| Welcome, Guest |
You have to register before you can post on our site.
|
| Forum Statistics |
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244
Full Statistics
|
| Online Users |
There are currently 147 online users. » 0 Member(s) | 144 Guest(s) Applebot, Bing, Google
|
| Latest Threads |
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,327
|
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,235
|
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,608
|
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,301
|
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,649
|
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,083
|
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,472
|
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,512
|
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,045
|
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,243
|
|
|
| கடலோடு ஒரு காவியம்...! |
|
Posted by: kuruvikal - 01-13-2005, 01:00 PM - Forum: கவிதை/பாடல்
- Replies (4)
|
 |
<img src='http://kuruvikal.yarl.net/archives/kittu_s_1.jpg' border='0' alt='user posted image'>
<b>வெடியோசை எழுந்தது
எங்கள் நெஞ்சோசை அழிந்தது
களத்தோடு களமாடி
கோட்டைக்குள் அடித்தெழுந்த
அந்தப் புயலும் ஓய்ந்தது...!
தங்க தமிழீழ வேங்கையது
வங்கக் கடல் நடுவே சரிந்தது...!
அசோகச் சக்கரத்தின்
அகோரத் தாண்டவம் - எங்கள்
மாமாவின் உடல் கிழித்தது...!
ஆதிக்க வெறி பிடித்த
அகிம்சா தேசமது
அவன் ஆன்மா குடித்துக் குதூகலித்தது...!
தமிழீழ அன்னையவள்
கொடிதனைச் சுமந்தவன்
ஆழி தன் அலையோடு
மீண்டிட்டான் தமிழ் மண்ணை...!
குரலோசை எழுந்தது - அது
அவன் புகழோசை சொன்னது
விடியலின் தாய் மகன்
விடிவெள்ளியான கதை
முடிவின்றிச் சொன்னது....!
தர்மம் வெல்லும் என்பது
காலத்தின் கோலம் என்றது
சரியாகி நின்றது
எங்கள் நெஞ்சங்கள் அவன் நினைவுகள்
அலையலையாய் சுமந்தது...!</b>
நன்றி... http://kuruvikal.yarl.net/
|
|
|
| நான் பிக்குணி என்னையும் ஏற்றுக்கொள்வீர்களா ? |
|
Posted by: sangamitta - 01-13-2005, 12:56 PM - Forum: அறிமுகம்
- Replies (16)
|
 |
நான் ஒரு பௌத்த துறவி
என்னுடைய பெயர் சங்கமித்தா
இந்தியா என்னுடைய சொந்த இடம்
தற்போது இலங்கை அனுராதபுரத்தில் இருக்கின்றேன்
பௌத்தம் என்றால் சிங்களவருடையது என்று எண்ணவேண்டாம்
பௌத்தத்திற்கு இனம் சாதி மொழி நிறம் பால் என்ற எந்திவித வேறுபாடுகளும் இல்லை.
என்னையும் யாழ் களத்தில் இணைத்துக்கொள்வீர்களா?
|
|
|
| நன்றி சொல்லுவோமா ........ |
|
Posted by: tsunami - 01-13-2005, 10:08 AM - Forum: தமிழீழம்
- No Replies
|
 |
தைப்பொங்கல் கொண்டாடி இயற்கைக்கும் சனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்த மக்களுக்கும் நாங்கள் எல்லோரும் சேர்ந்து நன்றி சொல்லுவோம்.....
நன்றி சொல்வது தமிழர்களுக்கு இன்றைக்கு நேற்றல்ல பல நூற்றாண்டுகளாக தன்னுடைய வாழ்விற்கு உதவி செய்த இயற்கைக்கு கூட நன்றியுள்ளவனாக இருந்த தமிழன்
என்னால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்த தமிழர்கள் வெளிநாட்டவர்கள் எல்லோருக்கும் நன்றி சொல்லவேண்டாமா?
தமிழர்களின் நற்பண்புகளை உலகத்தமிழர் ஏன் மற்றய மக்களுக்கும் அறியக்கொடுத்து அவர்களையும் எங்களோடு இணைத்துக்கொள்ளக் கூடாது?
தமிழர்கள் தமிழருடைய கலாசாரம் பற்றி உலக மக்களுக்கு அறியக்கொடுங்கள்....[/b]
|
|
|
| சில குறிப்புக்கள்.......12.01.05 |
|
Posted by: ஊமை - 01-13-2005, 12:11 AM - Forum: மருத்துவம்
- No Replies
|
 |
<b>குழந்தைகளிடம் செல்போன் கொடுக்க வேண்டாம்</b>
செல்போன்களால் மனிதர்களுக்கு ஏதாவது ஆபத்து உண்டா? இல்லையா? என்பது குறித்து அவ்வப்போது சர்ச்சைகள் எழுப்பப்படுகிறது. இருப்பினும் செல்போன்கள் மனிதர்களை பாதிக்கிறது என்பதற்கு இதுவரை எந்த உறுதியான ஆதாரமும் கிடைக்கவில்லை. அதே சமயம் செல்போன்களால் மனிதர்களுக்கு ஒரு தீங்கும் இல்லை என எந்தவொரு விஞ்ஞானியும் அறிவிக்கவில்லை. ஆக செல்போன் பிரச்சினை ஒரு புரியாத புதிராக தொடர்கிறது. இதனால் அவ்வப்போது எச்சரிக்கை அறிவிப்புகளையே வெளியிட்டு வருகின்றனர். ஆனால் குழந்தைகள் விஷயத்தில் செல்போன்கள் நிச்சயம் பாதிப்பை உண்டு பண்ணும் என்றும், இதில் மாற்றுக் கருத்து எதுவும் கிடையாது என்றும் விஞ்ஞானிகள் உறுதியாக கூறுகிறார்கள்.
குழந்தைகளின் நரம்பு மண்டலம் இன்னமும் வளர்ந்து கொண்டிருக்கும் என்பதால் அவர்களின் தலைப்பகுதியில் உள்ள திசுக்களுக்கு அதிகமான சக்தியை இழுக்கும் ஆற்றல் உண்டு. இப்படிப்பட்ட நிலையில் அதிலுள்ள ரேடியோ அலைகள் உடல் உறுப்புகளின் இயக்கத்தில் நிச்சயம் பொpயதொரு பின்விளைவை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது. ஆகையால் குழந்தைகள் கைகளில் கூடுமானவரை செல்போன் களை கொடுக்காமல் இருப்பது நல்லது.
செல்போன்களால் மூளையில் ஆபத்தான கட்டிகள் உண்டாகும், புற்றுநோய் வரும், மரபணு சேதமடையும் என்றெல்லாம் சொல்லப்படுகிறது. இத்தகைய கருத்துக்களை அப்படியே அடியோடு நிராகாpத்து விட முடியாது. இதுபற்றி நிறைய ஆராய்ச்சிகள் நடத்த வேண்டும்.
<b>உடம்பை குறைக்க மிதமான நடைபயிற்சியே போதும்</b>
குண்டு குழந்தைகள் வேகமாக நடந்தால் வேகமாக எடை (கொழுப்பு) குறையும் என்று சிலர் நினைக்கிறார்கள். ஆனால் இதில் உண்மை எதுவும் இல்லை. 9 முதல் 11 வயது வரையிலான குண்டு குழந்தைகள் உடம்பை குறைப்பதற்கு வோக்கிங் போனாலே போதும், ஓடத் தேவையில்லை என்கிறார்கள் விஞ்ஞானிகள். எவ்வளவு வேகமாக நடக்கிறோம் என்பதைப் பொறுத்து கொழுப்பு எரிக்கப்படுவது இல்லை. ஆகையால் குண்டு குழந்தைகள் தங்கள் உடம்பை குறைக்க மிதமான உடற்பயிற்சி களே போதுமானது என்கிறார்கள் இவர்கள். மணிக்கு 2.5 மைல் வேகத்தில் நடக்கும் போது அதிகப்படியான கொழுப்பு மற்றும் கார்போஹைட்ரேட் எரிக்கப்படுகிறது. இதே வேகத்தை மணிக்கு 5 மைல் என்று அதிகரிப்பதால் இன்னும் கூடுதலான கொழுப்பு எரிக்கப்படுவது கிடையாது.
சிறுவர்களை பொறுத்தவரை மெதுவாக நடப்பதைக் காட்டிலும் வேகமாக நடக்கும் போது நிறைய அளவுக்கு கார்போஹைட்ரேட் எரிக்கப்படுகிறது என்பது உண்மை தான். இருந்த போதிலும் மிதமான வேகத்தில் நடக்கும் போதுதான் கார்போ ஹைட்ரேட் மற்றும் கொழுப்பு ஆகிய இரண்டுமே கூடுதலான விகிதத்தில் எரிக்கப்படுகிறது. உடல் எடை குறைவதற்கு இதுதான் தேவை.
உடல் பருமனானது உடம்புக்கு தேவையான சக்தியை கொழுப்பு தவிர வேறு வழிகளில் இருந்து பெற்றுக் கொள்வதால் கொழுப்பு மேலும் மேலும் சேர்ந்து விடும். இதுமாதிhpயான நிலையில் உடற்பயிற்சிகள் கொழுப்பை எரித்து உடல் எடையை கட்டுக்குள் கொண்டு வரும்.
<b>நீரழிவு பார்வை இழப்பை தவிர்க்க புதிய முயற்சி </b>
நீரழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களில் சிலருக்கு டயபறிக் ரெட்டினோபதி (diabetic retinopathy)என்ற பயங்கரமான வியாதியால் கண்பார்வை பறிபோகிறது. இந்நோய் 2 கட்டமாக பரவும். முதல் கட்டத்தில் சர்க்கரையில் அதிக ரத்தம் மற்றும் உயர் இரத்த அழுத்தம் காரணமாக கண்களில் உள்ள சின்னஞ்சிறிய இரத்த நாளங்கள் கொஞ்சம் கொஞ்சமாக செயல் இழந்து இறுதியில் வெடித்து விழித்திரையில் இரத்தம் கொட்டும். விளைவு, ஒளிக்கற்றைகளை பிம்பங்களாக மாற்றி மூளைக்கு அனுப்பும் பணி அடியோடு முடங்கி விடுவதால் பார்வை பறிபோகும். 2-வது கட்டம் மிகவும் சிக்கலானது. அதை proliferative retinopathy என்று குறிப்பிடுகிறோம். இந்நிலையில் விழித்திரையில் புதிதாக இரத்த நாளங்கள் தோன்ற ஆரம்பிக்கும். இத்தகைய இரத்த நாளங்கள் நீண்ட நாள் தாங்காமல் எப்போது வேண்டுமானாலும் உடையலாம். இதனால் விழித்திரையே அழிந்து போகும் நிலை கூட தோன்றலாம். கொடுமையான இந்த டயபறிக் ரெட்டினோபதிக்கு தீர்வு கிடையாது. லேசர் சிகிச்சை மூலம் பாதிப்பை வேண்டுமானால் குறைக்கலாம். மேலும் வராமல் தடுக்கலாம். ஆனால் அதையும் ஒரு கட்டம் வரையில் தான் செய்ய முடியும்.
இந்நிலையில் புளோரிடாவைச் சேர்ந்த விஞ்ஞானிகள் இப்பிரச்சினையை சமாளிக்க புதிய யுக்தி ஒன்றை கண்டுபிடித்து உள்ளனர். ஆய்வகத்தில் வளர்த்த எலிகளின் கண்களுக்குள் குறிப்பிட்ட நோய் எதிர்ப்பு பொருள் ஊசி மூலம் செலுத்திய போது, பார்வை பாதிக்கப்படாமல் பாதுகாக்கப்பட்டது. ஒருவேளை இந்த ஆன்டிபயாடிக் மனிதர்கள் மத்தியிலும் வேக்-அவுட் ஆனால் டயபறிக் ரெட்டினோபதியால் பார்வையை இழக்கும் லட்சோப இலட்சம் மனிதர்களை காப்பாற்ற முடியும் என்கிறார்கள் புளோரிடா விஞ்ஞானிகள்.
|
|
|
| SLBC News Director removed |
|
Posted by: Vaanampaadi - 01-12-2005, 06:39 PM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (1)
|
 |
இலங்கை ஒலிபரப்புகூட்டுத்தாபனத்தின் செய்திகளின் நிர்வாகி
திரு.ராஜா கடுகம்பொல பதவியில் இருந்து அகற்றப்பட்டார்.
SLBC News Director removed
[TamilNet, January 12, 2005 11:58 GMT]
Mr. Raja Katukampola, News Director of the Government owned Sri Lankan Broadcasting Corporation (SLBC) has been removed from the duty, media sources said. Katukampola's duties are replaced by Mr.Somapala Perara, the sources added.
[b]SLBC ran a story Saturday morning, quoting Vice Admiral Daya Sandagiri as the source person, saying that the leader of the Liberation Tigers of Tamil Eelam (LTTE) and the Intelligence Chief of the organisation are among the dead or reported missing consequent to the Tsunami tidal wave attack.
No action is reported against Vice Admiral Daya Sandagiri, the quoted source of the news, sources said.
|
|
|
| வலிந்து யுத்தம் திணிக்கப்பட்டால் எதிர்கொள்ள வேண்டிய கடமை எமக |
|
Posted by: tamilini - 01-12-2005, 01:58 PM - Forum: செய்திகள் : தமிழீழம்
- No Replies
|
 |
வலிந்து யுத்தம் திணிக்கப்பட்டால் எதிர்கொள்ள வேண்டிய கடமை எமக்கு உண்டு: சு.ப.தமிழ்ச்செல்வன்
இலங்கைத் தீவகத்தில் மீண்டும் யுத்தம் வருமா என்பது குறித்து ஊடகவியலாளர் ஒருவருக்கு தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியற்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது:
எங்களைப் பொறுத்தவரை ஆழிப்பேரலைக்கு முன்னால் பேச்சுவார்த்தைகள், சமாதான முயற்சிகள் எல்லாம் இறுக்கம் அடைந்த ஒரு நெருக்கடியான நிலை காணப்பட்டது.
சிறிலங்கா அரசாங்கம் சமாதான முயற்சிகளை முன்னெடுப்பதற்கு ஆக்கபூர்வமான முன்னெடுப்புக்களை முன்னெடுக்காது தங்களுடைய அரசியல் அதிகாரத்தை பேணுகின்ற அதிகார போட்டிகளில் மட்டுமே கவனம் செலுத்தி வந்தது. ஆகவே, சமாதான முயற்சிகள் பெரும் நெருக்கடிகளை எதிர்கொண்டிருந்தது.
ஆழிப்பேரலை பொதுவாக எல்லா இன மக்கள் மத்தியிலும் ஏற்படுத்திய பாதிப்பைப் பயன்படுத்தி, சிறிலங்கா அரசாங்கம் மனிதாபிமான கண்ணோட்டத்துடன் தமிழ்மக்களையும் புலிகளையும் பார்த்து அவர்களுடன் இணைந்து இந்த மனிதாபிமானப் பணிகளை முன்னெடுக்கும் என்ற எதிர்பார்ப்பு சகல மட்டத்திலும் இருந்தது.
ஆரம்பத்தில் அதற்கான அறிகுறிகள் தென்பட்டன. ஆனால், எவ்வித நடைமுறைச்; சாத்தியமான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படாத இடத்து குறிப்பாக சர்வதேச சமூகத்தின் உதவிகளை தெற்கிற்கு வழங்குகின்ற அளவை பாதிக்கப்பட்ட மக்கள் என்ற வகையில் வடக்கு கிழக்கு பகுதிக்கு அதை பகிர்ந்தளிக்கும் எவ்வித முயற்சிகளும் இல்லாத காரணத்தினால், தமிழ்மக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளார்கள்.
அந்த ஏமாற்றம் அடைந்த சூழலில் ஐ.நா செயலாளர் நாயகம் வருகின்ற போது அவர் இந்தப் பகுதிக்கு வந்து பாதிக்கப்பட்ட மக்களை பார்வையிடுவார், உதவிபுரிவார் என்று நம்பி இருந்த தமிழ் மக்களுக்கு ஐ.நா செயலாளரின் வருகையினை தடுத்த நடவடிக்கை ஏமாற்றம் அளித்துள்ளது.
ஒட்டுமொத்தமாக நம்பிக்கையற்றிருந்த சமாதான முயற்சிகள் மீண்டும் துளிர்க்கும் என்ற நம்பிக்கைகள் எல்லாவற்றையும் சிதறடிக்கும் வகையில் சிறிலங்கா அரசாங்கத்தின் அண்மைய செயற்பாடுகள் அமைந்துள்ளன.
பேரழிவைச்; சந்தித்து நிற்கும் மக்களைக் குழப்பும் வகையில் மிகவும் கீழ்த்தரமான முறையில் பொய்ப் பிரசாரங்களைச்; செய்வது கவலைக்குரிய விடயம். எமது தலைவருக்கோ தலைமைப்பீடத்துக்கோ ஏனைய உறுப்பினர்களுக்கோ ஏதாவது நடந்திருந்தால் நிச்;சயமாகத் தெரிந்த விடயமாக இருக்கும். இப்படியான பொய்ப் பிரசாரங்களைச்; செய்து மக்களைக் குழப்புவது சர்வதேச சமூகத்தின் கவனத்தை ஈர்ப்பது நோக்கமாக இருக்கும்.
அந்த வகையில் கடற்புலிகள் பெருமளவு உயிரிழந்து விட்டார்கள் என்ற வதந்தியை முதலில் பரப்பினார்கள். அதில் உண்மை இல்லை. உண்மைநிலை தெரிந்த பின்பு தலைவரைப் பற்றிய வதந்தியை பரப்பியுள்ளார்கள். இது தெற்கில் உள்ள ஊடகங்களின் வழமையான காரியமாக இருப்பதால் நாங்கள் பெரிதுபடுத்தவில்லை. தெற்கில் உள்ள பேரினவாத ஊடகங்கள் தமிழ்மக்களுக்கும் தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கும் எதிரான கருத்துக்களையும் வதந்திகளையும் தொடர்ந்து பரப்பி வருகின்றன. இதனை நாம் பெரிதுபடுத்தவில்லை. இந்த காலகட்டத்தில் வதந்தி பரப்பப்பட்டது தொடர்பாக தமிழ்மக்கள் கவலையடைந்துள்ளார்கள்.
சிறிலங்கா அரசாங்கம் இவ்வாறான வதந்திகள் பரப்புவதை இன்று நேற்று அல்ல கடந்த 25 வருடகாலமாக செய்து வருகின்றது. இதற்காக தலைவர் தான் உயிருடன் இருப்பதாக வெளியில் வந்து காட்டிக் கொள்ளும் நிகழ்வு இடம்பெறவில்லை. அவர் தவறான பிரசாரங்களுக்குப் பதில் சொல்லிக் கொண்டு இருப்பதாக இருந்தால் எங்கள் விடுதலைப் போராட்ட அரசியல் பணிகளை முன்னெடுக்காமல் நேரத்தை வீண்விரயம் செய்ய வேண்டியிருக்கும்.
இந்த வகையில் தலைவர் இதையொரு பெரிய விடயமாக எடுத்து தான் உயிருடன் இருப்பதாக காட்டிக்கொள்ள விரும்பவில்லை. அவர் போராட்ட அரசியல் பணிகளை முன்னெடுத்து வருகின்றார். இதற்கெல்லாம் பதில் கூறிக்கொண்டிருந்தால் எங்கள் விடுதலை அமைப்பு பல நற்பணிகளில் இருந்து நேரத்தை வீணடித்து செல்லும்.
விடுதலைப் புலிகளைப் பொறுத்த வரையில் தலைமைப்பீடம் தனது நிலைப்பாட்டை ஏற்கனவே தெளிவாக வெளிப்படுத்தியுள்ளது.
விடுதலைப்புலிகள் வலிந்து யுத்தத்தை திணிக்கமாட்டார்கள். சிறிலங்காப் படைகள் தமிழ் மக்கள் மீது வலிந்து போரைத் திணிக்க முயன்றால் மக்களைக் காக்க போரை எதிர்கொள்ள வேண்டிய கடப்பாடு புலிகளுக்குண்டு. அந்த வகையில் யுத்தம் மீண்டும் ஆரம்பிக்கும் என்று ஒரு தரப்பின் நிலைப்பாட்டை வைத்துக் கொண்டு கூறமுடியாது. இரண்டு தரப்பின் நிலைப்பாடாக உள்ளது. ஆகவே இலங்கை அரசும் படைகளும் நடந்து கொள்கின்ற நடவடிக்கைகளை வைத்துக் கொண்டு எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்று தீர்மானிக்கலாம்.
கிளிநொச்சியிலிருந்து தனோஜன் / Puthinam
|
|
|
| நடிகர் அம்ரீஷ் பூரி மரணம் |
|
Posted by: Vaanampaadi - 01-12-2005, 01:26 PM - Forum: துயர்பகிர்வு / நினைவுகூரல்
- No Replies
|
 |
<img src='http://www.thatstamil.com/images26/cinema/amrish250.jpg' border='0' alt='user posted image'>
ஜனவரி 12, 2005
நடிகர் அம்ரீஷ் பூரி மரணம்; மன்மோகன் இரங்கல்
மும்பை:
பிரபல இந்தி வில்லன் நடிகர் அம்ரீஷ் பூரி உடல் நலக் குறைவால் மரணமடைந்தார். அவரது மறைவுக்கு பிரதமர் மன்மோகன் சிங் இரங்கல் தெரிவித்துள்ளார்.
மூளையில் ரத்தம் உறைந்து, அம்ரீஷ் நீண்ட நாட்களாக அவதிப்பட்டு வந்தார். சில நாட்களுக்கு முன்பு கோமாவில் விழுந்தார். மலேரியா நோயும் அவரைப் பாதித்திருந்தது. கடந்த வாரம் இந்துஜா மருத்துவமனையில் அவருக்கு அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
இந் நிலையில் இன்று காலை அவர் மரணமடைந்தார். அவருக்கு வயது 72. அம்ரீசுக்கு மனைவி, மகன் மற்றும் மகள் உள்ளனர். அவரது இறுதிச் சடங்கு நாளை நடைபெறும் என்று தெரிகிறது.
வில்லனாக தனது நடிப்புலக வாழ்க்கையைத் தொடங்கிய அம்ரீஷ், பின்னர் குணச்சித்திர வேடங்களிலும் தனது முத்திரையைப் பதித்தார். மிஸ்டர் இந்தியா, தில்வாலே துல்ஹானியா லே ஜாயேங்கே, ஹீரோ, ரேஷ்மா ஆகிய படங்கள் நடிப்புத் திறமைக்கு சான்றாக இன்றும் நினைவு கூறப்படுபவை.
[b]தமிழில் தளபதி, பாபா உள்ளிட்ட சில படங்களில் நடித்திருக்கிறார்.
பிரதமர் இரங்கல்:
அம்ரீஷ் மறைவுக்கு மன்மோகன் சிங் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் தனது இரங்கல் செய்தியில்,
அம்ரீஷ் நாடகத்துறையில் தனது முத்திரையைப் பதித்துவிட்டு, இந்தி சினிமாவில் பெரிதும் மதிக்கப்படக்கூடிய நடிகராக உயர்ந்தார். நிஷாந்த் அண்ட் பூமிகா, மிஸ்டர் இந்தியா, சாட்சி 420 ஆகிய படங்களில் மாறுபட்ட கதாபாத்திரங்களில் சிறப்பாக நடித்திருந்தார்.
அவரது மறைவு இந்திய சினிமா மற்றும் நாடகத்துறைக்கு பேரிழப்பாகும் என்று கூறியுள்ளார்.
|
|
|
|