Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
சில குறிப்புக்கள்.......12.01.05
#1
<b>குழந்தைகளிடம் செல்போன் கொடுக்க வேண்டாம்</b>


செல்போன்களால் மனிதர்களுக்கு ஏதாவது ஆபத்து உண்டா? இல்லையா? என்பது குறித்து அவ்வப்போது சர்ச்சைகள் எழுப்பப்படுகிறது. இருப்பினும் செல்போன்கள் மனிதர்களை பாதிக்கிறது என்பதற்கு இதுவரை எந்த உறுதியான ஆதாரமும் கிடைக்கவில்லை. அதே சமயம் செல்போன்களால் மனிதர்களுக்கு ஒரு தீங்கும் இல்லை என எந்தவொரு விஞ்ஞானியும் அறிவிக்கவில்லை. ஆக செல்போன் பிரச்சினை ஒரு புரியாத புதிராக தொடர்கிறது. இதனால் அவ்வப்போது எச்சரிக்கை அறிவிப்புகளையே வெளியிட்டு வருகின்றனர். ஆனால் குழந்தைகள் விஷயத்தில் செல்போன்கள் நிச்சயம் பாதிப்பை உண்டு பண்ணும் என்றும், இதில் மாற்றுக் கருத்து எதுவும் கிடையாது என்றும் விஞ்ஞானிகள் உறுதியாக கூறுகிறார்கள்.
குழந்தைகளின் நரம்பு மண்டலம் இன்னமும் வளர்ந்து கொண்டிருக்கும் என்பதால் அவர்களின் தலைப்பகுதியில் உள்ள திசுக்களுக்கு அதிகமான சக்தியை இழுக்கும் ஆற்றல் உண்டு. இப்படிப்பட்ட நிலையில் அதிலுள்ள ரேடியோ அலைகள் உடல் உறுப்புகளின் இயக்கத்தில் நிச்சயம் பொpயதொரு பின்விளைவை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது. ஆகையால் குழந்தைகள் கைகளில் கூடுமானவரை செல்போன் களை கொடுக்காமல் இருப்பது நல்லது.

செல்போன்களால் மூளையில் ஆபத்தான கட்டிகள் உண்டாகும், புற்றுநோய் வரும், மரபணு சேதமடையும் என்றெல்லாம் சொல்லப்படுகிறது. இத்தகைய கருத்துக்களை அப்படியே அடியோடு நிராகாpத்து விட முடியாது. இதுபற்றி நிறைய ஆராய்ச்சிகள் நடத்த வேண்டும்.


<b>உடம்பை குறைக்க மிதமான நடைபயிற்சியே போதும்</b>

குண்டு குழந்தைகள் வேகமாக நடந்தால் வேகமாக எடை (கொழுப்பு) குறையும் என்று சிலர் நினைக்கிறார்கள். ஆனால் இதில் உண்மை எதுவும் இல்லை. 9 முதல் 11 வயது வரையிலான குண்டு குழந்தைகள் உடம்பை குறைப்பதற்கு வோக்கிங் போனாலே போதும், ஓடத் தேவையில்லை என்கிறார்கள் விஞ்ஞானிகள். எவ்வளவு வேகமாக நடக்கிறோம் என்பதைப் பொறுத்து கொழுப்பு எரிக்கப்படுவது இல்லை. ஆகையால் குண்டு குழந்தைகள் தங்கள் உடம்பை குறைக்க மிதமான உடற்பயிற்சி களே போதுமானது என்கிறார்கள் இவர்கள். மணிக்கு 2.5 மைல் வேகத்தில் நடக்கும் போது அதிகப்படியான கொழுப்பு மற்றும் கார்போஹைட்ரேட் எரிக்கப்படுகிறது. இதே வேகத்தை மணிக்கு 5 மைல் என்று அதிகரிப்பதால் இன்னும் கூடுதலான கொழுப்பு எரிக்கப்படுவது கிடையாது.
சிறுவர்களை பொறுத்தவரை மெதுவாக நடப்பதைக் காட்டிலும் வேகமாக நடக்கும் போது நிறைய அளவுக்கு கார்போஹைட்ரேட் எரிக்கப்படுகிறது என்பது உண்மை தான். இருந்த போதிலும் மிதமான வேகத்தில் நடக்கும் போதுதான் கார்போ ஹைட்ரேட் மற்றும் கொழுப்பு ஆகிய இரண்டுமே கூடுதலான விகிதத்தில் எரிக்கப்படுகிறது. உடல் எடை குறைவதற்கு இதுதான் தேவை.

உடல் பருமனானது உடம்புக்கு தேவையான சக்தியை கொழுப்பு தவிர வேறு வழிகளில் இருந்து பெற்றுக் கொள்வதால் கொழுப்பு மேலும் மேலும் சேர்ந்து விடும். இதுமாதிhpயான நிலையில் உடற்பயிற்சிகள் கொழுப்பை எரித்து உடல் எடையை கட்டுக்குள் கொண்டு வரும்.


<b>நீரழிவு பார்வை இழப்பை தவிர்க்க புதிய முயற்சி </b>

நீரழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களில் சிலருக்கு டயபறிக் ரெட்டினோபதி (diabetic retinopathy)என்ற பயங்கரமான வியாதியால் கண்பார்வை பறிபோகிறது. இந்நோய் 2 கட்டமாக பரவும். முதல் கட்டத்தில் சர்க்கரையில் அதிக ரத்தம் மற்றும் உயர் இரத்த அழுத்தம் காரணமாக கண்களில் உள்ள சின்னஞ்சிறிய இரத்த நாளங்கள் கொஞ்சம் கொஞ்சமாக செயல் இழந்து இறுதியில் வெடித்து விழித்திரையில் இரத்தம் கொட்டும். விளைவு, ஒளிக்கற்றைகளை பிம்பங்களாக மாற்றி மூளைக்கு அனுப்பும் பணி அடியோடு முடங்கி விடுவதால் பார்வை பறிபோகும். 2-வது கட்டம் மிகவும் சிக்கலானது. அதை proliferative retinopathy என்று குறிப்பிடுகிறோம். இந்நிலையில் விழித்திரையில் புதிதாக இரத்த நாளங்கள் தோன்ற ஆரம்பிக்கும். இத்தகைய இரத்த நாளங்கள் நீண்ட நாள் தாங்காமல் எப்போது வேண்டுமானாலும் உடையலாம். இதனால் விழித்திரையே அழிந்து போகும் நிலை கூட தோன்றலாம். கொடுமையான இந்த டயபறிக் ரெட்டினோபதிக்கு தீர்வு கிடையாது. லேசர் சிகிச்சை மூலம் பாதிப்பை வேண்டுமானால் குறைக்கலாம். மேலும் வராமல் தடுக்கலாம். ஆனால் அதையும் ஒரு கட்டம் வரையில் தான் செய்ய முடியும்.
இந்நிலையில் புளோரிடாவைச் சேர்ந்த விஞ்ஞானிகள் இப்பிரச்சினையை சமாளிக்க புதிய யுக்தி ஒன்றை கண்டுபிடித்து உள்ளனர். ஆய்வகத்தில் வளர்த்த எலிகளின் கண்களுக்குள் குறிப்பிட்ட நோய் எதிர்ப்பு பொருள் ஊசி மூலம் செலுத்திய போது, பார்வை பாதிக்கப்படாமல் பாதுகாக்கப்பட்டது. ஒருவேளை இந்த ஆன்டிபயாடிக் மனிதர்கள் மத்தியிலும் வேக்-அவுட் ஆனால் டயபறிக் ரெட்டினோபதியால் பார்வையை இழக்கும் லட்சோப இலட்சம் மனிதர்களை காப்பாற்ற முடியும் என்கிறார்கள் புளோரிடா விஞ்ஞானிகள்.
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)