Yarl Forum
அந்தரித்து ஓடி வந்த அப்பாவி மக்களை (உதயன் நாளிதள்) - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12)
+--- Thread: அந்தரித்து ஓடி வந்த அப்பாவி மக்களை (உதயன் நாளிதள்) (/showthread.php?tid=5837)



அந்தரித்து ஓடி வந்த அப்பாவி மக்களை (உதயன் நாளிதள்) - Mathuran - 01-11-2005

யாழ்.கோப்பாயைச் சேர்ந்த காரைதீவுää பாலை யடி விக்னேஸ்வரர் ஆலய பிரதம குரு சிவஸ்ரீ ச.பிரகதீஸ்வரசர்மா கூறுகையில் -
ஷஷசம்பவ தினம் அதிகாலை 2 மணிக்கு எழும்பி ஆலயத்திற்குச் சென்று வேலைகளை முடித்துவிட்டு திரும்வெம்பாவைப் பூசை செய் தேன்.
அப்போது பஞ்சாராத்தியிலிருந்த கற்பூரம் எனது கையில் விழுந்தது எனக்குச் சந்தேகம் ஏற்பட்டது. அன்றிரவு கனவில் கடல் வருவது போலவும் நானும் எனது இரு பிள்ளைகளும் தப்பியோடுவது போலவும் கண்டேன். கற்பூர மும் விழுந்த சம்பவம் எனது மனதை உறுத்தி யது. இருப்பினும் பூசையை முடித்துவிட்டு ஆறு மணியளவில் வீடு வந்து சேர்ந்து சற்றுக் கண்ண யர்ந்தேன்.
அப்போது கடல் வருது என்று கத்திக் கொண்டு சிலர் ஓடிவந்தனர்.
நான் எழும்பி வந்து வெளியில் நின்று பார்த் தேன். கடல்நீர் அருகிலுள்ள வளவிற்குள் வந்து கொண்டிருந்தது. நான் பிள்ளைகளையும் மனை வியையும் அழைத்துக்கொண்டு அம்மா வீட் டுக்கு ஓடினேன். அக்காää அத்தான் தியாகராஜக் குருக்கள் பிள்ளைகளுடன் ஓடி வந்தனர். எனது சகோதரனும் பிள்ளைகளுடன் ஓடி வந் தார்.
அனைவரும் அருகிலிருந்த அம்மா வீட்டிற் குச் சென்றோம். அங்கு ஷஷவந்தால் அனைவருக் கும்தானே. பயப்படவேண்டாம்|| என்று கூறிய படி சாஸ்திரம் பார்க்கும் மேசையின் பின்னால் அமர்ந்திருந்தார். நாமனைவரும் அம்மாவைக் கட்டிப்பிடித்த வண்ணம் இறைவனை அழைத் தோம்.
மறுகணம் பாரிய இரைச்சலுடன் வந்த பேரலை எம்மைப் பிய்த்து ஆளையாள் வௌ; வேறு திசையில் அடித்துச் சென்றது. என்னைக் கொண்டுபோய் மரமொன்றில் பொறுக்கவைத்தது.
களப்பு என்ற பகுதியில் நின்றபடியால் அவ் விடத்தில் சுமார் 20 அடி நீர் நின்றிருக்கும்.
அப்போது அங்கு ஒரு குழந்தை அலை யில் அடித்து வந்துகொண்டிருந்தது. உடனே எட்டிக் குழந்தையையும் பிடித்துக்கொண்டு மரத் தில் தொங்கினேன்.
மற்றக்கிளை ஒன்று முறிந்து எம்மீது விழ அதிலிருந்த முசுறுகள் என் முகத்தின்மீதும் குழந்தையின் மீதும் படர ஆரம்பித்தன.
அவை கடிக்கத் தொடங்கின. கையை விட்டால் 20 அடி நீர். குழந்தையும் பீறிட்டு அழுதது. ஒன்றும் செய்ய முடியாத நிலையில் மரத்தில் குழந்தையைப் பிடித்தவாறு தொங்கி னேன். முசுறு கடித்துக் கொண்டிருந்தது.
அப்போது என்னையறியாமல் அலறினேன். தூரத்திலிருந்த சீராளன் என்பவரது பிள்ளை களும் நண்பர்களும் சேர்ந்து கயிற்றைக் கட்டி என்னை மீட்க முயற்சித்தனர். கயிற்றைப் பற்றிப் பிடித்தவாறு நீரினுள் அமிழ்ந்து பின் கரை சேர்ந்தேன்.
உடம்பில் சிறு துணிகூட இல்லை. சுய நினைவற்றவனாக கரையேறியதும் ஒருவர் சேட் டினால் கச்சை கட்டி விட்டார். பின்பு வீதிக்கு வந்தேன். ஒருவர் என்னைக் கண்டு ஓடிப்போய் வேட்டியொன்றைக் கொண்டு வந்து கட்டிவிட் டார்.
என்னை சம்மாந்துறை ஆஸ்பத்திரிக்குக் கொண்டுபோய் ஊசி போட்டார்கள். எனது குடும் பத்தாருக்கு என்ன நடந்தது என்று எனக்குத் தெரியாது.
எனது மனைவிää இரு குழந்தைகள்ää அம்மாää எனது அக்காää பிள்ளைகள் என ஏழு பேர் பலி யாகியுள்ளனர் என்று பின்னர் தெரியவந்தது.
ஒருவாறு தமிழர் வாழும் பகுதியென்று எண்ணி வீரமுனைப் பிள்ளையார் ஆலயத்திற்குச் சென் றேன்.
அங்கு ஆயிரம் பேர் வரையில் நின்றனர். அன்றிரவு பாரிய மழை பெய்தது. ஆலயத் தினுள் சனம் உட்செல்ல முயற்சித்தபோது ஆல யம் பூட்டப்பட்டது.
துடக்குள்ளவர்கள் வருவார்கள் ஆசூசம் நேரும். எனவே யாரும் வரவேண்டாமென்று கூறி ஆலயத்தைப் ப10ட்டிவிட்டார்கள்.
ஆயிரம் சனமும் கொட்டும் மழையில் அழு தழுது நனைந்தனர். அந்தரித்து வந்த அப் பாவி மக்களை ஆலயத்துக்குள் செல்லவிடாது தடுத்த பாதகர்களின் செயல்கண்டு மனதிற் குள் அழுகிறேன்.
சுனாமியைப் போல் ஆயிரம் சுனாமிகள் வந்தா லும் எம்மவர் திருந்தமாட்டார்கள் என்று கூறி னேன்.
மறுநாள் வீடு வந்து பார்த்தேன். அங்கு கிடந்ததாகக் கூறப்படும் உடமைகள் எதுவுமே இல்லை. அண்ணனின் அறுபது பவுண் நகை கள்ää 2 லட்சம் ரூபா பணம் வகைவகையான வேட்டிகள் ஒன்றையும் காணோம்.
நான் மனம் தளரவில்லை. பிள்ளையார் என்னை மட்டும் மிஞ்சவைத்தது அவருக்குச் சேவை செய்யவே என்று நினைத்தவனாக வாழ் கிறேன் - என்றார்.

நன்றி உதயன்


- shanmuhi - 01-11-2005

Quote:அங்கு ஆயிரம் பேர் வரையில் நின்றனர். அன்றிரவு பாரிய மழை பெய்தது. ஆலயத் தினுள் சனம் உட்செல்ல முயற்சித்தபோது ஆல யம் பூட்டப்பட்டது.
துடக்குள்ளவர்கள் வருவார்கள் ஆசூசம் நேரும். எனவே யாரும் வரவேண்டாமென்று கூறி ஆலயத்தைப் ப10ட்டிவிட்டார்கள்.
ஆயிரம் சனமும் கொட்டும் மழையில் அழு தழுது நனைந்தனர். அந்தரித்து வந்த அப் பாவி மக்களை ஆலயத்துக்குள் செல்லவிடாது தடுத்த பாதகர்களின் செயல்கண்டு மனதிற் குள் அழுகிறேன்.
<!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->


- hari - 01-11-2005

சுனாமியைப் போல் ஆயிரம் சுனாமிகள் வந்தா லும் எம்மவர் திருந்தமாட்டார்கள்


- Danklas - 01-11-2005

þôÀʧ ⨺ ¦ºöЦ¸¡ñ§¼ þÕí¸... þ§¾ ´Õ §ÁüÌĸ ¿¡Î¸Ç¢ø ¿¨¼¦ÀüÈ¢Õ󾡸 «Îò¾ ¸É§Á ±ýÉ ¦ºöÂÄ¡õ ²Ð¦ºö¾¡ø «Îò¾ ¦ÀÕ¦ÅûÇò¨¾ ¾Îì¸Ä¡õ ±ñÎ ÌÎ¾Ä¡É Áì¸û ¿¢¨ÉôÀ¡÷¸û.. ¬É¡ø ¿õ ¿¡ðÊø????

ÁýÉ¢ì¸×õ... Á¨ÉÅ¢ À¢û¨Ç¸û ¯ðÀ¼ 7 ¯È׸¨Ç ÀȢ즸¡Îò¾ §Å¾¨É¢ø ¿¡Ûõ Àí̦¸¡û¸¢§Èý... Cry


- kuruvikal - 01-11-2005

இந்த இடத்தில் ஒன்றைச் சொல்ல வேண்டும்...இந்தச் சுனாமி கண்டு பல ஆயிரம் கிலோமீற்றர்களுக்கு அப்பால் உள்ள பிரித்தானிய மக்களில் குறைந்த வருமானம் உள்ளவர்கள் கூட தம்மால் இயன்றதை செய்ய வேண்டும் என்று துடித்ததை பலரும் அவதானிக்கக் கூடியதாக இருந்தது...(நாம் இங்கு கருதுவது பிரித்தானியா வாழ் தமிழர்களை அல்ல...!) அந்தளவில் மனித நேயம் என்பது சிங்களவர்கள் தமிழர்களை விட மேற்குலக மக்களிடம் அதிகம் என்பது உண்மை...!

சிறுவர்கள் கூட விடயத்தைச் சொல்ல ஒரு ஏக்கத்துடன் உதவி செய்ய முன்வந்தார்கள் என்றால் அம்மக்களின் உள்ளத்தில் உள்ள உண்மையான மனிதநேயம் கண்டு ஆச்சரியத்துடன் மகிழமுடிந்தது...அந்தளவுக்கு அவர்களுக்கு மனித நேயம் என்பது ஊட்டப்பட்டுள்ளது...!அதனால் தான் உலகம் இன்னும் மனிதரைத் தாங்கிக் கொண்டிருக்கிறது போலும்...! அதேவேளை எம்மவர்களிடம் மனிதாபிமானம் என்பது சிறுகச்சிறுக இறந்து கொண்டிருக்கிறது...!

பகலில் தீண்டத்தகாதவள் எனப்படுபவள் இரவானதும் தீண்டப்படுபவள் ஆகிறாள்.... ஜேசு ஒரு தடவை ஒரு விலைமாதுவுக்கு அடைக்கலம் அளிக்க அதை மக்கள் பரிகசித்தார்களாம்...அப்போ ஜேசு கேட்டாராம்...இவளைத் தீண்டாதவன் எவனாவது இங்கே இருக்கிறானா..இருந்தால் என் முன் வாருங்கள் என்று.... எவனுமே அவர் முன் வரவில்லை....!

அதுபோலத்தான்...மனம் முழுதும் அசிங்கங்களை சுமந்து கொண்டு துடக்குகளைச் சுமந்து கொண்டு கோயிலுக்குள் உள்ளவன் வெளியில் மனதால் செயலால் குற்றமற்றவனை உதவிக்கு ஏங்குபவனைப் பார்த்து துடக்கோடு வருகிறாய் என்று சொன்னால் அந்த மனிதப் பிசாசை தெருவில் பிடித்து நிறுத்த வேண்டும்...!

ஏன் கோயில்களில் மடங்கள், பிரமாண்ட வீதிகள், பூங்காக்கள் என்று அமைக்கப்படுகின்றன...மக்கள் மனதார தங்கள் கவலை மறந்து மனதை ஒரு நிலைப்படுத்தி சாந்தம், அமைதி பெறத்தான்.....! கோயில்கள் நல்ல காற்றோட்டம் உள்ளனவாக ஏன் அமைக்கப்படுகின்றன...கோயில்களில் ஏன் தீர்த்தக் கேணிகள் அமைக்கப்படுகின்றன...சிலைகள் சுவாசிக்கவும் குளிப்பதற்கும் அல்ல...பூட்டிக்காவல் வைக்கவும் அல்ல...கவலையோடு மனதாலும் உடலாலும் களைத்து வரும் மனிதன்...அந்தக் கேணியில் குளித்து உடல் ஆற்றி காற்று வாங்கி ஆறுதல் பெறும் ஒரு பொது மையமாகக் கொள்ளத்தான்....ஆனால் கோயில்களில் அதுவா நடக்கிறது...????!

கோயில்கள் தனிமனித அல்லது தனிக் குழுமச் சொத்தல்ல...அவை மனித நேயத்தையும்... மனிதனுக்கு மனிதன் உதவும் மனப்பக்குவத்தையும்... ஒருவருக்குள் ஒருவர் நம்பிக்கைகளை வளர்க்கவும்... மனச்சாந்தி... துன்ப விடுதலைக்கு என்று வருவோருக்கு அடைக்கலம் அளிக்கும் இடங்களாகவும் செயற்படவும் தான் ஊர் தோறும் அமைக்கப்படுகின்றன...!

உண்டியல் வைப்பது பணம் சம்பாதிக்க அல்ல...பசியென்று வருவோனுக்கு அன்னமிட்டு மகிழ்வித்து பசியாற்றி இளைப்பாற அனுமதிக்க....! ஏன் கோயில்களுக்கு வர்ணம் அடிப்பது...??! அவற்றை இலகு அடையாளப்படுத்தவும் கண்கள் வர்ணங்கள் கண்டு லயித்து மனம் அமைதி கொள்ளவும் தான்....! ஏன் பூங்காக்கள் அமைப்பது இயற்கையில் மலரும் மலர்களின் நறுமணங்களை உள்வாங்க...நல்ல காற்றோட்டம் பெற... மனம் அதன்பால் இட்டுச்செல்லப்பட மனதோடு இருக்கும் கவலைகள் மறக்கப்பட...மனம் அமைதி பெற்று..ஓய்வுக்கு நிர்ப்பந்திக்கப்படத்தான்...!

கோயில்களில் சிலைக்கள் எதற்கு கண்களை தூர நோக்கப்பண்ணி ஓய்வு கொடுக்கத்தான்.. அமைதி தரும் காட்சிகள் எதற்கு...தன்னை மறந்து கவலைகள் மறந்து லயித்திருக்கத்தான்...தீபம் எதற்கு...சுடரோடு அது தரும் பசும்பொன் ஒளியோடு கண்கள் ஒருமித்திருக்கத்தான்....!

மெல்லிய ஒலி அலைகளைத் தாங்கி வரும் மணிகளும் மந்திரங்களும் எதற்கு...மன அலைகளோடு அவையும் பரிவுற ஒரு அமைதி பெறப்படத்தான்... கொழும்பில் பொன்னம்பலவானேஸ்ரவர் கோயிலுக்கு சாதாரண நாட்களில் சென்று வாருங்கள்... இவை அனைத்தையும் ஒருமிக்க நோக்க முடியும்...அந்தளவு நெருக்கடிகள் உள்ள கொழும்பு போன்ற ஒரு நகரில்....அருமையாக மன அமைதி தேட வேண்டும் என்றால்...அதுதான் இடம்...! அதுதான் கோயில்...அதுதான் ஆகம நெறிப்படி ஆன்மா ஆறுதல் அடைய அமைக்கப்பட்ட ஆலயம்...மொத்தத்தில் கோயில்கள் என்பது மனித மன இளைப்பாறலுக்காக மெஞ்ஞான, விஞ்ஞான ரீதியாக வடிவமைக்கப்படுகின்ற இடங்கள்...!

பொதுமக்கள் குடும்பக் கதை கதைக்கவும் ஊர்க்ககதை கதைக்கவும் பூச்சாரிகள் கூச்சலிடவும் நிர்வாகிகள் காசுக்குச் சண்டையிடவும் குச்சொழுங்கைக்குள் கலையாடவும் சொத்துச் சேர்க்கவும் சீவியம் நடத்தவும் அமைக்கப்படுவனவல்ல கோயில்கள்...இன்று உள்ள அநேகம் கோயில்கள் அவற்றின் தார்ப்பரியம் புரியாதபடியே நிர்மாணிக்கவும்...நிர்வகிக்கவும் படுகின்றன...இன்றுள்ள மக்களுக்கும் கோயில்களின் அவற்றின் நெறிகளின் அர்த்தமும் புரிவதில்லை...மாணவர்கள் சமய பாடத்தை பரீட்சைக்குப் படிக்கிறார்களே ஒழிய சமயம் சொல்லும் வாழ்க்கைக்கான சாரத்தை எடுக்க மறந்துவிடுகிறார்கள்... உண்மையில் பரீட்சையில் கேட்ட வேண்டியது சம்பந்தர் வரலாறல்ல...சமயம் படிக்கும் மாணவன் தான் படித்ததால் பெற்ற சமயம் போதித்த வாழ்வியல் நெறியின் சாரத்தையும் அதன் மூலம் பெற்ற அனுபவங்களையுமே...அதுவா நடக்கிறது....???!

அதுமட்டுமல்ல...சும்மா துடக்கும் மடக்கும் என்று கொண்டு உலகை ஏமாற்றி சிலர் தங்கள் தங்கள் பெருமைகளைக் காட்ட கோயில்களை வியாபார மையங்களாக்கி வருகின்றனர்...!

ஈழத்தில் எதிர்காலத்தில் ஒரு தமிழ் அரசாங்கக் கட்டமைப்பு வருமாயின் அனைத்துக் கோயில்களையும் அரசே கையகப்படுத்தி...அவற்றின் தார்ப்பரியம் காக்கும் வகையில் கோயில்களின் பெறுமதி காக்க வேண்டும்...இன்றேல் இளைஞர்கள் சிந்திக்க வேண்டும்...கோயில்களின் தார்ப்பரியம் என்ன என்று...மனதால் அவற்றின் மகிமை காண வேண்டும்...பின் அவற்றை அதற்கேற்ற வகையில் நிர்மாணிக்க நிர்வகிக்க நிற்பந்திக்க வேண்டும்...!

மனிதர்கள் மன ஆறுதல் பெறும் இடத்தில் அதைச் செய்ய முடியவில்லை என்றால் பிறகெதற்கு கோயிலுக்குப் பூட்டும் சாவியும் துடக்கும் கழிவும் பூசையும் பெருநாளும்....மனிதர்ளைப் பாகுபடுத்தவும்...காசு சம்பாதிக்கவும்...பணம் உள்ளவர்கள் தங்களை விளம்பரப்படுத்தவுமா...???! Idea


- வியாசன் - 01-11-2005

நண்பர்களே பண்டையகாலத்தில் மக்களை கட்டுப்பாட்டில் வைத்திருப்பதற்காக ஆலயங்களை நிறுவினர். அன்று கோவில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் என்று பழமொழி வேறு சொன்னார்கள் இன்றைக்கு சாமியையே கடத்தி சென்றுவிற்கிற காலம்.
இப்ப கோவில் உள்ள ஊரில்குடியிருக்கவேண்டாம்.


- shiyam - 01-11-2005

இந்த நிகழச்சியை படிக்கும்போது ஒருபழைய சம்பவம் நினைவிற்கு வருகிறது இந்தியபடைகாலம் யாழ் மானிப்பாய்க்கு அருகே ஒருகிராமத்தில் ஒரு பிள்ளையார் கோயிலில் மக்கள் எல்லோரும் அகதியாய் இருக்கிறார்கள் அங்காங்கே புலிகளிற்கும் இராணுவத்திற்கும் மோதல் நடந்துகொண்டிருந்தது அப்போ ஒரு வீட்டில் ஒருவரை தேடிபோன இராணுவம் அங்கிருந்த குடும்பதலைவனையும் மகளையும் சுட்டுகொண்டு விட்டார்கள் தனது கணவனையும் மகளையும் இழந்த தாய் மற்றைய 3 பிள்ளைகளுடன் அந்த பிள்ளையார் கோவிலில் தஞசமடைகின்றார்.அப்போ அங்கிருந்த நிருவாக சபையினர் அந்த தாய்பிள்ளைக்கு துடக்கு உள்ளே விடகூடாது எனதடுக்க.உள்ளேயிருந்த சில இளைஞர்கள் யுவதிகளும் வெகுண்டெளுந்து பிள்ளையார் உள்ளே இருந்தால் தானே பிரச்சனை பிள்ளையாரை துக்கி வெளியிலை போட்டிட்டு அவர்களை உள்ளேவிடுங்கள என சண்டைபிடிக்த்து அவர்களை அரவணைத்து காப்பாற்றினார்கள்.இப்படி அந்இடத்திலே போராடும் குணம் வேண்டும்.அந் ஆயிரம்பேரில் ஒரு அம்பதுபேர் போராடியிருந்தால் கோயிலுக்கு உளளே போயிருக்கலாம்.போராடாவிட்டால் என்ன தமிழன்


- kuruvikal - 01-11-2005

அதுதான் சொன்னமே இளையவர்கள் சிந்திக்க வேண்டும் நிர்ப்பந்தம் கொடுக்க வேண்டும் என்று...அன்றும் இளையவர்கள் தான் சாதித்துள்ளனர்...! சுனாமி பாதிப்பின் போதும் இளையவர்களே அதிகம் உதவி புரிந்துள்ளனர்...புரிந்தும் வருகின்றனர்...! Idea


- Mathuran - 01-11-2005

வணக்கம் நண்பர்களே,

நான் இங்கு சுட்டி காட்ட் விரும்புவது யாதெனில், கடவுள் இருக்கின்றாரா இல்லையா என்பதுவோ, அல்லது இந்துமதத்தை விட வேறுமதங்கள் சிறந்தனவோ இல்லை தாழ்ந்தனவோ என்பது அல்ல இப்போது பிரச்சினை. அழகாக தூய்மையான மனத்துடன் அந்த குருக்களே சொல்லி இருக்கின்றார், மனிதாபிமானம் அற்ற ஆலயமும் அதன் நிர்வாகமும் மனிதனுக்கு எதர்க்கு என்று. தப்பான, நயவஞ்சக எண்ணமுடய தம்மை தாமே கடவுளின் தொடர்பாளர்கள் என்று தாங்களே சொல்லிக்கொள்ளும் ஆசாமிகளுக்கிடையில் இப்ப்டி ஒரு நல்ல (குருக்களா) சாமியா?

நீங்கள் குறிப்பிடுவதை போன்று பல மூடநம்பிக்கைகளை கொழுத்த வேண்டும் என்பதி எனக்கும் உடன்பாடுதான், இருந்த போதிலும் எல்லா மூடத்தனங்களையும் முற்றாக இல்லாதொழித்துவிடவும் முடியாது. ஆகவே தமது இறைந்ம்பிக்கையானது மறுமலர்ச்சியுடன் கூடிய, மனிதாபிமானமுடய வழிபாட்டு முறையாக இருக்க வேண்டும் என விரும்புகின்ற சமியார்களை உற்சாக படுத்துவதே சரியாகவும் பொருத்தமானதாகவும் இருக்கும் என நான் எண்ணுகின்றேன்.

அன்புடன்
விதுரன்


- sinnappu - 01-11-2005

அப்புமார் ஒண்டு சொல்லவே
Quote:ஒருவாறு தமிழர் வாழும் பகுதியென்று எண்ணி வீரமுனைப் பிள்ளையார் ஆலயத்திற்குச் சென் றேன்.
அங்கு ஆயிரம் பேர் வரையில் நின்றனர். அன்றிரவு பாரிய மழை பெய்தது. ஆலயத் தினுள் சனம் உட்செல்ல முயற்சித்தபோது ஆல யம் பூட்டப்பட்டது.
துடக்குள்ளவர்கள் வருவார்கள் ஆசூசம் நேரும். எனவே யாரும் வரவேண்டாமென்று கூறி ஆலயத்தைப் ப10ட்டிவிட்டார்கள்.
ஆயிரம் சனமும் கொட்டும் மழையில் அழு தழுது நனைந்தனர். அந்தரித்து வந்த அப் பாவி மக்களை ஆலயத்துக்குள் செல்லவிடாது தடுத்த பாதகர்களின் செயல்கண்டு மனதிற் குள் அழுகிறேன்.
சுனாமியைப் போல் ஆயிரம் சுனாமிகள் வந்தா லும் எம்மவர் திருந்தமாட்டார்கள் என்று கூறி னேன்.
மறுநாள் வீடு வந்து பார்த்தேன். அங்கு கிடந்ததாகக் கூறப்படும் உடமைகள் எதுவுமே இல்லை. அண்ணனின் அறுபது பவுண் நகை கள்ää 2 லட்சம் ரூபா பணம் வகைவகையான வேட்டிகள் ஒன்றையும் காணோம்.
நான் மனம் தளரவில்லை. பிள்ளையார் என்னை மட்டும் மிஞ்சவைத்தது அவருக்குச் சேவை செய்யவே என்று நினைத்தவனாக வாழ் கிறேன் - என்றார்.

நன்றி உதயன்
_________________
நான் என்னை இன்றும் திருத்திக்கொள்கின்றேன்,
நேற்றய தவறிற்காக,
நாளைய நேர்மைக்காக

செருப்பால அடிக்கவேணும்
மனுசாரா இவங்கள் இல்லை கேக்கிறன் :evil: :evil: :evil:
கடவுள் நம்பிக்கை மனசில மனிதாபிமானத்தோடை சேர்ந்து இருக்கனும்
பக்திமெத்தப்படாது மெத்தினால் புத்தி கெட்டிடும்
நாய்க்கடிச்ச அடி அடிச்சு கலைக்கனும் நாயளை

முதல்லை கோயில் குருக்களுக்கு சொந்தம் அவருக்கு சொந்தம் இவருக்கு சொந்தம் எண்டதை நிப்பாட்டனும்

தம்பி சியாம் சொன்னது போல போராடனும் தட்டிக்கேக்கபிடாது 2 தட்டு தட்டனும் அப்ப தான் மற்றவங்கள் உத செய்யமாட்டாங்கள்
:evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil:


- tsunami - 01-12-2005

தம்பிமாரே கொஞ்சம் ரென்சனாகவேண்டாம்
முதலில் சொல்லுகிற செய்தியில் எவ்வளவு தூரம் உண்மை இருக்கு என்று பாருங்கோ...
அதற்குப்பிறகு கோவில்காரர்ரைத் திட்டுங்கோ...
தகவல் சொன்ன ஐயா யாழ்ப்பாணத்தது உதயன் போப்பரில் ஏன் அவ்வாறு ஒரு செவ்வியைக் கொடுத்தார். அதை ஏன் அந்தப் போப்பரின் ஆசிரியர் பிரசுரிக்க சொன்னார் என்று எல்லாத்தையும் யோசியுங்கோ...

எதற்கும் உணர்ச்சி வசப்படாமல் சிந்தித்து வார்த்தையை செலவு செய்யுங்கோ....
சிந்திக்காமல் செய்துபோட்டு பிறகு கவலைப்படக்கூடாது...
நான் பிரபஞ்சத்தில் இருந்து கதைக்கறன்
பிரபஞ்ச உண்மையை விளங்கிக்கொள்ளுங்கோ...
:roll: :roll: :roll: :roll: :roll: :roll: :roll:


- Jude - 01-16-2005

எல்லாம் சரி, இது பற்றி தமிழர் அரசாங்கமாக செயற்படும் தமிழீழ நிருவாகமும், தமிழீழ விடுதலைப்புலிகளும், தமிழீழ பொலிசும், தமிழீழ நீதித்துறையும் என்ன செய்கிறது? ஐரோப்பாவில் அல்லது அமெரிக்கா, கனடாவில் இப்படி நடந்தால் அந்த கோவில் நிருவாகத்துக்கு பொறுப்பானவர்கள் கைது செய்யப்பட்டு, நட்டஈடு செலுத்த வைக்கப்பட்டு சிறையிலும் அடைக்கப்பட்டிருப்பர். தமிழீழ நீதித்துறையும், பொலிசும் என்னதான் செய்கின்றன? தமிழீழ நிருவாகம் தானும் இது பற்றி விசாரணை நடப்பதாகவோ அல்லது இந்த செய்தி உண்மையா பொய்யா என்பது பற்றியோ கூட எதுவுமே சொல்லவில்லையே? தமிழீழத்தில் இவையெல்லாம் ஏற்றுக்கொள்ளப்பட்ட நடைமுறைகளா? தமிழீழ நிருவாகத்துக்கு அப்பாற்பட்ட பிரதேசத்தில் அந்த கோவில் இருந்தாலும் தமிழீழ நிருவாகம் நடவடிக்கை எடுக்க முடியும் அல்லவா? சின்ன களவுகள், பிக்கல்கள் பிடுங்கல்களுக்கெல்லாம் கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்ட பிரதேசத்தில் இருப்பவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி கூப்பிடும் தமிழீழ நீதித்துறை இங்கு அநீதியை காணாதது ஏனோ?


- vallai - 01-16-2005

அவங்கள் கவனிக்கெலையெண்டு உமக்கு ஆர் சொன்னது.பேப்பரிலை வாறதுக்கெல்லாம் போலோ அப் பண்ணிவிட்டு அதை அடுத்த பேப்பரிலை போட அவங்களென்ன இந்திய அரசியலே நடத்துறாங்கள்.

ஏன் இப்பிடி எல்லாத்தையும் உங்களுக்குச் சொல்லிக்கொண்டிருக்கவேண்டுமெண்டு நாண்டுகொண்டு நிக்கிறியள்


- Vasampu - 01-16-2005

இதே போல் தமிழ் நாட்டிலுள்ள கோவில் சில வற்றில் நடந்தவற்றையும் நீங்கள் அறிந்திருப்பீர்களென நம்புகின்றேன். சுனாமியால் பாதிக்கப்பட்டு கோவில்களில் தஞ்சமடைந்த மக்களே கோவில் உள் சுற்று வீதிகளில் மலசலம் களித்தும் மாமிசம் குடிவகைகளை பாவித்ததை கண்டும் நிர்வாகிகள் மனமுடைந்து போய் இதை அரசின் கவனத்திற்கு தெரிவித்துள்ளார்கள். இதுவே வேறு ஒரு மதத்தை சார்ந்த கோவில்களென்றால் இப்படி நடைபெற்று இருக்குமா??
:?: Idea :?: Idea


- sinnappu - 01-16-2005

<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->
vallai



இணைந்தது: 21 பங்குனி 2004
கருத்துக்கள்: 293
வதிவிடம்: vallai_naatsanthi
எழுதப்பட்டது: ஞாயிறு தை 16, 2005 8:50 am    Post subject:  



அவங்கள் கவனிக்கெலையெண்டு உமக்கு ஆர் சொன்னது.பேப்பரிலை வாறதுக்கெல்லாம் போலோ அப் பண்ணிவிட்டு அதை அடுத்த பேப்பரிலை போட அவங்களென்ன இந்திய அரசியலே நடத்துறாங்கள்.  

ஏன் இப்பிடி எல்லாத்தையும் உங்களுக்குச் சொல்லிக்கொண்டிருக்கவேண்டுமெண்டு நாண்டுகொண்டு நிக்கிறியள்
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

அப்படிபோடு மச்சான் <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- Jude - 01-16-2005

vallai Wrote:அவங்கள் கவனிக்கெலையெண்டு உமக்கு ஆர் சொன்னது.பேப்பரிலை வாறதுக்கெல்லாம் போலோ அப் பண்ணிவிட்டு அதை அடுத்த பேப்பரிலை போட அவங்களென்ன இந்திய அரசியலே நடத்துறாங்கள்.

ஏன் இப்பிடி எல்லாத்தையும் உங்களுக்குச் சொல்லிக்கொண்டிருக்கவேண்டுமெண்டு நாண்டுகொண்டு நிக்கிறியள்

ஆயிரக்கணக்கான அகதிகளை கொட்டும் மழையிலும் கோவிலுக்குள் விடாமல் தடுப்பது போன்ற செயல்கள் மற்ற இடங்களிலும் இடம்பெறாமல் இருக்க, ஒரு முறை எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை மற்றவர்களும் அறிந்திருக்க செய்வது முக்கியமானது. மற்றவர்களுக்கு இப்படியான சம்பவங்கள் பற்றி நடவடிக்கை எடுக்கப்படுவது தெரியாமல் இருப்பது, இப்படியான நடவடிக்கைகள் தொடருவதற்கான காரணங்களில் ஒன்று.

சட்டம், சட்ட அமுலாக்கலில், நீதி நிலைநாட்டப்படுவதுடன் நீதி நிலைநாட்டப்படுவதை அனைவரும் அறியச்செய்வதும் முக்கியமானதாகும். அதற்கு காரணம் முன் சொன்னபடி மற்றவர்கள் மேற்படி சட்டவிரோத நடவடிக்கைகளில் தொடர்ந்தும் ஈடுபடுவதை தடுப்பதாகும். ஆகவே விடுதலைப்புலிகள் மேற்படி சம்பவத்தில் சட்ட நடவடிக்கை எடுத்து, அவ்வாறு எடுக்கப்பட்டதை அனைவரும் அறியச்செய்யவும் வேண்டும்.