![]() |
|
இப்படியும் நடக்கிறது. - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தமிழ்க் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=4) +--- Forum: புலம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=21) +--- Thread: இப்படியும் நடக்கிறது. (/showthread.php?tid=6007) |
இப்படியும் நடக்கிறது. - ஊமை - 12-31-2004 ஜேர்மனியில் தமிழர் புனர்வாழ்வுக்கழகத்தால் தாயகத்தில் பாதிக்கப்பட்ட எமது உடன் பிறப்புக்களுக்கு நகரம் நகரங்களாக அங்குள்ள தமிழர்களை பால் வயது வித்தியாசம் இன்றி ஒன்று திரட்டி உதவிநிதி சேகரித்துக்கொண்டு இருக்கின்றார்கள். அத்தோடு இங்கு குறிப்பிடத்தக்கது என்னவென்றால் புலத்தில் பிறந்த சிறார்களே அந்தப்பணியில் காலையில் இருந்து இரவு வரை மிகவும் உற்சாகமாக வியாபாரமையங்கள் மக்கள் அதிகளவாகக் கூடும் மையங்கள் என்பனவற்றில் நிதிசேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். மக்களும் இவர்களுக்கு எதுவித தயக்கமும் இன்றி நிதி வழங்குவதில் ஈடுபடுவதை காணக்கூடியதாக இருக்கிறது. இது இவ்வாறு இருக்க ஜேர்மானிய அரசாங்கத்தால் அந்நாட்டு மக்களுக்கு ஓர் உருக்கமான புதுவருட வேண்டுகோள் ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது. அதாவது புதுவருட தினத்திலே வாணவேடிக்கைகளை களியாட்டுகளை இம்முறை தவிர்த்து ஆசியாவிலே பாதிக்கப்பட்ட மக்களுக்காக அந்த நிதிகளை அன்பளியுங்கள் என்பதே அந்த மன்றாட்டான வேண்டுகோள். இதனை வெளிவிகார அமைச்சரும், பிரதமரும் கடந்த நாட்களிலே தொலைக்காட்சி மூலம் வேண்டுகோளாக விடுத்திருந்தனர். இதிலே குறிப்பிடத்தக்கது என்னவென்றால் அவர்கள் நேரடியாகவே இலங்கை மக்களுக்கு உதவுங்கள் என குறிப்பிட்டு இருந்தனர். 31.12.2004 அன்று இரவு Berlin நகரிலே நடக்கவிருந்த பாரிய புதுவருட களியாட்டு நிகழ்ச்சி ஜேர்மானிய ஏற்பாட்டாளரால் இரத்துச்செய்யப்பட்டுள்ளது. ஆனால் ஜேர்மனி Koeln நகரிலே இந்தியர்களினால் ஏற்பாடு செய்யப்பட்ட புதுவருட களியாட்டு நிகழ்ச்சி திட்டமிட்டது போன்று நடைபெறும் என்று அந்த நிகழ்ச்சியின் ஏற்ப்பாட்டாளரான இந்தியர் அறிவித்துள்ளார். ஆனால் இங்கு வாழும் இலங்கையரில் சிலர் உறவுகளுக்காக சேகரிப்பில் ஈடுபட்டுவரும் சில தொண்டர்களிடம் தகாத கேள்விகளைக் கேட்பது மட்டுமன்றி அன்பளிக்கும் மக்களையும் பொய்யான விசமத்தனமான கருத்துக்களைக் கூறி தடுத்து வருகின்றனர். இது ஒரு அப்பட்டமான தேசவிரோதச்செயல். கருத்துக்களில் ஏதும் தவறு இருந்தால் தயவுசெய்து மன்னித்துக்கொள்ளுங்கள். - shanmuhi - 12-31-2004 Quote:ஆனால் இங்கு வாழும் இலங்கையரில் சிலர் உறவுகளுக்காக சேகரிப்பில் ஈடுபட்டுவரும் சில தொண்டர்களிடம் தகாத கேள்விகளைக் கேட்பது மட்டுமன்றி அன்பளிக்கும் மக்களையும் பொய்யான விசமத்தனமான கருத்துக்களைக் கூறி தடுத்து வருகின்றனர். இது ஒரு அப்பட்டமான தேசவிரோதச்செயல்.Áɧž¨É ¾Õõ ¦ºÂø. - vasisutha - 12-31-2004 [b]பிரான்சில் தமிழர் புனர்வாழ்வு கழகம் மூலமாக நிதி சேகரிக்கிறார்கள். இன்றைக்கு ஒரு பிரெஞ்சு தொழிலதிபர் அல்லலுறும் ஈழத்தமிழர்களுக்காக புனர்வாழ்வு கழகத்திடம் <span style='font-size:21pt;line-height:100%'>70ஆயிரம் Euroக்கள் குடுத்திருக்கிறார். நல்ல மனம் வாழ்க.</span> - tamilini - 12-31-2004 நல்ல செயல் அந்த தொழிலதிபர் நீண்ட நெடுநாள் வாழட்டும்...! - shanmuhi - 12-31-2004 <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- KULAKADDAN - 01-01-2005 <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- KULAKADDAN - 01-01-2005 <!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin--> ஆனால் இங்கு வாழும் இலங்கையரில் சிலர் உறவுகளுக்காக சேகரிப்பில் ஈடுபட்டுவரும் சில தொண்டர்களிடம் தகாத கேள்விகளைக் கேட்பது மட்டுமன்றி அன்பளிக்கும் மக்களையும் பொய்யான விசமத்தனமான கருத்துக்களைக் கூறி தடுத்து வருகின்றனர். இது ஒரு அப்பட்டமான தேசவிரோதச்செயல். <!--QuoteEnd--><!--QuoteEEnd--> .<!--QuoteEnd--></div><!--QuoteEEnd--> :evil: :evil: - Suji - 01-01-2005 களத்திலை இதையும் பார்த்தேன் எம்மினத்தின் அவலத்தை போக்க மக்களிடம் சென்ற ஒரு தொண்டரின் அனுபவம் சுவிஸில் ஒரு சிறிய மாநிலம் கிளாறுஸ் அங்கு கிட்டத்தட்ட நூறு தமிழ்க் குடும்பத்தினர் வாழ்கின்றனர். பொருள் சேர்க்க சென்றபோது எல்லா மக்களும் மிகவும் ஆர்வத்துடன் பங்களிப்பு செய்தனர். இருவர் மட்டும் ஒதுங்கிக்கொண்டனர். இருவரும் ஈ.பி.டீ.பி முன்னாள் உறுப்பினர்கள். ஒருவர் பணம் கொடுக்க மறுத்துவிட்டு பழைய ஆடைகளை இன்னொரு தொண்டரிடம் கொடுத்துவிட்டார். மற்றவர் ஒன்றும் கொடுக்கவில்லை. இந்த அவலத்தை கண்டும் இரங்காத இவர்களை மனிதர்கள் என்பதா? அல்லது...... இருவரும் சாவகச்சேரிப் பகுதியை சேர்ந்தவர்கள். ஒருவர் சின்ன*** யோ***. மற்றவர் டக்களசுடன் நெருக்கமாக இருந்து பல குற்றச் செயல்களை செய்துவிட்டு பெரும் பணமோசடி செய்துவிட்டு இங்கு வந்தவர். இவர்களுடைய தொலைபேசி எண் தேவையெனில் தரமுடியும். இந்த பாவிகளை மற்றவர்களுக்கும் தெரியப்படுத்துங்கள். _________________ - sinnappu - 01-02-2005 அப்புமார் திருந்தமாட்டம் பிடிபந்தயம் எண்டுறவங்களை கணக்கில எடுக்காமல் நாங்கள் எங்கட பணியை தொடந்து செய்வோம் சரியோ புனர்வாழ்வுக்கழகத்தின் பணியை வாயாலை சொலஇல ஏலாது அவ்வளவு திறமையா செய்து இருக்கினம் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- shiyam - 01-02-2005 கொஞ்ம் பொறுங்கோ ஒட்டுமொத்தமாய் பிடிச்சு ஏத்தேக்கை அங்கைபோய் எமது உறவுகளிடம் பிச்சை எடுக்கேக்கை தெரியும் - thamizh.nila - 01-03-2005 வினை விதைத்தவன் வினை அறுக்கிற காலம் வராமலா போய்விடும்... - kavithan - 01-03-2005 :| - Mathan - 01-03-2005 கடற்புவி அதிர்வும் மானுடரும்! <b>எழுதியவர் அருந்தா பாரீஸ்</b> Monday, 03 January 2005 சுனாமி((Tsunami) - தமிழர் தாயகத்திலிருந்து ஒலித்த அலறல்களையும் அள்ளிச்சென்றிருந்தது வங்காளக்கடலின் பேரலைகள் என்பது இந்நூற்றாண்டின் மிகப்பெரிய சோகம். இச்செய்தி எட்டிய கணத்திலிருந்து நாமெல்லாம் நடைப்பிணங்களாக புகலிடத்தின் இயந்திரச்சுற்றில். ஐபிசியும் தொலைபேசிகளுமாக தகவல்கள் சேரச்சேர 'மரத்திலிருந்து விழுந்தவனை மாடேறி மிதித்த கதைதான்!'. மிகப் பெரிய அவலத்தை தாங்கும் மன இறுக்கத்துடன் பணிக்கு சென்று வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்தேன். பல்லின மக்கள் வாழும் பாரீசில் இன்று முகம் தெரியாத வேற்றினத்தவர்கள் துக்கம் விசாரித்தமை புதுமையான ஆறுதலைத்தந்திருந்தது. இன்றைய தினசரிகளின் தலைப்பை பெற்றிருந்தது சுனாமி. அதிலும் 'பாரிசியன்' பத்திரிகை விரிவான செய்தியையும் கொடுத்து தமிழர் புனர்வாழ்வுக்கழகம் (TRO) பற்றியும் விபரித்திருந்தது ஆச்சரியத்திலும் ஆச்சரியமாகவிருந்தது. வேலையின் களைப்பினை சுமந்தவாறு ஓடிவந்து பேருந்தில் இடம் பிடிக்கிறேன். ஒல்லியான மெலிந்த தோற்றமுடைய அந்த வெள்ளைக்காரர் என்னைத் தேடிவந்து வணக்கம் சொல்கிறார். பின் நாட்டின் நிலை தொடர்பாக குசலம் விசாரிக்கிறார். குடும்பத்தினர் சுகம்பற்றி விசாரிக்கிறார். வேதனையுடன் தன் அனுதாபங்களைப் பகிர்கிறார். இவரை ஏற்கனவே எனக்குத் தெரியும்.....! ஞாபகத்திற்கு உடனே வரமாட்டாமல் எண்ணங்கள் அலைக்களித்தன. ஒருவாறு அடையாளம் தெரிந்ததில் புன்முறுவல்கண்டது முகம். என் அயலகத் தமிழ்ப் பிள்ளைகளுக்கு கணிதம் சொல்லிக் கொடுத்த யூத இனத்தவர். ஆமாம் மானிடம் வாழ்கிறது. என்களைப்பு என்னை விட்டுப் பறந்திருந்தது. வண்டி அடுத்த தரிப்பிடத்தில் நிறுத்தப்படுகிறது. நெற்றியில் பொட்டிட்ட ஒரு யுவதி தன் மூன்று குழந்தைகளுடன் ஏறி இடம் பிடிக்கிறார். அவரிடம் செல்கிறார் இந்த கணித ஆசிரியர். காதினை கூர்மையாக்குகிறேன். வழமையான குசலவிசாரிப்பின் பின் சுனாமியின் அனர்த்தங்கள் பற்றிய கவலையை வெளிப்படுத்துகிறார் அந்த வெண்மனிதர். எந்தச்சலனத்தையும் காணாததால் திரும்பிப் பார்க்கிறேன். தான் கொண்டுவந்திருந்த கைப்பையை அவசரமாகத் திறந்து பாரிசன் பத்திரிகையை எடுத்து அம்மணியிடம் நீட்டுகிறார் அந்த வெண்மனிதர். <i>'இது எவ்வளவு? ஒரு ஈரோவா இரண்டு ஈரோக்களா?'</i>-அம்மணி புருவத்தை உயர்த்தியவாறு... <i>'இல்லை இல்லை இது விற்பதற்கல்ல அம்மா! பார்ப்பதற்கு.... இதில் சுனாமிபற்றி செய்திகள் வந்திருக்கின்றன'.</i> விளக்கமளிக்கிறார் வெண்மனிதர். <i>'தென்கிழக்காசியாவை சூறையாடியுள்ளது இந்த அனர்த்தம் உங்கள் குடும்பத்தவர்கள் அல்லது அயலவர்கள் பாதிக்கப்படவில்லையா?' </i>அப்பாவித்தனத்தோடு வினவுகிறார் வெண்மனிதர். <i>'எங்களுக்கொன்றும் நடக்கவில்லை. நான் இந்தியன்' </i>என்றது அம்மணியின் குரல். தூர இருந்த என் தலையில் ஓங்கிக் குட்டியது போலிருந்தது. பேச்சை நிறுத்திய வெண்மனிதர் எனக்கு அண்மையில் வந்ததை உணர்கிறேன். ஆனாலும் அவரை நிமிர்ந்து பார்க்க வெட்கப்பட்டவளாகப் பரிதவித்தேன். ஒருவாறு மனதை திடப்படுத்தியவாறு அவரை ஆறுதலாகப் பார்க்கிறேன். <i> 'அந்தப் பெண்ணும் உங்கள் மொழி பேசுபவர் தானே?' </i>அந்தமனிதரிடம் எழுந்த வினா ஈட்டியாகப் பாய்ந்தது. <i> 'இருக்கலாம்!' </i>எனது ஒற்றைச் சொல்லிலான பதில் அவருக்கு புரிந்தது. எனது தரிப்பிடத்தில் இறங்கிய நான் யாரையும் நிமிர்ந்து பார்க்க முடியாதவளாக வீட்டுக்குள் நுழைந்து சோபாவில் தொப்பென விழுகிறேன். ஓவென அழவேண்டும் போலிருக்கிறது. - Mathan - 01-03-2005 இது தெரியுமா? லண்டன் தமிழ்கடைகளில் பக்கற்றில் அடைக்கப்பட்ட -தெற்காசிய மீன்வகைகள் விரைவாக விற்று தீர்கின்றதாம். புதிதாக இலங்கை பகுதிகளில் இருந்து மீன் வராது என்பதாலும் அப்படி வந்தாலும் அவற்றின் சுகாதாரம் குறித்து சந்தேகமிருப்பதால் இப்போதே வாங்கி பதுக்கி வைக்கின்றார்களாம். - shiyam - 01-04-2005 இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட எம்மவர்க்கு நண்பர்களுடன் சேர்ந்து சேகரித்த உடுப்புக்களை ஈழத்திற்கு அனுப்புவதற்காக எயர்லங்காவை அணுகி பொதிகளை இலவசமாவே அல்லது குறைந்த கட்டணத்திலோ அனுப்பகூடிய வசதிகள் ஏதும் இருந்தால் செய்து தரும்படி கேட்டோம்அவர்கள் பொதிகளிறகுரிய கட்டணம் செலுத்தாமல்அனுப்பமுடியாது என்று கை விரித்து விட்டனர் பின்னர்british air மற்றும்emirats எதுவித கட்டணமும் இன்றி அனுப்ப முன்வந்தனர்அவர்களிற்கு எமது நன்றிகளை மட்டுமே தெரிவித்தோம் புலம் பெயர் மக்களே இனிவருங்காலங்களில்air lanka வில் பயணம்செய்வதா??சிந்தியுங்கள - KULAKADDAN - 01-04-2005
- lakpora - 01-09-2005 shiyam Wrote:மக்களே இனிவருங்காலங்களில் air lanka வில் பயணம்செய்வதா??சிந்தியுங்கள [b][size=18],ஐயா சியாம் , air lanka cargo வில பயணஞ்செய்யவே முடியுது :!: :?: - shiyam - 01-09-2005 லக்பெரா நீ சரியான புத்திசாலி எண்டு நினைப்போ?? - shiyam - 01-09-2005 லக்பொரா நீ யார் எண்டுதெரியாமல் கன சனம் களத்திலை உன்னை வரவேற்று போட்டினம் தெரிய வந்தால் கிழியும் உனது முகமுடி - tsunami - 01-12-2005 இலங்கை அரசின் அனைத்து சேவைகளுக்கும் மறுத்தான் கொடுக்க வேண்டும்... அதையும் வெளிப்படையாக நாங்கள் காட்ட வேண்டும் இந்த அனர்த்த நேரத்திலும் தங்களுடைய இனக்குரோதத்தைவிடாது தொடர்ந்தும் மனித செயலற்று இருப்பவர்களோடு தமிழருக்கு என்ன வாழ்வு தமிழருக்கு என்னத்திற்கு அவர்களுடைய தலைமை தனிநாடே தீர்வு ஈழத்திற்கு வந்து போன பிறகு தான் உண்மை விளங்குது நான் சொன்னதாக எல்லாருக்கும் இதைச் சொல்லுங்கோ சிங்களவரோடு வாழ முடியாது சிங்கள தலைமை தமிழர்களை எந்தக்காலத்திலும் காப்பாற்றாது இதை எல்லாருக்கும் சொல்லுங்கோ நான் இன்னொருக்கால் ஈழத்திற்கு வரமாட்டன் என்னை சபிக்காதையுங்கோ நான் செய்ததை மன்னித்துக்கொள்ளுங்கோ நான் சொல்லுவதைச் செய்து என்னை பிராயச்சித்தம் செய்ய பண்ணுங்கோ... |