| Welcome, Guest |
You have to register before you can post on our site.
|
| Forum Statistics |
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244
Full Statistics
|
| Online Users |
There are currently 44 online users. » 0 Member(s) | 41 Guest(s) Applebot, Bing, Google
|
| Latest Threads |
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,327
|
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,235
|
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,608
|
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,301
|
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,649
|
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,083
|
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,472
|
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,512
|
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,045
|
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,243
|
|
|
| அல்லா கையொப்பம் இட்டுள்ளாராம் |
|
Posted by: Vaanampaadi - 01-11-2005, 01:28 PM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (7)
|
 |
அல்லாவின் சட்டங்களை அலட்சியப்படுத்தியதால் அவர் கோபமடைந்து தானே பர்சனலாக கையொப்பமிட்டு சுனாமியை
அனுப்பிவைத்தாராம். இது பற்றிய செய்தியை கீழே வாசிக்கவும்:
அல்லாவின் கையொப்பத்தை படத்தில் காண்லாமாம்:
<img src='http://www.news24.com/Images/Photos/2005011011075510-tsunamisign.jpg' border='0' alt='user posted image'>
<b>'God signed the tsunami'
10/01/2005 08:50 - (SA)
[b]The word Allah is inset on the satellite picture. Photo: DigitalGlobe </b>
by Bryan Pearson
Colombo - God signed His name in the tsunami that battered Sri Lanka and other countries on December 26, and [b]sent it as punishment because humans have been ignoring His laws, Sri Lankan Muslims say.
Proof, according to Mohamed Faizeen, manager of the Centre for Islamic Studies in Colombo, is a satellite picture taken seconds after the tsunami smashed into Sri Lanka's west coast near the town of Kalutara and as it was receding.
[b]"This clearly spells out the name 'Allah' in Arabic," Faizeen said, pointing to the shape of the waves - a gigantic "E" complete with whorls and sidewaves that do indeed appear to combine to resemble the Arabic script for the name "Allah".
The picture was taken by the DigitalGlobe Quickbird satellite on December 26 at 10:20am local time, shortly after the moment of tsunami impact. It can be viewed at the website "Allah signed His name," Faizeen said. "He sent it as punishment. This comes from ignoring His laws."
He likened the tsunami to the Old Testament account of floods being sent by God in the time of Noah as punishment for those who had drifted from His ways.
He added that he had visited the mainly Muslim Ulvae, near the major town of Batticaloa, and found that a madrassa - an Islamic religious school - had been left untouched while 400 houses around it had been flattened with great loss of life.
The shorelines of many Asian countries hit by the waves had become playgrounds for Westerners and errant Muslims. Vices such as prostitution and drinking were rife, the cleric said.
[b]"Allah first sends small punishments - like loss of business. If we ignore the warning, He sends bigger ones - loss of life. If we still ignore the warnings, the big punishments, like earthquakes and tsunamis will come."
Faizeen said areas of Sri Lanka mainly populated by Muslims were the hardest hit and that the waves were aimed at Muslims in Indonesia and Sri Lanka who he said had strayed from God's ways.
The island is around 70 percent Buddhist, 15 percent Hindu, 7.5 percent Muslim and 7.5 percent Christian.
Another Muslim leader, Muhammed Fawmey of the International Islamic Youth Front, said he too believed the tsunami was sent by God.
"He clearly signed His name in the waves," said Fawmey, who said the Arabic script in the waves had suddenly "appeared to me as in a vision" when he was staring at the satellite picture.
"The Koran says people can be punished through water or through fire," he added, referring to Islam's sacred scripture.
Scientists have a more rational explanation for the December 26 tsunami - an undersea earthquake measuring 9.0 on the Richter scale off the west coast of northern Sumatra.
"Near the source of submarine earthquakes, the seafloor is 'permanently' uplifted and down-dropped, pushing the entire water column up and down, the US Geological Survey says on its website.
source: news24.com
|
|
|
| விவாதத்துக்குரிய விடயங்கள் |
|
Posted by: patiyaatiyaar - 01-11-2005, 11:35 AM - Forum: சுமுதாயம் (வாழ்வியல்)
- Replies (15)
|
 |
அன்பின் யாழ் நண்பர்களுக்கு வணக்கம். இப்பகுதியில் நான் சில விவாதத்துக்குரிய விடயங்களை முன்வைத்து அது தொடர்பான கருத்துத்தேடலில் உள்நுழையவிரும்புகிறேன். தயவுசெய்து இவ்விவாதத்துக்கு தொடர்பற்ற எந்த விடயத்தையும் இப்பகுதியில் குறிக்கவேண்டாம் என தயவுடன் கேட்டுக்கொள்கிறேன். உங்களுக்கு தோன்றும் சின்னவிடயத்தையும் தலைப்புடன் தொடர்புபட்டதாக இருப்பின் அவசியமாககுறிப்பிட மறக்கவேண்டாம்.
சரி இப்போது விவாததலைப்புக்கு வருகிறேன்.
[size=16]
எங்களுடைய ஊரின் பெயர்களை யாழ்ப்பாணத்தை Jaffna ஆகவும் பருத்தித்துறையை Point Pedro ஆகவும் மாற்றியெழுதிக் கொண்டிருக்கிறோமே இது சரியானதா? காந்தனை Kanthan என்று எழுதும் நாம் கந்தன் என்பதை எப்படி எழுதுவோம்?
இவ்விடயம் பற்றியும் இதுதொடர்பான விடயம் பற்றியும் மட்டும் கருத்துக்களை முன்வைப்பதன்மூலம் ஆக்கபூர்வமான கருத்தாடலுக்கு அழைக்கிறேன். இத்தலைப்பு எளிமையாக விளக்குவதற்காக மட்டுமே கையாளப்பட்டுள்ளது என்பதையும் இதன் கருப்பொருட்தலைப்பை கீழே தருகின்றேன்.
[size=16]
தமிழிலுள்ள சொற்களை ஆங்கிலத்தில் மாற்றுகின்றபோது நாம் கையாண்டுகொண்டிருக்கின்ற மொழியாண்மை சரியானதா?
|
|
|
| அந்தரித்து ஓடி வந்த அப்பாவி மக்களை (உதயன் நாளிதள்) |
|
Posted by: Mathuran - 01-11-2005, 09:20 AM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (15)
|
 |
யாழ்.கோப்பாயைச் சேர்ந்த காரைதீவுää பாலை யடி விக்னேஸ்வரர் ஆலய பிரதம குரு சிவஸ்ரீ ச.பிரகதீஸ்வரசர்மா கூறுகையில் -
ஷஷசம்பவ தினம் அதிகாலை 2 மணிக்கு எழும்பி ஆலயத்திற்குச் சென்று வேலைகளை முடித்துவிட்டு திரும்வெம்பாவைப் பூசை செய் தேன்.
அப்போது பஞ்சாராத்தியிலிருந்த கற்பூரம் எனது கையில் விழுந்தது எனக்குச் சந்தேகம் ஏற்பட்டது. அன்றிரவு கனவில் கடல் வருவது போலவும் நானும் எனது இரு பிள்ளைகளும் தப்பியோடுவது போலவும் கண்டேன். கற்பூர மும் விழுந்த சம்பவம் எனது மனதை உறுத்தி யது. இருப்பினும் பூசையை முடித்துவிட்டு ஆறு மணியளவில் வீடு வந்து சேர்ந்து சற்றுக் கண்ண யர்ந்தேன்.
அப்போது கடல் வருது என்று கத்திக் கொண்டு சிலர் ஓடிவந்தனர்.
நான் எழும்பி வந்து வெளியில் நின்று பார்த் தேன். கடல்நீர் அருகிலுள்ள வளவிற்குள் வந்து கொண்டிருந்தது. நான் பிள்ளைகளையும் மனை வியையும் அழைத்துக்கொண்டு அம்மா வீட் டுக்கு ஓடினேன். அக்காää அத்தான் தியாகராஜக் குருக்கள் பிள்ளைகளுடன் ஓடி வந்தனர். எனது சகோதரனும் பிள்ளைகளுடன் ஓடி வந் தார்.
அனைவரும் அருகிலிருந்த அம்மா வீட்டிற் குச் சென்றோம். அங்கு ஷஷவந்தால் அனைவருக் கும்தானே. பயப்படவேண்டாம்|| என்று கூறிய படி சாஸ்திரம் பார்க்கும் மேசையின் பின்னால் அமர்ந்திருந்தார். நாமனைவரும் அம்மாவைக் கட்டிப்பிடித்த வண்ணம் இறைவனை அழைத் தோம்.
மறுகணம் பாரிய இரைச்சலுடன் வந்த பேரலை எம்மைப் பிய்த்து ஆளையாள் வௌ; வேறு திசையில் அடித்துச் சென்றது. என்னைக் கொண்டுபோய் மரமொன்றில் பொறுக்கவைத்தது.
களப்பு என்ற பகுதியில் நின்றபடியால் அவ் விடத்தில் சுமார் 20 அடி நீர் நின்றிருக்கும்.
அப்போது அங்கு ஒரு குழந்தை அலை யில் அடித்து வந்துகொண்டிருந்தது. உடனே எட்டிக் குழந்தையையும் பிடித்துக்கொண்டு மரத் தில் தொங்கினேன்.
மற்றக்கிளை ஒன்று முறிந்து எம்மீது விழ அதிலிருந்த முசுறுகள் என் முகத்தின்மீதும் குழந்தையின் மீதும் படர ஆரம்பித்தன.
அவை கடிக்கத் தொடங்கின. கையை விட்டால் 20 அடி நீர். குழந்தையும் பீறிட்டு அழுதது. ஒன்றும் செய்ய முடியாத நிலையில் மரத்தில் குழந்தையைப் பிடித்தவாறு தொங்கி னேன். முசுறு கடித்துக் கொண்டிருந்தது.
அப்போது என்னையறியாமல் அலறினேன். தூரத்திலிருந்த சீராளன் என்பவரது பிள்ளை களும் நண்பர்களும் சேர்ந்து கயிற்றைக் கட்டி என்னை மீட்க முயற்சித்தனர். கயிற்றைப் பற்றிப் பிடித்தவாறு நீரினுள் அமிழ்ந்து பின் கரை சேர்ந்தேன்.
உடம்பில் சிறு துணிகூட இல்லை. சுய நினைவற்றவனாக கரையேறியதும் ஒருவர் சேட் டினால் கச்சை கட்டி விட்டார். பின்பு வீதிக்கு வந்தேன். ஒருவர் என்னைக் கண்டு ஓடிப்போய் வேட்டியொன்றைக் கொண்டு வந்து கட்டிவிட் டார்.
என்னை சம்மாந்துறை ஆஸ்பத்திரிக்குக் கொண்டுபோய் ஊசி போட்டார்கள். எனது குடும் பத்தாருக்கு என்ன நடந்தது என்று எனக்குத் தெரியாது.
எனது மனைவிää இரு குழந்தைகள்ää அம்மாää எனது அக்காää பிள்ளைகள் என ஏழு பேர் பலி யாகியுள்ளனர் என்று பின்னர் தெரியவந்தது.
ஒருவாறு தமிழர் வாழும் பகுதியென்று எண்ணி வீரமுனைப் பிள்ளையார் ஆலயத்திற்குச் சென் றேன்.
அங்கு ஆயிரம் பேர் வரையில் நின்றனர். அன்றிரவு பாரிய மழை பெய்தது. ஆலயத் தினுள் சனம் உட்செல்ல முயற்சித்தபோது ஆல யம் பூட்டப்பட்டது.
துடக்குள்ளவர்கள் வருவார்கள் ஆசூசம் நேரும். எனவே யாரும் வரவேண்டாமென்று கூறி ஆலயத்தைப் ப10ட்டிவிட்டார்கள்.
ஆயிரம் சனமும் கொட்டும் மழையில் அழு தழுது நனைந்தனர். அந்தரித்து வந்த அப் பாவி மக்களை ஆலயத்துக்குள் செல்லவிடாது தடுத்த பாதகர்களின் செயல்கண்டு மனதிற் குள் அழுகிறேன்.
சுனாமியைப் போல் ஆயிரம் சுனாமிகள் வந்தா லும் எம்மவர் திருந்தமாட்டார்கள் என்று கூறி னேன்.
மறுநாள் வீடு வந்து பார்த்தேன். அங்கு கிடந்ததாகக் கூறப்படும் உடமைகள் எதுவுமே இல்லை. அண்ணனின் அறுபது பவுண் நகை கள்ää 2 லட்சம் ரூபா பணம் வகைவகையான வேட்டிகள் ஒன்றையும் காணோம்.
நான் மனம் தளரவில்லை. பிள்ளையார் என்னை மட்டும் மிஞ்சவைத்தது அவருக்குச் சேவை செய்யவே என்று நினைத்தவனாக வாழ் கிறேன் - என்றார்.
நன்றி உதயன்
|
|
|
| அன்னை பூபதி......... |
|
Posted by: தமிழரசன் - 01-11-2005, 07:45 AM - Forum: தமிழீழம்
- Replies (2)
|
 |
அன்னை பூபதி.........
அகம்நிறை வாழ்கின்ற அன்புடைத் தெய்வமே!
அகிம்சைவழி வாழ்ந்திட்ட அன்னை பூபதியே!
இகமிங் குள்ளவரை என்றும் நிலைத்திடும்
இணையிலாப் புகழ்பூத்த இன்னுயிர் மாதே!
தகவுடை மங்கையர் திலகமே! தாயே!
தக்கவோர் கவிபுனைந்து தாள்மீது படைத்திட
மகள்நான் விருப்புற்றேன் மனத்துயர் வெளிப்படுத்தி!
மறைவின்றி வடிக்கின்றேன்! மனமுவந்து விடைதருக!
சிங்களத்தின் கொடுமையிற் சீற்றமுற்று நாமிருக்க
சிந்திய இரத்தமது உலர்ந்து வற்றுமுன்னே
வங்கக் கடல்கடந்து வந்தனர்வாழ் வளிக்கவென
வஞ்சம்செய் உளத்தினராய் வலிந்தங்கு புகுந்தனர்!
இங்குற்ற மாந்தரெலாம் இனிதே மகிழ்ந்திருக்க
இனியெமக் குத்துயரில்லை யெனக்கூறி நிமிர்ந்திருக்கப்
பொங்கிடும் மெய்யுணர்விற் கண்டனையோ அவர்குள்ளம்?
பொறுத்திருந்து செயற்படுத்தக் கொண்டனையோ திருவுளம்?
அமைதிபேண வந்தவரோ ஆக்கிரமிப் பாளரானார்!
ஆண்பெண் கிழவரொடு குழவியெனப் பேதமின்றி
எமையெண்ணிப் பார்த்திடா எரித்தும் புதைத்தும்
அளவிட முடியாத் தீமைகள் புரிகையிலே
தமையுணர்ந்து மட்டுநகர் மங்கையர் விழித்தெழத்
தலைவியாய் முன்வந் துண்ணா நோன்பிருந்து
இமயமே சரிந்திட இன்னுயிர் ஈய்ந்திட்ட
எம்முயிர்த் தாயேஎன் வினாவிற்குப் பதிலென்ன?
இன்றுநாம் உனக்கான விழாக்காணும் பொழுதினிலே
இன்துயில் புரிகின்ற பூங்காவின் நடுவினிலே
நன்றிலா விடயங்கள் நாடோறும் கண்டுமே
நானிலமும் மனம்நொந்து நயனநீர் சொரிகிறதே!
பன்றிகளாய் மனிதவினம் மாறுதல்தான் ஏன்தாயே?
பகைவருடன் கரம்கோத்துப் பாலகரைக் கொல்லுதலும்
ஒன்றிணைந்து பிரிவினைகள் மழலைகட்கு ஊட்டுதலும்
உன்மனதை வருத்தலையோ? உண்மைதனை விளம்பம்மா!
அன்னையே உன்நிலம் ஆண்டாண்டு காலமதாய்
அரக்கரின் அழிவிற்குள் அடங்கியதும், ஆங்கே
அந்நியரின் வரவதனால் அவர்பால் விளைநிலங்கள்
ஆனதனால் உன்னினம் அபலைகளாய் மாறி
இன்னுயிர்கள் துறந்தும் இடப்பெயர்வால் நலிந்தும்
ஏழ்மையுறு வாழ்வுடனே ஏதிலிக ளாகிடத்
தன்னின வரலாற்றைத் தெரிந்துமே சிலரங்கு
சதியின் வசமானாரே! தாழ்வுற்றுப் போதற்கோ?
வடக்கைமட்டும் ஏற்றிடுக! கிழக்கைநீர் மறந்திடுக!
வளமான வாழ்வங்கு வழியமைத்துக் கொடுத்திடுவோம்!
துடுக்குத் தனமாகத் தொடுத்தனர் சொல்லம்பு!
துடித்தெழுந் தான்தம்பி துட்டரை நோக்கியங்கு
திடமாகப் பதிலுரைத்தான்! தினவெடுத்த தோளுடனே!
தனித்தமி ழீழமொன்றே தாரகமொழி யென்றான்!
கடிதென மொழிந்தவுரை காத்ததுன் மண்தனை
கயவர்க ளறிவாரோ தியாகத்தின் மேன்மைதனை?
பருகிடும் தாய்ப்பாலின் சுவைதனிலே பிரிவுண்டோ?
பாய்கின்ற குருதியிலும் நிறவேறு பாடுண்டோ?
பிரபாகரன் என்னும் பெருந்தலைவன் மட்டுமன்றிப்
பிணைந்து களம்புகுந்த புலிப்படை மறவரும்
பிரதேசம் பேசவில்லை! பிறர்தமரென எண்ணவில்லை!
பிறந்தமண் காத்திட ஒருமித்துக் களம்புகுந்தார்!
பெருநிலத்தின் விடிவெண்ணி நீபுரிந்த தியாகமும்
பயனற்றுப் போனதுவோ? பகர்ந்திடுவாய் தாயே!
பண்கெட்டுப் போனதான பாடல்கள் போன்றும்,
பாதியாய்ப் பகிர்ந்தெடுத்த பளிங்குச் சிலைனெவும்,
மண்பிரிக்கப் புறப்பட்டார்! மாண்புறுமோ தாயே?
மன்னுமுயிர்க் கழிவில்லை, மாநிலத்தே யாதலினாற்
கண்திறந்து பாரம்மா! கல்லறைகள் விடுத்தெழுந்து
கண்மணிகள் தனைச்சேர்த்துக் காத்திடப் புறப்படுக!
எண்ணும் பொழுதிலென் இதயமே குமுறுதம்மா!
ஈனரின்அறி வீனத்தால் உன்உள்ளமும் வெந்ததோ?
முடிவான கருத்தொன்றை முன்வைக்க விரும்புகின்றேன்!
மனத்தின்கண் மாசகற்றி மனிதத்துடன் வேண்டுகிறேன்!
படித்தவர், பாமரர், பயிலுனர் யாராயினும்
பிரதேச வாதமெனும் புற்றுநோய்க் கிருமிதனை
நொடியினில் அகத்தினின்றும் நொருக்கிடுதல் வேண்டும்!
நூலளவு தங்கிடினும் நோய் பெரிதாகி
விடிவுதனைத் தடுத்திடும்! வேதனையை அளித்திடும்!
வளமான எதிர்காலம் அழிதற்குத் துணைபோகும்!
இது ஒரு தளத்தில் எடுத்த செய்தி!
|
|
|
| அம்மாவின் இழ(ற)ப்பு |
|
Posted by: தமிழரசன் - 01-11-2005, 07:24 AM - Forum: கவிதை/பாடல்
- Replies (1)
|
 |
அம்மாவின் இழ(ற)ப்பு
மிண்டும் பிறப்பெதன்றால்...
நான்
மிண்டும் பிறப்பெதன்றால்.
கருவிலேயே
கலைத்து விடு.
இன்னொரு முறை உன்னை...
இழக்க இயலாது.
|
|
|
| கனடிய பிரதமர் வன்னி செல்வதை தடுக்க முயற்சி |
|
Posted by: Mathan - 01-11-2005, 06:35 AM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (6)
|
 |
<span style='font-size:30pt;line-height:100%'>கனடிய பிரதமர் வன்னி செல்வதை தடுக்க முயற்சி
அண்மையில் இலங்கை சென்ற ஜக்கிய நாடுகள் சபை செயலர் கொபி அனான் புலிகள் கட்டுப்பாட்டு பகுதிக்கு சென்று கனாமியால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிடுவதை இலங்கை அரசும் சிங்கள தலைவர்களும் வெற்றிகரமாக தடுத்துவிட்டார்கள் (அது தமிழர்களுக்கு சாதகமான ஒரு அனுதாப அலையை உலக அரங்கில் உருவாக்கியது என்பது வேறு விடயம்). தற்போது இலங்கை செல்லவிருக்கும் கனடிய பிரதமர் போல் மார்ட்டீன் புலிகள் பகுதிக்கு செல்வதை தடுக்கும் சதி முயற்சியில் சிங்கள தலைவர்களும் ஊடகங்களும் முழு மூச்சாக இறக்கி இருக்கின்றார்கள். இதனை நாம் சென்ற முறை போல் கவனக்குறைவாக விட்டு விடாமல் ஒற்றுமையாக செயற்பட்டு கனடிய பிரதமர் வட கிழக்கு பகுதிகளுக்கும் சென்று பாதிக்கப்பட்ட மக்களை சந்திப்பதை உறுதி செய்ய வேண்டும்.</span>
|
|
|
| UNCEASING TSUNAMI |
|
Posted by: Kamalinik - 01-11-2005, 12:18 AM - Forum: சுமுதாயம் (வாழ்வியல்)
- Replies (1)
|
 |
ஓயாத சுனாமி
கடல் அலை அலைக்கழித்த எங்களது அலைச்சல் இன்னும் ஓயவில்லை.
அலை வருவது பற்றி எப்படித் தகவல்கள் எதுவும் இல்லாதிருந்ததோ அதே போல இன்று எங்களுக்கான எதிர்காலத் திட்டங்கள் பற்றியும் தகவல்களில்லை.
அலைகளில் எறிபட்டு மூச்சடக்கித் தபபி வந்து சுவாதீனமாக மூச்சு விடமுதல் ஒரு இடத்திலிருந்து இன்னுமொரு இடத்துக்கு எறியப்படுகிறோம்.
கடலிலிருந்து ஒரு கிலோ மீட்டருக்கப்பால் தான் குடியிருக்கலாமாம். ஒரு நாள் வானொலி சொல்கிறது. இன்னொரு நாள் 300 மீட்டர் என்கிறது அதே வானாலி.
யாரைப் பற்றிக் கதைக்கிறார்கள்? எங்களைப்பற்றியா? ஏன் எங்களை விட்டு விட்டுக் கதைக்கிறார்கள். இரண்டு கிழமையாயிற்று. இன்றுவரை எங்களது விருப்பங்களை யாரும் கேட்கவில்லை.
கடற்கரையைப் பிரிந்து போய் செய்யத் தொழிலுமில்லை. எங்கள் கிராமத்தை விட்டுத் தூரப் போக எங்களுக்கு விருப்பமில்லை
நாங்கள் விட்டு விட்டு வந்தது
உயிர்களையும் பொருட்களையும் மட்டுமில்லையே
ஒரு வாழ்க்கை முறையையும் தானே உரிமைகள் பற்றிப் பேசும் யாருக்கும் ஏன் எங்கள உரிமைகள் பற்றிப் புரியவில்லை?
எங்கள் வீடு எங்கள் கிராமம் என்பது
நீள அகலக் கட்டுமானம் கொண்ட ஒரு வெற்று வெளியல்லவே.
அது ஒரு கலாசாரத்தைக் கொண்ட வரலாற்றுப் பின்னணியுடனான இடமில்லையா?
எங்களுக்கென்றொரு கோயில். அது சார்ந்த வாழ்க்கை. போகுமிடத்திலிருக்கும் கோயில் சடங்குகளில் எங்களைச் சேர்ப்பார்களா? இல்லை அங்கு ஒரு இரண்டாம் தர சாதியாய்ப் போவோமா?
காட்டுக்குள் ஒரு இடமாம். கடல் மட்டத்திலிருந்து உயரமாம். கடலுக்குக் காப்பாற்றிய பிள்ளைகளை யானைக்குக் கொடுப்போமா? இல்லாவிடில் எல்லைகளில் அகப்பட்டு போரில் அழிவோமா?
எங்கள் அச்சங்களுக்குப் பதில் தருவார் யாருமில்லை?
காகிதத்தில் திட்டமிட்டுக் கணனியில் படம் வரைந்து கண நேர அறிவிப்பில் அலைபோல எறிகின்றார்.
பத்தாம் திகதி பாடசாலை என்ற ஒரு அறிவிப்பு?
இருபத்தாறாம் திகதி உறங்கி நாம் விழித்த எம்-வீடு
எமக்கில்லையென்று உரைத்தது கடலலை.
இன்று நாம் உறங்காது உறங்கும் இவ்விடமும்
எமக்கிலலையென்று உரைத்தது இவ்வறிவிப்பு.
எந்த பள்ளிக்கூடத்துக்கு எந்தப் புத்தகத்துடன் என்ன உடையணிந்துää
எப்பொழுது நான் போவேன் எனக் கேடகிறாள் என் பிள்ளை
எங்களைப் பற்றிய தகவல்களை
அறியும் உரிமை எங்களுக்கு வேண்டும்?
Jeya
_____
மூன்றாவது கண் உள்@ர் அறிவுதிறன் செயற்பாட்டுக்குழு 8 தை 2005
|
|
|
| இவர்களோடு வாழ மறுபிறப்பொன்று வேண்டும் |
|
Posted by: AJeevan - 01-10-2005, 11:12 PM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (7)
|
 |
<span style='font-size:22pt;line-height:100%'> <b>இவர்களோடு வாழ
மறுபிறப்பொன்று வேண்டும்</b>
<img src='http://www.bbc.co.uk/worldservice/images/2005/01/20050110164613kallady-vipulananda.jpg' border='0' alt='user posted image'>
இயற்கை எவ்வளவு பலம் வாய்ந்தது என்பது
இப்போதுதான் நமது கண்களுக்கு புரிகிறது.
அது போலவே மக்களது அன்பு கூட
எவ்வளவு சக்திவாய்ந்தது என்பதும்
நமக்குத் தெரிகிறது...........
2004 மார்கழி 26 ம் திகதி கடல்
நமது நிலங்களை ஆக்கிரமித்துக் கொண்டது.
அன்று முதல் ஒவ்வொரு மனிதனின்
ஆழ் மனதிலும் இறுகிக் கிடந்த
அன்பும் கருணையும் கடல் அலை போலவே
பொங்கிப் பிரவாகித்ததை
யாராலும் மறுக்க முடியாது
கடந்த காலங்களில்
நாம் நம்மவர்களின் கொடுமையான
தன்மைகளை மட்டுமே பேசி வந்தோம்.
சிறு பெண் குழந்தைகளைக் கூட
பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்தும் . . . . .
மனித உயிர்க் கொலைகாரர்கள் நிறைந்த
ஒரு சமூகத்தைப் பற்றியே பேசி வந்தோம்.
ஆனால்
இன்று நாம் பேசுவது
ஒவ்வொரு சதமாக சேர்த்த உண்டியலைக் கூட
அப்படியே தூக்கிக் கொடுக்கும் மனம் படைத்த
ஒரு சமூகத்தைப் பற்றியதாகும்.
அடுத்தவரிடம் கையேந்தி பிச்சையெடுத்தவர்கள் கூட
தனது பிச்சைப் பாத்திரத்தைக் கொட்டிக் கொடுத்து
பாலுக்காக ஏங்கும் குழந்தைகளுக்கு கொடுங்கள்
என்று கூறும் ஒரு சமூகத்தை பற்றியதாகும்.
மனித உயிர்க் கொலைகளை
அரசியலுக்காகச் செய்து வந்த ஒரு சமூகம்
அதை மறந்து மனித நேயத்தை
நினைக்கத் தலைப்பட்டிருக்கும்
புதியதொரு சமூகத்தைப் பற்றியதாகும்.
பொங்கி எழுந்த கடலலைகள்
நீலமென்றோ பச்சையென்றோ சிகப்பென்றோ
எந்த அரசியல் சாயங்களின் பேதமும் பார்க்கவில்லை.
அது போலவே
அது சிங்களவன் புலிகள் என்ற
பேதத்தைக் கூடப் பார்க்கவில்லை.
குடிசையென்றோ மாடமாளிகை என்ற பேதமும்
அதற்கு இல்லை.
துவிச்சக்கர வண்டியென்றோ பென்சென்றோ
கூட பேதம் அதற்கில்லை.
கடல் ஒருமித்த தனது குணத்தை வெளிப்படுத்தியது.
அது ஒரேயடியாக அனைவரையும் பொதுவாகவே தாக்கியது.
இதுவே இயற்கையின் நியதி.
இங்கேதான்
எம்மவர் கூட அரசியலை மறந்தனர்.
இன மத பேதங்களை மறந்தனர்.
பாதிக்கப்பட்டவர்களுக்கு
தமது மனதில் உருவான கருணையையும் அன்பையும்
இரு கரங்களாலும் முகம் பாராது
பகிர்ந்தளித்து கொடுத்து
தம்மை யாரென்று வெளிப்படுத்தனார்கள்.
அங்கே நிற பேதங்களோ
சிங்களம் தமிழ் முஸ்லிம் என்ற பேதமோ
தலை தூக்கவேயில்லை.
மனித மனங்களில் இருந்து வெளிப்பட்ட
அடிப்படையான ஆத்மார்த்தமான அன்பை மட்டுமே
அங்கே காணக்கூடியதாக இருந்தது.
50 சதத்தால் என் சம்பளத்தை உயர்த்து
எனக் கூக்குரல் போடும் மனிதர்கள்
தனது ஒரு நாள் சம்பளத்தை கையளித்தனர்.
எடுத்ததெற்கெல்லாம் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு
அப்பாவி நோயாளிகளை இம்சைப்படுத்தும்
வைத்தியர்களும் தாதிகளும் மாறிப் போய்
அவர்களாக முன்னின்று செய்த சேவைகள்
அவர்களை தெய்வத்துக்கு ஒப்பாகப் பார்க்க வைத்தது.
இன்று
இவற்றைச் செய்யுங்கள் என்று
யாரும் இவர்களுக்கு அறிவுறுத்தவில்லை.
உத்தரவு போடவோ அதிகாரம் செய்யவோ
இவர்களுக்கு யாரும் இருக்கவில்லை.
இவர்களுக்கு ஆணையிட்டது இவர்களது
அன்பும் கருணையும் கொண்ட மனம் மட்டுமேயாகும்.
இம் முடிவுகளை எடுப்பதற்கு - இம்முறை
இவர்களுக்கு நாட்களோ மாதங்களோ எடுக்கவில்லை.
ஒரேயடியாக - ஒரு கணத்திலேயே
இவர்கள் முடிவெடுத்தார்கள்.
தம்மால் கொடுக்க முடிந்தது எதுவோ
அதை வாரி வளங்கினார்கள்
அல்லது செய்தார்கள்.
கொடுப்பதற்கு ஓன்றுமில்லாமல் தவித்தவன்
தன் உழைப்பையாவது வாரி வழங்கினான்.
இதுவரை நாம்
இன்னொன்றை எதிர்பார்த்துக்
கொடுப்போரைத்தான் கண்டிருக்கிறோம்
தேர்தலுக்கு
ஒரு வாகனத்தைக் கொடுப்பவன்
ஆகக் குறைந்தது
ஒரு கண்டிராக்ட்டாவது கிடைக்குமென்றே நினைத்தான்.
இன்று அவன் தன் வாகனத்தை
பாதிக்கப்பட்டோருக்கு
எதையாவது கொண்டு போகக் கொடுத்தான்.
அதே வாகனம்
உயிரற்ற உடல்களைக் கொண்டு சென்ற போது கூட
அவன் எதிர் கருத்துக் கூறாமல் மகிழ்வோடு இருந்தான்.
இன்று தன்னால் முடிந்த
ஓரு பிடிச் சாதத்தைக் கொடுத்ததே
பசித்தவன் பசியாறட்டும் என்ற மனமகிழ்வோடுதான்.
கையிலருந்ததை கொடுத்து விட்டு
ஒரு சிலர் வெறுமனே நடந்தது கூட
அல்லல் படுபவன் வாழவேண்டும்
என்ற ஆதங்கத்தில்தான்.
இவர்கள் எவருமே
ஆகக் குறைந்த நன்றி என்ற
வார்த்தையைக் கூட எதிர்பார்க்காமலே செய்தார்கள்.
கேடுகெட்ட அரசியல்
தன் சாயத்தை மறந்து போய்
உண்மையும் ஒற்றுமையும் சேர்த்து
அன்பை மனித மனங்களில்
தவழ வைத்த காலம் இதுவாகத்தானிருக்கும்.
தொலைக் காட்சி நாடகங்களுக்கு
அடிமையான சமூகம்
அதை மறந்து மனத உயிர்பலிகளைக் கண்டு
ஐயோ என்று கதறியழுதனர்.
தண்ணியின் வேகத்தை தாள முடியாமல்
கடல் அலையோடு அடிபட்டுப் போகும்
காட்சியைப் பார்த்து அதைக் காண சகிக்காது
கண்களை மூடிக் கொண்டனர்.
விழியோரம் வழிந்த கண்ணீரைக் கூட
மனம் தடுமாறி கையில் பட்டிருப்பது
மாவென்றோ மிளகாய் பொடியென்றோ கூட
எண்ண மறந்தவர்களாய் கண்களைத் துடைத்தனர்.
ஐயோ என்ற கதறலோடு
தன் கையில் பட்டதை எடுத்து
தானமாக வாரி வழங்கினர்.
அரச உதவிகளோ
வெளிநாட்டு உதவிகளோ வருவதற்கு மட்டுமல்ல
அவர்ளே செய்வதறியாது திகைத்து நின்ற போது
சாதாரண மக்களின் உதவிகளே
பாதிக்கப்பட்வர்களை சென்று உடனடியாகச் சேர்ந்தது.
மனிதர்கள்
கருணை காட்டிய நேரங்களை பார்த்ததுண்டு.
ஆனால் இலங்கையின் ஒட்டு மொத்த சமூகமே
கருணை கொண்டதை இதுவரை
எவரும் இப்படிப் பார்த்திருக்கவே முடியாது.
இன்று
அழுத இதயங்கள்
பணத்துக்காக ஒப்பாரி வைக்கவில்லை.
உண்மையாகவே அழுதன.
கொடுத்தவர்கள் வள்ளளெனப்
பெயரெடுக்கக் கொடுக்கவில்லை.
அவர்கள் உண்மையாகவே கொட்டிக் கொடுத்தனர்.
இவர்கள் பெயரைக் கூடத் தெரியப்படுத்தாமல் கொடுத்தனர். இங்கேதான்
நாம் உண்மை மனித மனம் கொண்ட
இதயங்களைக் கண்டோம்.
இவர்கள் எவ்வளவு பெரியவர்கள்.
பெருமை மிக்கவர்கள்.
இந்த மனிதர்கள் எவ்வளவு இனியவர்கள்.
இது ஒரு இனிய சமூகம்தானே?
நானும்
இவர்களோடு ஒருவனாய் இணைந்து கொண்ட போது
நாங்கள் எமது இனத்தவர் (சிங்களவர்) வாழும்
தெற்கே போகாமல்
தமிழர்கள் (விடுதலைப் புலிகள்) வாழும்
வாகரையை நோக்கிப் போய்க் கொண்டிருந்தோம்.
எமது வாகனம்
பாய்களாலும் படுக்கைகளாலும்
பெண்களுக்குத் தேவையான ஆடைகளாலும்
மருந்துகளாலும் நிறைந்து கிடந்தது.
\"உணவு வகைகள் எப்படியாவது கிடைக்கும்.
நாங்கள் வேறு ஏதாவது எடுத்துச் செல்வோம்.
படுப்பதற்கான பாய்கள் அதிகம் தேவைப்படும்\" என
யாரோ ஒருவர் சொல்ல
அதை எவரும் எதிர்க்காமல் ஏற்றுக் கொண்டார்கள்.
எமக்குத் தேவையான சில உதவிகளை
சியநேரு விளையாட்டுக் கழகமும்
மாணவர் சங்கமும் செய்தது.
\"நாங்கள் யாரும் போகாத
மூதூர் பக்கமாய்ப் போவோம்\" என்றார் ஒருவர்.
யாரும் அதை மறுப்பு சொல்லாமல் ஏற்றுக் கொண்டோம்.
நாங்கள் போவது புலிகளின் பகுதிக்கென்று
யாரும் மறுப்பு சொல்லவில்லை.
நாங்கள் போவது கடல் சாத்தானால்
துன்புற்ற தங்குமிடமின்றித் தத்தளிக்கும்
அனாதைகளுக்கு உதவவேயாகும்.
குளிரில் நடுங்கும் குழந்தையை
அணைத்துக் கொண்டு உறங்க
ஒரு தாய்க்கு நாம் கொடுக்கும்
விரிப்புகள் உதவுமானால்
அதுவே போதும்.
சமாதனமோ யுத்தமோ என்ற
பிரச்சனைகள் கூட எம் முன் எழவேயில்லை.
அவையனைத்தையும் கடல் எம்மை
சிறிது காலத்துக்காவது மறக்க
வைத்துவிட்டதாகவே தோன்றியது.
கடும்
குளிரிலும் மழையிலும்
ஒரு கோவிலிலோ
பாடசாலையிலோ
அல்லது ஏதோ ஒரு மண்டபத்திலோ
படுக்க ஒரு விரிப்புன்றி ஏங்கும்
மழலைகளையாவது காப்பாற்ற
எம்மால் முடிந்ததைச் செய்ய வேண்டுமென்ற
உணர்வு மட்டுமே எமது மனங்களில் இருந்தது.
ஆனாலும்
நாங்கள் கந்தளாய் பகுதியைத் தாண்டும் போது
எமது பயணத்துக்கான தடையேற்படுத்தும்
செய்திகளையே கேட்க முடிந்தது.
\"போகாதீர்கள் புலிகள் பொருட்களை அபகரிக்கிறார்கள்\"
என்று சொன்னார்கள்.
ஆனால்
ஒரு சிலர்
\"அங்கு ஒரு பிரச்சனையுமில்லை பயப்படாமல் போங்கள்\"
என்று சொன்னது மனதுக்கு கொஞ்ச ஆறதலாக இருந்தது.
கெட்ட செய்திகளை விட நல்ல செய்திகளை மட்டுமே
மனதில் போட்டுக் கோண்டு போய்க் கொண்டிருந்த போது
ஒரு கடையருகே நிறுத்தி கடைக்குள் உள்ளிட்டோம்.
\"உங்களுக்கு ஒரு பிரச்சனையும் வராது.
விரும்பினால் நானும் உங்களுக்கு உதவுகிறேன்.
எவ்வளவு சனம் வேதனைப் படுகுது தெரியுமா'\" என்று கூறி
ஒரு பெரியவர் எம்மோடு வரக்கூடத் தயாரானார்.
அந்தப் பெரியவரது வார்த்தைகள்
எமக்கு யானைப் பலத்தைத் தந்தது.
எவரது பேச்சையும் காதிலெடுக்காமல்
பயணத்தைத் தொடங்கினோம்.
அரச போலீசின் காவலறணை அடைந்த போது
\"புலிகள் தாக்குகிறார்கள் போக வேண்டாம்\" என்றார்கள்.
ஓரு உயர் அதிகாரி கூட அதையே சொன்னார்.
\"எங்களை போவதற்கு அனுமதியுங்கள் அது போதும்\" என்றோம்.
போக அனுமதித்தார்கள்.
அரச அதிகாரப் பகுதியைத் தாண்டி
புலிகளின் அதிகாரப் பகுதிக்குள் உள்ளிட்டோம்.
செஞ்சிலுவைச் சங்கத்தின் வாகனங்களும்
இன்னும் சில வாகனங்களும்
புலிகளின் வாகனங்களும் போய்க் கொண்டிருந்தன.
எமது வாகனத்தையும் அவர்களது வாகனத்துடன்
வரிசையாக ஓட்டிச் சென்றோம்.
ஓரு கட்டிடத்தினருகே வாகனங்கள் நிறுத்தப்பட்டன.
எமது வாகனத்தையும் நிறுத்த வேண்டியதாயிற்று.
முன்னால் சென்ற சில வாகனங்களிலிருந்த பொருட்கள்
இறக்கப்படுவது தெரிந்தது.
சிறிது நேரம் நாங்கள் அமைதியாக இருந்தோம்.
\"போவோம் என்ன சொல்கிறார்கள் என்று பார்க்கலாம்\"
என்று சொன்னவர் வாகனத்தை ஓட்டிய சந்திராதான்.
\"பொருட்களை எடுக்க முயன்றால் திரும்புவோம்\"
என்றார் மற்றொருவர்.
வாகனத்தை முன் நோக்கி நகர்த்தினோம்.
வாகனத்தின் முன் பகுதியில் <b>சிங்களத்தில்</b>
<b>எமது சகோதரர்களுக்கு எமது பங்களிப்புகள்</b>
என்று எழுதப்பட்ட பதாகை வேறு இருந்தது.
எமது வாகனத்தை செக் பொயின்டில் இருந்த
புலிகள் நிறுத்தாமல் முன்னேற சைகை செய்தார்கள்.
வாகனத்தை எட்டிக் கூட அவர்கள் பார்க்கவில்லை.
நாம் பயணிக்கத் தொடங்கினோம்.
வாகரை நோக்கிய பயணத்தின் போது
மகாவலி கங்கையை தாண்டிச் செல்ல வேண்டிய
பகுதியை அண்மித்த போது
மற்றுமொரு புதிய பிரச்சனை ஏற்பட்டது.
வாகரை அகதிகளின் முகாமுக்கு செல்ல
இன்னும் 40 கிலோ மீட்டர் செல்ல வேண்டியிருந்தது.
பாதை வேறு தாறு மாறனதாகவும் உடைந்தும் காணப்பட்டது.
கதிரவன் கூட அஸ்தமித்துக் கொண்டிருந்தான்.
இறுதியாக காலம் எமது பயணத்தைத்
தொடரவிடாது தடுக்க முயன்றது.
எமக்குத் தெரிந்த
தமிழில் ஒரு புலிப்படை வீரனிடம்
அகதி முகாம் பற்றிக் கேட்டோம்.
ஆனதீவு என்று போகும் வழியை விபரித்தான்.
கடுமையாகப் பாதிக்கப்பட்டு
வழியெல்லாம் காடுகள் தடுத்து கிடந்த
பாதையின் ஊடாக
ஆனதீவு அகதிகள் முகாமை அடைந்தோம்.
காடுகள் நிறைந்த
ஒரு குக் கிராமத்தில் அமைந்து இருந்த
சிறியதொரு கட்டிடமே ஆனதீவு அகதிகள் முகாம்.
அங்கு குழந்தைகளும் பெண்களும் மட்டுமே காணப்பட்டார்கள்.
ஆண்களாக சில வயோதிபர்கள் மட்டுமே இருந்தார்கள்.
அந்த இளம் பிஞ்சுகள் எம்மை கண்ட போது
ஓடி வந்ததை என்னால் விபரிக்க முடியாது.
குழந்தைகளைப் பெற்றவர்களுக்கு
அந்த காட்சியை எண்ண முடியும்.
எங்கள் வாகனத்தில் படுக்கை விரிப்புகளும்
பாய்கள் மற்றும் பெண்களுக்கான உடைகளும்
கொஞ்சம் மருந்துகளும் மட்டுமே இருந்தது.
ஓரு பத்திரிகையையோ
அல்லது
காட்போட் அட்டையையோ விரிப்பாக்கிக் கொண்டு
படுத்திருந்தவர்களுக்கு நாம் கொண்டு போயிருந்த
படுக்கை விரிப்புகள் எப்படி உதவும் என்பதை
விபரிக்க வார்த்தைகளில்லை.
எம் செயலை விட
நாம் அங்கு கண்ட காட்சியை விபரிப்பதே
சரியென்று நினைக்கிறேன்.
அனுராதபுரம் பகுதியைச் சேர்ந்த
ஒரு பௌத்த பிக்கு (துறவி)
சிலரோடு அங்கு வந்து ஆகாரங்கள்
பரிமாறிக் கொண்டிருந்த காட்சியும்
ஆறுதல் சொல்லிக் கொண்டிருந்த விதமும்
என்னை சிலிர்க்க வைத்தது.
போலீசாரின் செக் பொயின்ட்களில்
தன்னை போக விடாது தடுக்கும் போதும்
எது வந்தாலும் எம்மைப் போல அல்லல்படும்
சகோதர தமிழ் சகோதரர்களுக்கு
உதவ வேண்டுமென்று பிடிவாதமாக வந்து
இவர்களுக்கு உதவும் போது
<b>எனக்கு இதுபோல் இவர்களோடு வாழ
மறுபிறப்பொன்று வேண்டும் </b>என்று அவர்
வார்த்தைகளை உச்சரித்த போது
அவர் கண்கள் குளமாகியதை
என்னால் பார்க்க முடிந்தது.
இப் பிஞ்சுக் குழந்தைகள்
மஞ்சல் வண்ண ஆடையுடுத்திய
ஒரு பௌத்த துறவியைக் கண்ட முதல்
முறையாகக் கூட இது இருக்கலாம்.
அங்கிருந்த பெண்களும் குழந்தைகளும்
நன்றியறிதலோடு பிக்குவானவரை
வழியனுப்பிய விதத்தில் இருந்த
சிநேகதத்தை நான் எங்குமே கண்டதில்லை.
நான் அவரிடம்
சில விபரங்களை கேட்க முனைந்த போது
<b>புத்த பெருமான் இருந்திருந்தால்
இன்று இப்படித்தான் இருந்திருப்பார் </b>
என்ற வார்த்தைகளை மட்டும் உதிர்த்து விட்டு
தான் வந்த வாகனத்தில் ஏறிக் கொண்டார்.
திரும்பி வரும் வரையும்
சோகத்தில் கூட சிரிப்பு மாறா
மாசற்ற குழந்தைகளின்
இனிய புன்னகைகள்
என்னை நிரப்பியிருந்தது.
<b>- கருணாதாச சூரியாரச்சி</b>
<b>மீவித்த</b> சிங்கள சஞ்சிகையிலிருந்து............</span>
|
|
|
|