![]() |
|
கவிஞர் ச.வே பஞ்சாட்சரம் - "பூகம்ப பூக்கள்" கவிதை தொகுப்பு - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11) +--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52) +--- Thread: கவிஞர் ச.வே பஞ்சாட்சரம் - "பூகம்ப பூக்கள்" கவிதை தொகுப்பு (/showthread.php?tid=6163) Pages:
1
2
|
கவிஞர் ச.வே பஞ்சாட்சரம் - "பூகம்ப பூக்கள்" கவிதை தொகுப்பு - kavithan - 12-18-2004 <img src='http://kavithan.yarl.net/kavithan_img/desertrosesbwp5-thumb.jpg' border='0' alt='user posted image'> வெகு விரைவில் <b>கவிஞர் ச.வே பஞ்சாட்சரம் </b>அவர்களின் <i><b>"பூகம்ப பூக்கள்"</b></i> கவிதை தொகுப்பு உங்களுக்காக மின்னூல் வடிவில் கவிதை தோட்டத்தில் மலரவுள்ளது. விடுதலை போர் உக்கிரமாக நடந்து கொண்டிருந்த வேளையில் படிப்பவர்களின் நரம்புகளில் சூடேற்றும், நெஞ்சங்களில் சிலிர்ப்பூட்டும் பாடல்களைக் காலத்தின் குரலாக, காலத்தின் தேவையை பூர்த்தி செய்யும் படைப்பாக ஆதவன் கல்வி நிலையத்தின் உதவியுடன் கவிஞர் 2000 ம் ஆண்டு சித்திரை மாதத்தில் இப் படைப்பை நூலாக வெளியிட்டார். கவிஞர் அவர்கள் மரபிலக்கியத்தில் ஊறித்திளைத்தவர்கள் ஆனாலும் நவீன இலக்கியத்தை மறுதலிப்பவர் அல்லர். அவரும் தனது கவிதைக்குள் நவீன உத்திகளையும் புதுமைகளையும் புகுத்தி இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலான வரலாறுடைய தமிழ் கவிதை மரபினையும் மீறாமல் கவிதை வடிப்பதில் வல்லவர். சிந்து, குறள் வெண்பா போன்ற யாப்பு வடிவங்களில் இயற்றப்பட்டவை இக்குறும்பாக்கள். அத்தோடு பண்டிதர் அவர்கள் சமுக, அரசியல் செய்திகளை மிகவும் சுவைபட கூறி உள்ளார் இந்நூலில். <b>சமூகத்தில் குடிப்பழக்கத்தினால் அப்பாவி குடும்பங்கள் எதிர் நோக்கும் சீரழிவை எப்படி நயம்பட உரைத்துள்ளார் பாருங்கள்</b> <span style='font-size:22pt;line-height:100%'>கொட்டில் வீட்டில் நெருப்பு வைத்து வைத்து விட்டான்- மனைவி கொண்டை கூட அறுத்தெறிந்து விட்டான்! வெட்டிரும்பு போட்டுவந்த சுப்பா - ஆனால் விடிந்தெழும்பும் போது நல்ல அப்பா!</span> <b>அரசியலையும் போராளிகள் தியாகத்தையும் எப்படி சொல்கிறார் பாருங்கள்</b> <span style='font-size:22pt;line-height:100%'>பாவிகட்காய் யேசுமுத்தன் பட்டி ஆடும் மீட்க புத்தன் ஆவி வெந்து தெய்வமானார் அன்று- அவரை அகிலமேத்தும் மதங்களமைத்தின்று! பாவித்தமிழர் எங்களுக்காய் பட்டி மந்தை எங்களுக்காய் சாவைத்தழுவும் வேங்கை என்னும் சுத்தர் - நாளை தமிழர் வணங்கும் மதத்து யேசு, புத்தர்!</span> <b>யாழ் இந்துக் கல்லூரியில் ஒரு விழாவில் கவிஞர் அவர்கள் பாடிய ஒரு பாடல் [ காலம்:ஜனாதிபதி பிரேமதாசாவின் அணியில் இருந்து அத்துலத்து முதலி சிறீமாவுடன் சேர்ந்து கொண்டு பிரேமாவை எதிர்த்த காலம்]</b> <span style='font-size:22pt;line-height:100%'>சிறீமா ஒரு மா! பிறேமா ஒரு மா! மாவும் மாவும் அரைபடலாமா? மாவை அரைக்க மா எழலாமா? வாதிடலாமா? மோதிடலாமா? உலக்கையில் ஒட்டிய ஒருமா சிறீமா - அச்சு உலக்கையில் ஒட்டிய ஒருமா சிறீமா உலக்கையால் உதைபடும் ஒருமா பிறேமா! ஆமா தர்மம் சும்மா விடுமா? எங்களை வாட்டிய கறுமம் விடுமா?</span> இப்படி அருமையாக நகைச்சுவையாக கவிதைகளை வடிக்கும் ஒரு புலவர் தான் ச.வே. பஞ்சாட்சரம் அவர்கள். என்ன நீங்கள் தயாரா அவரின் பூகம்ப பூக்கள் கவிதை தொகுப்பை படிக்க , சுவைக்க. மேலும் ஒரு விடயம் , இவர் எழுதிய <i><b>எழிலி</b></i> என்ற நூல் <b>இலங்கை சாகித்திய மண்டலப் பரிசினையும்</b> பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. வெகு விரைவில் உங்களுக்காக... கவிதை தோட்டத்தில் http://www.kavithan.yarl.net - KULAKADDAN - 12-18-2004 நான்றி, அவாின் தொகுப்பொன்றை வசித்துள்ளேன்.... நீங்கள் அவரது மணவனா - kuruvikal - 12-18-2004 சின்னப் குஞ்சுகளாக இருக்கேக்க படிச்ச சோமசுந்தரப் புலவற்ற பாடல்கள் சாயல் அடிக்குது...அதுசரி உந்தப் பண்டிதர் கல்வயலோ...சாவகச்சேரிப் பக்கம்... பண்டிதமணி கண்பதிப்பிள்ளை ஊரே...அந்தாள் தமிழ் இலக்கியப் புத்தகத்தில வந்து தந்த கஸ்டம் மறக்கேலுமோ... அதுதான்...! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- KULAKADDAN - 12-18-2004 கொக்குவில்.......கோண்டாவில்.....பக்கம்....... - kavithan - 12-18-2004 இல்லை இவர் யாழ்ப்பாணம் இணுவில் யாழ் இந்து கல்லூரியில் தமிழாசிரியராக பணியாற்றியவர். - kuruvikal - 12-18-2004 ஓ...இவர் ஆங்கிலமும் படிப்பிப்பவரோ...அந்தப் பஞ்சரத் தெரியும்...அப்ப ஆள விடுங்கோ...! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- KULAKADDAN - 12-18-2004 அவா் வேறு ... இவ÷ வேறு - kavithan - 12-18-2004 KULAKADDAN Wrote:அவா் வேறு ... இவ÷ வேறு நீங்கள் அவரின் மாணவரோ? <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- kuruvikal - 12-18-2004 யாழ் இந்துவில தமிழ் பஞ்சரைத் தெரியும்....இப்ப அவர் எங்க இருக்கிறார்...??! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
- KULAKADDAN - 12-18-2004 kavithan Wrote:நீங்கள் அவரின் மாணவரோ? <!--emo& இல்லை.... - tamilini - 12-18-2004 ம் தம்பியின் தோட்டத்தில் கவி காண காத்திருக்கேன்.. ஆவலுடன்.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- kavithan - 12-18-2004 kuruvikal Wrote:யாழ் இந்துவில தமிழ் பஞ்சரைத் தெரியும்....இப்ப அவர் எங்க இருக்கிறார்...??! <!--emo& இணுவிலில் அல்லது வன்னியில் தான் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- KULAKADDAN - 12-18-2004 தற்போது இணுவிலில்... - ஊமை - 12-18-2004 யார் இந்துக்கல்லூரியில் தமிழ் ஆசிரியராகவும் சுண்ணாகம் கருணா கல்லிநிலையத்தில் தமிழாசிரியராகவும் சா வே பஞ்சாட்சரம் அவர்களே இருந்து வந்தார். இவரே கரும்புலிகள் இறுவட்டில் சாகத்துணிந்தவர் கூட்டம் என்ற பாடலை எழுதியுள்ளார் - Mathan - 12-18-2004 பஞ்சர் அவர்கள் போரடிக்காமல் சுவைபட இலகு தமிழில் இலக்கியம் கற்பிப்பார். ஒரு முறை அவரிடம் படிக்கும் வாய்ப்பு கிடைத்து. - kuruvikal - 12-18-2004 சோக்கட்டியால எறி வேண்டி இருப்பியளே...! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- Mathan - 12-18-2004 ம் அது யாழ் இந்துவில் ஒரு மறக்க முடியாத கால பகுதி. - வெண்ணிலா - 12-18-2004 தமிழ் படிக்க ஆசையாக இருக்கு. அதுவும் போராடிக்காது என்றால் கொட்டாவி விடாமல் படிக்கலாம் எல்லோ. அதுதான் கேட்கிறேன். தற்போதும் கற்பிக்கின்றாரா? :?: - hari - 12-18-2004 மந்திரியின் தோட்டத்தில் கவி காண காத்திருக்கேன்.. ஆவலுடன்.. - வெண்ணிலா - 12-18-2004 kuruvikal Wrote:சோக்கட்டியால எறி வேண்டி இருப்பியளே...! <!--emo& <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
|