Yarl Forum
கடலோடு ஒரு காவியம்...! - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11)
+--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52)
+--- Thread: கடலோடு ஒரு காவியம்...! (/showthread.php?tid=5813)



கடலோடு ஒரு காவியம்...! - kuruvikal - 01-13-2005

<img src='http://kuruvikal.yarl.net/archives/kittu_s_1.jpg' border='0' alt='user posted image'>

<b>வெடியோசை எழுந்தது
எங்கள் நெஞ்சோசை அழிந்தது
களத்தோடு களமாடி
கோட்டைக்குள் அடித்தெழுந்த
அந்தப் புயலும் ஓய்ந்தது...!
தங்க தமிழீழ வேங்கையது
வங்கக் கடல் நடுவே சரிந்தது...!

அசோகச் சக்கரத்தின்
அகோரத் தாண்டவம் - எங்கள்
மாமாவின் உடல் கிழித்தது...!
ஆதிக்க வெறி பிடித்த
அகிம்சா தேசமது
அவன் ஆன்மா குடித்துக் குதூகலித்தது...!
தமிழீழ அன்னையவள்
கொடிதனைச் சுமந்தவன்
ஆழி தன் அலையோடு
மீண்டிட்டான் தமிழ் மண்ணை...!

குரலோசை எழுந்தது - அது
அவன் புகழோசை சொன்னது
விடியலின் தாய் மகன்
விடிவெள்ளியான கதை
முடிவின்றிச் சொன்னது....!
தர்மம் வெல்லும் என்பது
காலத்தின் கோலம் என்றது
சரியாகி நின்றது
எங்கள் நெஞ்சங்கள் அவன் நினைவுகள்
அலையலையாய் சுமந்தது...!</b>

நன்றி... http://kuruvikal.yarl.net/


- tamilini - 01-13-2005

Quote:அசோகச் சக்கரத்தின்
அகோரத் தாண்டவம் - எங்கள்
மாமாவின் உடல் கிழித்தது...!
ஆதிக்க வெறி பிடித்த
அகிம்சா தேசமது
அவன் ஆன்மா குடித்துக் குதூகலித்தது...!
தமிழீழ அன்னையவள்
கொடிதனைச் சுமந்தவன்
ஆழி தன் அலையோடு
மீண்டிட்டான் தமிழ் மண்ணை...!

இந்த அசோகச்சக்கரத்திற்கு வேலையே இது தானா..?? :oops: :oops: கவிதை சு}ப்பர்.. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- kavithan - 01-13-2005

கவிதைக்கு வாழ்த்துகள்.... மிக அருமையாக இந்தியா செய்ததை கூறி இருக்கிறீர்கள்


- shanmuhi - 01-13-2005

கவிதைக்கு வாழ்த்துகள்....


- hari - 01-13-2005

கவிதைக்கு வாழ்த்துகள்....