Yarl Forum
கொடியவளாய் கடலவள்...! - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11)
+--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52)
+--- Thread: கொடியவளாய் கடலவள்...! (/showthread.php?tid=6009)



கொடியவளாய் கடலவள்...! - tamilini - 12-31-2004

<img src='http://img108.exs.cx/img108/6879/tsunimi.jpg' border='0' alt='user posted image'>

கடலவளே...
கோர வெறியோடு வந்தாயா..??
இல்லைப்பசியோடு வந்தாயா..??

வந்த வழி எல்லாம்
அங்காங்கே உன் எண்ணத்திற்கு
கொன்று போட்டிருக்கிறாய்..??

கொடியவளே
கேட்க ஆள் இல்லை என்று
கோர தாண்டவம் ஆடினையோ..??

ஏழைகளிற்கு வாழ்வழிக்கும்
வளமாய் ஆனாய்
இன்று ஏழை மக்கள்
உயிர் குடிக்கும் பேயாய் ஆனாய்

அள்ளிக்கொடுத்தவள் நீ
அத்தனையும் அள்ளி எடுத்தாயே..??
தாயே என்று உன்னை வணங்கியவன்
கடல்
தண்ணீருடன் வாழ்ந்தவன்
தண்ணீரினுள் மாண்டுவிட்டான்
தண்ணீரில் மீன்கள் மிதக்கும்
சடலங்கள் மிதக்கும் கொடுமையிது
கண்டு அடங்கினையா..??
மீண்டும் மீண்டும் வந்தாய்
மூன்று முறை வந்தாய்
முறையா இது..??

ஒன்றா இரண்டா - உன்னோடு
ஒட்டி உறவாடிய
ஒவ்வொரு வீட்டிலும்
ஓலம் மரண ஓலம்
இறந்த உயிர்களை வைத்து
ஓவென்று அழுதிட
ஒரு குடிலில்லை
அத்தனையும்
அடித்துச்சென்றாயே

ஆடு மாடுகள் போல
ஆங்காங்கே
மனித உடல்கள்
மாண்டு கிடக்கும் கோலம்
மனித வரலாற்றில்
மாறாத வடுவாகும்
பிணக்கோலம் போட்டாய்

கோலம் நீ போட
கொண்டு சென்றது எம்மக்களா...??
நாடகம் நீ போட
நாதியற்றுப்போனது
பச்சிளம் பாலகரா..??
பொறுக்காது இது
ஒரு கணம் நீ நின்று
சிந்தித்திருந்தால் தெரிந்திருப்பாய்..!
சீற்றம் நீ கொள்ள
சின்னஞ்சிறு பிஞ்சுகள்
என்ன செய்தன..??
வாரிக்கொண்டு போனாயே..??

பண்டிகைக்காய்
பலகாரம் செய்து
பாத்துப்பாத்து துணியெடுத்து
பலருடன் கூடி உண்டது
செரிக்க முன்னே
சொத்துப்போய் கிடக்கும்
காட்சியிது காண்பாயா..?? நீ
செய்து விட்ட காரியத்தின்
காரணம் தான் சொல்வாயா...??
பாய்ந்து பகையாய் வந்த
அலைகள் செய்த கொடுமையில்
அமைதியாய் அடங்கின உயிர்கள்
நீ மட்டும் இன்னும்
அடித்துக் கொண்டிருக்கிறாய்..
அகங்கார தொனியுடன்...!


கண்ணீர் பேசுகிறது...! - tamilini - 12-31-2004

<img src='http://www.tamilnatham.com/photos/kalmunai20041228/4.JPG' border='0' alt='user posted image'>
அலைகள் செய்தன கொடுமை
வீடுகள் தோறும் வெறுமை
போருக்கு அழைத்தது இயற்கை
அதை எதிர்த்திட ஏது வலிமை
சில மணி நேர நாடகம்
தந்திட்ட அழிவுகள்
தொடரப்போகிறது பல யுகங்களுக்கு

இழந்தவர்களை..
இன்னும் விடுவதாய்
இல்லையா இயற்கையும்..??
இவர்களை
நிற்கதியாய் ஆக்குவதில்
என்ன இன்பம்
பாழாய் போன இயற்கைக்கும்..??

சொல்லில் அடங்கா
துயரங்களை தினம் தினம்
தோழ்களில் சுமந்தவர்கள்
மீண்டும் ஒரு முறை
இடம்பெயர்க்க பட்டுள்ளார்கள்
வித்தாயசம் இல்லை இங்கு
இது வரை எதிரி துப்பாக்கி
முனையில் அகதியாக்கினான்
அனாதையாக்கினான்
இயற்கையவள் அதற்கும் பல
படி மேல் சென்று
பகலிரவென ஒரு நாளில்
நிற்கதியாக்கியுள்ளாள்
கொடுமையிலும் கொடுமையிது
மீண்டும் ஒரு முறை எம்மக்கள்
அகதிகளானது மட்டுமல்ல
அனாதைகளாயும்
ஆக்கப்பட்டிருக்கிறார்கள்

மலரப்போகும் புது வருடம்
மலரவைக்கும் எம் வாழ்வையும் என்று
மன மகிழ்வுடன் இருக்கையில்
விடை பெறும் வருடம்
பல்லாயிரம் உயிர்களை
பலியெடுத்து செல்கிறது

இயற்கை எனும்
கொடியவளின் நாடகத்தில்
கோயில்கள் தேவாலயங்கள்
பள்ளிவாசல்கள் என
அனைத்துமே பங்கேற்றன
பல உயிர்களை இவற்றினுள்ளும்
காவு கொள்ளப்பட்டனவாம்
இங்கு இருந்த தெய்வங்கள்
என்ன செய்தன
ஆழ்ந்த நித்திரையோ...???
உயிரிற்காய் போராடிய
ஒவ்வொரு உள்ளங்களும்
அழைத்தது கேட்கவில்லையா..??
அமைதியாய் இவர்கள்
இருந்ததன் காரணந்தான் என்ன ..??
தொடரப்போகும் மனித வரலாற்றில்
அழியா நினைவாய் பேரழிவொன்று
சுனாமியின் வடிவில் வரும் என்று
யார் அறிந்தீர்...??
நடந்தவையாவும் கனவென்று
யாரும் சொல்ல மாட்டீரா..??
இது ஒரு கனவாய் மாறக்கூடாதா..??
வரலாற்றுப்பதிவில்
கடந்து விட்ட சில தினங்கள்
காணாமல் போகக்கூடாதா...??
கண்ணீர் பேசுகிறது - அங்கு கடல்
தண்ணீர் செய்து விட்ட கொடுமையை...!


- KULAKADDAN - 01-01-2005

<!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->


- KULAKADDAN - 01-01-2005

þô§À¡Ð Á¨Æ .... ¦Á¡ò¾¢ø þÂü¨¸ «Æ¢ôÀÐ ±ýÚ ¾£÷Á¡É¢òÐÅ¢ð¼Ð.. Cry Cry Cry