நெடுமாறனை ஆசிரியராகக் கொண்ட தென்செய்தி, மாதமிருமுறை இதழாக வெளிவருகிறது. சந்தா செலுத்த மற்றும் தொடர்பு கொள்ள விரும்பும் நண்பர்கள் பின்வரும் முகவரியில் முயலலாம்.

தென்செய்தி, 33, நரசிம்மபுரம், மயிலை, சென்னை 600 004. தொலைபேசி : 914424640575, தொலைநகலி : 914424953916

பழ. நெடுமாறன்( seide@md2.vsnl.net.in )

thatstamil.com

Print this item

  மீண்டும் கட்டுநாயக்க தாக்குதல் வீடியோ
Posted by: Sriramanan - 12-20-2004, 10:00 AM - Forum: குறும்படங்கள் - Replies (12)

கட்டுநாயக்க விமான நிலையத் தாக்குதல் வீடியோ விபரணம் மீண்டும் ஈழத் தமிழ் இணையத்தில்

http://www.eelatamil.com/movies

Print this item

  ஜேர்மனியிலும் Gang.
Posted by: ஊமை - 12-20-2004, 08:33 AM - Forum: செய்திகள் : தமிழீழம் - No Replies

அதுசரி அப்ப நீங்களும் இதை அறிந்துவிட்டீர்கள்.

Print this item

  india vs tamil eelam
Posted by: DV THAMILAN - 12-20-2004, 05:00 AM - Forum: செய்திகள் : தமிழீழம் - Replies (28)

என்ன இந்தியா பிரபாகரனை பிடிக்கிறதுக்கு 14 நாட்கள் போதுமாம்...........................

கேக்கிறவன் தமிழனா இருந்தா நிச்சயமா சொல்வான்.................7 நாட்கள் போதும் இந்தியா கோமண்டாக்களை முடிப்பதுக்கு............



நன்றி

டி.வி ..தமிழன்

கேட்டதை அறிந்ததை உங்களுக்கு எடுத்து வந்தேன்......................

Print this item

  ¦¸¡ØõÒìÌ ´ºÁ¡ ÌØÅ¢É÷ Å¢ƒÂÁ¡???
Posted by: Danklas - 12-20-2004, 12:02 AM - Forum: நகைச்சுவை - Replies (9)

சர்வதேச தீவிரவாதி ஒசாமா பின்லேடனின் அமைப்பான அல்-ஹைடாவின் உறுப்பினர்கள் கொழும்புக்கும் கிழக்கு மாகாணத்திற்கும் வந்து போனதாகவும் அவர்களைப் பொறுத்த வரை இலங்கை தற்போது முக்கியத்துவம் பெறாத நாடாக காணப்படுகின்றது என்றும் 2002 ஆம் ஆண்டு இலங்கையிலிருந்து வெளியேற்றப்பட்ட சர்ச்சைக்குரிய பத்திரிகையாளர் போல் ஹாரிஸ் குறிப்பிட்டுள்ளார். இலங்கையில் சமாதானத்திற்கான உலக கூட்டணி என்ற அமைப்பு ஏற்பாடு செய்திருந்த மாநாட்டில் தெரவித்தார்...

<img src='http://img138.exs.cx/img138/8862/jhl.jpg' border='0' alt='user posted image'>


¿ýÈ¢ ¨ºÀ÷¾Á¢ú ¸ÅâÁ¡ý...

Print this item

  திருப்பாச்சி
Posted by: Mathan - 12-19-2004, 06:09 PM - Forum: சினிமா - Replies (70)

திருப்பாச்சி பாடல்களை கேட்டீர்களா? எப்படி இருக்கின்றது?

Print this item

  அரசியல்: ஒரு விளக்கம்
Posted by: Vaanampaadi - 12-19-2004, 05:49 PM - Forum: நகைச்சுவை - Replies (10)

அரசியல்: ஒரு விளக்கம்

ஒரு ஊரில் ஒரு சின்னப்பையன் தன்னுடைய அப்பாவிடம் சென்று "அரசியல் என்றால் என்ன அப்பா" என்று கேட்டான்.

அப்பா சொன்னார் "பையா, இப்படி உனக்கு விளக்க முயற்சிக்கிறேன். நான் இந்த குடும்பதிற்க்கு சம்பாதித்து,சாப்பாடு கொண்டுவருகிறவன். என்னை முதலாளி என்று கூப்பிடலாம். உன்னுடைய அம்மா,
நன் கொண்டுவரும் பணத்தை நிர்வகிக்கிறாள்.
ஆகவே அவளை அரசாங்கம் என்று அழைக்கலாம்
நாங்கள் உங்களை கவனித்துக்கொள்கிறோம். நீயும் உன் தம்பியும் நம் பொதுமக்கள். நம்வீட்டு வேலைக்காரியை உழைக்கும் வர்க்கம் என்று அழைக்கலாம். உன் தம்பியை எதிர்காலம் என்று கூப்பிடலாம். இப்படி நான் சொன்னதைப்பற்றி....புரிகிறதா என்று யோசித்துப்பார்" என்றார் அப்பா.

பையன் அப்பா சொன்னதைப்பற்றி யோசித்துக்கொண்டே படுக்கப்போய்விட்டான்.

இரவில் தம்பி அழும் குரல் கேட்டு எழுந்தான் பையன். தம்பி படுக்கையில் மலங்கழித்து புரண்டு அழுக்காகக்கிடந்தான்.
அபபா அம்மாவின் அறைக்குச் சென்று எழுப்ப முயற்சிசெய்தான். அம்மா ஆழ்ந்த நித்திரையில் இருந்தாள். அப்பாவை அந்த அறையில் காணவில்லை. அம்மா ஆழ்ந்த நித்திரையில் இருப்பதால் அவளை எழுப்ப வேண்டாம் என எண்ணி வேலைக்காரியின் அறையைத்தட்டினான். கன நேரமாக தட்டியும் கதவு திறக்கப்படாததால் சாவி ஓட்டை வழியாக பார்த்தான். அப்பாவேலைக்காரியுடன் எசகுபிசகாக படுத்திருந்தார். அதன்பின்னர் அவன் திரும்பி தன் படுக்கைக்கு
சென்று படுத்துவிட்டான்.

அடுத்தநாள் காலையில் அப்பாவைப்பார்த்து "அப்பா எனக்கு இப்ப அரசியல் நல்ல வடிவாக புரிந்துவிட்டது" என்றான்;.

அப்பா உடனேää "அடடே...நல்ல பையன். உன்னுடைய வார்த்தைகளிலேயே உனக்கு அரசியல் பற்றி என்ன புரிந்தது என்று சொல் பார்க்கலாம்" என்றார்.

அதற்கு பையன் சொன்னான் <b>" முதலாளி உழைக்கும் வர்க்கத்தை பலாத்காரம் செய்து அனுபவித்துக்கொண்டிருக்கும் போது அரசாங்கம் நன்றாகத்தூங்கிக்கொண்டிருக்கிறது. மக்கள் உதாசீனம் செய்யப்படுகிறார்கள். எதிர்காலம் ஒரே மலமாக இருக்கிறது.....இதுதான் அரசியல்."</b>

Print this item

  Tamil Gangs
Posted by: Mathan - 12-19-2004, 05:27 PM - Forum: புலம் - Replies (37)

Tamil Gangs

புலத்தில் நிறைய தமிழ் இயங்குவதாக சொல்கின்றாகள். அது குறித்த தகவல்கள் தெரிந்தால் சொல்லுங்களேன்?

Print this item

  யாழ் கள தலைப்பு
Posted by: Mathan - 12-19-2004, 05:06 PM - Forum: உங்கள் கருத்துக்கள் - Replies (13)

யாழ் கள தலைப்பு (Page Title - "ownz by mtoloko") வித்தியாசமாக தெரிகின்றதே? ஏதும் வைரஸ் தாக்குதலா?

Print this item