Yarl Forum
ஆலடி அருணா கொடூரமாக கொலை - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12)
+--- Thread: ஆலடி அருணா கொடூரமாக கொலை (/showthread.php?tid=6012)



ஆலடி அருணா கொடூரமாக கொலை - Vaanampaadi - 12-31-2004

டிசம்பர் 31, 2004

ஆலடி அருணா கொடூரமாக கொலை

திருநெல்வேலி:

முன்னாள் திமுக அமைச்சரும், முன்னாள் எம்.பியுமான ஆலடி அருணா இன்று காலை நெல்லை அருகே மர்ம நபர்களால் துப்பாக்கியால் சுடப்பட்டும், வெட்டியும் படுகொலை செய்யப்பட்டார்.

தனது சொந்த ஊரில் இன்று காலை வாக்கிங் சென்ற ஆலடி அருணா மற்றும் அவரது நண்பரான கல்லூரி ஆசிரியர் பொன்ராஜ் ஆகியோர் அடையாளம் தெரியாத நபர்களால் துப்பாக்கியால் சுட்டும், அரிவாள்களால் வெட்டியும் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

சம்பவம் நடந்தபோது உடனிருந்த ஆலடி அருணாவின் உதவியாளர் சார்லஸ் தப்பியோடி விட்டார்.

எம்.ஜி.ஆருக்கு நெருக்கமாக இருந்த அருணா அவரது மறைவுக்குப் பின் திமுகவில் இணைந்தார். அதிமுகவிலும் பின்னர் திமுக ஆட்சியிலும் தமிழக அமைச்சராகவும், நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்தார்.

சிறிது காலமாகவே திமுகவை விட்டு விலகியே இருந்த அருணாவுக்கு, கடந்த மக்களவைத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு தரப்படவில்லை. இதையடுத்து க

கட்சித் தலைமையை விமர்சித்தார். இதனால் திமுகவை விட்டு நீக்கப்பட்டார். இதையடுத்து பாஜகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தார். ஆனாலும் தான் இன்னும் திமுகவில் தான் இருப்பதாக அருணா கூறி வந்தார்.

இந் நிலையில் இன்று காலை நெல்லை மாவட்டம் ஆலங்குளம் பகுதியில் உள்ள புதுப்பட்டி சாலையில் ஆலடிவிளை என்ற இடத்தில் அவர் வாக்கிங் சென்று கொண்டிருந்தார். அவருடன் கல்லூரி ஆசிரியரான பொன்ராஜும் உதவியாளர் சார்லசும் வாக்கிங் சென்றனர்.

அந்தச் சாலையில் உள்ள பெட்ரோல் அருகே மூவரும் நடந்து சென்றபோது அங்கு வந்த மர்ம நபர்கள் 3 பேர் அவர்களை வழிமறித்தனர். இதையடுத்து சார்லஸ் அங்கிருந்து தப்பியோடிவிட்டார். ஓட முயன்ற அருணாவையும் பொன்ராஜையும் அந்தக் கும்பல் முதலில் துப்பாக்கியால் சுட்டது.

பின்னர் இருவரையும் சரமாரியாக அரிவாள்களால் வெட்டித் தள்ளினர். இதில் இருவரும் சம்பவ இடத்திலேயே பலியாயினர்.

தப்பியோடி வந்த அருணாவின் உதவியாளர் சார்லசிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். அவர் கொடுத் தகவலின் பேரில் மதுரையைச் சேர்ந்த 3 பேர் கொண்ட கும்பலை போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

இந்தக் கும்பல் சம்பவ இடத்தில் ஒரு செல்போனை தவறவிட்டுச் சென்றதாகக் கூறப்படுகிறது. இதை வைத்து அக் கும்பலை அடையாளம் காண முயற்சி நடக்கிறது.

முன் பகை காரணமாக ஆலடி அருணா கொல்லப்பட்டிருப்பதாக போலீஸார் கூறுகின்றனர்.

இச் சம்பவம் நெல்லை மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

2 ஆண்டுகளுக்கு முன்பு மதுரையில் திமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் தா.கிருட்டிணன் படுகொலை செய்யப்பட்டதைப் போலவே ஆலடி அருணாவும் காலையில் வாக்கிங் சென்றபோது வெட்டிக் கொல்லப்பட்டுள்ளார்.

சமீபத்தில் பின்னர் வைகோ நடைப்பயணம் மேற்கொண்டபோது அவருக்கு வாழ்த்து தெரிவித்துப் பேசிய அருணா, வைகோவை வருங்கால தமிழக முதல்வர் என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.

ஆலடிப்பட்டி அருணாச்சலம் எனப்படும் ஆலடி அருணா ஒரு வழக்கறிஞராவார். ஆங்கிலத்திலும் நல்ல புலமை படைத்தவர். ஏராளமான சட்ட நூல்களை எழுதியுள்ளார்.

அவருக்கு மனைவி, நான்கு மகன்கள், ஒரு மகள் உள்ளனர்.
<img src='http://www.thatstamil.com/images26/aruna350.jpg' border='0' alt='user posted image'>


- ஊமை - 12-31-2004

அப்படியா வானம்பாடி. கவலைதான்....... என்றாலும் ?? இலங்கையில் கிபீர், புக்கராவின் கோரக்கொலைகளிலும் விடவா இது பெரிது ??


- thamizh.nila - 01-01-2005

பெரிய பாதிப்புகளை பாத்த எங்களுக்கு இது சிறிதாக தோன்றுகிறது. இந்தியாவில் இருக்கும் அநேகமான மக்களுக்கு இது பெரிய கொடுமையான விடயம் தானெ ஊமை...