![]() |
|
ஏன் இந்த இடைக்கால நிர்வாகம்? - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12) +--- Thread: ஏன் இந்த இடைக்கால நிர்வாகம்? (/showthread.php?tid=6158) |
ஏன் இந்த இடைக்கால நிர்வாகம்? - john - 12-19-2004 ஏன் இந்த இடைக்கால நிர்வாகம்? ஏன் இந்த இடைக்கால நிர்வாகம்? - john - 12-19-2004 விடுதலைப்புலிகள் நிரந்தரதீர்வுபற்றி பேசபின்னடிப்பவர்கள் போன்ற தோற்றத்தை காட்ட சிங்களதேசம் முற்படுகிறது. உண்மையில் இங்கேநடப்பது என்ன? இனிவரும்நாட்களில் நடக்கபோவது என்ன? சொல்லப்போவது நான் அல்லநீங்கள்தான்? - nirmalan - 12-19-2004 இன்று இடைக்கால நிர்வாக சபை இருந்திருந்தால் விடுதலைப் புலிகள் தமது பகுதிகளுக்குள் பாதிக்கப்பட்ட எம் மக்களுக்கு தற்போது செய்துவருகின்ற உதவிகளை விட பல மடங்கு சிறப்பாக செய்திருப்பார். ஆனாலும் இந்நேரத்தில் தமிழர் புனர்வாழ்வுக் கழகம் தனது சீரிய பணியினால் மிகவும் வேகமாக செயற்பட்டதன் விளைவு மக்கள் பெருமளவு காப்பாற்றப்பட்டுள்ளனர். இடைக்கால நிர்வாக சபை கொடுக்கப்பட்டால் போரினால் சேதமடைந்த தமிழர் பிரதேசங்கள் புனரமைக்கப்பட முடியும். அனைத்து பிரதேசங்களையும் புனரமைத்து மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு கொண்டு செல்ல முடியும். இதன் காரணத்தினால் தான் தமிழீழ விடுதலைப் புலிகள் இடைக்கால நிர்வாக சபை கேட்கின்றனர். இடைக்கால தன்னாட்சி அதிகாரசபை - john - 12-19-2004 சமகாலநிகழ்வுகளுடனே இதுபற்றிய கருத்தாடலுக்குள் நுழைகிறேன். இன்று ஐதேக விரும்பியோ விரும்பாமலோ இதுவிடயத்தில் சாதகமான போக்கையே காட்டுகிறது. சுpறிலங்கா சுதந்திர கட்சியும் இரண்டுநாட்களுக்குமுன் சாதகமான கருத்தியலுக்குள் வந்துவிட்டதுபோலவே இருக்கிறது. இந்தப்புறநிலையில் ஏற்பட்டுக்கொண்டிருக்கின்ற மாற்றங்களுக்கு அகநிலையை உருவாக்கிய தேசியத்தலைவரின் வழிநடத்தலே காரணம். ஆனால் உடனடியாக அரசு பேச்சுக்கு வரக்கூடிய நிலைப்பாட்டை எடுப்பதில் தடையாக சந்திரிகாவின் அடுத்தகட்ட பதவிஆசையும் யேவிபியின் அடிப்படைவாதபோக்கும் இருக்கின்றன. இடைக்கால தன்னாட்சி அதிகாரசபையை தமிழர்கள் பெற்றுக்கொண்டாலே 1.சர்வதேசரீதியான கௌரவத்தை தமிழர்கள் பெற்றுக்கொள்ளமுடியும். 2.நேரடியான உதவிகளை பெற்று அழிந்துபோன தேசத்தை கட்டியெழுப்பமுடியும். 3.தமிழ் பேசும் தாயகம் அங்கீகரிக்கப்படும். |