Welcome, Guest
You have to register before you can post on our site.

Username
  

Password
  





Search Forums

(Advanced Search)

Forum Statistics
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244

Full Statistics

Online Users
There are currently 363 online users.
» 0 Member(s) | 360 Guest(s)
Applebot, Bing, Google

Latest Threads
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,325
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,234
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,608
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,300
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,646
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,081
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,470
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,507
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,043
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,241

 
  முல்லைத்தீவு அழிவுகள் - BBC செய்தி
Posted by: Mathan - 12-31-2004, 06:12 PM - Forum: செய்திகள் : தமிழீழம் - Replies (14)

<b>பல தரப்பட்ட மக்களின் கடுமையான விமரிசனத்திற்கு பின்பு சுனாமியில் வடக்கு, கிழக்கில் ஏற்பட்ட அழிவு குறித்த செய்திகளை பிரித்தானிய ஒலிபரப்பு கூட்டுத்தாபனம் இப்போது தான் வெளியிட ஆரம்பித்திருக்கின்றது.</b>

Print this item

  வடக்கு கிழக்கில் வாழும் தமிழர்களும் மனிதர்களே -சூசை (vedio)
Posted by: TamilOosai - 12-31-2004, 04:46 PM - Forum: செய்திகள் : தமிழீழம் - No Replies

http://www.tamiloosai.com/oosai.asp?id=3718&catID=0

Print this item

  இப்படியும் நடக்கிறது.
Posted by: ஊமை - 12-31-2004, 04:39 PM - Forum: புலம் - Replies (47)

ஜேர்மனியில் தமிழர் புனர்வாழ்வுக்கழகத்தால் தாயகத்தில் பாதிக்கப்பட்ட எமது உடன் பிறப்புக்களுக்கு நகரம் நகரங்களாக அங்குள்ள தமிழர்களை பால் வயது வித்தியாசம் இன்றி ஒன்று திரட்டி உதவிநிதி சேகரித்துக்கொண்டு இருக்கின்றார்கள். அத்தோடு இங்கு குறிப்பிடத்தக்கது என்னவென்றால் புலத்தில் பிறந்த சிறார்களே அந்தப்பணியில் காலையில் இருந்து இரவு வரை மிகவும் உற்சாகமாக வியாபாரமையங்கள் மக்கள் அதிகளவாகக் கூடும் மையங்கள் என்பனவற்றில் நிதிசேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். மக்களும் இவர்களுக்கு எதுவித தயக்கமும் இன்றி நிதி வழங்குவதில் ஈடுபடுவதை காணக்கூடியதாக இருக்கிறது.

இது இவ்வாறு இருக்க ஜேர்மானிய அரசாங்கத்தால் அந்நாட்டு மக்களுக்கு ஓர் உருக்கமான புதுவருட வேண்டுகோள் ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது. அதாவது புதுவருட தினத்திலே வாணவேடிக்கைகளை களியாட்டுகளை இம்முறை தவிர்த்து ஆசியாவிலே பாதிக்கப்பட்ட மக்களுக்காக அந்த நிதிகளை அன்பளியுங்கள் என்பதே அந்த மன்றாட்டான வேண்டுகோள். இதனை வெளிவிகார அமைச்சரும், பிரதமரும் கடந்த நாட்களிலே தொலைக்காட்சி மூலம் வேண்டுகோளாக விடுத்திருந்தனர். இதிலே குறிப்பிடத்தக்கது என்னவென்றால் அவர்கள் நேரடியாகவே இலங்கை மக்களுக்கு உதவுங்கள் என குறிப்பிட்டு இருந்தனர். 31.12.2004 அன்று இரவு Berlin நகரிலே நடக்கவிருந்த பாரிய புதுவருட களியாட்டு நிகழ்ச்சி ஜேர்மானிய ஏற்பாட்டாளரால் இரத்துச்செய்யப்பட்டுள்ளது. ஆனால் ஜேர்மனி Koeln நகரிலே இந்தியர்களினால் ஏற்பாடு செய்யப்பட்ட புதுவருட களியாட்டு நிகழ்ச்சி திட்டமிட்டது போன்று நடைபெறும் என்று அந்த நிகழ்ச்சியின் ஏற்ப்பாட்டாளரான இந்தியர் அறிவித்துள்ளார்.

ஆனால் இங்கு வாழும் இலங்கையரில் சிலர் உறவுகளுக்காக சேகரிப்பில் ஈடுபட்டுவரும் சில தொண்டர்களிடம் தகாத கேள்விகளைக் கேட்பது மட்டுமன்றி அன்பளிக்கும் மக்களையும் பொய்யான விசமத்தனமான கருத்துக்களைக் கூறி தடுத்து வருகின்றனர். இது ஒரு அப்பட்டமான தேசவிரோதச்செயல்.

கருத்துக்களில் ஏதும் தவறு இருந்தால் தயவுசெய்து மன்னித்துக்கொள்ளுங்கள்.

Print this item

  LTu நிறுவன சலுகை.
Posted by: ஊமை - 12-31-2004, 03:53 PM - Forum: செய்திகள் : தமிழீழம் - No Replies

ஜேர்மனி Frankfurt விமானநிலையத்தில் இருந்து இலங்கைக்குச் செல்லும் LTu வானூர்திகளில் இலங்கையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உதவிப்பொருட்களை இலவசமாகவே பயணிகளால் எடுத்துச் செல்ல முடியும் என அந்நிறுவனம் அறிவித்துள்ளது. ஆனால் Duesseldorf விமான நிலையம் பற்றி எதுவும் இதுவரை குறிப்பிடப்படவில்லை. அங்கிருந்தும் அதிகளவான LTu வானூர்திகள் இலங்கை நோக்கிச் செல்வதும் குறிப்பிடத்தக்கது.

Print this item

  கொடியவளாய் கடலவள்...!
Posted by: tamilini - 12-31-2004, 02:38 PM - Forum: கவிதை/பாடல் - Replies (3)

<img src='http://img108.exs.cx/img108/6879/tsunimi.jpg' border='0' alt='user posted image'>

கடலவளே...
கோர வெறியோடு வந்தாயா..??
இல்லைப்பசியோடு வந்தாயா..??

வந்த வழி எல்லாம்
அங்காங்கே உன் எண்ணத்திற்கு
கொன்று போட்டிருக்கிறாய்..??

கொடியவளே
கேட்க ஆள் இல்லை என்று
கோர தாண்டவம் ஆடினையோ..??

ஏழைகளிற்கு வாழ்வழிக்கும்
வளமாய் ஆனாய்
இன்று ஏழை மக்கள்
உயிர் குடிக்கும் பேயாய் ஆனாய்

அள்ளிக்கொடுத்தவள் நீ
அத்தனையும் அள்ளி எடுத்தாயே..??
தாயே என்று உன்னை வணங்கியவன்
கடல்
தண்ணீருடன் வாழ்ந்தவன்
தண்ணீரினுள் மாண்டுவிட்டான்
தண்ணீரில் மீன்கள் மிதக்கும்
சடலங்கள் மிதக்கும் கொடுமையிது
கண்டு அடங்கினையா..??
மீண்டும் மீண்டும் வந்தாய்
மூன்று முறை வந்தாய்
முறையா இது..??

ஒன்றா இரண்டா - உன்னோடு
ஒட்டி உறவாடிய
ஒவ்வொரு வீட்டிலும்
ஓலம் மரண ஓலம்
இறந்த உயிர்களை வைத்து
ஓவென்று அழுதிட
ஒரு குடிலில்லை
அத்தனையும்
அடித்துச்சென்றாயே

ஆடு மாடுகள் போல
ஆங்காங்கே
மனித உடல்கள்
மாண்டு கிடக்கும் கோலம்
மனித வரலாற்றில்
மாறாத வடுவாகும்
பிணக்கோலம் போட்டாய்

கோலம் நீ போட
கொண்டு சென்றது எம்மக்களா...??
நாடகம் நீ போட
நாதியற்றுப்போனது
பச்சிளம் பாலகரா..??
பொறுக்காது இது
ஒரு கணம் நீ நின்று
சிந்தித்திருந்தால் தெரிந்திருப்பாய்..!
சீற்றம் நீ கொள்ள
சின்னஞ்சிறு பிஞ்சுகள்
என்ன செய்தன..??
வாரிக்கொண்டு போனாயே..??

பண்டிகைக்காய்
பலகாரம் செய்து
பாத்துப்பாத்து துணியெடுத்து
பலருடன் கூடி உண்டது
செரிக்க முன்னே
சொத்துப்போய் கிடக்கும்
காட்சியிது காண்பாயா..?? நீ
செய்து விட்ட காரியத்தின்
காரணம் தான் சொல்வாயா...??
பாய்ந்து பகையாய் வந்த
அலைகள் செய்த கொடுமையில்
அமைதியாய் அடங்கின உயிர்கள்
நீ மட்டும் இன்னும்
அடித்துக் கொண்டிருக்கிறாய்..
அகங்கார தொனியுடன்...!

Print this item

  &quot;ஈழக் கனேடியர்களின் கவனத்திற்கு&quot; - அன்பான வேண்டுகோள்
Posted by: Nellaiyan - 12-31-2004, 02:31 PM - Forum: செய்திகள் : தமிழீழம் - Replies (7)

எமது தாயக பூமியில் ஏற்பட்ட இயற்கையின் சீற்றத்தால் புலத்திலும் நாம் நிலை குலைந்து போயுள்ளோம். நான்கு நாட்கள் கடந்த நிலையிலும் இலங்கை அரசின் மாற்றான் தாய் மனப்பான்மையினால், சர்வதேச சமூகத்தினால் பெருமளவில் வழங்கப்பட்ட அவசர நிவாரணங்களிலிருந்து சீரான எந்த உதவிகளும் எமது மக்களுக்கு சென்றடையவில்லை. எமது தாயகப்பகுதிகளுக்கு செல்லும் அவசர உதவிகள் அணைத்தும் இலங்கை இராணுவத்தால் திருப்பி அனுப்பப் பட்டுக் கொண்டிருப்பதாக செய்திகள் தெரிவித்துக் கொண்டிருக்கின்றன.

இந்நிலையில் அழிவினால் ஏற்பட்ட உயிரனத்தங்களை விட, மருத்துவ வசதியின்மை, சுத்தமான குடிநீர் வசதியின்மை, சுகாதார சீர்கேடு, இறந்த உயிரினங்களிலிருந்து பரவப்போகும் கொடிய கிருமிகளின் தொற்று நோய்களினாலும் ஏற்படப்போகும் அழிவுகளே, தற்போதைய அழிவினால் ஏற்பட்ட பாதிப்புகளை விட பன்மடங்காக இருக்கப் போகிறது.

இச்சந்தர்ப்பத்தில் புலத்திலுள்ள எம்மக்களினால் எம்மக்களின் அவலங்களைத் தீர்ப்பதற்காக பாரியளவு நிதி, மருத்துவப் பொருட்கள், உடுபுடைவைகள், உணவுப்பொருட்கள் போன்றன சேகரிக்கப்பட்டு வருகின்றன. இதிலும் குறிப்பாக நிதி சேகரிப்புகள் எம்மின மக்கள் மத்தியில் மட்டுமல்லாமல் பிற இன மக்கள் மத்தியிலும் பெருமளவாக திரட்டப்படுகின்றன. இந்த நிதி சேகரிப்பில் குறிப்பாக லண்டன், பிரான்ஸ், ஜேர்மனி, சுவிஸ், டென்மார்க், நோர்வே உட்பட்ட ஐரோப்பிய நாடுகளிலும் அவுஸ்ரேலியாவிலும் ஒருங்கினைக்கப்பட்ட நிறுவனங்கள், புனர்வாழ்வு புனருத்தாரண நிறுவனமான தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தினூடு சிறப்பாக செய்து வருகிறார்கள். இதில் குறிப்பிடக்கூடிய செய்தி என்னவென்றால் இவர்கள் மூலம் சேகரிக்கப்படும் நிதியானது நிர்வாக செலவுகள் அற்ற நிலையில் முழு நிதியுமே எம்மக்களின் அவலங்களைப் போக்க சென்றடையுமென்பதில் எவ்வித ஐயப்பாடுமில்லை.

ஆனால் கனடாவைப் பொறுத்தமட்டில் பலர் இந்நிதி சேகரிப்புகளில் ஈடுபட்டுள்ளனர். தனித்தனிக் குழுக்களாகவும், சில வானொலிகள் மூலமும், நிறுவனங்கள் மூலமும் திரட்டப்படும் நிதிக்கு ஈழக் கனேடிய மக்களும் இந்நிதிகள் "தாயகத்தில் எம்மக்களின் அவலங்களைப் போக்குவதற்காக" என்பதற்காக வாரி வழங்கிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் ஒரு சில அமைப்புகளே இந்த திரட்டப்படும் நிதியானது தமிழர் புனர்வாழ்வு நிறுவனத்தினூடே தமிழர் தாயகத்தில் எமது மக்களின் அவலங்களை போக்க பயன்படுத்தப்படுமென்பதை உறுதியாக மக்களுக்குக் கூறி, அவற்றை செயலிலும் காட்டி, இப்பாரிய பணியை செயற்படுத்தி வருகிறார்கள். ஆனால் இந்நிதி சேகரிப்பில் ஈடுபட்டிருக்கும் சில நிறுவனங்கள் எவ்வித தூரநோக்கமற்ற ரீதியில் அதாவது திரட்டப்படும் நிதியானது எங்கு அனுப்பப்படப் போகிறது? எப்படி அனுப்பப்படப் போகிறது? எவர்கள் மூலம் அனுப்பப்படப் போகிறது? .... போன்ற கேள்விகளுக்கு விடைபெற முடியாத நிலையிலும், மர்மமான ரீதியிலும் சேகரித்துக் கொண்டிருக்கிறார்கள்.

சிலர் சேகரிக்கப்படும் நிதியானது சர்வதேச அமைப்புகளினூடு அனுப்படுமென கூறுகிறார்கள். ஆனால் இவ்வமைப்புகள் தமது நிர்வாக செலவுகளுக்காக பெருமளவை எடுத்து விடுகின்றன. மற்றும் இந்நிதிகள் எமது தாயகப் பகுதிகளுக்குத் தான் போய்ச்சேருமென்ற எவ்வித உத்தரவாதமுமில்லை.

இந்நிலையில் அன்புக்குரிய ஈழக் கனேடிய உறவுகளே! நாம் கொடுக்கும் ஒவ்வொரு டொலர்களும் எம்மக்களுக்கே சென்றடையக் கூடிய நிறுவனங்களினூடே உங்களது பங்களிப்பைச் செய்யுங்கள். ஏற்கனவே கொடுத்த நிதிகளும் எம்மக்களுக்கே செல்கின்றனவா என்பதை நீங்கள் கொடுத்த அமைப்புகளை தொடர்பு கொள்வதன் மூலம் உறுதி செய்யுங்கள்.

ஏனெனில் சில இடங்களில் சேகரிக்கப்படும் நிதிகளானது, எம்மக்களின் அவலங்களைப் போக்குவதற்குப் பயன்படாமல் எதிர்காலத்தில் அழிவுகளுக்குப் பயன்படக் கூடிய சாத்தியங்கள் பலவுள்ளன. கடந்த காலங்களில் எம்மவலங்களை, எம்முணர்வுகளைப் பயன்படுத்தி பல சக்திகள் எம்மத்தியிலும் ஈடுபட்டுக் கொண்டிருந்தது, இருப்பது நாம் யாவருமறிந்ததே.

Print this item

  இலங்கை இழப்புகள் மாவட்ட ரீதியாக
Posted by: Vaanampaadi - 12-31-2004, 01:48 PM - Forum: செய்திகள் : தமிழீழம் - No Replies

இலங்கை இழப்புகள் மாவட்ட ரீதியாக


கடல் கொந்தளிப்பால் இலங்கையின் பல்வேறு மாவட்டங்களில் ஏற்பட்ட உயிரிழப்பு, இடம்பெயர்வு, சேதங்கள் குறித்து இலங்கை அரசின் சமூகநலன் அமைச்சகம் நேற்று வியாழக்கிழமை 30ஆம் திகதி வெளியிட்ட தகவலின் படி

வடக்கு கிழக்கு மாவட்டங்களில்
மொத்தம் 15,000க்கும் மேற்பட்டவர் பலி,
சுமார் 700,000 பேர் இடப்பெயர்வு.

தென்பகுதியில்
சுமார் 10,000 பேர் பலி,
200,000க்கும் மேற்பட்டோர் இடப்பெயர்வு.

உயிரிழப்புகள் மாவட்ட ரீதியாக
அம்பாறை சுமார் 8,000
ஹம்பாந்தோட்டை சுமார் 4,500
காலி -3,700க்கும் மேல்
யாழ்ப்பாணம் 2000க்கும் மேல்
மட்டக்களப்பு சுமார் 2000
முல்லைத்தீவு சுமார் 1700
மாத்தறை 1000க்கு மேல்
திருகோணமலை சுமார் 900
கிளிநொச்சி 500க்கு மேல்

இடம்பெயர்வுகள் மாவட்ட ரீதியாக
மட்டக்களப்பு சுமார் 300,000
அம்பாறை சுமார் 200,000
திருகோணமலை சுமார் 100,000
யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு சுமார் 125.000

காணாமல் போனவர்கள் மாவட்ட் ரீதியாக
வவுனியா, முல்லைத்தீவு 3000க்கு மேல்
மட்டக்களப்பு சுமார் 700 பேர்
யாழ்ப்பாணம் 500 பேர்

இலங்கையில் ஒட்டுமொத்தமாக ஒரு லட்சம் வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. அவற்றுள் சுமார் 75,000க்கும் மேற்பட்டவை முற்றாக அழிந்துள்ளன.

இந்த புள்ளி விபரம் மாறக் கூடியது.

source: BBC

Print this item

  ஆலடி அருணா கொடூரமாக கொலை
Posted by: Vaanampaadi - 12-31-2004, 01:25 PM - Forum: செய்திகள் : தமிழீழம் - Replies (2)

டிசம்பர் 31, 2004

ஆலடி அருணா கொடூரமாக கொலை

திருநெல்வேலி:

முன்னாள் திமுக அமைச்சரும், முன்னாள் எம்.பியுமான ஆலடி அருணா இன்று காலை நெல்லை அருகே மர்ம நபர்களால் துப்பாக்கியால் சுடப்பட்டும், வெட்டியும் படுகொலை செய்யப்பட்டார்.

தனது சொந்த ஊரில் இன்று காலை வாக்கிங் சென்ற ஆலடி அருணா மற்றும் அவரது நண்பரான கல்லூரி ஆசிரியர் பொன்ராஜ் ஆகியோர் அடையாளம் தெரியாத நபர்களால் துப்பாக்கியால் சுட்டும், அரிவாள்களால் வெட்டியும் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

சம்பவம் நடந்தபோது உடனிருந்த ஆலடி அருணாவின் உதவியாளர் சார்லஸ் தப்பியோடி விட்டார்.

எம்.ஜி.ஆருக்கு நெருக்கமாக இருந்த அருணா அவரது மறைவுக்குப் பின் திமுகவில் இணைந்தார். அதிமுகவிலும் பின்னர் திமுக ஆட்சியிலும் தமிழக அமைச்சராகவும், நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்தார்.

சிறிது காலமாகவே திமுகவை விட்டு விலகியே இருந்த அருணாவுக்கு, கடந்த மக்களவைத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு தரப்படவில்லை. இதையடுத்து க

கட்சித் தலைமையை விமர்சித்தார். இதனால் திமுகவை விட்டு நீக்கப்பட்டார். இதையடுத்து பாஜகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தார். ஆனாலும் தான் இன்னும் திமுகவில் தான் இருப்பதாக அருணா கூறி வந்தார்.

இந் நிலையில் இன்று காலை நெல்லை மாவட்டம் ஆலங்குளம் பகுதியில் உள்ள புதுப்பட்டி சாலையில் ஆலடிவிளை என்ற இடத்தில் அவர் வாக்கிங் சென்று கொண்டிருந்தார். அவருடன் கல்லூரி ஆசிரியரான பொன்ராஜும் உதவியாளர் சார்லசும் வாக்கிங் சென்றனர்.

அந்தச் சாலையில் உள்ள பெட்ரோல் அருகே மூவரும் நடந்து சென்றபோது அங்கு வந்த மர்ம நபர்கள் 3 பேர் அவர்களை வழிமறித்தனர். இதையடுத்து சார்லஸ் அங்கிருந்து தப்பியோடிவிட்டார். ஓட முயன்ற அருணாவையும் பொன்ராஜையும் அந்தக் கும்பல் முதலில் துப்பாக்கியால் சுட்டது.

பின்னர் இருவரையும் சரமாரியாக அரிவாள்களால் வெட்டித் தள்ளினர். இதில் இருவரும் சம்பவ இடத்திலேயே பலியாயினர்.

தப்பியோடி வந்த அருணாவின் உதவியாளர் சார்லசிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். அவர் கொடுத் தகவலின் பேரில் மதுரையைச் சேர்ந்த 3 பேர் கொண்ட கும்பலை போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

இந்தக் கும்பல் சம்பவ இடத்தில் ஒரு செல்போனை தவறவிட்டுச் சென்றதாகக் கூறப்படுகிறது. இதை வைத்து அக் கும்பலை அடையாளம் காண முயற்சி நடக்கிறது.

முன் பகை காரணமாக ஆலடி அருணா கொல்லப்பட்டிருப்பதாக போலீஸார் கூறுகின்றனர்.

இச் சம்பவம் நெல்லை மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

2 ஆண்டுகளுக்கு முன்பு மதுரையில் திமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் தா.கிருட்டிணன் படுகொலை செய்யப்பட்டதைப் போலவே ஆலடி அருணாவும் காலையில் வாக்கிங் சென்றபோது வெட்டிக் கொல்லப்பட்டுள்ளார்.

சமீபத்தில் பின்னர் வைகோ நடைப்பயணம் மேற்கொண்டபோது அவருக்கு வாழ்த்து தெரிவித்துப் பேசிய அருணா, வைகோவை வருங்கால தமிழக முதல்வர் என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.

ஆலடிப்பட்டி அருணாச்சலம் எனப்படும் ஆலடி அருணா ஒரு வழக்கறிஞராவார். ஆங்கிலத்திலும் நல்ல புலமை படைத்தவர். ஏராளமான சட்ட நூல்களை எழுதியுள்ளார்.

அவருக்கு மனைவி, நான்கு மகன்கள், ஒரு மகள் உள்ளனர்.
<img src='http://www.thatstamil.com/images26/aruna350.jpg' border='0' alt='user posted image'>

Print this item

  என்செய்வோம்! என்செய்வோம்!- தொ. சூசைமிக்கேல்
Posted by: hari - 12-31-2004, 06:09 AM - Forum: கவிதை/பாடல் - Replies (5)

<span style='font-size:25pt;line-height:100%'>என்செய்வோம்! என்செய்வோம்!
- தொ. சூசைமிக்கேல்


[size=14]அலைகடலே! ஆழித் தீயே!
அடங்கிவிட்டதா, உனது ஆனைத் தீ?

கண்ணுக்கு எட்டிய தூரம்; வரை
கடற்கரை மணல்வெளி எங்கும் இப்போது
கல்லறைத் தோட்டங்கள்!
நிறைவேறிவிட்டதா, உனது நெடுநாட் கனவு?

பால்கொடுத்த கொங்கைகளும்
பால்குடித்த மழலைகளும்
மால்முடித்த மீனவ மறவர்களும்
மரணத்தை நொடிப்பொழுதில் முத்தமிட வைத்தாய்!
மா ரணத்தை எம் மனத்தில் ஆழப் பதித்தாய்!
தீர்ந்துவிட்டதா, உனது தினவு?

மூச்சடக்கி முத்தெடுத்தவர்தம் மணிமார்பங்கள்
மூச்சு அடங்கிக் கிடக்கும் காட்சி,
எங்கள் மூர்ச்சையைப் பறித்துக் கொள்கிறது..
முடிந்துவிட்டதா, உனது கோரத் தாண்டவம்?

காற்றோடு இசைகலந்து ! எம்மைக்
கனிவோடு தீண்டிவந்த நீ,
கூற்றோடு இணைகலந்து
கொலைக் கூத்து நடத்திவிட்டாயே

உன்னை நாங்கள் அன்னை! என்றல்லவா
அழைத்திருந்தோம்? ஆராதித்திருந்தோம்?
அணைத்திருந்த கைகள் கொண்டு தன் குழந்தையையே
அன்னையொருத்தி தின்னுவது
என்ன தர்மம் அம்மா?

தினந்தோறும் எம்மைத் தாலாட்டிய உனக்குத்
திடீரென்று எப்படியம்மா எங்கள்
செந்நீர் தேவைப்பட்டது?

கலையார்வம் மேலிட,
காலம்காலமாய் எம்மைக் காத்துநின்ற உன்னிடம்
கொலையார்வம் எப்படியம்மா
குடிபுகுந்து கொண்டது?

பாழும் கடலே! பாதகியே!
ஊழிக் காற்றுபோல் ஊரையெல்லாம் மேய்ந்துவிட்டு
ஒன்றும் அறியாள்போல்
ஓசைமட்டும் செய்கின்றாய்
என்ன நெஞ்சழுத்தமடி உனக்கு!

முட்டமும் பள்ளமும் மணக்குடியும் குளச்சலும்
முக்குவர் குலம்வாழும் பெருங்குடிகள் அனைத்திலும்
முட்டமுட்டக் கதறல்ஒலி காதைப் பிளக்கிறது
கத்துகடல் காதகியே, கேட்கிறதா உனக்கு?

முன்பொருநாள் முட்டத்தைச்
சொல்லாமலே தாக்கிச் சூறையாடிய சோழன்போல்,
நீயும் இன்று முட்டத்தைத் தாக்கினாய் - அதன்
உயிர்ப் பரப்பை முற்றிலும் தூக்கினாய்!
சொல்லடி துரோகியே!
கூற்றுவன்தான் உன் துணைவனா? அவனும் அந்தச்
சோழனுக்குத் தோழனா?

போர்க்குணம் வாய்ந்த எங்கள் இரத்த நாளங்கள் மீது
உனக்கும் கூடவா பொறாமை வந்துவிட்டது?
புல்லறிவாண்மையிடம் நீகூடவா
புகலிடம் தேடிக் கொள்கிறாய்?

இரக்கமற்ற அரக்கியே!
எங்களையா நீ பழிவாங்க வேண்டும? உன்னை
நம்பியன்றோ எங்கள் நங்கூரங்கள் வாழ்ந்தன? உன்னைக்
கும்பிட்ட பிறகன்றோ எங்கள் கரங்கள் தூண்டிலைத் தொட்டன?
கும்பி எரிய வைத்துவிட்டாயே

துதிபுரிந்த எம்மவர்க்கே
சதிபுரிந்த சண்டாளீ! உன்னை
எட்டி உதைப்பதா?
எட்டி நில்! என்பதா?

"செல்லப் பிள்ளை"யென்று நாங்கள்
செல்லமாய் விளிக்கும் திமிங்கலங்களே!
திருக்கை மீன்களே! சிப்பிக்குள் நண்டுகளே!
உல்லாசமாய்ச் சுற்றி உலாப்போகும் சுறாக்களே!
ஒருநாளேனும் கரையொதுங்கி முட்டையிடும் ஆமைகளே!
சற்றே நில்லுங்கள்: சற்றே நில்லுங்கள்:
உங்களைக் கட்டிமேய்க்கும் கடலன்னையிடம் வினவுங்கள்:
அவள் செய்தது சரிதானா, என்று!

இயற்கையின் சீற்றமாம் இது.
எவனுக்கடா தெரியாது, இது?
இயற்கையின் சீற்றத்தைத் தடுத்திட
எங்களால் இயலாதுதான்:
இறைவனே! உன்னாலுமா இயலவில்லை?
ஆண்டாண்டு காலமாய் யாம் நடத்திவந்த
ஆலய வழிபாடுகளுக்கெல்லாம் நீ கற்பித்திருக்கும்
அர்த்தம் இதுதானா?

ஐயகோ!
ஆறுதல் தேடிட ஆண்டவனைக் கூட
அணுகமுடியாத கொடுமையா எமக்கு?
என்செய்வோம்! என்செய்வோம்!!</span>
<img src='http://www.tamilnet.com/img/publish/2004/12/tsunami_ltte_rescueop_02.jpg' border='0' alt='user posted image'>

Print this item

  More info about Tsunami www.tsunamiineelam.com
Posted by: KaviPriyan - 12-31-2004, 06:06 AM - Forum: புலம் - No Replies

வணக்கம்

மேலும் சில தகவல்கள் சேர்க்கப்பட்டுள்ளன...

புலம்பேயர்ந்த நாட்டில் எம் உறவுகளுக்காக உண்டியல் மூலம் பணம் சேர்க்கும் போது அல்லது நிகழ்ச்சிகளின் போது எடுக்கப்பட்ட படங்கள் இருந்தால் அனுப்பி வைக்கவும்...

நன்றி
கவிப்ரியன்

Print this item